Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree233Likes

Penmai's Independence Day Contest


Discussions on "Penmai's Independence Day Contest" in "Special Contest" forum.


  1. #11
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,123

    Re: Penmai's Independence Day Contest

    Unmaiya thane da Solla Pora.. Athu Negative ah Positive ah ngrathu Matter Ila..

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Hahaha vera vazhi...poi thana aganum...

    Nama makkal writeup parthu likessss potukren mollll.....naan eluthina athula forum la share panra alavuku dignified ah irukathu.....enakula avlo aruverupu iruku......nama forum positive ah irukatumay



    Sponsored Links
    Vimalthegreat, jv_66 and sumitra like this.

  2. #12
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    Quote Originally Posted by gkarti View Post
    Unmaiya thane da Solla Pora.. Athu Negative ah Positive ah ngrathu Matter Ila..
    Rightu thaan....decent ah elutha vantha posturen......pakren da...

    jv_66, sumitra and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #13
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,123

    Re: Penmai's Independence Day Contest

    Pannu le.. Waiting
    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Rightu thaan....decent ah elutha vantha posturen......pakren da...



  4. #14
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's Independence Day Contest

    Dear Karthi and Vimala! Read your posts! Really worried about what you said! Whatever you said are 100% true! But my view is different! I request your support! I'm sorry, if I've hurt you! Very Sorry!


    அன்புள்ள தோழமைகளே!

    இந்த போட்டி ஏனைய போட்டிகள் போல சாதாரணமான போட்டி அல்ல! ஏதோ பொழுது போகாமல் எழுதுவதும் அல்ல!

    நம் நாட்டில் ஏதாவது நல்ல மாற்றம் நிகழாதா! நம் நல்வாழ்வு மலராதா! என்ற ஏக்கத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள்தான்!

    அதற்கான சிறு முயற்சிதான் இந்த கடிதம் எழுதும் போட்டி!

    இதனால் என்ன பயன் வந்துவிடப் போகிறது என்று நினைக்க வேண்டாம்! ஏதாவது பயன் வரலாம் அல்லவா?

    யாரேனும் செய்யட்டும்!

    யாராவது 108க்கு போன் பண்ணுங்க!

    யாராவது போலீசுக்கு சொல்லுங்க!

    யாராவது ஆம்புலன்ஸுக்கு கூப்பிடுங்க!

    யாராவது அந்த ரௌடி மேல ஒரு கம்ப்ளெய்ன்ட் குடுங்க!

    யாராவது அந்த லஞ்ச அதிகாரி மேல புகார் குடுங்க!

    என்று, அந்த "யாராவது" என்ற நபருக்காக காத்திராமல் நாமே அந்த "யாராவதாக" இருக்கலாமே!

    நெல்லுக் கிரைத்தநீர் வாய்க்கால் வழியோடி
    புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை!


    என்பது ஔவையின் வாக்கு!

    தெய்வத்துக்கு சமமான நம் பண்டைய புலவர்கள் கூறிய மொழிகள் யாவுமே தெய்வ வாக்காகும்!

    அப்படி நாம் அந்த "யாராவதாக" மாறும்பட்சத்தில் நாம் ஒன்றை மட்டும் உதவிக்கு வைத்துக் கொள்ள வேண்டும்!

    அது நம்முடைய நேர்மறை எண்ணங்களை மட்டுமே நம் உதவிக்கு வைத்துக் கொள்ள வேண்டும்!

    இன்று பல சிந்தனைவாதிகளும் வழிகாட்டிகளும் வெற்றிக்கு வழியாக கூறுவது நேர்மறை எண்ணங்களை நம் மனதில் வளர்த்தால் நாம் நம் வாழ்வில் முன்னேறலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டே கூறுகின்றனர்!

    ஒருவருடைய நேர்மறை ஆற்றல் பெருகுமானால் அவர் வாழ்வில் எல்லா நலமும் வளமும் கிடைக்கப் பெறுவார்.

    அவருடைய நேர்மறை ஆற்றலின் அதிர்வலைகளால் அவரருகில் இருக்கும் மற்றவர்களும் அதனால் தூண்டப் பெற்று அவர்களும் ஓரளவு நலம் பெறுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

    ஒருவருடைய நேர்மறை அதிர்வலைகளுக்கே அத்தகைய பேராற்றல் இருக்குமென்றால் பலருடைய நேர்மறை எண்ணக்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கும்? அது எத்தனை மகத்தான மாற்றத்தை கொண்டு வரும்?

    ஒரு குறிப்பிட்ட நோயாளிக்காக கூட்டுப்ரார்த்தனை செய்வது, மழை வேண்டி யாகங்கள் செய்வது என்பதெல்லாம் இந்த நேர்மறை எண்ணங்களை ஒன்று சேர்க்கும் அடிப்படையில்தானே!

    இன்று குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் நம் நாடு நலமடைய நாம் அனைவரும் நேர்மறை எண்ணங்களோடு ஒன்று சேர்வோம்! நம்முடைய நேர்மறை எண்ணங்களை ஒன்று சேர்ப்போம்! நம் அனைவரின் ஒட்டு மொத்த நேர்மறை எண்ணங்களின் அதிர்வலையினால் நம் நாடு நலமடையட்டும்!

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்தனர் பலர்! அப்படி குரல் கொடுக்க முடியாதவர்கள், குரல் கொடுத்தவர்களுக்கு காபி போட்டுக் கொடுத்து தங்கள் ஒத்துழைப்பை கொடுத்தனர்!

    அதைத்தான் இப்போதும் நாம் செய்ய வேண்டும்!

    நாம் நம் பிரதமருக்கு எழுதும் கடிதங்கள் அவரைச் சென்று சேருமா சேராதா என்பது நமக்குத் தெரியாது! அது அவருடைய கண்களிலாவது படுமா என்பதும் சந்தேகமே!

    ஆனால் நாம் நம் முயற்சியை கைவிட வேண்டாமே!

    ஏனெனில் முயற்சி என்ற ஒன்றிற்கு கட்டாயம் நற்பலன் இருந்தே தீரும்!

    தெய்வத்தா லாகாதெனினும் முயற்சி தன்மெய்
    வருத்தக் கூலி தரும்.


    என்பது நம் தெய்வப் புலவரின் தெய்வ வாக்கு! அது பலித்தே தீரும்.

    போட்டிக்காக என்றில்லாமல் நம் நாட்டைக் காக்க நம்மால் முடிந்த ஒரு சிறு முயற்சி என்று நினைப்போம்! நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்முடைய பங்களிப்பை தவறாமல் வழங்குவோம்!

    நேர்மறை எண்ணங்களோடு நம் கருத்துக்களை நாம் நம் பிரதமர் முன் வைப்போம்.

    சிறு துரும்பும் பல் குத்த உதவும்!

    நம்முடைய கருத்து மிக மிகச் சிறியதென்றாலும் எதாவது ஒரு மாற்றத்துக்கு வழிவகுக்குமல்லவா?

    நம்முடைய முழுமையான பங்களிப்பை அளிக்காமலேயே நாம் ஏன் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்?!

    வேறு இணைய தளங்கள் செய்யாத ஒன்றை நம் இணையதளம் செய்ய முன்வந்திருக்கிறது!

    நம் இணையதளத்தில் இப்பாேது 222614க்கும் அதிகமானவர்கள் இணந்துள்ளனர்! இணைந்துள்ள அத்தனை தோழர்களும் தோழிகளும் தங்களுடைய பங்களிப்பினை நேர்மறை எண்ணங்களோடு வழங்கி இந்த போட்டியின் வாயிலாக தாங்கள் நம் நாட்டில் காண விரும்பும் மாற்றத்தைப் பற்றி எழுத அன்புடன் வேண்டுகிறேன்!

    என்னுடைய வேண்டுகோள் அதிகப்பிரசங்கித்தனமாக இருப்பதாக யாரேனும் நினைத்தாலோ யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தாலோ மன்னிக்க வேண்டுகிறேன்!


    போட்டிக்கான என்னுடைய பதிவுடன் விரைவில் வருகிறேன்!


  5. #15
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,123

    Re: Penmai's Independence Day Contest

    @Annapurani Dhandapani Ahh CHill Poorani.. No Need to Say Sorry So! After all, People's Opinions Differ na..

    //Really worried about what you said!// Hmm.. 'd You temme Why?


  6. #16
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: Penmai's Independence Day Contest

    மோடி அவர்களுக்கு எங்கள் வணக்கம்!

    உங்களிடம் மக்களாகிய நாங்கள் நிறையை எதிர்ப்பர்த்தோம். ஆனால் வழக்கம் போல் ஏமாற்றம் தான்.

    1. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. அனேகமாக ஒவ்வொரு மேடையிலும் சொல்லிவிட்டு எங்கள் மீது உங்கள் மொழியை திணிக்கிறீர்கள்.

    2. Demonetization என்ற பெயரில் ஒரு பெரிய நாடகம் ஒன்றை நடத்தி விட்டீர்கள். இங்கு பணக்காரன் எந்த நஷ்டமும் அடையவில்லை ஏழைகள் பட்ட பாடு அப்பப்பா .


    3. ஸ்வச் பாரத் என்று நீங்கள் ஆரம்பித்த நல்ல திட்டம் ஒன்று பெரும்பாலும் உங்கள் கட்சியினாலே அதன் பெயர் கெட்டுப்போனது.


    4. இப்போது neet தேர்வு. ஸ்டூடெண்ட்ஸின் எதிர்காலத்தை அரசியலாக்கி விட்டீர்கள்.

    உங்கள் ஆட்சியல் இதை தான் நாங்கள் மனதார பெற்றோம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொன்றின் பின்னும் செயல்படுத்த திணறிய உங்கள் அரசை தான் நாங்கள் பார்க்கிறோம்.


  7. #17
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    Appreciating your spirit very much Anu @Annapurani Dhandapani
    As Molll rightly said the views shared by me here is purely based on my personal perspective.
    My support is there for you sure....Keep writing.....Good luck for your writeup

    Last edited by Vimalthegreat; 28th Aug 2017 at 12:35 PM.
    jv_66, sumitra, gkarti and 1 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  8. #18
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    Quote Originally Posted by narayani80 View Post
    மோடி அவர்களுக்கு எங்கள் வணக்கம்!

    உங்களிடம் மக்களாகிய நாங்கள் நிறையை எதிர்ப்பர்த்தோம். ஆனால் வழக்கம் போல் ஏமாற்றம் தான்.

    1. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. அனேகமாக ஒவ்வொரு மேடையிலும் சொல்லிவிட்டு எங்கள் மீது உங்கள் மொழியை திணிக்கிறீர்கள்.

    2. Demonetization என்ற பெயரில் ஒரு பெரிய நாடகம் ஒன்றை நடத்தி விட்டீர்கள். இங்கு பணக்காரன் எந்த நஷ்டமும் அடையவில்லை ஏழைகள் பட்ட பாடு அப்பப்பா .


    3. ஸ்வச் பாரத் என்று நீங்கள் ஆரம்பித்த நல்ல திட்டம் ஒன்று பெரும்பாலும் உங்கள் கட்சியினாலே அதன் பெயர் கெட்டுப்போனது.


    4. இப்போது neet தேர்வு. ஸ்டூடெண்ட்ஸின் எதிர்காலத்தை அரசியலாக்கி விட்டீர்கள்.

    உங்கள் ஆட்சியல் இதை தான் நாங்கள் மனதார பெற்றோம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொன்றின் பின்னும் செயல்படுத்த திணறிய உங்கள் அரசை தான் நாங்கள் பார்க்கிறோம்.
    மக்களின் வலியை சுருக்கமாக அதே சமயத்தில் நேர்த்தியாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துகள்

    jv_66, sumitra, gkarti and 2 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai's Independence Day Contest

    உயர்திரு பிரதமர் மோடி அவர்களுக்கு ,


    இவ்வளவு பெரிய நாட்டில் , மக்கள் மத்தியில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் மிகப்பெரிய தைரியம் வேண்டும் . தைரியம் உள்ள தலைவர்களுக்கும் , வோட்டு வங்கி சரிந்து விடுமோ என்ற கவலையினாலேயே நிறைய தலைவர்கள் செய்யத் தயங்கிய பல அதிரடி மாற்றங்கள் கடந்த சில வருடங்களில் உங்களால் எடுக்கப்பட்டு வருகிறது பிரதமரே ! அதற்கு வாழ்த்துக்கள் .

    தற்போதைய இந்தியா :


    1. அரசாங்க அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு , அல்லது அதற்காக சில அடிமைகளை வைத்திருந்தது , பின்னர் தங்களின் சொந்த வியாபாரங்களை கவனித்து அதை மட்டுமே செழிப்பாக்கிக் கொண்டிருந்த நிலை முற்றிலும் இன்று மாறிவிட்டது . இப்போது அனைவரும் வரவேண்டிய சரியான நேரத்திற்கு அவர்களே வந்து கையெழுத்தும் போட்டு , தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளை, நாள்முழுவதும் தவறாமல் செய்தே ஆகவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு, இதனால் பொதுமக்களின் தேவைகள் பெருமளவு உடனுக்குடன் பூர்த்தி ஆகிவருகிறது .


    2. கழிப்பிடம் என்ற சொல்லையே அறியாத பல கிராமங்களை அதன் முக்கியத்துவத்தை அறிய வைத்து , பெண்கள் , குழந்தைகள் மத்தியில் பெருமளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் . ஒவ்வொரு மாநிலமாக , திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக மெதுவாக உத்வேகத்துடன் மாறிக்கொண்டிருக்கிறது . பொது இடத்தில் சுத்தம் என்பதைப்பற்றி பலரையும் சிந்திக்கச் செய்திருக்கிறீர்கள் . இதில் சிறுவர்கள் பெருமளவில் அடக்கம் .


    3. அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற புதிய முறையை ஏற்படுத்தி , வங்கிக்கணக்கு இல்லாத குடும்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது . இதனால் , கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மக்கள் பெறும் கூலிகளையும் , ஏழை மக்களுக்கான மானியங்களையும் , இவ்வளவு வருடங்களாக இடைத்தரகர்கள் சாப்பிட்ட பிறகு பெற்றுக்கொண்ட மக்கள் , இப்போதெல்லாம் தங்களுக்குரிய மொத்தப் பணத்தையும் நேரடியாக தங்கள் வங்கிக்கணக்கில் சேர்ந்து விடுவதால் நிம்மதியடைகின்றனர் .


    4. எந்த ஒரு துறையிலும் வெளிப்படைத்தன்மை, இதுவரை எந்த ஒரு மத்திய அமைச்சரின் மீதும் ஊழல் புகாரின்மை , அமைச்சரவையில் உள்ளவர்கள் அவ்வப்போது தங்களின் செயல் திறமைகளை ஒப்புவிக்க வேண்டியுள்ளதால் , யாரும் செயலற்றவர்களாக இருக்க முடியாது என்ற நிலைமை , திறமையற்ற அரசாங்க அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்ற பயத்தினால் , அவர்களின் செயல் திறன் கூடியுள்ளது , புதிய அறிவிப்புகளை அதிகம் அறிவிக்காமல் , நடப்பில் உள்ளவற்றை வெறும் பேச்சளவில் இருந்தவற்றையெல்லாம், நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது , இதெல்லாம் மிகவும் வரவேற்கத்தக்கவை .


    5. “டிஜிட்டல் இந்தியா “ என்பதை வெறும் பேச்சளவில் மட்டுமே இல்லாமல் பெருமளவில் செயல்பாட்டில் கொண்டு வந்திருக்கிறீர்கள் . பெரும்பாலான துறைகளுக்கு ஆன்லைன் சேவை செயல்பாட்டில் உள்ளதால் , மக்கள் ஒவ்வொன்றுக்கும் வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவது குறைந்து , தங்களிடத்திலிருந்தே செலுத்தி , நேரத்தையும் பொறுமையையும் மிச்சப்படுத்துகின்றனர் . இந்த ஆன்லைன் சேவையினால் , இடைத்தரகர்கள் பெருமளவு தவிர்க்கப்படுகின்றனர் . ஊழல் குறைகிறது .


    6. பணமதிப்பிழப்பு என்ற மாபெரும் தைரியமானதொரு நடவடிக்கையை நீங்கள் கொண்டு வராவிட்டால் , இன்னும் சில வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விடும் அபாயத்தை தீவிரவாதிகள் செய்துக்கொண்டிருந்தனர் . இதைத் தவிர்க்க இந்த அறுவைசிகிச்சை அவசியம் தேவை . இதனால் , பெரும் பணமுதலைகள் , காஷ்மீர் எல்லையில் கல்லெறிந்து கொண்டிருந்த தேசத் துரோகிகள் , கள்ளநோட்டை ஆறுபோல பெருகவிட்ட அண்டை நாட்டுக்கும் பெருத்த கிலியை உண்டாக்கி , அடக்கி விட்டீர்கள் . நாட்டு மக்கள் சில மாதங்கள் இந்த நடவடிக்கையால் பெரிதும் துன்பத்துக்கு உள்ளானாலும் , தற்போது நிலைமை சகஜமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் , வியாபாரிகள் பலருக்கும் இப்போது நேரடியாக பணத்தை கையில் வைத்திருக்காமல் , திருட்டு பயமில்லாமல் “ஆன்லைன் பேமென்ட் “ மூலமே பணப்பரிவர்தனைகள் பழக்கப்பட்டு விட்டன . இது சமுதாய வளர்ச்சியின் ஒரு குறியீடு .


    7. மின்சாரத் திருட்டு, மின்சாரக்கசிவு ஆகியவை பெருமளவு ஒழிக்கப்பட்டு , “உதய் மின்திட்டத்தால்” பல மாநிலங்களிலும் தடையற்ற , அல்லது குறைந்தளவில் மட்டுமே தடை உள்ள மின்சாரப் பகிர்மானம் நடைமுறைக்கு வந்துள்ளது . இது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .


    8. அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களில் , “Neem coated urea” என்பது கட்டாயமாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் இயற்கைப் பூச்சிக்கொல்லியும் சேர்ந்து விவசாயிகளுக்கு உதவுகிறது .


    9. பிராந்திய விமான நிலையங்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன . இதனால் தொழில்துறை பெரிதும் வளரும் .


    10. எந்த ஒரு பிரதமராக இருந்தாலும் , அவர்கள் அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வது மிகவும் அவசியமாகவே உள்ளது . ஆனால் நீங்கள் இந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின் மூலம் , இந்திய நாட்டின் புகழையும் , மதிப்பையும் மற்ற நாட்டினர் மத்தியில் பெரிதும் உயர்த்தி , அவர்களையெல்லாம் இந்தியாவை மதிப்புடன் நோக்குமளவுக்கு செய்திருப்பதும் , நிறைய வியாபாரங்களை நாட்டிற்கு வரவழைத்திருப்பதும் , “Make in India” என்பதை பிரபலப்படுத்தியுள்ளதும், சிறந்த நடவடிக்கைகள் . Vietnam நாட்டின் பக்கத்தில், தென்சீனக்கடலில் எண்ணை எடுக்கும் வியெட்நாமின் பாகஸ்தராக இந்தியாவை அறிவிக்கச் செய்து , நமது நாட்டுக் கப்பல்களை நிறுத்தியுள்ளதால், சீனாவுக்கு செக் வைத்திருக்கும் தைரியசாலியாக இந்தியா பார்க்கப்படுகிறது . உங்களின் முயற்சியால் உண்டான நட்புக்கரத்தினால் மட்டுமே , நீங்கள் அதிரடியாய் நடத்தி அண்டை நாட்டை கதிகலங்க அடித்த “Surgical Strike”, அனைத்து நாடுகளாலும் பெரிதும் பாராட்டப்பட்டு ஆதரிக்க வைத்தது. இதற்கு நீங்கள் முன்னெடுத்திருக்கும் “இஸ்ரேல் நாட்டுடனான நட்புறவு “ (இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாதது ) பெரிதும் உதவும் . கூடவே தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அவர்களின் வழிக்காட்டுதலும் நம் நாட்டிற்கு நன்மை பயக்கும் .


    11. G.S.T. என்ற வரிமுறையில் பல ஆக்கபூர்வமான மாறுதல்களை அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசித்து செய்து , பற்பல வரிகளை ஒழித்து , நாடு முழுவதும் ஒற்றை வரியாக மாற்றி , பலவிதங்களிலும் வரி ஏய்ப்பை தடுத்து , நாட்டின் ஒரு மூலையில் இருந்து மறுமூலைக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களை எந்தவித தாமதமும் இல்லாமல் கொண்டுசெல்ல ஏதுவாக்கப்பட்டிருக்கிறது .


    12. மருந்துகளும் , மருத்துவ உபகரணங்கள் ஆகியவை விலை குறைந்துள்ளன . இதனால் மக்களுக்கான மருத்துவச் செலவுகள் பெருமளவில் குறையும் .


    13. பணக்காரர்களும் , அவர்களுக்குத் தேவையற்ற மானியங்களை அனுபவித்து , ஏழைகளை ஏழைகளாகவே இருக்க வைத்துக் கொண்டிருந்த நிலை மாறி , குறிப்பிட்ட வரம்பிற்கு மேலுள்ள நிதிநிலை உள்ளவர்களுக்கு மானியங்கள் ரத்து என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த மானியங்கள் மேலும் பற்பல ஏழை மக்களுக்கு அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது .


    14. பெண் குழந்தைகளை சிசுக்கொலையிலிருந்து காப்பாற்றி,அவர்களை நல்ல படிப்பறிவுடன் வளர்த்து ஆளாக்க நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.



    இதைப்போல பலவித அதிரடியான , ஆக்கபூர்வமான மாற்றங்கள் உங்களால் மிகவும் தைரியமாக கொண்டுவரப்பட்டுள்ளன . மேலும் சிலவற்றில் உங்கள் கவனம் தீவிரமாக திரும்பினால் , நாடு வளம் பெறுவது உறுதி . நாட்டுமக்கள் அனைவரும் நலம் பெறுவர்.


    இவைகளையெல்லாம் செயல்படுத்த மேலும் தாமதமானாலும் , நீங்கள்தான் அவசியம் செய்ய வேண்டும் . உங்களுக்குப் பிறகு வரும் அரசாங்கங்கள் இவற்றைக் கண்டிப்பாக கிடப்பில் போட்டுவிடும் அபாயம் உள்ளது .


    1. போர்க்கால அடிப்படையில் , நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றிணைத்து , விவசாயத்தை பட்டுப்போய் விடாமல் காப்பாற்ற வேண்டும் . நாட்டின் எந்த ஒரு பகுதியும் நீரில்லாமல் வாடக்கூடாது . இதனால் வெள்ளங்களும் தவிர்க்கப்படலாம் .


    2. விவசாயிகளுக்கும் , சிறு முதலீட்டாளர்களுக்கும் பெரிதும் உதவும் “முத்ரா வங்கிகள் “ நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விரிவாக்கப்பட்டு , பிரபலப்படுத்தப்பட வேண்டும் . இதனால் குறைந்த வட்டியில் அவர்கள் தொழில் செய்து பயனடைவர் .


    3. விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கான விலைகளை வருடாவருடம் அல்லது குறிப்பிட்ட காலாளவில் உயர்த்தி அவர்களுக்கு உதவ வேண்டும் . இது நாடு முழுவதும் ஒரே சீராக இருந்தால் நல்லது .


    4. நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த செலவில் கல்வி , உடல் நலம் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் .


    5. குறைந்த பட்சம் 5 அல்லது 10 வருடங்களுக்கு எந்தப் பழுதுமில்லாமல் நீடிக்கும் வகையில் , நாட்டிலுள்ள அனைத்து சாலைகளும் போடப்பட்டு பராமரிக்க வேண்டும் . இந்தக் கால வரம்பிற்குள் சாலையில் பழுது ஏற்படுமானால் , அதை போட்ட அந்த கான்டிராக்டரை அதற்குப் பொறுப்பாக்கி அதன் செலவை ஏற்கச் செய்யவேண்டும் . இப்படிச் செய்தால் , குறுகிய காலத்திலேயே அவர்கள் திருந்தி , முதலில் போடும்போதே மிக நல்ல முறையில் சாலையை போட்டுவிடுவார்கள் . இதனால் மக்கள் அனைவருக்கும் அனைத்து விதங்களிலும் நன்மையே ஏற்படும் . அடிக்கடி சாலை அமைக்கும் செலவும் அரசுக்கு மிச்சப்படும் .


    6. நீங்களும் உங்கள் அமைச்சர்களும் உங்களுக்கான அனாவசிய செலவுகளை குறைக்க அடிக்கடி உபாயம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் . இது வரவேற்கத்தக்கது. கூடவே , இப்போதெல்லாம் தொலைப்பேசி கட்டணங்கள் மிகவும் குறைந்து விட்டன . ஆனால் , இன்னமும் மக்களவை , மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இந்தத் தொலைப்பேசிக் கட்டணங்கள் என்ற வகையில் ஒரு பெரும் தொகை வழங்கப்படுகிறது . இது குறைக்கப்படலாம் . அதே போல அரசாங்க வேலைகளுக்கு மட்டுமே அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊர்திகளை உபயோகிக்க வேண்டும் . சொந்தக் காரணங்களுக்கும் , வீட்டு உறுப்பினர்களுக்கும் இவைகளை உபயோகிக்கக்கூடாது என்றும் உத்திரவு போடவேண்டும் . இதற்கென ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கண்டிப்பாக பணம் தரக்கூடாது . இதைக் கண்காணிப்பதில் கூடத் தவறில்லை .


    7. நீதிமன்றங்களில் விரைவில் அனைவருக்கும் நீதி கிடைக்க ஆவன செய்யவேண்டும் .


    8. விளையாட்டுத்துறையில் உள்ள ஊழல்களையும் , விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள பாரபட்சங்களை முற்றிலும் களைந்து , உதாரணத்திற்கு , மீனவர்களை நீச்சல் போட்டிகளுக்கு ஊக்கப்படுத்தி , சர்க்கஸ் வல்லுனர்களை ஜிம்னாஸ்டிக்ஸ்ஸில் ஊக்கப்படுத்தி , மலைவாழ் மக்களை ஈட்டி எறிதல் , அம்பு விளையாட்டு போன்றவற்றில் தேர்ந்தெடுத்தல், கிராம மக்களை நடை , ஓட்டப்பயிற்சிகளில் ஊக்கப்படுத்துதல் போன்றவற்றை பாரபட்சமில்லாமல் செய்து , விளையாட்டில் உலகளவில் பின்தங்கி இருக்கும் நம் நாட்டை முதல் சில இடங்களைப் பிடிக்குமளவிற்கு உயர்த்த வேண்டும் .


    9. புல்லட் ரயிலைக் கொண்டுவருவதில் உள்ள மும்முரத்தைக் காட்டிலும் , நாட்டிலுள்ள அனைத்து ரயில்களும் எந்தவித விபத்தும் இன்றி , குறிப்பிட்ட நேரத்தில் சரியாகக் கிளம்பி , குறிப்பிட்ட நேரத்தில் சரியாக , சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தாலே , அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் . இவை சரியான பின் , புல்லட் ரயில் போன்றவற்றை செயல்படுத்தலாம் . எல்லா ரயில்களிலும் , எல்லா கம்பார்ட்மெண்டிலும் ,ஒவ்வொரு ஸ்டேஷனையும் அறிவித்தால் , நடுஇரவில் இறங்க வேண்டியவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் . இதற்கு நீங்கள் ஒரு வழிமுறையை கொண்டு வந்திருந்தாலும் , கைப்பேசியை உபயோகிக்கத் தெரியாத பாமர ஜனங்களுக்கும் , டிக்கெட்டில் குறிப்பிடாத இடத்தில் இறங்க வேண்டியவர்களுக்கும் இது உதவும் .

    10. திருட்டை ஒழித்தல் , பெண்களின் பாதுகாப்பு இவைகளில் பெரும் கவனம் செலுத்த வேண்டும் .


    மொத்தத்தில் , அடுத்த தலைமுறையிலிருந்தாவது , ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத , தண்ணீர் , சுத்தமான காற்று , சுத்தமான சுற்றுப்புறம், நல்ல கல்வி , சுகாதாரம் ஆகியவை தடையில்லாமல் கிடைக்கும் ஒரு சூழ்நிலையை நீங்கள் உண்டாக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

    இதுவரை இருந்த, தங்கள் குடும்பத்தை மட்டுமே வளப்படுத்தும் அரசியல்வாதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உங்களைப் போன்ற நாட்டைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் உன்னதத் தலைவரால் மட்டுமே இவை சாத்தியமாகும் . வோட்டு வங்கியை மட்டுமே மனதில் கொள்ளாமல் , நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு உங்களால் மட்டுமே இவைகளை செயல்படுத்த முடியும் என்று என்னைப்போல பலரும் நம்புகின்றனர் .


    Jayanthy





  10. #20
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,123

    Re: Penmai's Independence Day Contest

    'Awe' Aunty


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter