Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree184Likes

தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...


Discussions on "தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி..." in "Special Contest" forum.


  1. #11
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Very nice @kirubajp


    அற்புதமா ஆரமிச்சு வெச்சுருக்கீங்க கிருபா! ஜீவகனை பற்றி அருமையா விளக்கியிருக்கீங்க!
    வாழ்த்துக்கள்!


    Sponsored Links
    gkarti and kirubajp like this.

  2. #12
    dhanya krishna priyai is offline Friends's of Penmai
    Real Name
    dhivyabharathi
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Thiruvannamalai
    Posts
    244

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Wow.. different concept..Tamil perumaiyai solla pudhu vazhi..surely il participate..tnks for tagging me karthi..last month pola indha time participate pannama iruka maten karthi


  3. #13
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Haha... No Issues Dhanya!


    Quote Originally Posted by dhanya krishna priyai View Post
    Wow.. different concept..Tamil perumaiyai solla pudhu vazhi..surely il participate..tnks for tagging me karthi..last month pola indha time participate pannama iruka maten karthi



  4. #14
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    sema, sema... i am thrilled... will participate soon... (girija... sabash... sariyaana potti)

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #15
    sbsudha's Avatar
    sbsudha is online now Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    மாதவி:

    சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது.
    மாசாத்துவான் மகன் கோவலன் கண்ணகியை மனைவியாக அடைந்து மனம் ஒருங்கி குடித்தனம் செய்த கதை அனைவரும் அறிந்ததே.
    ஆடை கட்டி வந்த நிலவாக மாதவி ஒயிலுடன் இடை அசைத்து ஆடி வந்தாள். மலர் மாலையை சுழட்டி கோவலன் மீது எரிந்து அவனை மயக்கி அடைந்தாள். அவனும் அவள் அழகில் மயங்கி அவள் பின்னே சென்றான்... சொத்தை அழித்தான்.
    மாதவியிடம் இந்திரா விழாவில் சண்டையிட்டு அவளைவிட்டு கண்ணகியை வந்தடைந்தான்.
    மிஞ்சி இருந்த காற்சலங்கைகளை விற்று வாழ்வை துவங்க எண்ணி மதுரை சென்றனர்.
    காற்சிலம்பு அரசியினுடையது எனத் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, சரியாக விசாரியாமல் கொலையுண்டான்.
    வெகுண்டெழுந்த கண்ணகி தன் ஒற்றைச் சிலம்புடன் மதுரை பாண்டிய மன்னனிடம் வந்து குற்றம் சாட்டினாள். சிலம்பை உடைத்து, ஊராருக்கு உண்மையை நிலைநாட்டினாள். வந்த கோவத்தின் பிரதிபலிப்பாக மதுரையையே எரித்து சாம்பலாக்கினாள்.
    எல்லோரும் அறிந்த கதையே... கண்ணகியும் அவளது பத்தினித்தனமும், கட்டிய கணவனுக்காக காத்திருந்தமையும், அவன் கேட்டனுப்பியபோதெல்லாம் நகை பணம் என செல்வத்தை வாரி எரிந்தவையும் அழுது சோர்ந்ததையும் பலரும் எழுதி மாய்ந்து விட்டனர்.
    தவறாகக் கொல்லப்பட்டான் கணவன் என அறிந்து, அது நாள் வரை பட்ட இன்னல்கள் அவமானங்களின் போதெல்லாம் வாய் திறவாமல் மௌனித்து அனுபவித்த அதே கண்ணகி, வெகுண்டு எழுந்தாள். மதுரையையே தீப்பிடித்து எரியச் செய்தாள். பத்தினி தெய்வமாகி இன்றும் நம் நினைவில் நிற்கிறாள். உண்மை.
    ஆனால்... இவற்றை எல்லாம் விட மாதவியின் புனிதத்தன்மையை பலர் பேசி அறியோம்.
    மாதவி ஒரு ஆடல் மங்கை. பரத்தையர் குலத்தில் பிறந்தது அவளது துரதிருஷ்டம்.
    பரத்தையர் குளத்தில் பிறந்ததால் அவள் பல ஆடவர் முன் ஆடவும் வேண்டிவந்தது.
    ஆடிய அவள் மாலையிட்டதும் கோவலனுக்கே. அவன் அவள் அழகில் மயங்கி அவளுடனேயே சென்றுவிட்டான்.
    மாதவி செய்த ஒரே தவறு கண்ணகியின் கணவனை அவள் தன்னுடன் வராவிட்டாள். அவனுடன் மனமொன்றி தாம்பத்யம் புரிந்தாள் என்பது மட்டுமே.
    அதையே ஒழிய கண்ணகியின் பத்தினித்தனத்திற்கு சற்றும் குறையாத சரி நிகர் சமானமானவள் மாதவி.
    அவனை கண்டு அவளும் ஆசைப்பட்டாள்.
    ஆயினும், அவனது கணையாழியை சாட்சியாகக் கொண்டு கோவலனின் செல்வங்கள் அனைத்தையும் வேலையாட்கள் மூலம் ஈட்டி வந்தது மாதவியின் தாய் செய்த தீங்கு. மாதவி அறியாமல் அவள் செய்த துரோகம்.
    கோவலனுடன் மனமொன்றி வாழ்ந்த நேரத்தில், அவனது மனம் அவளின் உடலையும் அவர்களது உடலுறவையும் மட்டுமே நாடியது. அவ்வளவுக்கவ்வளவு அவள் அழகில் மதி இழந்து கிடந்தான்.
    ஆனால் மாதவியோ மனம் கொண்ட உறவினையே விரும்பினாள்.
    உடலையும் மீறி அவர்களது மனதின் சங்கமத்தை விரும்பினாள்.
    கோவலனுக்கு அதில் பெரும் ஈடுபாடு இருக்கவில்லை.
    அவள் மனத்தால் அவனின் பத்தினியாகத்தான் வாழ்ந்தாள். அவனைத் தீண்டி அவனுக்கு ஒரு மகளையும் ஈன்றெடுத்து கொடுத்த மாதவி, தன் வாழ்நாளில் வேறொரு ஆடவனை மனதாலும் தீண்டவில்லை.
    இந்திரா விழாவின்போது அவள் பாடிய கானல் வரி பாடலைக் கேட்டு கோவலன் அவளை தவறாக எண்ணி அவளை விட்டு பிரிந்து நீங்கி கண்ணகியை சென்றடைந்தான்.
    ஆனால், அவள் பாடிய அந்த கானல் வரி பாடலிலும் கூட, ஆடவரின் அன்புக்காக ஏங்கி நிற்கும் ஏழைப் பெண்களை சுட்டிகாட்டியே பாடினாள். ஆனால் அதற்கு பதில் பாடலாக கோவலன் பாடியவையோ கடலோடியர் பாடும் விரசமான பாடல்கள்... மிகவும் கேவலமான வார்த்தைகள் கொண்டதாகத்தான் இருந்தன.
    அவன் விரும்பியபோதெல்லாம் மாதவி தன்னை அவனுக்குத் தர வேண்டும்... திருப்தி படுத்த வேண்டும்.... அவள் அதை மறுத்த போது அவனுக்கு ஏமாற்றம் கோபம் எரிச்சல் ஆத்திரம் என ஏறிக்கொண்டே வந்தது. இந்திரா விழாவில் அது பெரும் தீயாக மாறி அவளை சந்தேகித்து பிரிந்தான் கோவலன்.
    சென்றவன் திரும்பிவிடுவான் என காத்திருந்து தவித்தாள் மாதவி. தோழி வசந்தசேனையை தூதனுப்ப, கோவலன் கூறியதோ அவள் ஆடல் மகள். என்னிடம் அவளுக்கு என்றும் உண்மையான அன்பு இருக்கவில்லை. அன்புபோல உருக்கமாக உண்மையாக நடித்தாள்... அவ்வளவே, அவளுடன் இனி நான் வந்து உறவாடுவது இனி நடக்காது எனக் கூறி அனுப்பிவிட்டான். இச்சை தீர்ந்த கிளி பறந்தது போல.
    அதைக்கேட்ட பின்பும் கூட மனம் வருந்தினாளே ஒழிய அவனை மறந்து பிற ஆடவனை நினைக்கவில்லை. பிறந்த குலத்தினை இழித்து பேசியது கோவலந்தானே ஒழிய, தன் குல வழக்கப்படி அவள் பல ஆடவருடன் படுத்தாள் இல்லை.
    பெண்ணை போகப் பொருளாக பார்ப்பது ஆண்களில் பலருக்கும் அன்றும் சரி இன்றும் சரி ஒரு விரசமான வழக்கமாக இருந்து வருகிறது. இது சமுதாயத்தின் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல வெட்கக்கேடும்தான்.
    இன்றுவரையிலும் அந்த நிலை மாறவில்லை என்பது மிகவும் துக்ககரமான விஷயம்.
    அவனைப் பிரிந்த மாதவி, தான் நினைத்திருந்தால், வேறு ஒரு செல்வந்தனை சந்தித்திருக்கலாம். அவனுடன் உறவு கொண்டிருக்கலாம்.
    ஆனால் மாதவியோ, அவன் சென்றபின் தன் அன்னையின் மூலம் அவள் கண்ணகியிடமிருந்து அனைத்து செல்வதையும் கரந்து வைத்திருந்தாள் என்பதை அறிந்து துவண்டாள் துடி துடித்தாள். அனைத்தையும் பின்னொரு காலத்தில் திரட்டிச் சென்று கோவலனின் தந்தையிடம் சேர்ப்பித்தும் விடுகிறாள்.
    கோவலனுடன் அவள் வாழ்ந்த பொன் நாட்களின் நினைவுச் சின்னமாகத்தான் அவள் மணிமேகலையை எண்ணி மிகவும் பாசத்துடன் வளர்க்கிறாள்.
    இந்நேரத்தில்தான் கண்ணகி கோவலன் மதுரை காண்டம் பற்றி அறிந்து துவண்டு அழுது துடித்து, தன் நீண்ட தலைமுடியை நீக்கி கொண்டு, வாழ்வை வெறுத்து... புத்த மதத்தில் சேர்ந்து, மானிட சமுதாயத்திற்கு சேவை செய்ய தன்னை அர்பணித்துக் கொண்டாள்.
    கைம்பெண்ணாக அவள் வெள்ளை சேலை உடுத்தவில்லை... மூலையில் முடங்கவில்லை. ஆனால் அதற்கு சற்றும் குறையாத தர்மத்துடன் அவள் புத்த மதத்தின் ஒரு யோகியாக மக்களுக்கு சேவை செய்ய முனைந்தாள்.
    அவளை, உடல் பசியை தீர்க்கும் ஒரு அழகிய போகப் பொருளாக மட்டுமே கண்டான் கோவலன். இறுதியிலும் கூட அவள் பரத்தை அதனால தன்னுடன் உள்ள உறவு அவளுக்கு புளித்து விட்டபடியால வேறு யாரையோ அவள் சந்திக்கிறாள் என அறிவிழந்து அவளை அனாவசியமாக சந்தேகப்பட்டுதான் பிரிந்தான் கோவலன்.
    அப்பேற்பட்ட கோவலனுக்கு உற்ற பத்தினியாக தன்னை அற்பணித்துக்கொண்டு வாழ்ந்த மாதவி கோவலனுக்காக காத்திருந்து உருகிய கண்ணகிக்கு எந்த வகையிலும் குறைவில்லாத பத்தினி தெய்வம் தான். சிறந்த மாதர்குல மாணிக்கம்தான்.
    இதனாலேயே எனக்கு மிக பிடித்த கதாபாத்திரம் மாதவி தான்.


  6. #16
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Very well written Sudha!

    Arpudham! Keep rocking!

    sbsudha likes this.

  7. #17
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    மிகவும் அழகான ஆழமான போட்டி கரு இளா அக்கா.
    நிறைவான நிறைய பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன் ..... பங்கெடுக்கும் அனைவர்க்கும் வாழ்த்துக்குள் .

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  8. #18
    sbsudha's Avatar
    sbsudha is online now Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Hi Annapurani,
    Thank you so much. Nice name.

    Quote Originally Posted by Annapurani Dhandapani View Post
    Very well written Sudha!

    Arpudham! Keep rocking!



  9. #19
    sasikaladhanan is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    thiruvannamalai
    Posts
    649

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    காப்பியங்கள் பற்றி அறிய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்கள் ஆசை. பள்ளிப் பருவத்தில் அவ்வப்போது படித்த சில வரிகள் மட்டுமே மனதில் பதிந்திருக்க இதுவரை முழு கதையை அறிந்து கொண்டதில்லை.சீவகசிந்தாமணி காப்பியத்தை சிறு சிறு செய்யுளாக சிறு வயதில் படித்தது. சீவகசிந்தாமணியின் கதைச்சுருக்கத்திற்கு மிக்க நன்றி கிருபாக்கா.


  10. #20
    sasikaladhanan is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    thiruvannamalai
    Posts
    649

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    காப்பியங்கள் பற்றி அறிய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்கள் ஆசை. பள்ளிப் பருவத்தில் அவ்வப்போது படித்த சில வரிகள் மட்டுமே மனதில் பதிந்திருக்க இதுவரை முழு கதையை அறிந்து கொண்டதில்லை. சிலப்பதிகாரத்தை மாதவியின் கண்ணோட்டத்தில் விளக்கி அறியாத பல தகவல்களை தந்தமைக்கு நன்றி சுதாக்கா.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter