Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree548Likes

Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest


Discussions on "Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest" in "Special Contest" forum.


  1. #11
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    காதலர் தினம்


    ராமநாதபுரத்தில் கீழக்கரையைச் சேர்ந்த மாரீஸ்வரிக்கு நகரத்தில் கொண்டாடுவது போல் காதலர் தினம் கொண்டாட வேண்டும் என்று ஆசை. காதலர் தினம் கொண்டாடக் காதலன் வேண்டாமா.... அவள் காதலனுக்கு எங்கே போவது?

    இள ரோஜா வண்ண உடையில் பெண்களும், அவர்களுக்காகக் கையில் மலர் செண்டுடன் ஆண்களும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்வதை எத்தனைச் சினிமாவில் பார்த்திருப்பாள். ஆனால் நிஜத்தில்.... அவள் பெருமூச்சு விட.... வெறும் காத்து தாங்க வந்தது.

    அவள் இப்படி நினைப்பது மட்டும் அவள் வீட்டினருக்குத் தெரிந்தால்.... தோலை உரித்துத் தலை கீழாகத் தொங்க விட்டு விடுவார்கள். மாரீஸ்வரிக்கு எப்போதுமே நகர வாழ்க்கையின் மீது மோகம் உண்டு. அவள் படித்தது எல்லாம் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் தான். வீட்டிலும் அதிகக் கட்டுப்பாடு. வெளியில் எங்கும் தனியாகச் செல்ல முடியாது. அவள் தந்தையோ தாயோ உடன் வருவார்கள்.

    உடையிலும் கட்டுப்பாடு தான். சுடிதார் அணியலாம். ஆனால் அது இறுக்கமாக இல்லாமல் தொளதொளப்பாக இருக்க வேண்டும். அதோடு கண்டிப்பாகத் துப்பட்டா போட்டுப் பின் பண்ண வேண்டும்.

    அந்த வருஷம் படிப்பை முடித்த மாரீஸ்வரிக்கு, அவள் வீட்டினர் உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய.... அவள் நல்ல நேரம், அவளுக்கு அமைந்த மாப்பிள்ளை... பெங்களூரில் வேலை பார்த்தான். மாரீஸ்வரியை கையில் பிடிக்க முடியவில்லை.... இந்த வருஷம் கண்டிப்பா காதலர் தினம் கொண்டாடிடணும் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டாள். திருமணமும் நல்லபடியாக முடிந்தது.

    சரவணன் அவளை ஈஷு என்று செல்லமாக அழைத்ததும் கிறங்கி தான் போனாள். சரவணன் அவளுக்கு ஜீன்ஸ், டாப்ஸ், அழகான சுடிதார்கள், விதவிதமான காலணிகள் என்று வாங்கிக் குவிக்க.... தான் நினைத்த வாழ்க்கை கிடைத்து விட்ட சந்தோசம் அவளுக்கு. ஒவ்வொரு வார இறுதியும் வித விதமான உடைகள் அணிந்து, தன் கணவனுடன் வெளியே எங்காவது சென்றுவிட்டு வருவாள்.

    திருமணத்திற்கு முன்புதான் காதலிக்க முடியவில்லை... திருமணத்திற்குப் பின்பாவது காதலிக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு, பாவம் காதலிக்கத் தான் தெரியவில்லை.

    அதனால் நிஜ காதலர்கள் யாரையாவது நேரில் பார்த்தால்.... அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து வைத்திருந்தாள். அதன்படியே அவள் வெளியே செல்லும் போது.... அவள் கண்கள் சுற்றிலும் அலைபாய்ந்தபடி இருக்கும்.

    அன்றும் அவள் கணவனுடன் ஹோட்டலில் உட்கார்ந்து உணவு அருந்தியவள், எதிர் இருக்கையில் ஆண்ணும் பெண்ணுமாகச் சிலர் வந்து அமர்ந்ததும், ஆர்வமாக அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தாள்.


    அதில் ஒரு பெண் ஒரு ஆணின் தோல் மீது சாய்ந்து கொண்டு.... அவன் காதோரம் எதோ பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தவள், அதே போல் தானும் தன் கணவனின் அருகில் நெருங்கி அமர்ந்து, அவனின் தோளில் சாய்ந்து கொள்ள... சரவணனும் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான். அதைப் பார்த்தவுடன் ‘ஹப்பா நாம போற ரூட் கரெக்ட் தான்.’ என்று அவளே அவளுக்குத் தட்டி கொடுத்துக்கொண்டாள்.

    சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தால்.... உள்ளே பார்த்த அதே பெண் ஆனால் வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆணின் கை அவள் இடையில் இருந்தது. முன்னே அவள் யார் தோள் மீது சாய்ந்து இருந்தாலோ... அவனும் அங்கே தான் இருந்தான். இந்தப் பொண்ணு யாரை லவ் பண்ணுது.... அவளுக்குத் தலையே சுற்றியது. அவர்களையே திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டு சென்றாள்.

    பிறகு அடுத்த வாரம் அவர்கள் வீட்டின் அருகே இருந்த உணவகத்திற்குச் சென்றனர். அந்த உணவகம் வித்தியாசமாக இருந்தது. ஒரே மாதிரி மேஜைகள் இல்லாமல்.... கார் டயர் போல்.... பொம்மை வடிவத்தில் என்று வித்தியாசமாக இருந்தது. உட்காரும் இருக்கையும் விதவிதமான வடிவத்தில் இருந்தது. மங்கலான ஒளியில் மெல்லிய இசையோடு அந்த இடமே ஒரு ரொமாண்டிக் பீல் கொடுத்தது.

    ஹய் நல்லா இருக்கே என்றபடி உட்கார்ந்த மாரீஸ்வரி சுற்றிலும் நோட்டம் விட.... ஒரு மேஜையைச் சுற்றி இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களில் யார் காதலர்கள்? என்று அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது பரவாயில்லை அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் சர்வசாதரணமாக ஒருவரை ஒருவர் தொட்டு பேசிக்கொள்ளவதும்.... ஒருவரை ஒருவர் எதற்கோ பாராட்டி அணைத்துக்கொள்வதையும் பார்த்து அவளுக்குக் கோபம் வந்தது.

    நண்பர்கள் என்றால் கூட ஒரு அளவு இல்லையா.... இப்படியா நடந்து கொள்வது என்று நினைத்தவள், வேகமாக அவர்களிடம் இருந்து பார்வையைத் திருப்பி... இன்னொரு ஜோடியைப் பார்க்க.... அவர்கள் திருமணம் ஆனவர்கள் என்று பார்த்ததுமே தெரிந்தது. ஆளுக்கொரு கைப்பேசியை வைத்து நோண்டிக்கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் இருந்து பார்வையைத் திருப்பியவள், மற்ற இரண்டு மேஜையில் இருந்தவர்களைப் பார்க்க... அவர்கள் மெதுவான குரலில் பேசியபடி உணவு அருந்துவதையும்.... அதோடு எதோ குளிர்பானத்தைக் குடிப்பதையும் பார்த்தாள்.

    அரைமணி நேரம் சென்று பார்க்கும் போதும், அவர்கள் உணவிலோ... குளிர்பானத்திலோ கால்வாசி கூடக் காலியாகவில்லை. இங்கெல்லாம் வந்தால் இப்படித்தான் சாப்பிட வேண்டும் போல் என்று நினைத்தவள், தானும் மெதுவாகச் சாப்பிட.... என்ன முயன்றும் பத்து நிமிடத்திற்கு மேல் நீடிக்க முடியவில்லை... எப்படி முடியும்? தட்டில் இருந்த உணவு தான் காலியாகிவிட்டதே.





    Sponsored Links
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  2. #12
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    இன்னொரு நாள் அவர்கள் வீட்டின் கதவை திறந்து கொண்டு குப்பையை வெளியே வைக்க வந்தவள், பக்கத்து வீட்டின் கதவு திறப்பதைப் பார்த்து, அங்கே யார் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் நிமிர்ந்து பார்க்க.... இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் வெளியே வந்து லிப்டில் ஏறிச் சென்றனர். நண்பர்களைப் பார்க்க வந்துவிட்டுச் செல்வதாக நினைத்தாள்.

    சில நாட்கள் தொடர்ந்து கவனித்த போது தான், அவர்கள் நால்வருமே அதே வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஒருவேளைக் கல்யாணம் ஆனவர்களோ என்று நினைத்தாள். பிறகு தான் தெரிந்தது, அவர்கள் எல்லோரும் திருமணமாகாதவர்கள் என்று.... திருமணம் ஆகாத ஒரு ஆண்ணும் பெண்ணும் ஒரே வீட்டில் சேர்ந்திருப்பது தவறு இல்லையா.... அவர்களுக்குள் தவறான உறவு இல்லாத போதும், வெறும் நண்பர்களாக இருந்தாலும்... இதற்கு என்ன அவசியம்? என்று அவளுக்குப் புரியவில்லை.

    “வெளியூர்ல இருந்து வேலை பார்க்க வந்ததுங்க. அம்மா அப்பாவுக்குத் தெரியாம இந்த வேலை எல்லாம் பண்ணுதுங்க. அவங்க வீட்ல இருந்து வந்தா... போன் பண்ணிட்டு தான வருவாங்க... அதுவும் விலாசம் கண்டுபிடிச்சு வர்றது ஈஸியா.... அவங்க வரும் போது.... எதாவது சமாளிச்சிடுங்க. இவங்களை யார் கேட்கிறது? சம்பாதிகிறோம்ன்னு தைரியம் வேற என்ன சொல்ல....” வேலைக்காரி புலம்பியபடி செல்ல....

    இது தவறு இல்லையா.... கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தலாமா... நண்பர்களோ காதலர்களோ ஒரு கண்ணியமான இடைவெளி இருக்க வேண்டாமா... பலர் கவனத்தைக் கவரும்படி சத்தமாகப் பேசி சிரிப்பதும், ஒட்டி உறவாடுவதும் தான் நாகரிகமா.... மாரீஸ்வரி தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

    ஒருவேளை இது தான் சரியோ.... நண்பர்கள் என்றாள் இப்படித்தான் இருக்க வேண்டுமோ... நாம் தான் தவறாகப் புரிந்து கொள்கிறோமோ... அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.... இப்போதே இப்படி என்றால்... இனி வரும் சந்ததியினரின் நிலை.... அவளுக்குத் தன் குழந்தைகளை நினைத்துப் பயம் வந்துவிட்டது.


    அன்று முழுவதும் யோசித்தபடியே இருந்தாள். நமது பாரம்பரிய உணவுகளை மறந்து மற்றவர்களைப் பார்த்து கண்டதையும் உண்டு, இன்று நம் நாட்டில் நோயாளிகள் அதிகமானது தான் மிச்சம்.

    அதே போல் வெளிநாட்டினரைப் பார்த்து, நாமும் அவர்களைப் போல் வாழ ஆரம்பித்தால்... நமது கலாச்சாரம் என்னாவது? வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கூட நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விட்டுத் தருவது இல்லை.... இங்கிருப்பவர்கள் தான் அதிகம் ஆடுகின்றனர் என்று நினைத்தவள், காதலர் தினத்திற்காக வாங்கி வைத்திருந்த வாழ்த்து அட்டையை எடுத்துக் கிழித்துக் குப்பையில் போட்டவள், தன் கணவனுக்குப் பிடித்த இரவு உணவை சமைக்கச் சென்றாள்.

    வாழ்த்து அட்டையிலோ... மலர் செண்டிலோ காதலை உணர்த்துவதை விட... நம் வாழ்க்கைத் துணைக்கு உண்மையாகவும், அன்பாகவும் இருந்தே நம் நேசத்தைப் புரியவைக்கலாம் என்று மாரீஸ்வரி புரிந்து கொண்டாள்.

    (நான் நேரில் பார்த்த சம்பவங்களையே கதையாக தொக்கு கொடுத்துள்ளேன். நான் எல்லோரும் இப்படித்தான் என்று சொல்லவரவில்லை.... இவர்களை போல் இன்னும் நிறைய பேர் வந்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே இந்த கதையை எழுதினேன்.)


    Last edited by ramyaraj; 22nd Feb 2016 at 07:06 PM.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  3. #13
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    காதல்
    ======
    காதல் ....
    இரண்டு மனங்க ளுக்குள்
    இயல்பாய் முகிழ்ப்பது !!
    இரண்டு மனங்களுக்குள்
    இயல்பாய் நிகழ்வது !!

    காதல் ....
    இனம், ஜாதி, மதம் கடந்து
    இல்லறம் நல்லறமாக்க
    இணைவது வெறும் கைகள் அல்ல
    இரண்டு அழகிய மனங்களும் !

    காதல் ....
    இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
    இன்னவனே இனியவன் என
    இறுதி காலம் வரை இசையாய்
    இணை ந்து இருக்க விரும்புவது !!!

    காதல் ....
    இறுக்கமாய் முகம் வைத்து
    இசை ஸ்ருதி பிசக என்றும்
    இசையற்று கத்துவதற்கு அல்ல
    இணை ந்து இருக்க விரும்புவது !!!

    காதல் ....
    இங்கு ஒரு கால் அங்கு ஒரு கால்
    இரண்டு கப்பல் ஓட்ட அல்ல
    இங்கே மனம் எடுத்து கொடுப்பது
    இணை ந்து இருக்க விரும்புவது !!!

    காதல்....
    இணைந்த பல பேரில் எங்கோ
    இருக்கும் சில பேருக்கு மட்டுமே
    இறைவன் அருளால் சித்திப்பது
    இணை ந்து இருக்க விரும்புவது !!!

    காதல்.....
    இப்பிறவியில் எனக்கு இல்லை என்றாலும்
    இப்பிறவியில் அனைவரும் நன்கு
    இன்புற்றிருக்க நினைக்கும் எண்ணம்
    இறைவன் எனக்கு தரட்டும் எப்போதும் !!!

    ..... ஆக்கம் ரா. கிரிஜா




    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #14
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    காதல் ...காதல் ...காதல்

    ஆதாம் ஏவாள் காலத்திலே தோன்றியது காதல்..........காதல் என்பது உலக அகராதியிலே உயர்வான வார்த்தை என்றும்....காதலே வாழ்வின் ஆதாரம் என்றும் காதல் காதல் காதல் ....காதல் போயின் சாதல் சாதல் சாதல்.....என ஒரு பக்கம் குரல் கொடுத்துகிட்டு இருந்தாலும்

    காதல் என்பது உயிர் சார்ந்தது. ஆனால் இப்போது வரும் காதலோ உணர்வு சார்ந்தது....அதாவது எதிர்பால் இனத்தவரிடியே வரும் ஈர்ப்பே காதல்.....ஹார்மோன்களின் விளையாட்டே காதல்...எனவே இந்த காதல் என்ற வார்த்தையே பொய்யானது என ஒரு வாதமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.


    பெண்மையில் இந்த தலைப்பை பார்த்த உடன்

    எனது டைரியில் நான் எழுதி வைத்திருந்த காதலை பற்றிய சில வார்த்தைகள்....உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....


    இன்று என் தோழி வீட்டிற்கு வந்திருந்தாள். புதிதாக காதல் வயபட்டு இருக்கிறாள். அதன் வெளிபாடு அவள் உடல் மொழியில் நன்கு தெரிந்தது. இருவரும் பேசிகொண்டிருக்கும்போது காதல் பற்றிய பேச்சுகள் வர சில கருத்து முரண்பாடுகள் எங்களுக்குள் எழுந்தது.



    பார்க்கும் இடத்தில் எல்லாம் உன்னை போலவே பாவை தெரியுதடி என பாரதி பாடினாரே ....
    நீயென தின்னுயிர் கண்ணமா !- எந்த
    நேரமும் நின்றனை போற்றுவேன்
    போயின போயின துன்பங்கள் – நினை
    பொன்னென கொண்ட பொழுதினிலே ---என்றன்

    என பாடி இருக்கிறாரே......உன்னை கண்ட பொழுதிலே எனது துன்பங்கள் எல்லாம் மறைந்து போயின என்றாரே...அப்படி என்றால் காதல் உயர்வானது தானே என ஆரம்பித்தாள் அவள்...


    அதை தொடர்ந்து எங்களுக்குள் ஒரு விவாதம் ஆரம்பித்தது.

    அவள் : காதல் உலகின் உயிர் மொழி
    உணர்வின் அடைமொழி என்றாள்.

    நான் : சுயத்தை தொலைத்து
    கனவுகளிலே காலத்தை கடக்கும்
    கடவு சொல்லே காதல் என்றேன்!

    அவள் : உயிரின் தாகமும் மனதின் ஈர்ப்புமே
    காதலின் ஆரம்பம் என்றாள்!

    நான் : உணர்வின் வெளிப்பாடும்
    ஹார்மோன்களின் விளையாட்டே
    இதன் முகவுரை என்றேன்.

    அவள் : காதலித்து பார் உலகின்
    அனைத்து இன்பமும் உன் வசம்!

    நான் : கருணையும் அன்புமே உண்மையான
    சந்தோசம்!

    அவள் : காதல் இல்லையேல் மனித வாழ்வே
    இல்லை! ஆதாம் ஏவாளே உதாரணம்

    நான் : நம்பிக்கையின்மையின் பிறப்பிடமே
    மனித வாழ்வின் ஆரம்பம்! அதற்கும் அவர்களே உதாரணம்

    அவள் : காதல் சாதி மத இனபாகுபாட்டை வேரறுக்கும்

    நான் : இவர்கள் வாரிசுகள் முறையாக வாழ இருவரில்
    ஒருவரின் சாதி இக்காலத்தில் தேவைபடுகிறது.

    அவள் : வீரமும் காதலும் நம் வரலாற்றின் அடையாளங்கள்

    நான் : அம்பிகாபதி அமராவதி , லைலா மஜ்னு இவையும்
    வரலாறு சொல்லும்.

    இப்படியே தொடர்ந்தது வாதம். இறுதிவரை ஒருவரின் கருத்தை ஒருவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    காதல் என்பது உயிரின் மொழி.....அதற்கு வெற்றி தோல்வி என்பதே கிடையாது....அது ஒரு சுகமான உணர்வு...அதை முழுமையாக அனுபவித்தவர்கள் அறிவார்கள். உண்மையான காதல் வலியிலும் ஒரு சுகத்தை உணரும். மகிழ்ச்சியிலும் ஒரு வெற்றிடம் இருக்கும். இதில் மாற்று கருத்து இல்லை.

    நான் ஒரு புத்தகத்தில் படித்த வரிகள் நினைவு வருகிறது.

    காதல் வயப்பட்ட பெண் சொல்கிறாள்

    நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை
    உன்னிடம் என்னை ஒப்படைக்கிறேன் என்று யார் சொன்னது?
    உன்னுடன் வாழ விரும்புகிறேன் என்பதை
    உனக்காக வாழ விரும்புகிறேன் என யார் சொன்னது?


    என தனது காதலிலும் தனக்கான சுயத்தை தேடுகிறாள் அவள்.........தன்னை தொலைக்காமல் தன்னில் தலைவனை கரைத்து கொள்ளும் காதல்..

    ஆனால் அதன் மறுபக்கமும் ஒன்று இருக்கிறது....

    ஐம்பது லட்சமும், ஆடிகாரும்
    தட்சணையாக கிடைத்ததால்
    நண்பனின் காதலி எனது மனைவி!

    எண்ணிலடங்கா காதலர்கள் நடுவில்
    தொலைந்து போன தன்னை
    தேடி அலைகிறது காதல் !!


    இப்போது காதலின் நிலை இது தான் ...

    உள்ளம் பார்த்து உணர்ந்த காதல், உடல் பார்த்து மலர்ந்த காதல், செல்வமும் செல்வாக்கும் பார்த்து செழித்த காதல் என இன்று காதல் பல வகைகளில் வரையறுக்க படுகிறது. இதை தவிர சில மோசமான செயல்களையும் காதல் என்று அடைமொழி கொடுத்து களங்கத்தை ஏற்படுத்துகிறது இக்கால நிகழ்வுகள்.


    என்னை பொறுத்தவரை காதல் என்பது அலங்கார சொற்களால் தன்னை அலங்கரித்து கொள்வதைவிட உணர்வுகளால் உயிர்ப்போடு இருப்பதையே எப்போதும் விரும்பும் என நினைக்கிறேன்.


    இது முடிவு அல்ல..... ...........ஒவ்வொரு நொடியும் தன்னை புதுபித்து கொண்டு .....தனக்கான அடையாளத்தை மாற்றிகொண்டும்...... வார்த்தைகளால் வரையறுத்து கூற முடியாத உணர்வல்லவா அது....

    எனவே அதற்கான தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.....

    .

    Last edited by lashmi; 26th Feb 2016 at 08:24 PM.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  5. #15
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest



    கதிரவன் மீது காதலால்
    மலர்ந்து மணம் வீசும் பூக்கள்...
    சந்திரன் மீது காதலால்
    கண்சிமிட்டி மின்னும் தாரகைகள்...
    பூமகள் மீது காதலால்
    உருகிக் கொட்டும் மேகங்கள்...
    கரை மீது காதலால்
    பொங்கி முத்தமிடும் அலைகள்...
    மலை மீது காதலால்
    தழுவி மகிழும் அருவிகள்...
    மலர் மீது காதலால்
    அணைத்துச் செல்லும் தென்றல்...

    மாசற்ற காதலால் கட்டுண்டு
    பிரபஞ்சமே மகிழ்ந்திருக்க
    மாந்தர் நாமும் காதலிப்போமே
    மகிழ்ச்சியில் திளைத்திருப்போமே...

    சுற்றத்தில் அன்பை பொழிந்து
    உறவுகளில் பாசத்தை பொழிவோம்...

    காதல் திருமணமா!!!
    ஒருவரை காதலிப்போம்
    அவரையே கரம் பிடிப்போம்...

    நிச்சயித்த திருமணமா!!!
    ஒருவரை கரம் பிடித்து
    அவரையே காதலிப்போம்...

    இளமையில் காதலிப்போம்
    முதுமையிலும் காதலிப்போம்...
    இறுதிவரை இணைந்திருந்து
    மூச்சுள்ளவரை காதலிப்போம்...


    Attached Thumbnails Attached Thumbnails Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest-nature.jpg  

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #16
    nithya mani's Avatar
    nithya mani is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    erode
    Posts
    240

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    காதல் விருட்சம்
    காலை பறவைகளின் விதவிதமான குரல்களைக் கேட்டுக் கொண்டே துயில் கலைந்தேன். என்னை கண்களில் காதலை தேக்கிக் கொண்டே புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறார் என் மனத்தைக் கவர்ந்த மணாளன்.
    இந்த சிரிப்பிற்கும் காதலுக்கும் ஏங்கிய நாட்கள் தான் எத்தனை. என் நினைவுகள் ஒரு வருடம் பின்னோக்கி செல்கின்றன.
    "நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க்கா, ஆனா....... எப்படி காதல் எல்லாம குடும்பம் நடத்த முடியும்?", என்றேன் நான்.
    "காதல்னா என்ன மீனாட்ஷி, அன்புதானடா, அத நீ அவர்கிட்ட காட்டு"' என்று வாதாடிக்கொண்டிருந்தார் என் பிறந்த வீட்டின் பக்கத்தில் வசிக்கும் அமுதாக்கா . நாங்கள் ஒரு கோவிலில் அமர்ந்து வாதடிக் கொண்டிருந்தோம்.
    "அக்கா நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியல. கடமைக்கேன்னு எங்கூட வாழறாரு. எங்களுக்கு கல்யாணம் ஆகி நாலு மாசம் ஆச்சுக்கா. ஆனா ஒரு சாதாரண பேச்சு இல்ல, பொண்டாட்டி ஒருத்தி இருக்கேன் அவர்க்கு கவலையில்ல . அவரு மாட்ட வராரு போறாரு", என் மனதின் குமுறல்களை கொட்டிக்கொண்டிருந்தேன்.
    "நீ அவர பத்தி எல்லாமே தெரிஞ்சுகிட்டு தான கல்யாணம் பண்ணிகிட்ட மீனா?", அமுதாக்க என்னை கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்டார்.
    என்னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது. நான் தலை குனிந்து கொண்டேன், என்னிடம் பதில் இல்லை.
    எங்கள் திருமணம் பெற்றவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் தான். என்னை முதிர்கன்னியாக வாழ்க்கை முழுவதும் இருக்கவிடாமல் என் வாழ்வை காப்பாற்றியவர் தான் என் கணவர் மகேந்திரன். ஒரு முறை திருமணம் நிச்சயமாகி திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு குடி போதையில் வண்டியோட்டி அகால மரணமடைந்த அந்தப்பாவி என் வாழ்வையும் சேர்த்து வீணாக்கிவிட்டான், படுபாவி. குடிகாரன் வண்டியோட்டியது யார் கண்ணுக்கும் தெரியவில்லை என் கெட்ட ராசிதான் தெரிந்தது. அதனாலேயே என் திருமணம் பல வருடங்களாக தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. கடைசியில் மகேந்திரனை திருமணம் செய்து வைத்தார்கள்.
    மகேந்திரன் நல்லவர் தான், கெட்ட பழக்கங்கள் எதுவுமே இல்லாதவர், ஆனால் அவர் ஒரு விடோயர். திருமணமாகி மூன்று மாதத்தில் ஒரு விபத்தில் அந்தப்பெண் இறந்துவிட்டார். ஒரு வருடமாக திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையாம் இவர். பெற்றவர்களுக்காக என்னை திருமணம் செய்யப்போவதாக கல்யாணத்திற்கு முன்பே கூறியிருந்தார்.
    "மீனா மீனா" என்ற அமுதாக்காவின் அழைப்பில் கலைந்தேன்.
    "என்ன யோசனை", என்று புருவம் தூக்கி கேட்ட அமுதாக்காவைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தேன்.
    "அவர் மனைவியை இழந்தவர் மீனா", என்ற அக்காவின் பதிலில் எனக்கு கொஞ்சம் சினம் துளிர்த்தது.
    "தெரியும்", என்றேன் ஒற்றை சொல்லில்.
    "உனக்கு என்ன பிரச்சனை மீனாட்சி", என்ற அக்காவின் கரிசனையில் நெகிழ்ந்தேன். மடைதிறந்த வெள்ளம் போல் என் மனதில் உள்ளதை கொட்டத் தொடங்கினேன்.
    என் பிறந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் அமுதாக்காவைப் பார்ப்பேன். என் திருமண வாழ்வைப் பற்றி அவர் கேட்கும் போதெல்லாம் சந்தோஷமாக இருப்பதாகவே கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை, என் கணவரின் பாராமுகமே என்னை பாதித்தது. அதை அமுதாக்காவிடம் கூறிவிட்டேன். அதற்குத்தான் என்னை அவருடன் அனுசரித்து வாழ சொல்கிறார்.
    "நீங்க எப்படி என்ன அவரோட ஒன்றி வாழ சொல்றீங்க, அவர்க்கு என் மேல காதல் இல்லக்கா அப்புறம் எப்படி ஒன்றி வாழ முடியும்".
    "மீனா கல்யாணம் ஒரு தடவ தான் நடக்கும். நம்ம வாழ்க்கைய நாம தான் வாழனும்", என்றவரை புரியாமல் பார்த்தேன். "விளக்கமா சொல்றேன் கேளு. காதல்னா `i love you`, சொல்றது மட்டும் இல்லடா, அவர்க்கு தேவையானத நீதாங் கவனிக்கனு கண்ணு. அவர் உன் கணவர் என்ற எண்ணத்தை உன்னோட மனசுல வச்சிக்கோ.அவருடையது பெரிய இழப்பு மீனாட்சி, கொஞ்ச காலம் அவகாசம் கொடுக்க வேணும் கண்ணு. அவர் மனம் உன் பால் சாய சிறிது காலம் அவகாசம் தேவைப்படும், அவரிடம் உட்கார்ந்து பேசு மா. எந்த காரணம் கொண்டும் அவருடைய பழைய வாழ்கைய கிளறாதே அவரை அவராகவே ஏற்றுக்கொள். உன்னுடைய மொத்த அன்பையும் அவர்கிட்ட காட்டு மீனா".
    எனக்கு கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்தது. அப்போது தான் எனக்கு அந்த அதிர்ச்சியான செய்தி கைபேசியின் மூலம் வந்தது. என் கணவர் சென்ற இரண்டு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கும் செய்தி என் செவிப்பறையில் வந்து மோதியது. சட்டென எழுந்து நின்றேன், திக்பிரம்மை பிடித்தவள் போல் ஆனேன்.கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று கொட்டியது.
    அன்று அந்த நேரத்தில் ஏற்பட்ட அந்த உணர்வை என்னால் விவரிக்க முடியவில்லை. எப்பொழுது என் கைபேசி அமுதாக்காவிடம் இடம் மாறியது எப்பொழுது நான் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தேன் என்றெல்லாம் தெரியாது.
    "மீனா மீனா மீனாட்சி...........இங்க பாருமா", அமுதாக்கா தான் என்னை உலுக்கிக் கொண்டிருந்தார். இறங்கு கண்ணு உன் வீட்டுக்காரருக்கு ஒன்னுமில்லை வா போய்ப் பார்க்கலாம்".
    அப்போது தான் சுயநினைவிற்கு வந்த நான் வேகமாக ஆட்டோவிலிருந்து இறங்கி அவருடன் நடந்து மருத்துவமனைக்குள் சென்றேன். என்னவரை பார்த்த பின்பு தான் என் உயிரே திரும்பி வந்தது.சுற்றும் முற்றும் இருந்தவர்கள் என் கண்களிலோ கருத்திலோ பதியவில்லை, வலது காலில் மாவுக்கட்டு இடப்பட்டு தூக்கி வைக்கப்பட்டிருந்தது. ஓடிச்சென்று அவரை ஆரத்தழுவி கண்ணீர் உகுத்தேன்.
    நிமிர்ந்து அவரைப் பார்த்தேன் அவர் கண்களில் வியப்பு நான் நாணினேன். காலில் அடிப்பட்டதிற்கே எனக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது.
    நான் அவரை நேசிக்க தொடங்கிவிட்டேன் அதனாலேயே எனக்கு இந்த வேதனை என்று அந்த நிமிடம் உணர்ந்து கொண்டேன்.
    "அவருடையது பெரிய இழப்பு மீனாட்சி", என்ற அமுதாகாவின் சொற்கள் தான் என் மனக்கண்ணில் தோன்றியது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள். என் கணவரின் இழப்பு இப்போது எனக்கும் பெரியதாக தோன்றியது.
    "மீனாக் கண்ணு", என் மாமியாரின் அழிப்பில் தான் நான் சுயநினைவிற்கு வந்தேன். "நீ பயப்படும்படியா ஒன்னும் இல்ல மா. எதிர்ல வந்த வண்டி மோதியதில் இவன் கிழே விழுந்திட்டான். அதனால வலது கால் முட்டிக்கு கிழே எலும்பு முறிவு. மாவுக்கட்டு போட்டிருக்காங்க சில நாட்கள் நடக்க முடியாது மற்றபடிக்கு ஒன்னும் இல்ல மா" என்றார்.
    "சரிங்க அத்தை", என்றேன்.
    அவர்கள் முன்னிலையில் என்னவரை தழுவிக்கொண்டது எனக்கு சங்கடமாக இருந்தது. நான் அமுதாக்காவைப் பார்த்தேன்,அவர் முகத்தில் புன்சிரிப்பு, நான் மாறியதில் அவர்க்கு ஏக சந்தோஷம்.
    அவரை நன்றியுடன் பார்த்தேன்."உன் வீட்டிற்கு தகவல் சொல்லிட்டேன் மீனா", என்று என்னிடம்,உரைத்துவிட்டு "சரி வாங்கமா நாம் போய் எதாவது சாப்பிட்டுவிட்டு வரலாம்", என்று எங்களுக்கு தனிமை கொடுத்து என் மாமியாரையும் அழைத்துச் சென்றுவிட்டார். நான் மீண்டும் ஒரு நன்றிப் பார்வையை அவரிடம் செலுத்தினேன்.
    அவர்கள் சென்ற பின் என் கணவரிடம் வந்தேன் "ரொம்ப வலிக்கிறதா",என்றேன்.
    "ம்ம்ஹும் கொஞ்சம் வலிக்கிறது",என்றார் என்னையே பார்த்தபடி. அவர் கண்ங்களில் வியப்பும் பிரமிப்பும் நிறையவே இருந்தது.
    “நீ என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருப்பாய் என்று நான் உணரவில்லை மீனு".
    அவரின் மீனு என்ற அழிப்பே என்ன நெகிழச்செய்தது, "எனக்கே தெரியவிலையே ", என்ற என் பதில் அவர் முகத்தில் ஒரு புன்னகையை வரச் செய்தது.
    "நான் கொஞ்ச கொஞ்சமாக மாற முயற்சி செய்கிறேன் மீனு. எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை", இதை கூறும்போதே அவர் முகத்தில் அவ்வளவு வலி. அவருக்கு ஆறுதலாக அவருடைய தோளை மென்மையாக அழுத்தினேன், அந்த ஒரு செயலே அவருக்கு போதுமானதாக இருந்தது போலும் என் கைகளில் தலை சாய்த்துக் கொண்டார்.
    அதன் பின் எங்களுக்கு வசந்த காலம் தான். அந்த விபத்துகூட ஒருவகையில் எங்களுக்கு நன்மையை தான் செய்திருக்கிறது. அமுதாக்கவின் சொற்களால் தான் நான் என்னையும் உணர்ந்தேன் என் நேசத்தையும் உணரவைத்தேன். அவையே எனக்கு வழிகாட்டி. அன்று உணர்ந்த என் காதல் இன்று விருட்சமாகிவிடது.
    இதோ இப்போது நான் அவரை புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டே எங்கள் காதலின் சாட்சியாக என் ஆறுமாத மேடிட்ட வயிற்றை மன நிறைவோடு தடவிக்கொள்கிறேன்


  7. #17
    raasitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Raasi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    banglore
    Posts
    1,883

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    காதல் வந்தபின்


    உன் கருப்புவெள்ளை
    விழிகள் மாற்றியது
    வண்ணம் நிறைந்த வானவில்லாய்
    என் வாழ்வை - காதல் வந்தபின்


    புழுதி படிந்த தார்சாலைகளும்
    பூக்கள் சிந்தும் சோலையாக மாறியது
    என் விழிகளிலே - காதல் வந்தபின்


    இலை உதிர்கால பட்டை மரமும்
    பூத்து தளிர்விடுகிறது
    உன் புன்னைகையில் - காதல் வந்தபின்


    துடிப்பது மட்டுமே அறிந்த
    என் இதயம் - இப்பொழுது
    நேசிக்கவும் கற்றுக் கொண்டது - காதல் வந்தபின்


    நிலையாய் இருந்த என் நெஞ்சமும்
    கலாபமாய் காற்றில் ஆடுகிறது
    உன் இதயத்தில் தஞ்சம் கேட்டு - காதல் வந்தபின்


    -- ராசி

    ராசி

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்

    My Ongoing Story........


    சோழனின் சபதம்


    My Completed Story.....


    காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

  8. #18
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Hey why you are entering here??? "Wrong person in the wrong place" nu neenga kekrathu puriyuthu natupgalay.....It's my maiden try about love.... Hope you all enjoy.

    Here it goes,

    காதல் கடல்

    இயற்கை அன்னையின் கருப்பு வெள்ளை ஓவியமாம்
    இளம் விடியற் பொழுதொன்றில் சாலையோரம் நான் நடக்க
    ஒளி கூட்டம் ஓடி வந்து எனை அணைக்க
    ஒளி வந்த திசை தேடி கால்கள் அது
    சென்றடைந்த இடம் கடற்கரை வாசலே.
    பாதம் நனைத்து பகலவன் தரிசனம் ரசித்து திரும்பும் வேளைதனிற்
    “என்னவளே என் அன்பே” என்றொரு குரல் கேட்டு
    நெஞ்சு திடுக்குற்று திரும்பி நாற்திசையும் கண்ணுற்றேன்
    உன் நேரெதிரில் நேச கரம் விரித்து யான்
    காதலுடன் உனை நோக்க நீ தேடுவது யாரையோ
    என்று மறுபடியும் உள்ளமதில் மென்மையாக
    ஒலித்ததுவும் அதே மென்குரலே

    காலை பொழுதின் கண்ணாமூச்சி ஆட்டமதில்
    சிந்தை சிறிது குழம்பி அசைவற்று யான் நிற்க
    “நான் தான் சாகரம் பேசுகிறேன் கண்மணியே”
    என்ற இதமான கம்பீர குரலொன்று செவியருகே
    ஒலித்தல் கேட்டு உயிர் உறைந்து நான் நின்றேன்
    விழிகள் மட்டும் பேசும் நின் மோன மொழி களைந்து
    உன் இதயத்தின் நேச மொழிதனை என்றுரைப்பாய்
    என்னவளே என்ற ஏக்க குரலினிலே
    வினா தொடுத்தான் ஆழியலை மன்னவனும்
    இது ஏதடா காலை பொழுதில் வந்த இனாம் வம்பு? என்றதிர்ந்த
    என் இறகிதயம் “எண்ணும் எழுத்தும் தண்ணி பட்ட பாடெனக்கு
    காதலது தண்ணி இல்லா காடு” கடலவனே
    என்றுரைத்து கைகூப்பி விடை பெற யான் எத்தனிக்க
    சலங்கையின்றி ஜதிபோட்டு மங்கை நின் வருகைக்கு
    யான் தரும் ஆரவார வரவேற்ப்பதனில் அம்பலதானும் அதிசயித்தான்
    ஆதிசிவன் அறிந்த என் நெஞ்சத்து ஆசைதனை
    நீ அறியேன் என்று உன் நேசமறைப்பதேனடியோ
    என்று சமுத்திரராஜன் அவன் எனை வழிமறித்து வம்பை தொடர
    வம்பு தும்பு வன்முறை அறியா பண்பாடு நாகரீக
    பழங்குடி செம்மொழி புதல்வியிவள் சிந்தை தெளிய
    நீயே ஓர் உபாயம் உரை என்றேன் .
    என் வேண்டுதலுக்கு செவிசாய்த்த சாகரமோ
    சற்று சிந்தித்துரைத்த யோசனை இதுவேயாம்
    “பொன்மணற் மேடைதனில் நீ வீற்றிருந்து எனை நோக்கி
    உன் சிந்தை செலுத்தி மெய்தேடல் செய்குவாய்
    என் அன்பு மெய்யென்றால் உண்மை உனக்கும் புலப்படலாகும்”
    என்றதற்கு இசைந்துப்பட்டு மணல் நோக்கி நான் நடக்க
    அங்கு காலை ஓட்ட பயிற்சிக்கு வந்த கொண்டலது
    எம்மிருவர் உடன்பாட்டு ஒப்பந்தம் கேட்டு
    கிண்டலாக எள்ளி நகைத்து ஓடியது.
    பொல்லா கொண்டல் அதை கொல்லும் வெறியோடு வசைப்பாடி வைதப்படி
    யானும் மணர்மேடைதனிற் அமைதியோடு அமர்ந்தேன்.
    நொடிகளும் நிமிடங்களும் காலமதை கடத்தி கொண்டு
    வேகமெடுத்து ஓட ஓட என் மெய்தவமும் நீண்டு கொண்டே
    சென்ற போது அதே இளக்கார இளிப்பொலி செவியுற்று
    என் மெய்த்தவம் அது கலைகையில் இளம்காலை
    ஊர்வலம் போன திமிர் கொண்டல் அது மீண்டும்
    எனை கடந்து சென்றதை கண்ணுற்றேன்.
    என் தவம் முடித்தெழுந்து சந்தோஷ சந்தம் பாடி
    ஓடிவரும் அலைகள் நோக்கி ஈர நுண்மணற் பரப்பதனில்
    படபடக்கும் நெஞ்சோடு பட்டாம்பூச்சி பாதம் பதித்து
    அடியடியாய் நெருங்கி சென்று ஆழியருகில் நின்ற போது
    குறுநகை புரிந்த சாகரமும் “ஒப்புகொள்கிறாயா என் அன்பே”
    உன் இதயத்தின் அன்புதனை? என்ற போது
    “ம்” என்று மென்னகையோடு தலையசைத்தேன்.
    ஏன் காதல் கொண்டனையோ என் மீது ? எப்படி ? எப்போது?
    என்று வினா-விடை படலத்திற்கு சாகரம் அது
    அகரம் பாட கேள்வியின் நாயகி இவளுக்கு
    ஈசனின் சோதனை இதுபோலும் என்று மனதினுள் நகைத்து
    நங்கையிவள் உள்ளம் திறந்து தன் உண்மையுரை துவங்கினாள்
    உனை எண்ணும் கணமதிலே மனமதில்
    மகிழ்ச்சி சுனை ஊற்றெடுக்கும்;
    உன் அருகிருந்து விழிகளது உனை நோக்க
    அமைதியது தானாய் வந்து தழுவி கொள்ளும்;
    என் உள்ளத்தின் குமுறலும் மறுகலும்
    உன் ஒற்றை தீண்டலில் உயிர் துறக்கும்;
    வீழ்ந்த மறுகணத்தில் வீறு கொண்டெழும்
    நின் தன்னம்பிக்கை போர்குணத்தில்
    மங்கையிவள் தன்னை தொலைத்தாள்.
    நம் முதல் சந்திப்பு நினைவிலில்லை;
    உன் நெருக்கத்தில் மெய்மறந்து நின்றபோது
    நீ எனக்கு போக்கு காட்டி என் பட்டு கன்னமதில்
    இட்ட முதல் ஈரமுத்த நாளும் கூட யான் மறந்தேன்;
    காலமெலாம் நின் மேல் காதல் கொள்ளும்
    வினைத்தொகை நங்கை இவளென்று என்னுரை முடித்தேன்.
    உன் கொள்ளை காதல் நெஞ்சம் மறைத்து பொய்யுரைத்ததேனடியோ?
    என்று விடாகொண்ட கடலவனும் விடாமல் வினா தொடுக்க
    காதல் புதையலை மனகோட்டையில் புதைத்ததற்கான
    காரணங்களை பேதையிவள் வரிசையிட்டாள்.

    மேதினியின் முற்ப்பரப்புகளில் ஓடியாடும் இயற்கை அன்னையவளின்
    அபரிமித அன்புக்குரிய செல்லபிள்ளை நின் மேல்
    மானிட மங்கையொருத்தி கொள்ளும் காதல் பொருந்துமோ?
    “மதிகெட்டது மானிட இனம்” என்பது சரிதான் போலும்
    என்று இடக்கு பேசிய சாகரமும் என் நுதல் விழி முறைப்பிலடங்கி
    சினம் கொள்ளாய் பேரன்பே,
    “உயர்வு தாழ்வு கடந்த உயர் உணர்வுகாதலன்றோ?
    யானும் நீயும் பரம்பொருளின் ஒரே மூலம்” என்றுணர் கண்மணியே
    என்றுரைத்த போதும் என் குழப்ப மனமது தெளியாமல்

    உன் கொடும்கோப தாகம் தீர என் உறவுகள் உயிர் குடித்த
    கோர நிகழ்வு என் நினைவுதனில் நீங்காத போது
    என் காதல் எவ்வாறு நினக்கு உரைப்பேன்?
    உருண்டு வரும் உம் தெய்வ நதிகளனைத்தின் உப்பு குவியல்
    உள்வாங்கும் பெருந்தன்மை பேருருவம் நான் உனக்கு கொடுங்கோலனோ?
    நின் சொந்தங்கள் பிழைகள் பொறுத்து அரவணைக்கும்
    “அன்பு அட்சயபாத்திரம்” எனை இளிச்சவாயன் என்று கருதி
    தொடர் இடர்கள் தரும் உன் உறவுகளுக்கு என் அச்சார எச்சரிக்கை
    ஆவேச உயர் அலைகளின் ஆர்ப்பரிப்பு என்ற போது
    என் தவறான புரிதலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி
    மீண்டும் என் மோன நிலைக்கு மனமது இடம்பெயர
    “அன்புதனில் அறம் உண்டு ஆருயிரே
    அறம் கொண்ட அன்பிற்கு அழிவில்லை”
    என்று அன்பு மொழி கூறி நின் மௌனம் களைந்து
    மற்ற குறைகள் எடுத்துரைப்பாய் என முடிக்கும் முன்

    காலை பொழுதில் என்னிடம் காதலோடு கதைக்கும் நீ
    மாலை மயங்கும் வேளைதனில் மதியவளின் வருகையில்
    மயக்கம் கொள்ளும் இரட்டை வேடதாரி உனை நம்புதற்கில்லையென்று
    அணங்கிவள் ஊடல் படலத்திற்கு அடியெடுத்தாள்.
    ஓவென்று ஓங்கி நகைத்த உவரி கள்வனும்
    “அழுக்காறு எனும் அழுக்குணர்வும் அழகாகும்
    ஓர் அற்புது உணர்வு காதலடி” என் கண்ணே என்ற போது
    காதல் வந்தால் கடலும் கூட கவிதை சொல்லும் போலும்
    என்று அகமகிழ்ந்த அதே கணமதில் கவலை மேகம்
    என் முகமதில் முகாமிட்டதன் காரணம் வேண்டினான் கடலவனும்.
    அணுவளவும் ஒய்வின்றி உழைத்து பல்லுயிர்
    பசி போக்கி ஓம்பும் நின் ஊண் உறக்கம் எண்ணி
    இக்காதல் பேதை கவலையுற்றாள் என்றதற்கு
    “பசி நோக்கார், கண் துஞ்சார்” என்ற நின் பாட்டன்
    பாடலறியாயோ என் அன்பே என்றெனக்கு ஆறுதலுரைத்த
    அமுத கணமதில் பிரிவு துயர் மங்கை மனதினுள் தலை நீட்ட
    நின் கர்மயோகத்தின் மர்மம் எனக்கு புரியவில்லை
    என்றதற்கு புதிர் பார்வை பார்த்த முத்துகளின் நாயகனோ
    “போய் வா பேரன்பே” என்றெனை முத்தமிட்டு வழியனுப்ப
    “காதலது எளிதில் விளங்கா ஐந்தாம் மறை” போலும் என்றுணர்ந்து
    நங்கையிவள் நடை போட குறும்பு கொண்டலது மீண்டும் எதிர்கொண்டு
    வாழ்த்து கூறி “மீண்டும் வருகயென்று” விடையளித்தது.

    வீடு வந்த பெண்ணிவளின் காதல் நெஞ்சோ கடலவனின்
    ஆசை மொழிகளை அசைப்போட்டு பொழுதை கழித்து
    நடுநிசி கடந்து கண்ணயர்ந்த பின் கனாவிலும் அதே கானகுரல்
    “நினைத்தல், நோக்கல், பகிர்தல், தீண்டல், தொலைத்தல், ஊடல்,
    ஏன் மறத்தலும் கூட காதலென” புதுகவிதை புனைந்தவளே !
    என் நீளம் நினைத்தவள் நீலம் மறந்ததேனடியோ? என கேட்டு
    காதல் கள்வன் மாய கண்ணவனின் ஓர் வடிவே இக்கடலவனும்
    என்ற போது புதிர் அவிழ்ந்த அமைதியில்
    புது விடியல் நோக்கி
    மடந்தையிவள் இளம் புன்னகையோடு ஆழ்துயிலில் ஆழ்ந்தாள்



    மேதினி – பூமி
    சாகரம், உவரி – கடல்
    அம்பலத்தான் – தில்லை நடராஜர்
    அழுக்காறு – பொறாமை
    கொண்டல் - கடல் காற்று

    இப்பதிவு இயற்கையை நேசிக்கும் இனிய இதயங்களுக்கு சமர்ப்பணம்.

    Last edited by gkarti; 5th Mar 2016 at 11:03 AM. Reason: Added the Meaning of Kondal!
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #19
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Dear friends,

    All are engaged in by Looking the Valentines Day contest.. Right? Now, its the time to announce the winner of the contest. We had a very good entries clubbed with creativity on the given topic which were interesting and enthralling.

    And the Winner of Creative Writing Contest on Valentine's Day
    is Ushanthy @naanathithi. Vimala @Vimalthegreat and Sujana @sujibenzic stands next to her.

    Kudos to you Ushanthy for your creative and unique way of presentation of thoughts.

    Many thanks for all the Participants! Let's challenge with our own ideas and move forward with creative contests.

    Here's the gift for you,



    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same. If you need any replacement of books also please do let us know.


    Attached Thumbnails Attached Thumbnails Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest-secret-manjul-500x500.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #20
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Congrats Ushanthy, Vimala & Sujana.



    Attached Thumbnails Attached Thumbnails Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest-congrats-smiley-emoticon.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter