Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree233Likes

Penmai's Independence Day Contest


Discussions on "Penmai's Independence Day Contest" in "Special Contest" forum.


  1. #21
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    2nd point super aunty.....

    Toilet facilities pathi avar etho oru I-day la pesinar ninaikren.......Makkalin yegopitha varaverpu irunthathu intha scheme ku.....unmaiyiley basic needs pathi avar edutha muyarchi paratuku uriyathu thaan

    I-day contest ku correct ah ezhuthi irukeenga....Nalathu nadakumendru nambuvom


    Sponsored Links
    jv_66, sumitra, gkarti and 1 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #22
    Gillu is offline Newbie
    Real Name
    Anusha Magil
    Gender
    Female
    Join Date
    Aug 2017
    Location
    Nagercoil
    Posts
    1

    Re: Penmai's Independence Day Contest

    Respected Modi ji,
    Its my great pleasure to pen a letter to you.
    I would like to wish a wonderful independence day along which I want to share my perspectives on the 'real' independence of our nation.
    First of all, I am very happy to be a part of nation in which a normal tea seller can become a prime minister. Thus such a prime minister may know the sufferings and pains of the lower middle class and the poor family. I think as you are coming from such a background knowing the sorrows of people you try to rectify their problems brilliantly. Your brilliance is proved when instead of fixing the people's problems you are just washing out all the poor people. Yes! Just destroying the lives of poor people. Such a Brilliant Idea! There will be no more poor people in our nation as you have said. I would like to appreciate you for the fear you have created in our people's mind. Each and everyday we wake up with a fear of the new plans that you are about to execute. It may be a release of new currencies or not accepting old rupee notes or not getting ration items or introducing smart card actually which is not working properly or identifying a person using only adhaar card even for a death certificate or government school students struggling to get an MBBS seat because of NEET programme or initiating new companies in our Tamilnadu state which intake all our resources of our prosperous land or ignoring the fishers' troubles only because they are Tamils or not paying attention to our fellow farmers who are just dying or abusing or raping a female becomes common or increasing sexual abuses even for children or child labour or many more. Thanks for all these fears that you have injected in our body by which all our mind and souls are restless or to say in your words always in alert. Thanks for your wonderful journey all over the world which always keeps us excited. Your way of administration is just mind blowing sir. Please don't change any of this. If you do so we may live in a land where there is no struggle, no pain, no sorrow, no trouble. In your period of ruling I clearly understand that the poor are not supposed to live in this nation. In this auspicious day of independence I suggest you to continue this way of administration which will lead our India to a poor people free nation. I finally conclude by saying that your Digital India plan is definitely bringing rice to each and everyone's plate of our India.
    Once again my Hearty Independence Day wishes Sir.
    Thank You,
    Anusha Magil


  3. #23
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    619
    Blog Entries
    8

    Re: Penmai's Independence Day Contest

    பெரு மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,

    வணக்கம்.

    நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நம் நாடு பல வகையில் முன்னேறியுள்ளது!

    குறிப்பாக, நம் நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஸ்வச் பாரத் என்ற திட்டம் நிறைவேற்றவும், கிராமப்புறங்களில் கழிப்பிடம் கட்டாயமாக அமைக்கபடவும், நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது!

    இதே போல பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்வது உங்கள் நல்ல நோக்கத்தையே காட்டுகிறது!

    உங்களுடைய செயல்பாடுகளைப் பற்றி எழுதவோ விமர்சிக்கவோ எனக்கு தகுதியில்லை! அறிவுமில்லை!

    ஆயினும் இன்னும் ஒருசில திட்டங்களால் நம் நாட்டில் நல்ல மாற்றங்களை உங்களால் கொண்டு வர முடியும் என்று என் சிற்றறிவுக்கு எட்டியதை இங்கே கூற ஆசைப்படுகிறேன்!

    1. பூரண மதுவிலக்கு.
    2. நாட்டிலுள்ள நதிகள் அனைத்தையும் ஒன்றிணைத்தல்.
    3. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு.
    4. திருநங்கைகளுக்கு நல்வாழ்வு.
    5. நம் நாடு உணவில் தன்னிறைவு பெறவும் விவசாயம் தழைக்கவும் நல்ல திட்டங்கள்.
    6. விவசாய நிலங்கள் மற்றும் காடுகள், விலங்குகள் பாதுகாப்பு.
    7. கல்வித் திட்டத்தில் மாற்றம்.
    8. விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு இல்லாத முன்னேற்றம்.
    9. நாட்டுக்காக பாடுபடும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு பாதுகாப்பு.
    10. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டம்.


    ஏனைய நல்ல பல திட்டங்களுடன் இவற்றுக்கும் நீங்கள் செயல்வடிவம் தந்து நிறைவேற்றுவீர்கள் என்று முழுமையாக நம்புகிறோம்!

    ஒன்றே ஒன்று மட்டும் கூறி இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்!

    உங்களுக்கும் உங்களுடைய அமைச்சரவைக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!

    நன்றி.
    வணக்கம்.

    இவண்,
    அன்னபூரணி.



  4. #24
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    “அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
    மானம் உடையது அரசு”


    அன்புள்ள முதன்மை அமைச்சர் அவர்களுக்கு,

    மக்களாகிய எங்கள் நலன் காக்க பொறுப்பேற்று அயராது பாடுபடும் உங்கள் நலன் என்றுமே சிறந்து இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு எங்கள் வாழ்த்துகளையும் வலிகளையும் பதிவு செய்கிறேன்.



    வாழ்த்துக்கள்
    இந்தியா – இந்த மண்ணில் வாழும் நமக்கிடையே ஆயிரமாயிரம் வேற்றுமை இருந்தாலும் நம்மை ஒன்றிணைத்து உள்ளங்களில் நேச பூக்களை மலர செய்யும் மந்திர வார்த்தை.

    பெரிய பின்புலம் இல்லாத வெகுசன மக்களிடையே இருந்து இந்த தேசத்தின் முதன்மை அமைச்சராக உயர்ந்து நீங்கள் நிமிர்ந்த போது மக்களாட்சியின் வலிமையை மற்றுமொருமுறை உலகிற்கு பறை சாற்றிய பெருமை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது எனக்குள்.

    இளம் தலைமுறையினரிடையே அசராத உழைப்பின் அடையாளமாக நிறைந்த நம்பிக்கையை விதைத்த உங்களுக்கு விடுதலை திருநாள் வாழ்த்துகள்.

    1. சுத்தம் – ஆரோக்கியத்திற்கான அடிப்படை. மகாத்மா வலியுறுத்திய சுற்றுப்புற சுகாதாரத்தை முன்னிறுத்தி நீங்கள் மேற்கொண்ட ஸ்வச் பாரத் திட்டம், கழிப்பறை திட்டங்கள் பெரும் பாராட்டுக்குரியது.

    2. நம் தேசத்தின் அடையாளங்களில் ஒன்றான யோக கலையை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தினீர்கள்.

    3. பெண்களின் மீதான அக்கறை உங்கள் உரையில் அவ்வபோது தலை நீட்டிகொண்டே இருக்கும். அதற்கேற்ப நீண்ட காலமாக கிடப்பில் போட பட்டிருந்த மகளிரின் மகப்பேறு விடுப்பு காலம் 12 வாரங்களில் இருந்து 26 வாரமாக உயர்த்தப்பட்டது தாய்மைக்கான மரியாதையை தந்ததின் அடையாளம்.

    பெண்களுக்கெதிரான பாலியல் குற்றவாளிகளின் வயது வரம்பை 18-லிருந்து 16 ஆக குறைத்தது பெரும் நிம்மதியை மகளிருக்கு தந்துள்ளது.


    4. பினாமி பரிவர்த்தனை கெடுபிடிகள் , ரொக்கமில்லா பரிவர்த்தனை, மின்னணு பொருளாதாரம் என்று மிக தைரியமாக நீங்கள் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த பரிசோதனை முயற்சிகள் வரவேற்புக்குரியது. இந்த நடவடிக்கைகளால் எதிர்பார்த்த அளவுக்கு பலன்கள் தருமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


    5.17 வருடங்களுக்கு மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட GST வரி விதிப்பு ஏகப்பட்ட குளுறுபடிகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக அமலானது தங்களின் மிகபெரும் சாதனையே.


    6.அரசியல் கட்சிகளுக்கான அன்பளிப்பு நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் உரிய கணக்குகளோடு வங்கிகளின் வாயிலாக மட்டுமே தர வேண்டும் என்று சட்டத்தை கட்டாயமாக்கியதால் தேர்தலில் நேர்மைத்தன்மை அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

    7. இந்திய வானியல் துறை நிறைய செயற்கை கோள்களை செலுத்தி சாதனைகள் பல புரிந்துள்ளது மகிழ்ச்சியே.



    வலிகள்

    பயிர்தொழிலும், பாவப்பட்ட இயற்கையும்

    பொருளாதார வளர்ச்சி கோஷத்தில் நம் மண்ணுக்குரிய பிரதான தொழிலான வேளாண்மையை அடியோடு புறக்கணித்து அலட்சியப் படுத்தப்படுவது ஏன் பிரதம அமைச்சரே???

    பங்கு சந்தையிலும், வெளிநாட்டு முதலீடுகளிலும் மட்டுமே நம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி அளக்கப்பட்டு அரசு கூப்பாடு போடுவதன் மர்மமென்னவோ????

    பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றால் வேளாண்மை விடுத்து வேறு தொழிலுக்கு மாறுங்கள் என்று ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டிலும் படித்த மேதைகள் தான் அறை கூவுகிறார்கள் என்றால் அடித்தட்டு சமூகத்திலிருந்து வந்த நீங்களும் அதையே அடியொற்றி விவசாயத்தை புறகணிப்பதன் காரணமென்னவோ???

    5௦ சதவீதத்திற்கும் மேலாக நம் மக்களுக்கான வேலைவாய்ப்பு வேளாண் துறை தானே தருகிறது என்று காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்த தங்களுக்கு தெரியாதா என்ன????

    நெடுவாசலும், கதிராமங்கலமும் உங்களை எதிர்த்து எழுப்படும் போராட்ட குரலாக மட்டுமே ஏன் பார்க்கின்றீர்கள்? எங்கள் மக்களுக்கான வாழ்வாதார பிரச்சனைகளின் ஓல குரல்கள் உங்கள் செவிகளில் ஒலித்தும் நீங்கள் அமைதி காப்பதன் பொருளென்னவோ??? இந்த வலியை நீங்கள் உணர என்னவென்று வரி வடிவம் கொடுப்பதென்று தெரியவில்லையே

    நாங்கள் இதைப்பற்றி கேள்வியெழுப்பினால் முந்தைய அரசை விரல் நீட்டுவீர்கள்!!!! முந்தைய அரசு தான் கழுத்தறுப்பிற்கான வேலையை சத்தமின்றி செய்ததென்றால் நீங்களும் அதையே பின்பற்றுவதேன்???


    சோமாலியா போன்ற நாடுகள் வறுமையில் தள்ளப்பட்டு சீரழிந்ததற்கான பெரும் பங்கு காரணம் வளங்கள் சுரண்டுபட்டு விவசாயம் ஒழிந்தது தான் என்று தங்களுக்கு தெரியாதா என்ன???



    ஆனால் ஒன்று மட்டும் பிரதம அமைச்சரே..... நம் அடுத்த தலைமுறை தங்களின் வயிற்று தீயை தணிக்க அந்நிய தேசத்து கப்பல் கரையொதுங்கும் நாளை எதிர்பார்த்து கடற்கரையோரம் காத்திருப்பதை போன்ற ஒரு பிம்பம் எப்போதும் விழிகளில் நிழலாடுவதை தடுக்க இயலா கையாளாகத்தனத்தோடு வேடிக்கை பார்க்கிறேன்.





    இயற்கை வளங்களை பாதுக்காக்க உங்கள் அரசு என்ன தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளது?? தனியார் தொழில் நிறுவனங்கள் மொத்தமாக இயற்கை அன்னையை சீரழிக்கும் கயமைத்தனத்தை செய்யும் போது அதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது?

    இதுவரை அப்படி ஏதும் பெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக செய்திகள் வரவில்லையே......மலைகளும், வனங்களும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வாயில்லா ஜீவன்களாகிய நம் சொந்தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் அலைந்து கொல்லப்படும் நிகழ்வுகள் அனுதினமும் தினசரிகளில் அச்சிலேறுகின்றனவே.....

    ஜீவகாருணியம் பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றது என்றறியாது தற்குறிகளாகிய எங்களுக்கு பசுக்கள் மட்டுமல்ல காக்கையும் குருவியும் கூட நமக்கு சொந்தங்கள் தான் என்று போதிக்கப்பட்டிருக்கிறது பிரதமரே

    வளங்கள் சுரண்டப்பட்டு மனிதம் துண்டாடப்பட்டதின் விளைவாக இன்று வரை வடகிழக்கு மாநிலங்கள் அமைதி இழந்து தவிக்கும் வரலாறு நீங்கள் அறியாததா என்ன????



    பொருளாதாரம்

    கருப்பு பண பதுக்கல் ரொக்க பணமாக வெறும் 6% முதல் 8% வரை
    மட்டுமே என்று பொருளாதார மேதைகள் சொல்கின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation) கருப்பு பண பதுக்கலை தடுக்காது என்று முன்கூட்டியே கணித்ததற்கேற்ப நேற்று புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை பணம் பதுக்கும் ஆட்களை வருமான வரித்துறைக்கு அடையாளம் காட்டியுள்ளது என்று சொல்கிறார்கள். எத்தனை பேரின் கணக்குகள் கண்காணிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட போகிறது என்பதை காண காத்திருக்கிறோம். வெளிப்படை தன்மை இல்லாததால் கருப்பு பண விவகாரம் மூடுமந்திரமாக தான் பாமர மக்களின் பார்வையில் இதுவரை தெரிகிறது.


    Hardwork is more powerful than Harvard என்று நீங்கள் சொன்னீர்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பொருளாதார மேதைகள் எழுப்பும் கேள்விகள் குறித்து புள்ளி விவரங்களோடு நேரடியான பதில்கள் தந்து நம் மக்கள் அனுபவித்த வலிகள் அர்த்தமுள்ளது தான் என்று தெளிவு படுத்த அரசு தயாராக உள்ளதா????


    பெருமுதலாளிகளின் வாரா கடன்களை வசூலித்து வங்கிகளை காப்பாற்றுங்கள். அதை விடுத்து கல்வி கடனையும் விவசாய கடனையும் வசூலிக்க ஏழை மக்களின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தாதீர்கள்.




    கல்வி

    உயிர் வாழ உணவும் நீரும் அடிப்படை தேவையென்றால், மனிதன் மனிதத்தோடும், நாகரீகத்தோடும் வாழ கல்வியறிவே அடித்தளம். ஆனால் தங்களின் அரசு கல்விக்கான நிதியை மிச்சம் பிடிப்பதில் குறியாக இருக்கிறது.

    சிறப்பாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைத்து விடலாம் என்று நீதிஅயோக் பரிந்துரைத்துள்ளது. தரம் இல்லையென்றால் தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்வது தானே அரசின் கடமை. தனியார் வசம் ஒப்படைப்பதால் மட்டுமே எந்த வகையில் கல்வி தரம் உயரும்??? நாங்கள் தேர்ந்தெடுத்த அரசு கூட சிறப்பாக செயல்பட வில்லை என்ற அதிருப்தி எங்களுக்குள்ளது. நாங்கள் இந்திய தேசத்தை யாரிடம் ஒப்படைப்பது பிரதமரே????


    நுழைவு தேர்வு என்றொரு கேலிகூத்தை என்னவென்று நொந்து கொள்வது?? National Testing agency என்ற அமைப்பை உண்டாக்கி நுழைவு தேர்வு நடத்த பெரும் திட்டம் எல்லாம் போட்டாகிவிட்டது என்று செய்திகள் வருகின்றன. 5, 8, 10, 12 என்று தொடர்ந்து பொதுதேர்வு வைத்து மாணவர்களை அழுத்தத்திற்குள்ளாக்கி வடிகட்டுதலுக்கான முயற்சியை செவ்வனே செய்யபோகிறதாமே உங்கள் அரசு.

    இனி கலை, அறிவியல், கவின் கல்லூரிகள் முதற்கொண்டு அனைத்து மேல்படிப்பிற்கும் இந்திய அளவில் ஒரு பொது நுழைவு தேர்வு என்ற செய்தி அடித்தட்டு மக்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தேர்வுமுறைகளால் இன்னும் வளர்ச்சியடையும் நாடாகவே இருக்கும் நம் நாட்டு பிள்ளைகளின் கல்வியறிவு வெறும் பள்ளி கல்வியோடே முற்றுபெற்று விடும் அபாயத்தை தங்கள் உணரவில்லையா????


    ஒரு மாநிலம் ஆண்டாண்டு காலமாக தன் உழைப்பின் மூலமாக உயர்த்திய மருத்துவ எண்ணிக்கை இடங்களை ஒட்டுமொத்தமாக ஒரே நுழைவு தேர்வு என்ற போர்வையில் வெளி மாநில மக்கள் கொள்ளையடிப்பது எந்த வகை தருமம் என்று எங்களுக்கு புரியவில்லை முதன்மை அமைச்சரே. இயற்கை பொதுவாக அருளும் கொடையாகிய நதிநீரை கூட எங்கள் பசி தீர்க்க தர மாட்டீர்கள். ஆனால் நாங்கள் மட்டும் எங்கள் ஆண்டாண்டு கால உழைப்பை உங்களுக்கு தாரை வார்க்க வேண்டும்...... ஓங்குக இந்திய இறையாண்மை.



    எங்கள் மொழி, கலாச்சாரம் என்பவற்றில் மூக்கை நுழைத்து நீங்கள் செய்யும் இடர்களை எதிர்த்து போராடவே எங்களுக்கு சக்தி போதவில்லை. இதில் கல்விக்காகவும் நாங்கள் போராட வேண்டுமென்றால் எங்கள் வாழ்க்கை வீடுகளில் அல்லாமல் நடுத்தெருவிலே மட்டுமே கழிந்து போகும். ஒரே கல்வி கொள்கை என்ற பசப்பு வார்த்தை கூறிக்கொண்டு இங்கே வந்தால் கேவலமாக தோற்று விழுவீர்கள். உலகெங்கிலும் அறிவார்ந்த சமூகமாக அடையாளம் காணப்பட்ட எங்களை சீண்டி பார்க்காதீர்கள்.



    இந்த குறுக்குவழி முறைகளையெல்லாம் விடுத்து உலக தரத்தில் எத்தனை கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் உருவாக்கினீர்கள் என்று ஆய்வு மேற்கொள்ளுங்கள். வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்லும் காலம் போய் இப்போதே கல்வி கற்கவே அந்நிய நாடுகளை நாடும் அவல நிலை உருவாகிவிட்டது.


    சர்வதேச தரத்திற்கான கல்வி நிறுவனங்கள் தொடங்க ஆக்கபூர்வ முயற்சிகள் மேற்கொண்டால் நம் இந்தியாவில் பல கலாம்களும், சர்.சீ.வி.ராமன்களும், ஜெகதீச சந்திரபோஸ்களும் அவதரிப்பார்கள்.


    மொழியும் கலாச்சாரமும்


    ஊழல் ஆற்றில் எங்கே நம் தேசம் ஒரேயடியாக மூழ்கிவிடுமோ என்ற அச்சத்தின் கடைவிளிம்பில், கைக்கு கிடைத்த துடுப்பாக அகப்பட்ட உங்கள் “வளர்ச்சி அரசியல்” முழக்கத்தை பற்றி கொண்டு எப்படியாவது நாட்டை மீட்க வேண்டுமென்ற எண்ணற்ற கனவுகளோடும், நம்பிக்கையோடும் இந்த இளம் தலைமுறை உங்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது.


    தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய தேசத்தின் பிரதமராக எல்லா மாநிலங்களும் வளர்ச்சி பெற பாடுபடுவேன் என்று சொன்னீர்கள். உங்கள் அரசியல் வாழ்வின் கருப்பு பக்கங்களாக பதிந்து விட்ட கலவர நிகழ்வுகள் அரங்கேறிய போது இந்த இளம் தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள் பள்ளி மாணாக்கர்கள்.

    இறந்த காலத்தை ஒதுக்கி புறம்தள்ளி, அமைதியும் சமாதானமும் நிறைந்த தேசத்தை உங்களிடம் எதிர்பார்த்த இளம் தலைமுறையின் நம்பிக்கையை நீங்கள் எந்த அளவிற்கு காப்பற்றினீர்கள் என்ற வினாவை தியான பயிற்சியின் போது உங்களுக்குள் எழுப்பி கொள்ளுங்கள். கல்விநிலையங்களில் கூட நிலவும் அமைதியின்மையும், பாரபட்ச போக்கும் மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.



    இந்திய தேசத்தின் பலத்திற்கான அடித்தளமே நம்முடைய பன்முகத்தன்மை தானே அமைச்சரே. மொழிகளின் அருங்காட்சியகமாகவும், பல வண்ண பண்பாடு கலாச்சார பூங்காவாகவும் திகழும் அழகிய நம் தேசத்திற்கு நீங்கள் ஏன் ஒரே வண்ணம் பூச முயற்சிக்கிறீர்கள் ???? தேசமென்ன, கலாமையே வண்ணம் பூசி புத்தகம் தந்து வேறுமாதிரி அடையாளப்படுத்திவிட்டீர்களே..... தன்னை வெறும் தமிழராக மட்டுமேயல்லாமல் இந்தியராய் அடையாளப்படுத்தி கொண்ட மாமனிதரல்லவா அவர்!!!!


    தான் விரும்பும் உணவு, மொழி, தெய்வம் என்று தேர்ந்தெடுக்கும் தனிமனித சுதந்திரத்தில் கூட அரசு ஏன் தலையிடுகிறது???


    “Since every school in India teaches English, why can’t it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!”
    -C.N.Annadurai




    உங்களுக்கு ஒரு பிரத்தியோக செய்தி பிரதமரே....எங்களுக்கு தேவையென்றால் இந்தி மட்டுமல்ல இந்திய தேசத்தின் எந்த மொழியையும் கற்று தேற நாங்கள் தயார் .

    அந்நிய நாட்டின் மொழியாகிய ஆங்கிலத்தையே கொண்டாடும் எங்களுக்கு இந்தி மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி வர காரணம் யார்??? நீங்கள் கட்டாயப்படுத்தி திணிப்பதாலேயே இந்திக்கும் எங்களுக்குமான இடைவெளி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவாய் உருமாறிவிட்டது.

    சிறுகுழந்தைகள் கூட விருப்பமற்ற உணவை திணிக்கும் போது உமிழ தானே செய்வார்கள். நாங்கள் வளர்ந்த மனிதர்கள் ஆயிற்றே.... கட்டாயப்படுத்தலை எப்படி சகித்து கொள்ள முடியும்???


    எங்கள் மொழி மற்றும் பண்பாட்டின் மீது எங்களுக்கு அதீத காதலும் ,அளவு கடந்த கர்வமும் உண்டு தான்.

    இதனால் வடமாநில மக்களாகிய நீங்கள் எங்களை மொழிவெறியர்கள், பிரிவினைவாதிகள், காட்டுமிராண்டிகள் என்று வசை பாடும் முன் கொஞ்சம் கீழடிக்கு சுற்றுலா வாருங்கள்.

    சாதி, மத, தெய்வ பேதங்கள் கடந்து சமத்துவ சிந்தனையோடு உலகத்து உயிர்களையும், வாழ்வியலையும் அபரிமிதமாக நேசித்த நாகரீக சமூகத்தை உங்களுக்கு காட்சிப்படுத்துகிறோம் வாருங்கள்.


    நீங்கள் வாட் நகரம் மட்டுமல்ல முழு குஜராத்தையும் தோண்டி பாருங்கள். ஆனால் எங்கள் நிலப்பரப்பை அகழ்வாய்வு செய்வதை தடுத்து நிறுத்தி இடையூறு செய்யாதீர்கள்.

    இறுதியாக ஒரு வேண்டுகோள்.

    இனி இந்திய நாட்டில் கடவுளின் பெயரால் உருவாகும் கார்ப்பரேட் மத நிறுவனங்களை (எந்த மதமானாலும்) ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

    தெய்வத்தை நெருங்க எந்த இடைத்தரகரையும் தேடி போகாதிருக்கும் தெளிவு நம் மக்களுக்கு விரைவில் வர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். நம் நாயன்மார்களும், புத்தரும், நபிகளும், இயேசுவும் சொல்லாத ஆன்மீக கருத்துகளையா இனி ஒருவர் புதிதாக சொல்லி விடபோகிறார்???


    நான் இங்கே கொட்டி தீர்த்த அனைத்து கருத்துக்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு காந்தியையும், கலாமையும் நேசிக்கும் நெஞ்சத்தின் வலிகளும், கனவுகளுமே.

    எங்களின் மேல் அன்பே இல்லாத எங்களின் அன்புள்ள பிரதமருக்கு என் நன்றிகள். விடைபெறுகிறேன்., வணக்கம்.

    இப்படிக்கு
    வங்கக் கடற்கரையோர
    அலைகளோடு சேர்ந்து
    குமுறும் ஒரு ஆன்மா


    Last edited by gkarti; 1st Sep 2017 at 10:55 AM. Reason: Formatting
    jv_66, gowrymohan, sumitra and 5 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #25
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    This post is dedicated to you Mollll @gkarti

    Chumma wish panitu pogalamnu inga yeti partha ennoda vaiya kilari ipdi muthugu odiya type vachiteya molllll.....ithu nyamama

    Satellite point ku 7 number panidu da..vitu pochu

    Last edited by Vimalthegreat; 31st Aug 2017 at 11:19 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #26
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Independence Day Contest

    இப்போது நடக்கும் அரசியல் முந்தைய தெருவோர பஞ்சாயத்து போல் அல்லாமல் பிரைவேட் கம்பெனி மேனேஜ்மென்ட் போல் உள்ளதால் ஒன்னும் சரிவர புரியவில்லை. இக்கடிதங்கள் மக்களின் தற்போதைய மனநிலையின் பிம்பங்களாக இருந்து புரிய வைக்கின்றன.


    அரசியல் பேசும்போது ஏனோ நக்கல் நய்யாண்டி பாணி தான் சொல்லவந்ததை , வெளியே தெரியாத ஆனாலும் வீரியம் குறையாத உள்குத்தாக , சுவாரசியம் தருபவையாக இருக்கின்றன. இப்பாணியில் எழுதிய கடித உரைகள் அருமை.


  7. #27
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Independence Day Contest

    விமல் @Vimalthegreat ,
    உங்கள் கடிதம் ஆரம்பிக்கையில், நம் முதலமைச்சர் எடப்பாடிக்கோ என்று அதிர்ந்து விட்டேன். அவருக்கு கடிதம் எழுதும் அளவிற்கு அவர் அவ்வளவு பவர் உள்ளவரா என்று என்கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. சரி செம்மையாக கலாய்த்தல் இருக்குமோ என்றோ தொடர்ந்து படித்தேன். பிறகே யார் என்று புரிந்தது. முதல் பாதியில் இனிப்பாக இருந்த உரையை படுத்தபடி படித்துக்கொண்டிருந்த நான் , காரம் ஏற எற எழுந்து அமர்ந்து விட்டேன்.


    வெறும் குறைகளை மட்டுமே அல்லாமல் நிறைகளையும் சேர்த்து சொல்லியதால் கடிதத்தின் மதிப்பு கூடி இருக்கிறது.


    உமது போட்டி கட்டுரைகளிலேயே இதுவே மிகவும் எளிமையாக , எளிதாக (எனக்கு)புரியும்படி இருந்தது.


  8. #28
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Penmai's Independence Day Contest

    Nicely Written Poorani.. But No No.. Ipadi Sollatheenga //உங்களுடைய செயல்பாடுகளைப் பற்றி எழுதவோ விமர்சிக்கவோ எனக்கு தகுதியில்லை! அறிவுமில்லை! //


  9. #29
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Penmai's Independence Day Contest

    Aaha Molll, Un Tea-Decoction Nalla Ezhuthirukka daa.. As Said, Practically its Not a Shankar Movie of Making a Man as One Day Action hero & To Change System - Every Dept into an Attention. We Knw, Its not Possible. Yup I do agree with you & Anusha, And I Prioritize Some Programs - areas Coz Still our Govt accords Very Less % of GDP on these Sectors in Comp to Others. Yes Antha Partially irukko nu Nee Ninaikrathai, Naanum Feel Pandren..


  10. #30
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai's Independence Day Contest

    Quote Originally Posted by RathideviDeva View Post
    விமல் @Vimalthegreat ,
    உங்கள் கடிதம் ஆரம்பிக்கையில், நம் முதலமைச்சர் எடப்பாடிக்கோ என்று அதிர்ந்து விட்டேன். அவருக்கு கடிதம் எழுதும் அளவிற்கு அவர் அவ்வளவு பவர் உள்ளவரா என்று என்கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. சரி செம்மையாக கலாய்த்தல் இருக்குமோ என்றோ தொடர்ந்து படித்தேன். பிறகே யார் என்று புரிந்தது. முதல் பாதியில் இனிப்பாக இருந்த உரையை படுத்தபடி படித்துக்கொண்டிருந்த நான் , காரம் ஏற எற எழுந்து அமர்ந்து விட்டேன்.


    வெறும் குறைகளை மட்டுமே அல்லாமல் நிறைகளையும் சேர்த்து சொல்லியதால் கடிதத்தின் மதிப்பு கூடி இருக்கிறது.


    உமது போட்டி கட்டுரைகளிலேயே இதுவே மிகவும் எளிமையாக , எளிதாக (எனக்கு)புரியும்படி இருந்தது.


    ஹஹா.... அக்கா கடிதம் உரைநடையில் தான எழுத முடியும்... உங்களுக்கு ஆசை இருந்தா சொல்லுங்க என் கவிதை கொடுமைய எழுதிடலாம்.... @RathideviDeva

    மக்களுக்கு என்ன நடக்குது என்று புரியாம குழப்புத்தில் ஆட்சி நடத்துவது தான் இப்போ அரசியல் trend

    பிரதம மந்திரி என்பது வேற்று மொழி வார்த்தையோ என்று எனக்கு சந்தேகம் அக்கா.

    முதன்மை அமைச்சர் என்பது தான் எனக்கு தெரிஞ்சி கொஞ்சம் நெருக்கமான தமிழ் வார்த்தை. படிக்கும் எல்லாருக்கும் உங்கள மாதிரி சந்தேகம் வரும் என்று யூகித்து தான் மற்ற இடங்களில் பிரதமர் என்ற வழக்கு சொல்லை பயன்படுத்தினேன்.

    பிரதமர் எது செய்தாலும் விமர்சிக்க நம்ம என்ன அரசியல் வாதிகளா.
    நல்லது என்று பட்டா பாராட்ட போறோம்....கெடுதல் என்று தெரிந்தால் கத்தி சண்டை போட வேண்டியது தான்

    தமிழ்நாடு அரசாங்கம் மானத்தோட இருந்த கடைசி தினம் 22/09/2016.

    நம்மோட சுயமரியாதை மண்ணை சுடுகாட்டு மண்ணாக இல்ல மாற்றி வச்சி இருக்காங்க .

    இப்போ அரசாங்கம் என்ற பெயரில் ஒரு உயிரற்ற ஆவி அரசாங்கம் தான் நடக்குது அக்கா. நம்ம ஊருக்கு வந்த கிரகம் இந்த இம்சைகளை எல்லாம் பாக்கணும்....

    நீங்க சொன்ன மாதிரி நம்ம இதுங்களுக்கு கடிதம் எழுதிட்டாலும், அதை திக்காம படிக்கிற அறிவாவது வேணுமே என்ன எழுதி இருக்கோமென்று என்று புரிந்து கொள்ள.


    ஆமா.....அவ்ளோ காரமாகவா இருந்தது!!!!!
    நான் மிளகு பொடி தூவி தான எழுதினேன். மிளகாய் பொடி கலந்து எழுதினா அது சுதந்திர தின போட்டி பதிவா இருக்காது அக்கா.

    Last edited by Vimalthegreat; 1st Sep 2017 at 07:07 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter