Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree267Likes

Penmai's Women's Day Poem Contest!


Discussions on "Penmai's Women's Day Poem Contest!" in "Special Contest" forum.


  1. #11
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்மைக்குள் தாய்மை வைத்து
    தாய்மையில் உயிர்ப்பை வைத்து
    அழகாய் மலர்கிறது உலகம்...

    அன்பின் ஊற்றாய்
    இரக்கத்தின் வடிவமாய்
    பொறுமையின் சிகரமாய்
    மென்மையின் பிறப்பிடமாய்
    உருவானவள் பெண்...
    அன்று
    இல்லத்தரசியாய் வீற்றிருந்து
    கணவனின் வருமானத்துள்
    இனிதே
    இல்லறம் நடத்தியவள்
    இன்று
    ஆணுக்கு நிகராய்
    அவனிலும் மேலாய்
    உயரப் பறக்கிறாள்
    சாதனைகள் புரிகிறாள்...
    இவை மட்டுமா...
    மரித்து உயிர்க்கிறாள்
    புது உயிரை தந்து...
    பாதுகாத்து வளர்க்கிறாள்
    கண்ணுக்குள் வைத்து...
    சீண்டினால்
    புயலாய் வீசவும்
    எரிமலையாய் வெடிக்கவும்
    சுனாமியாய் பாயவும்
    அவளால் முடியும்...
    பரிமாணங்கள் பல எடுப்பவள்
    பிரபஞ்சத்தையும் பார்த்தவள்
    இல்லத்தின் குலவிளக்காய் திகழ்பவள்
    குடும்பத்தின் அச்சாணியாய் வாழ்பவள்
    உயிர்ப்புடன் உலகம் இயங்க
    உயிர்களை தருபவள்
    பெண்...
    பெண்ணாய் பிறந்ததில்
    பெருமை கொண்டு
    பெண்மையை வாழ்த்தி
    வணங்குகிறேன்...

    (பெண்ணின் முயற்சிகளை தடை செய்யாதீர்!
    பெண்ணை அடிமையாக நடத்தாதீர்!
    பெண்ணை போதைப்பொருளாய் பார்க்காதீர்!
    பெண்ணை பெண்ணாய் வாழ விடுங்கள்!!!)


    Sponsored Links
    Last edited by gowrymohan; 23rd Mar 2017 at 01:18 AM.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #12
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai's Women's Day Poem Contest!

    இடையே 4 வரிகள் தவறுதலாக விடுபட்டுவிட்டன (தூக்கக் கலக்கத்தில்...)
    சரிசெய்து மீண்டும் கீழே பதிந்துள்ளேன். ஏற்க முடியுமாயின் முன் பதிந்ததை அழித்துவிடவும்.


    பெண்மைக்குள் தாய்மை வைத்து
    தாய்மையில் உயிர்ப்பை வைத்து
    அழகாய் மலர்கிறது உலகம்...

    அன்பின் ஊற்றாய்
    இரக்கத்தின் வடிவமாய்
    பொறுமையின் சிகரமாய்
    மென்மையின் பிறப்பிடமாய்
    உருவானவள் பெண்...
    அன்று
    இல்லத்தரசியாய் வீற்றிருந்து
    கணவனின் வருமானத்துள்
    இனிதே
    இல்லறம் நடத்தியவள்
    இன்று
    ஆணுக்கு நிகராய்
    அவனிலும் மேலாய்
    உயரப் பறக்கிறாள்
    சாதனைகள் புரிகிறாள்...
    இவை மட்டுமா...
    மரித்து உயிர்க்கிறாள்
    புது உயிரை தந்து...
    பாதுகாத்து வளர்க்கிறாள்
    கண்ணுக்குள் வைத்து...
    சீண்டினால்
    புயலாய் வீசவும்
    எரிமலையாய் வெடிக்கவும்
    சுனாமியாய் பாயவும்
    அவளால் முடியும்...
    தாய்மையை உள்ளே வைத்து
    தாயாய் தாரமாய்
    சகோதரியாய் மகளாய்
    தோழியாய்
    பரிமாணங்கள் பல எடுப்பவள்
    பிரபஞ்சத்தையும் பார்த்தவள்
    இல்லத்தின் குலவிளக்காய் திகழ்பவள்
    குடும்பத்தின் அச்சாணியாய் வாழ்பவள்
    உயிர்ப்புடன் உலகம் இயங்க
    உயிர்களை தருபவள்
    பெண்...
    பெண்ணாய் பிறந்ததில்
    பெருமை கொண்டு
    பெண்மையை வாழ்த்தி
    வணங்குகிறேன்...

    (பெண்ணின் முயற்சிகளை தடை செய்யாதீர்!
    பெண்ணை அடிமையாக நடத்தாதீர்!
    பெண்ணை போதைப்பொருளாய் பார்க்காதீர்!
    பெண்ணை பெண்ணாய் வாழ விடுங்கள்!!!)


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #13
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்மை
    ---------
    மெல்லிய உடலில் மலையென மன உரமுண்டு
    நுண்ணிய உணர்வுகள் நூராயிரம் கொண்டு
    எண்ணியவை முடிக்கும் திறமும் தெரிந்து
    அன்புடை நெஞ்சம் ஆழமாய் அமைந்து
    வன்மிகு வலியுடன் உயிர் ஈனும் பேறு பெற்று
    உலகம் தழைக்க உயரிய நோக்குடன்
    உருவம் பெற்ற பெண்மையே!


    உடலாய் மட்டும் உனை பார்க்கா
    கயமை கலவா ஆண்மையையும்
    உலகை உயர்த்தும் அன்பெனும்
    மனிதம் பேணும் பெண்மையையும்
    உருவாக்கும் கடமையும் உனக்கே..
    அன்னையாய்!


    கற்றவர் காட்டிய கண்ணிய வழியில்
    மற்றவர் போற்றும் மாண்புடன் நடந்து
    பெற்றவர் பாரம் பகிர்ந்திடும் பண்புடன்
    உற்றவர் தளர்கையில் தாங்கிடும் தன்மையும் உனக்கே
    மகளாய்!


    மாயையில் சிக்கி, மனம் சிதறாமல்
    யதார்த்தத்தில் நிலைத்து, எதையும் எதிர்கொண்டு
    அஞ்சாமையும், அறிவுடைமையும், ஆடையாக்கி
    மங்கையவள் மதிப்புயர்த்தும் பொறுப்பும் உனக்கே
    சகோதரியாய்!


    கொண்ட உறவில் அன்புறுதி கொண்டு
    குற்றம் களைந்து சுற்றம் பார்த்து
    தன்முனைப்பு நீக்கி, தகராத குடும்பத்தை
    திறம்பட வழிநடத்திடும் வாய்ப்பும் உனக்கே
    மனைவியாய்!


    ஏடும், எழுத்தும் ஏற்றமுடன் கற்று
    வீடு தாண்டி விண்வெளிக்கும் சென்று
    நாடு தாங்கும் நங்கை நல்லாளாக
    நலப்பணிகள் நல்கும் உரிமையும் உனக்கே
    பெண்ணாய்!


    திண்ணிய நெஞ்சுடன்
    கண்ணியம் குறையாமல்
    தடைகளைத் தகர்த்திடு
    விதிகளை வளைத்திடு
    மாற்றம் துவங்கட்டும் மனையில்
    ஏற்றம் பிறக்கட்டும் உலகில்
    வீழ்ந்திடாமல் முயன்று
    வெற்றி வானை வசப்படுத்து பெண்மையே!


    - சுஜனா


  4. #14
    savi3 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2017
    Location
    World
    Posts
    26

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்மை


    பெண்மை இவள் மலர் – வாடிவிடுவாள்
    என நினைத்தாயோ
    மீண்டும் புது பூவாய் பூத்திடுவேன்.

    பெண்மை இவள் மதி – தேய்ந்துவிடுவாள்
    என நினைத்தாயோ
    மீண்டும் உதிப்பேன் முழுமதியாய்.

    பெண்மை இவள் தேன் – களவாடப்படுவாள்
    என நினைத்தாயோ
    ராணிதேனியாய் மீண்டும் சேகரிப்பேன்.

    பெண்மை இவள் பறவை – வேட்டையாடப்படுவாள்
    என நினைத்தாயோ
    மீண்டும் எழுவேன் பீனிக்ஸ் பறவையாய்.

    பெண்மை இவள் பனிதுளி – உறைந்திடுவாள்
    என நினைத்தாயோ
    மீண்டும் வருவேன் மழையாய்

    பெண்மை இவள் கனி – அழுகிவிடுவாள்
    என நினைத்தாயோ
    மீண்டும் வருவேன் விதையாய்.

    பெண்மை இவள் பெண்தானே
    என நினைத்தாயோ
    எப்பொழுதும் இவ்வுலகில் பல ரூபத்தில்
    எங்கும் வியாபித்திருப்பேன்.


    Last edited by savi3; 30th Mar 2017 at 01:03 PM.

  5. #15
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்மை – இயற்கை எழுதிய
    ஈரடி குறள் கவிதையின் ஓரடி

    பெண்ணே

    அவனின்றி ஓரணுவும் அசையாதாம்
    அவளின்றி அசைகின்ற கோடி அணுக்களினால் மட்டுமே
    அவனியிலே ஆகின்ற நற்காரியம் ஒன்றுண்டோ ?
    என்று அறிவுடையோர்க்கு வினா தொடுக்கும்
    கடமையும் நினதன்றோ ?


    பூக்கோல அழகியலும் பூகோள அறிவியலும்
    சரிபங்காய் புதைந்திருக்கும் நின் சிரசதனின்
    நுண்கோள சமத்துவத்தின் நுண்ணியலை
    முழுவதுமாய் என்றுணர்வாய் ஏந்திழையே ?


    வெற்று மென்மையும் வீண் பொறுமையும் மட்டுமே
    உயர் மேன்மைகள் தாருமோ இத்தரணியிலே ?
    உன் உள்ள வலிமையும் வாய்மையும்
    வழங்கா வளமைகள் யாதுளதோ இப்புவிதனிலே ?


    தடைகள் கண்டு தவித்து உடைந்து கரைவதேனோ ?
    உனது கண்ணீர் கடலினிலே கரைத்திடவே
    துன்பம் என்ன கரைப்பொருளோ ?
    வலிகளினால் அழுத்தம் கொண்டு உந்தன்
    நரம்பு நாண்கள் மீட்டும் தன்னம்பிக்கை பண் பாவை நீ
    படைப்பின் உயரிய கலைப்பொருளன்றோ ?
    உருவம் கொண்ட அரிய உயிர் கலைப்பொருள் நீ
    வலிகளினால் கரைவதிலே பொருளுளதோ ?


    உன் காகித பட்டங்கள் பரணாளும் காலம் வரை
    ஓட்டை சட்டங்களே உனை ஒடுக்கியாளுமன்றோ ?
    நின் பட்ட அறிவோடு பட்டறிவும் கற்றுத்தேர்ந்தால்
    பாராளும் ஆளுமையும் கைசேருமன்றோ ?


    இனியவளே

    பிச்சை சலுகைகள் வெறுப்பாய்;
    பிறப்புரிமைகள் ஒருபோதும் விடுப்பாய்
    மாய புகழுரைகளுக்கு மயக்கம் கொள்ளாய்;
    மதி கூர்மை செய்யும் தொழிலினை நிதமும் செய்வாய்
    அர்த்தமற்ற கட்டுக்கள் அறுத்தெரித்து
    அர்த்தநாரி தத்துவத்தின் அறம் காக்க
    அடுக்கடுக்காய் தலைமுறைகள் வார்த்தெடுத்து
    அன்பு சூழ் அகிலம் சமைப்பாய்
    உறவுகளுக்கும் உலகிற்கும் மட்டுமே
    வாழும் நினது இப்பிறவியிலே ஓர் பகுதி
    உனக்காகவாவும் கூட கொஞ்சம் வாழ்ந்து பார்;
    ஈரேழு லோகங்கள் ஈடாகா ஓர் புத்துலகம்
    உனக்குள்ளும் பிறக்கும்


    ஏட்டின் வாசம் நுகராமல் வாழ்க்கையை எதிர்த்து போராடும் அனுபவத்தை நாளும் அனுபவித்து உயிர்ப்போடு வாழும் பெண்களுக்கும், சமூகத்தின் சாடல்களை புறம்தள்ளி பொருள் பொதிந்த பெண்ணியம் பேசி பெண்ணுரிமைக்கு போராடும்
    பெண்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்


    Last edited by Vimalthegreat; 31st Mar 2017 at 12:29 PM.
    shaalam, lashmi, sumitra and 7 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #16
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai's Women's Day Poem Contest!

    Dear Friends,

    Happy to see all unique write ups wherein you showcased your poetry skills. All are with different line of thinking. Congratulations friends. We hope that your skills move you to another level.


    And the Winner is Sujana @sujibenzic. Congrats Sujana.
    Wishing you all the best to reach more milestones on the track!

    ​He​re's the gift for you..



    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.

    You will be also mailed with gift voucher to your Private message you can also get use of the Gift voucher for which you can buy ebooks.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Women's Day Poem Contest!-special-contest-secret-manjul-500x500.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #17
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Women's Day Poem Contest!

    Congrats Sujana!

    - Chitra

  8. #18
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Penmai's Women's Day Poem Contest!

    HUhuhuhu Cheers Partner...


  9. #19
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Penmai's Women's Day Poem Contest!

    Quote Originally Posted by Penmai View Post
    Dear Friends,

    Happy to see all unique write ups wherein you showcased your poetry skills. All are with different line of thinking. Congratulations friends. We hope that your skills move you to another level.


    And the Winner is Sujana @sujibenzic. Congrats Sujana.
    Wishing you all the best to reach more milestones on the track!

    ​He​re's the gift for you..



    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.

    You will be also mailed with gift voucher to your Private message you can also get use of the Gift voucher for which you can buy ebooks.
    Feeling extremely happy on hearing this. Thank you so much Penmai Admin and Support team for selecting my entry and for the lovely gifts. Sure, will mail you the details. This kind of encouragement is a great moral boost to any creative person who loves to pursue their passions and you never fail to create a platform for such enthusiasts.

    All the entries in this thread were unique,lovely p and thought provoking in their own way. My heartfelt wishes and appreciations to all the fellow participants.

    Special thanks Partner @gkarti for keeping on tagging me for any kind of contest threads, even though I fail to contribute most of the times.

    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    சுஜனா.


  10. #20
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter