Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree238Likes

Women's Day - Short Story Contest

Discussions on "Women's Day - Short Story Contest" in "Special Contest" forum.

 1. #1
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,878
  Blog Entries
  1

  Women's Day - Short Story Contest

  Dear friends,

  பெண் என்ற வார்தைக்கே ஒரு சக்தி உண்டு. பெண், தாய், மகள், சகோதரி இப்படி எந்த பரிணாமம் எடுத்தாலும் அதில் பெண்மை மிளிரும். அப்படிபட்ட பெண்மையை போற்றும் மகளிர் தினத்திற்காக, பெண்மை சார்பாக சிறப்பு சிறுகதை போட்டி “தலைப்பு – பெண்மை”.

  Here is a Women's day special short story contest to feed writers creativity... Pen your story on the title - "PENMAI (Women’s qualities)".

  Some rules:

  • Story should be within 1000 words of length.
  • It should based on the title given "Penmai" i.e. regarding women only.
  • Should be your own new writing, and the story should not be published already in sites or any mode.
  • Stories should be in English or Tamil language only.
  • Contest is now open for submissions and ends on March 8th 5 PM IST.
  Winner will be selected and announced after reviewing all your submissions byPenmai.com's Judges panel.

  Have a look at here to see the winner of the contest.

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by Penmai; 13th Mar 2012 at 07:50 PM. Reason: To add winner
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine November 2017

 2. #2
  indiramura is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  muscat
  Posts
  35

  Smile Re: Women's Day - Short Story Contest

  பெண்மை
  ரோஜா பிளாட்டில் எல்லோருக்கும் புதிரான ஒரே ஜீவன் சுஜாதா என்கிற 50 வயது பெண்மணி தான். ரோஜா பிளாட் என்பது நகரின் மேல் தட்டு வேலை வாய்ப்புகளில் இருப்பவர்கள் வசிக்கும் இடம் ஆனால் சுஜாதாவை பார்த்தால் அப்படியும் தெரியவில்லை சாதாரண கைத்தறி புடவை எந்த அலங்காரமும் கிடையாது. ரொம்ப நாளாய் அந்த பிளாட்டில் செகரட்டரி சுந்தரிடம் எல்லோரும் கொஞ்சம் சுஜாதா மேடம் வீட்ட கவனிங்க 'அவங்க எப்ப பார் எங்கியோ சுத்திட்டு வராங்க நான் அவங்கள நிறைய வெளில பெரிய பையோட போறதா பாத்து இருக்கேன் அது மட்டும் இல்லாம எப்ப பார் அவங்க வீட்டுக்கு பொண்ணுங்க வந்துட்டும் போயிட்டும் இருக்காங்க அந்த பொண்ணுங்கள பாத்தா ஹை கிளாஸ் பொண்ணுங்க மாதிரி தெரியல, அப்புறம் அவங்கள கேக்காம விட்டா நம்பள மாதிரி குடியிருபுகள்ள நமக்கு கேட்ட பேர் வந்துடும்' என்று புகார் கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் சுந்தர் சுஜாதாவிடம் இதுவரை எதுவுமே கேட்டதில்லை . இன்று அவரே தன் கண் எதிரில் சுஜாதா இரண்டு பெரிய பைகளுடன் வேகமாக வெயிலில் சிக்னலில் கடந்த பொழுது ஒன்றுமே புரியவில்லை. எதற்கும் இன்று அவரிடமே ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று சுஜாதாவின் வீட்டிற்கு சென்றார்.

  சுஜாதா அவரை வாங்க வாங்க நான் மைண்டனன்ஸ் பணம் எல்லாம் தந்துட்டேனே எதாவது பிரச்சினையா சொல்லுங்க நீங்க அனாவசியமா வர மாட்டிங்களே என்றார் புன்னகை ததும்ப . அதெல்லாம் இல்லம்மா உங்க வீட்டுக்கு ' எப்ப பார் யாரோ வந்துட்டு போகறதா எதோ கேள்விபட்டேன் இதுவரைக்கும் நான் உங்கள பத்தி கேட்டதே இல்ல இப்பவும் வேற வழி இல்லாம தான் ' என்று அவஸ்தையாய் இழுத்தார் . ஒ இதுதான் உங்களுக்கு சந்தேகமா கவலை படாதிங்க நானே சொல்றேன்.

  நான் ஒரு கல்லூரியில் விரிவுரையாளறாய் இருந்தேன் எனக்கு இரண்டு மகன்கள் ரெண்டு பெரும் வெளிநாட்ல இருகாங்க அவங்க கூப்ட்ட உடனே நானும் என் வேலையை ராஜினாமா செய்துட்டு அங்க போய் செட்டில் அக முடிவு செஞ்சு அவங்க கூட பொய் தங்கினேன் ஒருநாள் ராத்திரி நான் தற்செயலா ஒரு தொலை காட்சி ப்ரோக்ராம் பார்த்து கிட்டு இருக்கும் போது ஒரு நிகழிச்சியில சில வாழ்கையில பாதையை இழந்த பெண்கள் தாங்கள் வாழ வழி தெரியாமல் திண்டாடும் அவலத்தை பார்த்தேன் உடனே என் மகன்கள் கிட்ட இந்த நிமிஷம் நான் என் மண்ணை மிதிக்க வேண்டும் என் வாழ்வு அங்கு தான் என்று பிடிவாதம் பிடித்தேன். மகன்கள் இருவரும் வேண்டாம்மா இங்கயே இருங்க நாங்க பணம் தரோம் நீங்க அனுப்புங்க என்றார்கள் நான் ஒரே மறுப்பாக மறுத்துவிட்டு அவர்கள் அருகில் இருந்து நான் உதவ வேண்டும் தூர இருந்து உதவினால் பலன் இராது கிளம்புகிறேன் அனுப்பிவையுங்கள் என்றேன்.

  ' கடைசியில் என் மகன்கள் அம்மா உங்கள் விருப்பம் போல செய்யுங்கள் நீங்கள் அப்படி வாழ விரும்பும் பட்சத்தில் ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் வசியுங்கள் அது உங்களுக்கு எல்லா விதத்திலும் நல்லது இந்த ஒன்றிற்கு மட்டும் சம்மதம் தாருங்கள் 'என்றார்கள் நான் சரி என்று அடுத்த நாளே கிளம்பி வந்து விட்டேன். இப்பொழுது அந்த மாதிரி பெண்களை சந்தித்து அவர்களுக்கு என் வீட்டிலேயே சுய தொழில் பயிற்சிகள் கற்று கொடுத்து அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்று கொடுத்து அவர்களின் வாழ்வு மேம்பட பாடுபடுகிறேன் என்று விளக்கம் கொடுத்தார்.

  அப்பொழுது மேகலா என்ற பெண் திருமண அழைபிதழை கொண்டுவந்து சுஜாதாவின் காலடியில் வைத்து விட்டு 'அம்மா நீங்க எனக்கு செஞ்ச உதவி இப்ப திருமணத்தில வந்து முடிஞ்சிருக்கு, எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நான் தற்கொலை எண்ணத்தில இருந்தேன் நீங்க தெய்வம் மாதிரி வந்து நின்னீங்க' என்று ஆனந்த கண்ணீர் வடித்தாள். தாய் திருநாடு தந்த பெண்மையின் பெருந்தன்மை சுந்தரை வியப்பில் ஆழ்த்தியது.
  Regards

  Indra

  My name is
  Indra Murali this story is written by me i think it amy satisfy you and if their is any error grammatically or wordingly kindly regret it. Thanks

 3. #3
  indiramura is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  muscat
  Posts
  35

  Re: Women's Day - Short Story Contest

  thank you nisha is their any other stories

  Nishahameetha likes this.

 4. #4
  Nishahameetha's Avatar
  Nishahameetha is offline Ruler's of Penmai
  Real Name
  Hameetha
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Trichy
  Posts
  18,268
  Blog Entries
  56

  Re: Women's Day - Short Story Contest

  Quote Originally Posted by indiramura View Post
  thank you nisha is their any other stories
  Welcome Indira

  Hey i can't understand ma, which story r u asking dear?

 5. #5
  indiramura is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  muscat
  Posts
  35

  Re: Women's Day - Short Story Contest

  No Nisha I was asking is their any other stories which came for the contest so that i can have a outlook

 6. #6
  indiramura is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  muscat
  Posts
  35

  Re: Women's Day - Short Story Contest

  thank you parasakthi

 7. #7
  Nishahameetha's Avatar
  Nishahameetha is offline Ruler's of Penmai
  Real Name
  Hameetha
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Trichy
  Posts
  18,268
  Blog Entries
  56

  Re: Women's Day - Short Story Contest

  Quote Originally Posted by indiramura View Post
  No Nisha I was asking is their any other stories which came for the contest so that i can have a outlook
  Oh!!!, Nope dear there is no one had posted it Yet now ma, You're the one who had posted it first ma

  hmmm We ll wait and see till Women's Day dear

  Parasakthi likes this.

 8. #8
  JananiSubbu is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  Trichy
  Posts
  2

  Re: Women's Day - Short Story Contest

  Quote Originally Posted by indiramura View Post
  பெண்மை
  ரோஜா பிளாட்டில் எல்லோருக்கும் புதிரான ஒரே ஜீவன் சுஜாதா என்கிற 50 வயது பெண்மணி தான். ரோஜா பிளாட் என்பது நகரின் மேல் தட்டு வேலை வாய்ப்புகளில் இருப்பவர்கள் வசிக்கும் இடம் ஆனால் சுஜாதாவை பார்த்தால் அப்படியும் தெரியவில்லை சாதாரண கைத்தறி புடவை எந்த அலங்காரமும் கிடையாது. ரொம்ப நாளாய் அந்த பிளாட்டில் செகரட்டரி சுந்தரிடம் எல்லோரும் கொஞ்சம் சுஜாதா மேடம் வீட்ட கவனிங்க 'அவங்க எப்ப பார் எங்கியோ சுத்திட்டு வராங்க நான் அவங்கள நிறைய வெளில பெரிய பையோட போறதா பாத்து இருக்கேன் அது மட்டும் இல்லாம எப்ப பார் அவங்க வீட்டுக்கு பொண்ணுங்க வந்துட்டும் போயிட்டும் இருக்காங்க அந்த பொண்ணுங்கள பாத்தா ஹை கிளாஸ் பொண்ணுங்க மாதிரி தெரியல, அப்புறம் அவங்கள கேக்காம விட்டா நம்பள மாதிரி குடியிருபுகள்ள நமக்கு கேட்ட பேர் வந்துடும்' என்று புகார் கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் சுந்தர் சுஜாதாவிடம் இதுவரை எதுவுமே கேட்டதில்லை . இன்று அவரே தன் கண் எதிரில் சுஜாதா இரண்டு பெரிய பைகளுடன் வேகமாக வெயிலில் சிக்னலில் கடந்த பொழுது ஒன்றுமே புரியவில்லை. எதற்கும் இன்று அவரிடமே ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று சுஜாதாவின் வீட்டிற்கு சென்றார்.

  சுஜாதா அவரை வாங்க வாங்க நான் மைண்டனன்ஸ் பணம் எல்லாம் தந்துட்டேனே எதாவது பிரச்சினையா சொல்லுங்க நீங்க அனாவசியமா வர மாட்டிங்களே என்றார் புன்னகை ததும்ப . அதெல்லாம் இல்லம்மா உங்க வீட்டுக்கு ' எப்ப பார் யாரோ வந்துட்டு போகறதா எதோ கேள்விபட்டேன் இதுவரைக்கும் நான் உங்கள பத்தி கேட்டதே இல்ல இப்பவும் வேற வழி இல்லாம தான் ' என்று அவஸ்தையாய் இழுத்தார் . ஒ இதுதான் உங்களுக்கு சந்தேகமா கவலை படாதிங்க நானே சொல்றேன்.

  நான் ஒரு கல்லூரியில் விரிவுரையாளறாய் இருந்தேன் எனக்கு இரண்டு மகன்கள் ரெண்டு பெரும் வெளிநாட்ல இருகாங்க அவங்க கூப்ட்ட உடனே நானும் என் வேலையை ராஜினாமா செய்துட்டு அங்க போய் செட்டில் அக முடிவு செஞ்சு அவங்க கூட பொய் தங்கினேன் ஒருநாள் ராத்திரி நான் தற்செயலா ஒரு தொலை காட்சி ப்ரோக்ராம் பார்த்து கிட்டு இருக்கும் போது ஒரு நிகழிச்சியில சில வாழ்கையில பாதையை இழந்த பெண்கள் தாங்கள் வாழ வழி தெரியாமல் திண்டாடும் அவலத்தை பார்த்தேன் உடனே என் மகன்கள் கிட்ட இந்த நிமிஷம் நான் என் மண்ணை மிதிக்க வேண்டும் என் வாழ்வு அங்கு தான் என்று பிடிவாதம் பிடித்தேன். மகன்கள் இருவரும் வேண்டாம்மா இங்கயே இருங்க நாங்க பணம் தரோம் நீங்க அனுப்புங்க என்றார்கள் நான் ஒரே மறுப்பாக மறுத்துவிட்டு அவர்கள் அருகில் இருந்து நான் உதவ வேண்டும் தூர இருந்து உதவினால் பலன் இராது கிளம்புகிறேன் அனுப்பிவையுங்கள் என்றேன்.

  ' கடைசியில் என் மகன்கள் அம்மா உங்கள் விருப்பம் போல செய்யுங்கள் நீங்கள் அப்படி வாழ விரும்பும் பட்சத்தில் ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் வசியுங்கள் அது உங்களுக்கு எல்லா விதத்திலும் நல்லது இந்த ஒன்றிற்கு மட்டும் சம்மதம் தாருங்கள் 'என்றார்கள் நான் சரி என்று அடுத்த நாளே கிளம்பி வந்து விட்டேன். இப்பொழுது அந்த மாதிரி பெண்களை சந்தித்து அவர்களுக்கு என் வீட்டிலேயே சுய தொழில் பயிற்சிகள் கற்று கொடுத்து அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்று கொடுத்து அவர்களின் வாழ்வு மேம்பட பாடுபடுகிறேன் என்று விளக்கம் கொடுத்தார்.

  அப்பொழுது மேகலா என்ற பெண் திருமண அழைபிதழை கொண்டுவந்து சுஜாதாவின் காலடியில் வைத்து விட்டு 'அம்மா நீங்க எனக்கு செஞ்ச உதவி இப்ப திருமணத்தில வந்து முடிஞ்சிருக்கு, எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நான் தற்கொலை எண்ணத்தில இருந்தேன் நீங்க தெய்வம் மாதிரி வந்து நின்னீங்க' என்று ஆனந்த கண்ணீர் வடித்தாள். தாய் திருநாடு தந்த பெண்மையின் பெருந்தன்மை சுந்தரை வியப்பில் ஆழ்த்தியது.
  Regards

  Indra

  My name is
  Indra Murali this story is written by me i think it amy satisfy you and if their is any error grammatically or wordingly kindly regret it. Thanks  very nice story

  Parasakthi and Nishahameetha like this.

 9. #9
  anitha.sankar's Avatar
  anitha.sankar is offline Commander's of Penmai
  Real Name
  Anitha dhaan.
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  Salem
  Posts
  2,263

  Re: Women's Day - Short Story Contest

  பெண்மை

  அலுவலகத்தில் இருந்து கசக்கிப் பிழிந்த கரும்பு சக்கையாய் வெளிவந்த அனுவிற்கு வீட்டிலும் வேலைகள் மலை போல் குவிந்திருந்தது.

  சோர்ந்த போதிலும் விடாமல் வேலைகளை முடித்துவிட்டு, இடையிடையே குறை கூறி வம்புக்கிழுத்த மாமியாரையும் சகித்து, ஏதோ வயிற்றுக்குள் தள்ளிவிட்டு படுக்கையில் விழுந்தாள் அனு.

  திருமணமான நான்கு ஆண்டுகளில் நாற்பது ஆண்டு முதிர்ச்சி பெற்றார் போல மனம் முதிர்ந்துவிட்டது. செய்யாத தவறுக்கு மாமியாரிடம் திட்டு வாங்குவதும், கணவனின் அகங்காரத்திற்கு அடிபணிந்து போவதும் பழகித்தான் போய்விட்டது.

  அவளது ஆசைகள், கனவுகள் அழிந்து போனாலும் உயிர் உடலில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இதோ இவள் வாழ்வதற்கும் அர்த்தம் உண்டென கடவுள் இவளுக்காய் படைத்த உயிர் இவளுக்குள்ளும் துளிர்விட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன.

  கண்களை தூக்கம் தழுவ துடித்தபோதும் கட்டாயமாய் தூக்கத்தை புறம் தள்ளி தன் வயிற்றை மென்மையாய் வருடினாள் அனு.

  'செல்லம் எப்படி இருக்கீங்க? உங்களோட நாளெல்லாம் பேசத்தான் இந்த அம்மாவுக்கு ஆசை. ஆனா முடியலையே. நமக்கான நேரம் இந்த பத்து நிமிசம்தான் தங்கம். காலைல அம்மா சரியா சாப்பிடாம உங்களை பட்டினி போட்டுட்டேனா குட்டிமா.... சாரி தங்கம். நாளைக்கு அம்மா ஒழுங்கா சாப்பிட்டுடறேன் சரியா'

  தன் வயிற்றை மென்மையாய் வருடி முத்தம் கொடுத்தவளின் இதழ்கள் மெல்ல புன்னகைக்க தூக்கம் கண்களைத் தழுவியது.

  அனுவிற்கு குழந்தை என்றால் கொள்ளை இஷ்டம். திருமணமான முதல் நாளே கணவன் ரகு அவள் ஆசைக்கு தடை போட்டான். அவனது தங்கைகள் திருமணம், சீர், கடன் என செலவுக்கான பட்ஜெட் நீல, குழந்தையின் வரவை தள்ளிப்போட்டான் அவன். தன் ஆசையை தனக்குள் புதைத்து அவனுக்கு தோல் கொடுக்க வேலையில் சேர்ந்தாள் அனு.

  ரகுவிற்கு என்றுமே சுயநலம் ஜாஸ்தி. அணுவை சகமனுசியாய் என்றுமே அவன் நடத்தியதில்லை. கணவனின் அன்பும், ஆதரவும் இல்லாத நிலையில் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியாய் இதோ அவளுக்குள்ளும் ஒரு ஜீவன் ஒளிந்துகொண்டு உயிரூட்டுகிறது கடவுளின் கருணையால்!

  காலையில் விழித்தெழுந்த அனுவிற்கு அன்று ஏனோ மிகவும் படபடப்பாய் இருந்தது. கடவுளை வேண்டிவிட்டு, வேலையில் இறங்கியவள் காதுகளில் மாமியாரின் குரல் விழுந்தது.

  'டேய் ரகு.. நான் சொன்னது நினைவிருக்கா? இன்னைக்கே டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடு...'

  அன்று கணவனுடன் மருத்துவமனை சென்று திரும்பிய அனுவிற்கு வயிற்றில் ஏதோ பிசைந்தது. மாலை வீடு வந்த ரகுவிற்கு காபியை நீட்டினாள் அனு. மெல்ல பருகி முடித்த ரகு,

  'இந்த குழந்தை வேணாம்... இப்பவே பொய் கலைச்சிடலாம்' வெகு சாதாரணமாய் சொல்லி முடித்தான் அவன்.

  இடியாய் இறங்கிய வார்த்தைகளில் அதிர்ந்த அனு,
  'என்ன... என்ன சொல்றீங்க...'

  'ஸ்கேன் ரிப்போர்ட் வந்திடுச்சு. பொண்ணாம். அம்மா வேணாம்னு சொல்லறாங்க...'

  'ஏன்?'

  'அது... ஜோசியம் பார்த்தாங்களாம்... முதல்ல பொண்ணு பொறந்தா நல்லதில்லையாம். வா கிளம்பு இன்னைக்கே போயிட்டு வந்திடலாம்'

  'மாட்டேன்..'

  முதல் முதலாய் எதிர்த்து பேசிய மனைவியை வியந்து நோக்கினான் ரகு.

  'எனக்கு குழந்தை வேணும்' திடமாய் உரைத்த அணுவின் உறுதி அவனை உசுப்பியது.

  'என்னடி எதிர்த்து பேசற?' பளாரென அறைந்தான் அவன்.

  'ஆமாங்க பொண்ணுன்னா எதிர்த்து பேசக்கூடாது. அடங்கித்தான் போகணும். பொறுத்து போகணும், தலை குனிஞ்சுதான் நடக்கணும், சத்தமா சிரிக்கக் கூடாது இப்படி ஆயிரம் விதிகள் எங்களுக்கு.

  உங்க சந்தோசத்தை பகிர தோழியா இருந்திருக்கேன். நீங்க கண்ணீர் விட்ட போது தாயாய் அரவணைச்சிருக்கேன். கட்டில்ல தாசியாய் இருந்திருக்கேன். அன்பான துணையாய் நல்ல மனைவியாய் நடந்திருக்கேன். ஆனால் என் சந்தோசத்தை பகிர தோழனாய், அரவணைக்கும் தந்தையாய், காதலனாய், கணவனாய் நீங்க இருந்திருக்கீங்களா? என்னை ஒரு சகமனுசியாய் நடத்தி இருக்கீங்களா?

  நாலு வருசமாய் நான் குழந்தைக்கு ஏங்குறேங்கறது தெரிஞ்சும் என் நியாயமான ஆசையை உணர்ந்திருக்கீங்களா? முதல் நாளே குழந்தை வேணாங்கற முடிவை சொன்னீங்களே. என் விருப்பத்தை கேட்காமலே முடிவெடுத்திங்களே...

  இதோ இப்போ ஜோசியம்னு ஏதோ காரணம் சொல்லி நம்ம குழந்தையை அழிக்க சொல்றீங்களே... அது என்னையே கொல்றது போலன்னு உங்களுக்கு புரியலையா?

  ஒரு பொண்ணா பல கஷ்டங்களை தாண்டி வந்திருந்தும் இதோ என் வயித்துல வளர்ற குழந்தை பொண்ணுன்றதுல எனக்கு சந்தோஷம் தாங்க. போட்டியே இல்லாம ஜெயிக்கிறதுல பெருமை இல்லீங்க. அடிக்கறது மட்டுமே வீரம் இல்லைங்க...எத்தனை அடி விழுந்தாலும் தாங்கி நிமிர்ந்து நிக்கிறோமே அது தாங்க வீரம். அது தாங்க வலிமை. அது தாங்க பெண்மை. அப்படி ஒரு பெண்ணை என் வயத்துல சுமக்குறதும் எனக்கு பெருமை தாங்க...

  உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தேங்க. ஆனா இப்போ நீங்களா, நம்ம குழந்தையாங்கற முடிவை என்னை எடுக்க வைக்காதீங்க...

  என் தாய்மை எல்லாத்தையும் ஜெயிச்சிடுங்க....'

  வெடித்தழுத மனைவையை அதிர்ச்சியுடன் பார்த்தான் ரகு.

  அங்கு தாய்மை ஜெயித்தது!

  ANITHA.SANKAR

  Dont think how many moments in your life;
  Just think how much life is there in a moment.

 10. #10
  Anupriya86's Avatar
  Anupriya86 is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Apr 2011
  Location
  Chennai
  Posts
  1,185

  Re: Women's Day - Short Story Contest

  Hai Anitha...

  How r u???? neenda idaivelikku piragu naam santhikirom..

  Super ma.. unga kathai... penmaiyin kunangal apdinu intha samoogam othukki vachirukkira gunangalai azhaga saadi... athe samayam nijama ponnunga evlo arumaiya etharthama vittukoduthu vazhkaiyai ethirkolranganu solli... kadaisila epdi ponguranganum supera solliyirukeenga ma... super ennoda manamaarnta vazhthukal...

  apram heroine per "ANU" nu vachathukku ungalukku marupadiyum oru "OOOOHHHHH"

  Anu

  அன்புடன்
  அனு

  விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter