Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree299Likes

தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!


Discussions on "தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!" in "Special Contest" forum.


 1. #11
  Geetha A's Avatar
  Geetha A is offline Registered User
  Blogger
  Citizen's of Penmai
  Real Name
  Anu
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  France
  Posts
  634
  Blog Entries
  39

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  Continue 1

  சாப்பிட்டு விட்டு உணவை செறிக்க நம் தமிழர்களின் உணவில் மட்டும் இடம் பெறும் விஷயம் வெற்றிலை, பாக்கு போடுவது.
  அழகான இளந்தளிர் வெற்றிலையுடன், பழுப்பு நிறத்தில் இருக்கும் பாக்கும், அதனுடன் வெள்ளையாக சுண்ணாம்பை சேர்த்து போடுவார்கள். இது உணவை செறிக்க மட்டுமல்லாமல், சுண்ணாம்பு சத்தையும், இரும்பு சத்தையும் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சின்ன பசங்களுக்கு தரவே மாட்டார்கள், படிப்பு வராது என்று சொல்லி.இப்பொழுது பான்பராக்கைத்தான் அதிகமான இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகுந்த வேதனையை அழிக்கிறது.


  முன்பெல்லாம் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் அது பிரிவாக மாறாது. நிறைய விட்டுக் கொடுத்து போகும் நிலை இருந்தது. குழந்தைகள் வந்து விட்டால் அவர்கள்தான் தங்கள் வாழ்க்கை என்று எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், நேர்மையும், உண்மையும் குறைந்து விட்டது. ஆனால் பிரிவு அது ஒரு வகையில் பெண்களுக்கு நியாயம் செய்து இருக்கிறது. கொடுமை செய்யும் கணவனிடம் இருந்து விடுதலையை பெற்றுக் கொடுக்கிறது.


  பெண்களின் பங்கு மிகவும் இனிமை வாய்ந்தது. அது வீட்டை ஒரு சொர்க்கமாக மாற்றியது. அவளுடைய திறமைகளை வீட்டுக்குள் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று உலகம் இரு கைகளையும் நீட்டி பெண்களை வரவேற்க்கின்றது.
  அவளுடைய சக்தியும், திறமையும் , அவளுடைய தொலை நோக்கு பார்வையும் அவளை சிகரத்திற்க்கு கொண்டு செல்கிறது என்று சொன்னாள் அது மிகையல்ல. அன்று ஆண்கள் மட்டுமே ஆண்டுக் கொண்டிருந்த பலத்துறைகளை இன்று பெண்கள் அநாயசமாக நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாய்ப்புக்களும், வசதிகளும் இன்று அளப்பறிய உள்ளது என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


  அப்பொழுதெல்லாம் அதிகமாக பணம் வைத்திருந்த செல்வந்தர்கள் தானம் என்ற ஒன்றைச் செய்தார்கள். இல்லாதவர்களுக்கு நிறைய செய்தார்கள். மயிலுக்கு போர்வை போர்த்தினான் பேகன், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி வள்ளல். தன் சதையை அறுத்து கொடுத்தான் சிபிச்சக்கரவர்த்தி. அந்த கடை ஏழு வள்ளல்களை நாம் மறக்க முடியுமா? கொடை கொஞ்சம் வற்றித்தான் விட்டது, உதவும் எண்ணம் குறைந்து, நமக்கெதற்க்கு என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் இவை எல்லாம் மீறி நிறைய உதவும் அமைப்புகளும், எண்ணமும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக எனக்கு தோன்றுகிறது. பாராட்டக் கூடிய விஷயமாக நான் பார்க்கிறேன்.


  பெண் கல்வி மற்றும் பெண் விடுதலை சிறப்பாகவே உள்ளது அந்த காலத்தோடு ஒப்பிடும் பொழுது. இன்று அனைவரும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் வசந்தக் காலம். இந்த மாற்றம் அந்த காலத்தில் உள்ளவர்களின் முயற்ச்சியினால்தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார், பெரியார், பாரதிதாசன் போன்றவர்களின் முயற்சியே என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.


  அந்த காலத்துப் பெண்கள் எந்த ஒப்பனையும் இல்லாமல் மிகவும் அழகாக திகழ்ந்தார்கள். நீண்ட பின்னலுடன், தெய்வீக அழகோடு திகழ்ந்தார்கள். அதற்க்கு முக்கிய காரணம் மஞ்சள் பூசிக் குளித்தார்கள். நல்ல சுத்தமான காற்றை சுவாசித்தார்கள், நல்ல தட்ப வெட்ப நிலையில் இருந்தார்கள், ஆண்கள் ,பெண்களை நன்றாக மதித்தார்கள், ரெட்டை பொதி சுமக்காமல் குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக காமவெறி கொண்டு பெண்களை தாக்கவில்லை, மதித்தார்கள். ஒரு காட்டுக்குள் இருப்பது போல் பெண் பயந்து வாழ வேண்டிய நிலை இல்லை. தொலைக்காட்சிகளும், சினிமாவும் ஒரு எல்லையோடு இருந்தது. ஒரு காமப் பொருளாக பெண்ணை சித்தரிக்க வில்லை. ஆனால் இன்று ஒரு ஆண் உபயோகிக்கும் பொருளுக்கும் விளம்பரத்திற்க்கு பெண்ணை உபயோகிக்கும் நிலை. பெண் ஒரு மோகப் பொருளாக மாறிவிட்டாளோ?


  மிக மிக முக்கியமான ஒரு மாற்றத்தை தமிழகம் சந்தித்தது. அது தீண்டாமை. தாழ்ந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று இரு பிரிவால் பிளந்து கிடந்தது. தேனீர் அருந்தும் இடங்களில் தனித்தனி டம்பளர் இருக்கும். கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ள மாட்டார்கள். இவை எல்லாம் பலப்பல போராட்டங்களுக்குப் பிறகு மாற்றம் நமக்கு கிடைத்தது.ஆனால் இன்று நாம் யாருடைய ஜாதியை விசாரிப்பதில்லை. ஒருவரை ஒருவர் தொட்டு பேசுகிறோம். அனைவரும் சமமாக நடந்து கொள்கிறோம். எல்லோரும் கோவிலுக்குள் செல்லலாம். இந்த மாற்றம் ஒரு வரலாற்று பதிவு என்று சொல்லலாம்.


  அன்று தமிழர்களின் கலை ஆர்வம் சொல்லில் வடிக்க இயலாத ஒன்று. இன்றும் அதை தஞ்சை, மாமல்லபுரம் கோவில்களின் சிற்ப்பங்களில் காணலாம். மதுரை மீனாட்சி கோபுரம் கின்னஸ் ல் இடம் பிடித்து விட்டது. ஆனால் நாம் அதை பாதுக்காக்க தவறுகிறோம் என்பதே குற்றச்சாட்டு. வெளிநாடுகளில் பழையதை புதையலாக பாவித்து பேணி பாதுகாக்கிறார்கள். நாம் உண்மையான புதையல்களையே மண்மூடி போகவைக்கிறோம். சிலம்பாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்,கரகாட்டம், பறை மற்றும் பொய்க்கால் குதிரையாட்டம் இப்படி அனைத்தும் நிறம்பி இருக்கும் பண்டிகைக் காலங்களில். ஆனால் அவை படிப்படியாக குறைந்து காணாமலேயே போய் கொண்டிருக்கிறது. பண்டிகைகள், திருவிழாக்கள் என்பது எவ்வளவு இனிமயான தருணங்கள். மிகவும் இனிக்கிறது நினைத்தாலே. இப்பொழுது கொஞ்சம் குறைந்து விட்டதா?


  நம் தமிழர்களின் தலை சிறந்த பண்பு வீரம். புலியை முறத்தாலே அடித்து விரட்டினாளாமே என் தமிழச்சி. வீரவேலு நாச்சியார் மற்றும் ராணி மங்கம்மாள் போன்றவர்களின் வீரமும் அவர்கள் சுதந்திர தாகமும் குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் ஆண்கள் வீர விளையாட்டில் வென்றால்தான் தன் பெண்களை கொடுப்பார்களாம். அப்படி வீரத்திற்க்கு பெயர் பெற்ற நாம் இன்று நம் தமிழர்களை கொன்று குவித்தார்கள்,பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொண்டார்கள், தமிழ் வம்சத்தை கருவிலே கருவறுத்தார்களே. ஆனால் அதை தட்டிக் கேட்க கூட வீரம் இல்லை. கோழைகளாக இருந்தோம்.
  இது ஒரு பெரும் மாற்றம்தானே மக்களே?


  வீரவிளையாட்டுக்கள் எத்தனையோ இருந்தது. எல்லாம் மக்கி, மண்ணாக மாறிவிட்டது. சிலம்பம், ஜல்லிக்கட்டு மற்றும் வேல் கம்பு எறிதல், வில்லேற்றம் போன்றவை.


  பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? இந்த பாட்டை கேட்டாலே நமக்கு சுகமாக இருக்கிறது. தாவணி என்ற நம் பாரம்பரிய உடை சுத்தமாகவே குறைந்து விட்ட மாதிரிதான் தெரிகிறது. அந்த உடை குறைந்து ஜீன்ஸ், மிடி, சுடி, கடி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை உடையின் வகைகளும் வந்து விட்டது. அணியும் அளவும் குறைந்து விட்டது. கவர்ச்சி அதிகமாக ஆகிவிட்டது.


  அந்த காலத்தில் நாம் சரித்திரம் படிக்கும் பொழுது, மன்னன் மரம் நட்டான். கோவில்கள் கட்டினான், குளம் வெட்டினான் என்று படித்தோம். அது உண்மையும் கூட. சாலைகள் தோரும் மரங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தது. கோவில்கள் தோரும் குளங்கள் இருந்தது. அவை அணைத்தும் மழை நீரை சேமித்து நமக்கு தந்தது. ஏரிகள் பல தொழில்களுக்கு வடிகாலாக இருந்தது.
  ஆனால் இப்போதும், இனி வரும் சந்ததியினரும் முதலமைச்சர் வந்தார், சாலை விரிவாக்கத்திற்க்காக மரங்களை வெட்டினார். பேருந்து நிலையங்களுக்காக ஏரிகள் அனைத்தையும் மூடி விட்டார் என்றுதான் படிக்க போகிறார்கள். மரங்கள் மனிதனைக் காக்கும் மகாத்மாக்கள் என்பதையும், மழை நீர் சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டும். இல்லையேல் வரும் சந்ததியினர் சாபத்திற்க்குள்ளானவர்கள் ஆவார்கள்.


  மனுநீதி சோழன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். ஒரு பசுவின் கண்ணீருக்காக, தன் மகனை கொன்று நீதி வழங்கி, நீதியை நிலை நாட்டினான். எத்தனையோ மாமன்னங்கள் இந்த நாட்டை சிறப்பாக ஆண்டார்கள். இவர்களுக்கு பின்னால் வந்து ஆண்டவர்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவர் காமராசர் அவர்கள். தன் தாய் குளியளறை சிதைந்து விட்டது மகனே, எனக்கு புதுப்பித்து தரமுடியுமா என்று கேட்டாராம். அதற்க்கு காமராசர் அம்மா நான் உங்களுக்கு குளியளறையை கட்டி கொடுத்தால், அடுக்கு மாடி கட்டிவிட்டதாக பத்திரிக்கைகளும், எதிர்க்கட்சியும் சொல்லிவிடும். மன்னித்து விடுங்கள் அம்மா என்றாராம். அத்தகைய பெருந்தலைவர்கள் ஆண்ட நாடா இப்படி நச்சுகளும், நாசப்பாம்புகளும் புகுந்து கொட்டமடித்து கெடுக்கின்றன.
  இது எல்லாம் தெரிந்தாலும் நாம் எதற்க்கும் வாய் திறக்காமல், அரசியலும் ஒரு பெரும் தொழிழாக மாற்றி விட்டோமே?
  நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, உணவு, உடை, அரசியல் இவை மட்டும் மாறவில்லை நண்பர்களே நாமும், நம் மனங்களும் கூடத்தான். எனக்கென்ன வந்தது என்ற எண்ணம் தான் இதற்க்கு காரணம். நான் , எனது குடும்பம், என் குழந்தைகள், என் வீடு என்று சுருங்கிக் கொண்டிருக்கிறோம்.


  உலகில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களையும் நாம் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நாம் நிறைய விஷயங்களில் பின் தங்கி இருக்கிறோம். ஆனால் அதற்க்காக நம் பாரம்பரிய விஷயங்களை ஏன் விட வேண்டும்? அது எத்தனை மகத்துவமானது, உன்னதமானது. மஞ்சள் பூசி குளிப்பது முதல் மரம் நடுவது வரை அத்தனையும் அனைவருக்கும் பயன்படும் தாரக மந்திரங்களே!!
  அதை பயன்படுத்துவோம். இனி வரும் சந்ததியினருக்கு நிறைய சொல்லிக் கொடுப்போம். முக்கியமாக வீட்டில் நாம் தமிழில் பேசுவோம். கடைசியாக கமல ஹாசன் சொன்னது போல் ஒரு வீட்டிற்க்கு எத்தனை ஜன்னல்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வீட்டிற்க்குள் நுழைய ஒரு கதவுதான் இருக்க முடியும். வாசக் கதவாக தமிழ் இருக்கட்டும் என்றார். அதை போல் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்க்கலாம், பேசலாம். நம் உணர்விற்க்கு வடிகாலாகவும், இதயத்திற்க்குள் நுழையவும் தமிழால் மட்டுமே முடியும்.


  வாய்ப்பிற்க்கு நன்றி பெண்மை. இந்த மாதிரி தலைப்புகள் சொல்லித்தரும் விஷயங்கள் கோடி


  வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
  HERE.


  Sponsored Links
  Last edited by gkarti; 25th Jul 2014 at 04:52 PM.
  Regards
  Anu


  Don't limit your challenges, challenge your limits

  http://www.penmai.com/forums/india/4...tml#post460945

 2. #12
  infaa's Avatar
  infaa is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Infanta
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  chennai
  Posts
  13,277
  Blog Entries
  4

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  அனைவருக்கும் என் இதயம் கனிந்த சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.......

  தமிழர்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்ப்பட்டு விட்டன. அவை உணவாக இருக்கலாம், உடையாக இருக்கலாம், கலாச்சாரமாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம்.

  இவை அனைத்திலுமே நமக்கு நன்மைகளும் விளைந்திருக்கின்றன , தீமைகளும்.

  எனக்கு, நான் இழந்ததாக கருதுவது குழந்தைகள் கூடி விளையாடும் விளையாட்டையே.

  என் குழந்தை பருவத்தில் நான் விளையாண்ட விளையாட்டுக்கள் என் பிள்ளைகளுக்கு தெரியவில்லை.

  சொல்லிக் கொடுத்தாலும், பொறுமை இல்லை. அவை அனைத்துமே கூடி விளையாடும் விளையாட்டுக்கள்.

  நகர வாழ்க்கையில் அக்கம் பக்கம் பேசவே வாய்ப்பில்லாத பொழுது, விளையாட எங்கே வாய்ப்பு.

  "கிட்டிபிள்ளை", என்று ஒரு ஆட்டம், அதை விளையாடும்போதே பாடிக் கொண்டே விளையாடுவோம்.

  அதில் மனதை ஒருமுகப் படுத்த முடியும். பாடிக் கொண்டே விளையாடுவதால் அலுப்பும் தெரியாது.

  "பாண்டி ஆட்டம்", கூட்டமாக சிறு கல்லுகளை வைத்து விளையாடுவது. அதில் ஒரு கணக்கு இருக்கும் . குழிக்கு இத்தனை முத்துக்கள்.

  அதை எப்படி கழிப்பது, கூட்டுவது இப்படி.

  "தாயம்", "சதுரங்கம்", இந்த விளையாட்டுக்களில் எல்லாம் முன்னேற்றம் எப்படியோ அதேபோல் இறக்கமும் உண்டு என்பதை புரியவைக்கும் விதமாக இருக்கும்.

  விளையாட்டில் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும், தோழமையும் உருவாக்குவதாக அன்றைய விளையாட்டுக்கள் இருந்தன.

  அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகள் அனைவரும் கொளுத்தும் கோடை வெயில் தெரியாமல் கூடி விளையாடுவது அவ்வளவு இன்பமாக இருக்கும்.

  பனைமர நுங்கு சாப்பிட்ட அந்த ஓட்டை வைத்து வண்டி செய்து ஓட்டி விளையாடிய விளையாட்டு இன்று பசுமையாக மனதுக்குள்.

  இன்று பனை மரமும் இல்லை, அந்த வண்டியும்.............. .

  பனை ஓலையில் செய்யும் பந்து, அதில் செய்யும் பாம்பு கலைகள் என்று தெரியாமலேயே விளையாட்டை செய்து விளையாடி மகிழ்ந்த பொழுதுகள் இன்று கானல் நீராய்................. .

  என் பிள்ளைப்பருவ விளையாட்டின் பெயர்கூட என் பிள்ளைகளுக்கு தெரியாத விந்தையை என்ன சொல்ல.

  சொல்லிக் கொடுத்தாலும், இன்றைய தொலைக்காட்சியும், வீடியோ விளையாட்டுக்களுக்கு முன்னால் என் பிள்ளைப் பருவ விளையாட்டு, கேலிக் கூற்றாய் மாறிப்போனது வேதனையே.................. .

  என் பார்வையில் மிகப்பெரும் இழப்பு இதுவே.............

  வாய்ப்பளித்த பெண்மையின் இளவரசி அவர்களுக்கு என் நன்றிகள்.

  (இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே , நன்றி).

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 25th Jul 2014 at 04:53 PM.

 3. #13
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  14,040
  Blog Entries
  382

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  நினைவுகளில் இருந்து மறைந்துபோன மறக்கடிக்கப்பட்ட தமிழ் கலாச்சாரம் என்ற வகையில் உதாரணமாக;

  ஒரு திருமண நிகழ்வை பார்க்கும்போது - முன்பு, திருமணத்திற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே வரப்போகும் உறவினர்களுக்கு உணவு கொடுப்பதற்கு மளிகை பொருட்கள் சேகரிப்பதும் அரிசிமா, தூள் வகைகள் இடித்து ஆயத்தப்படுத்துவதுமாக வேலைகள் தொடங்கி வீடு கல்யாணக்களைகட்டும். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே உறவினர்கள் கல்யாணவீட்டில் வந்து தங்கத் தொடங்கிவிடுவார்கள். திருமண வேலைகளை எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். திருமணம் முடிந்த பின்பும் இரண்டு மூன்று கிழமைகள் இருந்து ஒழுங்குபடுத்தி செல்வார்கள். வேலைக்கு செல்பவர்கள் தங்கள் குடும்பத்தை திருமண வீட்டிற்கு அனுப்பிவைத்து தாங்கள் திருமண நாளுக்கு கிட்டவாக வருவார்கள்.

  இப்படித்தான் அந்தக்காலத்தில் திருமணங்கள் நடக்கும். இப்போ இருக்கும் தலைமுறையினருக்கு இது தெரியவும் மாட்டாது. யாருக்குத்தான் நேரம் இருக்கிறது. உறவினருமே திருமண நேரத்திற்கு சென்று திரும்பிவிடுவார்கள்.

  உணவு விஷயத்தில் - முன்பு, தினமும் அம்மியில் அரைத்துத்தான் கறி சமைப்பார்கள். இட்லி, தோசைக்கு ஆட்டுக்கல்லில் அரைப்பார்கள். அரிசி உரலில் இடித்து வறுத்து இடியப்பம், பிட்டு அவிப்பார்கள். அம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், உலக்கை இவற்றை எல்லாம் இனி அரும் பொருட்காட்சியகத்தில் தான் பார்க்க முடியும்.

  ஏதாவது விஷேசங்களின் போதோ அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ தான் இறைச்சி (mutton /chicken) சமைப்பார்கள். அந்த நாள் ஒரு திருவிழா மாதிரித்தான் இருக்கும். அருகில் இருக்கும் உறவினர்களை சாப்பாட்டிற்கு அழைப்பார்கள். அன்றுதான் விஷேடமான தூள் இடிப்பார்கள்.

  விறகு அடுப்பில்தான் சமைப்பார்கள். குறிப்பிட்ட விறகுகளில் இருந்து வரும் புகை, சூடு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும்.

  ஆனால் இன்று தினமும் இறைச்சி, இலகு உணவு வகைகள் (நூடில்ஸ்,..) சமைக்கிறார்கள், இயந்திரங்களைப் பாவிக்கிறார்கள், உடலுக்கு நோய்களையும் வரவழைக்கிறார்கள்.

  முன்பு, ஆண்கள் சம்பாதிப்பதற்கு வெளியே செல்ல பெண்கள் வீட்டில் இருந்து சமையலைக் கவனித்தார்கள். இப்போ ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் அல்ல என்று இருவரும் வெளியே செல்வதால் எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.

  ஆடைகள் - அன்று 16 முழம் சேலை, பாவாடை தாவணி, பாவாடை சட்டை, இதைத் தவிர பெண்களுக்கு வேறு உடைகள் இல்லை. இப்போ இருக்கும் பிள்ளைகளுக்கு 16 முழம் சேலை தெரியாது. அதைப் பற்றி கூறினால் சிரிப்பார்கள்.

  வழிபாட்டு முறை - முன்பு தூர இருக்கும் கோயில்களுக்கே பாத யாத்திரையாக செல்வார்கள். நாட்கணக்காக நடந்து செல்வார்கள்.

  இப்போ, அருகில் இருக்கும் கோயிலுக்கே வாகனம் தேடுகிறார்கள். பிள்ளைகளிடம் பாத யாத்திரை பற்றி சொன்னால், நம்ப மாட்டார்கள், ஜோக் சொல்வதாக கூறுகிறார்கள்.

  மேற் கூறியவை எல்லாமே மறக்கப்பட்டுக்கொண்டு வந்தாலும் விளையாட்டைப் பொறுத்தவரை - துடுப்பாட்டம், கால்ப் பந்தாட்டம் என்று பிள்ளைகளின் மனம் பறந்தாலும், கிராமங்களில் பழைய விளையாட்டுக்கள் மறக்கப்படாமல் இன்னும் இருந்துகொண்டுதான் வருகிறது என்று நான் கருதுகிறேன்.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 25th Jul 2014 at 04:54 PM.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 4. #14
  surya's Avatar
  surya is offline Citizen's of Penmai
  Gender
  Male
  Join Date
  Sep 2010
  Location
  Gingee
  Posts
  964

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  அன்புள்ள பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்

  தமிழர் கலைகள் மற்றும் கலாச்சாரம் மேற்கத்திய மோகத்தால், நம்முடைய அறியாமையால் மறகடிக்கபட்டு வருகிறது.
  கோலம் இல்லாத பெருநகர வாசல்கள்
  விருந்தோம்பல் இல்லாத தமிழர் மனைகள்
  சமூக பன்முக ஏற்ற தாழ்வு
  மறைக்கப்படும் பண்பாடு
  வழக்கில் இல்லா கலாசாரம்,
  பாரம்பரியம் அறியாத புதிய தலைமுறை
  மொழி மேன்மை அறியாத வளர் இளம் சமூகம்
  மறுக்கபடும் நம் வரலாறு
  கலங்கபடும் காதல்
  போற்றபடாத பெண்மை
  நின்று வெல்லாத ஆண்மை
  கலங்கி நிற்க்கும் உடல் நலம்
  ஆரோகியம் இல்லா உணவுகள்
  குறையும் மன திடம்

  என நம் தமிழ் சமூகம் பண்பாடு, கலாசார ஒப்புநோக்கில் நாம் இன்று வரை இழந்தது பல.

  அவை முறையே

  பண்பாட்டின் மெய்யியல் தன்மையும் அதன் அடிப்படை அலகான பொது வாழ்வியல் குறித்த சிந்தனையில் இருந்தே துவங்குகிறேன்.உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்று தமிழ் கூறும் நல்லுலகம் சொல்லும் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையே உள்ள பொது சிந்தனை, கொடுத்து வாழும், விட்டுக்கொடுத்து வாழும் நம் குணம் இன்று இழந்து வருகிறோம். Gadget தமிழனின் consumerism கொள்கையில் விரலுக்கு எத்த வீக்கம் இல்லை அவன் பொருளியல் விதியிலும் அவன் வாழ்வியல் சிந்தனையிலும்.

  “இடிகளின் குமாரர்கள்
  எதேச்சாதிகார இரும்பு கதவுகள்
  அருகே திரளுகிறார்கள்
  பொன்னாய் பூத்து
  பொன்னாய் கனியும்
  கற்பகதறுவை கோடரியாலே கூறு கூராக்கி
  குடிசைகள் தோறும்
  இடியின் குமாரர்கள் பதியம் போடுகிறார்கள்


  என்ற ஈரோடு தமிழன்பன் கூறும் அந்த இடிகளின் குமாராகளும் இன்று வரை பிறக்கவில்லை தமிழ் சமூகம் இழந்த இந்த பொருளியல் சமத்துவம் காண.

  பக்தி

  தமிழ் தூதர் தனிநாயகம் சொல்லுவார் “ஆங்கிலம் வணிக மொழி என்றால் , தூதின் மொழி ஃபிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால், உலகிலேயே பக்தியின் மொழி தமிழாகும்” என்று சொல்லுவார் ஆனால் இன்று கடவுளுக்கும் corporate கொள்கை வகுத்து பக்தியின் வேரை அறுக்கிறது இன்றய சமூகம்.

  உலகாயுத மதம்,குல தெய்வ,கிராம தெய்வ,சிறு தெய்வ வழிபாடு முறை, சைவ, வைணவ, இந்து சனாதன தர்மம் இவை தொடர்து மழுங்கடிக்கபடுகிறது அரசியல் நிலையில் இது இன்று வேட்டையாடபடுகிறது.

  Walking on the foot prints என்று சொல்லுவது போல் நம் யோகிகளின் வழிகளை தேடவேண்டிய காலம் இது.63நாயன்மார், 12 ஆழ்வார், வள்ளலார், வள்ளுவன், போன்றோரின் வழியில் நாம் மீட்டு எடுக்க வேண்டியது நம் தமிழ் சமூகத்தின் மீட்சியையே, பக்தியும் பண்பாட்டின் கூறு தான் இதை நாம் உணர்வாக கொண்டோம் எனில் இன்று நமக்கு அது குறைந்தும், குறைக்கபட்டும் வருகிறது.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 25th Jul 2014 at 04:54 PM.
  தமிழ்தாசன்.
  Suriya Narayanan.
  ...........................................................................................................................

  "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
  பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
  "

  "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

 5. #15
  surya's Avatar
  surya is offline Citizen's of Penmai
  Gender
  Male
  Join Date
  Sep 2010
  Location
  Gingee
  Posts
  964

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  வசதியின் பெயரால் நாம் வசதியாக மறந்தது நம் உடுதியா பாரம்பரிய ஆடைகளைதான். அவை நாம் இழந்த பண்பாட்டின் உயர்ந்த கூறு.

  சித்த மருத்துவம் எதிர் வினைகள் இல்லாமல் உணவில் தனமையோடு பொருந்தி உணவே மருந்து மருந்தே உணவு என உயர் சிந்தனையோடு கொண்ட அந்த மருத்துவ முறை இன்று நாம் இழந்து கொண்டு வருகிறோம்.

  தமிழர் உணவுகள் திணை, சோளம், கம்பு,வரகு அரிசி, கேழ்வரகு என பல வழியில் நம் உடலுக்கு வலிமை தந்த உணவுகள் இன்று இல்லை. சமைக்கபடும் விதம், நுகர்வு அளவு, காலம் இதையும் அதனுடன் சேர்த்தே மறந்து விட்டோம்.

  கலையின் பெயரால் நம் தமிழ் சமூகம் கொண்டிருந்த பச்சை குத்தும் வழக்கம் இன்று முற்றிலும் அழிந்தேவிட்டது.

  பிறப்பு முதல் இறப்பு ஈராய் நம் கொண்டாடும் நிகழ்வுகளில் உள்ள தாலாட்டு, கும்மி அடித்தல், ஒப்பாரி பாடுதல் எல்லாம் நாம் இழந்து விட்டோம்.

  இருக்கும் வரை பெரியோரின் துணை, இறந்த பிறகு மூதாதையர் வழிபாடு இவற்றில் உள்ள முறைகள் இன்று மிகவும் தளர்ந்து உள்ளது. இது பின்னர் வரும் சமூகத்தின் பிடிபில்லாத நிலையை ஏற்படுத்தும்.

  சிலம்பம், ஏறு தழுவுதல், ரேக்லா பந்தையம் இன்று குறைந்து கொண்டு வருகிறது இதில் பரவலான நிலை இல்லை.

  தமிழில் பெயர் வைக்கும் முறை, தமிழ் திருமண முறை, தமிழ் வழிபாடு முறை இவை குறைத்து கொண்டும் இல்லாமலும் இருக்கிறது

  குணம் சார்ந்த விஷயங்களில் வீரம், கொடை, சமூக பொறுப்பு, சமூக சமநிலை ,ஈகை,மானம், கற்பு மற்றும் காதல் நிலை இவை இன்று அருகி கொண்டு செல்கிறது இவை தான் அன்று முதல் இன்று வரை நம் தமிழ் சமூகம் குறித்த பண்பாட்டை தூக்கிபிடித்த காரணிகள் இன்று இவை குறைந்து கொண்டே செல்கிறது.

  இதுவே நம் தமிழ் சாதி இழந்து வரும் உயர் பண்பாடு, கலாசார கூறுகள் இவை நாம் மீட்டு எடுது புத்துயிர் கொடுக்க வேண்டிய காலம் இது

  வாழ்க தமிழ்

  வெல்க தமிழ்

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 25th Jul 2014 at 04:55 PM.
  தமிழ்தாசன்.
  Suriya Narayanan.
  ...........................................................................................................................

  "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
  பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
  "

  "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

 6. #16
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  89,336
  Blog Entries
  1790

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  தமிழ் மக்களின் வாழ்க்கை மரபுகள் தலை சிறந்தவை. பண்பாடு கொண்டவை. உலகிற்கே முன்னோடி. தமிழர்கள் வாழ்க்கை தூய்மையும் ஒழுங்கும் கொண்டிருந்தன. ஆனால், இன்றோ பல்வேறு மாற்றங்களைக் கொண்டு இருக்கிறது. அத்தகைய மாற்றங்களை இக்கட்டுரை தெள்ளிதின் உரைக்கிறது.

  உணவு முறை:

  தமிழர்கள் சுவையுறச் சமைப்பதிலும் சுவை தேர்ந்து உண்பதிலும் சிறந்து திகழ்கின்றனர். உலகில் முதன் முதல் நாகரிகமாய்ச் சமைத்துண்டவன் தமிழன்.

  "குய்யுடை யடிசில்" (புறம்: 127)

  பூண்டு, வெங்காயம், கருவாப்பூ, கருவாப்பட்டை, ஏலம், சோம்பு, கறிவேப்பிலை கொண்டு குழம்பு உருவானது. இதனை தாளிப்பு இலக்கிய வழக்கில் குய் என்பர். இயற்கை உரங்களால் ஆன காய்கறிகளை உண்டு நூற்றாண்டைத் தாண்டினர். இன்றைய காய்கறிகள் செயற்கை உரங்கள் கொண்டும் மருந்துகள் தெளித்தும் இருப்பதால் சத்தற்ற நிலையில் ஆயுளைக் குறைக்கின்றன. நாட்டின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப உணவுகளைச் செய்தனர்.

  "வெண்ணெல் வல்சி மனைவாழ் அறகின் வாட்டொடும் பெறுகுவீர்" (பெரும்பாணாற்றுப்படை: 255)

  இவ்வாறு மருதநில மக்கள் வெண்ணெற் சோற்றைக் கோழியிறைச்சியின் வற்றலோடு உண்டனர் என்கிறது. ஆனால், இன்றோ செயற்கை மருந்து செலுத்திய விரைவு கோழிக்கறி உருவாக்கி அதைச் சாப்பிட்டு மனித ஆயுளைக் குறைக்கின்றனர்.
  இக்காலத்தில் சமைக்கும் முறை பரிமாறும் முறை எனப்பல மாற்றங்களைக் கொண்டுள்ளன.

  ஆடை:

  ஆடை நெய்யும் கலையில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். தட்பவெப்பநிலைக்கேற்ப ஆடைகளை உண்டாக்கி உடுத்தினர்.

  "போதுவிரி பகன்றைப்புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம்" (புறம் 393)

  என்று பட்டாடை அணிந்தனர். மென்மையான ஆடைகளை அணிந்தனர். அன்று, வேட்டி உடுத்துதல், தாறு பாய்ச்சிக் கட்டுதல் முதலியன அணிந்தனர்.
  இன்று மகளிர் வடநாட்டு உடையினை உடுத்தும் வழக்கமும் (சுடிதார்) ஆண்கள் மேனாட்டு உடையினை அணியும் வழக்கமும் (குழாய் உடை) பள்ளி செல்லும் குழந்தைகள் கழுத்துப்பட்டி அணியும் வழக்கமும் பெருகிக் காணப்படுகின்றன.

  'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' (புறம்: 89)

  என்பது போல ஆண்கள் இரண்டே ஆடைகள் அணிந்தனர். பெண்கள், கூறை, நல்லாடை, பட்டாடை கொண்ட சேலைகளை உடுத்தினர்.

  அணிகலன்கள்:

  அணிகலன் நேர்த்தியாகச் செய்வதிலும் அழகுற அணிவதிலும் தமிழர் ஈடுபாடு மிகுந்தவர்கள். பொன், முத்து, வெள்ளி, மணி முதலியன அணிகலன்களாக அணியப்பெற்றனர். கையில் வளையல், காதில் குண்டலமும், இடுப்பில் மேகலை, காலில் சிலம்பு, கழுத்தில் முத்து மாலைகள் அணிந்தனர். ஆனால் இன்றோ பிளாஸ்டிக் இரப்பரால் ஆன பொருட்கள் தரமற்ற உலோகங்களால் ஆன பொருட்களை அணிகின்றனர்.

  ஆண், பெண், இருபாலரும் அணிகலங்கள் அணிந்திருந்தனர். பனை ஓலைகளில் கூட அணிகலன்கள் செய்யப்பட்டன.

  திருமணம்:

  ஆணும், பெண்ணும் மணந்து வாழ்வதே அக்காலப் பொது வழக்கு.

  "கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
  கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
  கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே" - (தொல்காப்பியம்)

  பெண் கொடுப்பதற்குரிய மரபினர் அளிக்க கொளற்குரிய மரபின் தலைவன் கரணம் எனும் திருமணச் சடங்கோடு பெறாது என தொல்காப்பியம் கூறுகிறது. தீ வலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், தாலிகட்டுதல் போன்றன காணப்பட்டன. இன்று சீர்திருத்த திருமணங்கள், மோதிரம் மாற்றுதல் போன்றன நடைபெறுகின்றன.

  விருந்தோம்பல்:

  தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து நின்றனர். தலைவியின் கடமைகளில் விருந்தோம்பல் ஒன்று என கூறுகிறது.

  "விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
  பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்" (தொல்காப்பியம் 11)
  என்றும் அதே சமயத்தில் வேளை தவறிய வேளையில் விருந்தினர் வந்தாலும் முகம் கோணாமல் விருந்து பரிமாறினர் என நற்றிணை உணர்த்துகிறது. வருபவர் உண்ணவும் ஒய்வெடுக்கவும் திண்ணை கட்டும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது இல்லை. இரவு கதவினை மூடுவதற்கு முன்பாக, யாரேனும் வருகிறார்களா எனப்பார்த்து விட்டு தான் கதவை மூடும் உயர்பண்பு அன்று இருந்தது. ஆனால், இன்று விருந்தினரை, உறவினரை உபசரிப்பது முற்றிலும் குறைந்து விட்டது.

  நம்பிக்கைகள்:

  நல்லநாள், நேரம் பார்த்தல், பறவையொலி, பல்லியின் குரல், கண் துடித்தல், சகுணம் பார்த்தல், கனவுக்குப் பொருள் காணல், பேயோட்டல் எனப் பல நம்மிக்கைகள் இருந்தன. இன்று சில நம்பிக்கைகள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன. பல மறைந்து போயின. ஆனால், பயன் இல்லா சில அதீத மூட நம்பிக்கைகள் மேலோங்கிவிட்டன.

  பழக்கவழக்கங்கள்:

  வ. எண்
  அன்று
  இன்று
  1
  காக்கைக்கு சோறிடும் பழக்கம்
  உண்டு
  2
  புறப்படுபவரை வழியனுப்புதல்
  உண்டு
  3
  ஆடவர் மடலேறுதல்
  இன்றில்லை
  4
  இறந்தோர்க்கு நடுகல் வழிபாடு
  சில இடங்களில்
  5
  இறந்தோரை வாளால் கீறி புதைப்பது
  இன்றில்லை
  6
  கணவனை இழந்த மகளிர் அணிகலன் நீக்குவது
  இன்றும் உண்டு


  விழாக்கள்:

  அனைத்து மக்களும் ஒன்று கூடி உறவு கொண்டு மகிழும் பொருட்டும் உணர்வைப் புதுப்பிக்கும் பொருட்டும் சமுதாயத்தில் விழாக்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை, தை, நோன்பு, ஆடிப்பூரம், பொங்கல், பெரு, சிறு தெய்வ வழிபாடுகள் போன்றன இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்திர விழா போன்ற சில விழாக்கள் இன்று நடைபெறுவதில்லை.

  தொகுப்புரை:

  தமிழ் மக்களின் வாழ்வில் காலம் காலமாக காணப்பெறும் செயல்பாடுகள் வாழ்வியல் முறைகள் பண்பாடு எனப் பலநிலைகளில் மாற்றங்களையும் புதியவழி முறைகளையும் கொண்டு வருகின்றன.

  தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

  நன்றி பற்பல!
  தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!-hands2.gif

  (எனக்கு முன்பாக சொன்னவர்கள் சரி. ஆனால் அவரவர் கருத்துகளுக்கு நான் குறை சொல்லவில்லை.. அதைப் போல் மேல எழுதியுள்ள வார்த்தைகளில் என்னுடைய அபிப்பிராயம் (கருத்து). எனக்கு தெரிந்தவரை இங்கு எழுதியுள்ளேன். எதாவது பிழை இருந்தால், என்னை மன்னிக்கவும்)


  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 25th Jul 2014 at 04:56 PM.
  Penmai, Parasakthi, surya and 11 others like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 7. #17
  yams's Avatar
  yams is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  chennai
  Posts
  1,590
  Blog Entries
  4

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  அன்பான பெண்மை வாசிகளுக்கு ...

  இனிதான இந்த தமிழ் புத்தாண்டில் சக்கரை பொங்கலுக்கு நிகரான ஒரு சுவையான தலைப்புடன் பெண்மை வாசிகளுக்கு தமிழரின் பாரம்பர்ய பெருமைகளை அதே இனிமையுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்திருக்கும் பெண்மைக்கு நன்றி கூறி இதோ அடி எடுத்து வைக்கிறேன் எம் தமிழ் மண்ணின் மரபுகளையும் அதன் பெருமைகளையும்... பற்றி கூற...அதோடு நில்லாமல்
  அந்தோ பரிதாபம் என்று தமிழ் அன்னையையே பார்த்து வருத்தப்படும் அளவிற்கு அவளது பெருமைகளும்,மரபுகளும், பழக்க வழக்கங்களும் இன்று சிறிது சிறிதாக மாறி உருவிழந்து அடையாளம் தெரியாத வண்ணம் சிதைந்து போயிருக்கும் வேதனையையும் சேர்ந்தே சொல்லி பகிர வந்துள்ளேன்.

  தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..! என்ற காலம் மாறி ஆங்கிலம் தெரிந்தால் தான் மதிப்பு என்ற காலகட்டத்திற்கு இழுத்து வந்து விட்டது காலம் நம்மை!

  மாற்றம்!
  அந்த வார்த்தை மட்டுமே மாறாத ஒன்று...!
  என்ற நிலை இன்று!

  செந்தமிழாம் அதில் இனிதான சொல் அம்மா! அவ்வினிய சொல்லினை இன்று காது தீட்டி கேட்டாலும் கேட்பதென்னவோ அரிதாகி விட்டது.

  மாம்..! டாட்...! என்று மாறி விட்ட தாய் தந்தையருக்கு தங்கள் மகனோ, மகளோ அப்படி அழைப்பதும் பெருமையாகி விட்டது ..
  தமிழுக்கே மதிப்பில்லாத இந்த காலத்தில் தமிழரின் பாரம்பர்யத்திற்க்கும், பாரம்பர்ய பழக்க வழக்கங்கள் மற்றும் முறைகளுக்குமா மதிப்பிருக்க போகிறது?
  இருக்கிறது!
  ஆனால் நூற்றிற்கு ஒரு பங்கு என்று கூட சொல்ல முடியாது!
  அவ்வளவு குறைவாக!

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 25th Jul 2014 at 04:56 PM.
  With Regards
  Yamini


  Expectation is the only devil which smiles at you when you feed it daily!

  http://www.penmai.com/forums/poems/3...tml#post360407

 8. #18
  yams's Avatar
  yams is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  chennai
  Posts
  1,590
  Blog Entries
  4

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  தொடர்பு...

  தமிழர் தம் பழக்க வழக்கங்கள் பல..அதில் மஞ்சள் தேய்த்து குளிப்பது, வீட்டிற்கு முன் சாணம் தெளித்து கோலம் போடுவது இது போன்ற வழக்கங்கள் பல இன்றளவும் கிராமப்புறங்களில் பின் பற்ற பட்டு வருகிறது. ஆனால் அதுவே நகர் புறத்தில் இருப்பவர்கள் பலர் அடுத்தவர்களின் கிண்டல் கேலிக்கு பயந்தே அதன் உண்மையான பயன் உணர்ந்தும் கூட பின் பற்ற தயங்குகிறார்கள் அதனால் தான் இன்றளவில் ஸ்டிக்கரில் கோலம் ஓட்டுவதும் மஞ்சளை சிறிதளவே கொண்டிருக்கும் விலையுயர்ந்த அழகு சாதனங்களை உபயோகம் செய்வதும் வாடிக்கையாய் போய்விட்டது.

  மஞ்சளும் சாணமும் கிருமி நாசினிகள் அவை நம்மையும் நம் குடும்பத்தையும் பலதரப்பட்ட நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவும் என்பதை மறந்து கற்றை கற்றையாய் பணத்தை மருத்தவமனையில் செலவிடுகிறோம்.

  அது மட்டுமா? அன்றைய பெண்களின் ஆடைகளில் இருந்த கண்ணியம் இன்றளவில் அதிகமாய் குறைந்து சேலையே கவர்ச்சியாய் கட்டும் நிலை உருவாகி விட்டது. தாவணியும் பாவாடை சட்டையும் குமரிகளையும் குழந்தைகளாய் காட்டிய காலம் மாறி இன்று சின்ன குழந்தைகளையே ஆபாசமாய் காட்டும் உடைகள் கொண்ட மேலை நாகரீகம் நம்மை முழுவதுமாய் ஆட்கொண்டு விட்டது வருந்த தக்கதே.

  உறவினர்களுக்கு மத்தியில் கெளரவம் என்று தங்க தட்டுகளும் வெள்ளி பாத்திரங்களும் அழகாய் ஒற்றுமையாய் ஒன்றாய் உண்ணும் ஆரோக்ய வாழை இலை சாப்பட்டை மறக்கடித்து விட்டன.

  குடும்பங்களோடு ஒன்றாய் சென்று குலதெய்வம் கோலிவில் பொங்கல் வைத்து ஒன்று கூடி மகிழ்ந்த காலமெல்லாம் மாறி இன்று பணத்திற்கு பின்னால் ஓடும் மனிதனுக்கு அவனது சொந்த குடும்பத்தை காணவும் நேரமில்லாமல் போய்விட்டது.

  கல்வி,கலை வீரம் என்று நம்மை மற்ற நாடுகள் அண்ணாந்து பார்க்க வைத்த விஷயங்கள் எல்லாம் குறைந்து இன்று நாம் சின்ன சின்ன நாடுகளையும் அண்ணார்ந்து பார்க்கும் நிலை வந்துவிட்டது.
  காரணம் நம் மொழியையும் நம் பண்பாட்டையும் நாமே மதிப்பதில்லை என்பது தான்.
  மேலை நாடுகளான கொரியா,ஜப்பான் இது போன்ற நாடுகள் எல்லாம் தம் மொழியையே முதலில் ஊக்குவிகின்றன அதனால் தனது சொந்த தன்மை மாறாமல் இருக்கிறது.
  நாமோ மேலை கலாசார மோகத்தில் திளைத்து நமது தனித்தன்மையை தொலைத்து நிற்கிறோம்.

  சமீபத்தில் பார்த்தேன்
  மொரீஷியஸ் நாட்டு ரூபாய் நோட்டில் கொட்டை எழுத்தில் தமிழ் அச்சடிக்கப்பட்டு இருப்பதை 30 சதவீதம் மட்டுமே தமிழரை கொண்ட ஒரு நாடு நம் தமிழ் மொழியை ஊக்குவிக்க அதையே நாம் ஏன் செய்ய மறுக்கிறோம் என்று நம் மீதே ஒரு மனகசப்பு ஏற்படுகிறது.
  இன்னும் ஆங்காங்கே என் மொழி, என் கலாசாரம் என் மக்கள் என்று வாழும் ஒரு சிலரால் மட்டுமே நம் தமிழர் பண்பாட்டு முறைகள் உயிர் வாழ்ந்து வருகிறது அதனை மேலும் வளர்க்க நம்மால் முடிந்த பங்கை நாமும் செய்வோம் என்று வலியுறுத்தி அதற்கான என் பங்கையும் நான் செய்வதாய் வாக்குறுதியுடன் இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து மேலும் இது போன்ற நல்ல தலைப்புகளை வழங்க பெண்மையை வலியுறுத்தி இந்த கட்டுரையை முடிக்கிறேன்.

  அருமை தோழி/ தோழர்களுக்கு என் நன்றிகள்
  அன்புடன்
  யாமினி.

  With Regards
  Yamini


  Expectation is the only devil which smiles at you when you feed it daily!

  http://www.penmai.com/forums/poems/3...tml#post360407

 9. #19
  yams's Avatar
  yams is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  chennai
  Posts
  1,590
  Blog Entries
  4

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  sorry for the double post admin actually yesterday i couldn't post the full post and it allgot lost once the system power went off so had to post first half yesterday and the remaining one today.

  my wishes for all the participants

  With Regards
  Yamini


  Expectation is the only devil which smiles at you when you feed it daily!

  http://www.penmai.com/forums/poems/3...tml#post360407

 10. #20
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,885
  Blog Entries
  1

  Re: தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!

  தோழமைகள் அனைவரையும் தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி முடிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

  தலைப்பை சரியான கோணத்தில் கொண்டுசென்று தங்களின் ஆழமான கருத்துக்களை அனைவரும் அழுத்தமாக பதிவு செய்துள்ளீர். இதுபோன்ற என்ன அலைகள் உள்ளவர்கள் இருக்கும் வரை கண்டிப்பாக நம் தமிழ் மரபுகள் மற்றும் பண்பாடுகள் வாழும்...

  போட்டியில் பதிவு செய்தவர்கள் அனைவரின் கருத்துக்களிலும் நம் தமிழ் பண்பாட்டை மீட்டு எடுக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது.

  அனைவரது கருத்துக்கள் சிறப்பாக இருந்தாலும், நம் நடுவர் குழுவினர் Kirthika99 @ Karkuzhali அவர்களை முதலாவதாக தேர்ந்தெடுத்து உள்ளனர். வாழ்த்துக்கள் Karkuzhali. அவருக்கான பரிசு இதோ,

  தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!!-secret.jpg

  இந்த போட்டியில் தங்களது கருத்துக்களை பதிவு செய்த, Geetha A, Infaa, Gowrymohan, Surya, Sriramajayam & Yams வாழ்த்துக்கள்.

  முதலில் இந்த தலைப்பை கொடுத்து விட்டு சற்று யோசித்தேன், நம் தமிழ் பண்பாட்டை எடுத்து சொல்ல ஒரு சிறப்பான பதிவாவது வருமா என்று, ஆனால் இங்கு பதிவு செய்த அனைவரின் பதிவுகளும் மிக மிக சிறப்பானதவும் சிந்திக்கதக்கதாகவும் இருந்தது.


  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter