Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree358Likes

Penmai Special Teachers Day Contest!


Discussions on "Penmai Special Teachers Day Contest!" in "Special Contest" forum.


  1. #21
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai Special Teachers Day Contest!

    @Penmai

    dear ilavarasi mam,

    penmaiyin ovvoru pottilayum pageduthu kolavdhu inimaiyaana anubavam. Padhivoda varen mam.....

    my dear @gkarti sis ungal tagging sevaikku nandri.....


    Sponsored Links
    Vimalthegreat, sumitra and gkarti like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #22
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Penmai Special Teachers Day Contest!

    Illa sister enaku oru doubt.... @Penmai

    Nama real life la namaku teach pana school and college teachers pathi matum thaan solanuma? oru silar nama manaseegama follow panuvom....avanga kooda namaku neradi thodarbu irukathu.... meet pani iruka matom.....avanga achievements and life nama admire pani irupom......avanga influence guidance namaku irukum....avangala pathi kooda eluthulama???

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #23
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,146

    Re: Penmai Special Teachers Day Contest!

    Oh Yes.. Go Ahead daa..


    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Illa sister enaku oru doubt.... @Penmai

    Nama real life la namaku teach pana school and college teachers pathi matum thaan solanuma? oru silar nama manaseegama follow panuvom....avanga kooda namaku neradi thodarbu irukathu.... meet pani iruka matom.....avanga achievements and life nama admire pani irupom......avanga influence guidance namaku irukum....avangala pathi kooda eluthulama???



  4. #24
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Penmai Special Teachers Day Contest!

    Quote Originally Posted by gkarti View Post
    Oh Yes.. Go Ahead daa..
    Okk da.... time spare seinchi post poda try panren

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #25
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai Special Teachers Day Contest!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Illa sister enaku oru doubt.... @Penmai

    Nama real life la namaku teach pana school and college teachers pathi matum thaan solanuma? oru silar nama manaseegama follow panuvom....avanga kooda namaku neradi thodarbu irukathu.... meet pani iruka matom.....avanga achievements and life nama admire pani irupom......avanga influence guidance namaku irukum....avangala pathi kooda eluthulama???
    Hope your doubt got cleared.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #26
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Penmai Special Teachers Day Contest!

    டாக் செய்ததற்கு நன்றி கார்த்தி...தாமதத்திற்கு மன்னிக்கவும்..(பையன் நேற்று சபரிமலை போய் வந்ததும் தான் தற்போது ஓய்வு கிடைத்து இருக்கு.)

    ஒரு ஆசிரியரா இருந்து இப்போட்டியில் பங்கு பெற பெருமை அடைகிறேன்..போட்டி அறிவித்த இளவரசிக்கு நன்றி.....

    ஒரு ஆசான்எவ்வாறு இருக்க வேண்டுமென்றால் அவரிடம் படித்தவர் தன் முதுமை காலத்திலும் அவரை நினைவில் வைத்து இருக்க வேண்டும்..
    தன் பேரக்குழந்தைகளிடம் சொல்லும்படியான உதாரணத்துடன் இருக்க வேண்டும்..
    ஆசிரியரின் குணம் மாணவரிடம் பிரதிபலிக்க வேண்டும்..
    அவரின்
    நினைவில் அழியா நட்சத்திரமா ஜொலிக்க வேண்டும்..

    முதல் பிரிவு

    ஆ-
    ஆக்கியோன்
    (ஆசான் என்பவன் ஒரு மாணவனை தன்னிடம் இருந்த நடை உடை பாவனை அறிவு ஒழுக்கம் குணம் செயல்...எல்லாவற்றையும் தந்து முழுமனிதனா
    ஆக்குபவன்..உருவாக்குபவன்..)

    சா-
    சாதுரியம்(
    உலகையே வெல்லும் திறமை கொண்ட கல்வி அறிவில் சிறந்தவனை உண்டாக்குபவனே சாதுரியமான ஆசிரியன்..)

    ன்-
    சான்றோன்(ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.......
    குறளுக்கு எடுத்துக்காட்டாய் சான்றோனாக்க பெரும் பங்கு வகிப்பவனே சிறந்த நற்ஆசான்......)

    இரண்டாம் பிரிவு

    ஆறாம் வகுப்பில்
    ரங்கநாயகி ஆசிரியை மிக மிக பொறுமையாக திட்டாமல் முழங்காமல் தமிழ் எழுத்துகளில் ஜ,ஐ வித்தியாசத்தை சொல்லி தந்து எனக்கும் கல்வி அறிவுக்கு வித்திட்டு பொறுமையை கற்று தந்தார்...

    பத்தாம் வகுப்பில் சமபந்தி போஜனம் என்பதை சம்பந்தி போஜனம் என்று உச்சரித்த என்னை திருத்தி நல்வழி படுத்திய
    சீதாலக்ஷ்மி ஆசிரியரிடமிருந்து தெத்துப்பல் புன்சிரிப்பையும் மறக்கமுடிய வில்லை..அவரையும் மறக்க முடியவில்லை..நான் தமிழ் ஆசிரியராக உருவாக என் மனதில் முதல் வித்திட்டவர்...

    காலை முதல் மாலை வரை ஆசிரியரையே பார்க்கிறோம்..அவர் பொலிவற்று இருந்தால் நாம்!!!!!!!!அப்படி இல்லாமல் மாட்சிங்..மாட்சிங்...ட்ரெஸ் கோடிங்..வாட்ச்,ப்ளௌஸ் என்று எல்லாவற்றிலும் நடை உடை பாவனை என சொல்லிகொடுத்த பன்னிரண்டாம் வகுப்பு ஜாலியான வேதியல் ஆசிரியை
    லஷ்மி..

    பெர்பெக்ட் என்றால் கிலோ எவ்வளவு என்று இருந்த என்னை இன்று ஒரு குழந்தை கையெழுத்து சரியில்லை எனில் அந்த பக்கத்தை கிழித்து என் கண் முன்னே திரும்ப திரும்ப எழுத வைக்கும் திறனை சொல்லி தந்த பெருமை என் வகுப்பு ஆசிரியை
    ஜெயலஷ்மி அவர்களையே அப்பெருமை சாரும்...

    பள்ளி வகுப்பின் பாடத்தில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைவேன்..அப்படி இருந்த என்னை கல்லூரியிலே அத்தனை துறைகளிலேயே தமிழில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று ஈன்ற பொழுதில் என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் சான்றோனாய் உருவாக்கிய சாதுரியம்
    சற்குணம் ஆசிரியருக்கு அன்றி புகழ் வேறு யாருக்கு கிட்டும்..

    ஆக்கியோன்,சாதுரியம்,சான்றோன் குணங்களை கொண்ட மேற்கண்ட ஆசிரியர்களே என் நினைவில் என்றும் அழியா நட்சத்திரங்கள்......

    படித்து பயிற்சி பெற்றால் மட்டும் ஒரு ஆசிரியர் பட்டம் உருவாக முடியாது....மேற்கண்ட குணங்களை நான் பயின்ற ஆசிரியரிடம் கற்றுக்கொண்டதால் என்னமோ இன்றைய தினம் எனக்கு மாணாக்கர் ஆசிரியத்தகுதியை தந்து உள்ளர்..

    என்னை
    நற்மாணவியாய் உருவாக்கி,
    பல மாணவர்களை உருவாக்க தகுதியை தந்த என் ஆசிரியர்களக்கு படித்து முடித்து பல வருடங்கள் ஆகியும் நினைவு கூர்ந்து இக்கணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்..நன்றி..நன்றி..நன்றி...



    kasri66, jv_66, repplyuma and 5 others like this.

  7. #27
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Penmai Special Teachers Day Contest!

    மிகவும் அருமையான , அர்த்தமுள்ள போட்டி இளவரசி சிஸ் ...

    Penmai, kasri66, jv_66 and 3 others like this.
    - உமா உதய்

  8. #28
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: Penmai Special Teachers Day Contest!

    Nice contest mam

    now only i know about this contest.

    phase-1

    Teacher

    T- tell us that “you can do it”
    e- encourage us to score good marks
    a- affectionate with us like their own children
    c- care about us
    h- honest in their work
    e- enlighten our life and
    r- real hero/ heroiene for students

    phase-2

    when i was in 9th standard it happens my parents forced me to join in a hostel. First, I used to cry every time thinking about my parents and feels homesick and did not even think about my studies.
    One day my zoology mam was taking classes. She was taking 10th std syllabus, that time she feels that nobody understood what she is teaching, she said ”anyone get up and explain to your friends? I will also help you” like that
    I was standing up and telling what she taught from first till last after completing only I realize that I was answering her. Without my knowledge, it happens after that she told all my friends to applause me. I feel very happy that time from that day I used to read for all the tests in all the subjects and become favorite students to all teachers. That time only I realized my talent in studies.
    My zoology mam is my hostel warden. I don’t like maths. From that day my zoology mam helped me to learn maths. She asked my friends to teach me maths easily and from that I scored good marks.
    Every time my staffs will motivate me. That one minute applause given by my friends and teacher is boost for me.

    I learn motivation from my mam.

    kasri66, jv_66, Uma manoj and 5 others like this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  9. #29
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai Special Teachers Day Contest!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Illa sister enaku oru doubt.... @Penmai

    Nama real life la namaku teach pana school and college teachers pathi matum thaan solanuma? oru silar nama manaseegama follow panuvom....avanga kooda namaku neradi thodarbu irukathu.... meet pani iruka matom.....avanga achievements and life nama admire pani irupom......avanga influence guidance namaku irukum....avangala pathi kooda eluthulama???
    Vimal,
    Ungaloda role model pathi therinjikka romba aavalaa irukken, thayavu seidhu podunga.


  10. #30
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Penmai Special Teachers Day Contest!

    என்னுடைய பதிவோடு நானும் வந்துவிட்டேன் தோழிகளே.

    பிரிவு – 1

    – ஆக்கபூர்வமான ஆற்றலை வெளிகொணர்பவர்

    சா – சார்பு நிலையற்ற சமத்துவத்தின் பிரதிநிதி

    ன் – நன்னம்பிக்கையுடன் சேர்ந்த தன்னம்பிகையும் நல்குபவர்

    பிரிவு – 2

    ஒரு முறை பத்திரிகையாளர் ஒருவர் நம் தேசப்பிதாவிடம் நீங்கள் உலகிற்கு சொல்லும் செய்தி என்ன? என்று கேட்ட போது என் வாழ்க்கையே நான் சொல்லும் செய்தி” என்று விடையளித்தார் என்று நான் எங்கோ படித்ததுண்டு.

    இப்படி தன் வாழ்க்கையை செய்தியாக விடுத்து சென்ற எண்ணற்ற மகான்கள் நம் மண்ணில் அதிகம். இந்த மாமனிதர்கள் வரிசையில் வாழ்ந்தவர் தான் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் குடியரசு தலைவர் மாண்புமிகு கலாம் அவர்கள்.

    தாய்மண்ணின் தலைமகனாக கொலுவீற்றிருந்த போதும் தன்னை ஆசிரியராக அடையாளப்படுத்தி கொள்வதில் பேருவகையுற்ற தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வர்.

    ஏனோ என் மனதில் அவர் தலைவராக பதிந்ததை விட ஆசிரியராக ஆழமாக பதிந்து போனார். இந்த மானசீக ஆராதனைக்கு காரணமாக அவரிடம் இருந்த நிறைய குணநலன்கள் என்னை ஈர்த்தாலும் அதில் ஒரு சிலவற்றை மட்டும் என் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பேன்.

    1.தன்னெழுச்சியும், சுய கௌரவமும்

    சிறுவயதில் இருந்து எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் என் மனதின் அனுமானங்கள் அடி பிறழாமல் அசலாகி வெற்றிபெற வேண்டும். அதில் சிறு சறுக்கல் நேர்ந்தாலும் அதன் பாதிப்பு என்னுள் சற்று அதிகமாக இருக்கும். தோல்வி குழந்தையின் சுவாசத்தை கூட ஸ்பரிசிக்க விரும்பாத வெகு சாதாரண பெண் நான். வாழ்வில் பெரிய அளவில் எந்த சவால்களோ சிக்கலோ சந்திக்க அவசியமின்றி பெற்றோரின் முழு பாதுகாப்பிலும் முழுசுதந்திரத்தோடும் வளர்ந்ததால் இந்த பழக்கம் என்னுள் வேரூன்றி விட்டதோ என்று நான் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் தருணங்களில் என்னுள் கேள்வி எழுந்தது உண்டு.

    அக்னி சிறகுகள் படித்து முடித்த போது என்னுடைய இந்த மனபான்மையில் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய மாற்றம் என்னுள் நிகழ்ந்தது.

    வாழ்வின் மிக மிக கடினமான காரியங்களில் ஒன்று மனதின் அலைவு நிலையை ஒரே சீராக நேர்கோட்டில் நிறுத்துவது தான். தன்னுடைய உணர்வுகளை ஓரளவு விழிப்போடு உற்று கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும் என்று நினைக்கிறேன்.


    ஏமாற்றங்களும் தோல்விகளும் அவருடைய சுயத்தை அடித்து வீழ்த்த முற்படும் போதெல்லாம் இந்த மாமனிதர் எழுச்சியோடு நிமர்ந்து நின்று காலத்தை வென்ற நிகழ்வுகளை நெகிழ்ச்சியோடு படித்து புளகாங்கிதம் அடைந்த மணித்துளிகள் ஆயிரம்.

    எந்த சூழ்நிலையிலும் உன் சுயம் சாய்ந்து ஓய்ந்து போகாதே என்ற கருத்தை அடிக்கடி தன் உரைகளில் அறிவுறுத்திய அன்பிற்குரிய ஆசான்.


    வெற்றிகளை ஆராதனை செய்வதும் தோல்விகளை அறவே வெறுத்து புறம்தள்ளி நம்மை நாமே வருத்திக்கொள்வதும் அர்த்தமற்றது என்ற உண்மை ஒரளவிற்கு புலப்பட்டது.

    வெற்றிகளின் மீதான அதீத நேசமும் ஆராதனையும் – தலைகனத்தை வளர்க்கும் தோல்விகளின் மீதான அதீத ஏமாற்றமும் வெறுப்பும் – தன்னம்பிக்கையை சிதைக்கும் என்ற நேர்மறை சிந்தனை மேலோங்கியது.

    இப்போதெல்லாம் யாராவது you have done a nice job, Good என்று சொல்லும்போது துள்ளி குதித்து கர்ணம் போட தயாராகும் இதயத்திற்கு, My dear little sweet heart, don’t submerge yourself in emotions. If you beat 72 times per minute by average, you and me can live longer என்று என்னுள் சொல்லி ஒரு சில நிமிடங்களில் என்னை சமநிலைப்படுத்தி கொள்ளும் பக்குவம் என்னுள் வளர்ந்து விட்டது.
    அதே போல் என் மனதின் சக்தி குறைவதாக தோன்றும் போது Keep yourself calm, Be brave my dear girl, there is long road ahead to reach your destination, rise up and move forward என்று சொல்லி என்னை தட்டி எழுப்பி கொள்ள முடிகிறது.

    விளைவுகளை மட்டுமே முன்னிலைபடுத்தாமல் என் முயற்சிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யும் பழக்கத்தை என்னுள் வளர்த்து கொண்டதற்கு
    திரு.கலாம் அவர்கள் மட்டுமே காரணம்.


    2. அறிவுகடலில் ஆழ்நிலை தியானம்


    அறிவியல், தொழில்நுட்பம், இசை, இலக்கியம், ஆன்மீகம், என்று இவரால் மட்டும் எப்படி வேறுபட்ட துறைகளில் கோலோச்ச முடிகிறது? என்றெண்ணி அடிக்கடி என்னுள் வியந்ததுண்டு. இதற்கான விடை கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை புத்தக கண்காட்சியில் திரு.கலாம் உரையை நேரடியாக கேட்கும் பேறு பெற்ற போது கிடைத்தது. அவர் அச்சமயம் உழுவுதொழில் பற்றி தான் படித்த 2 புத்தகங்களின் சாரத்தை மக்களோடு பகிர்ந்து கொண்டார்.என்னது, ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானி விவசாயம் பற்றிய புத்தகம் படித்தரா? என்று அவர் உரையை விழி விரிய ஆச்சரியத்தோடு கேட்ட அன்றைய பொக்கிஷ பொழுதை என்றும் என்னால் மறக்க இயலாது .

    CNN IBN தொலைக்காட்சியில் கலாம் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார் (என் நினைவுபேழையின் இயக்கம் சரியென்றால் அவர் குடியரசு தலைவர் பதவி காலம் முடிவுற்ற சமயம் என்று நினைக்கிறேன்).

    In that conference Sir defines what is National Development?

    National Development = A+B+C

    Where,

    A = GDP

    B = How we are lifting people from below poverty line?

    C = Value system

    கேட்ட நொடியில் இந்த வரையறை என் மனதோடு ஆழமாக பதிந்து போனது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் விழுமியங்களும் பங்கெடுக்கின்றனவா? என்று நிதி சார்ந்த கல்வி கற்கும் பெண்ணாக நான் பின்னாளில் வியந்ததுண்டு. பொருளாதார முன்னேற்றம் மட்டுமே வளர்ச்சியின் குறியீடாக ஏட்டு கல்வியில் நமக்கு போதிக்கப்பட்டிருக்க இவரின் விளக்கம் கேட்கும் அனைவர்க்கும் வித்தியாசமாக தெரியும் என்று நம்புகிறேன்.

    விழுமியங்களுக்கு அவர் தந்த முக்கியத்துவத்திற்கான காரணம் அவர் ஒரு சிறந்த ஆசிரியராக தன் வாழ்நாளை வடிவமைத்து கொண்டது மட்டுமே தான் என்பது என் கணிப்பு. சாசுவதமான வளர்ச்சியில் விழுமியங்களின் பங்கு இன்றியமையாதது என்று உலகின் நிகழ்வுகளை சற்றே கூர்மையாக கவனித்தபோது காலம் எனக்கு புரிய வைத்தது. விழுமியங்களை விழுங்கி விட்டு பொருளாதார நோக்கில் மட்டுமே வளர்ச்சியடையும் சமூகத்தில் மனிதம் மரித்து போகிறது என்பதை நம்மில் யாரேனும் மறுக்க முடியுமா?

    நான் தொடக்கத்தில் நினைவுகூர்ந்த அவரின் பரந்துபட்ட அறிவு செறிவு அவரினுள் நற்சிந்தனைகளை தூண்டி தினம் தினம் இந்த உலகிற்கு புதிய விடயங்களை சொல்ல வைத்திருக்கிறது என்று எனக்கு தோன்றும். அவருடைய கருணை நிறைந்த கண்களும் நேச ரேகைகள் ஓடும் முகமும் திரையிலோ நிழற்படத்திலோ பார்க்கும் போதெல்லாம், ஐயன் மகாகவியின் “ஞானவொளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதி முகம்” என்ற மரகத வரி மட்டுமே என் மனதினுள் வலம் வரும். ஆம், கலைநிறைந்த கலாமின் முகத்தில் நான் கலைமகளை தரிசித்தேன். ஞானத்தின் மீதான நேசத்தை என்னுள் அதிகரித்த மனிதர்களில் கலாமும் ஒருவர்.

    3. அன்பின் ஆளுமை:

    ஒரு மனிதன் தன்னை நல்ல தலைவனாக உருவாக்கி கொள்ள அவசியம் தன்னுள் வளர்த்து கொள்ள வேண்டிய ஒரு சில ஆளுமை பண்புகளின் தலைமை பண்பு அன்புடைமை. அதே நேரத்தில் அந்த அன்பு தன்னை பலவீனப்படுத்த அனுமதிக்காமல் காத்து கொள்வதும் போற்றத்தக்க ஆளுமையே.

    சாராபாய், தவான் போன்ற உயர்ந்த உள்ளங்கள் உயிர் தந்த கனவு குழந்தைககளை பிரசவிக்க கலாம் தன் விஞ்ஞான வாழ்வில் நிறைய குழுக்களுக்கு தலைமை ஏற்க வேண்டி இருந்தது. அப்படி தலைமை ஏற்ற காலகட்டத்திலும் சரி, அதன் பின்னர் இந்த தேசத்தின் குடியரசு தலைவராய் முடி சூடிய பின்பும் சரி அவர் தன் தனிப்பட்ட அன்பிற்குரியவர் என்று கருதி எவருக்கும் பரிந்துரையோ, பாராபட்சமோ காட்டி எந்த சகாயமும் செய்தது இல்லை. இந்திய தேசத்தின் கடைகோடி கிராமத்தின் சிறுமியையும், தன் ரத்தஉறவுகளையும் சம அளவிலான பாசத்தோடு, மனம் நிறைந்த அன்போடு நேசித்தார்.

    அன்பின் ஆதிக்க வலையில் சிக்கி கொள்ளாமல் சுதந்திர பட்டாம்பூச்சியாகவே அவர் சிறகடித்து பறந்து தன் பவித்ரத்தை காத்து கொண்டது போற்றுதலுக்குரியது.

    அதனால் தானோ என்னவோ கனவு காணும் கலை பயிற்றுவித்த ஆசான் ஆழ்துயில் கொண்டார் என்ற செய்தி கேட்ட அன்று இரவு என் அறையின் அரையிருளில் தலையனையில் முகம் பதித்த போது விழிகளில் வெள்ளம் பொங்கியது. இந்திய தேசத்தின் எண்ணற்ற ஆத்மாக்கள் அவரை எண்ணி கண்ணீர் சிந்தியதற்கான காரணம் அவர் மேல் கொண்டிருந்த அன்பு, மரியாதையும் மட்டுமேயல்ல; அவருக்குப்பட்ட தாங்கள் பட்ட நன்றிகடனும் கூட சிந்தப்பட்ட ஒவ்வொரு விழிநீர்துளியிலும் கலந்தே இருந்தது என்று தான் எனக்கு தோன்றும்.

    சமூகத்திடமிருந்து எண்ணற்ற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் மனிதன் அதில் சிறிதளவாவது சமூகத்திற்கு திருப்பி தர வேண்டுமென்ற எண்ணத்தின் விதை எனக்குள் மாண்புமிக்க கலாம் அவர்களால் தான் ஊன்றப்பட்டது.


    மேற்கூறிய பண்புகளில் முதலிரண்டை தொடர்ந்து கடைபிடிக்க நான் பெருமுயற்சி எடுக்க வேண்டியதில்லை. ஆனால் கடைசி குணத்தை என்னுள் வளர்த்து கொள்ள பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். இருந்தும் முழு மனதோடு முயற்சிக்க வேண்டியது என் கடமையே என்று உணர்கிறேன்.

    இந்த பதிவு மனித இனத்தை நல்வழிப்படுத்தும் போற்றத்தக்க நல்லாசிரியர் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine November 2015. You Can download & Read the magazines HERE.


    Last edited by sumathisrini; 23rd Nov 2015 at 02:49 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter