Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree241Likes

Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!


Discussions on "Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!" in "Special Contest" forum.


  1. #21
    raasitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Raasi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    banglore
    Posts
    1,883

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Quote Originally Posted by ahilanlaks View Post
    Wow @raasitha super chellam. Naan mersalaiten
    Hi Bhuvi akkaa.....

    Thank you sis


    Sponsored Links
    jv_66 and ahilanlaks like this.
    ராசி

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்

    My Ongoing Story........


    சோழனின் சபதம்


    My Completed Story.....


    காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

  2. #22
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    @raasitha sis semma ka chance ae illa...

    Hatsoff ka solla varathai ila

    jv_66, raasitha and ahilanlaks like this.

  3. #23
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    @raasitha அரிய செய்திகளை பதிவு செய்தமைக்கு நன்றி. அவ்வை அதியமான் வரிகளுக்கு சிறப்பு பாராட்டுகள். தெரிந்த விடயங்கள் கூட மறுபடி படிக்கும் போது மகிழ்ச்சி பூக்கள் மலர செய்து மயக்கம் தரும் தனித்தன்மை வாய்ந்த மொழி அனேகமாக நம் மொழி மட்டுமே

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #24
    raasitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Raasi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    banglore
    Posts
    1,883

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Quote Originally Posted by bharathi saravanan View Post
    @raasitha sis semma ka chance ae illa...

    Hatsoff ka solla varathai ila
    helo bharathi chlm....

    Thank you da

    bharathi saravanan likes this.
    ராசி

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்

    My Ongoing Story........


    சோழனின் சபதம்


    My Completed Story.....


    காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

  5. #25
    raasitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Raasi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    banglore
    Posts
    1,883

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    @raasitha அரிய செய்திகளை பதிவு செய்தமைக்கு நன்றி. அவ்வை அதியமான் வரிகளுக்கு சிறப்பு பாராட்டுகள். தெரிந்த விடயங்கள் கூட மறுபடி படிக்கும் போது மகிழ்ச்சி பூக்கள் மலர செய்து மயக்கம் தரும் தனித்தன்மை வாய்ந்த மொழி அனேகமாக நம் மொழி மட்டுமே

    ஹெலோ விமலா...




    நிச்சயமா... படிக்கும் போது சந்தோசம் தருகிற மொழி நம் மொழி மட்டுமே... மிகவும் இனிமையான மொழியும் கூட...


    நன்றி விமலா, உங்களது கருத்துக்களை பதிவு செய்ததற்கு.

    ராசி

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்

    My Ongoing Story........


    சோழனின் சபதம்


    My Completed Story.....


    காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

  6. #26
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறையுடன் நின்று விடாது. பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வந்தாலும் தற்போது இவ்வளர்ச்சியானது போதுமானதாக இல்லை என்பதே உண்மை.
    தமிழ். தமிழ். தமிழ். என்று பழம் பெருமை பேசுகிறோம். ஆனால் தமிழில் பேச தயங்குகிறோம். தமிழில் எழுத தெரியவில்லை. வார்த்தைகளை மடக்கி மடக்கி போட்டு கவிதை எங்கிறோம். எழுத்தில் எதுகை இல்லை. மோனை இல்லை. யாப்பு இல்லை. இலக்கணம் இல்லை. வார்த்தைகளை கொட்டி வடிவமைக்கிறோம். இதை எல்லாம் கற்றுத்தர ஆட்கள் இல்லை எங்கிறோம். 8ம் வகுப்பில் கற்பிக்க மறுத்து அதை வாய்ப்பில் விட்டு விடுகிறோம். இதை வீட்டிலும் கண்டுகொள்வதில்லை. மெல்ல தமிழ் இனி சாகும். புரட்சிக்கவி பாரதி அன்றே சொன்னான். ஆம். தமிழ் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது. வீட்டிலும், பள்ளியிலும், ஊடகங்களிலும்.
    இலக்கியத்தின் பயன்:-
    காலத்திற்குக் காலம் மாறிவரும் மரபுகளையும், வரலாறுகளையும் தொகுத்து தரும் பேழையாக இலக்கியங்கள் இருக்கின்றன. பழங்கால மனித வாழ்விலிருந்து மலர்ந்த இலக்கியம், அடுத்து வரும் மனிதனின் வாழ்வைப் பண்படுத்துகிறது. ஒவ்வொரு கலையும் மனிதனின் வாழ்வைப் பண்படுத்தவே உள்ளன. மாந்தரின் வாழ்வை உயர்த்தவும், பண்படுத்தவும், இன்பம் தரவும், போராடுவதற்கு ஊக்கம் தரவும் இலக்கியங்கள் உதவ வேண்டும். நம் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் நம் பண்பாட்டிற்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

    உலகும் இலக்கியமும்:-
    உலகம் எவ்வளவு முன்னேறியதாக இருந்தாலும் அடிப்படை உணர்வுகள் மாறாததாகவே இருக்கின்றன. வீரம், காதல், தியாகம், பொறுமை, அன்பு, பண்பு, கயமை போன்ற உணர்வும் மாறாததாகும். இவற்றின் மெய்பாடுகளும் மாறாததாகவே இருக்கும். உலக மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்த உணர்வுத் தொகுப்புகளே இலக்கிய வடிவம் பெறுகின்றன. உணர்வு, கற்பனை இரண்டும் இலக்கியப் படைப்பிற்கு இன்றியமையாதனவாகும்

    மொழி என்பது காலந்தோறும் மாறக்கூடிய ஒன்று. அதற்குத் தமிழ் மொழியும் விதிவிலக்கன்று. தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறைக்கு மட்டும் அடங்காது. காலத்திற்கேற்றவாறு மாறி வந்துள்ளது. தற்கால அறிவியல் வளர்ச்சியை எம்மொழி உள்வாங்கித் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதோ அம்மொழியே காலப்போக்கில் நிலைபெறும். தமிழ் மொழியும் வளர்ந்து வரும் அறிவியல் புதுமைகளுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. ஆனால் இந்த மாற்றத்தைத் திட்டமிட்டு செய்தால் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தமிழை நாம் உருவாக்க முடியும்
    இருபதாம் நூற்றாண்டில் மனிதர்களுக்கு மின்சாரம் எவ்வாறு அடிப்படையானதும், பிரிக்க முடியாததுமாக ஆகிவிட்டதோ, அதே போன்று கணிப்பொறியும் நம் வாழ்வில் பிரிக்க முடியாத இன்றியமையாத ஒன்றாக மாறிவருகிறது. கணிப்பொறியின் தோற்றம் என்பது ஏறக்குறைய சில ஆண்டுகளுக்கு முன்பு தான். ஆனால் அதன் வளர்ச்சி என்பது அசுரவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மணிக்கணக்கில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சில மணித்துளிகளில் கணிப்பொறி செய்து முடிப்பது தான்.
    மொழி ஆய்வும் தமிழும்:-
    தமிழ்மொழி தனக்கே உரிய கட்டுக்கோப்பான இலக்கணங்களை உள்ளடக்கிய திட்டமிட்ட மொழி. நன்னூல், தொல்காப்பியம் முதலிய அனைத்துத் தமிழ் இலக்கண நூல்களும் மொழி ஆய்விற்கு பெரிதும் பயன்படும். கணிப்பொறி உருவாக்கத்திலிருந்து இலக்கண உருவாக்கத்திற்கு நம் முன்னோர்கள் படைத்துள்ள சொத்து என இதனைக் கூறலாம். இலக்கணங்கள் விதிகளாகச் சொல்லப்பட்டுள்ள விதம் இத்துறைக்குப் பெரிதும் பயன்படும். மேலும் தமிழ் ஒட்டுநிலை மொழியாக உள்ளதால் பிரித்துக் காட்டுவதற்கும் எளிமையாக இருக்கும் பகுதி - விகுதி - சந்தி - சாரியை என்ற மரபு சார்ந்த அணுகு முறையும் சிந்திக்கத் தகுந்த ஒன்றாகும். தமிழும், கணிப்பொறியும் ஒன்றிணைந்து "தகவல் யுகப் புரட்சி" உலகத் தமிழ் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.


  7. #27
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    எம் தாய் மொழியின் பெருமையை உனது வரிகளில் படிக்க படிக்க இனிக்கிறது.


    அருமை அருமை ரசிதா அனுபவிச்சு உணர்ந்து ரசித்து எழுதி இருக்கமா... வாழ்த்துகள்

    sumitra and raasitha like this.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  8. #28
    raasitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Raasi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    banglore
    Posts
    1,883

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Quote Originally Posted by lashmi View Post
    எம் தாய் மொழியின் பெருமையை உனது வரிகளில் படிக்க படிக்க இனிக்கிறது.


    அருமை அருமை ரசிதா அனுபவிச்சு உணர்ந்து ரசித்து எழுதி இருக்கமா... வாழ்த்துகள்
    Helo lashmi sis....

    Thank you.... I m so happy to see ur comment... Ammam akka.... Ezhutha ezhutha inikkithu Na tamizharin marabu....

    lashmi likes this.
    ராசி

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்

    My Ongoing Story........


    சோழனின் சபதம்


    My Completed Story.....


    காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

  9. #29
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    மொழி என்பது காலந்தோறும் மாறக்கூடிய ஒன்று. அதற்குத் தமிழ் மொழியும் விதிவிலக்கன்று. தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறைக்கு மட்டும் அடங்காது. காலத்திற்கேற்றவாறு மாறி வந்துள்ளது. தற்கால அறிவியல் வளர்ச்சியை எம்மொழி உள்வாங்கித் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதோ அம்மொழியே காலப்போக்கில் நிலைபெறும். தமிழ் மொழியும் வளர்ந்து வரும் அறிவியல் புதுமைகளுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. ஆனால் இந்த மாற்றத்தைத் திட்டமிட்டு செய்தால் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தமிழை நாம் உருவாக்க முடியும்


    சரியாக சொன்னீங்க சார்....எந்த காலத்திற்கு ஏற்றவாறும் நம் தமிழ் மொழி இருக்கும். அருமை சார் ...வாழ்த்துகள்

    shansun70 likes this.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  10. #30
    Shrijo is offline Newbie
    Real Name
    Sivasakthi Gopi
    Gender
    Female
    Join Date
    Apr 2016
    Location
    Tiruchengode
    Posts
    86

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    அன்புத் தோழிகளுக்கு வணக்கம்,


    அருமையான போட்டி தலைப்பு!

    இதில் பங்கேற்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


    தமிழ் எனக்கு மிகவும் பிடித்த மொழி. தாய் மொழி என்பதையும் தாண்டி என்னை அதிகம் ஈர்த்த மொழி.


    கல்லும் மண்ணும் தோன்றும் முன்னரே தோன்றியது நம் தமிழ் மொழி.


    வீரம்:


    வேங்கையை வீறு கொண்டு எதிர்த்த சின்னஞ் சிறார்களும், புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்களும் கொண்ட தமிழ் பரம்பரை நம் பரம்பரை. வீட்டுக்கு ஒருவர் போரிடச் சென்றதும், கணவன் இறந்த செய்தி கேட்டு சின்னஞ் சிறு மகனை அனுப்பிய அன்னையும், வீரத் தழும்பு கொண்டு இறந்த மகனைக் கண்டு மகிழ்ந்த அன்னையும், முதுகில் காயம் பட்ட மகனைக் கண்டு தாயமுதம் தந்த மாரை அறுத்த அன்னையும் என தமிழ் மரபுகளில் வீரம் முக்கியமாக இருந்தது. தற்காப்பு கலைகள் அறிந்த பெண்டிர் இருந்தனர். இன்றும் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பல இலக்கிய நூல்கள் வீரத்தையே முக்கியமாகக் கொண்டு பாடப்பட்டன.

    கொடை:



    தமிழரின் பெருமைக்கு மற்றுமொரு அணிகலன் இந்த கொடை. முல்லைக்கு தேர் கொடுத்த மன்னனும், மயிலுக்கு போர்வை தந்த மன்னனும், நீண்ட நாள் உயிர் வாழ சக்தி அளிக்கும் நெல்லியை தமிழ் புலமைக்கு தந்த மன்னனும் கொண்டிருந்த பூமி இந்த பூமி. தமிழ் மன்னர்களின் முக்கிய மரபாக வீரத்திற்கு அடுத்து இந்த கொடை இருந்தது எனில் அது மிகையல்ல.


    விருந்தோம்பல்:


    வீட்டிற்கு வீடு திண்ணை வைத்து வீடு கட்டிய தமிழ் மக்கள், தங்கள் வீடுகளின் திண்ணைகளில் ஓய்வெடுக்கும் வழிபோக்கருக்கும் கூட விருந்தளித்து உபசரித்தனர். உலகில் உள்ள அனைத்து விருந்தோம்பல் பண்புகளிலும் தமிழ் விருந்தோம்பலே சிறப்பு பெற்றது. தலை வாழை இலை போட்டு, உப்பில் தொடங்கி, 3 முதல் 5 வகை காய்கள், முக்கனிகள், அரிசி சாதம், பருப்பு, பசு நெய், ஊறுகாய், அப்பளம், வடகம், இனிப்பு வகைகள், முறுக்கு முதலிய கார வகைகள், சாம்பார், புளி குழம்பு, ரசம், தயிர், பாயாசம் என அழகாக பரிமாறும் மரபு வேறு எந்த நாட்டிலும் இல்லை எனில் அது மிகையல்ல.


    சமயம்:


    சைவம், வைணவம் என போட்டி போட்டு தமிழ் வளர்த்த மக்கள் கொண்ட பூமி இது. அன்றைய காலத்தில் இவ்விரு சமயங்கள் மட்டுமே ஓங்கி வளர்ந்து இருந்தன. இவ்விரு சமயத்திற்கு இடையில் மிகப்பெரிய போர் நடைபெற்றது என்றால் அது கவிப் போர் தான்.


    நட்பு:


    நட்புக்காக உயிர் நீத்த மக்கள் இருந்தார்கள். முடமான நண்பனை தூக்கி சுமக்க தோள்கள் இருந்தன. மன்னர்களின் நண்பர்களாக ஏழைகளும், புலவர்களும் இருந்தனர். சரியாசனத்தில் அமர்ந்து உணவு உண்ட மன்னர்களின் காலம் பொன்னெழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டும் நம் தமிழ் மொழி வரலாற்றில்.


    காதல்:



    காதலுக்காய் அகப்பாடல் உருவாக்கிய மக்கள் நாம். பாட்டுடைத் தலைவன், தலைவி என காதலை காவியமாக படைத்த மக்கள், பசலை நோய் தாக்கிய பெண்கள், கணவன் மீது கொண்ட காதலில் உடன்கட்டை ஏறிய பெண்கள், எமனுடன் போராடி கணவனை மீட்ட சரித்திரம், மனைவிக்காக தன் உயிர் பணயம் வைத்த கணவன், காதலியின் இறப்பைக் கண்டு அங்கேயே உயிர் துறந்த காதலன், காதல் கை கூடாது துறவறம் மேற்கொண்ட காதலன், காதலி என காதலுக்கு மதிப்பு கொடுத்த, பெண்களின் உணர்வுகளுக்கும், ஆண்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தந்து வாழ்ந்த மக்கள் நம் முன்னோர்.


    மொழி:



    மொழி ஒரு பாலம். இரு உள்ளங்களுக்கு அல்லது இரு நபர்களுக்கு இடையில் நாம் பரிமாறிக்கொள்ள தேவைப்பட்ட ஒரு கருவி. தமிழ் மொழி போல் நானறிந்த மொழிகளில் இனிமையானது எங்கும் இல்லை என பாடப்பட்ட சிறப்பு கொண்டது தமிழ் மொழி. ஒரு வாக்கியத்தின் வார்த்தைகளை எப்படி மாற்றினாலும் பொருள் வரும் சிறப்பு, இன்றைய ஆங்கிலத்தினால், அறிவியலினால் கண்டுபிடிக்கப்படாத, கண்டுபிடித்தும் பெயர்வைக்க முடியாமல் இருக்கும் பல பொருட்களும் அன்றே தமிழில் பெயரிடப்பட்டு இருந்தது. இந்த சிறப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.

    ஒரு மொழியை இலக்கணம், இலக்கியம் என பிரித்து கோடிகணக்கில் பாடல்கள் இயற்றப்பட்ட பெருமை தமிழையே சாரும்.


    கலைகள்:


    64 கலைகள் கற்று வாழ்ந்த தமிழ் மக்களைக் கொண்டே அவர்கள் கலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்து இருப்பார் என்பதனை அறியலாம். இயல், இசை, நாடகம், நடனம், சிற்பம், ஓவியம், கட்டிடம் கட்டுதல் என புகழ் ஓச்சியவர்கள் நம் முன்னோர்கள். தஞ்சை பெரிய கோவில், மகாபலிபுர சிற்பங்கள், மண்டபக் கூரையில் அழகிய சிற்பம், இசை எழுப்பும் தூண், கருவில் இருந்த குழந்தையின் அசைவுகள் குறித்த சிற்பம், உடல் நரம்புகள் கூட தெளிவாக வடிக்கப்பட்ட சிற்பங்கள்,ஒரு அங்குல நீள அகலத்தில் ஒரு நிகழ்வையே செய்த சிற்பங்கள், பார் போற்றும் பரதம் என அனைத்து கலைகளும் சிறப்புற்று இருந்தது நம் முன்னோர் காலத்தில்.


    இத்தகு சிறப்பு மிக்க நம் மொழி இன்றளவில் பிரகாசம் குறைந்து வருவது கவலைப்படும் விசயமே. இதனை மேம்படுத்த,


    1. வீட்டில் அனைவரும் தமிழில் பேச வேண்டும். (முக்கியமாக தாய் மொழியாக கொண்டவர்கள்). குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது இன்று ஒரு ஈர்ப்பு. அதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பதை. என் தோழி ஒருவர் வீட்டில் குழந்தைகளுக்கு தெரியாமல் ஒரு காரியம் செய்ய வேண்டும் எனில், அனைவரும் தூய தமிழில் உரையாடுவர். இது கண்டிக்கத்தக்க ஒன்று என்னை பொறுத்தமட்டிலும்.


    2. எந்த கல்வி முறையில் பயின்றாலும் தமிழ் இரண்டாம் மொழியாகஇருக்க வேண்டும். நாம் கட்டாயமாக இதனை பள்ளிக்கூடத்தில் தெரிவிக்க வேண்டும்.


    3. தமிழ் இலக்கிய நூல்களை நம் குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டும். அது குறைந்தபட்சம் குழந்தைகளுக்கான கதைகள் கொண்ட நூலாகவாது இருக்க வேண்டும்.


    4. நம் கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்றவற்றின் சிறப்பை நேரில் அழைத்துச் சென்று காட்ட வேண்டும்.


    5. நம் மொழியின் சிறப்பை அடிக்கடி அவர்களுக்கு உரைக்க வேண்டும், நாம் நம் மொழியில் பேசுவதில் பெருமை கொள்கின்றேன் என அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.


    6. இன்றைய நாளில் அனைத்து சமூக ஊடகங்களிலும் தமிழ் உள்ளது. அவர்கள் முடிந்தவரை தமிழில் பதிவுகள் இட நாம் ஊக்குவிக்க வேண்டும்.


    7. முக்கியமாக தமிழ் மொழியில் பேசுவதால் நாம் தரமிழக்கவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மற்ற மொழிகள் நமக்கு விதவிதமான பழச்சாறு போன்றவை, தமிழ் மொழி நம் தாய் மொழி, அது உயிர் காக்கும் நீருக்கு ஒப்பானது என அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுகொள். தமிழை என்றும் விட்டுவிடாதே என அறிவுரைக்க வேண்டும்.


    8. அனைத்திற்கும் மேலாக நாம் முதலில் தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்க வேண்டும். அப்பொழுது தான் நம் பிள்ளைகள் அதை செய்வர்.


    என்னை பொறுத்த மட்டிலும் முக நூலிலும், சமூக தளங்களிலும் வாழ்க தமிழ் என்று கூறி, அதனை அப்படியே விட்டுவிட மாட்டேன். நான் கூறிய அனைத்தையும் நான் செய்கிறேன். எங்கள் வீட்டில் நடப்பதை தான் இங்கு பதிவிட்டு உள்ளேன்.


    மாற்றம் வர வேண்டும் என விரும்பி பயனில்லை, அதற்கான முதல் அடி எடுத்து வைப்பதுதான் முக்கியம்.


    நான் பெருமையடைகிறேன், முதல் அடி எடுத்து வைத்ததில்.


    இங்கு பதிவிட்டதில் பெருமகிழ்ச்சி,


    அன்புடன்,

    சக்தி


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter