Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

மாயிச்சரைசர்


Discussions on "மாயிச்சரைசர்" in "Skin Care" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  மாயிச்சரைசர்

  மாயிச்சரைசர்

  தண்ணீர் இல்லாமல் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பீர்கள்? அதெப்படி சாத்தியம்? சாப்பாடு இல்லாமல் வெறும் தண்ணீரைக் குடித்தாவது வாழ்ந்துவிடலாம். தண்ணீரே இல்லை என்றால் ரொம்பக் கஷ்டம் என்கிறீர்கள்தானே? அதே விதிதான் உங்கள் சருமத்துக்கும். சருமம் சுத்தமாக வேண்டும் என சோப்பும், ஃபேஸ் வாஷும் போட்டுக் கழுவுகிறீர்கள். கருக்காமலிருக்க சன் ஸ்கிரீன் உபயோகிக்கிறீர்கள். அழகாகத் தெரிய மேக்கப் செய்கிறீர்கள். ஆனால், அந்தச் சருமம் வறண்டு போகாமல் உயிர்ப்புடன் இருக்க அதற்குத் தேவையான தண்ணீர் சத்தைக் கொடுக்க மறந்து விடுகிறீர்கள்.சருமப் பராமரிப்பின் 3 அடிப்படைகளில் கிளென்சிங் மற்றும் டோனிங் பற்றி கடந்த சில இதழ்களில் பார்த்தோம். அடுத்தது மாயிச்சரைசிங்.  மாயிச்சரைசிங் என்றால் என்ன? அது ஏன் அவசியம்? அது செய்கிற மாயம் என்ன? விவரமாகப் பேசுகிறார் அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

  ‘‘வறண்டு கிடக்கும் சருமத்துக்கு ஈரப் பதம் கொடுப்பதுதான் மாயிச்சரைசிங். 20 வயதைக் கடந்த பெண்கள், ஆண்கள் எல்லோருக்கும் தேவையானது மாயிச்சரைசிங். இன்று சுற்றுப்புறச் சூழல் எந்தளவுக்கு மாசடைந்திருக்கிறது என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. அதன் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்க மாயிச்சரைசிங் அவசியம். இன்று பள்ளி, கல்லூரி, வேலையிடம் என எல்லா இடங்களிலும் ஏசி தவிர்க்க முடியாததாகி விட்டது. ஏசி என்பது மேட்டுக்குடி மக்களின் அடையாளமாக இருந்த காலம் மாறி, நடுத்தரக் குடும்பங்களும் அதற்கும் கீழான நிலையில் இருப்பவர்களும்கூட ஏசி என்பதை அத்தியாவசியப் பொருளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

  நாள் முழுக்க ஏசி அறைக்குள் இருக்கும் போது சருமத்திலுள்ள இயற்கையான ஈரப்பதம் குறையும். இதனால் சருமத்துக்கு ஒருவித வயோதிகத் தோற்றம் வந்து விடும். சருமம் பொலிவிழக்கும். இதையெல்லாம் சரிசெய்ய மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டியது அவசியமாகிறது.எப்போது உபயோகிக்க வேண்டும்?மாயிச்சரைசரை இரவில்தான் உபயோகிக்க வேண்டும். இது தெரியாமல் பலரும் பகலில் மாயிச்சரைசரை தடவிக் கொண்டு வெளியில் செல்கிறார்கள்.ஏன் மாயிச்சரைசரை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும்? காலையில் ஏன் உபயோகிக்கக் கூடாது?

  மாயிச்சரைசர் என்பது நமது சருமத்தினுள் ஊடுருவிச் செல்லக் கூடிய ஒன்று. பகலில் மாயிச்சரைசர் உபயோகிக்கும் போது, சருமத்திலுள்ள துவாரங்களைத் திறக்க வைத்து, மாயிச்சரைசர் உள்ளே இறங்கும். சுற்றுப்புறச் சூழலில் உள்ள தூசும், மாசும், மாயிச்சரைசிங் க்ரீம் அல்லது லோஷனுடன் கலந்து, சருமத் துவாரங்களின் உள்ளே போய் அடைத்து விடும். அப்படி அடைக்கிற போது ஃப்ரெக்கிள்ஸ் எனப்படுகிற மச்சம் போன்றவை சருமத்தில் வருகின்றன. அதென்ன ஃப்ரெக்கிள்ஸ்? உங்களுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களைக் கவனித்துப் பாருங்களேன்... ஐந்தில் ஒருவருக்கு சருமத்தில் சிறு சிறு மச்சங்கள் போன்ற கரும்புள்ளிகள் இருப்பதைக் கவனிக்கலாம். இவைதான் ஃப்ரெக்கிள்ஸ். இவற்றை சரியாகக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் மருக்களாக உருமாறும். ஒரு மரு வந்து விட்டால், உங்கள் சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸில் அந்த பாக்டீரியல் இன்ஃபெக்*ஷன் அப்படியே தங்கி விடும்.

  அந்த இன்ஃபெக்*ஷன், பக்கத்து இடங்களிலும் மருக்களை உருவாக்கும். முகத்திலோ, கழுத்திலோ ஒரு மரு வந்தால், ஒரு வருடத்துக்குள் முகம், கழுத்து முழுக்க பத்து, பதினைந்து மருக்கள் வந்திருக்கும். இதற்கு முக்கிய காரணம் சருமத் துவாரங்களில் சேர்கிற நாள்பட்ட அழுக்கு, சருமத்தில் உற்பத்தியாகிற சீபம் என்கிற எண்ணெய், பகலில் மாயிச்சரைசர் உபயோகித்துவிட்டு, மாசு நிறைந்த பகுதிகளுக்குச் செல்வது போன்றவை... அதனால்தான் இரவில் மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் கிளென்சிங், டோனிங், மாயிச்சரைசிங் செய்ய வேண்டும். எப்படிப்பட்ட சருமத்தையும் முறைப்படி கிளென்ஸ் செய்து பிறகு சருமத்துக்குத் தேவையான பிஹெச் அளவை சமன்படுத்த டோன் செய்து பின்னர் சருமத்திலுள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்க மாயிச்சரைசர் உபயோகிப்பது என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய அழகு ரொட்டீன்.

  அது சரி... இதை ஏன் இரவில் மட்டுமே செய்ய வேண்டும்? இரவில்தான் நமது எல்லா உறுப்புகளும் ஓய்வெடுக்கும். ஆனால், சருமம் இரவில்தான் நல்ல துடிப்புடன் இருக்கும். சுவாசிக்கும். ரத்த ஓட்டமும் சரி, ஆக்சிஜனும் சரி, உடல் உறுப்புகளுக்கு எல்லாம் போய் விட்டு, கடைசியாகத் தான் சருமத்துக்கு வரும். ஓய்வில் இருக்கும் போது மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வெடுக்கும். சருமத்துக்குத் தேவையான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் அந்த நேரத்தில் அதிகமாகக் கிடைக்கும். அந்த நேரத்தில் நீங்கள் உபயோகிக்கிற மாயிச்சரைசர் உங்கள் சருமத்தின் 2வது மற்றும் 3வது லேயரில் இறங்கி, உள்ளே உள்ள செல்களை உயிர்ப்பிக்கும். கொலாஜன், எலாஸ்டின் எனப்படுகிற கொழுப்பு செல்கள் உங்கள் சருமத்தின் மூன்றாவது லேயரில் இருக்கும். இரவில் மாயிச்சரைசர் உபயோகிக்கும் போது அது 3வது லேயரில் உள்ள கொலாஜன், எலாஸ்டினை நன்கு தூண்டி விடும். அதனால் சருமத்தில் தெரிகிற வயோதிக அறிகுறிகள் குறைந்து பொலிவாகும்.

  இன்று 20 பிளஸ்ஸில் இருக்கும் இளம் பெண்களே ரொம்பவும் முதிர்ந்த தோற்றத்துடன் காணப் படுகிறார்கள். அவர்களது ஸ்ட்ரெஸ் அளவு, வேலை பார்க்கிற இடத்து மன அழுத்தம், சூழல், சுகாதாரமின்மை மற்றும் சரிவிகித உணவு உண்ணாமை என இதற்குப் பல காரணங்கள். பீட்சா, பர்கர், ஏரியேட்டட் குளிர்பானங்கள் என உடல் சூட்டை அதிகரிக்கச் செய்கிற உணவுகளையே அதிகம் உண்கிறார்கள். அதனால்தான் இன்று பெரும்பாலான பெண்களுக்கும் அவர்களது உண்மையான வயதைவிட 10 வயது அதிகமான தோற்றம் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர்க்க சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். வருமுன் காப்போம் என்கிற விதிப்படி பார்த்தால் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு மாயிச்சரைசர். ஃபேஷியல் மாதிரியான மற்ற சிகிச்சைகள் இதற்குப் பிறகுதான் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.  Sponsored Links

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: மாயிச்சரைசர்

  எப்படித் தேர்ந்தெடுப்பது?

  ஒவ்வொருவருக்கும் அவரவர் சருமத்தைப் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். உங்களால் உங்கள் சருமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாவிட்டால், அருகிலுள்ள அழகுக் கலை ஆலோசகர் அல்லது சரும மருத்துவர் அல்லது தெரபிஸ்ட்டை அணுகி, சருமத்தை ஸ்கேன் செய்து பார்த்து அதன் தன்மை எத்தகையது எனத் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் மாயிச்சரைசரை மட்டுமின்றி, எந்தவிதமான அழகு சாதனத்தையும் பக்க விளைவுகள் இல்லாமல் உபயோகிக்க முடியும். சருமத்தில் வறண்ட சருமம், எண்ணெய் பசையுள்ள சருமம், சாதாரண சருமம் மற்றும் சென்சிட்டிவ் சருமம் என 4 வகைகள் உள்ளன.

  வறண்ட சருமம் உள்ளவர்கள் டீப் மாயிச்சரைசிங் க்ரீம் எடுத்துக்கொள்வது சிறந்தது. இது அதிக பிசுபிசுப்புத் தன்மையும் சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கக் கூடிய தன்மையும் கொண்டதாக இருக்கும். ரொம்பவும் வறண்டு, செதில் செதிலான சருமம் கொண்டவர்களுக்கு இந்த வகையான மாயிச்சரைசர்தான்பலனளிக்கும்.

  சாதாரண சருமம், எண்ணெய் பசையான சருமம் மற்றும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் மாயிச்சரைசிங் லோஷன் உபயோகிக்கலாம். இவர்கள் மாயிச்சரைசிங் லோஷனிலேயே ஆயில் பேஸ்டு லோஷனாக இல்லாமல் அக்வா அல்லது வாட்டர் பேஸ்டு லோஷனாக எடுத்துக் கொண்டால் பிரச்னைகள் வராது. எண்ணெய் பசையான மற்றும் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஒரு நாள் தவறான மாயிச்சரைசர் உபயோகித்தாலே அடுத்த நாள் பருக்கள் வந்து விடும். வறண்ட சருமத்துக்கு எந்த வகையான மாயிச்சரைசர் உபயோகித்தாலும் பக்க விளைவுகள் வெளியில் தெரியாது. அதே நேரம் பெரிய பலனும் தெரியாது. டீப் க்ரீம் மாயிச்சரைசர் மட்டும்தான் வறண்ட சருமத்தைப் பாதுகாக்கும். இப்படி சருமத்துக்குப் பொருத்தமான மாயிச்சரைசரை உபயோகிக்கும் போது, சருமத்தில் எந்தத் தொய்வும் இல்லாமல் பொலிவு பெறும். சிலருக்கு சருமத்தில் ஈரப்பதம் இல்லாததால் இழுக்கின்ற மாதிரி உணர்வார்கள்.
  மாயிச்சரைசர் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய மாயிச்சரைசர் என இன்னும் பல தகவல்கள் அடுத்த இதழிலும்...

  நாள் முழுக்க ஏசி அறைக்குள் இருக்கும் போது சருமத்திலுள்ள இயற்கையான ஈரப்பதம் குறையும். இதனால் சருமத்துக்கு ஒருவித வயோதிகத் தோற்றம் வந்து விடும். சருமம் பொலிவிழக்கும். இதையெல்லாம் சரிசெய்ய மாயிச்சரைசர் அவசியம்.

  எண்ணெய் பசையான மற்றும் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஒரு நாள் தவறான மாயிச்சரைசர் உபயோகித்தாலே அடுத்த நாள் பருக்கள் வந்து விடும். வறண்ட சருமத்துக்கு எந்த வகையான மாயிச்சரைசர் உபயோகித்தாலும் பக்க விளைவுகளோ, பலனோ வெளியில் தெரியாது.


 3. #3
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: மாயிச்சரைசர்

  மாயிச்சரைசர்
  சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் இளமைத் தோற்றத்தையும் தக்க வைப்பதில் மாயிச்சரைசரின் பங்கு பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். மாயிச்சரைசர் வாங்கும்போதும் உபயோகிக்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள், வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய மாயிச்சரைசர், எந்த சருமத்துக்கு எப்படிப்பட்ட மாயிச்சரைசர் என மேலும் சில தகவல்களை இந்த இதழிலும் தொடர்கிறார் அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

  மாயிச்சரைசர் வாங்கும் போது...சருமத்தின் தன்மை தெரிந்தே மாயிச்சரைசரை தேர்ந்தெடுக்க வேண்டும். ரொம்பவும் வறண்ட சருமம் என்றால் க்ரீம் வடிவிலான மாயிச்சரைசரை தேர்ந்தெடுக்கலாம். நார்மல், ஆயிலி மற்றும் சென்சிட்டிவ் சருமங்களுக்கு மாயிச்சரைசிங் லோஷன் மிகவும் நல்லது. அதில் பாரபின் இல்லாமல் இருக்க வேண்டியது முக்கியம். பாரபினில் எத்தில் பாரபின், மீத்தைல் பாரபின் என இருக்கும். பாரபின் இல்லாமல் அக்வா பேஸ்டு, பெட்ரோலியம், கிளிசரின், ஸ்டிரிக் ஆசிட் மற்றும் பென்சைல் சாலிசிலேட் இருந்தால் பிரச்னையில்லை. வாசனை அதிகமற்ற, இயற்கையான வாசனையுடன் இருப்பது நல்லது. மாயிச்சரைசர் லோஷன் வடிவில் இருப்பதே உத்தமம். அளவுக்கு அதிகமான வறட்சி காரணமாக சருமத்தில் செதில் செதிலாக வரும். அப்படி இருந்தால் மாயிச்சரைசிங் க்ரீம் நல்லது.

  பருக்கள் நிறைய உள்ள சருமத்துக்கு மாயிச்சரைசரிலேயே சில துளிகள் தண்ணீர் கலந்து உபயோகிக்கலாம். எதுவுமே ஏற்றுக் கொள்ளாத அலர்ஜி சருமத்துக்கு கேலமைன் லோஷனில் சிறிது தண்ணீரும், 2 சொட்டு தேனும் கலந்து முகத்துக்கு மாயிச்சரைசராக உபயோகிக்கலாம். இது பருக்கள் வருவதையும் தடுக்கும். ஈரப்பதத்தையும் தக்க வைக்கும்.

  வீட்டிலேயே மாயிச்சரைசர்

  100 கிராம் பார்லியை மிக்ஸியில் பொடித்து 100 மி.லி. பாலில் கஞ்சி மாதிரிக் காய்ச்சவும். அதை ஆற வைத்துக் கூழ் மாதிரி செய்து கொள்ளவும். அதில் 50 மி.லி. தேன் கலக்கவும். 50 கிராம் பொடித்த பனைவெல்லத் தூளையும் அதில் கலக்கவும். 50 சொட்டுகள் கிளிசரினும் 50 சொட்டுகள் தேங்காய் எண்ணெயும் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இரவில் இதைத் தடவி 1 மணி நேரம் ஊறியதும் கழுவிவிடலாம். இதை தினமுமே உபயோகித்து வர, சருமத்தின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.மருந்துக் கடைகளில் லிக்யூட் பாரபின் கிடைக்கும். 100 மி.லி. லிக்யூட் பாரபினில் 30 மிலி கிளிசரினும், 30 மி.லி. தேனும், 20 டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும்.

  சர்க்கரை நன்கு கரையும் அளவுக்கு அடித்துக் கொள்ளவும். இதை வறட்சி உள்ள இடங்களில் தடவலாம்.ஃப்ரெஷ் க்ரீம் கடைகளில் கிடைக்கும். அல்லது பாலின் ஆடையை அடித்து ஃப்ரெஷ் க்ரீமாக உபயோகிக்கலாம். சிறிதளவு ஃப்ரெஷ் க்ரீமில் 5 முதல் 10 சொட்டுகள் விளக்கெண்ணெய், 5 மி.லி. கிளிசரின் மற்றும் 5 மி.லி. தேன் கலந்து அடிக்கவும். 3 முதல் 7 நாட்கள் வைத்திருந்து கை, கால்களில் தடவிக் கொள்ளலாம். ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். ஃப்ரீசரில் வைக்கக் கூடாது.கடைகளில் வாங்குகிற மாயிச்சரைசரோ, வீட்டிலேயே தயாரிப்பதோ - எதுவானாலும் அதில் 20 முதல் 25 சொட்டுகள் ஜெரேனியம் ஆயில் (அரோமா ஆயில்) மற்றும் 20 முதல் 25 சொட்டுகள் ஸ்பைகினார்ட் ஆயில், 20 முதல் 25 சொட்டுகள் லேவண்டர் ஆயில், அதே அளவு யிலாங் யிலாங் ஆயிலும் கலந்து உபயோகித்தால், உங்கள் சருமம் உடனடியாக மென்மையாகும். இந்த நான்கு அரோமா ஆயில்களுக்கும் சருமத்தை பட்டு போலாக்கும் தன்மை உண்டு.

  எந்த சருமத்துக்கு மாயிச்சரைசர்?

  மாயிச்சரைசரை பொறுத்தவரை இந்த வகை சருமத்துக்குத்தான் உபயோகிக்க வேண்டும் என எந்த வரையறையும் இல்லை. அதிகபட்ச வெயிலும் சரி, குளிரும் சரி, காற்றும் சரி... நம் சருமத்தைப் பாதிக்கும். அதனால் எல்லா சருமத்துக்கும் மாயிச்சரைசர் அவசியம். ஆனால், சருமத்தின் தன்மைக்கேற்ற மாயிச்சரைசரை தேர்ந்தெடுக்கும் அடிப்படை அறிவு இருந்தால் போதும்.ஏற்கனவே, எண்ணெய் வழிகிற சருமம் உள்ளவர்களுக்கும், எதை உபயோகித்தாலும் அலர்ஜியாகிற சருமம் கொண்டவர்களுக்கும் மாயிச்சரைசர் அவசியமா என்கிற சந்தேகம் இருக்கும். அவர்களுக்கும் மாயிச் சரைசர் அவசியம். சருமத்தில் நீர்ச்சத்து குறைகிற போது முதுமையின் அறிகுறிகள் சீக்கிரமே வரும். 40 வயதுக்கான சரும மாற்றங்கள், தண்ணீர் சத்து குறைகிற போது 20 பிளஸ்ஸிலேயே வரத் தொடங்கிவிடும். சிலர் வயதில் இளையவராக இருப்பார்கள்.

  ஆனாலும், அவர்களது சருமத்தில் சுருக்கங்கள் தெரியும். கண்ணின் ஓரங்களில் க்ரோஸ் ஃபீட் (காக்காவின் கால்கள் மாதிரியான தோற்றம்) தோன்றும். பேசும் போதும் சிரிக்கும் போதும் அசிங்கமாகத் தெரியும். மூக்கு மற்றும் வாயை இணைக்கிற பகுதியில் பிராக்கெட் போடுகிற மாதிரி லாஃப்டர் லைன் எனப்படுகிற சுருக்கங்கள் விழும். இதுவும் சருமத்தில் தண்ணீர் சத்து குறை வதால் ஏற்படுவதே. நமது சருமத்தின் மூன்றாவது அடுக்கில் உள்ள சப்கியூட்டேனியஸ் லேயரில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்கிற கொழுப்பு செல்கள் இருக்கும். சருமத்தில் நீர்ச்சத்து குறைகிற போது இந்த செல்களில் தொய்வு ஏற்பட்டு, சருமத்தில் வெளிப்படையான சுருக்கங்களாக தோற்ற மளிக்கும். நெற்றியில் சிலருக்கு பட்டை போட்ட மாதிரி கோடுகள் விழும். அதற்கும் இதுவே காரணம்.

  கைகளுக்கான மாயிச்சரைசர்

  வயோதிகத்தின் அடையாளங்கள் கழுத்து, கைகள் போன்ற பகுதிகளில் அப்பட்டமாகத் தெரியும். இந்தப் பகுதிகளுக்கும் மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டியது அவசியம். ஏதேனும் ஒரு சமையல் எண்ணெய் சிறிது எடுத்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கைகளில் வைத்து சூடுபறக்கத் தேய்க்கவும். அதாவது, நீங்கள் தேய்க்கிற வேகத்தில் சர்க்கரை கரைய வேண்டும். பிறகு 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து இளம் சூடான தண்ணீரில் கைகளைக் கழுவவும். கைகள் சற்றே ஈரமாக இருக்கும் போதே டீப் மாயிச்சரைசிங் க்ரீமில் 10 சொட்டுகள் லேவண்டர் ஆயிலும் 10 சொட்டுகள் ஜெரேனியம் ஆயிலும் கலந்து கைகளில் தடவிக் கொண்டு, கைகளுக்கு டிஸ்போசபிள் கிளவுஸ் அணிந்து கொள்ளவும். சில நிமிடங்களில் கைகள் வியர்க்க ஆரம்பிக்கும். கிளவுஸ் அணிய முடியாதவர்கள் கைகளுக்கு ஆவி பிடிக்கலாம். கைகளின் சருமத்தில் உள்ள துவாரங்கள் திறந்து, மாயிச்சரைசர் உள்ளே இறங்கி, சுருக்கங்கள் மறைந்து இளமையாகும்.

  கால்களுக்கான மாயிச்சரைசர்

  நம் உடலிலேயே சீக்கிரமாகவும் அதிகமாகவும் களைப்படைகிற உறுப்பு கால்கள். கால்களிலும் வறட்சியும் முதுமைத் தோற்றமும் வரும். உலர்ந்த தன்மையால் எரிச்சலும் வலியும் ஏற்படும். முக்கால் பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் முழங்கால் வரை நனைகிற அளவு எடுத்துக் கொள்ளவும். கைப்பிடி அளவு கல் உப்பு சேர்க்கவும். எப்சம் சால்ட் எனப்படுகிற மெக்னீஷியம் சால்ட் கிடைக்கிறது. இது சருமத்திலுள்ள அழுக்கை நீக்கி, வலியை நீக்கி மென்மையாக்கும். இதையும் கைப்பிடி அளவு சேர்க்கவும். 25 மி.லி. விளக்கெண்ணெய் மற்றும் லிக்யூட் சோப் 2 டீஸ்பூன் அல்லது ஷாம்பு சேர்க்கவும். மருந்துக் கடைகளில் ஹைட்ரஜன் பெராக்சைடு கிடைக்கும். இது நக இடுக்குகளில் சேரும் அழுக்குகளை அகற்றும். இந்தத் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து, தண்ணீர் ஆறும் வரை கால்களை ஊற வைக்கவும்.

  பிறகு சுத்தமான டர்கிட வலால் கால்களைத் துடைத்தால் கால்கள் சுத்தமாகும். உடனே டீப் மாயிச்சரைசிங் க்ரீமில் 10 சொட்டுகள் லிக்யூட் பாரபின் மற்றும் 10 சொட்டுகள் விளக்கெண்ணெய் கலந்து முழங்கால்கள் வரை தேய்க்கவும். உடனடியாக 2 முதல் 5 நிமிடங்கள் விட்டு சாக்ஸ் போட்டுக் கொண்டு தூங்கவும். காலையில் தேய்த்துக் கழுவவும். தொடர்ந்து 10 நாட்கள் இப்படிச் செய்து வந்தால் எப்பேர்பட்ட வறட்சியும் வெடிப்பும் உள்ள கால்களையும் பூக்களின் இதழ்கள் போல மென்மையாக்கும்.

  நம் உடலிலேயே சீக்கிரமாகவும் அதிகமாகவும் களைப்படைகிற உறுப்பு கால்கள். கால்களிலும் வறட்சியும் முதுமைத் தோற்றமும் வரும். உலர்ந்த தன்மையால்
  எரிச்சலும் வலியும் ஏற்படும்.


  அதிகபட்ச வெயிலும் சரி, குளிரும் சரி, காற்றும் சரி... நம் சருமத்தைப் பாதிக்கும். அதனால் எல்லா சருமத்துக்கும் மாயிச்சரைசர் அவசியம். ஆனால், சருமத்தின் தன்மைக்கேற்ற மாயிச்சரைசரை தேர்ந்தெடுக்கும் அடிப்படை அறிவு இருந்தால் போதும். -

  Last edited by chan; 19th May 2015 at 01:48 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter