Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree385Likes

Penmai's Special Contest


Discussions on "Penmai's Special Contest" in "Special Contest" forum.


  1. #31
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Penmai's Special Contest

    Sissy @RathideviDeva, I hope Everything is clear. If not, Lemme know..


    Sponsored Links

  2. #32
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Penmai's Special Contest

    ஹாய் பிரிண்ட்ஸ்

    அனைவர்க்கும் இனிய நண்பகல் வணக்கம்

    பெண்ணின் உடமை எது ?

    பாதுகாப்பு இல்லாத தைரியம் முரட்டுத்தனம். உறுதி இல்லாத, நிலைபாடு இல்லாத பாதுகாப்பு அசட்டுத்தனம். எனவே ஒரு பெண்ணிற்கு தைரியம், பாதுகாப்பு ,உறுதி இந்த மூன்றுமே உடமையாக வேண்டும். ஆனால் இவை யாவும் தானாக கிடைக்காது. அவை அவர்கள் வளர்ப்பிலே கலந்திருக்க வேண்டும். அதற்கு அப்பெண்ணின் குடும்பம் அதாவது பெற்றோர்கள் தான் அவர்களுக்கு அதை தர வேண்டும்.

    நாம் எப்போதும் பிரச்சனைகள் என்னவென்று பார்கிகிறமோ தவிர அதற்கான அடிப்படை காரணிகளை ஆராய்வதில்லை. ஒரு பெண் சிறுவயதில் இருந்தே அடுத்தவர்களை சார்ந்தே வளர்க்க படும்போது அவர்கள் எப்படி உறுதியாகவும் தைரியமாகவும் இருக்க முடியும். இங்கு துணைவர்கள் அப்பெண்ணின் பாதி வாழ்கைக்கு பின் வருபவர்கள். அதனால் அவர்களை முழுவதுமாக சேர்க்க முடியாது.

    ஒரு பெண்ணிற்கு சிறந்த குடும்பமும் ,தனது சிறகுகளை சுதந்திரமாக விரித்து பறக்க உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள் தான் அவளுக்கு தேவை. சிறுவயதில் நாம் குழந்தைகளின் மனதில் விதைக்கும் விதைதான் பின்நாளில் பெரும் விருட்சமாக மாறி அவர்களை வழி நடத்துகிறது.

    குழந்தைகளுக்கு படிப்பை சொல்லி தருவதற்கு முன் அவளை பற்றி அவளுக்கு சொல்லி கொடுங்கள். அவள் உடல் கூறுகளை அவளுக்கு சொல்லி கொடுங்கள். பெண் தனியாக போககூடாது பாதுகாப்பு இல்லை என சொல்லி பயமுறுத்தாமல் நீ ஒரு தற்காப்புகளை கற்றுகொண்டால் உன்னால் தனியாக செல்ல முடியும் என சொல்லி கொடுங்கள்.

    அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாதே ,ஆண்களிடம் பேசாதே என சொல்வதற்கு பதிலாக அவர்களிடம் இப்படிதான் பேசவேண்டும். அவர்கள் ஏதாவது தவறாக பேசினால் நீ உடனே அங்கிருந்து வந்துவிடு என பாதுகாப்போடு கூடிய பழகுதலை சொல்லிகொடுங்கள்.உன்மனதிற்கு தவறு என பட்டால் உடனே சொல்லிவிடு.அது பெற்றோர்களாக இருந்தாலும் சரி மற்றவர்களாக இருந்தாலும் மனதின் கருத்துகளை தைரியமாக சொல்ல கற்று கொடுங்கள்.

    பெண் குழந்தைகளை பல்வேறு போட்டிகளில் பங்கு பெற ஊக்குவியுங்கள். அது விளையாட்டாக இருந்தாலும் சரி இல்லை கலைகளாக இருந்தாலும்சரி அல்லது அறிவுசார்ந்த துறைகளாக இருந்தாலும் அதில் கலந்துகொள்ள அனுமதியுங்கள். வெற்றியும் தோல்வியும் அவமானமும் ஒரே விகிதத்தில குழந்தைகள் எடுத்துகொள்ள இது உதவியாக இருக்கும்.பிற்காலத்தில் தான் நினைத்தது நடக்காத போது அவர்கள் துவண்டு போக மாட்டார்கள்.

    இது உனக்கான வாழ்க்கை. உனது விருப்பபடி நீ வாழ்ந்து பார் என அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும்போது அவளின் மனதில் ஒரு உறுதி வரும். தவறு செய்யும் எண்ணம் வராது.தன்னம்பிக்கை தான் வளரும்.

    அதே நேரத்தில் படிப்பும்,வேலையும் மட்டுமே ஒரு பெண்ணிற்கு முக்கியம் அல்ல. பண்பாடுடன் கூடிய நாகரீகமான பழக்கவழக்கமே அவளின் அடையாளம் என்பதை சொல்லி கொடுங்கள்.வருடத்திற்கு இருமுறை உங்கள் பிள்ளைகளின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து கெட் டு கெதர் வையுங்கள். நீங்களும் அழைத்து செல்லுங்கள்..இப்போது உங்கள் பிள்ளைகளின் நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம். அதே போல் இது போன்ற நிகழ்வுகளில் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் அவர்களுக்கு கற்று கொடுக்கலாம்.'

    வயதின் மாற்றத்தை அவர்களுக்கு உரிய பாணியில் நாம் எடுத்து சொல்லும்போது அதை முழுவதுமாக எற்றுகொல்லாவிட்டாலும் கண்டிப்பாக மனதில் நிறுத்தி கொள்வார்கள். தட்டி கொடுத்து வளர்க்கபடும் குழந்தை மனவலிமை பெறுகிறது. தோல்வியை கண்டு துவண்டு போகாதே அதே நேரத்தில் வெற்றியை கண்டு ரொம்ப மகிழ்ந்து விடாதே எந்த கஷ்டம் வந்தாலும் எதிர்த்து நின்று போரிடு, வாழ்க்கையில் நிலையானது எதுவுமில்லை இதுவும் கடந்து போகும் என சொல்லி வளர்க்க வேண்டும்.

    இவை அனைத்தயும் விட என் பெற்றோர்கள் எனக்கானவர்கள். என்னுடையவர்கள். என்னை அறிந்தவர்கள் என் மனதில் உள்ளதை சொல்வதற்கு அவர்களிடம் எனக்கு எந்த பயமும் கூச்சமும் இல்லை என்ற எண்ணத்தை ஒரு பெண்ணின் மனதில் நிலைத்துவிட்டால் அதற்கு பின் அவளுக்கு வரும் எந்த துன்பமும் தூசு போல் பறந்துவிடும்.

    அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு நீங்களும் மதிப்பு கொடுங்கள்.அவள் தவறு செய்திருந்தாலும் அதை எப்படி திருத்தி கொள்வது என அவர்களுக்கு கற்று கொடுங்கள், நல்லதும் தீயதும் கலந்ததது தான் இந்த சமுதாயம். ஏன் மனிதர்களும் அப்படிதான். இதில் உனக்கான நன்மைகளை நீ தேர்ந்தெடுத்து கொள் என சொல்லி வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு பெற்றோர்களால் வளர்க்கபடும் பெண்பிள்ளை மேற்கூறிய மூன்று உடமைகளையும் தன்னகத்தே பெற்று அவளுக்கான வாழக்கையயை சிறப்பாக வாழும் என்பதில் ஐயமில்லை.


    Last edited by gkarti; 15th Jul 2016 at 11:24 AM. Reason: Fixed the Alignment!
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  3. #33
    bhrcm's Avatar
    bhrcm is offline Friends's of Penmai
    Real Name
    Bhargavi Raghupathy
    Gender
    Female
    Join Date
    Apr 2016
    Location
    Chennai
    Posts
    191

    Re: Penmai's Special Contest

    I feel determination is very important especially for women to be successfull in life. Success does not need to be growth in career or in monetary terms. At times even for being a good daughter/sister/student/wife/mother/professional/human-being needs lot of determination.


    If you are determined; courage, confidence and patience will come on its own. There are very few lucky women who get support from family and friends. In most cases it is the woman who has to be determined to face the problems; come out and thus can set an example to others.


    I myself being a daughter of a highly determined lady who brought her kids without expecting support from others, would go for Determination.

    Penmai, kvsuresh, jv_66 and 4 others like this.

  4. #34
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Contest

    @gkarti @naanathithi - Ushu sonna vilakkam purinjaalum ennavo fullaa thelivu varala.

    @lashmi enakku yaaro , naama(naan) pandra thappa unartha, mandaila kotti vitta maadhiri irukku. Ellaarkkum therinjaalum, practical lifela sila vishayangala, nammala maathikka mudiyaama, take it for granteda vittudrom. Namma generation thaan , oru rapid lifestyle changela maattikkitta unlucky onesnu thonum. Luxuriyum irukku, verumaiyum irukku..... Ellaam irukkura maadhiriyum irukku, onnume illaadha maadhiriyum irukku.

    Last edited by RathideviDeva; 15th Jul 2016 at 01:16 AM.

  5. #35
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @gkarti @naanathithi - Ushu sonna vilakkam purinjaalum ennavo fullaa thelivu varala.

    @lashmi enakku yaaro , naama(naan) pandra thappa unartha, mandaila kotti vitta maadhiri irukku. Ellaarkkum therinjaalum, practical lifela sila vishayangala, nammala maathikka mudiyaama, take it for granteda vittudrom. Namma generation thaan , oru rapid lifestyle changela maattikkitta unlucky onesnu thonum. Luxuriyum irukku, verumaiyum irukku..... Ellaam irukkura maadhiriyum irukku, onnume illaadha maadhiriyum irukku.
    ரதி இதுல தப்பு சரின்னு ஏதும் இல்லை . கண்டிப்பா ரதி சில விஷியங்கள் ப்ராக்டிகலா ஒத்து வராது தான். ஏன்னா நம்ம எப்போதும் பிரச்சனைகளை கண்டு பயபடுகிறமோ அதுவரை இது இருக்கத்தான் செய்யும். அந்த பயத்தை பாதுகாப்பு என சொல்லி நம்மை நாமே சமாதானபடுத்தி கொள்கிறோம்.

    குழந்தைகள் என்பவர்கள் நம்மால் உலகிற்கு கொண்டு வரபட்டவர்களே தவிர அவர்கள் நம் அடிமை கிடையாது. அவர்களை வழிநடத்துங்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழாதீர்கள். அதாவது உங்களின் கருத்துகளை, ஆசைகளை,பயத்தை அவர்களின் மேல் திணிக்காதீர்கள் . உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்னு ஜக்கி வாசுதேவ் சொல்லுவார் .

    என் பெண்ணிடம் ஒரு அறிவுரை அல்லது கருத்துகளை சொல்லும்போது நான் எப்போதும் இந்த வார்த்தையை சொல்லிபார்த்து அதற்கு பின்பு என்ன சொல்லவேண்டும் தோனுகிறதோ அதை சொல்லுவேன்.முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவ நம்மா பொண்ணு ...அவகிட்டபேச இவ்ளோ யோசிக்கனுமான்னு....போக போக பழகிடுச்சு. அரம்பத்தில அறிவுரைங்கிற பேர்ல வழவழன்னு பேசிட்டு இருப்பேன். சில சமயம் பேசி முடிச்ச பிறகு அடடா இப்படி சொல்லிருந்திருக்லமோனு புலம்புவேன். ஆனா இப்போ அந்த குழப்பம் இல்லை.

    ஆனால் இதை என் தோழிகளிடம் சொல்லும்போது அவர்கள் என்னை பார்த்து சிரித்தார்கள். ஓவரா புக் படிச்சா இந்த நிலைமைதான்னு கேலி பேசிட்டு போய்ட்டாங்க.

    எந்த ஒரு மாற்றத்தையும் அவ்ளோ சீக்கிரம் ஏத்துக்கா மாட்டங்க ரதி. எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் இல்லையா ...முடிந்த வரை நாம் தொடங்கி வைப்போம்.

    Last edited by lashmi; 15th Jul 2016 at 11:24 AM.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  6. #36
    VaSun's Avatar
    VaSun is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Chennai
    Posts
    490
    Blog Entries
    9

    Re: Penmai's Special Contest

    Hi sis..
    Romba azhaga solli irukeenga... Neenga oru azhagana amma
    Enaku pirkaalathil magal pirandhal naan avala epdi lam valarkanum nu ninacheno avai anaithum (innum palavum) ungal postil!!!

    Indha madri parents illama dhan pala pengal insecured feel oda irukanga!

    kvsuresh, lashmi, sumitra and 2 others like this.
    ...புவியெங்கும் புன்னகை பூக்கட்டுமே!

  7. #37
    Gender
    Female
    Join Date
    Jul 2016
    Location
    bangalore
    Posts
    4

    Re: Penmai's Special Contest

    Quote Originally Posted by Penmai View Post
    தோழமைகளுக்கு வணக்கம்!

    ஒரு பெண்ணின் உடைமை என்ற தலைப்பில் இந்த மாதப் போட்டி அறிவிக்கப்படுகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கவனமாகக் கருத்தில் கொண்டு உங்களின் போட்டிக்கான பதிவை இடவும்.

    இன்றைய நாட்களில் நடைபெறும் சம்பவங்களால் பெண்களின் பாதுகாப்பு என்பது நிச்சயமற்ற ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே! இன்னும் சொல்லப்போனால் தன்னைச் சுற்றி இருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை அவள் கவனத்தில் வருவதே இல்லை எனலாம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

    அதனால் இவற்றைக் குறிக்கும் வகையில் ஒரு பெண்ணின் உடைமையாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது எது? ஏன்? மற்றும் அது குறித்த உங்களின் விளக்கங்களை அறிய ஆவலாக உள்ளோம்.

    உங்களைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் முக்கிய உடைமையாக நீங்கள் கருதுவது எதை?

    1. பாதுகாப்பு
    2. தைரியம்
    3. உறுதி
    4. பெற்றோர்கள் / துணவரின் ஆதரவு
    5. இவைத் தவிர வேறு ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும்


    நீங்கள் செய்யவேண்டியது யாதெனில், மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, எதனால் அது தேவைப்படுகிறது என்று விளக்கவும்.

    நீங்கள் ஐந்தாவதைத் தேர்ந்தெடுத்தால் அந்தத் தலைப்பையும், அதைப் பற்றியும் விளக்கவும்.

    விதிமுறைகள்:

    • ஒருவர் ஒருமுறை மட்டுமே போட்டியில் பங்கு பெறலாம்.
    • உங்களின் போட்டிக்கான பகிர்வு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கவேண்டும்.
    • போட்டிக்கான கடைசி நாள்: 31-ந்தேதி ஜூலை 1916 11:59 pm ist.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Special Contest-ruthra-thaandavam.jpg   Penmai's Special Contest-explanation.jpg  

  8. #38
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Penmai's Special Contest

    Hi Everyone Good Noon

    I started to wonder what has happened to the society with respect to the role of women. Sometimes I wonder what has happened to the role of human itself. That’s altogether another story. Be it a metro city like Chennai or a teeny-tiny village called Veppadappu in Madurai taluk, what is the role of women. I think the question is wrong. I should be asking what keeps them going? Women means man (or human) with a womb. Believe me that’s the best explanation I have ever got for the word. It has a lot of inner meaning to it like that of a women’s heart .

    Coming to the point, in a typical city, any women let me address her as M-She => Metro-She, M-she starts her day as early as possible with her gym or yoga, kitchen chores and all other family works. If she is lucky (as per this societies norms), she may get a helping hand from her hubby. At the office, M-she works to pay the loan of the house her family lives in. At the end of the day, starts to home and the same routine with family. If M-she is lucky she gets some me time or otherwise dozes off. The next day the same routine continues.

    Let us come to the village scenario and let me call her a village she or v-she. V-she starts her day with kitchen chores and the same type of family work in a different life style. If she is lucky, her hubby is not drunk right in the morning. She leaves for the fields in case it’s a harvest season or for the construction work in a near-by city. She returns by the evening and starts the dinner preparation. Me-time is an alien word to her.

    With all these tasks at hands and so many people at her heart, do you really think she gets the right recognition or appreciation in her family or at her work place. The honest answer is a big NO. At her work place, she is always underestimated or even ridiculed for being a part of the feminine gender. Whatever position she might be in, she is harassed accordingly. In the families, she is often treated as a commodity, a burden and a housekeeping staff.

    Inspite of all these, she finds a place in the society. She grows herself at the inside from her own experience. Believe me, the masculine gender can never understand her struggle. She fits herself in all roles. She is like the director of the movie who gives life to the actors and is always behind the screen.

    Do you think she yearns for the appreciation or the recognition? I don’t think so. But how she catches up with everything? How is it possible to be with so much patience? What is the reason behind her survival?

    Is it parents/partners support? Is it self-confidence? Is it courage? what is it? After a long debate , I finally decided it’s the determination with which she plays her part. Once you are determined to do something, u get the confidence. Once u gain the confidence, his twin brother courage automatically pitches in. Partners/Parents support is an add-on.

    Women is a beautiful yet realistic creature, with a fragile yet strong mind, soft yet a mighty heart, persistent yet a patient mentality and emotional yet a practical viewpoint. If you want a sharing shoulder she is there for you. If you want a caring lap, she is there for you. If you want a daring partner she is there for you. If you want a naughty friend, she is there for you. Tell her what you want … wait a minute you never wanna tell her, she looks into your eyes and she knows what you want. Sometimes you may not know what you want. She understands and plays the role accordingly.

    This article is dedicated to all the lone crusaders, probably single, probably married, probably divorced, probably a mother of two, probably pregnant, probably a grandmother of six. To all women out there Whatever the odds may be, never give up your determination.



    Last edited by dayamalar; 30th Jul 2016 at 12:45 PM.

  9. #39
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Penmai's Special Contest

    அனைவருக்கும் வணக்கம் ...

    போட்டியின் தலைப்பு ......
    ஒரு பெண்ணின் உடைமை
    உங்களைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் முக்கிய உடைமையாக நீங்கள் கருதுவது எதை?

    பாதுகாப்பு
    தைரியம்
    உறுதி
    பெற்றோர்கள் / துணவரின் ஆதரவு
    இவைத் தவிர வேறு ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும்


    பாதுகாப்பு
    தைரியம்
    உறுதி
    பெற்றோர்கள் / துணவரின் ஆதரவு

    இவை அனைத்தும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இக்கால கட்டத்தில் தேவையான ஒன்று ...

    எனவே என்னை பொறுத்த மட்டில் ஒரு பெண்ணிற்கு இவை அனைத்தும் மிகவும் முக்கியமான ஒன்றே .....

    இவை அனைத்தும் ஒரு ஒரு .. . சொல்லில் அடங்கும் . . ! என்று நான் கருதுகிறேன் . . .

    அச்சொல் .......

    "நம்பிக்கை"

    "தன்னம்பிக்கை"

    நம்பிக்கை இருந்தால் . . .
    பாதுகாப்பு தானாக வரும் . . !
    தன்நம்பிக்கை இருந்தால். . .
    தைரியம் தானாக வரும் . . !
    நம்பிக்கை இருந்தால் . .
    உறுதி தோன்றும் . . !
    தன்நம்பிக்கை இருந்தால். .
    துணைவரின் ஆதரவு பலமாய் தோன்றும் . . !

    தான் செய்யும் , செய்ய போகும் செயலின் மீது நம்பிக்கையும் . .
    அதை செயல் படுத்த விரும்புவருக்கு தன் மீது நம்பிக்கையும் இருந்தால் ஏற்படும் முடிவு மகிழ்ச்சிகரமானதாகவும் , திருப்திகரமானதாகவும் இருக்கும் . . !

    ஒரு பெண் மட்டுமல்ல எல்லா பெண்களும் தன்நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் . . . பிற்பாடு ஏற்படும் துன்பங்கள் எதிர்கொள்வது எளிது . . !

    ஒரு தவறு நடந்தால் .... அது தவறு என்று சுட்டி காட்ட மன தைரியமும் . . . அதை எதிர்த்து குரல் கொடுக்க நெஞ்சில் உறுதியும் வேண்டும் . . .
    இவற்றை தருவது தன்னம்பிக்கையே . . . !!!!

    ஒரு பெண் வேலைக்கு செல்ல துவங்குகையில் தனது கைப்பையில் அலங்கார பொருள்களையே , உணவு பொட்டலத்தையோ , பிற அத்தியாச பொருள்களையே எடுத்து செல்வதிற்கு பதிலாக தன்னம்பிக்கையை தூக்கி சென்றால் அவளது பாதுகாப்பு உறுதி செய்ய படும் .. .
    அவளது தைரியம் வளரும் . .
    அவளுள் உறுதி மின்னும் . . .
    அவள் துணைவருக்கும் , அவளுக்கும் நிம்மதி ஒளிரும் . . !!

    ஒரு பெண் தன்னம்பிக்கையோடு செயல் பட்டால் பிறரது மரியாதை தானாக ஒட்டி கொள்ளும் . . ..

    தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்த தைரியம் கொடுப்பது தன்னம்பிக்கையே . . .

    தனது மனதில் தோன்றுவது சரி என்று நினைத்தால்
    அதை சொல்வதில் தயக்கம் சிலருக்கு இருக்கலாம் .. . அதை சுத்தமாக துடைத்தெறிவது தன்னம்பிக்கையே . .. !

    ஒரு பெண்ணிற்கு "பலமும்" "பலவீனமும்" தன்னம்பிக்கையே...

    பலம் சரி . . .

    அது ஏன் பலவீனம் ? என்று சொல்கிறேன் என்றால் . . .
    அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும் ஆபத்தை தான் விளைவிக்கும் . . .

    தான் செய்ய போகும் செயல் ஒருவருக்கு நன்மை தரும் பட்சத்தில் அது நல்லது....

    அதை விடுத்து தொல்லை தருமேயாயின் . . .
    அது பலவீணமே . . . !


    பெரும்பாலும் பெண்கள் தனக்கு வரும் தொல்லைகளை வெளியே பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை . . .
    இது ஒரு வித பயம் . . .
    யார் யார் என்ன சொல்வார்களோ . . . ?
    எப்படி எடுத்து கொள்வார்களோ என்ற எண்ணம் . . ?!

    அதை தவிர்த்து அவள் வெளிப்படுத்த உறுதுணையாய் இருப்பது தன்னம்பிக்கையே . . . !!!

    பொறுத்து போவதில் தவறில்லை சில விஷயங்களில் . . .
    ஆனால் தான் மட்டுமே எப்போதும் பொறுத்துக் கொண்டே வாழ்வது தான் தவறு . . !


    தன்நம்பிக்கை இருந்தால் ஒருவரது முகம் மின்னும் ...
    மரியாதையை தூண்டும் . . .
    அறிவு களைகட்டும் . . .
    ராஜாக்களை தோன்றும் . . .
    மதிப்பு உயரும் . .
    பாதுகாப்பு கொடுக்கும் . .
    சீண்டி பார்க்க இடம் தராது . .
    துணிந்து செயல்பட தூண்டும் . . . !

    நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் நான் பிரித்து பார்க்க விரும்ப வில்லை .. .. அதனால் தான் தன்நம்பிக்கை என்ற வார்த்தையை சேர்த்தே பயன்படுத்துகிறேன் . .. . .


    ஒரு பெண் பேருந்தில் அல்லது கூட்டம் நெரிந்த இடத்தில பயணம் செய்கையில் , அருகில் இருபவரது தொடுகை நல்லதா கெட்டதா என அறிய அவள் உள்ளுணர்வே போதுமானது . . .

    அதை எதிர்த்து செயல் பட எத்தனை பெண்கள் நினைக்கிறார்கள் . . ?

    அதை தவிர்த்து அந்த இடத்தை விட்டு யாரும் அறியாமல் விலகவே பெரும்பாலும் விரும்புகிறார்கள் . . ..

    இதை தவிர்க்க உதவுவது தன்னம்பிக்கையே . . .. !!!!

    அந்த நபரை திரும்பி பார்த்து திட்ட முடியவில்லையென்றால் .. .
    அந்த நபரின் முகம் பார்த்து முறைத்து ,காரி துப்ப கூடவா துணிவில்லை . .

    எல்லாமே இருக்கிறது ... ஒரு பெண்ணிற்குள் . . .
    ஆனால் அதை "தயக்கம்" என்ற போர்வைக்குள் மூடி வைத்து வாழ்கிறோம் . ..
    எப்பொழுது நாம் நாமாக நமது விலங்கை அவிழ்க்க துணிகிறோமோ அன்று தான் ஒரு பெண்ணிற்கு முழு சுதந்திரம் . . . மகிழ்ச்சியான வாழ்வு . .. நிம்மதியான குடும்பம் . .

    எனவே பெண்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . ..

    நன்றி வணக்கம் . . .



  10. #40
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Contest

    @dayamalar simple yet powerful words. ஒரு பெண்ணின் வலியை சொல்லி அழாமல், அவளின் வலிமையை சொல்லி நெஞ்சை நிமிர வைக்கும் வரிகள்....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter