Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree267Likes

Penmai's Women's Day Poem Contest!


Discussions on "Penmai's Women's Day Poem Contest!" in "Special Contest" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Penmai's Women's Day Poem Contest!

    Dear friends,

    Every Year on International Women's Day, We honor & Celebrate inspiring Women and their achievements in all walks of life. There's no Pinnacle to what we, as women, can do. For us, Moving is that passion. Yup We are up with an Effective yet simple contest. Pen down a Poem on the topic PENMAI and Churn the thoughts with your unique entries.

    Topic: Penmai/Womanhood

    1. Write the Poem in English or in Tamil
    2. You can submit only one poem
    3. Avoid posting Poems about Our Site - Penmai.
    4. The contest will be closed by 31st March 2017, 11:59 PM.


    Its actually the time to be less humble. Participate & Win!


    Similar Threads:

    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai's Women's Day Poem Contest!

    தோழமைகளுக்கு வணக்கம்!

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    ஒவ்வொரு வருடமும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, உத்வேகமூட்டி உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்க்கையின் எல்லா படிகளிலும், நிலைகளிலும் சாதனைகள் புரிகின்ற பெண்களுக்கு மரியாதை செய்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பெண்களாக நாம் எல்லாவற்றையும் சாதிப்போம், எந்த உயரத்தையும் தொடுவோம். நமக்கு வாழ்க்கையில் உயர உயரச் சென்று கொண்டிருப்பதில் தான் பேரார்வம். இப்போதும் நாம் மற்றுமொரு நல்ல பயனுள்ள மற்றும் எளிமையான ஒரு போட்டிக்கு தயாராகிவிட்டோம்.

    உங்கள் ஒவ்வொருவரின் அறிவைக் க(கு)டைந்து தனித்துவத்துடன் ஒரு நல்ல கவியை ‘பெண்மை என்ற தலைப்பில் படைத்தது, பரிசை வெல்லுமாறு அழைகிறோம்.

    கவிதைக்கான தலைப்பு: பெண்மை

    விதிமுறைகள்:

    • நீங்கள் எழுதும் கவிதை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ இருக்க வேண்டும்.
    • ஒரு போட்டியாளர் ஒரு கவிதை மட்டுமே போட்டிக்காக பதிவிடவேண்டும்.
    • நம் தளத்தை (பெண்மை) பற்றி கவிதை எழுதுவதைத் தவிர்க்கவும்.
    • போட்டிக்கான கடைசி நாள்: 31 மார்ச் 2017, 11:59 pm.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #3
    kirubajp's Avatar
    kirubajp is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    திருவாரூர்
    Posts
    206

    Re: Penmai's Women's Day Poem Contest!

    அவளே தெய்வம், அவளே பூமி

    அவளே வேதம், அவளே கவிதை

    அவளே கோபம், அவளே காதல்

    அவளே வீரம், அவளே ஞானம்

    அவளே மகளும் ஆகிறாள், அவளே தாயும் ஆகிறாள்

    பெண்ணே வலிகளை தாங்கும்

    வலிமை கொண்டதனால் தான்

    இறைவன் உனக்கு தாய்மை இன்பம் தந்தானோ?

    உன் வாய்மை மீது கொண்ட நம்பிக்கையால் தான்

    நீதிக்கும் கூட உன்னையே தேவதை ஆக்கினானோ?

    பொறுமைக்கு இலக்கணம் நீ தானோ

    அதனால் பூமிக்கும் உன்னையே

    அடையாள படுத்தி வைத்தானோ?

    மறுபிறவி வேண்டாம் என்று காசி செல்லும்

    கூட்டம் ஒன்று, நீயோ உன் ஒரு பிறவியிலேயே

    மறு பிறவி கொள்கிறாயே தாயாக அதை

    மாற்றிட காசி உண்டோ??

    நீ இல்லா உலகம் அது நித்திரை கொள்ளும்

    நீ இல்லா உயிர்கள் அது எவ்வழி செல்லும்

    நீ கேட்பது எல்லாம் என்ன?

    அடுக்கலை தாண்டிய உலகம்

    திராவகம் இல்லா காதல்

    அக்னி பரிட்ச்சை செய்யா கணவன்

    முதியோர் இல்லம் காட்ட பிள்ளை

    வேதனை இல்லா மரணம்

    நீ உன் வாழ்க்கையில் கொண்ட இன்பங்கள் அது குறைவு

    பிறர் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்காக பெண்ணே

    நீ அடையும் இன்னல்கள் அது அதிகம்

    ஜனனம் முடியும் வரை பெண்மையை போற்றுவோம்!!

    Last edited by kirubajp; 7th Mar 2017 at 08:30 PM.
    ஜோ கி

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Penmai's Women's Day Poem Contest!

    Friends,

    Pls. drop your comments here...

    Penmai's Women's Day Poem Contest! (Comments)


    Vimalthegreat and sumitra like this.

  5. #5
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்மை
    **************
    வாழ்க்கைச் சக்கரத்தின்
    வலுவான அச்சாணி
    'மாயை' என்னும் தூற்றலை
    முறத்தால் அடித்த மறத்தி
    ஆக்கத்தின் அகராதி
    அலங்கரித்துக் கொண்டது அவளால்
    மகளாகப் பிறந்து
    மாமியார் வரைப் பரிமாணங்களைப்
    பகுத்திருக்கிறேன்
    பாவினில் தொகுத்திருக்கிறேன்.

    'மகள்'
    பெற்றோர் மனக் கருவறையில்
    பிரவாகம் கொண்ட பொக்கிஷம்
    பாட்டியானாலும்
    பார்வைக்குக் குழந்தை!
    பிறந்தவீட்டு அன்பே மகள்
    பெற வேண்டிய சீதனம்
    அன்புச்சீதனத்தை ஆரத்தழுவி
    அர்த்தப்படுத்துவோம் பிறப்பை!

    'சகோதரி'
    வளரும் போது
    பகிர்ந்துண்ணும் பாசத்தை
    வாக்கப்பட்டபின்போ
    வார்த்துச் சிறப்பித்தல் அவளின் கையில்
    கஷ்டங்களில் தோள் கொடுத்து
    கரை சேர்ப்போம் உடன்பிறப்புகளை!

    'மனைவி'
    பெண்ணின் பரிமாணங்கள் அத்துணையும்
    பொதிந்துள்ள ஒரே பாத்திரம்
    தாம்பத்யத்தின் தாரகமந்திரம்
    தன்னகத்தே கொண்ட வேதம்
    ஒப்பற்ற பெருமையோடு
    ஓதிச் சிறப்பிப்போம் தரணி உயிர்த்திருக்க!

    'மருமகள்'
    ஆறாம் அறிவைச் சிறப்பிக்க
    அவதரிக்க வேண்டிய அவதாரம்
    முதிர்ச்சி என்னும்
    முத்துக் கோர்த்த
    ஆபரணம் அணிந்து
    முதியோர் இல்லங்களுக்கு
    மூடுவிழா கண்டிடுவோம்!

    'தாய்'
    முத்தின தமிழாழுமே இதன் அழகை
    முழுமையாகச் சொல்லுதல் கடினம்
    அத்துணை பவித்திரம்
    அத்துணையும் பவித்திரம்
    பேராற்றலே பெருமை கொள்ளும்
    பார் ஆற்றல் கொண்டவள்
    நல்லவற்றை விதைத்து
    நாடு போற்ற வளர்த்து
    சான்றோர் ஆக்குவோம் சந்ததிகள் அனைத்தையும்!

    'மாமியார்'
    போற்றுதலுக்குரிய
    அறிவின் பெருங்கணக்கு
    விட்டுக் கொடுத்தலை
    விளங்கிக் கொண்டால் சிறப்பு
    வரதட்சணைப் பேய்க்கு
    வைத்திடுவோம் சிதை!
    மறு மகளாகப் பார்த்து
    மலர்த்திடுவோம் உறவுகளை!

    ஆக்கப் பிறந்தோம்
    ஆளுவோம் தரணியை
    ஆண்களின் அரவனணப்போடு!
    நவ-சக்தி படைக்க
    சிவசக்தியாவோம்!

    வாழ்த்துகள்

    நன்றி நன்றி
    சாந்தி உடையப்பன்.


  6. #6
    shaalam's Avatar
    shaalam is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2011
    Location
    Bahrain
    Posts
    849
    Blog Entries
    18

    Re: Penmai's Women's Day Poem Contest!

    வெதும்பித் தவிக்கிறேன் விம்மித் துடிக்கிறேன்
    கொலை வாளை எடுக்கவும் தயக்கமில்லை
    ஆனால் எத்தனை அரக்கர்களை வெட்டிச் சாய்க்க?
    உண்மையில்லை உலகில், பூவாய்ச்
    சிரிக்கும் பிஞ்சு மழலைகளை கசக்கிச்
    சருகாக்க நெஞ்சு கல்லான சில மிருகங்கள்
    நீயே தாய், நீயே தமக்கை, நீயே தங்கை
    நீயே துணை, நீயே மகள் என
    சர்வமும் நீயாயிருக்க, பெண்மையே
    அம்மாஆஆஆஆஆ
    என் சகோதரிகளே
    ஆண் பிள்ளை பெற்றால் அடித்து
    வளருங்கள் அடங்காமல் போனால்
    சூர சம்ஹாரம் செய்யுங்கள்
    இனியாவது ஹாசினிகள்
    வாழட்டும்!!!



    கருக்கி வீசப்பட்ட சிறு மலர்களுக்கு ஒரு கண்ணீர் காணிக்கை, இதை எழுதும் போது சிந்திய கண்ணீர் அந்தக் குழந்தைகளுக்கு அர்ப்பணம்.


  7. #7
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்மை ...
    சதை கோளங்கள் சார்ந்த பொம்மை அல்ல ;
    சதா புலம்பும் சகதி பிண்டம் அல்ல ;
    சகலமும் அறியத் துடிக்கும் ஞானி அவள் ;
    சர்வமும் வணங்க தவிக்கும் பிறவி அவள் ;

    பெண்மை ……
    வார்ப்பில் அழகு உள்ள தங்கச் சிலை அல்ல ;
    வார்த்தைகளால் புகழ வெறும் வரக் கவி அல்ல ;
    வம்புகள் பேசாத அறிவுஜீவி அவள் ;
    வசந்தம் நுகர துடிக்கும் மலர்த்தேனீ அவள் ;

    பெண்மை ….
    சொத்துகளாய் சுவீகரிக்க சொந்தம் அல்ல ;
    சொத்தைகளாய் மறுதலிக்க சந்தையும் அல்ல ;
    ஸ்வாசங்களில் முத்திரை பதிக்கும் நல்லவள் அவள் ;
    சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட சுகந்தம் அவள் ;

    பெண்மை ….
    கசக்கி எறிய காகித மலர் ஒன்றும் அல்ல ;
    கசந்து பேசிட கருகும் பூ ஒன்றும் அல்ல ;
    காலத்தையே நிர்மாணிக்கும் சக்தி அவள் ;
    காதலுக்கு உயிர் கொடுக்கும் அற்புதம் அவள் ;

    பெண்மை …..
    பாலியல் வன்முறையாளர் கைப்பாவை அல்ல ;
    பாலகிகளாய் மடிய பிறந்தவள் அல்ல ;
    பருவ வயதிலும் செதுக்கும் பக்குவ சிற்பி அவள் ;
    பனங்காய் தலைகளாய் ஆண்களை உடைப்பவள் அவள் ;

    பெண்மை ….
    சீறிப் பாயும் வெறும் சொல் சிங்கம் அல்ல ;
    சிதறி உடைய சிறு மண் பானையும் அல்ல ;
    சிருங்காரம் கலையாய் கொண்டவள் அவள் ;
    சிணுங்கினாலும் சொர்க சங்கீதம் அவள் !!!

    **** ஆக்கம் ரா. கிரிஜா

    Last edited by girija chandru; 11th Mar 2017 at 08:49 AM.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #8
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்மை


    ஆவதும் பெண்ணாலே!
    அழிவதும் பெண்ணாலே!

    ஆம்! நாட்டுக்கும் வீட்டுக்கும்

    நன்மைகள் ஆவதும் பெண்ணாலே!
    தீமைகள் அழிவதும் பெண்ணாலே!

    நங்கை நல்லாளாய் பிறந்த வீட்டின் செந்தமிழ்ச் செல்வியாகிறாள்!

    நல்லன பல செய்து நாட்டின் மங்கையற்கரசியாகிறாள்!

    தான் வாழ வந்த இல்லத்தை ஔிரச் செய்து இல்லத்தரசியாகிறாள்!

    நன் மக்களைப் பெற்று தன்னிகரில்லாத மாதரசியாகிறாள்!

    எல்லாருக்கும் என்றும் நன்மைகளையே செய்து வாழ்வரசியாகவே திகழ்கிறாள்!

    பெண்மையே! நீயே சக்தி!

    சக்தியை உருவாக்கவும் முடியாது!
    சக்தியை அழிக்கவும் முடியாது! என்கிறது விஞ்ஞானம்!

    இதை ஏற்க மறுக்கிறது அஞ்ஞானம்!

    சக்தியை உணர முயல்வதே மெய்ஞானம்!

    உலகில் தோன்றும் உயிருள்ளவைகளுக்கும் உயிரற்றவைகளுக்கும் சக்தியைத் தருபவள் நீ!

    சக்தி இல்லையேல் சிவமும் சவம்தான்!
    சவத்தையும் சிவமாக்குபவளே சக்திதான்!

    பெண்மையே சக்தி!
    சக்தியே பெண்மை!

    என்றும் மாறாத புன்னகையுடன் எதையும் சாதிக்கச் செய்வதே பெண்மை!

    பெண்மை! அதுவே இறைமை!


  9. #9
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்மை



    படைத்தவனும் அறிந்திடான்
    பெண்மையின் சக்தியை!
    அன்பால் அகிலத்தை காக்கும்
    அன்னபூரணியும் அவளே!
    தீமைகளை அக்னியால் எரித்திடும்
    ஆதிசக்தியும் அவளே!
    தன் பலம் அறியாத பன்முகம் கொண்டவள்!
    ஆணாதிக்க எண்ணங்கள் அவள்
    ஆற்றலை வர்ணம் பூசி மறைத்திட
    புரிந்தும் புரியாத புதிர் அவள்!
    அவள் மனதை படிப்பது
    இறப்பை அறிவதற்கு சமம்!
    எவராலும் அறிந்திடமுடியாத ரகசியம் அவள்!
    சுயம் இல்லாத சார்பு வாழ்க்கை
    என அவள் வாழ்வை வரைபடுத்தும்
    ஆண்வர்க்க சமுதாயத்திற்கு
    நிலவின் அழகும் ஒளியும் அதன் பின்னிருக்கும்
    வானின் இருளில் தான் உள்ளது என
    சார்பு வாழ்க்கையிலும் உள்ள சந்தோஷத்தை
    ரசித்து வாழும் அதிசியம் அவள் !
    மற்றவர்களின் உணர்வை தனதாக்கி
    அவர்களின் தேவை கண்டு தீர்வு தரும்
    கற்பகவிருட்சம் அவள் !
    அன்பை அள்ளி கொடுப்பதில் அன்னையாக
    பாசத்தை கொட்டி கொடுப்பதில் சகோதரியாக
    நேசத்தால் நெகிழவைக்கும் காதலியாக
    எந்த நிலையிலும் தோள்கொடுக்கும் தோழியாக,மனைவியாக!
    பெண்மைக்கு பெருமை சேர்க்கும் தாயாக!
    என அவளுக்குத்தான் எத்தனை அவதாரங்கள்!
    ஆனால் மனிதர்களுக்கோ பெண் என்றதும்
    அவளின் உடற்கூறு மட்டுமே நினைவிற்கு
    வருவதும் அவளின் படைப்பிற்க்கே பாதகம்!
    பெண் போதை பொருள் அல்ல!
    போற்றி பாதுகாக்கபட வேண்டியவள்!




    நன்றி
    லஷ்மிரவி

    Last edited by lashmi; 15th Mar 2017 at 12:10 PM.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  10. #10
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    Re: Penmai's Women's Day Poem Contest!

    பெண்ணே!
    மென்மையின் இலக்கியமும் நீதான்
    வலிமையின் இயக்கமும் நீதான்
    இறைவன் தேர்ந்தெடுத்த பொக்கிஷமும் நீதான்
    இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தெய்வமும் நீதான்
    கொடியவர்களை நேசிக்கும் அன்பானவளும் நீதான்
    படைத்தவனுக்கே பொறுமையின் சிகரமாய் தெரிந்தவளும் நீதான்
    போர்க்களத்தில் பொங்கி எழும் பெண்சிங்கமும் நீதான்
    பூவாய்,நிலவாய்,தேவதையாய் ஒப்பிடப்படும் உயரியவளும் நீதான்
    கடவுளுக்கு அடுத்து அவதாரங்களில் சிறந்து விளங்கியவளும் நீதான்
    வலிகள் பலவற்றைத் தாங்கும் வலிமையானவளும் நீதான்
    வார்த்தையில்லா இடத்தில் உன் மௌனத்தையும் கண்ணீரையும் மொழியாய் உருவாக்குபளும் நீதான்
    எல்லாவற்றையும் தாங்கும் சக்திவாய்ந்தவளும் நீதான்
    சக்தியாய் வழிபடுபவளும் நீதான்
    சுமையை பாரமாய் நினைக்காமல் வரமாய் நினைக்கும் தேவதையும் நீதான்
    இறைவனுக்கு அடுத்து பூமியின் படைப்புக் கடவுளும் நீதான்
    வலிகளைத் தாண்டி பல துறைகளில் சாதிக்கும் சாதனையாளரும் நீதான்
    தாயாய்,தாரமாய்,மகளாய்,சகோதரியாய் எல்லாருக்கும் ஒரு வழிகாட்டியாய் இருப்பவளும் நீதான்
    வலிகளை எடுத்துக்கொண்டு மற்றவர்க்கு மகிழ்வைத் தரும் கருணையானவளும் நீதான்.






loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter