Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree898Likes

Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!


Discussions on "Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!" in "Special Contest" forum.


  1. #41
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Thenuraj
    எத்தனையோ புதுமுக எழுத்தாளர்களை எங்களுக்கும், உலகுக்கும் அறிமுக படுத்திய பெருமையும் பெண்மையையே சேரும்....

    2வது காரணம், நிறைய தோழிகளின் அறிமுகம்.... முகம் தெரியாத எத்தனையோ பேர் இப்போது எனக்கு தோழிகளாக மாறி விட்டனர். இது என்னை போன்ற அயல்நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு ஒரு வரப்ரசாதம்...

    3வது காரணம், என்னுடைய கற்பனை திறன் அதிகரித்து உள்ளது...எப்படினா கதைகளுக்கு கமெண்ட்ஸ் போடுவதன் மூலமா, அவர்களை உற்சாகபடுத்த வேண்டுமே, அதனால் எப்படி எல்லாம் சிறப்பாக கமெண்ட்ஸ் கொடுக்கலாம்னு நிறைய யோசிக்க வேண்டி இருக்கு..அதுவும் பிடித்து இருக்கு.

    4வது காரணம், முக்கியமானதும் கூட, அதுதாங்க "நீயா நானா". என்னுடைய கருத்துக்களை சொல்ல ஒரு நல்ல களம் அமைத்து கொடுத்த பெண்மைக்கு நன்றி...

    இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...பெண்மைல என்ன இல்லை, அரசியல் பேசணுமா, அழகு குறிப்புகள் வேண்டுமா, மருத்துவ குறிப்புகள் வேண்டுமா, சமையல் குறிப்புகள் வேண்டுமா, தோழிகளுடன் பேசணுமா, என்ன இல்லை இந்த பெண்மைல...இதனை சிறப்பு அம்சங்களுடன் இருக்கும் பெண்மையை யாருக்காவது பிடிக்காமல் போகுமா....இது எல்லாம்தான் எனக்கு பிடிக்க காரணம்...நிச்சயமாக என்னுடைய எழுத்து திறமை & கற்பனை திறன் அதிகரித்து இருக்கிறது....எத்தனையோ சொந்த பிரச்சனைகளால் மறந்து போன என்னுடைய கவிதை எழுதும் திறனை தட்டி எழுப்புகிறது....

    பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
    ஒரு முக்கியமான வேண்டுகோள், மருத்துவ குறிப்புகளை ஏதாவது ஒரு மருத்துவரை கொண்டு தர முடியுமா..? அவருடன் நாங்கள் நேரடியாக (chat) பேசி எங்கள் சந்தேகங்களை போக்கிக்கொள்ள உதவ வேண்டும்...

    நீங்க சொல்வது போல் நீயா? நானா?விற்கு பெண்மையில் நல்ல வரவேற்பு இருக்கிறது! சமூக அக்கறை கொண்ட பேச்சுக்கள், விவாதங்கள் மற்றும் கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக் கொள்ள ஒரு இடமாக இருக்கிறது. (Our Special thanks to Yamini who brought this concept to Penmai)

    மருத்துவ குறிப்புகளை மருத்துவர்களை கொண்டு தர நாங்கள் சில மருத்துவர்களை அணுகினோம் ஆனால் சில நடைமுறை மாற்றங்கள் தேவைப்பட்டது அதனால் அதனை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம், கூடிய விரைவில் மருத்துவர்கள் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு துறைக்கும் Experts வைத்து ஆலோசனை வழங்க நாங்கள் கண்டிப்பாக உதவுவோம்.

    Subhashree murali
    பெண்மையில் எனக்கு எல்லாமே பிடிக்கும் குறிப்பாக என்றால் “Today sms” & “Thought for the day” இவை இரண்டும் தான் காலையில் நான் முதலில் பார்ப்பது நல்ல நகைச்சுவையும் நல்ல கருத்துகளும் அந்த நாளை புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.

    எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் அதை விட முக்கியம் இங்கு உள்ள நண்பர்கள் மிகவும் அன்பாக நடந்துகொள்கிறார்கள் பொதுவாகவே இணையத்தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற ஐயம் இருக்கும் எனக்கு பெண்மையில் அந்த பயம் இல்லை இந்த முக்கிய காரணம்தான் நான் பெண்மையில் இருப்பதற்காக பெருமைப்படுகின்றேன்

    பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
    நிறைய போட்டிகளை எதிர்ப்பார்க்கிறேன் சிந்தனையை வளர்க்கும்படி இருக்கவேண்டுகிறேன் உலகளவில் பெண்மை வலம்வர வேண்டும்..
    நம் வாழ்க்கைக்கு எல்லாமே தேவை நகைச்சுவை, நட்பு, புத்துணர்ச்சி மற்றும் மிகமிக முக்கியமானது பாதுகாப்பு. இவை அனைத்துமே பெண்மையில் என்றுமே கிடைக்கும்!!!

    Angu aparna
    பெண்மை, மற்ற எல்லாவற்றையும் போல் ஒரு பொழுது போக்கு ஊடகமாக மட்டும் இல்லாமல், ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதத்தில் மெருகேத்திக்கிட்டு இருக்கு. இது ரொம்பவே பெருமைப் பட வேண்டிய விஷயம்.

    No words in any language are enough to express how grateful i am, for your being in my life.

    உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு
    என் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்குன்னு சொல்றதை விடவும், என்னோட Personal Life, Self Improvement & Personality Development ku பெண்மை எந்த விதத்தில் உதவி இருக்குன்னு சொல்ல விரும்பறேன். பெண்மை நிறைய பேர் அவங்களோட பிரச்சனைகளை சொல்லி தீர்வு கேகட்கும் போது, நமது பெண்மை தோழிகள் அல்லது தோழர்கள் சொல்லும் அறிவுரைகள், கருதுக்கள், பரிந்துரைகள் எல்லாமே ரொம்ப இயல்பாக அதே சமயம் சுலபமான தீர்வுகளையும் கொடுக்கறாங்க. சில நேரங்களில் அது நம்ம வாழ்க்கையில் கூட அந்த மாதிரியான பிரச்சினைகள் வந்து இருக்கலாம். ஆனால் அப்பொழுது அந்த சூழ்நிலையில் நாம அவசரத்தில், தவறான முடிவுகளையோ அல்லது பிரச்சினையை வளர்க்கிற மாதிரியான முடிவுகள் எடுத்து இருக்கலாம். அதே இப்போ வேற ஒரு நபர் அந்த பிரச்சினையை கேட்கும் போது, என்னால அந்த பிரச்சனைக்கு வெளியில இருந்து யோசிக்க முடியுது. இப்படி செய்யலாம், இந்த மாதிரி செஞ்சா இது ஒரு பிரச்சினையே இல்ல அப்படின்னு என்னால யோசிக்க முடியுது. சோ, என் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினை வரும் போதும், அந்த பிரச்சினைக்கு வெளிய இருந்து யோசிச்சு ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியுது. (பெண்மை வந்ததுக்கு அப்புறம் இந்த பக்குவம் என்கிட்டே நல்லாவே வந்து இருக்கு).

    பொறுமை, நிதானம், எதையும் அடுத்தவங்க நிலைல இருந்து யோசிச்சு பாக்கற தன்மை எல்லாமே பெண்மை வந்ததுக்கு அப்புறம் நான் எனக்குள்ள இருந்து வெளிக் கொண்டுவந்தது. பெண்மைக்கு முன் அபர்ணா பெண்மைக்கு பின் அபர்ணா அப்படின்னு சொல்ற அளவுக்கு என்கிட்டே நிறைய மாற்றங்கள். என் குடும்பத்தில இருக்கவங்க கூட இவளா இப்படின்னு பாக்கறாங்க. (எப்படி இருந்த அபர்ணா இப்படி ஆயிட்டேயே).

    எப்படி இருக்கணும்னு கத்துக்கிட்டதை விடவும் எப்படி இருக்க கூடாதுன்னு கத்துக்கிட்டது தான் அதிகம். நம் பெண்மை உறுப்பினர்கள் சொல்ற ஒவ்வொரு விஷயத்துலயும் ஒன்னை கத்துகிறேன். இதை செய்யலாம் இதை செய்யக் கூடாது.

    பள்ளிக் காலத்துலயும் சரி, கல்லூரி காலங்களிலும் சரி எனக்கு தாழ்வு மனப்பான்மை ரொம்பவே இருந்துச்சு. ஆனால் கண்டிப்பா இப்ப ஒரு துளி கூட இல்ல.

    அதுக்கு காரணம் பெண்மை தான். என்னால கண்டிப்பா முடியும், அப்படிங்கற அஸ்திவாரத்தை எனக்குள்ள போட்டது பெண்மை தான். இதுலயும் குறிப்பாக என்னுடைய பெண்மை தோழிகள் சிலருக்கு முக்கிய பங்கு இருக்கு.

    கடந்த காலத்தில சரியான ஊக்குவிப்பு இல்லாம நான் மிஸ் பண்ண பல விஷயங்களை பெண்மையின் மூலமா கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தி செஞ்சுட்டு வரேன்.

    அப்புறம் சமையல், எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். நிறைய புது புது உணவு வகைகள் செய்யக் கத்துகிட்டேன். வீட்டிலேயும் ட்ரை பண்ணி சில சமயங்களில், பாராட்டுகளையும் பல சமயங்களில் திட்டுகளையும் வாங்கி இருக்கேன். தினமும் புதுசா எதாவது கத்துகிட்டோமேன்னு சந்தோசப் பட்டுக்குவேன்.

    எப்பொழுது எல்லாம் பெண்மைக்கு உள்ள வரேனோ, கண்டிப்பா அன்றைக்கு எதாவது ஒரு புது விஷயம் தெரிஞ்சுக்காம என்ன வெளிய போக விட மாட்டங்ராங்க நம் பெண்மை தோழிகள்.

    பெண்மை 2020ல், நம் பெண்மை எப்படி இருக்க வேண்டும்:

    இப்பொழுது இருக்கும் வளர்ச்சியை விட கண்டிப்பாக ஒரு ஐம்பது மடங்கு வளர்ச்சி கண்டிப்பாக, இணைய உலகில் நம் பெண்மை இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னோட எதிர்பார்ப்பு என்னன்னா, இணையத்தையும் தாண்டி பெண்மை நம் சமுதாயத்துக்குள்ள வரணும். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, நம் பெண்மை நம் சமூகத்திற்கு Virtual ஆக இல்லாமல் Physical ஆக எதாவது ஆக்கப் பூர்வமான செயல்கள் செய்ய வேண்டும்.

    இப்பொழுது எப்படி, இந்த பிறந்த நாள் பரிசாக மரக்கன்று நட்டு வளர்ப்போம் என முடிவு எடுத்து உள்ளோமோ, (இது பெண்மைக்கு நாம் கொடுக்கும் பிறந்த நாள் பரிசு அல்ல, நாம், நம் சமுதாயத்திற்கு பெண்மையின் பிறந்த நாள் சார்பாக கொடுக்கப்படும் பரிசு என்பதே என் கருத்து) அதே போல் இன்னும் பலப்பல நாம் சமுதாயத்திற்கு பெண்மை மூலமாக செய்ய வேண்டும்.

    இணைய மக்கள் மட்டுமின்றி, இதர எல்லா தரப்பு மக்களும் படிக்க கூடிய வகையில் பெண்மை மின் இதழ் அச்சில் வர வேண்டும் என்பது எனது விருப்பம்.மாத இதழாகவோ அல்லது மாதம் இருமுறையோ சமூகத்தில் வலம் வர வேண்டும். அதே போல், பெண்மை மின் இதழ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித் தனியாக வந்தால் இன்னமும் நன்று.

    அதே போல் பெண்மையில் நிறைய பேர் இல்வாழ்க்கை, தாய்மை, குழந்தை வளர்ப்பு சம்மந்தமாக எல்லாம் நிறைய அறிவுரைகள் டிப்ஸ் எல்லாம் கொடுக்கறாங்க, அதை எல்லாம், ஒவ்வொன்றாக ஒரே தொகுப்பாக அனைவரின் கருத்துகளையும் அறிவுரைகளையும் பெண்மை மின் இதழ் போன்றே கொடுக்க முயலலாம்.

    அதாவது குழந்தை வளர்ப்பு அப்படின்னா, அது சம்மந்தமாக இருப்பதை எல்லாம் ஒரே PDF இல் கொடுக்கலாம்.

    பெண்மை சார்பில், New Year Gift ஆக Active உறுப்பினர்கள் அனைவருக்கு டைரி அனுப்பலாம். பல பல போட்டிகள், பல தரப்பு சார்ந்து வைக்கலாம்.

    நீ நான்னு போட்டி போட்டு, நம் பெண்மை தோழிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல Health Professionalists, Family & Relatioship Advicers, Counsellors, Pshycologists ஒரு சிலர் நம் பெண்மையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். Special ah Pregnancy, Parenting ku இருந்தால் நல்லா இருக்கும்.

    அதே போல் Students Ku Counselling, Technology Oriented Persons Guidance கிடைக்கற மாதிரி இருக்கனும்.

    இணைய உலகில் மட்டுமின்றி, இன்றைய நடப்பு உலகிலும் பெண்மையவள் புரட்சிகள் பலவும் புதுமைகள் பலவும் புகுத்திட வேண்டும் என்பதே என் விருப்பம்.
    என்ன இல்லை இந்த பெண்மையில், தேவையான அனைத்தும் இங்கே இருக்கிறது என்று ஆரம்பமே மிகவும் அமர்க்களமாக ஆரம்பித்துவிட்டீர்கள்.

    உண்மையாகவே Family & Relationship சம்மந்தமாக வழங்கிய அறிவுரைகள் அனைத்துமே அற்புதம், குடும்பத்தை மற்றும் உறவுகளை எப்படி நன்முறைப்படி எடுத்து செல்ல வேண்டும் என்பதை மிகவும் அழகாக சொல்லி இருந்தார்கள்.

    நட்பு கிடைப்பதே அரிது அதிலும், நல்ல உள்ளங்களின் நட்பு பெண்மையில் கிடைத்தது என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள்.

    Happy to know that Penmai helped in developing your Personal Life, Self Improvement & Personality Development.

    உங்கள் வாழ்வில் பிரச்சினைகளுக்கு முடிவு எடுக்க பெண்மை உங்களுக்கு கற்று கொடுத்துள்ளது என்பதை கேட்கும்போது மிகவும் சந்தோஷம். உண்மையிலேயே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது ஒரு கலை. பிரச்சினைகளை எப்பவுமே வெளிய இருந்து யோசிச்சா தான் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியும்.

    அவசரம், பதற்றம் காரணமாக மனிதன் வீழ்ந்து பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை எட்ட முடியாமல் தவிக்கிறான். பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப்படுவதை தவிர்த்து பொறுமையையாகவும், நிதானமாகவும் செயல்படுவதே சாலச்சிறந்தது.
    இது பலருக்கு தெரியாத ரகசியமும் கூட. இந்த பக்குவம் பெண்மை வந்த பிறகு உங்களுக்கு வந்திருக்கும் என்பது மிக்க மகிழ்ச்சி.

    "எப்படி இருக்கணும்னு கத்துக்கிட்டதை விடவும் எப்படி இருக்க கூடாதுன்னு கத்துக்கிட்டது தான் அதிகம்." That's really a great thing you learned here.

    பெண்மை மின் இதழ் அச்சில் வர வேண்டும், இல்வாழ்க்கை, தாய்மை, குழந்தை வளர்ப்பு போன்றவை ஒரே தொகுப்பாக PDF இல் கொடுப்பது, ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்கள் (Profesionalists) கொண்டு வந்து பதில் சொல்ல வைப்பது போன்ற கருத்துக்கள் அனைத்தும் நாங்கள் யோசித்து வைத்துள்ளது தான், அதற்கான முயற்சியிலும் உள்ளோம் காலம் கனிந்தால் அனைத்தையும் செயல்படுத்த முற்படுவோம்.



    Sponsored Links
    Last edited by Parasakthi; 25th May 2013 at 10:43 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #42
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Sudhavaidhi,
    முகம் தெரியாத எத்தனையோ பேர் இப்போது எனக்கு தோழிகளாக மாறி விட்டனர். இது என்னை போன்ற அயல்நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு ஒரு வரப்ரசாதம்...

    எங்கள போல வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பெண்களுக்கு இது பெரிய gift என்றுத்தான் சொல்லவேண்டும்.

    பெண்மையின் wishes forum இல் முகம் தெரியா பல பேர் அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தெரிவிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயம் பெண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    நாலு பேர் பார்த்து பாராட்டி நாம இன்னும் நல்ல செய்யணும்னு ஒரு ஊக்கத்த பெண்மை கொடுக்கிறது.
    முகம் தெரியாத பல நல்ல நட்பு உள்ளங்களின் பாராட்டுகள், வாழ்த்துக்கள், ஆசிர்வாதங்கள் எப்போதுமே மன நிறைவை தரும்.

    வெளிநாட்டில் வாழும் பெண்களுக்கு அவர்களின் தனிமையை போக்கி அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக பெண்மை மாற்றி உள்ளது என்பதறிந்து மிகவும் சந்தோசம்!!

    Kirthika
    இன்றும் நான் என் தோழிகள், உறவினர்கள், ஏன் சந்திக்கும் புது நபர்களிடம் கூட பெண்மை பற்றி கூற தயங்கியதில்லை.
    வீட்டில் பொழுது போகவில்லை என்று கூறுபவர்களிடம் நான் பெண்மையில் இணையுமாறு தைரியமாக பரிந்துரை செய்வேன்.
    இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள பாதுகாப்பு (security) மற்றும் தேவை இல்லாத மட்ட ரகமான கருத்துக்களை இங்கு எவரும் பதிவிடுவதும் இல்லை, பதிவிட அனுபதிப்பதும் இல்லை என்பதே ஆகும். இதுவே எனக்கு பிடித்த முதல் விஷயம்.

    இரண்டாவது அருமையான நம்பகமிக்க தோழிகள். இங்கு என் சந்தேகங்கள் போக்குவதற்கும், தெரியாத பல விடயங்களை தெரிந்து கொள்வதற்கும் இன்னும் சொல்ல போனால் அனைவருக்கும் மிக சிறந்த வழிகாட்டியாகவும் பெண்மை இருந்து வருகின்றது.

    பொதுவாக நான் கேட்க நினைபவற்றை முதலில் search l போட்டு தேடி பார்த்து விட்டு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே புதிதாக பதிவிடுவேன்.

    எனக்கு தேவைப்பட்ட 99 சதவிகித குறிப்புக்கள் (data)ஏற்கனவே பெண்மையில் அதிகமாக இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.
    இங்கு இல்லாத விடயங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்தையும் கொண்ட அட்சய பாத்திரமாக பெண்மை விளங்குகிறது.

    மேலும் நான் பெண்மையில் இணைந்த பிறகு இதை போன்ற மேலும் ஒரு சில forum-கலை பார்த்திருக்கிறேன். அனால் இங்கு மட்டுமே ஒரு positive ஆனா பதிவுகள் அதிகம் உள்ளது. எடுத்துகாட்டாக ஒரு forumல் மாமியாரின் கொடுமைகளை பற்றி கூறுவதற்காகவே ஒரு தனி பதிவை பார்த்து மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
    இங்கு அது போன்ற எதிர்மறை எண்ணங்களை பகிர்த்து கொள்ளும் போக்கு இல்லாமல் இருப்பது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று.
    போட்டி போட்டு கொண்டு நல்ல விஷயங்களை பகிரும் பொழுது இயற்கையாகவே நம்மை சுற்றி நல்ல எண்ண அலைகள் சுற்றி இருக்கும்.

    பெண்மையில் இல்லை என்ற வார்த்தையே இல்லை எனலாம்.அந்த அளவிற்கு திருமணத்தில் தொடங்கி குடும்பம் உறவுகளின் மேன்மை, கர்பக்காலம், பிள்ளை பிறப்பு, பிள்ளை வளர்ப்பு என்று தொடங்கி, உடல்நலம், அழகு, பொழுது போக்கு, கல்வி வேலை வாய்ப்பு வரையிலும் அணைத்து விடயங்களும் ஒரே இடத்தில கிடைக்கும் பெண்மையில் இருப்பது எனக்கு பெருமையே!!

    ஒரு விஷயம் தேவை படும் பொழுது இணையத்தில் தேடி கண்டுபிடித்து விடலாம், ஓராயிரம் விளக்கங்களும் கிடைக்கும், அனால் அத்தனையும் ஒரு அனுபவசாளியிடம் இருந்து அவர் வார்த்தைகளின் மூலமாக அறிந்து கொள்வதற்கு நிச்சயமாக ஈடாகாது.
    இது என் அனுபவத்தில் கண்டு உணர்ந்த ஒரு விடயம். அப்படிபட்ட அனுபவஸ்தர்கள் நிறைந்த பெண்மையில் இருப்பது எனக்கு பெருமையே!!

    தினம் தினம் நடக்கும் செய்திகளில் இருந்து (தங்கம் விலை உட்பட), வாய் விட்டு சிரிக்க நகைச்சுவை துணுக்குகள், பல ஊர்களை பற்றிய செய்திகள், புது புது வகையான உணவுகள் என அனைத்தையும் கொண்ட பெண்மை யில் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு மிகவும் பெருமையே.

    2. உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.
    இரண்டாவதாக ஒரு விஷயத்தை கோர்வையாக எழுத கற்று தந்தது பெண்மை மட்டுமே, இங்கு உள்ள எழுத்துக்களை படித்து நாமும் முயற்சிக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது பெண்மையால் மட்டுமே.
    நிச்சயம் இந்த பொறி மென் மேலும் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    பெண்மை 2020!
    1. பெண்மை 2020ல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
    என்னை பொறுத்த வரை பெண்மை இன்றே தரத்தில் No.1 என்றே கருதுகிறேன்.
    எனவே இந்த தரம் கெடாமல் நல்ல விஷயங்களை மட்டுமே கொண்ட ஒரு வலை தளமாகவே 2020 லும் பெண்மை இருக்க வேண்டும்/இருக்கும்.

    இன்று பற்பல எழுத்தாளர்கள் பெண்மை யால் உருவாகி கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் நிச்சயம்மாக பலர் நல்ல நிலைக்கு உயர்ந்து பெண்மை யின் புகழை எடுத்து சொல்லும் காலம் 2020குள்ளேயே வந்துவிடும் நிச்சயமாக!!
    பெண்மையின் சிறப்பம்சங்கள் எல்லாமே ரொம்ப அழகாவும் தெளிவாகவும் எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்!

    இந்த இணையம் உருவாக்கும் போது எங்களிடம் இருந்த லட்சியம் என்னவோ, அந்த லட்சியம் நிறைவேற்றி கொண்டு நம் பெண்மை வலம் வந்து கொண்டு இருப்பதை உங்கள் வார்த்தைகள் பிரதிபலிக்கக் காண்கிறோம்.

    உங்கள் அனைவரின் உறுதுணையோடும் எங்களின் முயற்சியோடும் பெண்மை 2020ல் பெண்மை மிக தரமான மற்றும் சிறந்த தளமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    பல புதிய படைப்பாளிகளையும் உருவாக்கியதிலும், உலகிற்கு அடையாளம் காட்டியதிலும் பெண்மை உவகை கொள்கிறது.

    Vijivedachalam
    அம்மாவா? அக்காவா? தங்கையா? தோழியா? யாரம்மா நீ எனக்கு ? என்னை மகிழ்விக்கும் கற்பக விருட்சம் அம்மா நீ...
    நவீன உலகின் அழகு தேவதையே
    உன்னிடம் எனக்கு பிடித்தது என்னவென்று சொல்வதம்மா?

    உலகில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நாட்டில் பூத்த நறுமண மலர்களை நீ சேர்த்து பூந்தோட்டமாக மாற்றிவிட்டாயே. அதனால் உன்னை பிடிக்கும் ஆதரவற்று வரும் பெண்களுக்கு,தாய்ப்போல ஆறுதல் கூறும் தோழமைகளை பார்த்து மெய் சிலிர்த்து நிற்ப்பேன் .அது எனக்கு பிடிக்கும்.
    சமையல் அறைக்கு தண்ணீர் குடிக்க மட்டுமே சென்ற நான் இன்று சமையலில் கில்லாடி என்று பெயர் வாங்கியது உன்னால் தானே .. தனி திரி அமைத்து எனக்கு சமையல் சொல்லி கொடுத்த உன்னை எனக்கு பிடிக்கும்.
    குழந்தை பற்றி என் மனதில் ஆயிரம் கேள்விகளோடு நான் online யில் surf செய்த போது தான் பெண்மையை முதல் முறையாக பார்த்தேன் ....

    என் பெயரை பதிவு செய்து உள்ளே நுழைந்ததும் ,எனக்கு நீ கொடுத்த வரவேற்ப்பை நான் இன்றும் பசுமையாக உணருகிறேன்

    நான் பெண்மையில் இருப்பதற்கு ஏன் பெருமைபடுகிறேன் என்றால், பாதுகாப்பு உணர்வு தான் முக்கிய காரணம். கல்யாணமான பெண்கள் நாங்கள் இவ்வளவு நம்பிக்கையாக உலா வருகிறோம் என்றால் முழுக்க முழுக்க நீ கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு தான்... அதனால் மனத்தால் பெருமைப்படுகிறேன் ....

    வெவ்வேறு websiteகளில் chatting,dating என்று கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது ....ஆனால் நீ தாய்மை,நட்பு, சமையல், ஆன்மிகம், கதைகள், குழந்தை பராப்மரிப்பு என்று மேன்மையான பகிர்வுகளை மட்டும் கொடுத்து எங்கள் எண்ணங்களை சிதற விடாமல் பாதுகாக்கின்றாயே,அதனால் நான் உன்னோடு இருப்பதை பெருமையாகவே நினைக்கின்றேன்

    modernism என்ற போர்வையில்லாமல் homely ஆக இருக்கும் பெண்மையை பார்த்து பெருமைப்படுகின்றேன் என் எண்ணங்களை பிரதிப்பளிக்கும் பெண்மையே, நீயும் என் குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டாய்.

    உங்கள் தனித் திறமையை வளர்த்ததில் பெண்மையின் பங்கு.

    எனக்கு கவி எழுதும் திறமையை வளர்த்தது பெண்மை நீதானம்மா வார்த்தைகளை தொடுத்து கவி மாலையை முதலில் உனக்கே சமர்பித்தேன் அதன் விளைவாக,இன்று "விஜியின் கவிதை சாரல்கள்" உயிர் பெற்றது .

    கற்பனை வளம் அனைவருக்கும் உண்டு ஆனால் ஊக்கமில்லாமல் அந்த கற்பனையை வளர்க்க முடியாது.....நீ கொடுத்த ஊக்கம் இன்று "லட்சிய பூக்கள்" என்ற் அழகிய கதையை என் தோழிகளோடு சேர்ந்து படைத்துக் கொண்டிருக்கின்றேன் .....

    வாதாடும் திறமை இருந்தும் பார்வையாளராக இருந்த எனக்கு ஊகம் கொடுத்து என்னை "நீயா நானா"வில் பங்கேற்க செய்து இரண்டு முறை பரிசும் பெற்றேனே இப்படி என்னுள் புதைந்திருந்த திறமையை வளர்ப்பதற்க்கு நீயே அடித்தளமாக இருந்தாயே

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என் தனிமையை பொக்கிய ஒர் அற்புதமான உறவு நீ அல்லவோ .... கண்ணிற்கு தெரிந்தும் உருவமில்லா உன்னை ,நான் பார்க்கிறேன் என் நம்பிக்கையின் ஆணிவேராக என்றும் என்னுடன் நீ துணை வர என் கரம் நீட்டுகிறேன்.........உன் கரம் கொடுப்பாயா ?

    பெண்மை 2020ல் பெண்மை எப்படி இருக்க வேண்டும்

    பெண்களின் தாய் வீடாக இருக்க வேண்டும் பெண்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு கூகுள் போல இருக்க வேண்டும் astrology thread வேண்டும்..அதில் நிறைய தகவல்கள் இடம் பெற வேண்டும்.

    modernism இல்ல இல்லா homely website ஆக இருப்பது தான் பெனமியின் அழகு ..அந்த அழகு மாறாமல் என்றும் இளமையோடு இருக்க வேண்டும் .... பெண்களின் வெலை வாய்ப்பிற்கு பெண்மை முன் நின்று உதவ வேண்டும், பெண்கள் வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகள் பெற திரிகளை உருவாக்க வேண்டும், பெண்களின் நாடி துடிப்பாக இருக்க வேண்டும் இன்று போல் என்று பேறும் புகழோடு விளங்க வேண்டும், பெண்மை மின்னிதழ் பெண்மை வார இதழாக தமிழகம் முழுவதும் உலா வரவேண்டும்
    மிகவும் அழகாக, எளிமையாக, கவித்துவமாக உங்கள் எண்ணக் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள். ஒரு கற்பக விருட்சமாக பெண்மையை நீங்க உருவக படுத்தியமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.

    பெண்மையை பூந்தோட்டமாக மாற்றிய பெருமைகள் அனைத்தும் நம் உறுப்பினர்களையே சேரும். "Unity in Diversity" நாங்களே பார்த்து பெருமை படுகிற விஷயம்...

    உங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு உணர்வு மென்மேலும் இந்த தளத்தில் குறையாதவாறு இருக்கும்!

    "modernism என்ற போர்வையில்லாமல் homely" ரொம்ப அழகா சொல்லி இருக்கிறீர்கள் விஜி!

    ஏற்கனவே சொன்னது போல பெண்மை மின் இதழை மேலும் மெருகூட்டி கொடுப்போம்!

    வேலை வாய்ப்புகள் சம்பந்தமாக ஏற்கனவே threads இருந்தாலும், அவற்றில் சில உயிர்ப்புடன் இல்லை, அவற்றை இனி வரும் நாட்களில் நன்றாக எடுத்து வர முயற்சிகளை செய்வோம்.


    Last edited by Parasakthi; 25th May 2013 at 10:46 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #43
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    gkarti@Karthika
    It is a really huge platform for information exchange. Eccentric type of members is a part of Penmai now. It includes students, old veterans, working class women, house wives, every kind of people can be found here. The important that is they are willing to help other fellow members in any possible way. I think the efficiency of the moderation at Penmai is what made a huge success.

    And it’s guiding the new members in their own unique styles mostly because they want to give back something to this platform. Members here are all volunteers who have put up their hand and agreed to share the responsibility. Penmai has no doubt evolved into a multi-dimensional platform for people of all age groups. There are simply too many things in the website which are more than enough to inspire young people. We people, have insane amounts of energy and hence it needs to be channelized in the proper way. I really think Penmai is the best option.

    Yeah, within this short span of my time here, I have certainly developed a love affair with Penmai!!

    Membership - self disciplined!
    Content - Useful to different segments of people!
    Site construction - simple easy to navigate!
    Reputation- Good!
    Trust - Trustworthy for our purpose!
    Reward - Reasonably acceptable!
    Admin guidelines and establishment - Transparent and non-complicated to possible extent!
    Moderation- To the bare minimum and depending on self moderation!
    Overall feeling- a sense of belonging as a decent group!!

    I Love its dedication and hard work and have taken us to newer conceptions of life too. Penmai’s rules drive us, Penmai’s regulations discipline us, Penmai’s contests uplift us and Penmai’s awards motivate us!

    Its,
    - a teacher when I have doubt.
    - a platform when I want to express myself
    - a place where I can share my knowledge
    - a place to meet new friends
    - a place to tell everyone about my school and college
    - a place to evaluate myself
    - a place where I get appreciated for my achievements
    - a place to tell people about the place I belong to
    - a place to list my town
    - a place to write my feelings regarding anything

    In short it is a new friend that listens to me when I say something, a friend that suggests me when I am in trouble, a friend that gives me extra Energy when I need it and a place to make countless friends.

    I also believe that Penmai is very good platform for those who want to improve their writing skills. I was never fond of writing, but now I cannot resist myself from writing. The day I explored here, I could not stop myself from becoming the member of this group. I would give lot of thanks to team, for developing such a wonderful site where people like me can utilize their talent and time. One can not only improve the writing skills, but also learn valuable information from here.

    I am benefitted by discussions. I became very courageous and bold to write my own feeling on any subject that I come across. There are some things that money just cannot buy, like manners, morals and intelligence.

    I myself felt - am a perfect Girl with all the six senses in perfect state. I would give lot of applauds to Penmai!!

    Wouldn't it be great to see with Penmai Rankings in the top 50,000+. From there, we can work towards it getting into the top ranks beginning with 10000...then 5000...then in 2020 – Its be in 1000...not an impossible goal considering the vast number of members.

    What We should do is start a strong promotional campaign of not the site alone but of individual posts too. Make liberal use of the share buttons at the bottom of resource articles and forum posts. Share links of posts at Google+, Facebook, Twitter, personal blogs, public forum sites, etc. Don't just share our own posts. If We come across any post liked, share it with all & sundry.

    Wish to increase Penmai’s rankings nationally and internationally.Cheers!!
    Karthiga, You expressed your love towards us in an admirable way!!!

    Youth's power is great, it needs to be channelized in the proper way. Much needed for this young generation! We feel happy that Penmai channelized your energy and others too in a proper way. We do it in the future too.

    Pleased to know that, you become very courageous and bold to wrote your own feelings. That's the inspiration towards empowerment of women community, and our motive too towards the women community.

    And more over thanks for your understandings with rules and regulations and valuing it here.

    Really good points regarding strong promotional campaign by sharing buttons sure our members too will do it.

    Coming to the winner,
    Our juries voted equal points to some contestants, i think it was really tough in selecting the best one.

    Here is the winner according to their votes,
    Angu Aparna & gKarti got equal votes and stands in the very first position.
    Kirthika99 & Vijivedachalam also got equal votes and stands second position.

    Congrats dears!! Thanks for expressing Penmai in a nice way with your suggestions.

    Here is our gift to Angu aparna and Gkarti @ Kartiga...

    Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!-jewellery-box2.jpg


    Please send your Indian Postal Address with the Phone no to Parasakthi, through PM.

    Last edited by Parasakthi; 25th May 2013 at 10:48 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #44
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Few things i had noted from all your write-ups and like to discuss the same,

    1. Will try our best to have a Professionalists or Experts here to the relevant forum to give advice.

    2. Security - Hmm many loved to stay here in Penmai - since they feel Penmai is very much secured. We maintain the same too, but still need your cooperation to find out the offenders.

    Please PM us or mail us to admin@penmai.com or support@penmai.com, if you get any offending messages from other members, or regarding self-promotional messages or other messages regarding other sites advertisement through private messages etc., please forward it to us.

    3. We will maintain the rules and regulations strictly to keep up the site morality. Though we faced tough time while handling the members, when they are going beyond the limits of rules and regulations. We will follow the rules strictly to keep away the weeds (who disturb the inner peace of the site) from
    the sites.

    A request to all members please be polite and humble in all discussions - Treat others the way you want to be treated.

    We need your co-operation all time to fulfill and maintain our Standards.


    Last edited by Parasakthi; 25th May 2013 at 10:57 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #45
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Wowww...Congrats dear Karti ma and Aparna....

    Congrats to kirthika99 and Viji dear too...

    Thanks to Ilavarasi Madam for running this beautiful website!





  6. #46
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    congrats aparna an gkarthi....

    Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!-tumblr_lmtbu6ozug1qktay4o1_400.jpg




    நளினி



  7. #47
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    congrats viji & karkuzhali....
    Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!-14171419-beautiful-bouquet-bright-wildflowers-basket-isolated-white-1-.jpg




    நளினி



  8. #48
    mgrbaskaran's Avatar
    mgrbaskaran is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    baskaran
    Gender
    Male
    Join Date
    Oct 2011
    Location
    london
    Posts
    4,101
    Blog Entries
    76

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Quote Originally Posted by naliniselva View Post
    congrats viji & karkuzhali....
    Click image for larger version. 

Name:	14171419-beautiful-bouquet-of-bright-wildflowers-in-basket-isolated-on-white (1).jpg 
Views:	51 
Size:	163.9 KB 
ID:	107496
    congrats.....


    என்றென்றும்

    அன்புடன்

    உங்கள்

    கரவை பாஸ்கரன்


    KARAVAIPAASKARANIN NINAIVALAIGAL

    KARAVAIPAASKARANIN NINAIVALAIGAL COMMENTS

    mgrbaskaran- BLOGS


  9. #49
    gayathri_doll's Avatar
    gayathri_doll is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Bangalore
    Posts
    307

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    ரொம்ப நிறைவா இருக்கு friends!!!

    பெண்மைல நான் அறிமுக மானதே என் ரூம் மேட்டாலதான் ....

    என்னோட கவிதைகளுக்கும்,
    அப்பப்போ நான் போஸ்ட் பண்ற கதைகளுக்கும்
    நல்ல response கிடைக்கும் போது
    சந்தோஷமாவும்,உற்சாகமாவும் இருக்கு

    யோசிக்க முடியாத,ஆனா ரொம்ப useful ஆன விஷயங்கள் எல்லாம் நான் கத்துகிட்டு இருக்கேன் ,தெரிஞ்சுகிறேன்

    ஒவ்வொருத்தரோட திறமைகளை வெளி கொண்டு வர ஒரு நல்ல தூண்டு கோலா இருக்கு நம்ம பெண்மை
    எல்லாருக்கும் நன்றி சொல்லி
    பெண்மைக்கும் வாழ்த்து சொல்லி தொடருகிறேன்
    என் இனிய தமிழ் பயணத்தை ......!!

    Gayathri

  10. #50
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: Penmai 5th Birthday Contest - Penmai Today! vs Penmai 2020!

    Hi Aparna & gkarthi,

    dears.






    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter