Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree898Likes

Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!


Discussions on "Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!" in "Special Contest" forum.


  1. #31
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?


    பெண்மையில் எனக்கு எல்லாமே பிடிக்கும் குறிப்பாக என்றால் “Today sms” & “Thought for the day” இவை இரண்டும் தான் காலையில் நான் முதலில் பார்ப்பது நல்ல நகைச்சுவையும் நல்ல கருத்துகளும் அந்த நாளை புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
    எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் அதை விட முக்கியம் இங்கு உள்ள நண்பர்கள் மிகவும் அன்பாக நடந்துகொள்கிறார்கள் பொதுவாகவே இணையத்தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற ஐயம் இருக்கும்
    எனக்கு பெண்மையில் அந்த பயம் இல்லை இந்த முக்கிய காரணம்தான் நான் பெண்மையில் இருப்பதற்காக பெருமைப்படுகின்றேன்

    2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.
    கற்பனை திறன், எழுத்து திறன் வளர்ந்துள்ளது. எழுதும் ஆர்வம் மிகுந்துள்ளது (நானும் ஓரிறு கவிதைகள் பதிவு செய்துள்ளேன் என எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது)

    பெண்மை 2020!

    1. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    நிறைய போட்டிகளை எதிர்ப்பார்க்கிறேன் சிந்தனையை வளர்க்கும்படி இருக்கவேண்டுகிறேன் உலகளவில் பெண்மை வலம்வர வேண்டும்



    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #32
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Quote Originally Posted by Penmai View Post
    Dear friends,

    Penmai is entering into her 6th year on May 20th. Here is a special contest,

    Penmai Today!

    1. What you love most in Penmai? & What makes you to feel Proud to be in Penmai?
    2. How you developed your Individual skills and talents in Penmai.

    Penmai 2020!
    1. Your expectations towards Penmai in 2020.

    பெண்மை இன்று!
    1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?
    2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.

    பெண்மை 2020!

    1. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    Note:
    Judges panel will select the best entry. Participate now and stay tuned with Penmai.

    Narrate it, there is no limitation and no rules, it can be in English or Tamil language, except you have to express your feelings in a single entry, before May 20th 11.30 PM (IST).

    Don’t wait more!!! Get in to the contest, throw your narration and win the remarkable prize from Penmai on her Birthday!!!
    Dear Ilavarasi ka... Advances Birthday Wishes to our family girl Penmai... Contest Idea is very good. Apart from the contest, I would like to take this opportunity to express my views about penmai. Thanks for making platform and chance to write about our penmai.

    I wish only one thing for you on this special occasion, May you find all the strength and courage needed to blow all your hard work and put ups.

    May the best of your past be the worst of your future.

    Keep on Rocking... You will have to cross so many miles in your success path. Go ahead...



  3. #33
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Quote Originally Posted by nlakshmi View Post
    Wishes Ila and Penmai Team and the Honorable members for all the support.
    This is the current website ranking... by webstatdomain.com
    Penmai.com is ranked 52,674 in the world (among the 30 million domains), a low rank means that this website gets lots of visitors. This site is relatively popular among users in the India. It gets 87.4% fromIndia. This site has a good Pagerank(3/10). It has 437backlinks. It's good for seo website. Penmai.com has 25% seo score.

    The Rank was above 150,000 when i checked a year or a year and a half ago.. Such a stupendous growth with the google page rank 3(lower the page rank, higher the popularity and security and the number of hits) really proves the hardwork and commitment of all the Penmai Team members and the evergreat members and guests and ofcourse ILAVARASI and SAKTHI.

    Good work guys!!!... Many more happy returns.
    Wow... Super information about our Penmai lakshmi ka...Thanks for sharing it.



  4. #34
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Dear Ilavarasi ka, Here are my views about our Penmai. I am very happy to share about it.

    பெண்மையில் எனக்கு மிகவும் பிடித்தது:

    பெண்மையில் எனக்கு மிகவும் பிடித்தது, பெண்மை தான். பெண்மை என்ற வார்த்தையில் கவரப்பட்டவள், பின் அதற்குள் ஐக்கியம் ஆகிப் போய்விட்டேன். என்ன இல்லை இந்த பெண்மையில், தேவையான அனைத்தும் இங்கே இருக்கிறது.

    பெண்மை மக்களின், பிறந்தநாள், திருமண நாள், பல வெற்றி பயணங்களின் தருணங்கள் இவற்றைக் கொண்டாட முகம் தெரியா பல பேர் அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தெரிவிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயம் பெண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    அதே போல் ஒருவருக்கு கஷ்டம் என்றாலும் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் தேத்துவதிலும் நம் பெண்மை தோழிகளுக்கு நிகர் அவர்களே தான்.

    Neeya? Naana?, Group Prayer & Prayer Group for Pregnant and TTC Guys, இந்த விஷயங்கள் எல்லாம் ரொம்பவே பிடித்தமான ஒன்று.

    சில நாட்களுக்கு முன்பு நம் சீனியர் மக்கள் வழங்கிய Family & Relationship சம்மந்தமாக வழங்கிய அறிவுரைகள் அற்புதம் அற்புதம்.

    பெண்மையில் இருப்பதற்கு பெருமைப்படக் காரணம்:

    பெண்மையில் இருப்பதற்கு பெருமைப்படக் காரணங்கள் பற்பல. அதில் முதலாக சொல்ல வேண்டுமானால், நல்ல உள்ளங்களின் நட்பு கிடைத்தது. யாரென்றே தெரியாத போதிலும், நட்பெனும் அழகான பந்தத்தில், பல நல்ல உள்ளங்களை என்னுடன் இணைத்தவள் தான் பெண்மை. (பெண்மையையும் சேர்த்து தான், இவள் தான் எனது முக்கிய மற்றும் நெருங்கிய தோழி இப்பொழுது). ரொம்ப கஷ்டமான சமயங்களில் அல்லது மனசு சரி இல்லன்னா நான் தோள் சாஞ்சு இளைப்பாற இடம் பெண்மை தான். பெண்மைக்கு உள்ள வந்தாலே போதும், என் மனசு full ah Divert ஆகிடும்.

    நான் பார்த்த வரைக்கும் பெண்மை நிறைய புது எழுத்தாளர்களையும், கவிப்புயல்களையும் உருவாக்கி இருக்கு. இதை நினைத்து நான் ரொம்பவே பெருமை படறேன்.

    எத்தனையோ பேர் பெண்மை வந்ததுக்கு அப்புறம் அவங்க தனித்துவத்தை வளர்த்துக்கிட்டாங்க, நிறைய learn பண்ணியிருகாங்கன்னு சொல்றதை கேட்கும் போதும் ரொம்ப சந்தோசமாகவும் அதே சமயம் பெருமையாகவும் இருக்கு.

    பெண்மை, மற்ற எல்லாவற்றையும் போல் ஒரு பொழுது போக்கு ஊடகமாக மட்டும் இல்லாமல், ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதத்தில் மெருகேத்திக்கிட்டு இருக்கு. இது ரொம்பவே பெருமைப் பட வேண்டிய விஷயம்.

    No words in any language are enough to express how grateful i am, for your being in my life.

    உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு

    என் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்குன்னு சொல்றதை விடவும், என்னோட Personal Life, Self Improvement & Personality Development ku பெண்மை எந்த விதத்தில் உதவி இருக்குன்னு சொல்ல விரும்பறேன். பெண்மை நிறைய பேர் அவங்களோட பிரச்சனைகளை சொல்லி தீர்வு கேகட்கும் போது, நமது பெண்மை தோழிகள் அல்லது தோழர்கள் சொல்லும் அறிவுரைகள், கருதுக்கள், பரிந்துரைகள் எல்லாமே ரொம்ப இயல்பாக அதே சமயம் சுலபமான தீர்வுகளையும் கொடுக்கறாங்க. சில நேரங்களில் அது நம்ம வாழ்க்கையில் கூட அந்த மாதிரியான பிரச்சினைகள் வந்து இருக்கலாம். ஆனால் அப்பொழுது அந்த சூழ்நிலையில் நாம அவசரத்தில், தவறான முடிவுகளையோ அல்லது பிரச்சினையை வளர்க்கிற மாதிரியான முடிவுகள் எடுத்து இருக்கலாம். அதே இப்போ வேற ஒரு நபர் அந்த பிரச்சினையை கேட்கும் போது, என்னால அந்த பிரச்சனைக்கு வெளியில இருந்து யோசிக்க முடியுது. இப்படி செய்யலாம், இந்த மாதிரி செஞ்சா இது ஒரு பிரச்சினையே இல்ல அப்படின்னு என்னால யோசிக்க முடியுது. சோ, என் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினை வரும் போதும், அந்த பிரச்சினைக்கு வெளிய இருந்து யோசிச்சு ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியுது. (பெண்மை வந்ததுக்கு அப்புறம் இந்த பக்குவம் என்கிட்டே நல்லாவே வந்து இருக்கு).

    பொறுமை, நிதானம், எதையும் அடுத்தவங்க நிலைல இருந்து யோசிச்சு பாக்கற தன்மை எல்லாமே பெண்மை வந்ததுக்கு அப்புறம் நான் எனக்குள்ள இருந்து வெளிக் கொண்டுவந்தது. பெண்மைக்கு முன் அபர்ணா பெண்மைக்கு பின் அபர்ணா அப்படின்னு சொல்ற அளவுக்கு என்கிட்டே நிறைய மாற்றங்கள். என் குடும்பத்தில இருக்கவங்க கூட இவளா இப்படின்னு பாக்கறாங்க. (எப்படி இருந்த அபர்ணா இப்படி ஆயிட்டேயே).

    எப்படி இருக்கணும்னு கத்துக்கிட்டதை விடவும் எப்படி இருக்க கூடாதுன்னு கத்துக்கிட்டது தான் அதிகம். நம் பெண்மை உறுப்பினர்கள் சொல்ற ஒவ்வொரு விஷயத்துலயும் ஒன்னை கத்துகிறேன். இதை செய்யலாம் இதை செய்யக் கூடாது.

    பள்ளிக் காலத்துலயும் சரி, கல்லூரி காலங்களிலும் சரி எனக்கு தாழ்வு மனப்பான்மை ரொம்பவே இருந்துச்சு. ஆனால் கண்டிப்பா இப்ப ஒரு துளி கூட இல்ல. அதுக்கு காரணம் பெண்மை தான். என்னால கண்டிப்பா முடியும், அப்படிங்கற அஸ்திவாரத்தை எனக்குள்ள போட்டது பெண்மை தான். இதுலயும் குறிப்பாக என்னுடைய பெண்மை தோழிகள் சிலருக்கு முக்கிய பங்கு இருக்கு.

    கடந்த காலத்தில சரியான ஊக்குவிப்பு இல்லாம நான் மிஸ் பண்ண பல விஷயங்களை பெண்மையின் மூலமா கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தி செஞ்சுட்டு வரேன்.

    அப்புறம் சமையல், எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். நிறைய புது புது உணவு வகைகள் செய்யக் கத்துகிட்டேன். வீட்டிலேயும் ட்ரை பண்ணி சில சமயங்களில், பாராட்டுகளையும் பல சமயங்களில் திட்டுகளையும் வாங்கி இருக்கேன். தினமும் புதுசா எதாவது கத்துகிட்டோமேன்னு சந்தோசப் பட்டுக்குவேன்.

    எப்பொழுது எல்லாம் பெண்மைக்கு உள்ள வரேனோ, கண்டிப்பா அன்றைக்கு எதாவது ஒரு புது விஷயம் தெரிஞ்சுக்காம என்ன வெளிய போக விட மாட்டங்ராங்க நம் பெண்மை தோழிகள்.

    பெண்மை 2020ல், நம் பெண்மை எப்படி இருக்க வேண்டும்:

    இப்பொழுது இருக்கும் வளர்ச்சியை விட கண்டிப்பாக ஒரு ஐம்பது மடங்கு வளர்ச்சி கண்டிப்பாக, இணைய உலகில் நம் பெண்மை இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னோட எதிர்பார்ப்பு என்னன்னா, இணையத்தையும் தாண்டி பெண்மை நம் சமுதாயத்துக்குள்ள வரணும். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, நம் பெண்மை நம் சமூகத்திற்கு Virtual ஆக இல்லாமல் Physical ஆக எதாவது ஆக்கப் பூர்வமான செயல்கள் செய்ய வேண்டும்.

    இப்பொழுது எப்படி, இந்த பிறந்த நாள் பரிசாக மரக்கன்று நட்டு வளர்ப்போம் என முடிவு எடுத்து உள்ளோமோ, (இது பெண்மைக்கு நாம் கொடுக்கும் பிறந்த நாள் பரிசு அல்ல, நாம், நம் சமுதாயத்திற்கு பெண்மையின் பிறந்த நாள் சார்பாக கொடுக்கப்படும் பரிசு என்பதே என் கருத்து) அதே போல் இன்னும் பலப்பல நாம் சமுதாயத்திற்கு பெண்மை மூலமாக செய்ய வேண்டும்.

    இணைய மக்கள் மட்டுமின்றி, இதர எல்லா தரப்பு மக்களும் படிக்க கூடிய வகையில் பெண்மை மின் இதழ் அச்சில் வர வேண்டும் என்பது எனது விருப்பம்.மாத இதழாகவோ அல்லது மாதம் இருமுறையோ சமூகத்தில் வலம் வர வேண்டும். அதே போல், பெண்மை மின் இதழ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித் தனியாக வந்தால் இன்னமும் நன்று.

    அதே போல் பெண்மையில் நிறைய பேர் இல்வாழ்க்கை, தாய்மை, குழந்தை வளர்ப்பு சம்மந்தமாக எல்லாம் நிறைய அறிவுரைகள் டிப்ஸ் எல்லாம் கொடுக்கறாங்க, அதை எல்லாம், ஒவ்வொன்றாக ஒரே தொகுப்பாக அனைவரின் கருத்துகளையும் அறிவுரைகளையும் பெண்மை மின் இதழ் போன்றே கொடுக்க முயலலாம். அதாவது குழந்தை வளர்ப்பு அப்படின்னா, அது சம்மந்தமாக இருப்பதை எல்லாம் ஒரே PDF இல் கொடுக்கலாம்.

    பெண்மை சார்பில், New Year Gift ஆக Active உறுப்பினர்கள் அனைவருக்கு டைரி அனுப்பலாம். பல பல போட்டிகள், பல தரப்பு சார்ந்து வைக்கலாம்.

    நீ நான்னு போட்டி போட்டு, நம் பெண்மை தோழிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல Health Professionalists, Family & Relatioship Advicers, Counsellors, Pshycologists ஒரு சிலர் நம் பெண்மையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். Special ah Pregnancy, Parenting ku இருந்தால் நல்லா இருக்கும்.

    அதே போல் Students Ku Counselling, Technology Oriented Persons Guidance கிடைக்கற மாதிரி இருக்கனும்.

    இணைய உலகில் மட்டுமின்றி, இன்றைய நடப்பு உலகிலும் பெண்மையவள் புரட்சிகள் பலவும் புதுமைகள் பலவும் புகுத்திட வேண்டும் என்பதே என் விருப்பம்.

    (தோழிகளே இன்னும் நிறைய எனக்குள் இருந்து பொங்கிட்டு இருக்கு, ஆனா எதை எங்க எப்படி சேர்க்கறதுன்னு தெரியல, அதை விடவும் என்னால டைப் பண்ண முடியல. அதனால இப்போதைக்கு இதோட நிறுத்திக்கறேன்)

    Quote Originally Posted by Penmai View Post
    Dear friends,

    Penmai is entering into her 6th year on May 20th. Here is a special contest,

    Penmai Today!

    1. What you love most in Penmai? & What makes you to feel Proud to be in Penmai?
    2. How you developed your Individual skills and talents in Penmai.

    Penmai 2020!
    1. Your expectations towards Penmai in 2020.

    பெண்மை இன்று!
    1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?
    2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.

    பெண்மை 2020!

    1. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    Note:
    Judges panel will select the best entry. Participate now and stay tuned with Penmai.

    Narrate it, there is no limitation and no rules, it can be in English or Tamil language, except you have to express your feelings in a single entry, before May 20th 11.30 PM (IST).

    Don’t wait more!!! Get in to the contest, throw your narration and win the remarkable prize from Penmai on her Birthday!!!


    Last edited by Angu Aparna; 17th May 2013 at 12:06 PM.

  5. #35
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Quote Originally Posted by Penmai View Post
    Dear friends,

    Penmai is entering into her 6th year on May 20th. Here is a special contest,

    Penmai Today!

    1. What you love most in Penmai? & What makes you to feel Proud to be in Penmai?
    2. How you developed your Individual skills and talents in Penmai.

    Penmai 2020!
    1. Your expectations towards Penmai in 2020.

    பெண்மை இன்று!
    1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?
    2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.

    பெண்மை 2020!

    1. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    Note:
    Judges panel will select the best entry. Participate now and stay tuned with Penmai.

    Narrate it, there is no limitation and no rules, it can be in English or Tamil language, except you have to express your feelings in a single entry, before May 20th 11.30 PM (IST).

    Don’t wait more!!! Get in to the contest, throw your narration and win the remarkable prize from Penmai on her Birthday!!!
    மிக அருமையான யோசனைகள் இளவரசி!!

    பெண்மை தன்னுடைய 6-வது பிறந்த நாள் விழாவை கொண்டாட இருப்பது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சி. அது தொடர்பாக பெண்மை தலைவி இளவரசி அவர்களுக்கும் மற்றும் பெண்மை இன்றைய உச்ச நிலையை அடைவதற்கு தொடக்கத்தில் இருந்து அரும் பாடுபட்டு வரும் சூப்பர் moderators மற்றும் பெண்மையின் தொடக்க காலத்தில் இருந்தே தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

    வ்வொரு
    பிறந்தநாளிலும்
    நீ இன்னும்
    மெருகேருகின்றாய்..!
    மிளிருகின்றாய்..!
    அமாவாசைக்கு
    பிறகு
    மிளிரும்
    நிலவு போல..!



  6. #36
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன?


    எனக்கு அணைத்து பகுதிகளும்பிடித்தது.

    எனக்கு கதை படிப்பது மிகவும் பிடிக்கும். ரமணி சந்திரன் கதைகள்னா தேடி தேடி படிப்பேன்...அப்படி எனக்கு அறிமுகம் ஆனவள்தான் பெண்மை.

    இங்கு உள்ள நண்பர்கள் மிகவும் அன்பாக நடந்துகொள்கிறார்கள்.
    முகம் தெரியாத எத்தனையோ பேர் இப்போது எனக்கு தோழிகளாக மாறி விட்டனர். இது என்னை போன்ற அயல்நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு ஒரு வரப்ரசாதம்...

    குறிப்பாக நண்பர்களின் ஆலோசனை, கருத்துரை, அறிவுரை.
    பெண்களுக்கு தேவையான சகல தகவல்களும் 'பெண்மை' இணையதளம் மூலம் பெறக்கூடியதாக இருக்கிறது என்பதே எனக்கு மிகவும் பிடித்தது.
    பெண்மையில் பிடித்தது பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவது, சந்தேகங்களை நீக்குவது போன்ற விஷயங்கள் முக்கியமானவை.
    அத்துடன் நல்ல சிநேகிதர்களுடன் பொழுதுபோக்குகள், போட்டிகள் வழங்கி பெண்களின் தனிமையை
    ,வெளி கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எங்கள போல வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பெண்களுக்கு இது பெரிய gift என்றுத்தான் சொல்லவேண்டும் .

    பெண்மைல என்ன இல்லை, அரசியல் பேசணுமா, அழகு குறிப்புகள் வேண்டுமா, மருத்துவ குறிப்புகள் வேண்டுமா, சமையல் குறிப்புகள் வேண்டுமா, தோழிகளுடன் பேசணுமா, என்ன இல்லை இந்த பெண்மைல...இதனை சிறப்பு அம்சங்களுடன் இருக்கும் பெண்மையை பிடிக்காமல் போகுமா..

    பெண்மையின் wishes forum இல் முகம் தெரியா பல பேர் அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தெரிவிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயம் பெண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    அதே போல் ஒருவருக்கு கஷ்டம் என்றாலும் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் தேத்துவதிலும் நம் பெண்மை தோழிகளுக்கும் தோழர்களுக்கும் நிகர் அவர்களே தான்.
    ___________________

    1a. மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?

    நிறைய நண்பர்களின் நட்பு கிடைத்தது.. நட்பெனும் அழகான பந்தத்தில், பல நல்ல உள்ளங்களை என்னுடன் இணைத்தவள் தான் பெண்மை. அதை நினைத்து நான் பெருமைப்படுக்கிறேன்.

    பெண்மை நிறைய புது எழுத்தாளர்களையும், கவிப்புயல்களையும் உருவாக்கி இருக்கு. இதை நினைத்து நான் ரொம்பவே
    பெருமைப்படுக்கிறேன்.

    எத்தனையோ பேர் பெண்மை வந்ததுக்கு அப்புறம் நிறைய விஷயங்களை கற்றுகொண்டார்கள் சொல்றதை கேட்கும் போதும் ரொம்ப சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கு.

    ________________________________________

    2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.

    நாலு பேர் பார்த்து பாராட்டி நாம இன்னும் நல்ல செய்யணும்னு ஒரு ஊக்கத்த பெண்மை கொடுக்கிறது .

    ______________________________

    3. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    இந்த பெண்மை இணையத்தளம் வரும் 2020 ஆம் ஆண்டில் உலகத்தின் ஓர் சிறந்த தமிழ் இணையத்தளமாக வர வேண்டும்..
    அதற்கு வேண்டிய உதவிகள் என்னால் முடிந்ததை செய்வேன்.

    www.penmai.com தெரியாத ஆளே இருக்க கூடாது அந்த அளவு ரொம்ப பிரபலமாகனும்.


    வலைதலத்தில் பாதுகாப்பு [ safety measure] அதிகரிக்கப்பட வேண்டும் .

    உலகத்தின் மூளை முடுக்கு எல்லாம் சென்று அடைய வேண்டும்.

    நிறைய போட்டிகளை எதிர்ப்பார்க்கிறேன் சிந்தனையை வளர்க்கும்படி இருக்கவேண்டுகிறேன்.

    இணைய உலகில் மட்டுமின்றி, இன்றைய நடப்பு உலகிலும் பெண்மையவள் புரட்சிகள் பலவும் புதுமைகள் பலவும் புகுத்திட வேண்டும் என்பதே என் விருப்பம்.

    _____________________________



  7. #37
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    முதலில் பெண்மைக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!!


    முதலில் நான் பெண்மை கு வந்தது புத்தகங்களை தேடி மட்டும் தான்.
    பின்பு தான் புத்தகங்கள், நாவல்கள் தவிர பல போழுபோக்குடன் கூடிய பயனுள்ள விஷயங்களையும் இணையத்தின் மூலம் செய்ய முடியும் என்று அறிந்து கொண்டேன்.


    அதற்கு பெண்மைக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


    1. பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?


    இன்றும் நான் என் தோழிகள், உறவினர்கள், ஏன் சந்திக்கும் புது நபர்களிடம் கூட பெண்மை பற்றி கூற தயங்கியதில்லை.
    வீட்டில் பொழுது போகவில்லை என்று கூறுபவர்களிடம் நான் பெண்மையில் இணையுமாறு தைரியமாக பரிந்துரை செய்வேன்.
    இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள பாதுகாப்பு(security) மற்றும் தேவை இல்லாத மட்ட ரகமான கருத்துக்களை இங்கு எவரும் பதிவிடுவதும் இல்லை, பதிவிட அனுபதிப்பதும் இல்லை என்பதே ஆகும்.


    இதுவே எனக்கு பிடித்த முதல் விஷயம்.


    இரண்டாவது அருமையான நம்பகமிக்க தோழிகள்.


    இங்கு என் சந்தேகங்கள் போக்குவதற்கும், தெரியாத பல விடயங்களை தெரிந்து கொள்வதற்கும் இன்னும் சொல்ல போனால் அனைவருக்கும் மிக சிறந்த வழிகாட்டியாகவும் பெண்மை இருந்து வருகின்றது.


    பொதுவாக நான் கேட்க நினைபவற்றை முதலில் search l போட்டு தேடி பார்த்து விட்டு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே புதிதாக பதிவிடுவேன்.


    எனக்கு தேவைப்பட்ட 99 சதவிகித குறிப்புக்கள்(data)ஏற்கனவே பெண்மையில் அதிகமாக இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.
    இங்கு இல்லாத விடயங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்தையும் கொண்ட அட்சய பாத்திரமாக பெண்மை விளங்குகிறது.


    மேலும் நான் பெண்மையில் இணைந்த பிறகு இதை போன்ற மேலும் ஒரு சில forum-கலை பார்த்திருக்கிறேன்.
    அனால் இங்கு மட்டுமே ஒரு positive ஆனா பதிவுகள் அதிகம் உள்ளது.
    எடுத்துகாட்டாக ஒரு forumல் மாமியாரின் கொடுமைகளை பற்றி கூறுவதற்காகவே ஒரு தனி பதிவை பார்த்து மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
    இங்கு அது போன்ற எதிர்மறை எண்ணங்களை பகிர்த்து கொள்ளும் போக்கு இல்லாமல் இருப்பது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று.
    போட்டி போட்டு கொண்டு நல்ல விஷயங்களை பகிரும் பொழுது இயற்கையாகவே நம்மை சுற்றி நல்ல எண்ண அலைகள் சுற்றி இருக்கும்.


    பெண்மையில் இல்லை என்ற வார்த்தையே இல்லை எனலாம்.அந்த அளவிற்கு திருமணத்தில் தொடங்கி குடும்பம் உறவுகளின் மேன்மை , கர்பக்காலம், பிள்ளை பிறப்பு , பிள்ளை வளர்ப்பு என்று தொடங்கி, உடல்நலம், அழகு , பொழுது போக்கு, கல்வி வேலை வாய்ப்பு வரையிலும் அணைத்து விடயங்களும் ஒரே இடத்தில கிடைக்கும் பெண்மையில் இருப்பது எனக்கு பெருமையே!!


    ஒரு விஷயம் தேவை படும் பொழுது இணையத்தில் தேடி கண்டுபிடித்து விடலாம், ஓராயிரம் விளக்கங்களும் கிடைக்கும், அனால் அத்தனையும் ஒரு அனுபவசாளியிடம் இருந்து அவர் வார்த்தைகளின் மூலமாக அறிந்து கொள்வதற்கு நிச்சயமாக ஈடாகாது.
    இது என் அனுபவத்தில் கண்டு உணர்ந்த ஒரு விடயம். அப்படி பட்ட அனுபவஸ்தர்கள் நிறைந்த பெண்மையில் இருப்பது எனக்கு பெருமையே!!


    தினம் தினம் நடக்கும் செய்திகளில் இருந்து( தங்கம் விலை உட்பட ), வாய் விட்டு சிரிக்க நகைச்சுவை துணுக்குகள், பல ஊர்களை பற்றிய செய்திகள், புது புது வகையான உணவுகள் என அனைத்தையும் கொண்ட பெண்மை யில் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு மிகவும் பெருமையே.


    2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.


    எனக்கு படிக்கும் பழக்கம் உண்டு, அனால் அது நாவல்கள் என்ற அளவில் மட்டுமே இருந்தது, அதை பல துறை விஷயங்களையும் அறிந்து கொள்ள ,படிக்கும் ஆர்வத்தை தூண்டிய பெருமை பெண்மையையே சாரும்.


    இரண்டாவதாக ஒரு விஷயத்தை கோர்வையாக எழுத கற்று தந்தது பெண்மை மட்டுமே, இங்கு உள்ள எழுத்துக்களை படித்து நாமும் முயற்சிக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது பெண்மையால் மட்டுமே.
    நிச்சயம் இந்த பொறி மென் மேலும் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.


    பெண்மை 2020!
    1. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.


    என்னை பொறுத்த வரை பெண்மை இன்றே தரத்தில் No.1 என்றே கருதுகிறேன்.
    எனவே இந்த தரம் கெடாமல் நல்ல விஷயங்களை மட்டுமே கொண்ட ஒரு வலை தளமாகவே 2020 லும் பெண்மை இருக்க வேண்டும்/இருக்கும்.


    இன்று பற்பல எழுத்தாளர்கள் பெண்மை யால் உருவாகி கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் நிச்சயம்மாக பலர் நல்ல நிலைக்கு உயர்ந்து பெண்மை யின் புகழை எடுத்து சொல்லும் காலம் 2020 குள்ளேயே வந்துவிடும் நிச்சயமாக!!


    நன்றி.


    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  8. #38
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    பெண்மையில் உங்களுக்கு பிடித்தது என்ன? மேலும் பெண்மையில் இருப்பதற்கு எதற்காக பெருமைப்படுகிறீர்கள்?

    அன்பு பெண்மையே
    உன்னை நான் முதன்முதலில் சந்தித்த நாள்16 ஜூலை2012.......
    அன்றிலிருந்து இன்று வரை இனிவரும் நாட்களிளு
    ம் என் உள்ளதோடு உறவாடும் ஒரு உறவாக தான் நினைக்கிறன் .அந்த உறவுக்கு என்ன பெயர் சொல்ல ?
    அம்மாவா? ,அக்காவா? ,தங்கையா? ,தோழியா ? யாரம்மா நீ எனக்கு ?
    என்னை மகிழ்விக்கும் கற்பக விருட்சம் அம்மா நீ...
    நவீன உலகின் அழகு தேவதையே
    உன்னிடம் எனக்கு பிடித்தது என்னவென்று சொல்வதம்மா?

    உலகில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நாட்டில் பூத்த நறுமண மலர்களை நீ சேர்த்து பூந்தோட்டமாக மாற்றிவிட்டாயே.அதனால் உன்னை பிடிக்கும்
    ஆதரவற்று வரும் பெண்களுக்கு,தாய்ப்போல ஆறுதல் கூறும் தோழமைகளை பார்த்து மெய் சிலிர்த்து நிற்ப்பேன் .அது எனக்கு பிடிக்கும் .
    சமையல் அறைக்கு தண்ணீர் குடிக்க மட்டுமே சென்ற நான் இன்று சமையலில் கில்லாடி என்று பெயர் வாங்கியது உன்னால் தானே .. தனி திரி அமைத்து எனக்கு சமையல் சொல்லி கொடுத்த உன்னை எனக்கு பிடிக்கும் .
    குழந்தை பற்றி என் மனதில் ஆயிரம் கேள்விகளோடு நான் online யில் surf செய்த
    போது
    தான் பெண்மையை முதல் முறையாக பார்த்தேன் ....

    என் பெயரை பதிவு செய்து உள்ளே நுழைந்ததும் ,எனக்கு நீ கொடுத்த வரவேற்ப்பை நான் இன்றும் பசுமையாக உணருகிறேன்


    நான் பெண்மையில் இருப்பதற்கு ஏன் பெருமைபடுகிறேன் என்றால் ,

    பாதுகாப்பு உணர்வு தான் முக்கிய காரணம்

    கல்யாணமான பெண்கள் நாங்கள் இவ்வளவு நம்பிக்கையாக உலா வருகிறோம் என்றால் முழுக்க முழுக்க நீ கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு தான்............அதனால் மனத்தால் பெருமைப்படுகிறேன் ....

    வெவ்வேறு websiteகளில் chatting ,dating என்று கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது ....ஆனால் நீ தாய்மை,நட்பு,சமையல்,ஆன்மிகம்,கதைகள்,குழந்தை பராப்மரிப்பு என்று மேன்மையான பகிர்வுகளை மட்டும் கொடுத்து எங்கள் எண்ணங்களை சிதற விடாமல் பாதுகாக்கின்றாயே,அதனால் நான் உன்னோடு இருப்பதை பெருமையாகவே நினைக்கின்றேன்

    modernism என்ற போர்வையில்லாமல் homely
    க இருக்கும் பெண்மையை பார்த்து பெருமைப்படுகின்றேன்
    என் எண்ணங்களை பிரதிப்பளிக்கும் பெண்மையே ,நீயும் என் குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டாய்

    உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.

    எனக்கு கவி எழுதும் திறமையை வளர்த்தது பெண்மை நீதானம்மா

    வார்த்தைகளை தொடுத்து கவி மாலையை முதலில் உனக்கே சமர்பித்தேன்

    அதன் விளைவாக ,இன்று "விஜியின் கவிதை சாரல்கள்" உயிர் பெற்றது .

    கற்பனை வளம் அனைவருக்கும் உண்டு
    ஆனால் ஊக்கமில்லாமல் அந்த கற்பனையை வளர்க்க முடியாது.....நீ கொடுத்த ஊக்கம் இன்று
    "லட்சிய பூக்கள்" என்ற் அழகிய கதையை என் தோழிகளோடு சேர்ந்து படைத்துக்
    கொண்டிருக்கின்றேன் .....

    வாதாடும் திறமை இருந்தும் பார்வையாளராக இருந்த எனக்கு
    ஊகம் கொடுத்து என்னை "நீயா நானா"வில் பங்கேற்க செய்து இரண்டு முறை பரிசும் பெற்றேனே
    இப்படி என்னுள் புதைந்திருந்த திறமையை வளர்ப்பதற்க்கு நீயே அடித்தளமாக இருந்தாயே

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என் தனிமையை பொக்கிய ஒர் அற்புதமான உறவு நீ அல்லவோ ....
    கண்ணிற்கு தெரிந்தும் உருவமில்லா உன்னை ,நான் பார்க்கிறேன் என் நம்பிக்கையின் ஆணிவேராக
    என்றும் என்னுடன் நீ துணை வர என் கரம் நீட்டுகிறேன்.........உன் கரம் கொடுப்பாயா ?

    பெண்மை 2020ல் பெண்மை எப்படி இருக்க வேண்டும்

    பெண்களின் தாய் வீடாக இருக்க வேண்டும்
    பெண்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு கூகுள் போல இருக்க வேண்டும்
    astrology thread வேண்டும்..அதில் நிறைய தகவல்கள் இடம் பெற வேண்டும்
    modernism இல்ல இல்லா homely website ஆக இருப்பது தான் பெனமியின் அழகு ..அந்த அழகு மாறாமல் என்றும் இளமையோடு இருக்க வேண்டும் ....
    பெண்களின் வெலை வாய்ப்பிற்கு பெண்மை முன் நின்று உதவ வேண்டும்
    பெண்கள் வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகள் பெற திரிகளை உருவாக்க வேண்டும்
    பெண்களின் நாடி துடிப்பாக இருக்க வேண்டும் இன்று போல் என்று பேறும் புகழோடு விளங்க வேண்டும்
    பெண்மை மின்னிதழ் பெண்மை வார இதழாக தமிழகம் முழுவதும் உலா வரவேண்டும்








    Last edited by vijivedachalam; 19th May 2013 at 12:55 PM.
    life is so beautiful....

  9. #39
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,146

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    First of all I Must say thanks to you Ma'am for giving the Opportunity to Pour Our thoughts about this Cute Girl. Felt so good to be here!

    What you love most in Penmai - What makes you to feel Proud to be in Penmai - How you developed your Individual skills and talents in Penmai - Expectations towards Penmai in 2020.

    Yeah Ready Ready!! Lets Start..

    It is a really huge platform for information exchange. Eccentric type of members is a part of Penmai now. It includes students, old veterans, working class women, house wives, every kind of people can be found here. The important that is they are willing to help other fellow members in any possible way. I think the efficiency of the moderation at Penmai is what made a huge success.

    And it’s guiding the new members in their own unique styles mostly because they want to give back something to this platform. Members here are all volunteers who have put up their hand and agreed to share the responsibility. Penmai has no doubt evolved into a multi-dimensional platform for people of all age groups. There are simply too many things in the website which are more than enough to inspire young people. We people, have insane amounts of energy and hence it needs to be channelized in the proper way. I really think Penmai is the best option.

    Yeah, within this short span of my time here, I have certainly developed a love affair with Penmai!!

    Membership - self disciplined!

    Content - Useful to different segments of people!

    Site construction - simple easy to navigate!

    Reputation- Good!

    Trust - Trustworthy for our purpose!

    Reward - Reasonably acceptable!

    Admin guidelines and establishment - Transparent and non-complicated to possible extent!

    Moderation- To the bare minimum and depending on self moderation!

    Overall feeling- a sense of belonging as a decent group!!

    I Love its dedication and hard work and have taken us to newer conceptions of life too. Penmai’s rules drive us, Penmai’s regulations discipline us, Penmai’s contests uplift us and Penmai’s awards motivate us!


    Its,

    - a teacher when I have doubt.

    - a platform when I want to express myself

    - a place where I can share my knowledge

    - a place to meet new friends

    - a place to tell everyone about my school and college

    - a place to evaluate myself

    - a place where I get appreciated for my achievements

    - a place to tell people about the place I belong to

    - a place to list my town

    - a place to write my feelings regarding anything

    In short it is a new friend that listens to me when I say something, a friend that suggests me when I am in trouble, a friend that gives me extra Energy when I need it and a place to make countless friends.

    A stream where knowledge has set the limit as sky,
    Never let your thoughts go fly.

    Enormous opportunities you get here to learn,
    Talents hidden makes possible for you to earn.

    Forums, threads etc are its features,
    Members can become each other’s teachers.

    Number of qualities to pen down for it,
    Cherish the feeling of being a member of it.

    Great contribution given by members of its panel,
    Has made a successful Forum called Penmai and Proud to be the Member of this Tribunal.

    I also believe that Penmai is very good platform for those who want to improve their writing skills. I was never fond of writing, but now I cannot resist myself from writing. The day I explored here, I could not stop myself from becoming the member of this group. I would give lot of thanks to team, for developing such a wonderful site where people like me can utilize their talent and time. One can not only improve the writing skills, but also learn valuable information from here.

    I am benefitted by discussions. I became very courageous and bold to write my own feeling on any subject that I come across. There are some things that money just cannot buy, like manners, morals and intelligence.

    I myself felt - am a perfect Girl with all the six senses in perfect state. I would give lot of applauds to Penmai!!


    Long since in the cyber space
    Signed up as usual elsewhere
    And clicking the like button
    With unsettling peeps and vibes
    No way walked out of Facebook!!

    Long since in the cyber space
    I tweeted my seconds in phase
    Abodes I could raise if borne
    Just a buck for a tweet though
    No way faded out of Twitter!!

    Long since in the cyber space
    I linked in to connect to chase
    Whom I was passing through
    Not saying I did have felt rue
    No way logged off LinkedIn!!

    Ever since in the cyber space
    As I plugged in to Penmai in the race
    Just to say 'hai' but to send 'wow'
    Now cozier like rhythm in music
    Nowise to learn into Penmai of all time!!

    You have applauded my best
    You have disregarded my worst
    You have forgiven my misprint
    You have unbolt My Thoughts
    Tuning as a rhythm in my life of music!!


    Wouldn't it be great to see with Penmai Rankings in the top 50,000+. From there, we can work towards it getting into the top ranks beginning with 10000...then 5000...then in 2020 – Its be in 1000...not an impossible goal considering the vast number of members.

    What We should do is start a strong promotional campaign of not the site alone but of individual posts too. Make liberal use of the share buttons at the bottom of resource articles and forum posts. Share links of posts at Google+, Facebook, Twitter, personal blogs, public forum sites, etc. Don't just share our own posts. If We come across any post liked, share it with all & sundry.

    Wish to increase Penmai’s rankings nationally and internationally.Cheers!!

    Thanks & Regards,
    Karthiga Guru.


    Last edited by gkarti; 20th May 2013 at 08:55 AM. Reason: Alignment!!

  10. #40
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Dear Friends,

    Happy to see all your entries. Loved all your writeups, i can realize your love and affection towards penmai in the writings. I like to express my gratitude to you all for what you have done to Penmai!!! Once again, my heartfelt thanks to you all.

    Here is our contestants hits!!!

    Viswanathan,

    சுருக்கமாக சொன்னால், அடியேன் பெண்மையின் பங்கு பார்த்தால், சுமார் 2.52 சதவிதத்தில் தகவல்கள் பதிவு செய்து உள்ளேன். (அதாவது இப்போது 585353

    பதிவுகள் நடந்து உள்ளது.. அதில் என்னுடைய சிறிய பங்கு 14750 பதிவுகள். அதில் சதவிதத்தில் பார்த்தால் 2.52 சதவிதம்).

    இந்த பெண்மை இணையத்தளம் வரும் 2020 ஆம் ஆண்டில் உலகத்தின் ஓர் சிறந்த தமிழ் இணையத்தளமாக வர வேண்டும்..
    சதவிதத்தில் மூலம் உங்கள் பங்கை பெண்மையில் மிக அழுத்தமாக தெரிவித்து உள்ளீர்கள். பெண்மை இணையதளம் 2020ல் உலகத்தின் சிறந்த தமிழ் இணையத்தளமாக கொண்டு வர எங்களால் ஆன முயற்சியை எடுப்போம்.

    Lakshmi,
    This is the current website ranking... by webstatdomain.com
    Penmai.com is ranked 52,674 in the world (among the 30 million domains), a low rank means that this website gets lots of visitors. This site is relatively popular among users in the India. It gets 87.4% from India. This site has a good Pagerank(3/10). It has 437 backlinks. It's good for seo website. Penmai.com has 25% seo score.

    The Rank was above 150,000 when i checked a year or a year and a half ago.. Such a stupendous growth with the google page rank 3(lower the page rank, higher the popularity and security and the number of hits) really proves the hardwork and commitment of all the Penmai Team members and the evergreat members and guests and ofcourse ILAVARASI and SAKTHI.
    Thanks for sharing the report here and recognize our hard work & growth!!! We do our best in the future too to be in a good rank internationally. Real credit goes to all our members and moderators team.

    Gowrymohan,
    பெண்களுக்கு தேவையான சகல தகவல்களும் 'பெண்மை' இணையதளம் மூலம் பெறக்கூடியதாக இருக்கிறது என்பதே எனக்கு மிகவும் பிடித்தது. உதாரணமாக - பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவது, சந்தேகங்களை நீக்குவது போன்ற விடயங்கள் முக்கியமானவை. அத்துடன் நல்ல சிநேகிதர்களுடன் பொழுதுபோக்குகள், போட்டிகள் வழங்கி பெண்களின் தனிமையை, மன அழுத்தத்தைப் போக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கவிதை என்ற பெயரில் ஏதாவது எழுதவேண்டும் என்ற எனது நீண்டகால ஆசை 'பெண்மை' இணையதளத்தில் நிறைவேறியுள்ளது. சரியோ பிழையோ மனதில் தோன்றியதை தயக்கமின்றி எழுதும் தைரியத்தையும் மனநிறைவையும் 'பெண்மை' தந்துள்ளது. இதற்கு 'பெண்மை' தோழர், தோழியரின் ஊக்கமும் விமர்சனமுமே முக்கிய காரணங்களாகும்.

    2020 இல் பெண்மை மின் இதழ் மாதம் இருமுறை வெளிவர வேண்டும் எனவும், மாதாந்தம் கோலப்போட்டி, கவிதைப்போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி என மேலும் பல போட்டிகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் எதிர்பார்த்து வாழ்த்துகிறேன்.

    குறிப்பு: வெற்றி பெற்றவர்களுக்கு அழகான சிறிய வாழ்த்து அட்டைகள் பரிசாக அனுப்பினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
    உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கவித்திறமையை வெளிகொண்டுவந்ததில் பெண்மையின் பங்கை நினைத்து எங்களுக்கும் மகிழ்ச்சி.

    Personalized Gifts கொடுக்க நாங்களும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம், கூடிய சீக்கிரம் சிறந்த Personalized Gifts பெண்மையில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

    Mary daisy
    பெண்மையில் எனது கருத்துகளை பகிர்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை... எனது தோழிகளுக்கும் இந்த தளத்த பற்றி பகிர்ந்து கொண்டு அவர்களையும் சேர்த்து உள்ளேன்...

    உலக அறிவு, தன்னம்பிக்கை, எனது படைப்பு, தோழிகளின் அரவணைப்பு என நிறைய கிடைச்சது நினைச்சி பெருமை படறேன் ...

    அப்புறம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு குடுபிங்க... அந்த பரிசு வாங்கும் போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை...

    பெண்மை 2020!
    வெப் பேஜ் டிசைன் இன்னும் கொஞ்சம் அட்ராக்டிவா முடிஞ்சா மாற்றிக்கலாம்...
    உங்களது தோழிகளை இந்த தளத்தில் சேர்த்துள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி!!

    பரிசு என்பது உங்களது திறமைக்கு கிடைக்கபட்ட அங்கீகாரமே!! உண்மையான திறமைக்கு எவ்விடத்திலும் அங்கீகாரம் கிடைக்கும்... பெண்மையும் அதற்கு விதிவிலக்கல்ல. பரிசு பெறுவதில் உங்களுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறீர்களா அதே அளவு மகிழ்ச்சி உங்களுக்கு பரிசு கொடுக்கும் எங்களுக்கும் உண்டு.

    வெப் பேஜ் டிசைன் செய்யும் பொது color psychology, visitors nature, visual consistency எல்லாமே consider பண்ணி தான் வடிவமைக்கபட்டு உள்ளது. இரண்டு வருடத்திற்கு முன்னால் User Color Choice கொடுத்து இருந்தோம், அதில் சில compatibility problem இருந்ததால் அந்த feature எடுத்து விட்டோம், கூடிய விரைவில் User Color Choice கொடுப்போம். அதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த வண்ணத்திற்கு பெண்மை வலைப்பக்கத்தின் வண்ணத்தை மாற்றி கொள்ளலாம்.

    Naliniselva
    நெறைய உலக விஷயம், சமையல், அழகு குறிப்புகள், இப்படி சொல்லிகிட்டே போகலாம்... முக்கியமா நல்ல நட்பு
    எங்கள போல வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பெண்களுக்கு intha valaithalam periya vara pirasaatham nu thaan sollanum...

    என் படைப்புகளையும் அங்கிகரிச்சு e-magazineல போடுறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எப்பவும் அமைதியா வீட்டை பிரிந்து வந்த கவலையில் இருக்குற நான் இப்போ நம்ம friends சோட பேசிக்கிட்டு... புதுபுது சமையல் செய்து... சந்தோஷ மனநிலையோட இந்தியா ல இருக்குற feel ஓட எப்பவும் உற்சாகமா இருக்கேன்னு என் hubby யே சொல்றார்... அதுல எனக்கு பெருமை தான்.

    உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.
    நிச்சயமா என் திறமை மெருகேறி இருக்குன்னு தான் சொல்லுவேன், நாலு பேர் பார்த்து பாராட்டி நாம இன்னும் நல்ல செய்யணும் நு ஒரு ஊக்கத்த பெண்மை குடுக்குது... மத்த சமுக வலைத்தளம் போல வெறும் entertainment மட்டும் இல்லாம கவிதை, ஓவியம், craft வொர்க் நெறைய நான் இதுல கத்துகிட்டேன். நம்ம பெண்மை தோழிgal thread மூலம் நான் quilling வொர்க் கத்துகிட்டேன் .

    பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
    e-magazine monthly twice kudukkanum, neraya pottigal parisugal arivikkanum, 2020 la penmai.com தெரியாத ஆளே இருக்க கூடாது அந்த அளவு ரொம்ப பிரபலமாகனும்.
    வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு பெண்மை ஒரு வரப்பிராசாதம்னு நீங்க சொல்வதை கேட்கும் போது மிகவும் சந்தோசம்!! உங்கள் தனிமையை போக்கி, ஒரு குடும்ப சூழ்நிலையை உருவாக்கி, உற்சாகம் கொடுத்து, தனித்திறமையை பெண்மை வளர்த்திருக்கு என்று நினைக்கும் போது எங்களுக்கும் பெருமையாக உள்ளது.

    உங்களை போன்ற பல பெண்மை உறுப்பினர்களின் ஆதரவோடும், ஊக்குவிப்போடும் பெண்மை மின் இதழ் மற்றும் பெண்மை இன்னும் பல பரிமாணங்கள் எடுக்கும். அதற்கு தேவையான முயற்சிகளை நாங்களும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter