Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree241Likes

Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!


Discussions on "Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!" in "Special Contest" forum.


  1. #31
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    TFT @gkarti... Wonderful contest... Best wishes to all participants...


    Sponsored Links
    gkarti and Durgaramesh like this.
    Priya


  2. #32
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    1. தமிழர் மரபுகளில் உங்கள் மனம் கவர்ந்த மரபு பற்றி சில வரிகளில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

    தமிழர்கள் வீரம், கொடை, விருந்தோம்பல், மொழி என அனைத்திலும் தம் தனி முத்திரையை பதித்துள்ளனர்.

    சிற்பியின் அருளால் கல் என்ற அன்னையும், உளி என்ற தந்தையும் பெற்றப் பிள்ளைதான் சிலை.

    ஆம் என்னை மிகவும் கவர்ந்தது சிற்பகலை. தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீகம், நடனம் போன்ற பல விஷயங்களை எடுத்துச் சொல்கிறது சிற்ப கலை.
    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நுணுக்கமாக துல்லியமாக அழகிய வேலைபாடுகளுடன் நம் சிற்பிகள் நமக்காக செதுக்கிய சிற்பங்கள் இன்றும் கோயில் கோபுரங்களிலும் தூண்களிலும் காட்சி அளிக்கிறது.

    மனிதர்களில் அல்லாது தேவர்களில்கூட தேவ சிற்பி விஸ்வகர்மா என்ற சிற்பி மிகவும் போற்றுதர்குரியவராக கருதப்படுகிறார். போகர் என்ற சித்தர் செய்த பழனி முருகன் நவபாஷாண சிலை மருத்துவகுணம் கொண்டது. பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர், பால் போன்றவற்றை உட்கொள்வது உடலுக்கு நலம் பயக்கும்.

    சிற்பம் செதுக்குவதில் சிறு தவறு நேர்ந்தால் முழு சிற்பமும் வீண். ஆதலால் சிற்பிகள் மிக பொறுமையாக சிற்பத்தைச் செதுக்குவர். சிற்பக்கலை வேல்வியைப் போல, ஒரு தவத்தை போல தெய்வீகமானது. அதனால்தான் ஆலயங்களில் சிற்பம் அதிகம் காணப்படுகிறது. இந்த கலையில் சிற்பி என்ற மனிதன் இறைவனையே படைக்கிறான்.

    சிற்பங்களில் பல வகைகள் உள்ளது அவற்றில் சில புடைப்புச் சிற்பம், தனிச் சிற்பம், செதுக்குச் சிற்பம் ஆகும்.

    புடைப்புச் சிற்பம்
    சுவர்கள், தூண்கள், பாறைகள் போன்ற அமைப்பு உள்ள இடங்களில் ஒரு பகுதி மட்டும் செதுக்கப் பட்டிருக்கும். பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் மாமல்லபுரத்தில் இவை அதிகம் காணலாம். (புகைப்படம் போல)

    தனிச் சிற்பம்
    இவை ஒரு உருவம் அல்லது பொருளை முழுமையாக வடித்து எல்லா திசையிலிருந்தும் பார்க்கும்வண்ணம் அமைக்கப்படுவதாகும். இவை முப்பரிமாணவடிவத்தை கொண்டிருக்கும். சிலைகள் இவ்வகையை சார்ந்ததாகும்.

    செதுக்குச் சிற்பம்
    கல், பாறை அல்லது உலோகம் போன்றவற்றில் இருந்து தேவையற்ற பகுதியை நீக்கி செதுக்குவது செதுக்குச் சிற்பம் ஆகும்.

    இயங்கியல் சிற்பம்
    ஒரு குறிப்பிட்ட இயக்கத்தோடுகூடிய சிற்பம்.

    கண்திறப்பு விழா
    பொதுவாக சிற்பிகள் தெய்வ சிலைகள் அல்லது அதற்கு ஈடான சிலையை செய்துவிட்டு கண்களை மட்டும் ஒரு குறிப்பிட்ட நல்ல நாள் பார்த்து அந்த சிலைக்கு சில பூஜை வழிபாட்டு நடத்திய பின்னர் கண்களை செதுக்குவார்கள். ஒரு சிலைக்கு உயிரோட்ட தோற்றத்தை அளிப்பதே கண்கள் ஆகும். ஆதலால் சிற்பிகள் இதனை கண்திறப்பு விழா என கொண்டாடுவர்.

    அதிசியக்க வைக்கும் சில சிற்பக் கலைகள்
    உலகமே வியந்து தமிழர் பக்கம் திரும்ப செய்தது திருச்சக்கரவர்த்தி இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆகும். சிற்பக் கலையோடு கட்டடக் கலையிலும் தமிழர் வல்லவர்கள் என எடுத்துக் காட்டினார். அங்கு ஒரு விரலைவிட சிறிய சிலைகளும் உள்ளது (பல) பனைமரத்தை காட்டிலும் அதிகம் உயரமுள்ள சிலைகளும் உள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வேற்று நாட்டை சேர்ந்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளது வியப்பான ஒன்றாகும். இது தமிழர் நட்புறவு, வாணிபம் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டதை எடுத்துக் காட்டுகிறது.
    https://www.youtube.com/watch?v=lvGEyCXvV7A

    சிதம்பரம் நடராஜர் சிலை
    அணுதுகள்கள் அசைந்துக் கொண்டே இருக்கும் கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். விஞ்ஞானிகள் நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே என்று வியக்கின்றனர். 24 நாடுகள் அங்கம் வகிக்கும் CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தின் தலைமை அலுவலகத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழர் அறிவியலிலும் கைத்தேர்ந்தவர் என்பதையே இது காட்டுகிறது. அன்றே அறிவியலில் ஆன்மீகத்தையும், ஆன்மீகத்தில் அறிவியலையும் புகுத்தி பிரபஞ்ச ரகசியத்தை ஒரு சிலையின் மூலமாக உலகிற்கு எடுத்துரைத்துள்ளனர்.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
    இந்த கோயிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு கோவில்களில் இதுவரை பார்த்திராத ஒரு வியக்க வைக்கும் கலைப்படைப்பு.

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில்
    இங்கு வட்ட வடிவமான சிற்பத்தில், ஒரே தலையில் நான்கு மான்கள் இடம் பெற்றுள்ளது. நேராக நின்றாலும், எங்கிருந்து பார்த்தாலும் சிற்பங்கள் தெரிகின்றன. தற்போதுள்ள "3டி' தொழில்நுட்பத்துக்கு இணையாக, பழங்காலத்திலேயே, நம் முன்னோர் கையாண்டுள்ளது, வியக்கத்தக்கது.

    அங்கோர் வாட்
    இதை தவிர தமிழனின் மற்றும் ஒரு அதிசயம் வெளிநாடான கம்போடியாவில் அங்கோர் வாட் என்னும் இடத்தில் கட்டிய பிரம்மிக்க வைக்கும் சிற்பங்களை கொண்ட மிக பிரம்மாண்ட ஆலயம்.

    ஐராவதேசுவரர் கோயில்
    இசைப்படிகள் கொண்ட கும்பகோணம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில். ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு ச,ரி,க,ம,ப,த,நி" என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும்.

    இப்படி ஆயிரம் கோயில்களில் உள்ள அற்புத சிற்பங்களை கூறிக் கொண்டே போகலாம். நாம் பார்த்தது ஒரு சிறு துளி. இந்த கலையை போற்றி காப்பது நமது கடமையாகும்.

    2. நம் பழம்பெருமைகளை நினைத்து நாம் பெருமை கொண்ட இந்த வேளையில் நம் மொழி அழியாமல் இருக்க நம் அடுத்த சந்ததிக்கு தமிழ் வழிக்கல்வி வளர்க்க உங்களின் கருத்துக்கள்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம் என்ற மகாகவி பாரதியாரின் சொல்படி உலகிலேயே தமிழ் மொழிபோல் இனிமையான மொழி வேறு எதுவும் இல்லை.

    தமிழ் மொழியை நாம் வளர்க்க தேவையில்லை .... நம்மை தமிழ் மொழி வளர்க்கும், செம்மையாக்கும், சீர்படுத்தும் அத்தகைய தன்மை வாய்ந்தது தமிழ். வேற்று மொழியினரையும் தன்அன்பு கரத்தால் அரவணைப்பவள் தமிழ் அன்னை. பல பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் பாடலாசிரியர்கள் போன்றவர்கள் தமிழால் வளர்ந்துள்ளனர். தமிழ் அவர்களை வளர்த்துள்ளது.

    ஒரு குழந்தையின் முதல் ஆசான் அதன் பெற்றோர் ஆவர். அவர்கள்தான் தம் குழந்தைகளுக்கு தமிழை நேசிக்க கற்றுதர வேண்டும். வீட்டில் தமிழில் பேச பழக்கப்படுத்த வேண்டும். உறவினர் நண்பர்களுடனும் தமிழில் பேச வைக்க வேண்டும். மழை பெய்யும் சமயம் மட்டுமே குடைபிடிக்கிறோம். அதுபோல தேவையான சமயத்தில் தேவையான இடத்தில் மட்டும் ஆங்கிலமோ அல்லது மற்ற மொழியோ பயன்படுத்தலாம்.

    இதுமட்டும் அன்றி பயணம் செய்யும்போது தமிழில் உள்ள சாலைகளின் பெயர், கடைகளின் பெயர், பதாகைகள் போன்றவற்றை படிக்க வைத்து பழக்கலாம்.

    ஒரு குறிப்பிட்ட வயது முதலே குழந்தைகளுக்கு தமிழ் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்பதை புரிய வைக்க வேண்டும். கட்டுரை போல் அல்லாமல் கதைகளை கொடுத்தால் நிச்சயம் குழந்தைகள் விரும்பி படிப்பார்கள்.

    பிறகு கண்டிப்பாக வரலாற்று நாவல்களை அறிமுகப் படுத்தலாம். அவற்றில் கற்பனை கொஞ்சம் கலந்திருந்தாலும் பாதகம் இல்லை. கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வீரம், தியாகம் போன்ற விஷயங்களை எத்தனை அழகாக தங்கள் எழுத்துகளில் வடித்துள்ளனர்.
    வானமும் வையகமும் உள்ளவரை தமிழ் மொழியும் அதன் சிறப்பும் அழியாது.

    இந்த போட்டிக்காக ஒரு காணொளியை தயாரித்துள்ளேன் ... இதோ உங்கள் பார்வைக்கு தமிழின் பெருமையை கேட்டுக் கொண்டே ரசியுங்கள்..












    Arise ! awake ! and stop not till the goal is reached

  3. #33
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    @penmai
    எனது போட்டிக்கான கட்டுரையில் தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி குறிப்பிடுகையில் ஒரு யூடியூப் வீடியோ லிங்கை கொடுத்துள்ளேன். அந்த வீடியோ எனது கட்டுரை படிப்பவர்களுக்கும் நடுவர்களுக்கும் மேற்கோள் காட்டுவதற்காக கொடுத்துள்ளேன். அப்படி மேற்கோள் கொடுக்கலாமா கூடாது என்று தெரியாமல் கொடுத்துவிட்னே். தவறாக இருப்பின் மன்னிக்கவும். (reference video)


    Last edited by Subhasreemurali; 25th Apr 2016 at 10:10 AM.
    Vimalthegreat, jv_66 and gkarti like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #34
    nithya mani's Avatar
    nithya mani is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    erode
    Posts
    240

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்
    சித்திரை திருநாளை ஒட்டி அமைந்திருக்கும் இந்த தலைப்பு சுவாரஸ்யமானது.
    என்னைக் கவர்ந்த தமிழர் மரபுகள்:
    தமிழர் மரபுகள் அனைத்துமே என்னைக் கவர்ந்தவை. ஆனால் எல்லாவற்றையும் பற்றி பேச அவற்றைப் பற்றிய நுண்ணறிவு போதாது. ஒரு சில மரபுகளைப் பற்றி என்னுடைய கருத்துகளை பகிர விரும்புகிறேன்.
    கலைகள்:
    தமிழர் மரபுகளில் முதன்மையாக என்னைக் கவர்ந்தது கலைகள்தான், அதிலும் குறிப்பாக கட்டிடக்கலையும் யோகக் கலையும்.
    கட்டிடக் கலைகள்:
    நம் பண்டைய தமிழர்கள் எல்லாக் கலைகளிலும் அறிவியலை புகுத்தி இருக்கின்றனர். நம்மிடையே புராதனமான அரண்மனைகளும் கோயில்களும் நிறைய உள்ளன. அக்காலத்திலேயே சோழர்கள் வீதிகளை இரண்டு அடுக்காக நிர்மானம் செய்தார்களாம். அரண்மனைகளின் சாளரங்களும் அதன் அமைப்பும் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்கள் அமைத்த சுரங்கப் பாதைகள் இன்றும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.
    கோயில்கள் என்று எடுத்துக் கொண்டால் நான் அவற்றில் உள்ள அறிவியல் கூற்றுகளை எண்ணிப் பார்க்கிறேன். நாம் கோயினுள் செல்லும் போது படி போன்ற ஒரு அமைப்பு உண்டு. அதை மிதிக்காமல் தாண்டிச் செல்லவேண்டும் என்று கூறுவர். அந்த இடம் காற்றோட்டமாக இருக்கும் , நாம் காலைத்தூக்கி தாண்டிச் செல்லுகையில் மூச்சை உள்ளிழுத்து பின் வெளி விடுவோம் அப்போது அங்குள்ள காற்றை நாம் சுவாசிக்கிறோம் என்கிறது ஆய்வுகள்.
    புராதனக் கோயில்கள் என்று எடுத்துக் கொண்டால் தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழ புறம், சிதம்பரம் நடராஜர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருச்சி அரங்கநாதர் கோவில், திருவானைக்கோவில், கும்பகோணம், மாமல்லபுரம், திருவண்ணாமலை இன்னும் ஏனைய பிற கோவில்களும் பிரசித்திபெற்றவை.
    கோயில்களில் உள்ள பெரிய சுற்றுப் புறம் நம் உடலையும் மனதையும் வளமாக வைத்திருக்க உதவுகின்றன. அன்றாடம் கோயிலை சுற்றும் போது, நமக்கு இன்றைப் போல் தனி உடற்பயிற்சி தேவையே இல்லை. புராதனக் கோயில்கள் பஞ்ச காலங்களில் உறைவிடமாக திகழ்ந்துள்ளது.
    சோழர் கால கோயில்களில் தஞ்சை பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழபுரமும் பெருமை மிக்கவை.
    தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழனால் கீ பி 11 இல் கட்டப்பட்டது. அத்தகைய திருக்கோயில் இன்றும் ஓங்கி உயர்ந்து நிற்கிறதைக் கண்டு என் மனம் பூரிக்கிரது. இக்கோயிலின் கோபுரம் மட்டும் 216 அடிகள். அக்காலத்திலேயே கூம்பு வடிவ விமானம் கொண்டது இக்கோயில். தஞ்சை பெரிய கோயிலின் விமானத்தின் நிழல் கிழே விழாதவாறு கட்டியிருக்கும் கலை வல்லுனர்களின் திறன் தான் எத்துனை சிறப்பு மிக்கத்து. கோவிலின் சுற்றளவும் கட்டிடக்கலையின் அழகும் நம்மை வாய் பிளக்க வைக்கும். இக்கோயில் கட்டப் பட்டது யாவும் கருங்கல்லால்! அக்காலச் சிற்பிகள் ஒரு கல்லை மற்றொரு கல்லால் ஒட்டவைக்க அட்ட பந்தன மருந்து என்னும் மருந்தை உபயோகித்ததாக குறிப்புகள் உள்ளன.
    கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில் பெருவுடையார் கோவில் ராஜ ராஜ சோழனின் மகன் முதலாம் ராஜேந்திரனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் விமானம் 160அடிகள் கொண்டது. தஞ்சை பெரிய கோவிலைப் போன்றே வடிவமைக்க வேண்டும் என்றும் ஆனால் அதை விட உயரத்தில் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் இக்கோயிலை காட்டியதாக வரலாறு. இவ்வாறு தந்தைக்கு மரியாதை செலுத்தியிருக்கிறான் முதலாம் ராஜேந்திரன்.
    பல்லவர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்கவை சித்தனவாசலும் மாமல்லபுரமும் தான். மாமல்லபுரத்தில் உள்ள ரதங்கள் பஞ்சபாண்டவர்களின் பெயரால் வழங்கப் படுகின்றது.
    பாண்டியர்கள் கட்டமைப்பில் உருவான அதிசயம் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கே உள்ள ஆயிரம் கால் மண்டபம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
    சிற்பக்கலை:
    நம் கோவில்களில் அமைந்த சிற்பங்கள் கல்லாலும் உலோகங்களாலும் அமையப்பெற்றவை. தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கும் லிங்கம் மிகப் பெரியது. இங்கே வீற்றிருக்கும் நந்தி உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நந்தி. சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமான் உலகப் பிரசித்திபெற்றவை.
    நம் முன்னோர்களின் எல்லாச் செயல்களிலும் ஒரு அறிவியல் நந்தி பொதிந்திருக்கும். கோயில்களில் உள்ள சிலைகளுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்வதை அக்காலம் தொட்டு வழக்கமாக வைத்திருக்கிறாகள். அச்சிலைகளில் மேல் பட்டு வரும் நீரை தீர்த்தம்மாக நமக்கு பருகக் கொடுப்பார்கள். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உளதாக பல குறிப்புகள் கூறுகின்றன.
    ஓவியக்கலை:
    சித்தனவாசல் ஓவியங்களும் தஞ்சை பெரிய கோவில் ஓவியங்களும் என்றும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. தஞ்சை ஓவியங்கள் இயற்கை மூலிகைகளால் வரையப்பெற்றது என்றும் அதனால்தான் அவற்றிற்கு அத்துனை அழகு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் உபயோகிக்கும் ரசாயன வண்ணங்கள் கண்ணாடியால் பாதுகாக்காவிட்டால் அழிந்துவிடும். ஆனால் நம் பண்டிய தமிழர்களின் கைவண்ணம் நூற்றாண்டுகள் தாண்டியும் உயிருடன் இருப்பது அதிசயம்.
    முத்தமிழ்:
    முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்பது நாம் அறிந்ததே. சிலப்பதிகாரம் முத்தமிழ் பற்றி கூறுகிறது. 7ஆம் நூற்றாண்டிலேயே சம்பந்தர் இசைப்பாடல்களால் தமிழை பெருமையடைய செய்தார். அக்காலத்தில் பாணர்கள் என்னும் வகுப்பினர் இசை நாடகக் கலைகளின் பாதுகாவலர்களாக விளங்கினார்களாம். பாரதியாரின் பாட்டுக்களே இசைத்தமிழின் சான்று. தேவாரமும் திருவாசகமும் இசைத்தமிழுக்கு சான்றாக விளங்குகின்றன.
    நடனக்கலையும் பண்டைய காலம் தொட்டே இருப்பதற்கு சான்றுகள் நம் புராதன கோயில்களில் உள்ள சிற்பங்கள்.
    நாடகக்கலையின் மூலம் புராணங்களை காட்சிபடுத்தியிருக்கின்றனர்.
    முத்தமிழின் மூலம் மனதை ஒருமுகப் படுத்தலாம் என்ற செய்தியை நமக்கு தெரியப் படுத்துகிறார்கள்.
    தற்காப்புக் கலைகள்:
    சிலம்பம், வாள்வீச்சு, போன்ற தற்காப்புக் கலைகளில் பண்டயதமிழர்கள் சிறந்து விளங்கினர். இதில் சிலம்பம் இன்றும் பழக்கத்தில் உள்ளதை நாம் காண்கிறோம்.
    யோகக்கலை:
    பதஞ்சலி என்னும் முனிவர் தொகுத்து வழங்கிய கலையே யோகக்கலை. இன்றும் பதஞ்சலி யோகம் என்னும் பெயரில் நம்மில் பலர் யோகக் கலையை கற்றுவருகிறோம்.
    எட்டு நிலைகளை கொண்ட அஷ்டாங்க யோகம் என்பதே ராஜ யோகம். இது யம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யஹார, தாரண, தியான , சமாதி என்னும் எட்டு நிலைகள்.
    அஹிம்சை, சத்தியத்தைப் பேணுதல் , மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள் மற்றும் சமாதிநிலைகளை கூறுகின்றன.
    பிராணாயாமம் செய்தால் நாம் நீண்ட நாட்கள் வாழலாம் என்றும் தியானத்தை மேற்கொண்டால் மனதை ஒருமுகப்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர். நீரின் மேல் நடந்ததும் மாயமாய் மறைந்ததும் பண்டைய தமிழர்களுக்கு யோகக் கலையினால் சாத்தியமாயிற்று என்றால் மிகையாகாது.
    12 நிலைகளை கொண்ட சூரிய நமஸ்காரத்தில் நம் உடலின் அத்தனை அசைவுகளையும் உள்ளடக்கிவிடலாம். இத்தகைய அறிய கலைகளை நாம் முழுவதும் உணர்ந்துகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
    முடிவாக.......
    நம் முன்னோர்கள் அறிவில் சிறந்தவர்கள், இல்லையென்றால் பின்னால் வரும் நிகழ்வுகளை வனவியல் சாஸ்திரத்தால் முன்கூட்டியே கூறமுடியாது, அழிவில்லாத கலைகளையும் கோயில்களையும், மொழியையும் நமக்கு கொடுத்திருக்க இயலாது. அவர்கள் தந்த பொக்கிஷங்களை நல் வழியில் பயன்படுத்தி நம் சந்ததியினரை காப்போம்.
    2. இனி அடுத்த தலைப்புக்கு வரலாம். நம் அடுத்த சந்ததியினர் தமிழ் கல்வி வளர்க்க என்ன செய்வது என்று நாம் சிந்திக்கும் இந்த வேளையில், என்னுடைய சில கருத்துக்கள் இங்கே.,
    முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். வளர்ந்துவரும் குழந்தைகளுக்கு பெற்றோரை அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்க பழக்க வேண்டும். தமிழின் முதல் எழுத்திலேயே அம்மாவும் அப்பாவும் இருப்பதில் பெருமைக் கொள்வோம்.
    ஆங்கில எழுத்துக்களை மட்டும் பழக்காமல் தமிழ் எழுத்துக்களையும் வரிசைகளையும் பாடல்கள் மூலம் பழக்கப் படுத்தலாம்.
    பள்ளி செல்லும் முன்னரே குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போதும் விளையாடும் போதும் தமிழ் பாடல்களை பாடிக் காண்பிக்கலாம், அல்லது இப்போது கடைகளில் பாடல் தகடுகள் வருகின்றன, அவற்றை உபயோகிக்கலாம். பெரு நகரங்களில் உள்ள குழந்தைகளிடம் வீட்டில் தமிழிலேயே பேச ஊக்குவிக்க வேண்டும்.
    வெளிநாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் வசிக்கும் நம் மக்கள் முடிந்தால் தமிழ் ஆசிரியரின் மூலம் முறையான தமிழ் கல்வி பயிற்றுவிக்கலாம்.
    தமிழை பள்ளியோடு நிறுத்திவிடாமல், கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் போன்று நிறுவ முன்வரலாம்.
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

    MY COMPLETED STORY- SUKI EN UYIR SAKI
    அன்புடன்,
    நித்யா மணி .

  5. #35
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,133

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    சுபா அக்கா, சிற்ப கலை பற்றிய உங்கள் பதிவு அற்புதம். சிற்பங்களின் நாதம் பற்றி படித்ததாக ஞாபகம். ஆனாலும் ஸ்வரங்கள் இசைக்கும் சிற்பம் சிறப்பு செய்தியே. அழகான பதிவுக்கு பாராட்டுகளும், நன்றிகளும் உரித்தாக்குகிறேன். @Subhasreemurali

    Last edited by Vimalthegreat; 28th Apr 2016 at 09:01 PM.
    gkarti and Subhasreemurali like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #36
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,762

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    வணக்கம் தோழிகளே!


    என்னுடைய கருத்துக்கள் சிலவற்றை இங்கே பதிவு செய்ய வந்துள்ளேன்... எப்போதுமே, தமிழர் மரபு என்றால் அது பழம் பெரும் சொல்லாகவே கருதுகிறோம்... அதோடு அந்தத் தமிழர் மரபோடு மறைந்து(ஆனால் மறந்து போகவில்லை நாம்) போன நம் மன்னர்கள் மாமுனிகளைப் தொடர்பு படுத்தியே அது இன்னும் பழமையான சொல்லாகவே மனதுள் பதிந்து விட்டது. ஏன் ஒரு புது முயற்சியை மேற்கொள்ள கூடாது என்ற வடிவில்... எம் தமிழனின் மரபுகளை விளக்க சமீபமாய் நடந்த வெள்ளப் பெருக்கினை உதாரணமாக்கி கொள்ள நினைக்கிறேன். இதோ என் கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.


    வீரம் :-
    பண்டைய தமிழர் தொடங்கி இன்றைய தமிழன் வரை வீரத்திற்கு பஞ்சம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், ராணுவத்திற்கு சென்று போர் புரிவது மட்டும் வீரம் அல்ல... இன்றைய சுயநல சூழலிலும் கூட, இயற்கையினால் உண்டான அசாதாரண சூழலில்... வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் எம் தமிழன், மொழி இனம் பாராது, முகம் அறியா சக தோழர் தோழிகளை தன்னால் முடிந்த மட்டும் காப்பாற்றினார்களே! அப்போது நான் பெருமிதம் கொண்டேன் நான் தமிழன்.
    முக நூலில் கண்ட ஒரு காணொளிக் காட்சியை இங்கே பகிர்கிறேன். ஒரு வீட்டின் உள்ளே ஒரு குடும்பம்... தாய் தந்தை... மகன் மகள் எனும் சின்னஞ்சிறு சிறார்கள், நீரால் சூழ்ந்து, வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே நீர் நிரம்பி விட்டது. வீட்டின் கதவுகள் மற்றும் ஜென்னல்கள் எல்லாம் இறுக்கமாய் பூட்டிக் கொண்டன. அந்த வீட்டின் சமையலறை ஜென்னல் என நினைக்கிறேன்... அது சற்று உயரத்தில் இருந்தது. அப்போது மழை வேறு இடைவிடாது கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல், ஒரு நான்கு பேர் கொண்ட நண்பர்கள் குழு தைரியமாய் சுவற்றில் ஏறி, ஜென்னல் திட்டை அடைந்து, அந்த ஜென்னலை உடைத்து அந்த நான்கு ஜீவன்களையும் காப்பாற்றினார்கள். ஆனால், எத்தனை தரம் அவர்கள் கீழே சறுக்கி விழுந்தார்கள், எத்தனை முறை முயற்சித்தார்கள் என்பது அந்தக் காட்சியை கண்ட அனைவருக்குமே தெரியும்.


    மீட்பு குழுவான, முப்படைகளுமே "எத்தனையோ மாநிலங்களில் இது போன்ற அசாதாரண சூழலில் மக்களைக் காப்பாற்றியிருக்கிறோம், ஆனால் இங்கு தான் சாதாரண சக மனிதர்களே களத்தில் எங்களுடன் இறங்கி உதவியிருக்கிறார்கள்" என அவர்களிடம் இருந்து பாராட்டினைப் பெற்றான் தமிழன். அவனின் மாண்புக்கும், துணிச்சலுக்கும், வீரத்திற்கும் சான்றாய் இது ஒன்றே போதும்.


    வீரம் பற்றி சில வரிகளுக்கு பதிலாக பல வரிகளில் எழுதி விட்டதால், மீதி தலைப்பில் என் கருத்துக்களை சுருக்கி கொள்கிறேன் தோழமைகளே!

    கொடை:-
    அதே இயற்கை இடர்பாட்டின் போது, இயல்பு நிலைப் பாதிக்கப்பட, அவர்களுக்கு சாப்பாடு, துணிமணிகள், அத்தியாவசியமான தண்ணீர் இன்னும் பல உதவிகள் மாவட்டம் கடந்து, இனம் கடந்து, நம் சகோதர சகோதரிகள் கஷ்டப்படுகிறார்கள் என வாரி வாரி வழங்கியது. இது கடந்த வெள்ளத்திற்கு மட்டுமல்ல, சுனாமி, அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பூகம்பம் என அத்தனை இடர்பாடுகளிலும், தமிழர்களின் சார்பாய் பல உதவிகள் செல்ல தான் செய்தது.


    விருந்தோம்பல்:-
    இது காலத்திற்கு தகுந்தப் படி வடிவம் மாறுகிறதே தவிர அழியவில்லை. பசிக்கு காசு கேட்கும் வயோதிகர்களை பிச்சைக்காரர்கள் என நாம் நினைத்து கொள்கிறோம்... ஆனாலும் ஒரு சிலர், அவர்களுக்கு காசு கொடுத்து பிச்சைக்காரர்களாக ஆக்காமல், அவர்களின் பசி போக்க உணவு பொட்டலம் வாங்கித் தருகிறார்கள். இதை என் கண்கூடாக நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்.


    மேலும், கோவில் அருகேயோ இல்லை எங்கேனும் சுற்றுலா தளங்களிலோ, நாம் சோறு கட்டிக் கொண்டு செல்வோம். ஆனால் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து உண்ண இடம் தேடுவோம், அப்போது நம்மிடம் "சும்மா இங்க உட்கார்ந்து சாப்பிட்டு போங்க... குடிக்க தண்ணி வேணுமா? இல்ல கொண்டு வரவா?" என கேட்டு, தங்கள் வீட்டின் முன் வரண்டாவை திறந்து விடும் நல் உள்ளம் நமக்கு சொல்லும் தமிழர்களின் விருந்தோம்பல் மரபு இன்னும் உயிரோடு தான் இருக்கின்றது. இந்த அனுபவம் எங்கள் குடும்பத்தாருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சென்ற போது கிடைத்தது.


    சமயம் :-
    ஹரியும் சிவனும் ஒன்று என்பது போல் சைவமும் வைணவமும் ஒன்று என சித்திரை விழா எடுத்து, அதை சிறப்பாய் நடத்தினான் நாயக்க மன்னன். நாயக்கர்கள் மறைந்தார்கள், அதன் பின் பலர் வந்தார்கள் சென்றார்கள், ஆனால், இன்னும் மதுரையம்பதியில் சித்திரை திருவிழா, மதுரை வாழ் மக்கள் அனைவருக்கும் உரிய பெரு விழா, பொது விழா என்றே சொல்லலாம். மற்ற சமயத்தை சார்ந்த மக்களும், வந்து பார்க்கும் ஒரு ஒப்பற்ற விழா.


    அதே போன்று, மசூதியில் நடைபெறும் முஸ்லிம்களின் விழாவான சந்தனக்கூடு விழா, இந்துக்களும் சென்று வழிபடும் ஓர் உன்னத விழா. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது, இந்துக்களும் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் படி இறைவனிடம் பிரார்த்தித்துச் செல்வார்கள்.


    தமிழன் ஆதி காலத்தில் இருந்தே எல்லா சமயத்தையும் போற்றி தான் வந்தான் என்பது திண்ணம்.


    நட்பு:-
    நட்புக்கு... அதுவும் நம் தமிழர்களின் நட்புக்கு கோப்பெருஞ் சோழனும், பிசிராந்தையாரும் பேசப் படுகிறார். ஆனால், சற்று யோசித்து பாருங்கள்... இன்றைய காலக் கட்டத்திலும், அவர்களைப் போன்று முகம் அறியா, நிறம், இனம் அறியா, நாடு கடந்த ஆழமான நட்புகள் இன்னும் இருக்க தான் செய்கின்றன.


    உதாரணத்திற்கு, நம் பெண்மையில் எத்தனை தோழிகளுக்கு, நாடு கடந்து, முகம் அறியா உண்மையான, ஆழமான நட்புகள் கிடைத்திருக்கின்றன என்பதை நான் சொல்ல வேண்டாம், இதை நான் பதிவித்த பின் அவர்களே "ஆம், எனக்கு என் உயிர் நட்பு இங்கு கிடைத்தது" என்று வந்து கூறுவார்கள். அவர்களுக்கு முன், நான் முந்தி கொள்கிறேன். ஆம், எனக்கு இங்கு பல உயிர் நட்புகளும், உண்மையான நட்பும் கிடைத்திருக்கிறது. அதற்கு பெண்மைக்கு நன்றி.


    தமிழ் மொழி இலக்கணம் இலக்கியம்:-


    தமிழ் இலக்கண இலக்கியம் பற்றி சொல்ல வேண்டுமானால், கண்டிப்பாக பின்னோக்கி தான் செல்ல வேண்டும்.


    "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
    முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி"
    என்ற வரிகள் புறப்பொருள் வெண்பாமாலையின்வழி புலப்படுத்துகிறது.


    தமிழ் இலக்கியங்களைப் பற்றி பேசும் போது, நமக்கு நினைவிற்கு வருவது சங்க இலக்கியங்களே! உலகில் தோன்றிய முதல் இலக்கியங்கள் இவையே. ஏனெனில் உலகில் இவ்வளவு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், வேறு எம்மொழியிலும் இல்லை. அதே போல் அவற்றின் சிறப்பு என்னவெனில் தொன்மக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதாமல், அக்கால தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டன.


    தமிழ் இலக்கணம் பற்றி பேசும் போது, இதனைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். உலக மொழிகளுக்கு இல்லாத ஒலிச்சிறப்பு நம் மொழிக்கு உண்டு. வல்லோசையென்றும் இடையோசையென்றும், மெல்லோசையென்றும், நம் மொழியொலியைப் பிரித்திருக்கிறோம்.


    தமிழுக்கு இலக்கணம் கூறுவது தொல்காப்பியம். இது எழுத்து, சொல், பொருள் ஆகியன மூன்றனுக்கும் இலக்கணம் கூறுகின்றது. ஆனால், தொல்காப்பியரின் ஆசிரியரான அகத்தியர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை அகத்தியம் எனும் பெயரில் எழுதியுள்ளார். அறிவியல் முறையில் அமைந்த இத்தகைய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டும் என்றால், குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றி, செம்மைப் பெற்றிருக்க வேண்டும் என மொழி வல்லுனர்கள் கூறுகிறார்கள். இத்துணை வளமும், செழிப்பும், சிறப்பும் மிக்க நம் மொழியை நாம் பேணிக் காப்பது நம் கடமை.


  7. #37
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,762

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    தமிழின் வளர்ச்சிக்கு வழி வகைகள்:

    தமிழின் வளர்ச்சிக்கு, முதலில் நான் பள்ளி பாடத்திட்டம், கல்லூரி பாடத்திட்டம் வரை எல்லாம் செல்ல வில்லை. முதலில், "மம்மி, டாடி" என்று அழைக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகளை இன்று முதல் "அம்மா அப்பா" என அழைக்க செய்யுங்கள்.


    இரண்டாவது, எல்லாரும் தங்களது பெற்றோர்களை உங்கள் வீட்டில் வைத்து, கூட்டுக் குடும்பமாக இருந்தாலே போதும், "மம்மி... ஸ்நாக்ஸ்ஸுக்கு லேஸ் வேணும்" என சொல்லும் குழந்தைகள், "பாட்டி... இது என்ன கடலை மிட்டாய் மாதிரியே இருக்கு..." என புட்டையும்,கடலைப்பருப்பு, வெல்லத்தையும் சேர்த்து கொட்டித் தரும் பாட்டியிடம் கேட்கும். பின் அதன் ருசி அறிந்து, "இதையே நாளைக்கு ஸ்கூலுக்கு சாப்பிட தா பாட்டி." என மாறும். நம் தமிழும், பாரம்பரிய உணவும் வளர்ச்சி பெரும்.


    இப்போது, ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். அந்தக் காலத்து பாத்தாவது வரை படித்த அம்மாவும், பியுசி வரை படித்த அப்பாவும், ஐந்தாம் வகுப்பு வரை இல்லை அதைக் கூட தாண்டாத தாத்தா பாட்டி வளர்த்த பிள்ளைகள் தான் நாம். நாம், மரியாதையில், ஒழுக்கத்தில், அறிவில், பண்பில் சிறந்து தான் இருக்கின்றோம் அதில் சந்தேகமே இல்லை.


    ஆனால், இன்றோ, படித்த தாய்மார்கள் பிள்ளைகளை வளர்க்க, படாத பாடு படுகிறார்கள். அதே போல், கான்வென்ட்டிலும், சிபிஎஸ்ஈயிலும் சேர்த்து விடுகிறார்கள், அங்கு "டேபிள் மானர்ஸ்" (இதற்கு தமிழில் மொழி பெயர்க்க தெரியவில்லை தோழமைகளே!) சொல்லி தருகிறார்களாம்! ஆனால், மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை மரியாதையை கற்று தர அவர்களும் மறக்கிறார்கள், பெற்றோர்களும் மறக்கிறார்கள் என்பது தான் கொடுமை. ஆம், இப்போது உள்ள குழந்தைகள் அனைவரும், தன் அம்மா அப்பாவில் தொடங்கி, தாத்தா பாட்டியை தாண்டி, வெளியே இருக்கும் சுற்றங்களையும், முறை வைத்து அழைக்காமல், மொட்டையாக பன்மையில் மட்டும் பேசுகிறார்கள். இது என்ன பழக்கவழக்கமோ? இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.


    உதாரணத்திற்கு, யாரேனும் "வந்துட்டியா மா" என கேட்டால், "வந்துட்டேன்..." "கொடுங்க..." "இங்க கொடுங்க, நான் போடுறேன் இந்த கணக்க" என இவ்வாறே தான் பேசுகிறார்களே ஒழிய, "வந்துட்டேன் பாட்டி", "கொடுங்கப்பா" "இங்க கொடுங்க மிஸ், நான் போடுறேன் இந்த கணக்க" என யாரும் பேசுவது இல்லை. இது பண்பில்லை என பெற்றோர்களும் சொல்லி தருவதும் இல்லை, ஆசிரியர்களும் கண்டுக் கொள்வதில்லை. இப்போது ஒரு புது நாகரீகம் வேறு, யார் என்ன வயதினர் என்றாலும், அவர்களின் பெயர் சொல்லி குழந்தைகள் அழைப்பது. கேட்டால், செல்லமாக அழைக்கிறார்களாம்.


    இன்றைக்கு செல்லமாக அழைப்பது, நாளை சர்வ சாதரணமாக மாறும்... பின் இப்படியே சென்றால், உறவு முறையின் அழகான பெயர்களும் மறந்து போகும்... தமிழும் ஒரு நாள் மறந்து போகும்.


    மேற் சொன்ன காரணமும் தமிழ் மொழி அழிய ஒரு செயல் தான். நீங்கள் தமிழ் தமிழ் என்று கத்தவும் வேண்டாம், தமிழ் என் உயிர் மூச்சு என முழங்கவும் வேண்டாம், சாதரணமாக விட்டு விடுங்கள்... உங்களை உங்கள் பெற்றோர்கள் எப்படி நன்முறையில் கண்டித்து, போற்றி வளர்த்தார்களோ அப்படியே வளருங்கள் உங்கள் குழந்தைகளை, அது தானே தமிழனாக உருவெடுக்கும்.


    நான் கேட்டு கொள்வது என்னவென்றால், நல்ல கல்வி தருகிறேன் என பணம் பறிக்கும் வியாபாரமாக மாறி விட்ட பள்ளிகளில் சென்று உங்கள் குழந்தைகளையும் சேர்க்காதீர்கள், உங்கள் பணத்தையும் கொட்டி வீணாக்காதீர்கள், தமிழையும் மறக்கடிக்கச் செய்யாதீர்கள்.


    உதாரணத்திற்கு, இங்கு இரு மனிதர்களைப் பற்றி சொல்கிறேன். சமூக ஆர்வலர், விமர்சகர் ஞானி பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். அவர் ஒரு நேர்காணலின் போது, இதைக் கூறினார். அவரின் மகன் சாதாரண பள்ளி, கல்லூரியில் பயின்று, இன்றைக்கு வட மாநிலத்தில் பணிபுரிகிறான். அதுவும் ஹிந்தியை பயிலாத அவர், அங்கு சென்று பணிபுரிந்த காலத்தில் அம்மொழியை தானாக கற்று தேர்ந்து அங்கு இருக்கிறார். இதில் என்ன கருத்து என்றால், குழந்தைகளுக்கு தானாகவே கற்று தேறும் திறனும், சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் பக்குவமும் இருக்கும். அதனால் எல்லா மொழியையும், கலையையும், வளரும் பருவத்திலேயே திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.


    அதே போல் இளங்கோ கல்லானை எனும் இயற்கை விவசாயி, எழுத்தாளர், சமூக ஆர்வலர். (நீயா நானா நிகழ்ச்சியில் நீங்கள் அவரைப் பார்த்திருக்கலாம்) படித்து வளர்ந்தது எல்லாம் கிராமபுரத்தில் தமிழ் வழிக் கல்வி மூலம் தான். ஆனால் இன்று இலக்கியம் முதல், அரசியல், பங்கு சந்தை என பல துறைகளை பற்றி அலசுகிறார். தூய்மையான ஆங்கிலத்திலும் பேசுகிறார். அவருக்கு இருக்கும் திறமைகள் பல. ஆனால் சாதாரணமாய் தான் வாழ்கிறார். அவரின் பிள்ளைகள் கூட இன்றையை காலக் கட்டத்திலும், அரசு பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைக்கிறார். "இன்று உண்டு நிம்மதியாய் உறங்குவதற்கு போதுமான பணம் சம்பாதிக்கிறேன். அது போதும் எனக்கு" என எளிமையாய் வாழ்கிறார்.


    இவர்களைப் போல் நாமும், எளிமையாய் சிந்தித்து வாழ்ந்தோமே ஆனால், தமிழும் காப்பாற்ற படும் தமிழன் இனமும் காப்பாற்றப் படும்.

    Last edited by jash; 30th Apr 2016 at 10:57 PM.

  8. #38
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,887
    Blog Entries
    1

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

    நம் தாய்மொழியாகிய தமிழ் இனிமையும், சீரிளமைத் திறமும் பெற்ற செம்மொழி. மாண்புமிக்க இலக்கியங்களையும், நயங்கள் செறிந்த கவிதைப் படைப்புகளையும் செல்வமாகப் பெற்றிருக்கும் வளம் மிகுந்த மொழி என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

    அத்தகைய தமிழைப் பற்றியும், தமிழரின் மரபு மற்றும் கலாச்சாரங்களைப் பற்றி அறிந்திருப்பதிலும், பகிர்வதிலும் எங்களுக்கு இணை நாங்களே என்று வியக்கும் வண்ணம் இருந்தது நம் போட்டியாளர்களின் பகிர்வுகள்.

    போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ரசித்துப் பகிர்ந்த தமிழின் அருமையை படிக்கப் படிக்க தெவிட்டாததாகவே இருந்தது.

    தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டியின் முடிவை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இங்கு தங்களது கருத்துக்களை தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்த தோழிகள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

    இதில் தோழி Raasi @raasitha தம் கருத்தை மிக சிறப்பாக பதிவு செய்து, வெற்றியாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்! அவருக்கான பரிசு,



    அவருக்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் தோழி Subhashreemurali அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    Please send your Indian Postal Address with Phone no. to support@penmai.com through mail. Once you received the gift, please confirm the same.


    Attached Thumbnails Attached Thumbnails Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!-secret-manjul-500x500.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #39
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Hearty congrats @raasitha chellam

    Subhasreemurali and raasitha like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #40
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

    Congrats @Subhasreemurali

    Subhasreemurali and raasitha like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter