Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree189Likes

Penmai's New Year Special Contest


Discussions on "Penmai's New Year Special Contest" in "Special Contest" forum.


  1. #21
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Penmai's New Year Special Contest

    Putham puthu boomi,nitham oru vanam,thanga mazhai peiya vendum concept ah akka!!!
    Rock on Makkalay


    Sponsored Links
    sumitra and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #22
    VALLUVAN-BABU's Avatar
    VALLUVAN-BABU is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Nov 2013
    Location
    UNIVERSE
    Posts
    129

    Re: Penmai's New Year Special Contest

    Thanks sister @gkarti for tagging me for this wonderful contest.

    மனிதமே கேள்
    ...!!!
    எல்லா ஆண்டைப்போல் 2016 ம்இரண்டின்கலவைதான்...!
    இன்பம்-துன்பம்; நல்லது-கெட்டது;
    பாவம்-புண்ணியம்; நன்மை-தீமை;
    என இரண்டின் கலவைதான்
    ...!
    நாம்மறந்த’ ‘நல்லவற்றைஞாபகப்படுத்திக்கொண்டு
    நினைவில் உள்ளதீயவற்றைமறக்கமுயற்சிப்போம்...!!!


    சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய
    கர்நாடக புதல்வன் ஹனுமந்தராவை
    நம் பாரதத்தாய், தன்னைக் காத்ததற்குப் பரிகாரமாய்
    ஆறு நாட்கள் தன்மடியிலிட்டு,பத்திரப்படுத்தி...
    மறக்கமுடியுமா...???
    இயற்கை அன்னையின் அன்பை...!!!

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க
    தீவிரவாதத்திற்குமிதவாதமாய்
    எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில்
    ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்தி, தீவிரவாதிகளின்
    ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததை...!!!

    அழிக்க முடியாத தழும்புகளாய்
    சுவாதியின் நினைவுகள்...
    கடந்த ஜூன் மாத விடியலில்
    நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில்
    சுவாதி என்ற தேன்சிட்டை
    ஆயிரம் மாயிரம் கனவுகளுடன்
    பாடிப்பறந்த அந்தக்குயிலை
    கொடூரமாய்க் கொன்றான் ஒரு(வன்)தலைக்காதலால்...!
    காதலாஅது...? இல்லை... இல்லை...
    காதலில்கட்டாயம்இல்லை...
    கட்டாயப்படுத்தினால் அதுகாதல் இல்லை...
    விட்டுக் கொடுப்பதுதான் உண்மைக் காதல்...
    ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர்
    காதலுக்காக காதலன் / காதலிகளையே
    காலனிடம் விட்டுக்கொடுத்து விடுகின்றனர்
    என்று தணியும் இந்தக் காதல் வேகம்...???

    இரண்டு வீராங்கனைகள்
    சிந்துவும் சாக்க்ஷியும்
    ஆளுக்கொன்றாய் பதக்கங்களை
    வெள்ளியும், வெண்கலத்திலும்
    வென்று வாகைசூடிய
    ரியோ ஒலிம்பிக்
    ரீங்காரம் செய்து கொண்டே இருக்கிறது
    ஒவ்வொரு இந்தியனின் காதுகளிலும்...!!!

    கறுப்புக்குக் குழி தோண்டி
    வெண்மைக்கு உயிரூட்டி
    பாரதத்தை வள(பல)முள்ளதாக்க
    நன் முயற்சியை நடுவண்அரசு ஆக்க
    லஞ்சம், ஊழலற்ற சமூதாயத்தை நாடி
    திட்டம் ஒன்று வகுத்தார் மோடி!
    மார்கழிக்குப் பதில்
    ஐப்பசியிலேயே
    ஒவ்வொர் இந்தியனும் நவீன ‘போகி’ ப் பண்டிகை
    கொண்டாடியதை யாரேனும் மறுக்க முடியுமா?
    பழையன (500/1000) கழித்துப் புதியன புகுத்திப்
    பாரையே பாரதத்தைப் பார்கச் செய்ததை மறக்கமுடியுமா...???

    மழை மட்டுமா பொய்த்தது 2016 ல்...???
    இறையும் பொய்த்தது விட்டதுபோல்
    தமிழனின் அத்துணை வேண்டுதல்களையும் தாண்டி
    தமிழ்நாட்டுத் தாய்’, அள்ளிக்கொடுத்த அன்னை’,
    அண்ணமிட்ட அம்மா’வையேநாம்
    காலனுக்கு வாரிக்கொடுத்த ’சோகம்' மறையுமுன்னே...
    சோவையும்சேர்த்துக்கொடுத்து...
    ஐயகோ...!!!
    தமிழ(அ)கமும்/புறமும் (மற்ற நட்பு மாநிலங்களும்) தவிக்கிறதே...!!!

    எங்கே போயிற்று வான் புகழ் வள்ளுவனின் ‘வான் சிறப்பு’
    ஆம்...நாம் ‘வான் சிறப்பை’ மறந்து இயற்கையை அழித்தோம்
    மழையை மறந்தோம்... விவசாயிகளின் கண்ணீரில்தான் வேளாண்மை நடக்கும் இனி...
    ‘மழை பெற்று மனிதம் காப்பது’ கற்பனையில் தான் போலும்....
    இயற்கைக்கும் பழிவாங்க பயிற்றுவித்து விட்டோம்...
    அதுவும் நம்மை அழிக்கிறது ‘வர்தா’ புயலாக மாறி...!!!

    மாற்றம், மாற்றம்என்றுமனிதன்’மட்டும் தான்மாறிவிட்டான்,
    மாறிக்கொண்டும் இருக்கிறான்... ஆம்...
    இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறான்
    மனி(Money)’யை நோக்கி ‘தன்’னை மறந்து
    நாளொருவன்னமும் பொழுதொரு மேனியும்
    குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள், குடும்பங்களுகிடையே பூசல்கள்;
    தெருக்களுக்குள் சண்டைகள்; ஊருக்குஊர் தகராறுகள்;
    மாவட்டங்களுக்கிடையே சச்சரவுகள், மாநிலங்களுகிடையே பிரிவினைகள்;
    நாடுகளுக்கிடையே தாக்குதல்கள் எனபார்முழுதும்போர்முனைகள்
    அதில்மடியும்மனிதமும், மனிதனும்
    அதனால் இரத்தக்கறை படிந்தமண்கள்...!!!

    இதை மாற்றியமைக்க இனியொரு வழிசெய்வோம்...!!!

    ஆண்டுகளின் எண்களில்தான் மாற்றம்... ஆனால்
    அதே ஏழு நாட்கள்தான் - எந்த ஆண்டிலும்
    மறுபடியும்... மறுபடியும்... ஞாயிறு, திங்கள்... சனிஎன்று
    இன்னும்சொன்னால்அதே 24 மணித்துளிகள்தான்...
    திரும்பத்... திரும்ப...
    இன்னும் சொன்னால்... அதேபுவிதான்...
    அதே சுற்றல்தான்... 23 சாய்ந்த கோணத்தில்...
    நாள் என்ன?வாரமென்ன?மாதமென்ன?
    அயனமென்ன?* வருடமென்ன?
    எந்நாளும் நன்னாள்தான், எல்லாமே ஒரேகாலம்(Time)’தான்
    அது மாறவே இல்லை, மாறுவதும் இல்லை...!
    மாற்றம், மாற்றம் என்று மனிதன் மட்டும் தான் மாறிவிட்டான்,
    இன்னும் மாறிக்கொண்டும் இருக்கிறான்... ஆம்...
    மாற்றம் ஒன்றுதான் மாறாதது...!
    நாம் திரும்பவும் மாறவேண்டும்... பழைய உன்னத நிலைக்கு...!!!

    நாம் 2017 முதல் இனிவரும் எல்லா ஆண்டுகளிலும்
    இல்லை... இல்லை... எல்லா நாட்களிலும்
    ‘மனிதம்’ என்ற நிலத்தில்
    ‘கருணை’ என்ற வித்திட்டு
    ‘நேசம்’ என்னும் வரப்புயர்த்தி
    ‘பாசம்’ என்னும் நீரைப்பெருக்கி
    அன்புஎன்னும் உரமிட்டு
    மனிதன்என்னும் உயிரியைவளர்த்து
    அழிந்து வரும் உயிரிகளில்
    ஆறறிவுள்ள உயர்திணை இனத்தையும்
    சேர்த்துவிடாமல் இருக்க
    விழையும் உங்களில் ஒருவன்...

    இவண்...
    வள்ளுவன் பாபு

    * தட்சிணாயணம்ஆடி முதல் மார்கழி மாதம் வரை
    உத்தராயணம் - தை முதல் ஆனி வரை


    Last edited by VALLUVAN-BABU; 4th Jan 2017 at 01:24 PM.

  3. #23
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai's New Year Special Contest



    Attached Thumbnails Attached Thumbnails Penmai's New Year Special Contest-poem.png  

  4. #24
    Shakthidevi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    USA
    Posts
    1

    Re: Penmai's New Year Special Contest

    பெண்மை இணையதளத்தில் எனது முதல் பதிவு !

    குருவி கொத்திச் சேர்க்கும் நெல்மணி போல்
    மனதில் நாளும் குன்றிமணியாய் வளர்ந்து
    மனதின் அடியாழம் வரை
    வேரோடி நிற்கும் ஆசைக் கனவுகள் !

    கனவுகள் நனவாக ஆர்வமதை வித்தாக்கி
    முயற்சி தனை நீராக்கி பயிற்சி தனை உரமாக்கி
    எதிர்வரும் தடைகளெலாம் வளர்ச்சிப் படிகளாக்கி
    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் - வளரும் ஆசை விருட்சம் !

    உள்ளத்து எண்ணமெலாம் உயர்வாய் அமைய
    எண்ணமதன் பிரதிபலிப்பு செயலில் தெரிய
    முயற்சி அளித்த பலனாய் - வெற்றிக் கதவுகள்
    திறந்து வழிவிட - காத்துக் கிடக்கும் !

    நல்லன எண்ணும் இதயங்கட்கெலாம்
    பிறக்கும் நாள் ஒவ்வொன்றும்
    புது நாளே ! மாறி வரும் வருடமெலாம்
    வசந்தங்களின் வழித்தடங்களே !

    jv_66, gowrymohan, chan and 5 others like this.

  5. #25
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Penmai's New Year Special Contest

    புத்தாண்டு சிறப்பு போட்டிக்கான எனது கட்டுரை. படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளவும் நட்புகளே.

    ஒரு புதிய விடியல் 2017
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    இது கதை அல்ல... புதுக்கவிதை அல்ல... சில கருத்துக்களின் சங்கமம்.
    2016 விட்டுச்சென்ற நினைவுச் சின்னங்கள், வடுக்கள், ஆறாத ரணங்கள், ஏமாற்றங்கள்...
    ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகள், கனவுகள், புதிய முயற்ச்சிக்கான அஸ்திவாரங்கள்.
    பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி பண்டிகை அன்று மட்டும்தானா...
    ஒவ்வொரு புதிய வருடமும் இதைத்தானே பறைச்சாற்றிக்கொண்டு பிறக்கின்றது.
    போனது நல்லதாயிற்று இனி வருவது நல்லதாக இருக்கட்டும் என்றுதானே ஒவ்வொரு மனித இதயமும் புத்தாண்டில் இறைவனை வேண்டுகின்றது.
    ஆக முந்தைய வருடம் நமக்கு சொல்லிச் சென்றது என்ன, விட்டுச் சென்றது என்ன, கற்றுத் தந்தது என்ன...
    அதன் முந்தைய ஆண்டு, சென்னையை மூழ்கடித்த பேய் மழை, மனித நேயத்தை முன்கொண்டு வந்து நிறுத்தியது. சென்னை என்றால் அதன் மனிதர்கள் என்றால் என்னவென உலகத்திற்கே எடுத்துக் காட்டிச் சென்றது.
    புதிய ஒரு சமுதாயம் உருவானதை நாம் பார்த்தோம். ஆம், புதியதொரு இளைய சமுதாயம்... யாருக்கும் எதற்கும் எதிர்பார்க்காமல், எந்த இயற்கையின் சீற்றத்திற்கும் பயந்து ஒளிந்திடாது, துணிவுடன், ஒரு அரை பாண்டும் டி ஷர்டுமாக இடுப்பளவு நீரில் மிதந்து நீந்து உயிர்களையும் பொருட்களையும் காப்பாற்றியது இன்றைக்கும் பலரது நினைவில் பசுமையாக உள்ளது. பலர் நன்றியுணர்ச்சியினை வெளிக்காட்ட கூட தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கின்றனர்.
    அதே மனித நேயம் தொடர்ந்தது.... கடந்த வருடமும் பல நேரங்களில் பல இடங்களில் உதவிகள், கைகொடுத்தல் தொடர்ந்தன.... ஆபத்தில்தான் உதவும் கரங்கள் என்பதில்லாமல் ஆனந்தத்திலும் கைகோர்த்துக்கொண்டு வேலை செய்தன நமது சென்னை இள உள்ளங்கள். அவர்களுக்கு ஒரு சபாஷ் இங்கே அவசியம்.
    அங்கே இது நடந்தது இங்கே இது நடந்தது என நான் மேற்கோள் காட்டப் போவதில்லை. அனைத்தையும் நாம் தினமும் இணைய தளங்களிலும் பத்திரிகை தொலைக்காட்சி வானொலி வாட்சப் முகநூல் மூலம் அறிந்தே வைத்திருக்கிறோம். இதற்கு அறிமுகங்கள் தேவையில்லை.
    ஆனால் சிலவற்றை தீண்டியே ஆக வேண்டும்.
    நல்லதும் கெட்டதும் இரண்டும் கலந்த மேற்கோள்கள்.
    மிகப்பெரிய கொடுமை, சென்னையின் தமிழகத்தின் அன்பான தாயின் மறைவு. தமிழகம் துக்கத்தில் இன்னமும் தத்தளித்து திண்டாடி மூச்சு தினறிக்கொண்டு உள்ளது.
    அம்மா போய்டா அது நடக்கும் இது நடக்கும்.... பஸ்ஸ எரிப்பாங்க, கடைங்கள உடைப்பாங்க சாமானத் திருடுவாங்க கலவரம் உண்டாகும்.... கல்லெறிதலும் பாட்டில் உடைத்தலும் நடக்கும்.
    சாமானியர் வட்டாரத்திலும் சரி, அரசியல் பாதுகாப்பு வட்டாரத்திலும் சரி, மிகவும் பயப்பட்ட ஒரு விஷயம். அதற்காக, தற்காப்பிற்கென லக்ஷம் ஒன்றல்ல இரண்டல்ல லக்ஷம் போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
    அதில் ஒவ்வொரு நபருக்கும் தனி பாராட்டுதல்கள். அன்ன ஆகாரம் தாகம் உறக்கம் மறந்து அந்த மூன்று நான்கு நாட்கள் அவர்கள் நம்மை பாதுகாத்தனர்.
    அதனால்தான் கலவரம் வெடிக்கவில்லையா?? அல்லவே, நாம் மேம்பட்டுள்ளோம் நட்புகளே. மிகவும் உயர்ந்துவிட்டோம்.
    மாக்களாக இருந்த நாம் மக்களாகிவிட்டோம்.
    ஒவ்வொரு தமிழக குடும்பமும் தன் அன்னையின் மறைவை எப்படி பூரண துக்கத்துடன் அனுஷ்டிப்பரோ அதைப்போல, அம்மாவின் துக்கம், கண்ணீரில் கரைந்து நெஞ்சு உருகி செய்வதறியாது மௌனத்தில் கரைந்தது.
    ஒரு கல் ஒரு கண்ணாடி சினிமா பெயர் அல்ல நட்புகளே, ஒரு கல் வீசப்படவில்லை... ஒரு கண்ணாடி உடையவில்லை.
    கலவரம் தமிழகத்தை தீண்டவும் இல்லை. லக்ஷம் போலீசாரை பாராட்டும் அதே நேரத்தில் நமது தமிழக மக்கள் உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்து துக்கத்தை துக்கமாக இழப்பாக மட்டுமே பாராட்டி மௌன அஞ்சலி செலுத்தினர்.
    அதுதான் தமிழன்.
    பின்னோடு, அந்தத் தாயின் மரணத்தை பூமித்தாயாலேயே தாங்க முடியாமல் போனதோ என்னமோ, பொறுத்தது போதும் பொங்கி ஏழு என எழுந்தே விட்டாள். சூறாவளியாக அடித்து ஓய்ந்தது. காற்றில் பறந்து சீரழிந்து சாய்ந்தது சென்னை.
    இப்போதும் அதே இளைய சமுதாயம், சென்ற வருடம் முடுக்கிவிட்ட பாதையில், மீண்டும் பயணித்தது. சாய்ந்த மரங்களை நிறுத்தியது. விழுந்த மரங்களை வெட்டி பாதை வகுத்தது.
    முக்கியமாக, மின்சார வாரியமும் கைபேசி, இணைவலை இணைப்புகள் இவற்றில் பணிபுரிவோரும், காற்றையும் மழையையும் மீறி உணவு உறக்கம் மறந்து, இணைப்புகளை சரி செய்வதில் முனைந்தனர். இரவும் பகலும் பணியில் ஈடுபட்டனர்.
    நாம் அரை இருட்டில் நீரின்றி உணவின்றி கொசுக்கடியில் சிறு பிள்ளைகளுடனும் முதியோருடனும் அவதி படாமல் காப்பாற்றியது.
    மனித நேயம் மீண்டும் உயர்ந்து நின்றது.
    வரதா புயல் வீசி சென்னையில் அழிவும் நாசமும் நடந்தது உண்மை. ஆனால் மனித நேயத்தை வரமாக தந்து சென்றதும் உண்மை.
    ஆனால்...
    வீழ்ந்து கிடக்கும் மரங்களை காணும்போது கண்ணீர் பொங்குகின்றது. எத்தனை வருடத்திய வளர்ச்சி... எத்தனை எத்தனை பசுமை புரட்சி, அனைத்தும் ஒரே புயலில் தரை மட்டம் ஆகியது.
    காரணம்??
    அதுவும் நாமேதான். மனித நேயம் கற்றோம், இயற்கையை (taken for granted) இலகுவாக எண்ணிக்கொண்டோம்.
    மரம் வெச்சவன் தண்ணி விடுவான் இது பொது சொல். பழமொழியும் கூட..
    அந்த மரத்தை வெச்சவன் நாமல்லவா.... நீ நான் அவன் இவன் என்பதல்ல, ஒரு மனிதம். அதை நட்டு வளர்த்து பெரிய பெரிய விருகஷங்களாக்கியது மனிதம். அந்த மனிதம் இப்போது அதை பேண மறந்தது ஏன்.
    கடவுளா மரம் வெச்சான்? மழையா வந்து தினமும் பெய்து அதனை காக்க??
    நட்டது மனிதன். ஆனால் வாரத்தில் ஒரு நாளேனும் வறண்ட அந்த மண்ணினை சாந்தப்படுத்தி, வற்றிய வேர்களை ஈரப்படுத்தி உயிர்காக்க ஒரு வாளி தண்ணீர் இரைத்தது உண்டா.
    அதெல்லாம் கவர்னமெண்டு வேல.... நாமாளா வாளி வாளியா ஒவ்வொரு மரத்துக்கும் தண்ணி ஊத்த முடியும்?
    சரி. மொத்த சென்னைக்கும் வாளியில் சேந்தி நீர் மொண்டு விட முடியாதுதான்.... நம் வாயிற்படியில் நம் சுற்றுச்சுவற்றை ஒட்டி, நம் பிள்ளைகள் விளையாட நிழல் தந்து... நமது உயிரற்ற நாலு இரண்டு சக்கர வாகனங்களுக்கும் கூட நிற்க நிழல் தந்து... வயதானவர்களுக்கு குடையாக, பச்சை பசேலென்று நின்றதே... அதற்குக் கூடவா கொஞ்சம் நீர் இரைக்க நம்மால் முடியாமல் போனது.
    பூமி மாதா எத்தனை பிள்ளைகளுக்குதான் எத்தனை காலம்தான் தாய்பால் கொடுப்பாள்.... அவளும் தாய்தானே, நெஞ்சு வற்றிடாதா... அவளுக்குண்டான போஷாக்கை நாம் என்றேனும் தந்தோமா.... அவள் ஈரத்துடன் விளங்கினால்தானே மேலும் இறைப்பாள். அந்தத் தாயின் மடி காய்ந்தது மரம் வேரோடு சாய்ந்தது.
    தனக்கு அன்ன ஆகாரம் இன்றி அதனால் பெற்ற சிசுவுக்கு பாள் சுரக்க முடியாமல் தானும் பட்டினியாகி பிள்ளையையும் பலி கொடுத்து நின்ற தாய் என பல போதும் செய்திகளில் காண்கிறோம்.
    இப்போது நடந்தது என்ன. பூமித்தாய் வறண்டு வற்றி காய்ந்து தன் பிள்ளைகளான மரங்கள் வேரோடு மாய்ந்து கிடப்பதை கண்டு மனம் குமுறி நிற்கிறாள்.
    இனியேனும் விழிப்புணர்வு ஏற்படட்டும். ஒவ்வொருவரும் மரம் வளர்ப்போம். ஆம், இனி நாம் புதிதாக நட்டு வளர்த்தால்தான் உண்டு. ஆனாலும் வரதாவை தாண்டி மீண்டு நிற்கும் பூங்காவனங்கள், தோட்டங்கள், பாதை ஓர மரங்கள் இவற்றையேனும் பாதுகாப்போம். ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு வாளி தண்ணீர், ஏதேனும் பொது மரம் ஒன்றிற்கானும் ஒவ்வொரு மனிதனும் ஊற்றினாலே போதுமே. கோடி உயிர்களால் லக்ஷம் மரங்களை வளர்க்க முடியாதா.
    முடியும்.... சென்னனையும் தமிழகமும் எதையும் தாங்கிடும் இதயம் படைத்தது.
    காற்றாற்று வெள்ளம், தாயின் மறைவு, சீறி வரும் வரதா புயல் என அனைத்தையும் தாண்டி இதோ ஒரு புதிய விடியல்.
    நாளை என்பது என்றும் நன்மையுடனேயே பிறக்கும் என்பதை உண்மையாக பிறந்தது புதிய வருடம்.
    மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா. நாமும் மாறலாமே.
    மாறலாம் எனக் கூறியதும் மற்றொன்று நினைவுக்கு வருகின்றது. மாற்றங்கள் மாறாதது மட்டுமல்ல, எளிமையானதாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
    எந்த ஒரு சிறிய பெரிய மாற்றமும் நமக்குள் ஏற்படுத்துவது பெரிய மாற்றத்தைத்தான்.
    ரூபாய் நோட்டுகள் மாறியுள்ளன... வங்கியில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் முடை.... நாள்தோறும் வரிசையில் நின்றே வயசாகிறது.
    ஆம், கடினமான மாற்றம் தான்... ஆனால் நம்மை பிறகாலத்தில் சுகப்பட வைக்கும் மாற்றம். கொஞ்சம் மாறுவோமே, எதை எதையோ யாருக்காகவோ மாற்றிக்கொள்கிறோமே, நமக்காகவும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாமே.
    நாளைய நமது சிறந்த சமுதாயத்திற்காக கொஞ்சம் மாறுவோமே... பல நல்ல மாற்றங்கள் ஏற்பட காத்திருப்போமே.
    புதிய வருடம் பிறந்துள்ள நிலையில் பல நன்மைகள் நமக்காக காத்திருக்கின்றன என நம்புவோமே. நம்பிக்கைதானே வாழ்க்கை.
    புதிய பூவிது பூத்துள்ளது. பேணி வளர்த்திடுவோம். பூத்து குலுங்கட்டும் புதிய ஆண்டு. மலரட்டும் வாழ்வு.
    Quote Originally Posted by Penmai View Post
    Hi Friends,

    End of the Year 2016 & the New Year is fast approaching. With the festive mood of the season, its time to recall some memories. So let's Pop-up Our Forum once again with another contest!

    You have to write a poem in the theme of 'Adieu 2016 - Welcome 2017.' It can be written as one single poem, as per your wish. You can include various aspects/Moments/feelings(What you learnt(2016) - your expectation(2017)) associated with the theme Send-off/Goodbye-ing & Welcoming.

    Instructions:
    1. Entries should be either in Tamil or in English only.
    2. You can Write the poem in any manner but it should be precise.
    3. One member should submit only one entry.
    4. Last Date to Submit 11:59 PM IST, 10th Jan 2017.

    Go ahead! Happy New Year in Advance.


    jv_66, gowrymohan, chan and 5 others like this.

  6. #26
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    Re: Penmai's New Year Special Contest

    Quote Originally Posted by Aruna.K View Post
    என் அழகு மகளுக்கு....


    கவிதை சொல்ல சொற்களைக் கோர்க்கிறே
    பதிலாக உன் மழலை வார்த்தைகள்
    தான் நினைவில் எழுகின்றன....

    உன் அம்மா கவிதாயினி அல்லவே..என்ன செய்ய?

    என் எழுத்துக்களின் ஜீவாதாரம் நீ
    என்று மற்றவருக்கு எதற்கு புரிய வேண்டும்...
    இது உனக்கும் எனக்கும் மட்டும் நடுவில்
    இருக்கும் நமது ரகசியம் அல்லவா?

    என் எழுத்துக்கள் எல்லாமே உன்
    நினைவுகளை சுமந்து கொண்டு தான் வருகின்றன, தெரியுமா?
    இந்த ஒரு வருடத்தை,
    உன் நினைவுகள் மட்டுமே நிறைந்திருக்கும்
    என் வாழ்க்கையை வார்த்தைகளால் வடிக்க முயல்கிறேன்...

    என்னை விடுத்து என்ன வேலை செய்கிறாய்?
    என்று அங்கும் வந்து நிற்கிறாய்
    உன் கருவிழிகளில் குறும்பு கொஞ்ச...

    புத்தாண்டைப் பற்றிய கவிதையில் கூட
    நான் உன்னுடன் கடந்து வந்த ஓராண்டைப்
    பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்...

    புது ஆண்டு எப்படிக் கழியும் என்ற ஆர்வத்தை விட,
    உன்னுடன் கழிப்பேன் என்ற நினைவு சுகமளிக்கிறது..

    புத்தாண்டு எனக்கு என்ன கொண்டு வருமோ
    என்ற அச்சமோ வருத்தமோ ஏற்படவில்லை
    ஏனென்றால் முடிவில் ஒரு ஆரம்பமாக நீ நிற்கின்றாயே!!

    நான் எழுதிய அழகிய கவிதை நீ தான்...என் முதல் கவிதை...


    Disclaimer:
    எனக்கு கவிதை எழுத வராது. இருந்தாலும் மனதில் தோன்றியதை வாக்கியங்களாக எழுதி, நடுவில் சில ! , ... என வைத்து கொஞ்சம் போல சமாளித்துள்ளேன்...
    இது கவிதை அல்ல...கவிதை எழுதும் ஒரு முயற்சி மட்டுமே...
    Romba azhagana lines superb feelings.kavithai ezhutha theriyamaye asathala irukku @Aruna.K

    sumitra and Aruna.K like this.

  7. #27
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    Re: Penmai's New Year Special Contest

    Quote Originally Posted by shanthiudayappan View Post
    Arpudhamana varigal ovvonnum muthirai padhikkum vidhamai irukku.kalakittinga @shanthiudayappan.

    sumitra and shanthiudayappan like this.

  8. #28
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    Re: Penmai's New Year Special Contest

    Quote Originally Posted by Shakthidevi View Post
    பெண்மை இணையதளத்தில் எனது முதல் பதிவு !

    குருவி கொத்திச் சேர்க்கும் நெல்மணி போல்
    மனதில் நாளும் குன்றிமணியாய் வளர்ந்து
    மனதின் அடியாழம் வரை
    வேரோடி நிற்கும் ஆசைக் கனவுகள் !

    கனவுகள் நனவாக ஆர்வமதை வித்தாக்கி
    முயற்சி தனை நீராக்கி பயிற்சி தனை உரமாக்கி
    எதிர்வரும் தடைகளெலாம் வளர்ச்சிப் படிகளாக்கி
    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் - வளரும் ஆசை விருட்சம் !

    உள்ளத்து எண்ணமெலாம் உயர்வாய் அமைய
    எண்ணமதன் பிரதிபலிப்பு செயலில் தெரிய
    முயற்சி அளித்த பலனாய் - வெற்றிக் கதவுகள்
    திறந்து வழிவிட - காத்துக் கிடக்கும் !

    நல்லன எண்ணும் இதயங்கட்கெலாம்
    பிறக்கும் நாள் ஒவ்வொன்றும்
    புது நாளே ! மாறி வரும் வருடமெலாம்
    வசந்தங்களின் வழித்தடங்களே !
    Hi supera irukku Kavithai nice energetic lines:-) @Shakthidevi

    sumitra likes this.

  9. #29
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai's New Year Special Contest

    Thanks a lot.

    Quote Originally Posted by Ammu abi View Post
    Arpudhamana varigal ovvonnum muthirai padhikkum vidhamai irukku.kalakittinga @shanthiudayappan.



  10. #30
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Penmai's New Year Special Contest

    துன்பங்களையும் தோல்விகளையும்
    தந்தாலும்
    இன்பங்களையும் வெற்றிகளையும்
    தர மறக்காத
    ஆண்டே!
    புதிய புதிய வடிவங்களில்
    கொடுமைகளையும்
    சீற்றம் கொண்ட
    இயற்கையையும்
    காட்டிச் செல்லும்
    ஆண்டே!
    வாழ்த்திச் செல்
    புத்தாண்டை...!!!
    மக்கள் மனதினிலே
    பொன்னாசை பெண்ணாசை
    மண்ணாசை பதவியாசை
    வேரோடு அழிந்திட
    அன்பும் நல்லெண்ணங்களும்
    ஊற்றெடுத்து ஓடிட
    வழிசமைத்திடு
    என
    வாழ்த்திச் செல்!!!

    jv_66, sumitra, gkarti and 1 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter