Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree500Likes

Penmai's 8th Birthday Contest!!!


Discussions on "Penmai's 8th Birthday Contest!!!" in "Special Contest" forum.


 1. #31
  Mithrani's Avatar
  Mithrani is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Malaysia
  Posts
  6,871

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  Happy Birthday Penmai.....
  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Penmai's 8th Birthday Contest!!!-funny-happy-birthday-wishes.jpg  
  ______________________________________________________________________________________________

  "அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்
  ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."
  - விவேகானந்தர் _______________________________________________________________________________________________

 2. #32
  nusrath's Avatar
  nusrath is offline Registered User
  Blogger
  Friends's of Penmai
  Real Name
  Nusrath
  Gender
  Female
  Join Date
  May 2015
  Location
  srilanka
  Posts
  315
  Blog Entries
  4

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  எட்டே வயதான ஒரு குட்டிப்பெண்ணுக்கு இருக்கும் இவ்வளவு பெரிய புகழையும் அறிவையும் அடக்கத்தினையும் கண்டு வியந்து வாழ்த்துகிறேன்......


  பெண்ணியம் போற்றிடவே
  பெண்மையென பெயர் கொண்ட வந்த தேவதையே....,
  மண்ணிலமெல்லாம் உன் புகழ் வாசம்
  மானிடம் உள்ளவரை வீசட்டும்.  பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூலக் காரணம் எது?

  இணையத்தில் புதுசா சமயல் குறிப்புகள் தேடின போதுதான் பெண்மை எனக்கு அறிமுகம்.
  அதன் பிறகுதான் எனக்கு பிடித்த கதை கவிதை என நிறைய விடயம் இங்கு இருப்பது தெரிந்தது
  ஒவ்வொரு நாளும் புது பது தகவல்கள் என தந்து தினமும் பார்க்க தூண்டும்
  தோழிகளின் வேடிக்கையான கமெண்ட்ஸ் சுவாரஸ்யமான கருத்துக்கள் என சொல்லிட்டே போகலாம்
  சித்ரா எனக்கு டேக் பண்ணும் புதுசான சமயல் குறிப்புகளில் சிலதை செய்து வீட்ல அசத்தி இருக்கிறேன்
  கருத்துகள் பதிவிட நேரம் கிடைக்காவிட்டாலும் கதைகள் கவிதைகளை பிடித்தால் எப்படியாவது நேரம் எடுத்து படிச்சிடுவேன்  உங்களை பெண்மை தளத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது எது?

  பெண்மையில் இருக்கும் எல்லா இடமும் என்னோட கருத்துக்களை பதிவிடனும்னு விருப்பம் தான் ஆனால் நேரம் கிடைப்பதில்லை கிடைத்தகாலத்தில் பெண்மை அறிமுகம் இல்லையே என நிறைய தடவை வருந்தியிருக்கிறேன்
  ஆனா ஒவ்வொரு நாளும் எப்படியும் கொஞ்ச நிமிடங்களாவது பெண்மையினை பார்வையிடத் தவறுவதில்லை  பெண்மையுடனான உங்களின் நேசமான உறவை உங்களின் அனுபவத்தின் மூலம் விளக்கவும்


  யார் ஒருத்தர் நம்மள இயல்பாக இருக்க அனுமதிக்கிறார்களோ அல்லது நம்ம சின்ன திறமைகளுக்கும் பெரிய அளவில் அங்கீகாரம் தருகிறார்களோ அவங்க மேல நேசம் வருவது நிச்சயமாக தடுக்க முடியாது.அதுதான் நம்ம பெண்மை.
  எனக்கு கவிதை படிக்க பிடிக்கும்.ஆனால் எழுத வரும் என்று பெண்மையில் இணைந்த பிறகுதான் எனக்கே தெரியும். 2015 சிறந்த பத்து கவிதைக்குள் என்னோட பெயர் பார்த்து எப்படி மகிழ்ச்சியாக உணர்ந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
  வீட்ல சொல்லி பெருமை அடித்ததற்கு அளவே இல்ல.
  இங்க ஒரு சிறுகதை கூட எழுதியிருக்கிறன். அதுக்கு வந்த லைக்ஸ் கமெண்டஸ் எல்லாம் மறக்கவே முடியாத சந்தோசங்கள்.


  பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?


  இணைந்து கொள்ளும் உறுப்பினர்களை பார்யைாளர்களாக மட்டும் இருக்க விடாமல் படைப்பாளிகளாக மாற்ற முனைவது பெண்மை.


  சமையலறை பெண்களை சாதனையாளர்களாக உருவாக்க முனைவது பெண்மை.

  தனித்துவமான உறவு என்றால் அது நட்புதான்.அந்த உறவை குறைவில்லாமல் கிடைக்கச் செய்யும் உயிரோட்டம் பெண்மை.


  ஒரு தோழியாக ஆசானாக இருந்து தவறுகளை அழகான முறையில் சுட்டிக்காட்டி வளர்த்து விட்டு பெருமைப்படும் தன்னலமில்லாத அன்புகொண்டது பெண்மை.


  இந்த பெண்மையில் நானும் ஒருத்தி என்பதே கர்வம் கொள்ளச்செய்கிறது.


  பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது? இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?


  இதுவரைக்கும் எந்த போட்டியிலும் கலந்துகொண்டதே இல்லை நிறைய ஆசையிருக்கு குறிப்பா நீயா நானா அருமையான அறிவுபூர்வமான போட்டி.
  ஒரு பார்வையாளர் என்ற மட்டில் எனக்கு மாற்றம் தேவையில்லையென தோன்றுகிறது


  உங்களைப் பொறுத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது?  இங்கு இருக்கும் எல்லாத்தோழிகளும் இது நம்ம குடும்பம் என்பதை போல நம்ம தளம் என்ற சொந்த உணர்வுடன் ஒற்றுமையாக அன்பாக பழகுவது தான் பலம்.


  எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருது எதிர்பார்க்கிறீர்கள்?
  ஏதாவது தகவல் எதிர்பார்த்து கேட்டு ஒரு திரி ஆரம்பித்தாலே போதும் எப்படியோ தேடித்தந்து விடுவார்கள்


 3. #33
  selvipandiyan's Avatar
  selvipandiyan is online now Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  24,998
  Blog Entries
  3

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  பெண்மையில் நீங்கள் உத்வேகத்துடன் ஈடுபட மூல காரணம் எது?


  நாவல்கள் தேடும்போதுதான் எனக்கு பெண்மை அறிமுகமானாள்.கதை படிக்க மட்டும் வந்த என்னை பெண்மை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டது.எவ்வளவு விஷயங்கள்,அரசியல், ஆன்மிகம்,சமையல், புதிய நண்பர்கள்,சினிமா, பாடல்கள், கவிதை,கதை விவாதங்கள்,அழகு,ஆரோக்கியம்,நாட்டு நடப்புகள் என்று நாம் எதுவுமே வெளியில் தேட வேண்டாம்...இது மட்டுமில்லாமல் நான் போஸ்ட் போடறதுக்கு பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் பெண்மை.இன்னும் இன்னும் என்று என்னை ஈடுபட வைக்கிறது..
  பெண்மை தளத்தில் சுறு சுறுப்புடன் செயல் பட வைப்பது என்ன?
  புது புது செய்திகளை நண்பர்கள் கொடுப்பது...நானும் எனக்கு தெரிந்ததை உடனே போட சொல்கிறது..


  பெண்மையுடனான உங்கள் நேசமான உறவை உங்களின் அனுபவத்தின் மூலம் விளக்கவும் மற்றும்,பெண்மையின் உறுப்பினராக உங்களை கர்வம் கொள்ள வைப்பது எது?


  சொல்லவே பெருமையா இருக்கு..ஒரு பிரபல எழுத்தாளர் என்னை நீங்கள் பெண்மை செல்வி பாண்டியனா அப்படின்னு கேட்டாங்க!இதை விட எனக்கு என்ன வேண்டும்?


  பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது?இதில் ஏதேனும் மாற்றம் தேவைபடுகிறதா?


  தேவையில்லை.ரொம்ப நன்றாக உள்ளது...நேரமின்மை காரணமாக என்னால் எல்லாவற்றிலும் கலந்து கொள்ள முடிவதில்லை..


  உங்களை பொருத்தவரை பெண்மையின் பலமாக நீங்கள் கருதுவது எது??
  பாதுகாப்பு. எங்களின் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம்...நாங்கள் நினைத்ததை சொல்ல முடிகிறது.


  எந்த மாதிரியான தகவல்களை நீங்கள் எங்களிடமிருந்து எதிர் பார்க்கிறீர்கள்??
  தினம் ஒரு தலையங்கம் நீங்கள் கொடுக்கலாம். இது என் கருத்து...


 4. #34
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  2,693
  Blog Entries
  14

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  Happy Birth day Penmai!  Attached Thumbnails Attached Thumbnails Penmai's 8th Birthday Contest!!!-penmai_91c55578.jpg  
  - Chitra

 5. #35
  sasee777 is offline Friends's of Penmai
  Real Name
  sasi
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  madurai
  Posts
  334

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  happy birthday penmai

  Penmai, jv_66, thenuraj and 2 others like this.

 6. #36
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Golden Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  66,035
  Blog Entries
  1584

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  மீண்டும் வருக!!!  thenuraj and naanathithi like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
  PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
  PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

 7. #37
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Ushanthy Gowthaman
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  4,869

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  அட..எட்டுவருஷமாகிவிட்டதா என்று கஷ்டமாக இருக்கிறது. காரணம் நான் பங்கெடுத்துக்கொண்டது இறுதி மூன்று வருடங்கள் தானே.. ஐந்து வருடங்களை இழந்து விட்டேன் என்று வருத்தமாக தான் இருக்கிறது. அந்தளவுக்கு என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்து போய்விட்டது பெண்மை. அடையாளம் தேடித்தான் இங்கு வந்தேன். கிட்டத்தட்ட பத்துவருடமாக என்னுள் கருக்கொண்டிருந்த பிரவாகத்தை கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆரம்ப காலங்களில் கொட்டிக்கவிழ்த்திருக்கிறேன். ஆனால் ஆதரவுக்கரங்களை தவிர வேறேதும் எனை நோக்கி நீளவில்லை. நன்றியுடன் தலைவணங்குகிறேன் நட்புக்களுக்கு.

  பெண்மையில் நான் ஏன் உத்வேகத்துடன் ஈடுபடுகிறேன்?
  ஒன்று user friendly குழுமம் பெண்மை. அங்காங்கே முட்டி மோதி கற்க வேண்டிய தேவை இல்லை. சிக்கல்கள் ஏதும் இல்லை. நேர்த்தியான வடிவமைப்பு பிரதான காரணம். எதுவும் எங்கும் இங்கே இடம் மாறி இருப்பதில்லை. நாங்கள் தப்பான இடத்தில் பதிவு செய்தாலும் உரிய இடத்துக்கு மொடரேட்டர்கள் அதை தூக்கிப்போட்டு விடுவார்கள். எப்போதும் எல்லாமே ஒரு ஒழுங்கான கட்டமைப்பில் இருப்பதால் சலிப்பு ஏற்படுவதில்லை.

  இரண்டாவது அங்கத்தவர்கள்: புதியவர் பழையவர் வேறுபாடு இல்லாமல் நன்றாக நெஞ்கியவர்கள் போலவே நட்புச்சுழலுக்குள் இழுத்துக்கொண்டு விடுவார்கள். தயக்கம் பெரும்பாலானவர்களுக்கு முதல் போஸ்ட் போடும்வரை மட்டும் தான். அதன் பின் அந்த சுழல் நம்மை எங்கேயோ இழுத்துப்போயிருக்கும். என் விடயத்தில் கவிதை நாவல் என்று ஆரம்பித்தவள் சினிமா விமர்சனம் புத்தக விமர்சனங்கள் என்று மாறினேன். நம்மை நம்பி பலர் படிக்கிறார்கள் என்ற எண்ணமே எழுதுவதை முறையாக கற்று எழுதவும் என்னை நானே அப்டேட் செய்து கொள்ளவும் உதவியது. நானெல்லாம் ஆன்மீக கட்டுரைகள் எழுதுவேனென்று இரண்டு வருடம் முன்பு சொல்லியிருந்தால் சிரித்தே செத்திருப்பேன். என் பதிவுகளை பலர் படிக்கிறார்கள் உற்சாகப்படுத்துகிரார்கள் என்ற எண்ணத்திலேயே இன்னும் அதிகமாய் அந்த விடயத்தில் நம்மை மெருகேற்றி ஒரு professional ஆக நாமாகவே முயல்வோம்.மெருகேற்றிகொள்வோம். ஆரம்பித்து சுவை கண்டால் விட்டு விட்டு இருந்துவிட முடியாது. சுழல் என்று சொன்னேனே.

  இதற்கு நான் சமீபத்தில் பெண்மையில் கண்ட உதாரணம் நம் சமையல் ராணி சித்ரா மேடம் @kaisri. அவருடைய சின்ன சின்ன குறிப்புக்கள், படங்கள் எல்லாம் பார்த்தால் தரம் சர்வதேச தரத்திலான food magazineகளை படிப்பது போலத்தான் இருக்கிறது. இதை நான் அவரிடம் சொன்னதில்லை..சைலண்ட் ரீடர் நான் . மன்னிக்க வேண்டும்! குறிப்புக்களையும் படங்களையும் தொகுத்து புத்தகமாக்க முயலுங்கள் மேடம்! செம ஒப்பனிங் கிடைக்கும்!

  அடுத்த முக்கியமான விஷயம், நான் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ள தேவையில்லை. ஏதோ ஒரு பெயரில் நான் நல்ல நட்புக்களை பெறமுடியும். பெண்களுக்கு இணையவெளியில் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள சின்னப்பயம் இருக்கும். மனதில் கருத்துக்கள் இருக்கும் வெளியே சொல்லமாட்டோம். நான் கூட அதிதி என்ற பெயரில் இருப்பிடம் கணனிக்கு முன்னே என்று தான் ஆரம்பித்தேன். கொஞ்சம் தைரியம் வந்ததும் தான் பெயரே வெளியில் வந்தது. பெண்மை என்ற பெயரோ என்னவோ தொண்ணூறு வீதம் பெண்களே உலவுவதால் மிக சௌகர்யமாக எங்கள் ராஜ்ஜியத்தை ஆளமுடிகிறது. இது வளர்ச்சிக்கு உகந்தது இல்லைத்தான் ஆனாலும் இது வசதியாக பாதுகாப்பாக
  இருக்கிறது.

  அதேபோலத்தான் எதிர்க்கருத்துக்களும். அப்படியே முகத்துக்கு நேராக யாரும் சொல்லிவிடுவதில்லை. நாகரீகமாகத்தான் சொல்வார்கள். அதுவும் நாம் நட்பாக
  உணர்வதற்கு காரணம். ஆரோக்கியமான அடிதடிகள் நிறைய நிகழ்வதுண்டு. யாரும் மனதில் வைத்துகொள்வதுமில்லை. இதெல்லாம் முன்னே இருந்தவர்கள் ஆரம்பித்து வைத்தது, பெண்மை கலாச்சாரமாக தொடர்கிறது. ஆகவே ஒரு குடும்பத்துக்கேயான இலகு உணர்வு வந்துவிடுகிறது.

  பெண்மையோடான என் நேசமான உணர்வு

  இருபத்து நாலுமணி நேரமும் இது என்ன வேலை என்று முன்னர் அம்மாவிடமும் இப்போது கணவரிடமும் திட்டுவாங்குவது இதில் வருமா? இதெல்லாம் சொல்லிப்புரியவைக்க முடியாதே.. அம்மா வீட்டுக்கு நீ ஏன் அடிக்கடி போகிறாய் என்பதற்கு பதில் என்ன? என் வேர் அங்கே தான் இருக்கிறது. அவ்வளவுதான். என் வேரும் பெண்மையில் தான் இருக்கிறது. பெண்மைக்கு நான் புனைபெயரில் தான் வந்தேன். ஆனால் என் நிஜப்
  பெயர் இப்போது சிலருக்கு..ச்சே ச்சே பலருக்கு (ஆசைக்கு சொல்லிப்போகிறேனே) தெரிந்திருக்கிறது பெண்மையினால் மட்டுமே..

  என்ன செய்வது காலம் யாருக்கும் காத்திருப்பதில்லையே.. படிக்கும் காலத்தை விட இப்போது புதிய கடமைகள் தோளில் ஏறிக்கொண்டிருக்கின்றன. நான் அடிக்கடி வந்து திரிந்த இடங்களில் இப்போதெல்லாம் புதியவர்களை பார்க்கும் போது முதல் வருட மாணவர்களை முறைக்கும் இரண்டாம் வருட மாணவனாய் முனங்கிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் அவர்களோடு பழகும் வரைதான். இணையத்தளங்களுக்குள்ளே உரசல் வருவது சகஜம் தான். அப்படி வரும் போது பிரச்சனைக்கும் எனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது, ஆனால் பெண்மைடா என்று பொங்கிவிட்டு பிறகு பம்மி நிற்பதெல்லாம்...நம் அரசியலில் இரவு பகல் போன்றது. எனக்கு நெஞ்சோடு நெருக்கமான உறவுகளை காண்பித்ததும் இதே பெண்மைதான். எங்களை தாண்டி குடும்பங்கள் வரை அது இப்போது இறுகி நிற்கிறது.

  இனி இனி திருமணவாழ்க்கை என்னையும் அதற்குள் இழுத்துக்கொண்டு விடலாம். பெண்மைப்பக்கமே வரவிடாமல் கட்டிப்போடலாம். ஆனால் பிறந்த ஊரின் நினைவுகளை அசை போடுவதை போல நாங்கள் பெண்மை நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே இருப்போம். அதில் பலப் பல தோழிகளின் நினைவுகள் இருக்கும்

  பெண்மை போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுபவம் எப்படியுள்ளது? இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா?

  ஆரோக்கியமான போட்டியுணர்வும் அடையாளமும் ரொம்பப்பிடித்திருப்பதால் போட்டிகளில் கலந்துகொள்வேன் நான். பரிசில்களின் ஊக்கம் வேறு. பரிசை அறிவிக்கும் முறை கூட பிடிக்கும். எப்போதுமே நடுவுநிலை தவறியதில்லை. ஆனால் சமீப காலமாய் ஒரே நபர்கள் தான் போட்டிகளில் பங்குபற்றிக்கொண்டிருக்கிறோமோ என்று எனக்கு ஒரு லேசான சந்தேகம்..புதியவர்களை காணோமே..

  1. பரிசில்களை விடுத்து சின்ன ஒர் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தால் என்ன? யாராவது ஒரு பொது ஊடகத்துடன் இணைந்து கொள்ள முடிந்தால் முதல் பரிசில் பெற்ற ஆக்கம் பிரசுரிக்கப்படும் என்ற ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தால் பலர் ஆர்வமாய் வருவார்கள் என்று நினைக்கிறேன். அத்தோடு entries உம் நல்ல தரமாக வரும். ஏதாவது வழியில் பெண்மை என்ற எல்லையை தாண்டி அடையாளம் காண்பிக்க முடிந்தால் பலருக்கு உத்வேகம் வரும். இது மறைமுகமாய் பெண்மையை வளர்க்கும் ஒரு கருவியாகவும் இருக்கும். எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியவில்லை.

  2. முதல் பரிசு பெற்றவருக்கு பெண்மையிலேயே சில சலுகைகள் கொடுக்கலாம். சூப்பர் ஸ்டார் வெற்றியாளரின் DP மாறுவது போல இந்தப்போட்டிகளுக்கும் ஒரு வெற்றியாளர் லோகோ கொடுக்கலாம்..மாற்றிக்கொள்வது அவரவர் விருப்பம் என்று சொல்லிவிடலாம். அநேகம் பேர் மாற்றிக்கொள்வார்கள் அந்த லோகோவோடு பெண்மைக்குள் உலவும் போது கெத்தாக இருக்கும்! அத்தோடு அந்த வெற்றியாளர் போகும் இடமெல்லாம் புதிய உறுப்பினர்கள் அது என்ன என்று தேட ஆரம்பித்து அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடும்.

  இவைகள் என் கருத்துக்கள் மட்டுமே.. தவறிருந்தால் மன்னிக்கவும்

  இப்போதைக்கு பெண்மை தொடாத பக்கம் இல்லை. உணவு முதல் ஆன்மிகம் வரை உறுப்பினர்கள் உற்சாகமாக இருப்பார்கள். எங்கு என்ன விடயம் படித்தாலும் அதை குழுமத்தில் ஷேர் செய்ய, எதை கேட்டாலும் உடனடியாக தேடித்தகவல் தர நட்புக்கள் உண்டு. இந்த பாரம்பரியம் இப்படியே தொடரவேண்டும். எட்டாண்டுகளை வெற்றிகரமாக கடந்து நெஞ்சிலும் ஆன்லைன் உலகத்திலும் அழுத்தமாக கால்பதித்துள்ள பெண்மை இனி எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றுமே அடுத்த கட்டத்தை நோக்கித்தான் இருக்கும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி..
  Stories of Ushanthy

  Download My Stories Here!


  To understand the heart and mind of a person, look not at what he was already achieved, but at what he aspires to
  - Kahlil Gibran 8. #38
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  42,300

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  Hey Nee Kannai Verkka Vaikkra... @naanathithi


 9. #39
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  42,300

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  Jiii, @kasri66 Kindly Check Ushanthy's Post Above


 10. #40
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  2,693
  Blog Entries
  14

  Re: Penmai's 8th Birthday Contest!!!

  Quote Originally Posted by gkarti View Post
  Jiii, @kasri66 Kindly Check Ushanthy's Post Above

  கார்த்தி! @gkarti

  எப்படியும் ஒரு நாள் இங்கே வந்து updates பார்ப்பேனே, அதுக்குள்ளே என்னை இங்கே mention பண்ணக் காரணம் என்னன்னு ஒரு curiosity யுடன் வந்தேன்... superb views உஷாந்தி @naanathithi யுடையது. *claps....claps...*

  பெண்மையில் நான் ஏன் உத்வேகத்துடன் ஈடுபடுகிறேன்

  இந்தக் கேள்விக்கு உஷாந்தி @naanathithi (இவங்க user nameக்கு நான் முதல் விசிறி... முதலில் penmaiகுள் வந்தப்போ நாம் ஒவ்வொருவரும் என்ன மனசுக்குள் நினைப்போமோ அதையே யூசர் நேமா வைச்சிருக்காங்க... ஆனா "ஏன் இந்த user name?" என்கிற த்ரெட்ல மாத்திக்க முடிஞ்சா பேரை மாத்திக்கற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்ன்னு சொல்லியிருந்தாங்க...உஷாந்தி, உங்கள் Username தான் உங்களை பலருக்கு அடையாளம் காட்டுது.... மாத்தவே மாத்தாதீங்க...) 'சுழல் என்று சொன்னேனே ...' என்பதுவரை சொல்லியிருப்பதைப் படிச்சா, ஏதோ என் மனசுக்குள் வந்து என் கருத்தை திருடிட்டதா நினைச்சேன், அதுக்கப்புறம் என் பெயரை mention பண்ணியிருக்காங்கன்னு படிச்சால் விர்ர்ர்ர் ருன்னு எங்கேயோ பறந்துட்டேன்... பெரிய giant wheelல முதல் முதல் போகும்போது மேலே போனதும் வயிறு காலியானது போல ஒரு பீலிங்....

  உஷா, என் பெயரை சொல்லியிருக்கறதால் சொல்லலை, உண்மையில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம், நிஜம், நிஜம். பெண்மை ங்கற பேருக்கு வாஸ்து போல ஏதோ ஒரு பவர் இருக்கறது நிஜம்.
  அதை நடத்துபவர்களும் ,moderators, மெம்பெர்ஸ், இதன் சுலபமான வடிவமைப்பு,எல்லாரோட involvementமே இதன் வெற்றிக்கு காரணம்.

  உஷா, உங்கள் புத்தக ஐடியாவுக்கு நன்றி. எங்கள் வீட்டிலும் இதையே எல்லாரும் படித்து படித்து சொல்கிறார்கள், இதைப்பத்தி யாரிடம் கேட்கலாம், கேட்டால் தப்பா போகுமா ன்னெல்லாம் நினைக்கும்போது எனக்கு ஒரு thread tag வந்தது....New platform for writers and readers - e book ன்னு... (
  அதில் உங்கள் கதைகள் நிறைய இருந்தது, அட, இந்தப்பொண்ணு இவ்ளோ எழுதியாச்சா ன்னு சந்தோசமாயிருந்தது... )கதை மட்டும்தானா, நம்ம பப்பு இங்கே வேகுமா தெரியாது, கார்த்தி சொல்லட்டும்...

  நீங்கள் சொன்னதுபோல நம் personal கடமைகள் கொஞ்ச காலம் நம்மை இழுக்கும், அதுக்காக வராம இருக்க முடியாதபடி பெண்மை ங்கற பாசக்கயிறு இழுத்துப் பிடிக்கும், அதிகம் வரலைன்னாலும் அப்பப்போ தலை காட்டலாம், அதனால் கவலைப் படாதீங்க... நானும் இனி எவ்வளவு நாள் இவ்ளோ எழுத முடியுமோ தெரியாதுன்னு இருக்கற வேலையெல்லாம் நிறுத்திட்டு இதிலேயே ஈடுபடுகிறேன்... அப்புறம் ரிலாக்ஸ் ஆகிக்கலாம் பாருங்க.

  ஆனா, உங்கள் suggestion முதல்கொண்டு எல்லாமே அழகாக வெளியிட்டிருக்கீங்க. அதுக்கு Hats off!


  - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->