Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree500Likes

Penmai's 8th Birthday Contest!!!


Discussions on "Penmai's 8th Birthday Contest!!!" in "Special Contest" forum.


  1. #11
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    re: Penmai's 8th Birthday Contest!!!

    ஒன்பதாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப் போகும் பெண்மைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....
    மென்மேலும் பீடு நடை போட எல்லா பெண்மை வசகிகளும் உழைப்போமாக.


    பெண்மைப் பற்றிய உங்களின் பார்வையை இங்கே உங்களின் அனுபவத்தின் வாயிலாக அறிய விழைகிறோம்.

    பெண்மையைப் பற்றிய என் அனுபவங்கள் :-

    யதேச்சையாக சர்பிங்க் செய்யும்போது இந்த வலைதளத்தினுள் நுழைந்தேன் 2011 -இல் இணைந்தேன்.சில மாதங்கள் அருமையாக போஸ்டிங்ஸ் போட்டேன். பிறகு, என் குடும்ப சூழல், என் உடல் நிலை,வேலை காரணமாக் ஒதுங்கியே இருந்தேன். 2015 - வரை.....

    மீண்டும் மனதினுள் ஒரு பொறி.... பெண்மையில் ஈடுபட்டு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று !!!! மீண்டும் 2015 முதல் தொடர்ந்து போஸ்ட் போடுகிறேன்... இன்று பெண்மையில் "குரு " என்ற நிலையில் !!!

    பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூலக் காரணம் எது? உங்களை பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது?
    பெண்மையில் உத்வேகத்துடன் ஈடுபடக் காரணம் :-

    கதை, கவிதை எழுதும் எனக்கு, என் உணர்வுகளை, கொட்ட, என் ஆதங்கங்களைப் பகிர்ந்துக் கொள்ள பெண்மை ஒரு நல்ல தோழியாக விளங்குவதால் !!!!! ஆன்மிகம்,சமையல், குழந்தை வளர்ப்பு, கருத்துக்களம், இலக்கியம், இலக்கணம், சினிமா,

    புத்தகங்கள்,அறிவியல், பிள்ளை வளர்ப்பு, கல்வி, பாடல்கள்,நீயா நானா, ஜோக்ஸ் என நான் என்னுடை பல திறமைகளை வெளிப்படுத்த எனக்கு இது ஒரு வாய்ப்பு என்பதால் !!!! குறிப்பாக, ரெண்டு கவிதை தொகுப்பு நூல்கள் பிடிஎப் செய்தேன். ஒரு கதை எழுதி உள்ளேன்.. ரெண்டாவது கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

    பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது:-

    எனக்கு ஈடுபாடு உள்ள எல்லாத் துறைகளிலும் நான் கலந்து என்னால் இயன்ற போஸ்ட்ஸ் போட்டாலும், நான் உயிர்ப்பது ஆன்மீகத்தில் !!! நான் ஜீவிப்பது ஆன்மீகத்தில் !!! ஆன்மீக போஸ்ட்ஸ் போடும்போது ஒரு நல்ல ஆத்ம திருப்தி.அது போலவே புத்தகங் கள் பகுதியை ரசித்து ருசிக்கிறேன்.

    பெண்மையுடனான உங்களின் நேசமான உறவை உங்களின் அனுபவத்தின் மூலம் விளக்கவும் மற்றும் பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?

    பெண்மையுடன் என் நேச உறவு :-


    நல்ல நண்பர்கள், நல்ல கருத்து பரிமாற்றம்., ரெண்டு முறை பெண்மை என்னை பரிசு அளித்து கவுரவித்து உள்ளது.....அக்ட் -2016, மார்ச்-2016 (பரிசுக்கும் பாராட்டுக்கும் சந்தோஷப்படும் குழந்தை மனம் எனக்கு !!!) ;

    என் திரியினை படித்து அதன் பின்னூட்டம் பார்த்து மகிழ்கிறேன்; என் கதைகளுக்கு பின்னூட்டங்கள் என்னை உச்சி குளிர வைக்கின்றது.....

    அறியாததை கற்றுக் கொடுக்கும் பெண்மையிடம் நான் கற்கும் ஆர்வத்தில், நிறைய கேள்விகள் சில்லறையாக கூட, கேட்டு படுத்திக் கொண்டே இருப்பேன். எனக்கு சளைக்காமல் பதில் அளிப்பாள் , என் தோழி பெண்மை !!!!


    உடைந்து சுக்கு நூ
    றான என் இதயத்தை ஓட்ட வைத்து, இன்று வாழ வைக்கும் quickfix பெண்மை எனக்கு !!!

    பெண்மையின் உறுப்பினராக கர்வம் கொள்ள வைப்பது :-

    கிரிஜாவின் வளர்ச்சி, கிரிஜாவின் தெளிந்த மனநிலை (உருகி உருகி, உருக் குலைந்த மனப் பிரச்னைகள் மாற்றியது நீ தானே பெண்மை ??) அனைத்தும் பெண்மைக்கே அர்ப்பணிக்கிறேன். என் நிலையை மாற்றியது போல, இன்னும் பற்பல பெண்மை வாசகிகளின் மனநிலை பக்குவப்படுத்துகிறாள் பெண்மை என்ற கர்வம் எனக்கு !!!

    நான்

    1) இன்று சிறந்த 50 பங்கு கொடுக்கும் போஸ்ட்ஸ் போடுபவள்
    2) இன்று சிறந்த 10 - நீயா நானா பதிவு இடுபவள்
    3) இன்று சிறந்த 10- சமையலறை ராணி

    என்று பல கவுரவங்கள் அளித்து , அளிக்கப் போகும் பெண்மையை குறித்து உயர்ந்த கர்வம் எனக்கு.....



    பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது? இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?

    பெண்மை போட்டிகள் :-
    ======================
    கலந்துக் கொண்ட அனுபவம் மகிழ்ச்சியே !! (இது வரை போட்டிகளில் பரிசு கிடைக்காவிட்டாலும்....) தொடர்ந்து போட்டிகளில் கலந்துக் கொள்வேன்.... வாய்ப்புகள் அருமை !!!!

    இனியும் தொடர்க.... இது போலவே !!!!!குறிப்பாக் ஆங்கிலத்திலும் தமிழிலும் வாய்ப்புகள் தருவது ரொம்ப பிடித்து இருக்கிறது.


    உங்களைப் பொறுத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது?

    பெண்மையின் பலம் :-

    (1) ஒற்றுமை
    (2) நல்ல கருத்துப் பரிமாற்றங்கள்
    (3) நல்ல மாடரேடர்ஸ்
    (4) நல்ல ஊக்குவிப்பு
    (5) உண்மையினை வெளிப்படுத்தும் தன்மை....
    (6) நல்ல சிரிப்புகளையும் ரசிப்புத்
    தனமையினையும் கொண்டு இருப்பது
    (7) புதுமைகளும், காலத்திற்கு ஏற்ற
    போட்டிகளும்.

    (8) நிறைய உறுப்பினர்கள் ,நற்சிந்தனையுடன்
    போஸ்ட்ஸ் போடுபவர்கள்

    எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருது எதிர்பார்க்கிறீர்கள்?

    நான் எதிர்பார்க்கும் தகவல்கள் :-
    =======================
    (1) மென்மேலும் புதுமைகள்
    (2) மென்மேலும் போட்டிகள்
    (3) பெண்மை இ-மாக் இல் இன்னும் கவிதைக்கு முக்கியத்துவம் தரலாம்.
    (4) நிறைய படிக்க ஆங்கில புத்தகங்கள், தமிழ் புத்தகங்கள் அப்லோட் செய்யலாம்.
    (நானும் செய்கிறேன்)

    (5) நீயா நானா போன்று விவாத மேடைகள் இன்னும்
    துவங்கலாம்.
    (6) கவியரங்கம் துவங்கினால் இன்னும் பல
    கவிஞர்கள் உரு ஆவார்கள்.
    (7) சுயமாய், கற்க உதவும் புத்தகங்கள்
    தெரிவிக்கலாம்.


    வாழ்க பெண்மை.... அவள் இன்னும் பல வருடங்கள் அன்னை பகவதி அருளுடன் வெற்றி நடை பயில்வாள்.








    Sponsored Links
    Last edited by girija chandru; 14th May 2016 at 12:31 PM.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #12
    Vedhika's Avatar
    Vedhika is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2016
    Location
    Vellore
    Posts
    21

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Happy Birthday @Penmai..........


  3. #13
    SinduLakshmi Jagan's Avatar
    SinduLakshmi Jagan is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Sinduja
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    Chennai
    Posts
    820

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Hey 9 yrs super super!! romba happyana moment! Will come sure

    உங்கள்அன்பிற்குரிய,
    சிந்துலட்சுமி ஜெகன்


    My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
    My stories

  4. #14
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Happy Birthday Penmai...

    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  5. #15
    Geethanjali16's Avatar
    Geethanjali16 is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Geetha
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    CHENNAI
    Posts
    1,857

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Happy birthday penmai... menmelum pudhumaigal padaikka vaazhthukkal...


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's  8th Birthday Contest!!!-birthday_scraps_01-1.gif  
    with love...
    Geethanjali
    [B][I][COLOR=#800080][SIZE=5]
    My ongoing story- http://www.penmai.com/forums/serial-...ethanjali.html

    My completed stories- http://www.penmai.com/forums/penman-...ethanjali.html

    Some things may be difficult but nothing is impossible!

  6. #16
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    re: Penmai's 8th Birthday Contest!!!

    HAPPY BIRTHDAY PENMAI




    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  7. #17
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    re: Penmai's 8th Birthday Contest!!!

    பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூலக் காரணம் எது?

    ஒன்றா , இரண்டா காரணங்கள்
    எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா !!!!

    ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாலே
    அவள் பெயர் பெண்மை தானே !!!


    பெண்மையில் பதிவுகள் செய்யும் நம் பதிவுகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் , அதன் மூலம் கிடைக்கும் முகமறியா நட்புக்கள் , (இதில் நம் கார்த்திகா முக்கிய பங்கு வகிக்கிறார்கள், மற்றவர்களை சொல்லலை என்று கோபம் கொள்ளாதீர்கள் , நான் பதிவுகள் பண்ண ஆரம்பிக்க முழு முதல் காரணம் கார்த்திகா தான் , அதான் ...) .

    மற்றவர்களை காயப்படுத்தாமல் ,அவர்களுடைய கருத்துக்களுக்கு தனி இடம் குடுத்து , அவர்களுக்கு முக்கியத்துவம் குடுக்கும் பாங்கு , ஒருமுறை பெண்மைக்கு வந்துவிட்டால் வேறு எங்கும் போக விரும்பாத அளவுக்கு நம்மை கட்டிப்போடும் பல பகுதிகள் ...

    உங்களை பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது?

    வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அயர்ச்சியாக வந்து உக்காரும் போது பெண்மையில் தினமும் புது புது தகவல்கள் , போட்டிகள் , இன்னும் பல நம்மை சிந்திக்க தூண்டி நம்மை சுறுசுறுப்பாக ஆக்கி கலந்து கொள்ள வைத்து , நம் சோர்ந்து போன மூளைக்கு உத்வேகத்தை தருகிறது ...
    எல்லா மனிதர்களுக்கும் வித விதமான விருப்பங்கள் இருக்கின்றன , அவர்களுக்கு தகுந்த மாதிரி விதவிதமான பகுதிகள் உள்ளன .

    பெண்மையுடனான உங்களின் நேசமான உறவை உங்களின் அனுபவத்தின் மூலம் விளக்கவும் மற்றும் பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?

    நம் தாய்நாடு இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தபோது ,வீட்டை விட்டு வெளியில் தனியாக போயி பழகாத நான் , இனி பொழுதுபோக என்ன செய்யப்போறோம் என்று நினைத்து வருந்திய எனக்கு , என் தங்கை அறிமுகப்படுத்திய தளம் தான் பெண்மை . முதலில் எல்லோரையும் போல ரமணி அம்மாவின் புத்தகங்களை தேடியே வந்த நான் , அப்பறம் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களும் படிக்க ஆரம்பித்து , பின்னர் தொடர் கதைகள் படித்து அதற்கு விமர்சனம் தரும் தோழிகளின் (முக்கியமாக கார்த்தி ) பதிவுகள் பார்த்து கவரப்பட்டு , நாமும் எழுதிப்பார்க்கலாமே என்று ஆரம்பித்தது தான் பெண்மையில் என் அனுபவம் .

    பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?
    சல் அக்கா என்று பலர் சொல்லும் அளவிற்கு நம்மையும் பலருக்கு தெரிகிறது என்பதும் , நம்ம பெயரையும் பல தோழிகள் tag மற்றும் mention செய்வது , பள்ளியில் இருந்து திரும்பும் பிள்ளையிடம் அன்று பெண்மையில் பார்த்த பல தகவல்களை நினைவு வைத்துக்கொண்டு அதை சொல்லும்போது "அம்மா ! உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ?." என்கேட்கும்போது எனக்கு வரும் உணர்விற்கு பெயர் கர்வம் ,
    ரமதான் , ஹஜ் போன்ற நல்ல நாட்கள் பற்றிய பதிவுகள் E-Magazine இல் நான் போட்டதை என் கணவர் மற்றும் பையனிடம் காட்டும் போதும் , என் சமையல் குறிப்புகளுக்கு பெண்மை தந்த அங்கீகாரத்தை என் தங்கையிடம் சொல்லியபோதும் எனக்கு வந்தது கர்வம் ...

    பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது? இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?

    பெண்மையின் போட்டிகள் ஒவ்வொன்னும் மிகவும் சுவாரஸ்யமாகவும் , பயனுள்ளதாகவும் உள்ளன ,. என்னைப்போல வீட்டிலயே இருக்கும் பல பெண்கள் தங்களுக்குள் பல திறமைகளை வைத்துக்கொண்டு வெளியிட முடியாமல் இருப்பார்கள் , அவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர பெண்மை நல்ல ஒரு வாய்ப்பு தருகின்றது . சமையலில் அசத்துபவர்களை கிட்சென் குயீன் என்றும் , படம் வரைபவர்கள் , கதை , கவிதை எழுதுபவர்கள் , புகைப்படம் எடுப்பவர்கள் , நன்கு திரைவிமர்சனம் செய்பவர்கள் ,கணினி துறையில் பல தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் , இன்னும் பல புது தகவல்கள் தெரிந்தவர்கள் இப்படி எல்லோருக்கும் தனித்தளம் அமைத்துக்கொடுத்து அவர்களை முன்னேற்றி அழகு பார்க்கும் சிறந்த தளம் .



    உங்களைப் பொறுத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது?


    பெண்மையில் அறிமுகமாகும்போது பயந்து பயந்து பதிவுகள் செய்த நான் , இப்போது பெரும்பான்மையாக உலா வரக்காரணம் பெண்மை மேல் கொண்ட நம்பிக்கை , .
    இந்த தளம் நமக்கு பாதுகாப்பு தருகிறது , நம் சொந்த கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல நமக்கு கிடைத்திருக்கும் ஒரு தளம் , பெண்மையை வேறு ஒரு தளமாக பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு நமக்குள் ஒரு அங்கமாக இருப்பது ஒரு பிளஸ் ..
    பெண்மையில் நுழைய எந்த தனிப்பட்ட சட்டங்களும் , தடைகளும் இல்லை ,. யாரும் பதிவு செய்யும் அளவுக்கு எளிமை , .
    அடுத்தவர் மதங்கள் , அவர்களின் கோட்பாடுகள் , நம்பிக்கைகள் , வழிபாடுகள் , மனங்கள் , இனங்கள் ,கலாச்சாரங்கள் , மொழிகள் இப்படி எதையும் அளவுக்கு அதிகமாக விமர்சிக்காமல் , ஒரு எல்லையுடன் நிறுத்திக்கொண்டு , அவரவர் தனிப்பட்ட எண்ணங்களுக்கு மரியாதை கொடுத்து பதிவுகள் செய்வது ஒரு பிளஸ்

    வீட்டிற்குள்ளே கதைகள் எழுதி தனிப்பட்ட முறையில் வைத்துக்கொண்டிருந்தவ்ரகளுக்கு தளம் அமைத்து அதை வெளிக்கொண்டு வந்து , அப்படியே புத்தகங்களாக வெளிவர வைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்வது ஒரு பிளஸ் .

    எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருது எதிர்பார்க்கிறீர்கள்?
    புதுவகையான சமையல் வேணுமா , குழந்தைக்கு உடல் நலமில்லையா , இன்றைய லேட்டஸ்ட் மாடல்கள் பற்றி தெரியனுமா , இப்படி எது வேண்டும் என்றாலும் பெண்மையை கேளுங்கள் என்று சொல்லும் அளவுக்கு பெண்மையில் இல்லாத தகவல்களே இல்லை ...

    எல்லா வகையான தகவல்களும் இங்கே கிடைக்கின்றன . இதற்கு மேல் என்ன வேண்டும் என்று சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை ..




    Sal

  8. #18
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,112

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Oh Gosh,, Humbled & Honored Kootz.. Your Nice & kind words Really Wrapped me.. Eppovum Enga Kootz thaan Superb Like for your Entry Cheers!!


  9. #19
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Wish u happy happy birthday penmai 👏👏👏👍 keep rocking


  10. #20
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    re: Penmai's 8th Birthday Contest!!!

    Penmai.

    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter