Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree169Likes

Penmai's Friendship day Contest


Discussions on "Penmai's Friendship day Contest" in "Special Contest" forum.


  1. #11
    kirubajp's Avatar
    kirubajp is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    திருவாரூர்
    Posts
    206

    Re: Penmai's Friendship day Contest

    நட்பை தாண்டி இவ் உலகில் எதுவும் இல்லை
    நட்பு இல்லையெல் இவ் உலகும் இல்லை...

    இந்த பதிவு எனக்கு மிக முக்கியமான ஒன்னு

    என் அருமை தோழிய பத்தி சொல்லி ஆகனும். என்னோட நட்பு வட்டம் மிக சிறியது நான் சிறிது கோபகாரி ஆனால் என் கோபத்தையும் குறைப்பது அவளின் முகம். நான் நிறைய வழிகளில் வலியை தாங்கி பயணிப்பவள். இம்மி அளவும் இன்று வரை என் வட்டத்தில் எனக்கானா அங்கிகாரம் கிடைக்கவில்லை. அவமதிப்புகளும் அவமானங்களும் தான் அதிகம் அவை அனைத்தையும் "உன்னால் முடியும் " என்ற ஒரே வார்தையால் உருமாற்றியவள். எங்களின் நட்பு பள்ளி பருவத்தில் தொடங்கியது இன்றும் தொடர்கிறது. என் கதைக்கு முதல் வாசகி அவள் என் தமிழுக்கு துணைகால் அவள், என் எழுத்து பிழைகளின் இலக்கணம் அவள். நான் பட்ட உதாசினங்களுக்கெல்லாம் உயிர் கொடுத்தவள் அவள். என்றாவது நன்றி சொல்ல வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன் அது இன்றாவதில் பெருமை தான். எப்போதும் என் முதல் மேடை முதல் வெற்றி என்பதில் எல்லாம் உன் பெயர் நிச்சயம் உண்டு. என் கண்ணிருக்கெல்லாம் காரணம் அறிந்தவளே கடைசி வரை உன் நட்பு என் மடங்கிய விரல்களுக்குள் விதைந்திருக்க வேண்டும். Jenni i love you i miss u. இதிலும் இப்போது குறை காணுவாள் என் குறை நீக்கியவள்.


    Sponsored Links
    Last edited by kirubajp; 18th Jul 2017 at 01:34 PM.
    ஜோ கி

  2. #12
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's Friendship day Contest



    நான் பொக்கிஷமாக கருதும் நட்பு!

    நட்புக்காக நம் பொய்யா மொழிப் புலவர் ஒரு அதிகாரத்தையே ஒதுக்கியிருக்கிறார் என்றால் நட்பின் மகத்துவமும் நட்பு நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் எத்தனை இன்றியமையாதது என்பதும் நன்கு புலப்படுகிறது!

    தாய், தந்தை, முதல் நம்முடைய கல்வி, அறிவு, ஆற்றல், மகிழ்ச்சி, நம்முடைய செல்வம், வளமான வாழ்வு, நம்முடைய வாழ்க்கைத் துணை, மக்கட் செல்வம் என அனைத்து வளங்களையும் நமக்குத் தருவது இறைவனே என்றால் அது மிகையல்ல!

    இத்தனையையும் தரும் அந்த இறைவன், நட்பை மட்டும் நம்மையே சம்பாதித்துக் கொள்ளுமாறு பணித்துவிட்டான்!

    நாம் நல்ல நட்பை சம்பாதித்துக் கொண்டால் இறைவன் அளித்த அத்தனை செல்வங்களும் நம்மிடம் நிலைத்து நிற்கும்!

    அப்படி நாம் நல்ல நட்பை சம்பாதித்துக் கொள்ளத் தவறும்பட்சத்தில் நம்முடைய அத்தனை செல்வங்களும் நம்மிடமிருந்து மறைந்தே போகும்!

    இது தீய நட்பாயிருந்துவிட்டால் நம்முடைய செல்வங்கள் அழிந்துபடும்!

    நட்பேயில்லாமல் இருந்துவிட்டாலோ மேற்சொன்ன அத்தனை செல்வங்களும் நம்மிடம் இருந்தாலும் நமக்கு வாழ்வில் ஒரு பிடிப்பில்லாமலே போய்விடும்!

    அப்படியெனில், நட்பு என்ற ஒன்று நமக்கு எத்தனை இன்றியமையாதது என்று நனி விளங்கும்!

    எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு!

    பள்ளியில் தொடங்கிய நட்பு பள்ளி முடிந்து கொஞ்ச காலம் வரை தொடர்ந்து பின்னர் காணாமல் போனது!

    கல்லூரியில் தொடங்கிய நட்பு கல்லூரி முடிந்து கொஞ்ச காலம் வரை தொடர்ந்து பின்னர் காணாமல் போனது.

    அக்கம் பக்கத்து வீடுகளில் தொடங்கிய நட்பு நானோ அல்லது அவர்களோ வீடு மாறிச் செல்லும் வரை தொடர்ந்து பின்னர் காணாமல் போனது.

    ஒரு சில நண்பர்கள் பொய்யாய் போனாலும் பெரும்பாலான நண்பர்கள் நல்ல நண்பர்கள்தான் என்பதுதான் இங்கே பெருமைக்குரிய விஷயம்!

    பல நண்பர்களை பல்வேறு சூழ்நிலையின் காரணமாக நான் தொலைத்திருந்தாலும், வெகு சிலருடன் இன்னும் நான் தொடர்பிலிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது!

    ஆனால் இவர்களல்லாமல், நான் பெற்ற ஒரு உன்னத நட்பு, நான் என் உயிருள்ள வரை பொக்கிஷமாகக் கருதும் நட்பு, இந்த சமுதாயத்தின் மிகச் சிறந்த பெண்மணியுடன் நான் கொண்ட நட்பாகும்!

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.

    உரை: இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.

    என்கிறார் வள்ளுவர்! ஒத்த மனதுடையவர்களாக இருப்பதினால் நாங்கள் தோழிகளாக மாறினோம்!

    அவர் பெயர், அவர் செய்யும் தொழில் தவிர அவரைப்பற்றி அதிகமாக எனக்குத் தெரியாது! அவருடைய பெயருக்கு "துளசி" என்று பொருள்! அவரும் அந்த துளசியைப் போலவே எளிமையானவர்! மகிமை வாய்ந்தவர்! அதிர்ந்து பேச மாட்டார்! இன்று வரை அவரை நான் "மேடம்!" என்றுதான் அழைக்கிறேன்!

    அவர்தான் சாதாரண இல்லத்தரசியாக இருந்த என்னை, எழுத வைத்தவர்! எனக்குள் புதைந்து கிடந்த எழுத்தாற்றலை கண்டுபிடித்து என்னை எனக்கே புதிதாக அறிமுகம் செய்து வைத்தவர்!

    அவர் ஒரு ஆசிரியை! அதுவும் சிறப்புக் குழந்தைகளின் (Specially Abled Children) ஆசிரியை மற்றும் ஆலோசகர்! அவருடைய பணியில் அவர் நிறைய பாராட்டுகள் வாங்கியிருக்கிறார். பல விருதுகள் வாங்கியிருக்கிறார்.

    (சில நேரங்களில் நம் குழந்தை அடம் பிடித்து ரகளை செய்தாலே நம்மால் சமாளிக்க முடியாது! ஆனால் இவர் எப்படி சிறப்பாக செயல்படும் குழந்தைகளை சமாளித்து அவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார் என்பது மிகவும் வியக்கத் தக்க விஷயம்!)

    இந்த ஒரு விஷயமே அவரை நான் பிரமிப்பாகப் பார்க்க முக்கிய காரணமாகும்!

    இரண்டாண்டுகளுக்கு முன் அவரை நான் என்னுடைய மகனின் கோடைகால பயிற்சி முகாமில் ஒரு சக பெற்றோராக சந்தித்தேன். பயிற்சி வகுப்பிலிருந்து என் மகனை அழைத்து வர நான் வெளியே காத்திருந்தேன்! என்னைப் போலவே அவரும் தன் மகளை அழைத்துப் போக வந்திருந்தார்.

    பரஸ்பர அறிமுகத்தின் போது அவர் தன்னைப் பற்றிக் கூறியதும் நான் என்னைப் பற்றி அதிகம் கூற எதுவும் இல்லாத காரணத்தால் பொத்தாம் பொதுவாக ஹவுஸ் வைஃப் (House Wife)! என்று கூறிக் கொண்டேன்.

    அவர் என்னை ஆழமாகப் பார்த்து மெல்லிய புன்னகையுடன், "அப்ப நீங்க ஆல் ரவுண்டர்னு சொல்லுங்க!" என்றார்!

    எனக்கு ஒருபுறம் வியப்பென்றால் மறுபுறம் பெரு மகிழ்ச்சி! ஏனெனில், அதுவரை என்னைப்பற்றி யார் கேள்விப்பட்டாலும், "ஓ! சும்மாதான் இருக்கியா?" என்றுதான் கேட்பார்கள்! அப்படி கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டு மனம் புண்பட்ட என்னைப் பார்த்து ஆல் ரவுண்டர்! என்றால் ..... நான் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

    அவரோ இன்னும் ஒருபடி மேலே போய் எதோ ஒரு உணவுப் பதார்த்தத்தைப் பற்றிக் கூறி அதன் செய்முறையைக் கேட்க, நான் தயங்கிக் கொண்டே அதன் செய்முறையை கூறினேன். அதற்கு அவர், "அழகா எக்ஸ்ப்ளெய்ன் பண்றீங்க! அப்டியே நெட்ல வர மாதிரியே ஸ்டெப்-பை-ஸ்டெப்பா சொல்றீங்களே!" என்று வியக்க, நான் இன்னும் தயக்கம் மாறாத குரலில், "நானும் நெட்ல கிச்சன் ப்ளாக் (Blog) எழுதறேன்!" என்றேன்.

    (நான் இணையத்தில், சமையல் குறிப்பு எழுதுவதற்காக ஒரு ப்ளாக் (Blog) வைத்திருக்கிறேன்!)

    உடனடியாக என்னிமிருந்து என்னுடைய ப்ளாக் அட்ரெஸ் (Blog address) வாங்கிக் கொண்டார். கூடவே என்னுடைய கைப்பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார்.

    இவங்களுக்கு இருக்கற வேலை பளுவில இவங்க எங்க இத ஓப்பன் பண்ணி பாக்க போறாங்க! என்று மனதில் நினைத்தபடியே நானும் என் ப்ளாக் அட்ரெஸை கொடுத்தேன்! ஏனெனில் என்னிடம் ப்ளாக் அட்ரெஸ் வாங்கும் பலர், ஒன்று அதை பார்க்காமலேயே இருந்துவிடுவர்! அல்லது அட்ரெஸ் தொலைந்துவிட்டது என்று கூறுவார்கள்!

    நான் அவர்கள் பார்ப்பார்கள் என்று நினைக்கவேயில்லை.

    ஆனால் அன்று மதியமே அவர்களிடமிருந்து எனக்கு ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) மெஸேஜ்!

    "ப்ளாக் பார்த்தேன்! மிக மிக நன்றாக இருக்கிறது! நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!" என்று!

    எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    அன்றைக்குப் பிறகு கோடைகால பயிற்சி வகுப்பின் முடிவு தினமன்று சில நிமிடங்கள் மட்டுமே பேசிக் கொண்டோம்! பின்னர் அவரவர் வழியே சென்றுவிட்டோம்!

    அதோடு தொடர்பு விட்டுப் போனது என்று நான் நினைத்தேன்!

    ஆனால் அந்த கோடைகால வகுப்புக்குப் பிறகு பள்ளி திறந்திருந்த சமயம், அவர்களிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது!

    தான் வாட்ஸ்அப்பில், "நான் வளர்கிறேன்!" என்ற பெயரில் ஒரு புது குழு (Group) ஆரம்பிக்க இருப்பதாகவும், என்னையும் அதில் சேர விருப்பமா என்று வினவியும் போன் செய்தார்கள்.

    குழுவின் விதிமுறைகள் இதுதான்.

    * வெட்டியான விஷயங்கள், காலை/ மாலை வணக்கங்கள், அரசியல் ஜோக்குகள், ஃபார்வார்ட் செய்யப்பட்ட தேவையற்ற பயனில்லாத செய்திகளை பகிரக் கூடாது!
    * இந்த படத்தை/செய்தியை பத்து பேருக்கு பகிருங்கள் என்பது போன்ற செய்திகளை பகிரக் கூடாது!
    * எதிர்மறையான எண்ணங்களை ப்ரதிபலிக்கும் செய்திகளை பகிரக் கூடாது!
    * உங்கள் சொந்த விஷயங்களை பகிரக் கூடாது!

    அப்படியனில் என்ன செய்தியை பகிர வேண்டும்?


    மரங்கள், செடி-கொடிகள், பூக்கள், பறவைகள், இயற்கை, இறைவன் இவை பற்றி மட்டுமே பகிர வேண்டும்! (குறிப்பிட்டு இன்ன கடவுள் என்று இருக்க வேண்டாம்! நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக இறைவனை நாம் "HE" என்றோ "SHE" என்றோ "The Almighty" என்றோ அடையாளம் காட்டலாம்!)

    ஒவ்வொரு நாளும், மேற்சொன்ன ஏதாவது ஒன்று பற்றி ஒரு படமும் அந்தப் படத்தை விளக்கி நல்ல எண்ணங்களை மற்றவர் மனதில் விதைப்பது போல சிறியதாக ஒரு குறிப்பும் (Write-up) எழுத வேண்டும்! எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்! ஒரு வேளை மற்றவர்களுக்குத் தெரியாத மொழியாக இருந்தால் அதனை ஆங்கிலத்தில் விளக்க வேண்டும்!

    இதுதான் இந்த குழுவின் முக்கிய விதிமுறைகள்!

    இது மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க நாங்கள் எடுத்துக் கொள்ளவிருக்கும் சிறு முயற்சி! என்றார்.

    விதிமுறைகளை என்னிடம் விளக்கிவிட்டு என்னையும் இந்த நல்ல பணியில் இணைய விருப்பமா என்று கேட்டார்கள்!

    "எனக்கு இணைய விருப்பம்தான்! ஆனால் நீங்கள் சொல்வது போல் எனக்கு கவிதையாய் எழுத வராதே!" என்று கூறி நான் தயங்கினேன்!

    "எழுத வராதா? உங்களால்தான் இதை எழுத முடியும்! நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது! எழுதுங்கள் அன்னபூரணி!" (இன்று வரை அவர் என்னை என் முழுப் பெயரிட்டே அழைக்கிறார்!) என்று என்னை ஊக்குவித்து அந்த வாட்ஸ்அப் குழுவில் என்னை இணைத்தார்.

    அந்தக் குழுவில் இரண்டு பேர் மருத்துவர்கள், இரண்டு ஆசிரியைகள், ஒருவர் பள்ளி ஒன்று வைத்து நடத்தும் பள்ளி நிறுவனர், ஒருவர் கணிணித் துறையில் ஹெச்.ஆர், என்று அந்தக் குழுவில் என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாருமே அவரவர் கொண்ட துறையில் ஜாம்பவான்கள்! (நான் ஒருத்திதான் டம்மி பீஸ்!)

    இவர்களைத் தவிர அந்தக் குழுவில் இடம் பெறாத இன்னும் பலர் இருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் என் தோழியார்(!), "துளசி" மேடம் அவர்கள், நாங்கள் எழுதும் பதிவையும் படத்தையும் தனியாக அனுப்புவார்கள்! படத்துக்கான அவர்களுடைய பதிவை அவர்கள் சார்பில் குழுவில் பதிவிடுவார்கள். குழு உறுப்பினர்களின் பதிவை அவர்களுக்கு அனுப்பிவிட்டு அதற்காக எழுதிய உறுப்பினருக்கு கிடைக்கும் பாராட்டை உரியவர்களிடம் உண்மையாக சேர்ப்பித்தும் விடுவார்கள்!

    குழுவில் இணைந்த எனக்கு தொடக்கத்தில் ரொம்ப பயமாக இருந்தது! ஆனால் என் "துளசி" மேடத்தின் ஊக்கம் என்னை சிறிய சிறிய பதிவாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத வைத்தது!

    பூக்கள் பறவைகள் என்று நான் கைபேசியில் படமெடுக்கும் போதும் சரி, அதைப் பற்றிய குறிப்பை எழுதும் போதும் சரி, அதில் இணைந்துள்ளவர்கள் என்னுடைய பதிவை மதிப்பாகப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் மட்டமாக பார்த்துவிடக் கூடாது என்பதில் மிக மிக கவனமாக இருந்தேன்!

    அதனாலேயே எப்போதும் அதைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன்! அன்றுவரை வீட்டு வேலைகள், மாமியார்-மாமனாரின் கடுமையான வார்த்தைகளுக்காக ஒரு மூச்சு அழுகை, சுயபச்சாதாபம் என்று கிட்டதட்ட ஒரு அழுமூஞ்சியாய் இருந்த நான் தெளிவாக சிந்திக்கத் தொடங்கினேன்! நான் பார்த்து ரசிக்க இந்த உலகில் பல விஷயங்கள் இருக்கிறது! இதை இத்தனை நாளாக கவனிக்காமலேயே இருந்து விட்டேனே என உணரத் தொடங்கினேன்!

    என் பார்வை மாறியது! நிறைய கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்! மரங்களையும் பூக்களையும் தண்ணீரையும் பறவைகளையும் புதிய பரிணாமத்தில் காணத் தொடங்கினேன்! கொஞ்சம் கொஞ்சமாக நான் வளரத் தொடங்கினேன்! (அதுதானே அந்தக் குழுவின் பெயரும்!) என்னுடைய படங்களுக்கும் பதிவுகளுக்கும் பாராட்டுக்கள் வரத் தொடங்கியது!

    எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகியது! இதில் ஒரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பல சமயங்களில் தங்களுடைய தொழிலில் இருக்கும் நேரமின்மையால் உறுப்பினர்கள் பலர், படங்களை மட்டும் பகிர்ந்துவிட்டு, "அன்னபூரணி! இந்தப் படத்துக்கு உங்கள் பதிவினை எதிர் பார்க்கிறோம்!" என்று ஒரு வரியையும் சேர்த்து விடுவார்கள்! எனக்கு வானில் பறப்பது போல இருக்கும்! நானா? என்னையா எழுதச் சொன்னார்கள்? என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்! அவர்களின் வேண்டுகோளின்படி படத்துக்கு என் கருத்துக்களை பதிவிடுவேன்! பாராட்டும் பெறுவேன்!

    இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த எனக்கு, எழுத்தில் இருந்த ஆர்வத்தினால் அந்தக் குழுவுக்காக இல்லாமல் நான் பார்க்கும் அனைத்தைப் பற்றியும் நிறைய எழுதத் தொடங்கினேன்! எழுதுவதற்காக நிறைய படிக்கவும் தொடங்கினேன்! ராபின் சர்மா (Robin Sharma), மஹாத்ராயா ரா (Mahathraya Ra) போன்றவர்களின் புத்தகங்கள் என்னை நேர் வழியில் நெறிப்படுத்தியது!

    இந்த நிலையில்தான் பெண்மை எனக்கு அறிமுகமானது! பெண்மையில் இணைந்தேன்! என் எழுத்தார்வத்தை பெண்மை ஊக்குவித்தது! அடுத்தடுத்து முதல் பரிசுகள் வழங்கி என் எழுத்தை அங்கீகரித்தது!

    நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.

    உரை: படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

    என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பண்புடையவர்களின் நட்பு என்னை வளரச் செய்து கொண்டிருக்கிறது!

    எங்கள் "நான் வளர்கிறேன்!" குழுவின் முதற்கட்ட வளர்ச்சியாக, எங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக "யூட்யூபில்" (YouTube) காணொலிக் காட்சிகளாக பதிவேற்றம் செய்யப் படவிருக்கிறது! அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, முகநூலிலும் (Facebook) அதற்காக ஒரு பக்கத்தை திறக்கவிருக்கிறோம்! ஆமாம்! சிறிது சிறிதாக "நாங்கள் வளர்கிறோம்!"

    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.

    உரை: அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

    என்கிறார் வள்ளுவர். அறிவுடையோர்களுடன் என்னுடைய நட்பும் பிறை நிலவு போல வளர்ந்து கொண்டே இருக்கிறது!

    இப்படி என்னுடைய / எங்களுடைய புதிய பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட என்னுடைய "துளசி" மேடத்தின் நட்பையே நான் என்றென்றும் பொக்கிஷமாக கருதுகிறேன்! அவர்கள் எல்லையில்லாத மகிழ்ச்சியுடனும், பேராற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடன் மஞ்சள் குங்குமத்துடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!





    ♥♥♥♥♥♥♥♥♥


    Last edited by Annapurani Dhandapani; 25th Jul 2017 at 12:34 PM.

  3. #13
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Penmai's Friendship day Contest

    மிகவும் அருமை பூரணி.... நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் துளசி ('துளசி' என்ற பொருள் வரும் என்றால் அவருடைய பெயர் 'பிருந்தா'வாக இருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம் ) மேடத்துடனான உங்கள் நட்பு உங்களை மேம்படுத்திக்கொண்டு ஒரு சிறந்த எழுத்தாளரை பெண்மை தளத்திற்கு அறிமுகம் செய்து இருக்கிறது. அது வரையில் எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையுமே!

    Last edited by sumathisrini; 25th Jul 2017 at 12:59 PM.

  4. #14
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,012

    Re: Penmai's Friendship day Contest

    மிக அருமையான தலைப்பு ,இதை பார்த்த உடனே கண்டிப்பா இதுல கலந்துக்கணும்னு முடிவு செஞ்சுருந்தேன் . நண்பர்கள் தினத்தன்று இந்த பதிவை போடணும்னு நினைச்சேன். ,ஆனாலும் கொஞ்ச வேலையால நேற்று போட முடியாம போய்விட்டது . எல்லாருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் .

    என் வாழ்வில் வெவ்வேறு கால கட்டங்களில் வந்த என் இனிய தோழிகள் , நான் பொக்கிஷமாக கருதும் நட்புகள் பத்தி சொல்ல போறேன் .


    என் பள்ளி பருவத்தில் எனக்கு கிடைத்த என் உயிர் தோழி சாரா . 11 ஆம் வகுப்பில் தான் எங்க பள்ளிக்கு வந்து சேர்ந்தா . ஒரு வருடம் தான் எங்க கூட படிச்சா , அப்போ ஆரம்பித்த நட்பு இன்று வரை தொடர்கிறது . எங்களாள அடிக்கடி பேச முடிலனாலும் நினைச்ச நேரத்துல பார்த்துக்க முடிலனாலும் (வெளிநாட்டுல இருக்குறதால பார்த்து ஆறு வருஷம் ஆச்சு )எங்க நட்போட நினைவுகள் பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சு பொக்கிஷமா பாதுக்காப்பா இருக்கு.


    அடுத்து என்னோட கல்லூரி தோழி என்னோட பேரையே வச்சுருக்க என் ஆருயிர் தோழி திவ்யா .கல்லுரிலே எப்ப நெருங்கினோம்னா , பெயர் வரிசைல அடுத்து அடுத்து வர்ரதால எல்லாத்தளையும் ஒண்ணா வரமாரி கோத்து விட்டுட்டாங்க .பரிச்சையில எனக்கு கேள்வி தாள்ல விடை எழுதி அந்த கஷ்டமான நேரத்துல உதவிக்கு வந்த ஜீவன். ரெண்டாவது வருஷத்துல இருந்து உண்டான நெருக்கம் அப்படியே தொடர்ந்து எப்பொழுதும் இணைபிரியா தோழிகள் ஆகா ஆகிட்டோம். எனக்கு எந்த கஷ்டத்திலயும் உதவிக்கு வருகிற என் மேல உண்மையான அன்பு வைத்திருப்பவள் . பேரு மட்டும் ஒன்னு இல்லை, ரெண்டு பேரும் ஒன்னு தான் .


    அடுத்து இப்போ எனக்கு கிடைத்திருக்கின்ற என் அருமையான தோழி வைஷு.இப்போ மேற்படிப்பு படிக்கும் போது உண்டான நட்பு. இரண்டு பேரும் வெவ்வேறு பாட பிரிவு.இருந்தாலும் மாலை வேளைகளில் ஒன்றாக செல்லும் போது உண்டான பழக்கம்.நாங்க அதிகநேரம் செலவிட்டது தெரு முனைல இருக்க டீகடைல (மொத்தம் நாங்க 5 பேர் ஒரு குழு)அப்புறம் எங்க வீட்ல. இந்த மூன்று பேரும் மிக முக்கியமானவர்கள் என் வாழ்வில்.இவர்கள் என் மேல மிகுந்த அன்பும், அக்கறையும் உள்ளவர்கள்.


    என் நட்பு வட்டம் பெரிது ,எப்பவும் ஒரு கும்பல் ஓட இருக்கணும்னு நினைப்பேன் . என்னோட பி.இ. நண்பர்கள் மொத்தம் பத்து பேர். அவர்கள் அனைவரும் என் பத்து விரல்கள் போல.கல்லூரி காலத்தில கிடைக்கும் நட்பு என்றும் மறக்க முடியாதது. வகுப்பறை சேட்டைகள், கேன்டீன் அரைட்டைகள் , வெளிய சென்ற அனுபவங்கள், மாறி மாறி வாரி விட்ட ரகளைகள்னு என்றுமே சந்தோஷத்துக்கு பஞ்சமில்லாத கல்லூரி நாட்கள் என்றும் இனியவை, பொக்கிஷமாக என் நெஞ்சில் இருக்கும் நினைவுகள்.


    என் வானத்தில் நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் என் அணைத்து நட்பும் என் வாழ்வின் அரிய பொக்கிஷங்கள் . ஒவ்வொரு நட்பும் எனக்கு முக்கியமானவர்களே ."ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை மச்சான் " அப்படிங்கிற பாட்டு வரிக்கு ஏத்த மாதிரி நட்புகளோட எண்ணிக்கையை சுருக்காமா ஒரு கூட்டுக்குடும்பம் போல ஒரு பெரிய பூந்தூட்டம் ஆகா அமைத்து பாதுகாத்துட்டு இருக்கேன்.


    இதுவரை நான் சந்தித்த அணைத்து நட்புகள் முகம் தெரியாத என் பெண்மை நட்புகள் உட்பட அவங்க கூட இருந்த தருணங்கள் தான் என் வாழ்வின் மிக அருமையமான சந்தோஷமான தருணங்கள். விலைமதிப்பு இல்லாத பொக்கிஷங்கள் என் நண்பர்கள் . இந்த அருமையான நண்பர்கள் தின நன்னாளில் என் நட்புகள் அனைத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன், நன்றி! வாழ்க நண்பர்களுடன்!"அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குமியுமடா ".


  5. #15
    anbupurush's Avatar
    anbupurush is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    coimbatore
    Posts
    287

    Re: Penmai's Friendship day Contest

    You are very lucky to have friend like your Thulasi Madam.


  6. #16
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: Penmai's Friendship day Contest

    so happy for you annapoorani.

    unga moonu peroda contest entry romba nalla irukku.

    i don't have any close friends. so i am so happy to read it.


  7. #17
    dhanya krishna priyai is offline Friends's of Penmai
    Real Name
    dhivyabharathi
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Thiruvannamalai
    Posts
    245

    Re: Penmai's Friendship day Contest

    In this world every human is having atleast one friend.A person can live without father,mother,child and even relations.but nobody can live without a friend.

    we can share our all problems,feelings and secrets only with our friends.In most of the family parents will be friendly with their children.Even though we have some reluctant.

    so the only person to whom we can share our feelings next to God is our friends.A person who feels their friend as their soul can achieve anything in this world with their friends support.

    My mom always use to say that "you will always give first importance to your friends only not us ".

    she is so possessive on me.But she is right.I give more importance to my friends because I know the truth that I can't live without my friends.

    My loveable friends DIVYA and ASWINI.

    Divya is so brave and talented.we are friends since my 3rd std.Till my 10th I didn't understand her affection and love on me.After 11th I realised her friendship.

    I will say one incident which happened between us.Everyone is having problem in our day to day life.some problems are lite and some problems will reverse our life may be that much big problem.

    In my life I can say that's the big problem I came across till now.That time I want to share my feelings with Divya.I called her in phone and said everything in my heart about my sorrows.

    our elders said to us that the only way to throw out our sorrows from heart by tears.
    on that day I had lot of sorrows in my heart and tears rolled on cheek and fall off not in my eyes,in her eyes.Even though she is not with me,she felt my pain.

    I can give my life for you dear.Love you so much

    Aswini is also a brave and talented girl.we met in college.My whole college life went with her only.we both are hostellers.we are in same room for 5 years.

    she loves me a lot.she will do anything for me.she is my strength.she always encourage me.Even though she is facing lot of big problems in her life.she used to take care of my little problems and console me.

    I would be happy if every girl in this world will be very bold like her.we understand each other more than a couples.i can tell what she is thinking by seeing her eyes,no need of her words.

    we won't talk too much but having good understanding.Some people comment on us like we are made for each other:-))

    Thank God for giving me precious friends in my life.

    FRIENDSHIP
    A friend is
    who makes you smile
    when you are frown..
    A friend is
    who makes you strong
    when you are weak..
    A friend is
    who makes you to conquer the world
    when you think you can't do anything..
    A friend is
    who makes your world beautiful
    when you think its all over..
    A friend is
    who stands with you
    when everyone left you..
    so I feel
    proud and lucky
    I have a friend.


  8. #18
    hiranmayi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    chennai
    Posts
    28

    Re: Penmai's Friendship day Contest

    Hi friends first of all a very nice topic.
    Am also a blessed soul to have got a friend who is a treasure for me. When I think of my friend K, a gamut of emotions are filling my mind. Our friendship started in school and growing strong till now and will continue till death do us apart.I never thought when I joined a new school I would get a friend for lifetime. She has been with me in my thick and thunder. If I turn any leaf of my life she would be a significant part of that. I have learnt so many things from her. Resilience, saying no without saying so, very diplomatic way of handling people, staying strong amidst the storms that life throws at us so on and so forth. Am not a very unconditional person I have my own flaws. She is the only friend whom I can count on any day but her friend circle is huge and am damn sure all of them will have only nice things to say about her. Such is her charisma. She will be the first person to give a helping hand to many of us when in trouble. A warm smile, a word of empathy, a leaning shoulder, getting in to action and not stopping just with words - her dimensions are many. We have had our fights too but we were quick to reconcile. A person who can listen to even my silence. When I was going through a rough phase I used to call her even at odd hours. She was always there to listen to my outpour and would give her 2 cents. Whenever I was wrong she never pauses for a second to disagree with me. In short she was a kanna and Karna(she is also a kfor me, never left my side even when I was wrong at the same time did not hesitate to guide or correct me.

    I can never say all this to her. She would pull my legs and change the topic. She can't handle compliments. I can never repay anything that she has done for me not that she expects. Even if could I won't as I want her to be in my next birth too

    Thanks penmai for giving me an opportunity to take about her as it's nearly impossible for her to listen to what she is to me. She is that grounded.


  9. #19
    VaSun's Avatar
    VaSun is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Chennai
    Posts
    493
    Blog Entries
    10

    Re: Penmai's Friendship day Contest

    நட்பு…என் வாழ்வின் இனிமைக்கு ஒரு முக்கியக் காரணி.எனக்கும் நிறைய நண்பர்/ நண்பியர் உண்டு, அவர்கள் ஒவ்வொருவருடனும் ஆழமான நட்புமுண்டு. ஆனால் இங்கு நான் குறிப்பிடப்போகிற நட்பு சற்று மாறுபட்டது, ஏனென்றால் என் நான்குகால் தேவதை MYLOவுடனான என் நட்பினைப்பற்றிக் கூறப்போகிறேன்.. (அப்போ நான் disqualified’ஆ!!!!)
    கருப்பு-வெள்ளை நிறத்தில் அத்தனை அழகானவன் என் MYLO. சிறு பிள்ளைகளுக்கு மே மாதப் பொழுதுகள் மிக புத்துணர்வாய் மலரும்தானே (முழு ஆண்டு விடுமுறை அல்லவா… பின்ன எப்படியிருக்கும்) அப்படிப்பட்ட ஒரு மே மாத மார்னிங்தான் அது..ஏழாவது பாஸ் செய்துவிட்ட மிதப்பில் திமிராய் துயில் கொண்டிருந்தேன் நான்.. ஊருக்குச் சென்றிருந்த அப்பா அப்போதுதான் வீட்டினுள் நுழைந்தார், வந்தவர் உடனே என்னை எழுப்பி அவர் கையிலிருந்த கூடையை கொடுத்து பிரிக்கச் சொன்னார். அதனை பிரித்து எட்டிப்பார்த்தால் உள்ளிருந்து என்னை எட்டிப் பார்க்கிறான் மைலோ!! அப்போது அவன் மூன்று மாதக் குழந்தை….யப்பாடி அந்நொடியையும் அதன்பின் அவனுடனான் அழகிய நிகழ்வுகளையும் சத்தியமாய் மறக்கமுடியாது என்னால்.
    குழந்தையாய் அவனிருக்கும்போது கேழ்வரகுக் கஞ்சி கொடுத்து, அவனுக்கு பல் விழுந்து முளைத்த நாட்களில் டீத்தர் கொடுத்து இப்படி இன்னும் பலவாராக அவனை சீராட்டியதினால் அவனை என் தம்பியென்று சொல்வதா இல்லை விபத்திற்குள்ளாகி அறைக்குளேயே நான் முடங்கிக்கிடக்க நேர்ந்த நாட்களில் உணவையும் மறந்து என்னுடனே அடம்பிடித்து இருந்ததினால், பல நேரங்களில் விளையாட்டு கம்பேனியன் ஆனதினால், ‘கவலைப் படாதே, நானிருக்கிறேன்’னென்று செயல்படுத்திக் காவலனாய் துணை நின்றதினால் அவனை தோழனென்று சொல்வதா???? தெரியவில்லை எனக்கு.. ஆனால் இங்கே இப்போட்டியின் தலைப்பைப் படித்தவுடன் அவனைப்பற்றி உங்களுடன் பகிரவேண்டுமென்று பயங்கர ஆசையாகிப்போனது எனக்கு..இதோ பகிர்ந்தும்விட்டேன்..

    பொக்கிஷமாய்க் கருதும் நட்பை அடைந்த விதத்தைப் பற்றி மட்டுமே கூறச்சொல்லியுள்ளதால் நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
    -----------------

    belated HAPPY HAPPY FRIENDSHIP DAY FRIENDS...
    WONDERFUL CONTEST ADMIN.. GREAT DEDICATION TO FRIENDSHIP!


    ...புவியெங்கும் புன்னகை பூக்கட்டுமே!

  10. #20
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai's Friendship day Contest

    Dear friends,

    Friends are always a wonderful gift from God! We are happy to say that those who participated came up with good recollections that highlighted their love & affection. Every Penmaite has their own style of writing skills which makes the difference. Congratulations Participants.


    And the winner is, @Annapurani Dhandapani


    Here's the gift for you

    Note:
    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Friendship day Contest-agni.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter