Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree748Likes

Penmai's Special Father's Day Contest


Discussions on "Penmai's Special Father's Day Contest" in "Special Contest" forum.


  1. #41
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Penmai's Special Father's Day Contest

    அப்பா

    நான் பிறந்த அடுத்த நொடியில்
    மனம் நிம்மதியில் பூரிப்பு
    அடைந்தால் என் அன்னை.
    என் தந்தையோ !
    அடுத்த நொடியில் இருந்து
    அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
    எனக்கு என்று வாழ தொடங்கினர்
    அவருக்கான
    பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
    எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
    அவருக்கு ஆனாது
    எத்தனையோ
    சந்தர்ப்பங்களில் உங்களை
    நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
    இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
    ஆம்
    சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
    நடை பழகிய பொழுதில்
    தடுக்கி விழுந்து இருக்கிறேன்
    அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
    தாங்கி பிடித்தது என்னை

    பின் நடை பழகிய பின்னும்
    நான் உங்கள் கை பிடித்து
    நடந்து இல்லை
    என் இந்த இடைவெளி?

    உங்கள் சந்தோஷங்களை மறைத்துகொண்டு
    எங்கள் சந்தோஷங்கள்
    உங்கள் சந்தோஷமாக மாற்றிகொண்டிர்கள்
    எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன
    உங்களுக்கும் ,எனக்கும்
    உள்ள இடைவெளியின் இருந்த
    அர்த்தம் இப்பொழுதில்
    புரிந்துகொண்டேன் .......
    அந்த இடைவெளி தான் எனது
    முன்னேற்றம் என்றும் ...

    உங்கள் கை பிடித்து நடக்க
    ஆசைப்பட்ட ,நான்
    உங்கள் கை பிடிக்க ஓடிவந்தது தான்
    என் வாழக்கை என்றும் !

    இவ்வளவும் செய்த அந்த கடவுள்
    என்னை பெண்ணாக பிறக்க செய்ததை
    எண்ணி வருத்துகிறேன்
    உங்களை விட்டு பிரிய வேண்டுமே என்று
    அடுத்த பிறவிளவது
    என்னை ஆணாக பிறக்க செய்து
    உங்கள் இடைவெளியில் முன்னேற்றம்
    அடைந்த என் வாழக்கையில்
    நீங்கள் உங்கள் முதுமையில்
    வாழந்திட இறைவனை
    வேண்டுகிறேன்


    இந்த கவிதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்

    Penmai's Special Father's Day Contest-graphics-fathers-day-904092.gif
    (Divya)



    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #42
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Father's Day Contest

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi Femila, our advanced birthday wishes to your dad......

    Thank u very much... & will convey ur wishes to my papa... mam..



    My Stories : CLICK CLICK




  3. #43
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Father's Day Contest

    Quote Originally Posted by saranyaraj View Post
    ஹாய்.. ப்ரிண்ட்ஸ்...

    இந்த போஸ்ட் பார்த்தவுடன் என்னால் பகிர்ந்துக்காமா இருக்க முடியலை..

    என் அப்போவோடு என் நினைவுகளை பற்றி...

    சிறுவயதில் இருந்து ஒரே பெண் (ஒரு அண்ணன் இருக்கான் அது வேற.. பெண் குட்டி நான் மட்டுமே..) அப்படின்னு ரொம்ப செல்லம்.. எது கேட்டாலும் உடனே கிடைக்கும்.. எங்க வீட்டுக்கு மட்டுமில்லமா எங்க அத்தை மாமா, அப்போவோட நண்பர்கள் இப்படி எல்லோருமே ரொம்ப செல்லம் கொடுத்து கொடுத்து கெட்டு போன பொண்ணு..


    நான் ஒருத்தருக்கு சின்ன வயதில் பயபடுவேன் என்றால் அது அப்பாவுக்கு தான்... பேசவே மாட்டார் ஆனா கண்களால் பார்த்தாவே பயந்துடுவேன்.. அப்பா வேலைக்காய் அதிகமான நாட்கள் வெளியே தான் இருப்பார்.. அவர் வரும் சமயம் புல்லெட் சத்தம் கேட்கும்.. உடனே புத்தகமும் கையுமா சமத்தா உட்கார்ந்துடுவேன்..

    அப்படி ஸ்ட்ரிக்ட் ஆபீசர் அப்படின்னு நாங்களே நினைத்து கொள்வோம்.. அந்த வயதில் அவர் அப்படி ஓடிக் கொண்டிருந்தார்.. எங்களோடு நேரம் செலவளிக்க முடியவில்லை.. ஆனால் கேட்டது எல்லாம் கிடைக்கும்..

    இன்னும் நினைவில் இருக்கு.. எங்க வீட்டின் ஏர் குலர் மீது நோட்டு புத்தகமும் பணமும் இருக்கும்.. வேணும் போது எடுத்துக் கொண்டு எதற்காய் எடுத்தேன் என்று குறிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார் அந்த ஆறு வயதில்.. அது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பொதுவான விதி.. அந்த வயதிலே எப்படி செலவழிப்பது, எது வீண் செலவு என்றும், கணக்கை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்..

    அவரும் நிறைய செய்வார்.. ஆனால் ஏதோ வாரத்தில் ஒரு நாள் இரண்டு நாள் பார்பவரின் மீது பயம் கலந்த மரியாதை வருமே அதே மாதிரி தான் எங்களுக்கும் இருந்தது..

    சில சமயம் அம்மாவிடம் சொல்லுவாராம், இரண்டும் என்னிடம் ஓட்டவே மாட்டங்குதென்று... அதனால், அவர் வெளியே செல்லும் வேலைககளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார்..

    எங்களுக்காய் நிறைய நேரத்தை ஒதுக்கினார்..

    அப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு வந்தது... எங்களை படியென்று எங்கள் வீட்டில் யாரும் சொன்னதில்லை.. அப்பாவை பொறுத்தவரை, பள்ளியில் படிப்பதே போதுமானது.. வீட்டில் படித்து கஷ்டப்பட வேண்டியதில்லை என்பார்.. நன்றாக விளையாடு, நிறைய பொதுஅறிவு சார்ந்த புக் படி என்று அவரின் புத்தகங்களை தருவார்..

    அதோடு சில சமயம் அவர் சாண்டில்யனின் கதைகளையும் கல்கியின் கதைகளையும் உணர்வு பூர்வமாக சொல்வார்.. இன்னும் நினைவில் இருக்கிறது அவர் சொன்ன கடல் புறா கதையின் கத்தி வீச்சு.. தளபதி ராஜாவை நாட்டிய ஆரங்கத்தில் காக்கும் நிகழ்வு.. படத்தில் பார்த்து நினைவில் கொள்வதை விட அவர் சொன்னதில் அவரின் கற்பனை அதிகமாய் ஈர்த்து எங்களை அதில் ஆழ்த்தியது....

    அந்த சமயம் தான் கொஞ்சமாய் கொஞ்சமாய் அவரிடம் ஈடுபாடு தோன்ற ஆரம்பித்தது... (என்னடா இவ... கதையா எழுதற அப்படின்னு நினைக்காதிங்க... டியர்ஸ்...)..

    நானும் கொஞ்சம் நல்லாவே படிப்பேன்.. நல்ல மார்க் எடுத்து, என்ட்ரன்ஸ் எல்லாம் எழுதி அரசு கல்லூரியில் தொழில் நுட்ப கல்வி கிடைக்க, போக மாட்டேன் என்று சொல்லி, ஊரில் உள்ள கல்லூரியில் தான் சேர்வேன் என்று அடம்பிடித்தேன்..

    அதற்கு காரணம் வேறொன்றுமில்லை.. ஹோச்டேல சேர்ப்பேன் என்று சொன்னாங்க.. நமக்கு தான் வீட்டில் ராஜா வாழ்க்கை..அதை விட்டு எப்படி போக முடியும் சொல்லுங்க... அப்போது வரை எனக்கு தலைக்கு குளித்து விடுவதில் இருந்து சாப்பாடு ஊட்டி விடுவது வரை அம்மாவும் அத்தையும் செய்வார்கள்.. அதோடு லீவ் நாள் அப்படினா அப்போவோட ப்ரிண்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க...அபப்டி இருக்க நான் எப்படி ஹொஸ்டலில் போய் சேருவது.. சொல்லுங்க.. இந்த சுகம் எல்லாம் அங்கே கிடைக்குமா...

    ஒரே பிடிவாதம் தான்.. எல்லோரும் திட்டும் போதும்.. அப்பா "உன் இஷ்டம்... ஆனால் என்ன படிக்கணும்.. அப்படின்னு நீயே முடிவு செய்.. உன் வாழ்க்கை உன் முடிவு.." என்று சொல்லிவிட்டார்..

    அவரை பொறுத்தவரை மற்றவர் விருப்பங்களில் தலையிட கூடாது என நினைப்பார்.. அதனால் என் விருப்பபடியே அனைத்தும் நடந்தது..

    ஆனால் அப்பா அம்மாவிடம் அவளை அவள் வேலைகளை தனியாக செய்து பழக்கு என்று சொன்னார்.. ரொம்ப பெரிய வேலையெல்லாம் இல்லை.. நானே சாப்பிடறது.. தலை சீவுவது...காலேஜ் பாக் நானே எடுத்துட்டு பஸ் ஏறுவது அது மாதிரி தான்.. இதுக்கே இந்த பில்ட்-அப்னா கேட்காதிங்க.. என்னோட எல்லா உறவினரும் ஒரே இடத்தில் அருகருகே இருப்பதால், எனக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டியதில்லாமல் போய் விட்டது..

    நான் அதுவரை படித்தது பெண்கள் மட்டுமே இருக்கும் பள்ளி.. அதனால் நான் பெண்கள் கல்லூரியை தேர்தெடுக்க, அப்பாவோ என்னை இருபாலர் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் தான் சேர்ப்பேன் என்று சொல்லி சேர்த்தார்..

    அப்போது தான் இருவரும் சமநிலை என்பதை உணர முடியும்... அதோடு அனைவரை பற்றியும் அறிய முடியும் என்று சொல்லி சேர்த்தார்.. அது மாதிரி தான் நடந்தது.. எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வளர்ந்தது..

    கிணற்றில் வாழும் தவளை போல் இல்லாமல் இருக்க, தினமும் நிறைய கதை பேசுவார்..

    அவர், தன்னுடைய இளவயதில் இருந்து, ஒவ்வொரு நாளும் எப்படி கழிந்தது, எத்தனை பிரச்சனைகள், எப்படி தீர்த்தார் என்றெல்லாம் கதை கதையாய் பேசுவார்.. எந்த நிலையிலும் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லமால், கதையை சொல்லிவிட்டு, இதற்கு நீ என்ன தீர்வு செய்ய நினைப்பாய் என்று கேள்வியாய் முதலில் கேட்பார்.. சிந்திக்க வைத்தார்..

    இப்படியே போக, மேற்படிப்புக்கு வெளியூர் தான் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்.. அதுவும் நல்ல பெரிய கல்லூரியில் தான் உன் முயற்சியில் பெற வேண்டும் என்று கூறிவிட்டார்..

    ஒவ்வொரு முறையும் கிழே விழும் போது கை கொடுத்தார்.. ஆனால் நீயே முயற்சி செய்து எழு என்பார்..

    அதனால் தான் என்னவோ அவர் நினைத்தது போல் மேற்படிப்பு படிக்க வெளியே வந்தேன்.. என்னவொரு மாற்றம் மூன்று ஆண்டுகளில்...

    புது ஊர், தனிமையான வாழ்க்கை, என் வாழ்க்கை என்று என்னை ஒவ்வொன்றையும் உணரச் செய்தார்.. எப்படி வாழ வேண்டும் என்று பழக சொன்னார்...

    இப்பவும், உன்னுடைய வாழ்வு உன் கையில் என்று சொல்லி, பின்னிருந்து நம்பிக்கை அளித்து கொண்டே இருக்கிறார்..

    அவர்களால் தான் நான் இந்த அளவு வந்தது..

    அவர் மட்டுமில்லை.. அப்பாவோடு அம்மாவை பிரித்தே பார்க்க முடியாது.. இருவருமே காரணம் என்றாலும் அம்மா அமைதியாய் ஆறுதல் அளிப்பார்.. அப்பா எப்படி இருக்க வேண்டும் என்று எங்களுக்கு வழி வகுத்து கொடுத்தார்..

    அன்பு, அறிவு, வாழ்க்கை முறை, நியதி என அனைத்தையும் கற்று தந்த குருவும் அவரே...

    அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்... அப்பாவின் நினைவுகள் என்பது என்னுளே இதயத்தில் உளி கொண்டு செதுக்கப்பட்ட நிகழ்வுகள்..
    அது என்றும் மறக்காது..


    அப்பா...
    உங்களை பற்றி என்ன சொல்வது என யோசிக்க தேவையில்லை எனக்கு...
    ஏனெனில் எனது யாதுமாகி இருந்து எங்களை வழி நடத்துவது நீங்கள் தான்...

    உங்களின் சிரிப்பும், கனிவு பேச்சும் தான் எங்களை இந்த அளவு வரவைத்து இருக்கிறது..

    உங்களுக்கு நன்றி என்று எதையும் சொல்ல இயலாது..

    ஆனால்

    அடுத்த ஜென்மமென்று ஓன்று இருந்தால் அதிலும் உங்களுக்கும் அம்மாவுக்குமே நான் மகளாக பிறக்க வேண்டும் என்ற பிராத்தனையோடு இந்த பகுதியை முடித்து கொள்கிறேன்...

    romba yetharthama sollirukeenga dear.. surely will confirm ur wishes to my papa ma...



    My Stories : CLICK CLICK




  4. #44
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Penmai's Special Father's Day Contest

    Hi Friends, very nice thread .....Thank you Ilavarasi Mam...



    Lakshmi, Snofy, Priya, Gowry, Krithika, Saran, Suji ,femila எல்லாரும் சொல்லவதை கேட்டு ரொம்ப நெகிழுச்சியா இருக்கு.....எனது அப்பாவைப் பற்றியும், ஒரு அப்பா எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய எனது கருத்துக்களை பகிர என்னக்கும் ஆசை தான் ...ஆனால் விதி வல்லியது ...என் சிறு வயதிலேயே என் தந்தையை இழந்துவிட்டேன் ....


    எல்லாருடைய பகிர்வுகளையும் பார்க்கும் பொது என்னக்கும் ஆசையாக உள்ளது .....

    நன்றி தோழிகளே ...உங்கள் எல்லோரின் பகிர்வு வழியாக.. என் தந்தையை காண்கிறேன் ............



  5. #45
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai's Special Father's Day Contest

    My dad is the best dad in this universe
    I love you dad


    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #46
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai's Special Father's Day Contest

    பெண்மை தோழமைகள் அனைவருக்கும் வணக்கங்கள்.

    அப்பா - அம்மா ஒரு மந்திரச்சொல் என்றே சொல்லலாம்... அத்தனை சக்தி வாய்ந்தது. நாம் இன்று வாழும் வாழ்வில், நம் எண்ணத்தின் பிரதிபலிப்பில் இவர்களின் ஆளுமை குணம் நம்மை அறியாமலே பெரிதும் மேலோங்கி இருக்கும். மனிதனின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாய் விளங்கும் அன்பும், அறிவும் மற்றும் பிள்ளைகளை பாதுகாப்புடன் வளர்க்கும் பொறுப்பும் பெற்றோரை மட்டுமே சாரும்!!

    குழந்தையை எப்படி வளரக்கூடாது; எப்படி வளர்க்க வேண்டும் என்று பின்வரும் வாசகங்கள் எளிமையாக விளக்கும்,
    குறைக் கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
    அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது
    கேலிச் செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
    அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளியாகிறது
    ஊக்கவிக்கப்படும் குழந்தை மனத்திண்மை பெறுகிறது
    புகழப்படும் குழந்தை பிறரை மெச்ச கற்றுக்கொள்கிறது
    நேர்மையோடு வளர்க்கப்படும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது
    பாதுகாக்கப்புடன் வளர்க்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
    நல்ல நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்கிறது.

    இப்படி ஒரு குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்குவதில் பெற்றோரின் பங்கே அதிகம். அதிலும் தந்தையின் கூடுதல் கவனமும், பாசமும், புரிதல் உணர்வும் குழந்தைகளுக்கு கிடைக்கும் பட்சத்தில், நம் குழந்தைகள் மேலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

    "ஒரு குழந்தை பிறக்கும் போது கூடவே ஒரு தகப்பனும் தாயும் பிறக்கிறார்கள்"!!! - இது தந்தை மகளின் பாசத்தை மையமாக வைத்து வந்த அபியும் நானும் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு வாசகம். எவ்வளவு உண்மையான வரிகள்.

    தந்தையர் தினத்தை முன்னிட்டு, பெண்மையின் சார்பில் நடத்தப்பட்ட "Fathers Day Special Contest" ல் பங்கெடுத்துக்கொண்ட அனைவருமே மிகவும் சிறப்பான மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் அப்பா என்ற உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உங்கள் அனைவரது கருத்துக்கள் மூலம் அற்புதமாக பகிர்ந்துகொண்டீர்கள்...

    Though all your write-ups on your dad is excellent some of them missed to state down the Top 10 qualities of being a good father.

    It's time for announcing the winner of the contest.
    Kirthika99@Karkuzhali got maximum votes from our juries and won the contest, Sujibenzic@Sujana stands next to her.

    Congratulations Karkuzhali!!! Here is a gift for you Handmade Kumkum Box!!!

    Penmai's Special Father's Day Contest-kumkum-box.jpg




    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #47
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Penmai's Special Father's Day Contest

    பெண்மையின் நண்பர்கள் கார்குழலி சண்முகம் மற்றும் சுஜானா வாழ்க!



    (மன்னிக்கவும், இங்கு இணைப்பு பகுதி வேலை செய்யவில்லை, ஆகையால் நாளையில் பூங்கொத்து கொடுக்கிறேன்)



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #48
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Thumbs up Re: Penmai's Special Father's Day Contest

    Congrats to winner . . . !!!!

    Quote Originally Posted by Penmai View Post
    பெண்மை தோழமைகள் அனைவருக்கும் வணக்கங்கள்.

    அப்பா - அம்மா ஒரு மந்திரச்சொல் என்றே சொல்லலாம்... அத்தனை சக்தி வாய்ந்தது. நாம் இன்று வாழும் வாழ்வில், நம் எண்ணத்தின் பிரதிபலிப்பில் இவர்களின் ஆளுமை குணம் நம்மை அறியாமலே பெரிதும் மேலோங்கி இருக்கும். மனிதனின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாய் விளங்கும் அன்பும், அறிவும் மற்றும் பிள்ளைகளை பாதுகாப்புடன் வளர்க்கும் பொறுப்பும் பெற்றோரை மட்டுமே சாரும்!!

    குழந்தையை எப்படி வளரக்கூடாது; எப்படி வளர்க்க வேண்டும் என்று பின்வரும் வாசகங்கள் எளிமையாக விளக்கும்,
    குறைக் கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
    அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது
    கேலிச் செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
    அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளியாகிறது
    ஊக்கவிக்கப்படும் குழந்தை மனத்திண்மை பெறுகிறது
    புகழப்படும் குழந்தை பிறரை மெச்ச கற்றுக்கொள்கிறது
    நேர்மையோடு வளர்க்கப்படும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது
    பாதுகாக்கப்புடன் வளர்க்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
    நல்ல நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்கிறது.

    இப்படி ஒரு குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்குவதில் பெற்றோரின் பங்கே அதிகம். அதிலும் தந்தையின் கூடுதல் கவனமும், பாசமும், புரிதல் உணர்வும் குழந்தைகளுக்கு கிடைக்கும் பட்சத்தில், நம் குழந்தைகள் மேலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

    "ஒரு குழந்தை பிறக்கும் போது கூடவே ஒரு தகப்பனும் தாயும் பிறக்கிறார்கள்"!!! - இது தந்தை மகளின் பாசத்தை மையமாக வைத்து வந்த அபியும் நானும் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு வாசகம். எவ்வளவு உண்மையான வரிகள்.

    தந்தையர் தினத்தை முன்னிட்டு, பெண்மையின் சார்பில் நடத்தப்பட்ட "Fathers Day Special Contest" ல் பங்கெடுத்துக்கொண்ட அனைவருமே மிகவும் சிறப்பான மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் அப்பா என்ற உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உங்கள் அனைவரது கருத்துக்கள் மூலம் அற்புதமாக பகிர்ந்துகொண்டீர்கள்...

    Though all your write-ups on your dad is excellent some of them missed to state down the Top 10 qualities of being a good father.

    It's time for announcing the winner of the contest.
    Kirthika99@Karkuzhali got maximum votes from our juries and won the contest, Sujibenzic@Sujana stands next to her.

    Congratulations Karkuzhali!!! Here is a gift for you Handmade Kumkum Box!!!

    Click image for larger version. 

Name:	Kumkum Box.JPG 
Views:	40 
Size:	67.3 KB 
ID:	111446




    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Special Father's Day Contest-717556.jpg   Penmai's Special Father's Day Contest-ladu.jpg   Penmai's Special Father's Day Contest-halwa_p.jpg  

  9. #49
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Penmai's Special Father's Day Contest

    Hearty Congratulations Kirthi for winning the contest


  10. #50
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,146

    Re: Penmai's Special Father's Day Contest

    Congrats Kirthi You deserved it!

    Congrats to you too Suju


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter