Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree507Likes

Penmai's 9th Birthday Contest


Discussions on "Penmai's 9th Birthday Contest" in "Special Contest" forum.


  1. #11
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Penmai's 9th Birthday Contest

    Happy birthday penmai. Penmai menmelum valara vazthukkal.kudos to penmai. to penmai team


    Sponsored Links

    KOTHAISURESH

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Penmai's 9th Birthday Contest

    1 .சுமாராய் திறமையை வெளிப்படுத்தும் எங்களை சூப்பர் ஆக செய்து இருப்பதாக கூறி ,எங்களையும் பாராட்டி உற்சாகப் படுத்துவதில் முதல் இடம்.

    2.இங்கு பள்ளி காலத்திற்கு பிறகு தமிழில் எழுதுவதை முழுவதும் மறந்து விட்ட நிலையில் எங்களை மீண்டும் தப்பும் தவறுமாகாவது தமிழில் எழுத வைத்து புண்ணியம் கட்டி கொண்ட பெருமை பெண்மையை சாரும்.

    3.வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் சமமாக பழகுவதில்.நடுத்தர வயது உடைய என்னை போன்ற சிலரும் இளமையாக இருக்க உதவுகிறது.

    4.இங்கு இருக்கும் சில இளம் வயது தோழிகள் அவர்களின் கருத்துகள் ,பதிவுகள் எல்லாம் படிக்கும் போது, பெற்றோர்கள் ஆகி நம்மில் பலர்
    இன்றைய இளைய தலைமுறைகளின் எண்ண ஓட்டங்கள் ரசனைகள் ,எதிர்பார்ப்புகள் எல்லாம் அறிய முடிகிறது.இதுவயது வந்த குழந்தைகள் இருக்கும் சில பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும்.

    5.இங்கு உள்ள ஆண் ,பெண் தோழர்கள் மற்றும் தோழிகளிடம் நம் கருத்துகளை பயம் இன்றி பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளலாம் .

    6.பெண்மை ஒரு பல்கலைகழகம் அல்லது நூலகம் போன்றது .இதில் நாங்கள் விரும்பும் தலைப்பில் பல செய்திகள் அறிந்து கொள்ள முடிகிறது.

    7.நீ எதுவாக பார்க்கிறாய்யோ அதுவாய் நான் தெரிவேன் என்ற பரமாத்மாவின் கூற்று படி ‘நாம் பொழுது போக்கு தளமாய் நினைத்தால்
    பொழுது போக்கு தளமாகவும்,நமக்கு தேவையான பயன் உள்ள தகவல்களை அறியும் தளமாக நினைத்தால் தகவல்களை வாரி வழங்கும் தளமாக இருக்கிறது.

    8 ஒரு காலத்தில் தமிழ் நாவல்களை எழுதும் திறமை இருந்தாலும் அவர்களுக்கு எழுதும் வாய்புகள் கிடைப்பது என்பது மிகவும் கடினம் .இப்போது எழுதும் ஆர்வம் உள்ள பலரையும் ஊக்கப் படுத்தி ,பல தமிழ் எழுத்தாளர்களை உருவாகிய பெருமை பெண்மையை சாரும் .எழுதும் ஆர்வம் இல்லாமல் எழுத்து திறமை உள்ள பலரை இனம் கண்டு அவர்களையும் எழுதவைத்த பெருமை பெண்மையை சாரும்.பல எழுத்தாளர்களை எங்கள் தோழிகள் ஆகிய பெருமை பெண்மையை சாரும்.

    9 பெண்மை என்னும் தோப்பில் எங்கள் ஓய்வு நேரத்தில் வந்து அமர்ந்து இளைப்பாறி செல்லுவதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி .இன்னும் பல புதிய பறவைகள் இங்கு வந்து கூடு கட்டி மகிழ என் வாழ்த்துக்கள் .

    சனிக்கிழமை என்னால் வர முடியுமா என்று தெரிய வில்லை .அதனால் என்
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெண்மை .



    Attached Thumbnails Attached Thumbnails Penmai's 9th Birthday Contest-img_2048.jpg   Penmai's 9th Birthday Contest-penmai.png   Penmai's 9th Birthday Contest-penmai1.png   Penmai's 9th Birthday Contest-penmai2.png  
    Last edited by chan; 18th May 2017 at 01:45 PM.

  3. #13
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    1,2 and 7 sema sema points sister.....Superb write up expresses the true reality...neither more nor less @chaan

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #14
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Penmai's 9th Birthday Contest

    Thats so Lovely Lakshmi @chan!! Loved every Single Bit.. Thanks a ton to Say So.. Cheers!


  5. #15
    Ammu abi's Avatar
    Ammu abi is offline Commander's of Penmai
    Real Name
    Abinaya Santosh
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Salem
    Posts
    1,337

    Re: Penmai's 9th Birthday Contest

    Penmaiyai Pottrum Penmaikku iniya pirandhanaal nalvazhthukkal :-) inum sirandhu vilanga vazhthugiraen.🙏


  6. #16
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Penmai's 9th Birthday Contest

    அருமையான போட்டி விரைவில் வருகிறேன்....

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  7. #17
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Penmai's 9th Birthday Contest

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பெண்மைக்கு..


  8. #18
    indhumathi.s's Avatar
    indhumathi.s is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    tirunelveli
    Posts
    832

    Re: Penmai's 9th Birthday Contest

    happy birthday penmai

    A smile is the best makeup any GIRL can wear

  9. #19
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,974
    Blog Entries
    14

    Re: Penmai's 9th Birthday Contest

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெண்மை....எப்போதும் நானும் உன்னுடன் பயணிக்க வேண்டும்!!!


  10. #20
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's 9th Birthday Contest

    "அணுவை துளைத்து எழுகடலை புகட்டி
    சிறுக தரித்த குறள் "

    என்று தமிழ் மூதாட்டி புகழும் பேரு பெற்றது திருக்குறள்.

    தனி மனித வாழ்வை நிர்வகித்து செம்மைப்படுத்திக்கொள்ள மட்டுமல்ல, எந்த ஒரு அமைப்பையும் சிறப்போடு நிர்வகித்து நடத்தி செல்ல செழுமையான பல செய்திகளை தனக்குள்ளே பொதிந்து வைத்துள்ள அரும்பெரும் பொக்கிஷம் பொய்யாமொழி புலவரின் உலக பொது மறை.

    பெண்மையின் பிடித்த விடயங்கள் கேட்டால் திருக்குறள் சிறப்புகளை அளந்து கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறதா தோழமைகளே!!!!

    ஆம்!!! பெண்மையில் எனக்கு பிடித்தவற்றை அறம், பொருள் மற்றும் இன்பம் என்று திருக்குறள் வழியாக நான் வகைபடுத்த போவதன் முன்னுரையாக தான் தெய்வநூலின் சிறப்புகளை கூறினேன்.

    I. அறம்

    1. நம் ஊரில் பெண்களுக்கான நிறைய வலைதளங்களின் பெயர்கள் கூட ஏனோ ஆங்கிலத்தில் வைக்கிறார்கள். ஆனால் நம் வலைத்தளம் பெயரளவிலேயே “பெண்மை” என்று தனக்கு அழகிய நாமகரணம் சூட்டி கொண்டு தமிழ் மீது தனக்கு இருக்கும் அன்பை பறை சாற்றுவது சிறப்புக்குரியது. இங்கே தமிழுக்கான முக்கியத்துவம் அதிகம். பெரும்பாலான பதிவுகள் நம் மொழியிலேயே இருக்கும்.

    நான் QUORA வலைதளத்தை தொடர்ந்து வாசிப்பவள்.
    பெண்களுக்கான சிறப்பு தமிழ் வலைத்தளங்கள் எது என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு நம் பெண்மையை ஒரு நபர் பரிந்துரைத்து இருந்தார். அந்த பதில் படிக்கும் போது ஏனோ அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்குள் உணர்ந்தேன். தமிழில் பதிவிடும் பழக்கம் கொண்ட உறுப்பினர்களுக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.

    2. பருவகால திரிகள் (Seasonal Threads) என்னை கவர்ந்த மற்றொரு அம்சம். சமையல், பண்டிகைகள், போட்டிகள், கல்வி, ஏன் தலையங்கம் உட்பட இங்கே நிறைய திரிகள் அந்தந்த காலகட்டத்திற்கு பொருத்தமாக யாராலாவது தொடங்கப்பட்டு விடும். பெரும்பாலும் இதற்கான பாராட்டுக்கள் மதிப்பீட்டாளர்கள் (Moderators) மற்றும் சகோதரி லக்ஷ்மி @chan அவர்களையே சாரும். (நான் கவனித்த வரை).

    எந்த திரியிலும் கேள்வி, சந்தேகம் மற்றும் உதவி யார் கேட்டாலும் அதற்கான பதில் மிக மிக விரைவாக கிடைக்கும். மதிப்பீட்டாளர்களின் (Moderators) இணக்கமான அணுகு முறை பற்றி இங்கே நான் தனி பட ஏதும் சொல்லி தெரியவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

    3. சமூக வலைதளங்களில் பாதுகாப்பு மட்டுமல்ல தரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பதிவுகளின் தரத்திற்கு இங்கே தனி கவனம் இருக்கும். தரமற்ற பதிவுகள் என்று எதுவும் இங்கே இதுவரை என் பார்வையில் பட்டது இல்லை. கல்லூரி மாணவிகளுக்கு கூட தங்கள் தாய்மார்களே இந்த தளத்தை பரிந்துரை செய்யுமளவிற்கு தரம் காப்பது பாராட்டுக்குரியது.

    இரண்டு லட்சம் உறுப்பினர்கள் இரண்டு கோடியாக அதிகரிக்க அறம் வழுவாது தொடர்ந்து நடை போடுங்கள் என்பது எனது வேண்டுகோள்.

    II. பொருள்


    4. பொருள் ஈட்டுவதும், சேர்ப்பதும் குற்றம் என்ற ஒரு மிக தவறான சித்தாந்தம் நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. நம் பூமி பந்தில் பல உயிர்களின் பசி போக்கி நலன் காக்கவும், மனித மனதில் மகிழ்ச்சியை கொண்டு வரவும் காரணமான பொருளை இகழ்வாக நினைப்பது மாபெரும் பிழை. வளர்ச்சி என்பதன் இன்றைய அளவுகோல் பொருளாதாரத்தை கொண்டே அளக்கப்படுகிறதன்றோ? தொடர் தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலமாக தன்னை வளர்த்து கொள்ளுவதோடு, இங்கே அறிமுகமும் புதிய எழுத்தாளர்களுக்கு அடையாளம் தந்து அவர்கள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி தன்னையும் வளர்த்து கொள்ளும் பெண்மையின் Win-Win Strategy பாராட்டுக்குரியது.

    5. CSR, Green Accounting System , Sustainable Development என்று நிதியம் மற்றும் தொழில் நிர்வாகத்தில் இயற்கையை முன்னிறுத்தி நிறைய கருத்துப்படிவங்கள் (Concepts) உண்டு. பெண்மை இயற்கை சார்ந்த விடயங்களில் அக்கறை எடுத்து கொள்ளும் விதமாக இங்கே அவ்வபோது திரிகள் தொடங்கப்படும். பெண்மையின் 5 – ஆவது பிறந்த நாள் திரி ஒன்று சமீபத்தில் கண்ணுற்றேன். போன வருடம் கூட உலக சூழலியல் தினத்தன்று எனக்கு மிகவும் பிடித்த விதமாக ஒரு திரியில் பெண்மை உறுப்பினர்களின் தோட்டம் பற்றி பார்த்த நினைவு. பொருளீட்டும் பேராசையில் இயற்கையை முழுவதுமாய் சுரண்டியதன் விளைவை இப்போது உலகம் அனுபவித்து கொண்டு இருக்கிறது.

    எண்ணியல் இந்தியா (Digital India) என்று அரசாங்கம் கூப்பாடு போட்டு எல்லா சேவைகளையும் கணினி மயமாக்குவது , செயல்களின் சுலப தன்மை மற்றும் வெளிப்படை தன்மை மட்டுமே காரணமல்ல. சூழலியல் சார்ந்த காகிதமற்ற ஆவணப்படுத்தலும் (Paperless Documentation) இந்த எண்ணியல் மயமாக்கலின் பின்னணி காரணிகளில் மிக முக்கியமான ஒன்று. பெண்மையின் மென் புத்தகங்கள் மற்றும் மாத இதழ் நல்ல முயற்சி. நேரடியாக சூழலியலில் பெண்மை பங்கெடுக்க புது முயற்சிகள் எதுவும் மேற்கொண்டால் மிகவும் வரவேற்புக்குரியது.

    6. “நம் புவியில் மனிதனின் தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு வளங்கள் உள்ளது. அவனின் பேராசை அளவுக்கு இங்கு வளங்கள் இல்லை” - மகாத்மாவின் சத்திய வார்த்தைகள் இவை. ஏனோ பகிர்தல் சித்தாந்தத்தின் மீது அப்படி ஒரு கரைகாணா வெறுப்பு நமக்கு; நான் சற்று முன்னே குறிப்பிட்டது போல பொருள் ஈட்டுவது எவ்ளோ சிறப்போ அதை விட அதிசிறப்பு பொருளை பகிர்ந்து கொள்வது. பெண்மை அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் வழியே நற்காரியங்கள் செய்து வருவது பாராட்டுக்குரியது.

    III. இன்பம்


    7. என் மேல் அக்கறை கொண்டவர்கள் என் மீது வைக்கும் ஒரு பொதுவான விமர்சனம் எனது முழு திறன்களோடு நான் செயல்படுவதுதில்லை என்பது. ( You are not utilizing your full potential...... Get rid of your laziness and act. My instant reply to this criticism is “ hey, the majority of human beings are like me and I’m not an exception my dears”
    ). இப்படிப்பட்ட ஒரு வாழைபழ சோம்பேறியை மொறுமொறு வாழைக்காய் சிப்ஸாக அவ்வபோது வடிவம் மாற்றும் பெருமை பெண்மையையே சாரும்.

    பெண்மையின் சிறப்பு போட்டி திரிகளின் தலைப்பு என் நேர நெருக்கடியை தாண்டி என்னை எழுத வைத்து விடும்.
    என் நட்பு ஒருவர் என்னை நீயா நானாவில் பங்கெடுக்க சொல்லி விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் பெண்மை பற்றி பிடித்த விடயங்கள் என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்ததால் நான் இந்த முறையும் இந்த திரியிலேயே பங்கெடுத்து விட்டேன். (Dei mollll, I feel its unfair to participate in two contests in the same month da. So I’ll fulfill your wish in some other occasion. Manicho natpay @gkarti )

    8. ஆஹா ஓஹோவென்று எழுதவராதென்றாலும் அடுத்தவர் சகித்து கொண்டு படிக்கும் அளவுக்கு என்னால் எழுத முடியும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எனக்கு எழுதுவதை விட படிப்பதில் தான் விருப்பம் அதிகம். அப்படியே எழுதினாலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள ஏனோ பெரிதாக ஆசைப்பட்டதில்லை. இங்கே என்னை எழுத தூண்டுவது தலைப்புகளுக்கு தான் பெரும் பங்கென்றாலும் வெற்றியை இலக்காக வைத்து நான் எழுதியதில்லை.

    இத்தனையையும் தாண்டி, வெற்றியை விட வெற்றி பெற்றால் வரும் பரிசு புத்தகங்களின் மீது இருக்கும் ஆசை என்னை மறைமுகமாக இங்கே எழுத தூண்டும் மற்றுமொரு காரணம். நம்மால் சொந்தமாக புத்தங்கங்கள் வாங்கி படிக்க முடியுமென்றாலும் பரிசாக வரும் புத்தகத்தை கையிலேந்தி படிப்பது ஒரு தனி சுகம். அனுபவித்தவர்கள் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    இந்த பரிசு புத்தகங்கள் பற்றி நான் முதல் போட்டியில் இங்கே வென்ற போதே இளா அக்காவிடம் என் பாராட்டுகளை தெரிவித்தேன். வெறும் புத்தகமாக அனுப்பாமல் மதிப்புமிக்க எழுத்தாளர்களின் வாழ்த்துகளோடு கையொப்பமிட்டு அனுப்பினால் இன்னும் சிறப்பாக இருக்குமென்பது என் கருத்து. இதில் சிரமமிருப்பின் பெண்மையின் வாழ்த்துகள் ஏந்தி வந்தாலும் உறுப்பினர்களுக்கு பெண்மையோடான பிணைப்பு கூடுமென்பது என் கணிப்பு.

    9. வாழ்வின் நோக்கம் நிறைவும், மகிழ்ச்சியும் தானே!!!! பெண்மையில் ஈடுபாட்டோடு பங்கெடுத்தால் இந்த இரண்டும் இங்கே கைகூடும் என்பது என் அனுபவம். அனுதினமும் உரையாடல், போட்டியில் எழுதுவது என்று பங்கு பெறாமல் இருந்தாலும், இங்கே வருபவர்கள் கதை படிக்கும் போதாவது மனதில் மகிழ்ச்சியை கண்டிப்பாக உணர்வார்கள்.
    தொடர்ந்து இங்கே உரையாடும் நபர்களுக்கு நினைத்து நினைத்து நெகிழ்ந்து போக எத்தனையோ தருணங்களையும், அனுபவங்களையும், நட்புகளையும் பெண்மை பரிசளித்து இருக்கிறாள். திறன் வெளிபாடு தாண்டி நம்மை நாமே புதுப்பித்து கொள்ள நமக்கு பெண்மை பேருதவி புரிவது தனிசிறப்பு.


    பத்தாவது ஆண்டில் பாதம் பதிக்கும் பெண்மை பல பல ஆண்டுகள் இணைய உலகில் வெற்றி நடை போட மனதார வாழ்த்துகிறேன்
    .

    பெண்மை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவர்க்கும் இந்த பதிவு சமர்ப்பணம்
    .

    பி.கு : சுயபுராண துதிபாடல் சற்றே அதிகமாகி விட்டது. தடங்கலுக்கு வருந்துகிறோம் மாதிரி இந்த சுயபாடலுக்கு வருந்துகிறேன்.

    Last edited by sumathisrini; 24th May 2017 at 11:36 AM. Reason: Correction done as per the member's request
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter