Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree155Likes

Valentines's Day Contest


Discussions on "Valentines's Day Contest" in "Special Contest" forum.


  1. #11
    vigneshwari23 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    1

    Re: Valentines's Day Contest

    kadhal oru sugamana vazhi.....kadhalipavargal matumae athai unara mudium.....ullagil anaithu uruvugalaium thandi varuvathu dhan kadhal......


    Sponsored Links

  2. #12
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: Valentines's Day Contest

    காதல் -எனது பார்வையில்

    காதல்....

    ஒரு அழகான உணர்வு....

    நம்மையே மறக்க செய்து நமக்குள் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடும் அற்புதமான உணர்வு.....

    உணரும்பொழுது மத்தாப்பூ சிதறல்களாய் மனம் முழுதும் உற்சாகம் தெறிக்கச் செய்யும் இனிய உணர்வு...

    காதலை காதலர் தினத்தில் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை எனக்கு....

    அது அனுதினமும் கொண்டாடப்பட வேண்டிய விஷயம்...

    நான் மட்டுமே என்ற நிலை போய் அவனுக்காய், அவளுக்காய் நம்மை மாற்ற தூண்டும் காதல்....

    பிடிவாதத்தை ஜெயிக்கும்...

    நம்மையே ரசிக்க செய்யும்...

    சிறகின்றி பறக்க செய்யும்...

    அவனுக்காய் உருக செய்யும்...

    இன்பத்திலும், துன்பத்திலும் அவனையே தேடும்...

    கைகள் கோர்க்கும் முன், மனங்கள் கோர்த்து நிற்கும்...

    இத்தகைய உன்னதமான உணர்வே காதல்....

    சேர்ந்திருக்கும் போது உலகையே வென்ற களிப்பை தரும்;
    பிரிந்திருக்கும் போது உலகோடு நம்மையே வெறுக்க செய்யும்;
    உணர்வே காதல்...

    காதலே வேண்டாம் என தப்பி ஓட நினைப்பவரையும், வசப்படுத்தி அடிமையாக்கும்...

    காதல் இல்லாத வாழ்க்கை மிகவும் வெறுமையானது...
    சேர்ந்திருக்கும் காதலர்களை விட
    பிரிந்திருக்கும் காதலர்களால் நிச்சயமாய் உணர முடியும்
    அந்த வெறுமையை...
    அது தரும் வலியை....

    பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்திலும் காதல் இருக்கவே செய்கிறது. திருமணத்திற்கு முன்னோ, பின்னோ எப்போது தோன்றினும், அது நிலைபெற்றிருக்க வேண்டும்,

    இறுதிவரை....
    நம் வாழ்வு முடியும் வரை....
    அது தான் காதல்...


    காதல் ...
    அவனை காதலிப்பதில் தொடங்கி, அவன் குடும்பம், குழந்தைகள், சுற்றம், என மேலும் மேலும் பரவும் உணர்வு...

    ஆகவே காதலிப்போம்,
    நம் துணையை;
    நம் வாழ்கையை;
    நம் சுற்றத்தை;
    இவ்வுலகை!


    -அனிதா.சங்கர்

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
    HERE.

    Last edited by gkarti; 24th Jul 2014 at 08:36 PM.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  3. #13
    Darra's Avatar
    Darra is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    2,511
    Blog Entries
    5

    Re: Valentines's Day Contest

    Love is an invisible link that connects the two half of the soul and make it whole.

    "Do not impose on others what you yourself do not desire"

    With ♥
    Darra

  4. #14
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Valentines's Day Contest

    இரு மனங்களுக்கு இடையேயான வரையறுக்கப்பட முடியாத உணர்வு காதல்

    ஈருடல் ஓருயிராய் இரு இதயங்கள் நீக்கமற கலந்து,
    அன்பை பிரதானமாக சுவாசித்து உனக்காக நான், எனக்காக நீ! என கருத்தொருமித்து
    காலம் முழுதும் தொடரும் பந்தம் காதல்!

    நிறைகளை ஏற்று, குறைகளை மறந்து தன் துணையை அப்படியே ஏற்றுக்கொள்வது காதல்!!

    அடிக்கடி பேசிக்கொள்ளும் தொலைபேசி உரையாடல்கள் அல்ல காதல்

    நித்தம் எழும் துணையின் நினைவே காதல்!!!

    தன் துணைக்காக தனக்கு பிடித்ததை விட்டு கொடுத்து பிடிக்காததை
    ஏற்றுக்கொள்ளும் மன முதிர்ச்சியே காதல்!!!!

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
    HERE.

    Last edited by gkarti; 24th Jul 2014 at 08:37 PM.

  5. #15
    Thendral D.'s Avatar
    Thendral D. is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    .
    Posts
    271

    Re: Valentines's Day Contest

    Excellent Anitha, pinnni padel eduthtapa. Super


  6. #16
    Ashick's Avatar
    Ashick is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    820

    Re: Valentines's Day Contest

    Love-One of the most beautiful word in the world.

    The word Love is not about the happiness about only two people but the happiness of the entire family. A boy loves a girl, a brother loves his sister, a father loves his wife and family, above all a mother loves her children more than anything in the world, so this valentine day celebration is not meant only lovers but for each and every person in the world.
    Reg,
    M.Syed Ashick

    Reg,
    M.Syed Ashick

  7. #17
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: Valentines's Day Contest

    காதல் உணரப்படும்போதும்,உரைக்கப்படும்போதும் நம் உள்ளத்தை உரசிப்பார்க்கும் உணர்வென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

    அனைத்து உயிர்களிடத்தும் உருவாகின்ற ஓர் அற்புத உணர்வு காதல்..பார்க்கப்படும் விதம் தான் மாறும்.. ஐந்தறிவு, ஆறறிவு என பேதம் பார்க்காது காதல்.. ஓரறிவு ,ஐந்தறிவு உயிர்களோ அதற்கு தெரிந்த மொழியில் காதலிக்கின்றன, மனிதனோ காதலையே ஒரு மொழியாக்கி அதிலே அமிழ்ந்தும் போகின்றான்..

    துன்பமும் இன்பமும் ஒரு புள்ளியில் இணைவதும் காதலால் தான் ..இணைந்த இதயங்கள் பிரிந்தும் ஒன்றுக்காக மற்றொன்று துடிப்பதும் காதலால் தான் ..


    வாழ்க்கை பயணத்தில் எதோ ஒரு நிறுத்தத்தில் தடுக்கி விழுவதை காதலாக பார்க்கிறவர்கள் தான் இங்கு அதிகம்..தடுமாறி வீழுமுன் கைதூக்கி விடுவது தான் காதல்.. அது ஹார்மோன்களின் சுரப்பினால் பார்த்ததும் பொங்கி விடும் உணர்வன்று, உயிர் வரை தீண்டி உறவாடும் உணர்வுதான் காதல்..

    ஆசை, காமம் காதலோடு இயைந்தவையாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காதலாக பார்க்கப்படும்போது தான் காதலின் புனிதம் தேய்ந்து விடுகிறது.. காதல் ஆசை அடங்கியபின்னும், காமம் கலைந்தபின்னும் உணர்வாக உள்ளுக்குள் தேங்கி நிற்கும்.


    வைரமுத்து சொல்வது போல் உறுப்புகள் நீங்கிய உணர்வை அனுபவித்தால் தான் தெரியும் காதலின் சக்தியை, ஆழத்தை..


    உனக்காக நான் , எனக்காக நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்பது கூட எதிர்பார்ப்புதான் , எதிர்பார்ப்புகளற்ற ஒரு உறவில் காதல் மிக எளிதாக இயைந்து போகிறது.. எனக்காக படைக்கப்பட்ட இன்னொரு உயிர் நீதான் என்ற உணர்வு யாரிடத்தில் பொங்குகிறதோ அந்த உணர்வு காதலாகி கசிந்து உயிராக மாறுகிறது..


    இதய பரிமாற்றம் இதயத்தோடு இணைந்து வாழ்ந்தால் அங்கு காதல் பூரணமடைகிறது, அது உடலை சார்ந்து மட்டும் அமையும்போது காதல் நீர்த்து விடுகிறது..


    பட்டாம்பூச்சியின் சிறகசைப்பின் மென்மையும் கல்லின் உறுதியும் ஒன்று சேர்ந்து இருப்பது தான் காதல், ஒரு இதயம் நினைப்பதை சொல்லாமலே அடுத்த இதயம் புரிந்து கொள்வது தான் காதல்..


    மலையையும் சிறு கடுகாக பார்க்க தெரிந்த காதலுக்கு சிறிது நேர பிரிவே சுமையாகி வாழ்வை கசக்க செய்யும் மாயமும் அதற்கு தான் உண்டு..


    உடல் தாண்டி உயிர் தீண்டுகையில் காதல் ஸ்பரிசிக்க படுகிறது.. அதுவே வாழ்வின் கருவாகவும் பிரபஞ்சமெங்கும் பரவுகிறது..


    சற்றேறக்குறைய மரணத்தையும் ஜீவிதத்தையும் உணரவைப்பது காதல் தான்.. மானுடம் மனிதத்தன்மையோடு வாழ காதல் தான் காரணம், மென்மையான ஒருவன் மூர்க்கமாவதும், மூர்க்கன் மென்மையாவதும் காதலினால் தான்..


    குடைக்குள்ளும், புதருக்குள்ளும் , கடற்கரையிலும் வளரும் காதல் காமத்தை மட்டுமே சென்றடையும், ஊனுருக்கி , உயிருறுக்கி,உள்ளுக்குள் வளரும் காதல் உன்னதத்தை அடையும்..


    காதல் உணர்வை ருசிக்காதவன் மனிதனில்லை.. அப்படிப்பட்ட மனிதனும் இன்னும் பிறக்கவில்லை..


    காத்திருந்து தவித்து, ஒன்றுடன் ஒன்று கலந்து ,ஒன்றுமில்லாமல் ஒருயிராய் கரைந்து விடுவது தான் காதல்..


    காதலினை காதலிப்போம் , உயிர்கள் உய்வித்திருக்க... உணர்வுகள் உருமாறாதிருக்க..


    கண்கள் வழி நுழைந்து உயிரை நிரப்பும் உணர்வினை அனுபவிக்க வேண்டுமா .. உயிர் மீட்டும் வீணையொலி காதில் ரீங்காரமிட வேண்டுமா... ஈருடல் ஓருயிர் சுமக்கும் மாயம் அறிய வேண்டுமா ..


    காதலித்து பாருங்கள்.. காதல் உங்களை காதலிக்கும் .. ஆகையினால் காதல் செய்வீர்...


    இரு கண்களின் இதய மொழி....

    உயிரை உருக்கி உயிருக்குள்
    இன்னொரு உயிரை பதியமிடும்
    கடவுள்...

    கண்சிமிட்டலின் மின்னல்
    இடியாய் இதயம் இறங்கும்...

    வாழ்க்கை பாதையின்
    இனிய நிறுத்தம் ..

    இதயக்கருப்பையின் நிரந்தர
    கரு காதல்..


    ஆகையினால் காதல் செய்வீர்...

    ப்ரிய தோழி

  8. #18
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Valentines's Day Contest

    காதல்


    இமைகள் என்ற உறைக்குள் வைக்கப்படிருக்கும் வாள் கண்கள்.
    குகைக்குள் பதுங்கி இருக்கும் சிங்கங்களாய்
    குறிபார்த்து சுடும் துப்பக்கிகளாய்
    எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளாய்
    உரு மாறும்.


    காதலுக்கு கண்ணில்லை என்பது பொய்
    காதல் வித்தை தூவுவது கண் என்பது தான் மெய்
    காதலில் கண் நாவாகி பேசுவது உண்மை!
    அது காதலுக்கே உரிய தன்மை.


    அன்பின் ஆதிக்கத்தால்
    ஈர்ப்பின் இயல்பில்
    திட்டம் ஏதுமின்றி
    தீர்மானமில்லாமல்
    கற்பனைக் கனவுகளில்
    நிழலாடும் நிஜம்...


    எத்தனித்த
    எண்ணங்களும்,எதிர்பார்ப்புகளும்
    ஒத்துப்போனால் ஒட்டிக்கொள்ளும்.
    பருவத்தில் பயிரனால்
    பற்றிக்கொள்ளும்.


    பாசமும் நேசமும் நிஜமானால்
    கவர்ந்திழுக்கும் காந்தமாகும். அதுவே
    காந்தத்தின் இரு புலம் களாகும்...
    இனம் புரியா புத்துணர்வைத் தந்து
    மயிர்க் கூச்செரியும், மெய் மறக்கும்.
    நிஜம் நிழலாகும், நிழல் நிஜமாகும்...


    ஆனந்தத்தின் எல்லை விரியும்
    மகிழ்வை உணரலாம், உணர்வை அறியலாம்...
    ஏக்கங்கள் ஏற்றம் பெற்று
    பரவசங்கள் பந்தாடும்...


    மோகத்தின் மேகங்கள்
    சூழ்ந்து கொண்டு சிற்றின்ப
    சுறாவளியாய் தாக்கும்...


    பட்டறிவின் துணைக்கொண்டு
    பாங்காய் தடுத்த்திட்டு
    உணர்வின் உன்னதத்தை
    உண்மையாக்க
    உறவுச் சங்கிலியை பிடித்திழுத்து
    உணர்வின் உண்மையை உரைத்து
    உரிமையோடு ஊஞ்சல் கட்டி
    உல்லாசமாய் ஆட அடித்தளம்
    போடும் உணர்வு
    காதல்...


    ஜென்மத்தின் ஜனனங்கள்
    காதலின்றி ஏது? இவ்வுலகில்!
    உயிரின் உய்வுக்கும்

    உயிர்ப்பிற்கும் வித்தாகும்
    காதல்...


    மானுடத்தின் மகத்துவமும்
    வாழ்க்கையில் சமத்துவமும்
    காதல்..காதல்..காதல்..


    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
    HERE.

    Last edited by gkarti; 24th Jul 2014 at 08:41 PM.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  9. #19
    Butterfly04's Avatar
    Butterfly04 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2010
    Location
    Chennai
    Posts
    69

    Re: Valentines's Day Contest

    காதலித்துப் பாருங்கள்...காதல் எனது பார்வையில்..

    ஆமாம் தோழிகளே, காதலித்துப் பாருங்கள்..

    முதலில் உங்களிலிருந்தே காதலை ஆரம்பியுங்கள்..உங்களை நீங்களே காதலியுங்கள்..பின்னர் உங்களைச் சுற்றிலும் இருக்கும் உங்களின் பெற்றோர்கள்,கணவர், குழந்தைகள், உங்களின் நட்பு மற்றும் உறவுகளைக் காதலியுங்கள்..அந்த வட்டத்தை விரிவாக்கி இந்த உலகத்தையே காதலியுங்கள்....
    (இங்கு காதலியுங்கள் என்று நான் கூற வருவது, அன்பு செலுத்துங்கள் என்று தான்)

    உலகத்தை அன்பு மயமானதாகக் காணுங்கள்.. உங்களின் கண்கள் மீது அன்பு என்னும் கண்ணாடி அணிந்து இந்த உலகத்தைக் காணுங்கள்..அப்பொழுது வேற்றுமைகளெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் ஓடி விடும்..

    உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பண்ணக்காரன், முதலாளி, தொழிலாளி என்ற வேறுபாடுகள் மறைந்து விடும்.. எங்கும் ஒரே அன்புமயமாக இருக்கும்.. நாடுகளுக்கிடையில் சண்டை நீங்கும்.. மொத்தத்தில் வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஓங்கும்..

    ரௌத்திரம் பழகு என்று கூறிய பாரதி கூட காதல் செய்வீர் என்றும் ஆணையிட்டான்...

    ஆகையால் தோழிகளே, சண்டை, சச்சரவுகள், வேற்றுமைகளையெல்லாம் களைந்து விட்டு, உங்களைச் சுற்றிலும் இருக்கும் நபர்களைக் அன்பு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்..

    காதலர்கள் தினம் என்பது காதல் செய்பவர்களுக்கு மட்டும் என்றில்லை..

    இது அன்பின் தினம்.. யாரெல்லாம் அன்பு செய்கின்றாகளோ, அவர்கள் அனைவரும் கொண்டாடவேண்டிய தினம்..

    உங்கள் அன்பிர்க்குரியவர்களுக்கு, உங்களின் அன்பைச் சொல்லும் ஒரு தினம்..

    இந்த இனிய நாளில் உலகம் முழுவதிலும் உள்ள தோழியர்களுக்கு, எனது இனிய காதலர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
    HERE.

    Last edited by gkarti; 24th Jul 2014 at 08:41 PM.

  10. #20
    Indubala_95's Avatar
    Indubala_95 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    46

    Re: Valentines's Day Contest

    Good Perspective...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter