தமிழ் தத்துவ பாடல் வரிகள்
Discuss here on தமிழ் தத்துவ பாடல் வரிகள் within the Song Lyrics forums, part of the Download Tamil Mp3 Songs & Lyrics forum; படம் : ஆட்டோகிராப் பாடல் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வரிகள் - பா.விஜய் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ...
-
11th Jan 2012, 05:25 PM #1
தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம் : ஆட்டோகிராப்
பாடல் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வரிகள் - பா.விஜய்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே oh மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம்முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே oh மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா.
துக்கம் இல்லை என்ன தோழா
ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே oh மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே oh மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடுAnitha
"Necessity is the mother of invention"
-
11th Jan 2012, 05:27 PM #2
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம் : பிரியமான தோழி
பாடல் : காற்றே பூங்காற்றே
வரிகள் - பா.விஜய்
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா
(காற்றே பூங்காற்றே.....)
நதி என்பது ஓர் நாள் கடலென்பதைச் சேரும்
எப்போதுமே நீ ஓடும் நதியாகலாம்
ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே
அட உள்ளாங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாந்திட கூடாதே
தோழனே தோழனே ஒவியன் கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது
(காற்றே பூங்காற்றே......)
புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று
அணை கட்டினால் அது ஓய்வதில்லை
மழை தூறுமே என்று நடுவானிலே வந்து
திரை கட்டினால் மழை முடிவதில்லை
எரி மலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைதிட முடியாது
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுதிட இயலாது
உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது
இலகளின் சக்தி தான் கனிகளை தாங்குது
(காற்றே பூங்காற்றே......)Anitha
"Necessity is the mother of invention"
-
11th Jan 2012, 05:34 PM #3
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம் : அழகிய தமிழ் மகன்
பாடல் : எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
வரிகள் - பா.விஜய்
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
ஒ ..ஹே தோழா ..
முன்னால் வாடா ..
உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் ..
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே நீதானே ..
ஆ ஆ ....
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே ..
நீ இன்றை இழக்காதே ..நீ இன்றை இழக்காதே ..
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் ..
அதை நீ மறக்காதே ..
நீ அதை நீ மறக்காதே ..
நீ அதை நீ மறக்காதே ..
நேற்று நடந்த காயத்தை எண்ணி ..
ஞாயத்தை விடலாமா ?
ஞாயம் காயம் அவனே அறிவான் ..
அவனிடம் அதை நீ விட்டுச் செல் ..
ஹே ..தோழா முன்னால் வாட ..
உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் ..
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே ..
ஏய் ...
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாட ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை ..
கடல் போல் , மலை போல், காற்றை போல் , பூமி போல் ..
நீ பெருமை செரட ..
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் ..
என்ற வாழ்வை தூக்கிப் போடடா ..
மாணவன் மனது வைத்தால்..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் . .
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே ..
மாணவன் மனது வைத்தால் ..Anitha
"Necessity is the mother of invention"
-
11th Jan 2012, 05:35 PM #4
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம் : அன்பே சிவம்
பாடல் : யார் யார் சிவம்
வரிகள் - வைரமுத்து
யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,
ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்,
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்…
யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,
யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்,
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்…
யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்…Anitha
"Necessity is the mother of invention"
-
11th Jan 2012, 05:36 PM #5
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
11th Jan 2012, 05:36 PM #6
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம் : முத்து
பாடல் : ஒருவன் ஒருவன் முதலாளி
வரிகள் - வைரமுத்து
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்வது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது
நலமா நலமா என்கிறதே
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது
முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது - அட
முதுமை எனக்கு வாராது
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளிAnitha
"Necessity is the mother of invention"
-
11th Jan 2012, 05:40 PM #7
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம் : மௌனம் பேசியதே
பாடல் : ஆடாத ஆட்டமெல்லாம்
வரிகள் - சினேகன்
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?
வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?
நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்.
பாவங்களை மேலும் மேலும்
செர்த்துகொன்டே போகின்றோம்.
மனிதன் என்ற வேடம் போடு,
மிருகமாக வாழ்கின்றோம்.
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து,
தீமைகளை செய்கின்றோம்.
காலம் மீண்டும் திரும்பாதே!
பாதை மாறி போகதே!!
பூமி கொஞ்சம் குலுன்கினாலே
நின்று போகும் ஆட்டமே!
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?
ஹேய்.. கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்,
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே!
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்,
காதல் வந்த பின்னாலே, போதையாட்டமே!
பேருக்காக ஒரு ஆட்டம்,
காசுக்காக பல ஆட்டம்.
எட்டு காலில் போகும்போது,
ஊரு போடும் ஆட்டமே!
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?
வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?Anitha
"Necessity is the mother of invention"
-
11th Jan 2012, 05:44 PM #8
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம் : பாட்ஷா
பாடல் : ரா ரா ரா ராமையா
வரிகள் - வைரமுத்து
ஒரே ஒரு சந்திரந்தான் இரவுக்கெல்லாம்
ஒரே ஒரு கதிரவந்தான் பகலுக்கெல்லாம்
ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்
ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்
ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட
(ரா ரா..)
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டுல் கல்லாதது கல்வியுமல்ல
(முதல்..)
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ
(ரா ரா..)
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுல்ல
நீ ஆறாம் எட்டில் கற்காதது உலகமுல்ல
(ஐந்தாம்..)
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்ல
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல
எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ ஓஹோ
(ரா ரா..)
Anitha
"Necessity is the mother of invention"
-
11th Jan 2012, 05:46 PM #9
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
படம் : ஊமை விழிகள்
பாடல் : தோல்வி நிலையென நினைத்தால்..
வரிகள் - ஆபாவாணன்
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...Anitha
"Necessity is the mother of invention"
-
11th Jan 2012, 06:17 PM #10
Re: தமிழ் தத்துவ பாடல் வரிகள்
hi
Film :Youth
சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமை குள்ளும் சிறு நன்மை உண்டு
வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம்பூவிலும் சிறு தேந்துளி உள்ளதடி குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி தவறுகள் பண்ணி பண்ணி த்திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி இல்ல பாடம்படி பவழ கோடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்த்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமை குள்ளும் சிறு நன்மை உண்டு ஆதியில் ஆண்டவன் இந்த போஒமியை படைத்காணே அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையள்ளயே ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மை என்றும் தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழை இல்லையே தூன்பமென்ற சிற்பிக்குள்தான் இன்பமென்று முத்து வரும் துணிந்தபின் பயம் இல்லையே கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் காலுக்கு செருப்பு எப்படி வந்தது ? முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமை குள்ளும் சிறு நன்மை உண்டு
சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்"This too will pass away"
regards
Vishnupriyah
Similar Threads
-
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள
By Nishahameetha in forum Healthy and Nutritive FoodsReplies: 4Last Post: 10th Jan 2012, 04:18 PM -
தன்வந்திரி அமிர்த கலச வழிபாடு
By vijigermany in forum Festivals & TraditionsReplies: 0Last Post: 3rd Dec 2011, 12:20 AM -
நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
By Ganga in forum Miscellaneous KitchenReplies: 4Last Post: 29th Nov 2011, 04:27 PM -
தூதுவளையில் ஒழிந்துள்ள மகத்தான மருத்து
By Nishahameetha in forum Alternative MedicinesReplies: 0Last Post: 19th Nov 2011, 01:05 PM -
இனிய உள்ளாட்சி தேர்தல் நல்வாழ்த்துகள்!!!!!
By surya in forum PoemsReplies: 1Last Post: 18th Oct 2011, 02:28 PM


23Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks