Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree760Likes

Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!


Discussions on "Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!" in "Special Contest" forum.


 1. #91
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Quote Originally Posted by sumathisrini View Post
  இந்த மரம் எங்க வீட்டு வாசலில் வைத்திருக்கிறோம்... இதே கலரில் தான் பூ பூக்கும்.

  கூகுளில் தேடியதில் இதன் பெயர் Plumeria Rubra - பெருங்கள்ளி என்று தெரியவந்தது.
  நன்றி சுமதி நான் இந்த கலர் வெள்ளை,சிவப்பு
  மற்றும் பிங்க் உள்ளே மஞ்சள் கலந்து ஒரு கலர்
  மற்றும் purple கலர் இல் மஞ்சள் கலந்து வைத்து இருந்தேன்.
  பெரிய மரமாக பூத்து குலுக்கும் போது கட் செய்து விட்டார்கள்.


  Sponsored Links

 2. #92
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Quote Originally Posted by gkarti View Post
  @kvsuresh @chan @gowrymohan Apadiye Nominees Solunga Makka..
  எனக்கு யாரை nominate செய்வது என்று தெரியவில்லை .எல்லோரும் புதிய member ஆக இருக்கிறார்கள்.தெரிந்த நம் பழைய தோழிகள் பெயரும் நீங்கள் tag செய்து விட்டிர்கள்.

  நமக்கு தெரிந்த writer ரம்யா ராஜ்,சவிதா ,சரயு ,லட்சுமி இவர்கள் யாரையும் இப்போது பார்க்க முடியவில்லை.நான் வரும் வேளை இவர்கள் பதிவுகள் பார்க்க முடிவது இல்லை.

  இப்போது யார் பெரும் நினைவு வரவில்லை.


 3. #93
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Quote Originally Posted by kasri66 View Post
  @chan

  லக்ஷ்மி,

  உங்கள் வீட்டு குட்டித்தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. சுத்தமா அழகா maintain பண்ணுவதில் உங்களை பீட் பண்ண ஆள் இல்லை. Keep it up!  நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் அப்படியே ஒத்துக்கறேன். நமக்கு அருமையான எந்த விஷயமானாலும் நம்மைப் போலவே பிறரும் பார்த்துக்கொள்வார்கள் என்பது நடக்கவே நடக்காத ஒன்றுதான். எனக்கும் இந்த அனுபவம் உண்டு, ஆனால் தோட்ட விஷயத்திலில்லை. எனக்கே தோட்டமெல்லாம் கை வராத விஷயம்தான்.


  நீங்கள் சொன்னதுபோல நான் திருமணமாகி வந்தபோது என் மாமியார் வீட்டில் 5 தென்னை மரங்கள், ரெண்டு மாமரம், ஒரு கொய்யா, ஒரு மாதுளை, ஒரு சாத்துக்குடி மரம், ஒரு எலுமிச்சை மரம், ரெண்டு பப்பாளி, 2 அசோகா மரங்கள், ரெண்டு வாழை, ஒரு சப்போட்டா மரம், கறிவேப்பிலை மரம், மரம் போல பெரிதான ஒரு பவளமல்லி செடி, நிறைய வகை செம்பருத்தி, காய்கறிகள், கீரை, கனகாம்பரம், டிசம்பர் பூ, ரோஜான்னு ஒரு பூங்காவே இருந்தது. இவையெல்லாம் தவிர ஒரு துளசி வனமே உண்டு. எல்லாம் நீட்டா இருக்கும்.


  Fan போடாம இந்த காற்றிலேயே இரவு படுக்கும்வரை உக்கார்ந்திருப்போம். என் பெரிய பொண்ணு பிறந்ததும் கொசுறா ஒரு ஊஞ்சல் வேற. அங்கேதான் எங்க தர்பாரே நடக்கும். ஆனா அதை maintain பண்ண பாடுபடணும்.

  மல்லிச்செடி வைச்சா பாம்பு வரும்.

  வாழையில் பச்சைப் பாம்பு இருக்கும்.

  தென்னை மரம் மட்டைகளைக் கழிக்கலைன்னா தலை மேலே விழும்...அப்பப்போ மரமேறியிடம் எல்லா மட்டைகளையும் கழிக்கச்சொல்லிட்டு, இளநீர் தேங்காய் எல்லாம் பறிச்சு ஒரு veranda அல்லது Car shedல் போட்டு வைப்போம். வாங்க ஆளே இருக்காது. (அந்த ஏரியாவில் எல்லார் வீட்டிலையும் தென்னை மரம்னா பின்ன எப்படி?) அடிமாட்டு விலைக்கு தந்தாலும் வாங்கமாட்டாங்க. முத்தவைச்சு கொப்பரையா செய்து எண்ணெய் செக்கில் எண்ணெய் ஆட்டுவாங்க.


  தென்னை மட்டைகளை சேர்த்து வைச்சு தினம் தோட்டத்தில் வெந்நீர் அடுப்பு போடுவோம், சம்மர்ன்னா இதெல்லாம் எரிச்சுதான் வடாம் வத்தல் கிளறுவோம். ஒரே புகை, சாம்பல் எல்லாம் இருக்கும், ஒரு மழை வந்ததுன்னா மறுபடி எல்லாம் பச்சுன்னு வந்திடும்.


  பழங்களுக்கு அணில், குரங்கு, ஸ்கூல் பிள்ளைகள் ன்னு ஒரு கூட்டமே வரும். அதுக்கு காவல் காக்கணும்.
  கறிவேப்பிலையை எதிர் கடை நாட்டார், இருபது ரூபாய்க்கு மரத்தையே ஒடிச்சுட்டு போவார்.

  எலுமிச்சை ஊறுகாய், ஜூஸ் எதுவும் சீந்த ஆள் இருக்காது.

  செடி நிறைய பூ இருந்தாலும் தலையில் ஒண்ணும் இருக்காது.

  சில சமயம் அவங்க மாசக்கணக்கில் ஊர் போனா, என்னால் பார்த்துக்கவே முடியாது, தெரியவும் தெரியாது. சும்மா ஹோஸ் பைப்பை அங்கே இங்கே இழுத்து விடறது மட்டும்தான் எனக்குத் தெரிஞ்ச வேலை. அவங்க இருக்கும்போது நான் எப்படி தண்ணி ஊத்துவேனோ, அதே போலத்தான் அவங்க வெளியூர் போகும்போதும் செய்வேன். பெருக்க மட்டும் வேலைக்காரம்மா வருவாங்க.

  ஆனா செடியெல்லாம் வாடித்தெரியும். என் கைராசி போலன்னு நினைச்சு சொல்லுவேன். இல்ல...நான் அப்பப்போ செடி கிட்டேயெல்லாம் பேசிட்டே இருப்பேன், அதான் நல்லா வளரும்பாங்க. ஒரு முறை சரி, நாமளும் பேசலாம்னு நினைச்சு பேசிட்டே திரும்பினா பக்கத்து வீட்டில் ஒரு ஆள் சந்தேகமா என்னைப் பார்க்கவும்தான் இதுவும் நமக்கு வரலைன்னு தெரிஞ்சுது.

  (நீங்க நினைச்ச மாதிரிதான்
  என் மாமியாரும் அன்னிக்கு feel பண்ணியிருப்பாங்களோன்னு இப்போ நினைச்சுக்கறேன்...)

  முதலில், “ஆஹா...கதைகளில் படிச்சதுபோல பகலில் தோட்டத்தில் உட்கார்ந்துக்கலாம்...வீட்டைச் சுற்றி ஓடலாம்...”ன்னெல்லாம் தோணினாலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே தலைமேல என்ன வந்து விழுமோன்னு பயப்படும்படி பறவைகள் இம்சை, குரங்கு பயம் சும்மாவே விடாது. ஈவ்னிங் ஆனா கொசு வராம இருக்க கதவையெல்லாம் அடைச்சுட்டு உள்ளே fan காத்திலதான் இருக்கணும்.

  இதில் கட்டெறும்பு, கரையான்னு தொல்லையா வேற இருக்கும். அப்பப்போ செடிகளை எடுப்பதும் மறுபடி plant பண்ணுவதுமா இருந்தது. மாமரம் வளர்ந்து வளர்ந்து வீட்டுக்குள் கிளை இடிக்கும், அப்புறம் பூச்சி வந்தது...நாங்க ஒரு பத்து நாள் டூர் போயிட்டு வந்தா வீடு வெறிச்சுன்னு இருந்தது...மாமரம் காணோம்...என் கணவர் ஆசையா வளர்த்த நாய் இறந்து, அதைப் புதைத்த இடத்தில் வைச்ச மரமாம் அது...சொல்லாம வெட்டிட்டாங்கன்னு அவருக்கு வந்த கோபம் நினைச்சா இன்னிக்கும் எல்லாருக்கும் டெர்ரர்தான். அதெல்லாம் ஒரு காலம்னு ஆச்சு.


  ‘நீங்கள்லாம் வெளியூர் வேலைன்னு போயிடுறீங்க...என்னால பார்த்துக்க முடியலை’ன்னு என் மாமியார் அலுத்துப்பாங்க...அப்புறம் தனிவீடு, ரோடு லெவல் ஏறிப்போச்சு...இப்படியெல்லாம் பல வித காரணங்களால் அந்த ஏரியாவே இன்னிக்கு கான்க்ரீட் காடு ஆயாச்சு. இப்போ பாருங்க..மொட்டைமாடியில் வைச்ச செடிக்கு தண்ணி ஊத்த ஏற முடியாதபடி கால் உடைஞ்சு, வீட்டுக்குள் குட்டி செடி வளர்க்கும் அளவுக்கு அவங்களே வந்துட்டாங்க.


  ஆனா, நீங்க இருக்கற ஊரிலே கிடைக்கறதை வைச்சு நீங்க அழகா பார்த்துக்கறதிலேயே உங்க திறமை தெரியுது. எனக்கு அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராத விஷயம். நீங்க upload பண்ண வீடியோவும் பார்த்திருக்கேன் லக்ஷ்மி. என் அண்ணாக்கள் எல்லாம் அவங்கவங்க வீட்டிலே இப்படி மொட்டைமாடி தோட்டம் அதுஇதுன்னு போடறாங்க.


  இங்கே ஒரு விஷயம் ஷேர் பண்ணிக்கலாம்னு தோணுது. இங்கே என் சின்ன மகள் காலேஜில் SMU Grow ன்னு ஒரு Group Project இருக்கு. அதில் நாலு டீம் இருக்கு. ஒரு டீம் (இந்த SMU Central Business City ல இருக்கற Uni) மொட்டைமாடியில் கிடைச்ச இடத்தில் அழகா தோட்டம் போட்டு அதை பார்த்துக்கும். அதன் படங்கள் கடைசியில் போடறேன். பெரும்பாலும் எலுமிச்சை, Aloe vera, துளசி, லெமன் கிராஸ் இப்படித்தான் இருக்குமாம். இந்த வருடம் medicinal value உள்ள பிளான்ட்ஸ் மட்டும்தான் இருக்கு.


  ரெண்டாவது டீம் food waste ஐ உரமா மாத்தும். இதுக்கு costly machine எல்லாம் வரவைச்சிருக்காங்க. அதில் campus உள்ள இருக்கற foodcourtல் வேஸ்டாகும் உணவை எலும்பு போன்றவை இல்லாம பிரிச்சு இதில் கொட்டி மறுபடி அந்த உணவை top soil ஆக்கினா, அதை வாங்க ஆளிருக்காம். ஆனா அதில் தங்களுக்கு லாபமில்லை, உணவை பிரிக்க manpower செலவுன்னு உணவகங்கள் ஆர்வம் காட்டறதில்லை. அதை கொஞ்சம் செட்டில் செய்வது இந்த டீமின் வேலை.

  மூணாவது டீமுக்கு (இதில்தான் என் பொண்ணு இருக்கா) food waste வரை போவானேன்...அதை கொஞ்சமா தேவைக்கு ஏத்தமாதிரி ஆர்டர் பண்ணும் பழக்கத்தை ஏற்படுத்த திட்டங்கள் போடுவது இந்த டீமின் வேலை.

  நாலாவது டீம் ஒரு App develop பண்ணிட்டிருக்காங்க...இப்படி எங்கேயாவது உணவு சாப்பிடாமலேயே வீணாச்சுன்னா அதை inform பண்ணிடும் அந்த App. தேவைப்படறவங்க அங்கே போய் குறைந்த விலைக்கு சாப்பிட்டுக்கலாம்னு. இப்படி சில நல்ல விஷயங்கள் நடக்குது.

  முதல் டீம் சரியா பார்த்துக்கலைன்னா அதனோட பாதிப்பு எல்லா டீமுக்கும் உண்டு. எங்க வீட்டு மகாராணி அப்பப்போ அங்கே போயி என் மாமியாருக்கு வீடியோவில் செடிகளைக் காட்டிடுவாள். சில சமயம் கோலிகுண்டு சைஸில் கிடைக்கும் lime எடுத்துட்டு வந்து டீ போட யூஸ் பண்ணுவாள்.

  இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு தூரம் சக்செஸ் ஆகும்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

  உங்கள் கனவும் நிறைவேற வாழ்த்துக்கள். தோட்டக்கலை என்பது ஆசை இருந்தாலும் எல்லாருக்கும் நிறைவேறுவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் லக்ஷ்மி!

  (நீங்க பேர் தெரியாதுன்னு சொன்ன மரம் நான் வாடகைக்கு இருந்த வீட்டில் இருந்தது. ரப்பர் பிளான்ட் போல இலை இருக்கும்னு நினைக்கிறேன். அழகான பூக்கள். எனக்கும் பேர் தெரியல.)


  எனக்கு பூ செடிகள் வைக்க மிகவும் பிடிக்கும் .அதன் நறுமணத்தை சுவாசித்தல் நமக்கு நல்ல புத்துணர்ச்சி வரும்.நான் செடியில் இருந்து பூக்கள் பறிக்க மாட்டேன்.ரோஸ் கூட பறிக்க மாட்டேன்.அது செடியில் இருக்கும் போது தான் அழகா இருபது போல் தோன்றும்.

  பாரிஜாதம் எங்கள் படுக்கை அறையை ஒட்டி இருப்பதால் அது பூக்கும் போது அதன் மணம் படுக்கை அறை முழுதும் பரவி இருக்கும்.
  பவளமல்லி மணம் பகலை விட இரவில் அந்த தெரு முழுதும் பரவி இருக்கும்.முக்கியமாக நம்ம ஊர் சாக்கடை நாற்றத்தில் இருந்து தப்பிக்க இது போன்ற மணம் வீசும் மலர்கள் உதவி செய்யும்.

  ஆசை ஆசை யாக வளர்த்த செண்பக மரம் .பெரிய மரம் ஆகி எப்படி இறந்தது என்று தெரியவில்லை .நீங்கள் போட்ட எல்லா செடி மரங்கள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது .நீங்கள் கையில் வைத்து இருப்பது dill என்று நினைக்கிறேன்


 4. #94
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,375
  Blog Entries
  19

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Quote Originally Posted by chan View Post
  எனக்கு பூ செடிகள் வைக்க மிகவும் பிடிக்கும் .அதன் நறுமணத்தை சுவாசித்தல் நமக்கு நல்ல புத்துணர்ச்சி வரும்.நான் செடியில் இருந்து பூக்கள் பறிக்க மாட்டேன்.ரோஸ் கூட பறிக்க மாட்டேன்.அது செடியில் இருக்கும் போது தான் அழகா இருபது போல் தோன்றும்.

  பாரிஜாதம் எங்கள் படுக்கை அறையை ஒட்டி இருப்பதால் அது பூக்கும் போது அதன் மணம் படுக்கை அறை முழுதும் பரவி இருக்கும்.
  பவளமல்லி மணம் பகலை விட இரவில் அந்த தெரு முழுதும் பரவி இருக்கும்.முக்கியமாக நம்ம ஊர் சாக்கடை நாற்றத்தில் இருந்து தப்பிக்க இது போன்ற மணம் வீசும் மலர்கள் உதவி செய்யும்.

  ஆசை ஆசை யாக வளர்த்த செண்பக மரம் .பெரிய மரம் ஆகி எப்படி இறந்தது என்று தெரியவில்லை .நீங்கள் போட்ட எல்லா செடி மரங்கள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது .நீங்கள் கையில் வைத்து இருப்பது dill என்று நினைக்கிறேன்

  நிஜம்தான். பூக்கள் செடிகளில்தான் freshஆவே இருக்கும்.

  சிங்கப்பூரில் soil நல்லாவே இருக்கும். Condominium களில் மண்ணுக்கு உரத்தை injectபண்ணிடுவாங்களாம். செடி வைக்க விடும் சின்ன passageல் கூட மரங்கள் செழிப்பா இருக்கும்.
  படத்தில் இருப்பது நான் வைக்கல லக்ஷ்மி. காலேஜில் இருக்கும் சிறு மாடித்தோட்டமது. அவள் கையில் இருப்பது dillதான்.

  - Chitra

 5. #95
  honey rose's Avatar
  honey rose is online now Yuva's of Penmai
  Real Name
  Divya Bharathi.R
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  chennai
  Posts
  9,016

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  இன்று நாங்கள் வைத்த பாரிஜாத பூச்செடி
  Attached Thumbnails Attached Thumbnails Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-20170624_133222.jpg   Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!-20170624_133222.jpg  
  Last edited by gkarti; 24th Jun 2017 at 06:47 PM. Reason: Enlarged & Corrected the Pic Orientation!

 6. #96
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,126

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Cheers DB.. Goodo.. And Your Nominees?


 7. #97
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,567

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Quote Originally Posted by honey rose View Post
  இன்று நாங்கள் வைத்த பாரிஜாத பூச்செடி


  சூப்பர் திவ்யா, இந்த மரம் எங்க வீட்டில் கூட இருக்கிறது. பூ பார்ப்பதற்கு கிட்டத்தட்ட வெள்ளை ரோஜா மாதிரி இருக்கும். நன்றி இங்கு பகிர்ந்தமைக்கு.


 8. #98
  honey rose's Avatar
  honey rose is online now Yuva's of Penmai
  Real Name
  Divya Bharathi.R
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  chennai
  Posts
  9,016

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Am inviting some of my friends @saidevi , @diyaa, @sumitra @sharathusha @sathyananthi to join in this thread and requesting them to continue this chain


 9. #99
  honey rose's Avatar
  honey rose is online now Yuva's of Penmai
  Real Name
  Divya Bharathi.R
  Gender
  Female
  Join Date
  Aug 2013
  Location
  chennai
  Posts
  9,016

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Quote Originally Posted by sumathisrini View Post
  சூப்பர் திவ்யா, இந்த மரம் எங்க வீட்டில் கூட இருக்கிறது. பூ பார்ப்பதற்கு கிட்டத்தட்ட வெள்ளை ரோஜா மாதிரி இருக்கும். நன்றி இங்கு பகிர்ந்தமைக்கு.
  நன்றி அக்கா, ரொம்ப வாசனையாவும் இருக்கும்ல கா இந்த பூ!


 10. #100
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,567

  Re: Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge!

  Quote Originally Posted by honey rose View Post
  நன்றி அக்கா, ரொம்ப வாசனையாவும் இருக்கும்ல கா இந்த பூ!

  ஆமாம் திவ்யா . இந்தப் பூவிற்கு இன்னொரு பெயரும் உண்டு... ராஜ சுகந்தம் .loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter