Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree364Likes

Penmai's Special Women's Day Contest


Discussions on "Penmai's Special Women's Day Contest" in "Special Contest" forum.


  1. #11
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai's Special Women's Day Contest

    ஒருநாளே பெண்களுக்கு
    ஒதுக்கினர் ஆண்கள்
    'உலகப் பெண்கள் தினம்'

    "ஒருநாள் இது மாறும்
    ஒதுக்கலாம் ஆண்களுக்கு"
    உலகப் பெண்கள் இனம்.







    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #12
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: Penmai's Special Women's Day Contest

    அன்புள்ள பெண்மைக்கு,

    வணக்கமும் நன்றியும்

    என் குலத்தைப் பற்றி எழுதும் வாய்ப்பு. நழுவ விடுவேனா?

    பெண் என்னைப் பொருத்தவரை,

    ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்....
    நூலகம் இல்லா ஊருக்கு அறிவு பாழ்...

    என்பது போல்

    பெண் இல்லா வாழ்வே பாழ்...

    என்பதே என் எண்ணம்.

    பெண் என்பவள் ஆக்க மட்டுமே தெரிந்த பிரம்மா.எதுவுமே இல்லாத இடத்தில் கூட சுயம்புவாய் எழும் சக்திக் கொண்டவள்.
    எத்தனை முறை வீழ்ந்தாலும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நிற்க்கும் ஆற்றல் படைத்தவள்.


    அன்பு காட்டுவதில் அவள் அன்னை தெரசா....
    வீரம் காட்டுவதில் அவள் வேலு நாச்சியார்.....
    அறிவை வெளிப்படுத்துவதில் அவள் சுனிதா வில்லியம்ஸ்.......
    அரசியலில் அவள் இந்திராகாந்தி.....
    பாடல்களில் அவள் ஔவையார்...
    பக்தியை காட்டுவதில் காரைக்கால் அம்மையார்...
    காதல் பக்தியில் கட்டுர செய்வதில் அவள் ஆண்டாள்...
    மருத்துவத்தில் அவள் முத்துலக்ஷ்மி ரெட்டி....
    கை விளக்கேந்தி கருணை காட்டுவதில் அன்னிபெசண்ட் அம்மையார்...
    கண்டுபிடிப்பில் அவள் ஒரு மேரிகியூரி........
    நியாயம் கேட்பதில் அவள் ஒரு கண்ணகி....
    சபதம் போட்டு வென்று காட்டுவதில் ஒரு பாஞ்சாலி....
    அக்ஷ்ய பாத்திரமாய் அள்ளி அள்ளித் தருவதில் அவள் ஒரு மணிமேகலை.....
    கற்ப்பில் அவள் ஒரு சீதை.....
    நேர்மையில் அவள் ஒரு மாதவி...
    தொழிலில் அவள் ஒரு இந்திரா நூயி...
    மனம் மயக்கும் இசையை தருவதில் அவள் ஒரு சுப்புலக்ஷ்மி....
    முற்றும் துறந்த துறவுக்கு அவள் ஒரு மீரா...
    கல்வியில் அவள் ஒரு கலைவாணி....
    குற்றங்களைக் கண்டால் பொங்கி எழும் ஒரு பத்திரகாளி....
    செல்வத்தை சேமித்து குடும்பத்தை நடத்துவதில் அவள் ஒரு மகாலக்ஷ்மி.....
    கவிதையில் அவள் ஒரு கவிக்குயில் சரோஜினி......
    பெண் இல்லையேல், ஆண் இல்லை என்று போராடும் பராசக்தி....
    கணவன் சொல்லை வேதமாக மதிப்பதில் அவள் வாசுகி வள்ளுவன்....

    இப்படி எல்லாம் கலந்தவள்தான் பெண். நவரசங்களிலும், பல கலைகளிலும், பல வேலைகளிலும் ஜொலிப்பவள்தான் பெண்.இங்கே சொன்னது எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே. சொல்லாமல் விட்டவர்கள் கோடிகோடியாய்.


    பெண் என்றாலே பெருமைக்குரியவள் என்றுதான் அர்த்தமாக இருக்கும்.
    ஒரே சமயங்களில் பல வேலைகளைச் செய்ய நம்மால் முடியும். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பிறகு செய்ய வேண்டும் என்று வரிசை படுத்தும் ஆற்றலும் அதிகமாக பெண்களுக்கே இருக்கும். சில விஷ்யங்களில் முன் கூட்டியே அறியும் ஆற்றல் கொண்டவள் பெண். விண்ணிலிருந்து , மண்ணிற்க்கு வரும் மழை நீரைப் போல் பவித்திரமானவள் பெண். வாழையடி வாழையாக என்ற கூற்றை பெண்ணின் பெருமையாகவே சொல்லலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெருமையும் , பூரிப்பும் கொள்ளச் செய்வது, இறைவனால் பெண்ணிற்க்கும் மட்டுமே கிடைத்த கொடை "தாய்மை". இதைவிட பெருமை பட வேறு விஷயம் வேண்டுமா தோழிகளே ? ஒரு தந்தை இல்லாமல் கூட ஒரு குழந்தையை வளர்த்து விடலாம். ஆனால் ஒரு தாயும் , அவளின் அன்பும் இல்லாத குழந்தை நிச்சயம் மண்ணின் சொர்க்கத்தை இழந்து விடுகிறது. ஒவ்வொரு வீட்டிற்க்கும் கடவுள் நேரடையாக வரமுடியாது, அதனால் தான் தாயைப் படைத்தான் என்று வரிகள் உள்ளது. எவ்வளவு உண்மை?

    பேசும் முதல் வார்த்தை அம்மா அம்மா...
    கவலையில் வருவதும் அம்மா அம்மா.....
    கருணையில் வருவதும் அம்மா அம்மா....
    பூமியின் பெயரும் அம்மா அம்மா....
    புண்ணிய நதியும் அம்மா அம்மா....
    தாயகம் என்றும், தாய் மொழி என்றும் தாரணி அழைப்பதும் அம்மா அம்மா....
    அவளது அன்பை யார் தருவார்?
    அனாதை என்னும் கொடுமையைத் தீர்க்க ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்....


    என்ற வரிகள் என்றும் மனதில் தென்றலை வீசும்.
    அந்த சிவனுக்கே தாயுமானவன் என்ற சிறப்பு பெயர் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
    தன்னைச் சுற்றி உள்ள அனைத்தையும் அழகாக ஆக்கும் ஆற்றல் படைத்தவள் பெண். அத்தகு பெருமை வாய்ந்த பெண்ணாக இருப்பதில் மிகவும் பெருமையே!!!!


    என் வாழ்வில் என்னை மிகவும் கவர்ந்த பெண் என் தாய் தான்


    "ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்.....
    அம்மாவை வாங்க முடியுமா......
    "


    இந்த வரிகளை அடிக்கடி பாடி என் தாயின் புன்னகையை பரிசாக வாங்குவதில் அத்தனை இன்பம் எனக்கு. எவ்வளவு நிதர்சனமான உண்மை?


    எந்த குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே.....
    அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே...
    .


    அருமையான வரிகள். உண்மையான வரிகளும் கூட. ஒரு மனைவி கணவனுக்கு மந்திரி என்று சொல்வார்கள். அதை நான் கண்கூடாக என் தாயிடம் கண்டேன். அவரின் ஆலோசனை ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். எதுவும் இல்லாமல் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்தது எங்கள் வாழ்வு. சிறந்த முன்யோசனைகளோடு, இரவு, பகல் பாராது என் தந்தையுடன் உழைப்பார். காலையில் நான்கு மணிக்கு எழுந்து எங்களை கவனித்து, சமைத்து விட்டு கடைக்கு போய்விடுவார். எங்களை படிக்க வைத்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி பூஜ்ஜியத்தின் முன்பு ஒன்றாக ஆக்கி காட்டி இருக்கிறார்.

    என் தாய் படித்தவர். கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர். எங்கள் ஊரில் மேற்படிப்பு படிக்க வசதி இல்லை. அதனால் அப்பா படிக்க வைக்க வேண்டாம் என்று நினைத்தார். ஆனால் தந்தையிடம் போராடி எங்களை மேற்படிப்பு படிக்க வைத்தார்.


    " விதைத்தவன் உறங்கலாம். ஆனால் விதைகள் உறங்குவதில்லை"


    இந்த விதைகளுக்கு ஒப்பாக என் தாயைத்தான் நிச்சயம் உதாரணம் சொல்வேன். ஒரு விளக்கு சுடர் விட்டு எரிய தூண்டுகோல் எவ்வளவு அவசியமே. அதைப் போல் என் வாழ்க்கையின் தூண்டுகோலாக என் தாயைத்தான் பார்க்கிறேன்.
    2003 ல் எனது பல்கலைக்கழகத்தில் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு இறுதியாக திரு அப்துல் கலாம் அவர்களை சந்திப்பதாக இருந்தது. எனக்கு என் கல்லூரியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி, அனுமதி மறுக்கப் பட்டது. தொடர்ந்து விடாமல் போராடி வெற்றிப் பெற்றேன். இதுபோல் பல நிகழ்வுகளை நான் உதாரணமாக கூறலாம். "துன்பங்களைக் கண்டு துவளாதே, போராடு துன்பத்தை எதிர்த்து" என்று என்னை ஊக்கபடுத்தியவர், படுத்துபவர் அவரே.


    என் தாய் நன்றாக பாடுவார், எழுதுவார். இவை எல்லாம் எனக்கு அவரின் இரத்தத்தோடு எனக்கும் கிடைத்திருக்கிறது. இது மட்டுமில்லாமல் உழைப்பு...நேரத்தை வீணடிக்காமல் இருப்பது... மற்றவருக்கு உதவுவது... மனம்தளராத முயற்ச்சி... இவை யாவும் என் தாயிடம் இருந்தே பெற்றேன்.


    இப்பொழுதும் பிரச்சினைகளை கண்டு வருந்தும் போதெல்லாம் பெரும் தலைவர்கள் காமராசர், ஜன்ஸ்டீன், சாக்ரடீஷ், ராமகிருஷ்ணர், போன்றவர்களின் வாழ்க்கை வரலாறின் உதாரணங்களைக் கூறி துவளாதே இதோ வெற்றி, வெற்றி என்று எனக்கு வெற்றியின் வாசலைக் காட்டியவர்.என்னை அடுத்த அடி எடுக்க தூண்டுபவர். தோல்வியும் வெற்றிக்கு ஏணிப்படி என்று என்னையும் அந்த ஏணியில் ஏறச்செய்தவர்.


    "அம்மா, உன் மூச்சை சுவாசித்து, உன் இரத்தத்தை உறிஞ்சி, உன் உணவை உண்டு, பிரசவிக்கும் போது உயிர் பிரிந்தால் ஏற்படும் அளவிற்க்கு வலி ஏற்படுமாம், எனக்காக மறுபிறவி எடுத்திருக்கும் தாயே!!!,
    சாவை எட்டிப்பார்த்து விட்டு வந்து, என்னை இந்த உலகை எட்டிப்பார்க்க வைத்தாயே,
    நூறு முறை பிறந்தாலும், நூறு முறை இறந்தாலும் நான் பட்ட கடன் தீராது தாயே...
    என் உயிர் பிரியும் வேளையிலும் உன் மடிதான் வேண்டும் தாயே...."


    பல வருட நினைவுகளை திரும்பிப் பார்க்கவும், என்னை படைத்த கடவுளுக்கும், என் தாயிர்க்கும் நன்றி கூறும் சந்தர்ப்பத்தை அளித்த பெண்மைக்கு கோடி நன்றிகள்.
    "மங்கையராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்ற கவிமணியின் கூற்றை என்றும் நினைவு கூர்ந்து நல்வழியில் நடப்போம். மீண்டும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    நன்றி பெண்மை வளர்க நின் பணி, வாழ்க நின் புகழ்!!!


    வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!


    (இந்த கட்டுரை அனைத்து அன்னைகளுக்கும் சமர்ப்பணம்)

    Taken for emagazine


    Last edited by sumathisrini; 20th Mar 2014 at 03:31 PM.
    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  3. #13
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai's Special Women's Day Contest

    Good afternoon friends...

    We had received the articles for Penmai Special Women's Day Contest, from 2 persons through the mail. (We had received it on 15th of March itself).

    Let me post their words on behalf of them.



  4. #14
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai's Special Women's Day Contest

    Vishnupriya Ramsrinath

    Women In My View

    Women – As a well known Tamil adage says “Pengal Num Naatin Kangal” which means women are the eyes of our country.

    A question arises now why they are referred to as eyes?

    Eyes helps us to see the entire world but it could not see its own, in the same way women are the symbol of dedication who used to work and dedicate themselves for their dear and near ones but never care for themselves. Eyes are the master piece of God’s creation as they are the first part to replicate the navarasas like anger, happiness etc. In the similar way women are the one who identifies and react to the navarasas of their close ones and trying to find solutions for others if needed.

    Simply we can refer woman to a candle who spread limelight to their surroundings by melting themselves.

    What makes you feel to proud about women?

    First and foremost, in the olden age women are considered to be fit for doing house hold activities and men for earning money, but time has now changed women to do both ie Sivasakthi, Siva while earning money and Sakthi while doing house hold activities. Still we have Sivasakthi’s all over the country who can manage both office and home.

    Another boon to women is motherhood. When referring to Tamil saying “Koduppathu Elithu Paathukappathu Kadinam”, Even though its not possible without men, the entire 10 months of time make her ahead of men as she is the one who turns a tiny microscopic sperm in to an identifiable human.

    Brahma – God of creation
    Vishnu- God of survival
    Siva – god of destroying

    Without Brahma, Siva and Vishnu will be devoid of work, so I refer women as Brahma and without women one’s life is meaningless.
    All these things make me feel proud to be a woman and adds feather to her crown.

    Which role of women (Like a mother, sister, a friend, wife) impressed in your life and why?

    I would say playing the role of all are easy except wife and mother.
    Woman is used to the role of daughter when she is born and she is used to the role of a friend, sister when she is growing up.

    All people in this world are struggling and working hard and finally their final motive is to get food for their hunger. But being a lady, once she is married she gets promoted as their husband’s Mrs and she is the one who sacrifices that food habit and adapts to her husband’s style. We can compromise that too. Being a mother is really harder of all as she can easily play all the other roles once seeing it from others and practising it but mother’s role cannot be played but it should be felt by heart and it impressed me a lot now after being a mother of a cute and sweet 5 month old kid.

    To conclude I really felt the meaning of motherhood today, that too at the time of preparing this, as my daughter laya, started saying AMMA for the first time today.

    Vishnupriya Ramsrinath - Womens day.doc

    Taken for emagazine


    Last edited by sumathisrini; 20th Mar 2014 at 03:31 PM.

  5. #15
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai's Special Women's Day Contest

    Jayanthi Ramani

    WOMAN IN YOUR VIEW


    பெண் அசாதாரணமானவள்
    அன்பானவள்
    ஆளத்தெரிந்தவள்
    ஆளப்பிறந்தவள்
    அடக்கத் தெரிந்தவள்
    அடங்கவும் அறிந்தவள்
    கேலி, கிண்டல், சீண்டல்
    அனைத்தையும் தாண்டி
    சாதிக்கப் பிறந்தவள்
    சாதனை அரசியவள்

    WHAT MAKES YOU PROUD TO BE A WOMAN

    பெண்ணாகப் பிறந்ததற்குப்
    பெருமை பட ஒன்றல்ல, இரண்டல்ல
    பல நூறு காரணங்கள்
    அத்தனையும் பகர்வது
    அடக்கமாகாது
    தன்னடக்கமாகாது
    எனவே மாதிரிக்கு ஒன்று
    ஒன்றே ஒன்று அதுவும் நன்றே நன்று
    அதுதான் தாய்மை என்னும் மூன்றெழுத்து மந்திரம்

    WHICH ROLE OF WOMAN IMPRESSED YOUR LIFE WHY? (SISTER, MOTHER, FRIEND, WIFE)

    தங்கையாக, தமக்கையாக,
    தாயாக, உயிர் நண்பியாக
    யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
    ஏன் ஒரு ஆண் கூட அந்தப் பாத்திரஙளை இட்டு நிரப்பலாம்.
    ஆனால் மனைவி என்னும் பாத்திரத்தை
    அவள் ஒருவள் மட்டுமே
    ஏற்க முடியும்.
    ஒருவனுக்கு ஒருத்தி
    அந்த ஒருத்திதான்
    என்றும் என்னை ஈர்க்கிறாள்.

    TSJayanthi - Womens day.doc

    Taken for emagazine


    Last edited by sumathisrini; 20th Mar 2014 at 03:32 PM.

  6. #16
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai's Special Women's Day Contest

    Dear friends,
    Hope you all are eagerly waiting for the result for Penmai's Special Women's contest. Well written by you all!! Its really quite difficult task to judge your writeups especially this contest.

    One thing i admired from all your writings, though you all said commonly - Mother is the very much impressed role in your life!! The way you all conveyed is much amazing!!

    Here is the result,
    Geetha A (Anu) wins the contest Unanimously by our Juries Vote!!

    well said anu, impressed with the following lines,

    பெண் என்பவள் ஆக்க மட்டுமே தெரிந்த பிரம்மா.எதுவுமே இல்லாத இடத்தில் கூட சுயம்புவாய் எழும் சக்திக் கொண்டவள்.
    எத்தனை முறை வீழ்ந்தாலும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நிற்க்கும் ஆற்றல் படைத்தவள்.

    ஒரே சமயங்களில் பல வேலைகளைச் செய்ய நம்மால் முடியும். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பிறகு செய்ய வேண்டும் என்று வரிசை படுத்தும் ஆற்றலும் அதிகமாக பெண்களுக்கே இருக்கும். சில விஷ்யங்களில் முன் கூட்டியே அறியும் ஆற்றல் கொண்டவள் பெண்.

    Here is the gift for you anu,


    Deepa bala stands next to geetha and followed by gowrymohan!!! Congrats to you also dears!!

    Deepa you expressed your views nicely in the following lines,
    Women are emotionally stronger when compared to men.

    Women have the unmatchable blessing of giving life to another being.

    Women are sensitive and they are easily disappointed or hurt. But they have the immense power to emerge just like a Phoenix does. She weathers any storm and instills faith in herself to succeed any situation.

    The bond between a mother and her child is the most beautiful and the strongest one in the World.
    Gowry you expressed the problems faced by women in today's situation and how she handles it in the following lines,
    குடும்பத்திற்கு பெண் முக்கியமானவளாக இருக்கின்றபோதும் அவளுக்கு வெளியே பாதுகாப்பு இல்லை. அவள் எத்தனையோ ஆபத்துக்களை எதிர்நோக்கவேண்டி இருக்கிறது. அவற்றிற்கெல்லாம் பயந்து வீட்டில் ஒளிந்து இருக்காமல் எதிர்நோக்கும் அத்தனை ஆபத்துக்களையும் தடைகளையும் தாண்டி துணிவுடன் கல்வியில் மட்டுமல்ல தொழிலிலும் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறாள். அவற்றைப் பார்க்கும்போது நானும் பெண்ணாக இருப்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.


    Congrats to all the participants! Proud to be a Women!!!

    Please send your Indian Postal Address with Phone no. to our super moderator Parasakthi and also update her once you received the gift.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai's Special Women's Day Contest

    Congratulations Anu

    And also Deepa and Gowry


    Jayanthy





  8. #18
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Penmai's Special Women's Day Contest

    My Hearty Congratulations to Anu, Deepa and Gowry for winning the contest




  9. #19
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Penmai's Special Women's Day Contest

    Hi Anu!

    Cheers! Nothing can stop you now Congrats!!!


    Deepa & Gowry,

    Great! Congrats to both of you




  10. #20
    Anusekaran's Avatar
    Anusekaran is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    1,479
    Blog Entries
    5

    Re: Penmai's Special Women's Day Contest

    congratulations to the winners....


    csk ku periya visil adinga


loading...

LinkBacks (?)

  1. 15th Mar 2013, 11:51 PM
  2. 14th Mar 2013, 12:13 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter