Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree184Likes

தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...


Discussions on "தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி..." in "Special Contest" forum.


  1. #31
    Divya Divi's Avatar
    Divya Divi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Kanchipuram
    Posts
    421

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Quote Originally Posted by Annapurani Dhandapani View Post
    Arputham Divya!

    Unmaiyagave Angathan pattri adhigam theriyadhu! Niraya Nalla vishayangal therindhu konden! Nalla ezhuthu! Vazhthukkal!
    thank u pa...


    Sponsored Links
    Don’t stress over the could’ve been, If it should’ve been then it probably would’ve been…
    E.Divya

  2. #32
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    பொதுவாக இலக்கிய இதிகாச புராணங்களில் கதையை மையமாக வைத்து கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்படும். அப்படி வரும் கதாபாத்திரங்களில் ஓரு சிலர் மட்டுமே தனி சிறப்பு உடையவராய் இருப்பர்.

    ஆனால் இராம காவியத்தில் மட்டும் எல்லா கதை மாந்தர்களும் கதையுடன் பின்னி பிணைந்து கைகோர்த்து நடப்பர். ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் மட்டுமே தனி சிறப்பு என்று வரையறுக்க முடியாவண்ணம் கம்பரின் சொல் அம்புகள் பல இடங்களில் மனத்தை கனமாகவும் சுகமாகவும் களவாடி செல்லும். கல்வியிற் பெரியவரின் கைவண்ணமன்றோ !!!!

    மனித மனத்தை எளிதில் கொள்ளை கொள்ளும் வித்தை குழந்தைகளுக்கே தெரியும். ஆதலினார் தான் கண்ணன், கணபதி, கார்த்திகை மைந்தன் என்று நமக்கு மிக நெருக்கமாக இருக்கும் கடவுளர்கள் குழந்தை வடிவங்களாகவே உள்ளனர். இந்த வரிசையில் தான் என் மனம் கவர்ந்த கதாபாத்திரமாக நான் சொல்ல போகும் ஒரு பாத்திரமும்
    கடவுளாக நாம் வணங்கும் ஒருவரே!!!


    ராமாயண பாராயணத்தில் தனி சிறப்பு பெற்றது சுந்தர காண்ட பாராயணம். அச்சுந்தர காண்ட நாயகனான சுந்தர மாருதியே என் மனதிற்கு மிக பிடித்த பாத்திரம்.

    அஞ்சனை நந்தன்
    வாயுவின் மைந்தன்
    சூரியனின் சிஷ்யன்
    இராமனின் அன்பன்

    என்ற பெருமைகள் கொண்ட அனுமனின் சிறப்புகள் சொல்ல ஆயுள் போதாது.

    அனுமனின் வல்லமை கம்பரின் வார்த்தைகளில் அனுமன் காப்பில் வடிக்கப்பட்டு இருக்கும்

    அஞ்சிலே ஒன்று பெற்றான்

    அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
    ஆர் உயிர் காக்க ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற
    அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்று வைத்தான்
    அவன் எம்மை அளித்துக் காப்பான்.

    இப்பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்று இயம்புகிறது அறிவியல். அந்த பஞ்ச பூதங்கள் வெல்லும் புகழ் மைந்தன் என்பதால் தான் அனுமன் சிரஞ்சீவி ஆனானோ!!!!



    இயற்கை மனித மனதை இயல்பாகவே அமைதியுற செய்யும். அதிலும் விண்ணும், கடலும், மலையும் பேரமைதியுடன் நம்பிக்கையையும் தரும் என்பது இயற்கையை ஆழ்ந்து ஆராதிப்பவர்களுக்கு நன்கு தெரியும். இதற்கான காரணம் என்னவென்று நான் சிந்தித்த போது எனக்கு உரைத்தது இம்மூன்றின் பிரமாண்ட தோற்றமோ என்பது தான்.

    இதிகாசங்களில் பிரம்மாண்ட ரூப தரிசனம் தந்தவர் இருவர் மட்டுமே ( எனக்கு தெரிந்த வரை )

    ஓங்கி உலகளந்த உத்தமன் எம்பெருமான் (வாமன அவதாரம் மற்றும் விசுவரூப தரிசனம் )
    ஆணவம் அடக்க அடி முடி காண சொல்லி சோதி வடிவான முக்கண்ணான என்னப்பன் ஈசன்

    இவ்விருவர் தவிர தான் விரும்பும் அளவு பிரம்மாண்ட வடிவம் பெறும் பேரு பெற்றவன் அனுமன் மட்டுமே. அனுமனை சிறிதாக நம்முள் உணர முடிந்தால், உருவத்தில் மட்டுமல்ல மனத்தாலும், குணத்தாலும் அவனின் அழகிய பெருவடிவம் நம் மனதினுள் பெரிதாக வரிவடிவம் பெறும் தோழமைகளே.

    அன்பு அனுமனனின் தரிசனம் கண்ணுறும் போது மனத்தில் நம்பிக்கையும், வலிமையும் பெருகுவதன் காரணம் அவனின் பிரமாண்டமென்று சொல்லவும் வேண்டுமோ !!!!!

    எனக்கு அனுமன் பிடிக்க காரணமான குணங்களை கீழே வரிசையிட்டுள்ளேன்

    அன்பின் அருள் குழந்தை
    ஆற்றலின் ஆணிவேர்
    ஞானத்தின் திருஉருவம்
    சமயோசிதத்தில் சாணக்கியன்
    சாதுரியத்தின் சத்குரு
    தைரியத்தின் தவப்புதல்வன்
    தன்னம்பிக்கையின் தாத்பரியம்
    பணிவின் பவித்ரம்
    பக்தியின் பிரவாகம்
    புகழ் வெறுத்த புகழ் மைந்தன்
    எல்லாவற்றிலும் மேலாக சரணாகதியின் சாராம்சம் அனுமன்

    மனமும் உடலும் ஒருமைப்பட்டால் உலகத்தில் ஆகாதது யாதொன்றுமில்லை என்பதற்கு சாட்சி மாருதியே.

    பிரபஞ்சத்தில் உருவமற்றவைகளின் ஆற்றல் அளப்பரியது ; அவற்றில் விஞ்சி நிற்பது அன்பின் ஆற்றல்.

    இரண்டு முறை சஞ்சீவி மலை கொண்டு வந்து இலக்குவனை உயிர்பித்தார் அனுமன். முதல் முறை மேகநாதன் மறைந்திருந்து மாயசக்திகளின் துணையோடு தாக்கிய போது வானர படையும் இலக்குவனும் மாண்டனர். தன்னால் தன் தம்பியும் வானர படையும் அழிந்தது என்ற பழி வரும் என்று ராகவன் துயர் கொண்டு தவித்த போது அனுமன் சஞ்சீவி மூலிகை கொண்டு அனைவரையும் உயிர்ப்பித்தார். அந்நிகழ்வினால் நெகழ்ச்சியுற்ற ராமன் அனுமனை கட்டி தழுவி தன் அன்பை வெளிபடுத்துவார்.

    எங்கள் தந்தையால் ஒரு முறை நாங்கள் பிறந்தோம். இப்போது உன்னால் மறுபிறவி எடுத்தோம் என்று அனுமனை தன் தந்தைக்கு ஒப்பிட்டு உருகும் ராமனின் அன்பு உரைக்கும் பாடலிது.

    முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது,
    என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர்
    மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்;
    நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்

    குகனால் ஐவரானோம் என்று தொடங்கி சுக்ரீவன் மற்றும் வீடணனை கூட உடன்பிறந்தோராக மட்டுமே கருதிய ராமபிரான் அனுமனை மட்டுமே தந்தையென உயர்த்தி மகிழ்ந்தார்.

    இலக்குவன் போரின் இறுதியில் மறுபடியும் ஒரு முறை மூர்ச்சையுற்ற வீழ்ந்த போதும் இதே போல் சஞ்சீவி மலை மூலிகை கொண்டு அனுமன் உயிர் தரும் போது இலக்குவன் எந்தையே என்று அழைத்து நெகிழும் பாடலிது.

    எழுந்து நின்று, அனுமன் தன்னை இரு கையால் தழுவி,
    'எந்தாய்! விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்!'
    என்ன, விம்மித் தொழும் துணையவனை நோக்கி,
    துணுக்கமும் துயரும், நீக்கி 'கொழுந்தியும் மீண்டாள்;
    பட்டான் அரக்கன்' என்று உவகை கொண்டான்

    ராம, இலக்குவன் இத்தகைய அன்பில் அனுமனை திருமஞ்சனம் செய்ய காரணம், அனுமன் அவர்களிடத்தே கொண்டே பேரன்பன்றோ!!!!!

    எதுவாயினும் நாம் கொடுத்தால் மட்டுமே இந்த உலகில் அது திரும்ப நமக்கு கிடைக்கும் தோழமைகளே ; அதில் அன்பும் கூட விதி விலக்கல்ல ;

    அனுமன் தசரத நந்தர்களிடம் காட்டிய அன்பே அவர்க்கு அவர்களிடமிருந்து திரும்ப கிடைத்தது

    அன்பு கொண்டு, காதலால் கசிந்துருகி பக்தி நிலை எய்துதல் என்பது ஆன்மீகத்தின் படிநிலைகள். இதற்கு நம் ஆழ்வார்களும் நாயன்மார்களுமே சான்று.
    ஏன் சீதையும், கோதையும் கூட அவ்வாறே படிநிலைகள் கடந்து ஆன்மீகத்தின் உச்சம் தொடுவர்.

    ஆனால் நேரடியாக பக்தி நிலை தொட்டவன் அனுமன் மட்டுமே. சரணாகதியின் வழியாக விரைவாக இறைவனை அடைய முடியும் என்று புதியதொரு பாதை இவ்வுலகுக்கு காட்டிய ஆதி பக்தன் அனுமன் தான்.

    நம்மால் இனி எதுவும் முடியாது என்று போராடி தோற்று இறைபாதம் பற்றுதல் அல்ல சரணாகதி ; அறியாமை இருள் அகற்றி உண்மை உணர்ந்து கொள்ள எல்லாம் நீயே என்று நம்மை மனமுவந்து இறைவனிடம் ஒப்புகொடுத்தல் சரணாகதி .

    அனுமனின் இந்த புதிய பாதையில் பயணித்து சாதாரண மனிதர்களாய் இருந்து மகான்கள் ஆனவர்கள் அநேகம் என்பது ஆன்மீக அன்பர்களுக்கு நன்கு தெரியும்


    கடமையை செய் பலன் எதிர்பாராதே ;
    ஆசையற்றவனும், தூயவனும், திறமைசாலியும், பற்றற்றவனும், பயனற்றவனும், தன்முனைப்புடன் செயல்படுவதை எல்லா விதங்களிலும் விட்டவனுமான எனது பக்தன் எனக்குப் பிரியமானவன்

    இப்படி பரந்தாமன் கிருஷ்ணாவதாரத்தில் உபதேசிக்க காரணமே அனுமன் தானோ என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

    பரந்தாமன் மகாபாரத கண்ணன் ;
    அனுமன் ராமாயண கண்ணன்

    ஆம் எப்படி கண்ணனின்றி பாரதம் இல்லையோ அப்படி அனுமனின்றி ராமாயணம் இல்லை .


    ஒரு மனிதன் நல்லவனாக இருப்பது எளிது ; தன் முயற்சியால் வல்லவனாவதும் எளிது; ஆனால் வல்லவன் நல்லவனாக தொடர்ந்து இருப்பதற்கு தன் மனதை மமதை நோய் பீடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    இதை கைகொள்வது எளிதான காரியமல்ல.
    உலகில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடி அமைதியை கொன்ற வரலாறுகளை புரட்டி பார்க்கும் போது மேற்கூறிய கூற்றின் உண்மை விளங்கும். சர்வாதிகாரத்தின் ஆணிவேர் இந்த அகங்காரமே.

    துன்பத்திற்கு காரணமான ஆசைககளை கூட முயன்று மனிதன் துறக்கலாம்; ஆனால் அகங்காரத்தை வேரறுப்பது துறவிகளால் கூட எளிதில் செய்ய முடியாத காரியம்.

    அகங்காரத்தின் அணு கூட தன்னை அண்டாமல் காத்து கொண்டதினாலே அனுமன் பெருமை அகிலத்தில் யுகங்கள் கடந்து மணம் பரப்புகிறது. மமதை நம் தலைகேறாமல் வழி காட்டிய வல்லவனான நல்லோன் மாருதிக்கு மனிதன் நன்றி கடன் பட்டிருக்கிறான்







    பூமகளின் தவம் சீதை. அசோகவனத்தில் ஆற்றொணா துயரிலும் மனோவலிமையோடு தவமே தவமிருந்து தவித்த போது அத்தவத்திற்கே நம்பிக்கையும் உயிர்ப்பும் வந்தது அனுமனின் பார்வை அன்னையின் மீது பட்ட கணத்தில் அன்றோ !!!!!

    ஆம் சீதை – அனுமன் சந்திப்பு படலம் படித்து பார்த்து நினைக்கும் போதெல்லாம் உள்ளத்தில் பொங்கும் நம்பிகையூற்று நம் கண்களிலே வழிந்தோடும். இதனால் தான் எந்த துயரமும் சுந்தர காண்டம் படிக்க கரைந்து போகும் என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

    ஆதலினார் தான்

    செய்க தவம் செய்க தவம்
    தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்
    என்று சொன்னானோ பாட்டுக்கவி!!!!!

    வையம் ஆளும் லட்சுமி தேவி வைதேகி வடிவெடுத்த போது நன்றி கடன் பட்ட நல் ஆத்மா மாருதி மட்டுமே.


    'உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
    விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
    நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
    தலையினால் தொழவும் தகும் - தன்மையோய்!


    வெற்று இலைகளும் வெற்றி இலைகளாகும் என்று எண்ணி தான் வெற்றிலை மாலைகளை அனுமனுக்கு சூடி ஆசி வழங்கினாலோ மிதிலையின் நாயகி.
    இப்பிறவியில் வெற்றிகள் வேண்டுமென்றால் அனுமனை வழி படுங்கள் தோழமைகளே.



    கண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால்
    தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ
    அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
    கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.

    சொல்லின் செல்வன் என்று அனுமன் பெயர் பெற காரணமான பாடல் இது.
    அனுமன் சொல்லின் செல்வன் மட்டுமல்ல. அவன் முக்காலம் அறிந்த ஞானி. ஆம் கண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால் என்று தீர்க்கதரிசனம் கொண்டு தெளிவாக இயம்பி இருக்கின்றானே.

    சனக நந்தினியின் கற்பு பின்னாளில் கேள்வியாக்குள்ளாகும் போது “என் அன்னையை துன்பமுற செய்ய வேண்டாம்” என்று இராமனுக்கு சூசகமாக சொன்னானோ அனுமன்!!!

    அனுமனின் சொல் நுட்பம் புரிந்து இருந்தால் ஒருவேளை அரசனின் கடமைக்கு அறம் செய்த ராமன் கணவனுக்கான அறம் தவறினான் என்ற பெரும் பழியை பின்னாளில் தவிர்த்து இருக்கலாமோ ???




    நம் மண்ணில் தோரயமாக 300 விதமான ராமாயண பதிப்புகள் உள்ளன. அவற்றில் அனுமனால் எழுதப்பட்ட ராமாயணம் ஒன்று உண்டு என்பது நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும் ??

    இலங்கை போர் முடிந்து ராமன் அயோத்தியில் அரச பட்டம் சூடிய பின் அனுமன் இமயத்தில் ராம ஜபம் செய்ய சென்று விட்டார். அங்குள்ள பெரும் பாறைகளில் ராம காவியமொன்றை இயற்றினார். வால்மீகி முனிவர் தான் எழுதிய ராம கதையை அனுமனிடம் காட்டி கருத்தறிய விரும்பி இமயம் சென்ற போது அனுமன் தான் எழுதிய காவியத்தை வால்மீகி முனிவரிடம் காட்டினார். அனுமத் ராமாயணம் படித்த வால்மீகியின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது கண்டு வருந்திய அனுமன் காரணம் கேட்டார்.

    அதிற்சிறந்த அனுமத் ராமாயணம் இருக்க தான் எழுதிய
    ராமாயணம் யார் படிப்பார் ? என்று மனம் வருந்தியதாக கூற, தான் எழுதிய ராமாயணம் ராமனுக்காகவே இருக்கட்டும் என்று சொன்ன அனுமன் உடனே தான் எழுதிய பாறைகளை உருட்டி நதியில் தள்ளினார் என்ற ஒரு வரலாறு நம் மண்ணில் உண்டு.


    அனுமனின் இந்த செய்கை கண்டு அதிர்ச்சியுற்று வருந்திய வால்மீகி தான் மறுபிறவி கொண்டு அனுமன் புகழ் பாடுவதாக வாக்களித்தார். அப்படி வால்மீகி துளசிதாசராக மறுபிறவி எடுத்து படைத்தது தான் “ ஹனுமான் சாலிசா ” என்று நம் இன்று பாராயணம் செய்யும் மந்திரங்கள்.


    “ புகழ் வெறுத்த புகழ் மைந்தன் ” என்று நான் ஏன் அனுமனை குறிப்பிட்டேன் என்று இப்போது புரிகிறதா நட்புகளே.



    மனம் ஒரு குரங்கு என்று மனோதத்துவம் சொல்கிறது ; குரங்காக இருந்து விட்டு போ மனமே; ஆனால் அனுமத் குரங்கின் மனமாக இரு என்ற வேண்டுதல் என்னுள் எப்போதுமே ஒலித்து கொண்டே இருக்கும்


    விவேகானந்தர் சொன்னார் பல ராமர்கள் இருக்கலாம் ; ஆனால் சீதை என்பவள் ஒருவள் மட்டுமே என்று ;
    பல சீதைகள் கூட இருக்கலாம் ; ஆனால் இனி ஒரு அனுமன் தோன்றவது நடக்கவே இயலாத ஒன்று என்பது என் கருத்து.

    ஒப்பாரும் மிக்காரும் இல்லாத என்ற அடைமொழி அனுமனுக்காகவே எம் அமுத தமிழ் மொழியில் உருவானதோ!!!!!!!!

    அனுமனின் உயிர் மூலம் சிவன்
    அனுமனின் ஆத்ம மூலம் விஷ்ணு
    சைவ வைணவ சங்கமத்தின் திருவடிவம் அனுமன்

    ராமனை விட ராம நாமம் மகிமை வாய்ந்தது என்று காலம் சொல்ல காரணமான மாருதியின் புகழ் ஓங்கி உலகெங்கும் பெருகட்டும்.

    தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.
    என்ற வள்ளுவ பெருமானின் வாக்கிற்கிணங்க அனுமன் வழியில் நம் வாழ்க்கையை வடிவமைப்போம்.

    ஸ்ரீராம ஜெயம்!!!
    ஓம் ஸ்ரீ ஹனுமதே நமக!!!

    இப்பதிவு அனுமான் உபாசகர்களுக்கு சமர்ப்பணம்

    Last edited by Vimalthegreat; 30th Apr 2017 at 09:45 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #33
    dhanya krishna priyai is offline Friends's of Penmai
    Real Name
    dhivyabharathi
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Thiruvannamalai
    Posts
    244

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    திரௌபதியைப் போல் கணவரின் மீது இவ்வளவு நேசம் கொண்ட பெண் யாராவது உண்டா என்று மார்க்கண்டேயரிடம் யுதிஷ்டர் கேட்டார்.இளவரசி சாவித்திரியை பற்றி கூறினார் மார்க்கண்டேயர்.
    சாவித்திரி கடவுளின் அருளாள் பிறந்தவள் தான் சாவித்திரி.அதனால் தான் அவளுக்கு சாவித்திரி என்று பெயர் சூட்டினர்.அவள் மேனி தங்கத்தை போன்று மின்னும்,கொடி போன்ற இடை,தாமரை கண்கள்,மென்மையான நீண்ட கூந்தல்.இன்னும் வர்ணிக்க அவ்வளவு அழகு.அழகுக்கு ஈடான அறிவு.
    சாவித்திரியின் அழகு,அறிவு,குணம் அனைத்தும் கண்டு அவளை மணம் முடிக்க அனைவரும் தயங்கினர்.அதனால் அவளின் தந்தை அஷ்வபதி நீயே உன் கணவனை தேர்தெடு என்று கூறினார்.
    சாவித்திரி அனைத்து இடங்களிலும் தேடி கடைசியில் சத்யவானை கண்டாள்.தன் தந்தையிடம் கூறினாள்.அதற்குள் நாரதர் சத்யவான் மணம் முடிந்த ஒரு வருடத்தில் இறந்துவிடுவான் என்று சொன்னார்.
    என் கணவர் என்று முடிவு செய்துவிட்டேன்.இனி என்னால் மாற்ற முடியாது.அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மணந்து கொண்டாள்.
    சத்யவானின் பெற்றோர்கள் பார்வை இழந்தவர்கள்.சத்யவானின் தந்தையை ஏமாற்றி ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி கொண்டனர் பார்வை இழக்கவும் செய்தனர்.அதனால் இவர்கள் காட்டில் வசித்து வந்தனர்.
    சாவித்திரி அவர்களை தன் பெற்றோர்களைப் போல் கவனித்துக் கொண்டாள்.சத்யவானின் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தாள்.
    திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிய இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே இருந்தன.அந்த மூன்று தினமும் கடும் விரதம் இருந்தாள்.
    சத்யவான் இறக்கும் தினம் அவனுடனே இருந்தாள்.அவனிடம் காட்டில் விறகு வெட்டச் சென்றாள்.சிறிது நேரத்தில் சத்யவான் மயங்கி விழுந்தான்.அவன் உயிரை எமன் தன் பாசக் கயிற்றால் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
    இதனைக் கண்ட சாவித்திரி அவளும் எமனின் பின் சென்றாள்.எமன் எதற்கு என் பின் வருகிறாய் என்று கேட்டார்.கணவன் எங்கு சென்றாளும் மனைவியும் செல்ல வேண்டும் என்று சொன்னாள்.
    உன் கணவனின் ஆயுள் முடிந்தது அதனால் எடுத்துச் செல்கிறேன் நீ திரும்பிபோ என்றார்.எம தருமரே இவ்வுலகில் அனைவரையும் சமமாக பாவிப்பவர் நீங்கள் மட்டும் தான்.புரிந்து கொல்லுங்கள் நான் எப்பொழுதும் என் கணவருடன் தான் இருக்க வேண்டும்.
    தன்னை யாரும் இவ்வளவு புகழ்ந்தது இல்லை என்று நினைத்த எமன்.அவளை மூன்று வரங்கள் கேட்க சொன்னார் ,கணவனின் உயிரைத் தவிர.
    உன் கணவர் இறந்து விடுவார் என்று தெரிந்தும் மணம் புரிந்து கொண்டாய்.அதற்காகவே உனக்கு வரம் தருகிறேன் என்றார்.
    சத்யவானின் தாய் தந்தைக்கு பார்வை வர வேண்டும்.அவர்களின் ராஜ்ஜியம் திரும்ப பெற வேண்டும்.ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்காக நான் ஆயிரம் ஆண் குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என மூன்று வாரங்கள் கேட்டாள்.எமனும் சிறிதும் யோசிக்காமல் அப்படியே நடக்கட்டும் என்று வரம் தந்தார்.
    நான் ஆயிரம் குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்றால் என் கணவரின் உயிர் வேண்டும் என்று சொன்னாள்.இதை உணர்ந்த எமன் அவளின் சமயோஜித அறிவைக் கண்டு வியந்து சத்யவானின் உயிரை விட்டுச் சென்றார்.
    ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரனம் சாவித்திரி.அவளின் அன்பு,அழகு,தைரியம்,தன்னம்பிக்கை அனைத்துமே ஒவ்வொரு பெண்ணிடமும் உண்டு.பெண்ணாகப் பிறந்ததே வரம் தான்.தான் துயரம் கொண்டாளும் தன்னை சுற்றி இருப்பவர்களை இன்பமாகவைத்திருப்பாள்.
    சரித்திரத்தில் என் மனதில் நிலைத்த பெண் சாவித்திரி.


  4. #34
    dhanya krishna priyai is offline Friends's of Penmai
    Real Name
    dhivyabharathi
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Thiruvannamalai
    Posts
    244

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    கணவரின் ஆயுள் நீடிக்க பெண்கள் பங்குனி மாதம் முடியும் நாள் விரதம் இருந்து சாவித்ரியை வழி படுவார்கள்.இன்றும் நடந்துக் கொண்டிருக்கும் சம்பிரதாயம். பங்குனி அன்று தான் சத்யவான் உயிரை சாவித்ரி மீட்டால் என்று ஐதீகம்..
    Sry arrangement sariya ila..padika kashtama irukum..


  5. #35
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    @Divya Divi

    கம்பனின் பாத்திர படைப்பில் வளர்ந்து கொண்டே போகிற ஒரே கதாபாத்திரம் அங்கதன் மட்டுமே..... அருமையாக இருந்தது உங்கள் பதிவு...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #36
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    @Annapurani Dhandapani

    வாழ்க்கையில் வலிகள் இருக்கலாம் ; ஆனால்
    வாழ்க்கையே வலிகளால் நிறைந்து விட கூடாது ;

    கொடுமை பாஞ்சாலியின் பாத்திர படைப்பு ......நெருப்பின் மகளானதினால் எப்போதும் அவளை பற்றி படிக்கும் போது உணரும் தகிப்பையே உங்கள் பதிவு படிக்கும் போதும் உள்ளம் உணர்ந்தது .....வாழ்த்துக்கள்

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #37
    Divya Divi's Avatar
    Divya Divi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Kanchipuram
    Posts
    421

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    @Divya Divi

    கம்பனின் பாத்திர படைப்பில் வளர்ந்து கொண்டே போகிற ஒரே கதாபாத்திரம் அங்கதன் மட்டுமே..... அருமையாக இருந்தது உங்கள் பதிவு...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
    Thank u pa......

    Don’t stress over the could’ve been, If it should’ve been then it probably would’ve been…
    E.Divya

  8. #38
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Savithriyai patri migavum azhagaga solliyulleergal Dhanya! Arumaiyana padhivu! Vazhthukkal!


  9. #39
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    Anumanin pathira padhivu miga miga arpudham Vimala!

    "துன்பத்திற்கு காரணமான ஆசைககளை கூட முயன்று மனிதன் துறக்கலாம்; ஆனால் அகங்காரத்தை வேரறுப்பது துறவிகளால் கூட எளிதில் செய்ய முடியாத காரியம்.

    அகங்காரத்தின் அணு கூட தன்னை அண்டாமல் காத்து கொண்டதினாலே அனுமன் பெருமை அகிலத்தில் யுகங்கள் கடந்து மணம் பரப்புகிறது. மமதை நம் தலைகேறாமல் வழி காட்டிய வல்லவனான நல்லோன் மாருதிக்கு மனிதன் நன்றி கடன் பட்டிருக்கிறான்"


    Arumaiyana varigal! Naan migavum unardhu vaasitha varigal! Vazhthukkal Friend!


    Vimalthegreat likes this.

  10. #40
    jspriya is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    thousand oaks
    Posts
    116

    Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...

    பிரபஞ்சத்தில் உருவமற்றவைகளின் ஆற்றல் அளப்பரியது ; அவற்றில் விஞ்சி நிற்பது அன்பின் ஆற்றல்.
    very true! Nice wordings & sentences.



    Vimalthegreat likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter