Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree241Likes

Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!


Discussions on "Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!" in "Special Contest" forum.


  1. #11
    nithya mani's Avatar
    nithya mani is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    erode
    Posts
    240

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    வணக்கம் ,
    அருமையான தலைப்பு இளவரசி அக்கா. இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தமைக்கு தலை வணங்குகிறேன். தமிழைப் பற்றியும் தமிழர்களை பற்றியும் பேச நம் ஆயுள் போதாது. எனினும் சில வரிகளோடு போட்டியில் கலந்து கொள்ள வருகிறேன். நன்றி.

    அன்புடன்,
    நித்யா மணி.


    My ongoying story - Suki en uyir saki

    http://www.penmai.com/forums/serial-stories/109876-suki-en-uyir-saki-nithya-mani.html



    Sponsored Links
    Last edited by nithya mani; 7th Apr 2016 at 08:30 AM.
    jv_66, thenuraj, sumitra and 1 others like this.
    MY COMPLETED STORY- SUKI EN UYIR SAKI
    அன்புடன்,
    நித்யா மணி .

  2. #12
    Vedhika's Avatar
    Vedhika is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2016
    Location
    Vellore
    Posts
    21

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    பங்குபெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் .........

    jv_66, thenuraj and Durgaramesh like this.

  3. #13
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    அருமையான, இனிமையான, அழகான போட்டி .

    jv_66 and thenuraj like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #14
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    நம்ம குட்டி பொண்ணும், சித்திரை பெண்ணை வரவேற்க தயார் ஆகிட்டாங்க போல இளா அக்கா. அருமை மொழியின் பெருமைகளை மீண்டும் ஒரு முறை பதிவுகளாக படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்

    laddubala, jv_66, thenuraj and 1 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #15
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Quote Originally Posted by thenuraj View Post
    ஏப்ரல் ஆரம்பித்து விட்டதே...! இன்னும் தமிழ் புத்தாண்டு போட்டிக்கான அறிவிப்பை காணோமேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்... இதோ வந்துடுச்சு... சூப்பர்....


    அருமையான தலைப்பு.... பேசவும், எழுதவும் எத்தனையோ விஷயங்கள்.... தமிழை பற்றி பேசவும் கசக்குமோ...!

    போட்டியில் பங்குபெற போகும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!
    தேனு அக்கா இந்த போட்டியின் அறிவிப்பு பார்த்த போது நீங்கள் தான் நினைவுக்கு வந்தீர்கள் .நேர நெருக்கடியின் காரணமாக உங்களின் நிறைய திரிகளை நான் படிக்க தவறி விடுகிறேன் அக்கா. தமிழ் சார்ந்த புதிய செய்திகளை பதிவிட்டு இங்கு பங்கெடுக்க வேண்டுகிறேன்

    jv_66, thenuraj and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #16
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    தேனு அக்கா இந்த போட்டியின் அறிவிப்பு பார்த்த போது நீங்கள் தான் நினைவுக்கு வந்தீர்கள் .நேர நெருக்கடியின் காரணமாக உங்களின் நிறைய திரிகளை நான் படிக்க தவறி விடுகிறேன் அக்கா. தமிழ் சார்ந்த புதிய செய்திகளை பதிவிட்டு இங்கு பங்கெடுக்க வேண்டுகிறேன்



    நான் நியாபகத்துக்கு வந்தேனா... சந்தோஷம் விமலா...
    உங்களுக்கு டைம் கிடைக்குறப்போ வாங்க... நாம பேசுவோம்...
    கட்டாயம் இந்த போட்டியில கலந்துக்கணும்..., 'தமிழ்' பற்றி இன்னும் நிறைய தகவல்கள் ஷேர் பண்ணனும், கண்டிப்பா வரேன்.... நீங்களும் வாங்க...

    Vimalthegreat, jv_66 and gkarti like this.

  7. #17
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    அருமையான, அழகான தலைப்பு, தமிழ் மகளை வரவேற்க ஏத்த தலைப்பு

    Vimalthegreat, jv_66 and gkarti like this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  8. #18
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Superb contest Ilavarasi mam... thank you

    TFT karti

    Vimalthegreat, jv_66 and gkarti like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  9. #19
    raasitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Raasi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    banglore
    Posts
    1,883

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    வணக்கம் தோழிகளே , தோழர்களே

    அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில் என் மனதிற்கு தோன்றிய கருத்துக்களை பதிவிட்டுள்ளேன்... ஒரு சில தலைப்புகள் மட்டும் விடுத்து, என்னால் இயன்ற அளவு, எனக்கு தெரிந்த அளவு பகிர்ந்துள்ளேன்.

    விடுபட்ட தலைப்புக்கு காரணம், அத்தலைப்பு என் மனதை கவரவில்லை என்று அர்த்தம் அல்ல. அத்தலைப்புக்கு, எனது கருத்தையோ, தகவலையோ எடுத்துக் கூறும் அளவிற்கு எனக்கு அதில் பரிச்சயம் போதவில்லை என்றே அர்த்தம். அத்தலைப்பின் கீழ், நான் இன்னமும் என் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    மற்றப்படி, இத்த மரபுகளில் மனம் கவர்ந்தவை, மனம் கவராதவை என்று பிரிக்க என்னால் இயலாது... இவை அனைத்துமே என் மனதை தொட்ட மரபுகள்.

    1. தமிழர் மரபுகளில் உங்கள் மனம் கவர்ந்த மரபு பற்றி சில வரிகளில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.



    வீரம்...

    எம் தமிழ் முன்னோர்கள்
    எட்டு திசையிலும்
    கொடி கட்டி ஆட்சி புரிய
    அயல்நாட்டினர் கை கட்டி
    சேவகம் புரிந்தனர்
    எம் செங்கோல் ஆட்சி புரிந்த
    தமிழ் மன்னர்களிடம்....

    வீரம் இல்லையேல்... அண்டை நாட்டுக்கு படை எடுக்கவும் இயலாது... பிறர் படையை நடுங்கவைக்கவும் இயலாது....அவர்களை ஆண்டிருக்கவும் இயலாது....

    சுற்றி இருந்தவர்களின் வஞ்சகத்தால், பெரிய ராஜ்யத்தின் இளவரசனாய் இருந்தும், தனது தந்தையையும் தாயையும் சூழ்ச்சியால் தீய்க்கிரையாவதை தடுக்க இயலாமலும், அந்த தீயில் இருந்து தப்பிக்க முயன்று, தனது ஒரு காலை அந்த நெருப்பு அகோரன் சூழ்ந்துக்கொள்ள.... தாய் தந்தை இழந்து, ராஜ்யத்தையும் இழந்து, திருமாவளவன் என்ற பெயர் கூட மறைந்து அந்த கரியகாலோடு மீண்டும் போராடி அவன் வீரம் கொண்டு வெற்றிக்கொண்டான் கரிகாலன் வெண்ணி போரில்....

    வீரம்... யாராலும் அசைக்க முடியாத ஒன்று...அத்தகைய வீரம் கொண்டவர்கள் நம் முன்னோர்கள்... சேரன், பாண்டியன்... சோழ சிற்றரசுகள் என்று யாவரும்.... கரிகாலனுக்கு எதிராய் போர் எடுத்தும், அனைவரையும் தனது வீரம் கொண்டு வீழ்த்தினான்....கரிகாலன்....

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    கொடை....

    எம் தமிழ் மக்களின்
    கொடை பாட,
    என் ஆயுளும் போதாது
    ஆயிரம் யுகமும் போதாது
    ஒன்றா இரெண்டா
    பட்டியிலிட்டு சொல்ல
    பார் முழுவதிலும்
    செதுக்கினாலும்
    இன்னமும் மிச்சமிருக்கும்
    எம் முன்னர்களின்
    வான்கொண்ட புகழ்

    ஒவ்வொருவருக்கும் அவரது உயிர் சக்கரக்கட்டியாம்... ஆனால் இந்த வாக்கியத்தை பொய்யாக்கியவனும் ஓர் தமிழனே ....

    பூஞ்சாரல் மலையினிலே, கனிந்த அற்புத கனி ஆயுளை நீட்டிக்கும் என்று அறிந்தும், அக்கனி அவன் கையில் கிடைத்தும், தான் உண்ணாது அவ்வைக்குக் கொடுத்து நீண்ட நாள் உயிர் வாழச் செய்தானாம்...

    அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான்....

    இந்த சுயநலமற்ற கொடை...எம் தமிழ் மன்னரை தவிர வேறு யாரால் இயலும் ?
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    விருந்தோம்பல்.....


    திண்ணை
    என்றொண்டை அங்கமாக்கினான்
    தமிழன், வீட்டினிலே;
    தினமும்
    வருவோர் போவருக்கும்
    சேர்த்து சமைத்தான்
    தமிழன், வீட்டினிலே;

    யார் எவர் என்று அறியாபோதினிலும், போக்குவரத்து பயணிகளை, விருந்து உண்ண , அன்பால் வருத்தி அழைத்தான் தமிழன்....

    எப்போதும் திண்ணையில்...நீர் மோரும், குடி நீரும் மண் பானைகளில் நிரப்பிவைத்தான் தமிழன்... ஒரு கவளம் ஆயினும், அதை உண்ணும் முன்பாய்...திண்ணையில் எவரேனும் பசியுடன் இருக்கின்றனரா என்று அறிந்த பின்னே ஒரு கவளத்தை கூட உண்டுவந்தான் தமிழன்....

    பல நூறு ஆண்டுகள் முன்னதாகவே... உலகத்தின் அனைத்துக்கட்ட சூழ்நிலைக்கும், அனைத்து விஷயங்களுக்கும், அனைத்து வயதினருக்கும் பொருந்தும் அற்புத செய்யுள் தந்தவர் ..இப்படி அகிலத்தையே தனது இரெண்டடி குரலில் அடைக்கிய மாமுனிவர்... திருவள்ளுவர்

    பார் உள்ளவரை, அழியாத புகழ் கொண்ட வள்ளுவரும் பாடி இருக்கின்றார் விருந்தோம்பலை பற்றி.

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு

    விளக்கம் : அமுதமே ஆனாலும், திண்ணையில் விருந்தினரை வைத்துவிட்டு...உண்ணலாகாது என்ற உயர்வான கருத்தை உலகத்திற்கு கூறியவர்... ஓர் தமிழர்....
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    சமயம்.....

    தன் சமயம் ஆயினும்
    பிறர் சமயம் ஆயினும்
    அனைத்துக்கும் கோவில் எழுப்பும்
    கோமகன் எம் தமிழன் மட்டுமே....

    சைவ மதத்தை சார்ந்தவனும், வைணவ மதத்தினருக்கு கோவில் கட்டினான்....
    உலகமே மெச்சும் சைவத்தை பிரதிபளிக்கும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜ ராஜ சோழன்... ஈழத்தில் புத்த விகாரத்தை புதிப்பித்தான்...

    சமணர்களும் சமணமும் செழித்தோங்கி, பாண்டிய நாட்டில் வளர்ந்ததக்கு இன்றும் சான்றாக மதுரை மலைகளின் கல்வெட்டுக்கள், ஆண்டு கடந்தும் சாட்சி கூறுகின்றன....

    குகைகளை குடைந்து கோவில் கட்டிய மாமல்லன் ஆகிய நரசிம்மவர்ம்மனும், அவரின் தந்தையான மகேந்திர பல்லவனும்.... அவர்கள் தொடங்கிய குகை கோவிலில், அனைத்து சமயத்திற்கும் ஸ்தலம் அமைத்தனர்....

    இதைவிட வேறென்ன சான்று வேண்டுமோ எம் தமிழர்களின் புகழ் பாட...
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    நட்பு.

    எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி
    ஏற்ற இறங்கங்களில்
    தோள் கொடுப்பது
    எதுவோ
    அதுவே இவ்வுலகின் வலியது

    முத்துக்களால் இழைக்கப்பட்ட ஊர் என்று கவிஞர் பலரும் போற்றும் பாண்டிய நாட்டில், பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆந்தையார், சோழ மன்னனின் செங்கோல் ஆட்சி பற்றி அறிந்து, அந்த சோழனின் நேரடி அறிமுகம் இல்லாமலே அவன் மீது நட்பு கொள்கிறார்...

    உறையூரை தலைநகரமாய் கொண்ட கோப்பெருஞ்சோழனும், இவரது தமிழையும் புகழையும் கேள்விப்பட்டு பிசிராந்தயரை காணாமலே நட்பு கொள்கிறான்.....

    ஒருவரை ஒருவர் பாராமலே இவ்விருவரும் நட்பு கொண்டிருக்க, சோழ நாட்டில் நிகழ்ந்த கசப்புக்களால், அந்த கோமகன், ஆட்சியை விட்டு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான், அவனுடைய நண்பரான பிசிராந்தயரை சந்திக்காமலே....

    பிசிராந்தையார் வருவாரா என்ற ஐயம் ஏதுமின்றி, கூறினான் சோழ கோமகன், "என் நண்பரும் என்னுடன் வடகிருக்க வருவார்... என் அருகினில் ஓர் இடம் போடும் என்று..... கோப்பெருஞ்சோழன், கூறியது போலவே.... பிசிராந்தயரும் சோழனின் உறையூர் நோக்கி ஓடி வருகின்றார்.

    மன்னனின் இறுதி தருவாயில் வந்த, பிரிசாந்தையர், தனக்காக நண்பன் போட்ட இடத்திலே அமர்ந்து...வடக்கிருந்து, விரும்பி உயிர் துறக்கிறார்...

    பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை நட்புக்கு எடுத்துகாட்டாக கூறாமல் எவராலும் இருக்க இயலாது....

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    காதல்.

    சமயம் சார்ந்த விழாக்கள்
    வாகை கொண்டதற்கு விழாக்கள்
    அறுவடை நன்னாளுக்கு விழாக்கள்
    என்று பார்த்து பழகிய
    எந்தன் சிந்தையில்
    ஆச்சர்யம் கரைபுரண்டு ஓடுகின்றது
    காவேரி போல
    கவேரிபட்டனத்தில் நிகழ்ந்த
    காமன் விழாவை
    எண்ணி எண்ணி


    எல்லாவற்றிற்கும் விழா எடுத்த எம் தமிழ் மக்கள் காதலுக்கும் விழா எடுத்து கொண்டாட்டியுள்ளனர்.

    மணிமேகலையிலும், சிலப்பதிகாரத்திலும் காதலர் திருவிழா எடுத்ததற்கான சான்றுகள் இருக்கின்றன...

    கூடல் நகரிலும், காவேரி பூம்பட்டினத்திலும் இந்திரவிழா அல்லது காதல் விழா சிறப்பாக கொண்டாடடப்பட்டு வந்திருக்கின்றது.

    காவேரி பூம்பட்டினத்தில், தாழை கூட்டங்களில், பௌர்ணமி நாளில், கூடாரங்கள் அமைத்து தலைவன் தலைவி கூடி மகிழ்ந்திருக்கின்றனர்.

    தொடித்தோட் செம்பியன் என்றவன், காமனுக்கு 28 நாள் விழா எடுத்து சிறப்பித்து உள்ளான்...

    ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையை வள்ளுவரும் பாடி இருக்கின்றார்....

    கணவன் பிரிந்து சென்றும், கணவனின் நினைவில்... அவன் மீது கொண்ட காதலை மட்டும் சுமந்து வாழ்ந்த கண்ணகி ஒருபுறம்...
    அதுவரை காதலில் மூழ்கி இருந்த கோவலனும், மாதவியும், புகார் நகரில், கரிகாலன் சபையில், இந்திர விழாவில் மாதவி நாட்டியமாடகண்டு, ஊடல் கொண்ட கோவலன், பிரிந்து செல்ல, தாழை மடலில் காதல் நெஞ்சை எழுத்தாக அனுப்பிவிட்டு, கோவலனுக்காக காத்திருந்த மாதவியின் காதல் ஒருபுறம்...

    காதலுக்காக, கணவனையே விட்டு தந்த மனைவி(கண்ணகி)...
    காதலன் சென்று விட்டதால், தனது கலை, பணி என்று அனைத்தையும் துறந்து, புத்த மடத்தில் சேர்ந்த காதலி(மாதவி)...

    இதைவிட வேறு என்ன வேண்டும், தமிழர்கள் காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அறிவதற்கு...
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கலைகள்
    கட்டடக்கலை, சிற்பக்கலை:

    அகன்ற நெற்றியும்
    குவிந்த இதழும்
    தென்னங் குருத்தோலை தோரணமாய்
    பின்னலிடப்பட்ட கருங்கூந்தலும்
    வளைந்த சிற்றிடையும்
    தெய்வீக அழகுடன்
    மிளிர்ந்த முன்னழகும்
    பார்க்க, பார்க்க
    நான் மறந்தே போனேன்
    நான் பார்த்துக் கொண்டிருப்பது
    ஒரு சிலை என்று;
    உயிரற்ற சிலையும்
    உயிருள்ள பாவையாய்
    தெரிகின்றது என் விழிகளுக்கு
    எம் தமிழர்களில் கைவண்ணத்தில்

    தமிழர்கள் தங்களது உயிருக்கு நேராக கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையை போற்றி வளர்த்து வந்துள்ளனர். பல்லவர்களில் ராஜ சிம்ம பல்லவன் ஓர் சிறந்த ராஜ சிற்பி... முதலாம் நரசிம்மவர்ம்மன் (மாமல்லன்) தொடங்கிய மல்லை கோவிலின் தொடர்ச்சியாய், மாமல்லபுரத்துக் கடற்கரை அரங்கன் கோவில், அம்பும் வேலும் வாளும் பிடித்த கைகளில், உளி பிடித்து பல சிற்பங்களை ரசித்து ரசித்து செதுக்கினானாம்....

    இளவரசர்களும், நாடாளும் அரசர்களும், கோவில்களை நிர்மாணித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்... ஆனால் ஓர் இளவரசன், நாடாளப்போகும் நாளைய மன்னன், சிற்பங்களை செதுக்குவதில் வல்லவன் என்று அறிந்த பொழுது மயிர்கூச்செறிந்த்தேன்...

    சாளுக்கிய மன்னனான புலிகேசியின் பரம்பரையை சேர்ந்த ஓர் சாளுக்கிய மன்னன், பல்லவர்கள் சாளுக்கிய நாட்டை வெற்றி கொண்டு, தீயிட்டு வந்ததற்கு, பதிலடி கொடுக்கும் வகையில்... காஞ்சியை நோக்கி படை எடுத்து வர, ராஜ சிம்மனின் தந்தை... நாட்டை விட்டே ஓடுகிறார்....

    அவர் தலைமறைவிற்கு காரணம், வீரம் இல்லாததால் அல்ல. சிற்பங்கள் மீதும், கலை கோவில்கள் மீதும் கொண்ட அதீத காதலால். எங்கே போர் காஞ்சியிலோ, மல்லையிலோ மூண்டால், சிற்பங்கள் சிதைந்துவிடுமோ என்று அஞ்சி, சிற்பங்களை பாதுக்காட்க, தனது கீர்த்தியை பற்றி கூட சிந்திக்காது , மறைந்து வாழ்கிறார்...

    தந்தை தலை மறைவின் பின்னும் கூட, சாளுக்கிய மன்னன், காஞ்சி மாநகரை தனது வசம் கொண்டு வந்த தினத்தன்று கூட, இளவரசனான சிம்மன், செய்துக் கொண்டிருந்த சிற்பத்தை நிறைவு செய்வதில் கவனம் காட்டினானாம்....

    இதை அறிந்த நொடி முதல் இன்று வரை எம் முன்னோர்களை எண்ணி எண்ணி விந்தை கொள்கிறேன்....

    2. நம் பழம்பெருமைகளை நினைத்து நாம் பெருமை கொண்ட இந்த வேளையில் நம் மொழி அழியாமல் இருக்க நம் அடுத்த சந்ததிக்கு தமிழ் வழிக்கல்வி வளர்க்க உங்களின் கருத்துக்கள்.


    இந்த தலைப்பு ரொம்ப அருமையான தலைப்பு, மிகவும் அவசியமான தலைப்பும் கூட...

    என்னோட கருத்தை பதிவு செய்றதுக்கு முன், சமீபத்துல நான் சந்தித்த ஒரு பெண்மணி பற்றி சொல்ல விரும்புகிறேன். அந்த சந்திப்பு எனக்கு வருத்தத்தை தான் தந்தது.

    அவுங்களுடைய மகளுக்கு தமிழில் எழுத தெரியாது, அதாவது உயிர் மெய் எழுத்துக்கள் கூட தெரியாது என்று என்னிடம் பெருமையாக அவர் கூற, அந்த நிமிடம் வருத்தமும் கோபமும் என்னுள் ஒரு சேர எழுந்தது.

    நான் தன்மையாக, அவரிடம் அதை பற்றி கேட்ட பொழுது... "பெங்களூர்-ல ஹிந்தி, இங்கிலீஷ் இரெண்டும் எழுத தெரிந்தால் போதும்... அவர்கள் அவர்களின் பாட புத்தகத்தை படிக்கவே தடுமாறும் போது, தமிழை வேற எழுத சொல்லி கொடுத்து, அவளுக்கு சுமை ஏற்ற விரும்பவில்லை" என்று கூறினார்.

    ஆனால் நான் எப்படி சொல்வேன்... தமிழை கற்பது சுமை இல்லை அது ஒரு சுகம் என்று.

    சரி, இப்பொழுது தலைபிற்கு செல்வோம்...

    1. தமிழ் நாட்டில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் ஒரு பாடமாக அமைவதனால், பெற்றோரகளுக்கு பாதி சிரமம் குறைகிறது. புதிதாக அவர்கள் எதுவும் கூற வேண்டாம். ஆனால், நம் மொழியின் சிறப்பு, நம் பண்பாடு, முன்னோர்களின் வரலாறு, தமிழின் தொன்மை. இப்படி எடுத்து கூறினால், பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தே அவர்கள் கடமைக்கு, மதிப்பெண் வாங்க வேண்டும் என்று படிக்காமல், மொழி உணர்வோடு படிக்க வாய்ப்புள்ளது.

    2. வேறு மாநிலங்களில், வெளி நாடுகளில் வசிப்பவர்கள், மற்றவருக்கு தமிழ் கற்று தர இயலாவிட்டாலும், தங்களுடைய குழந்தைகளுக்காவது தமிழை கற்று தருவதோடு மட்டும் அல்லாமல், வீட்டில் கட்டாயமாக தமிழில் பேசும்படி செய்யலாம்.

    3. நல்ல வரலாற்று தமிழ் கதைகளை, பிள்ளைகளிடம் கொடுத்து அவர்களை படிக்க தூண்டலாம்.

    4. தமிழரின், விளையாட்டுக்கள் (உதாரணம்: சிலம்பு) பிள்ளைகள் கற்றுக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யலாம். ஒரு பண்பாட்டின் கலைகள் அழிந்துக்கொண்டே போனால், அம்மொழிக்கும் அது பாதிப்பு. அந்த வகையில், கலைகளை அழியவிடாது பாதுகாத்து வந்தால், அந்த கலை உலகம் முழுவதும் பரவும். அக்கலை பாரில் பரவினால், அதை கற்றுக்கொள்ள வேற்று நாட்டவரும் விருப்பம் காட்டலாம். அப்படி அவர்கள் விரும்பி கற்றுக்கொள்ள வந்தால், கலையை கற்றுக் கொல்வதற்காய், மொழியையும் சேர்த்து கற்று கொள்வார்கள்.

    5. தமிழ்நாட்டு அரசாங்கம், தமிழ் சார்ந்த படிப்புகளுக்கு போதுமான அங்கீகாரம் அளித்தால், மக்களிடம் ஆர்வம் ஏற்படும்.

    இறுதியாக, அவர்கள் தமிழை வளர்ப்பார்கள், இவர்கள் வளர்ப்பார்கள் என்று இல்லாமல், தாங்களே தங்களது குழந்தைகளுக்கு தமிழின் பழமையையும், கீர்த்தியையும் உணர்த்தி கற்று கொடுத்தால், நிச்சயம் நம் மொழி என்றும் அழிவின் பாதையில் செல்லாது.

    தமிழ் வாழ்க

    ராசி

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்

    My Ongoing Story........


    சோழனின் சபதம்


    My Completed Story.....


    காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

  10. #20
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Wow @raasitha super chellam. Naan mersalaiten

    jv_66 and raasitha like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter