Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree388Likes

Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!


Discussions on "Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!" in "Special Contest" forum.


 1. #11
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  My support to Mr. Suriya.
  My suggestion is all the educational istitutions must be nationalised like banks/transport.


  Sponsored Links

  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 2. #12
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,451
  Blog Entries
  1787

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  சூப்பர் செஞ்சி நாட்டாமை!

  Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!-smileys-applause-801735.gif


  Parasakthi, surya, jv_66 and 1 others like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 3. #13
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  இந்தப் போட்டியில் கல்விமுறையை தேர்ந்தெடுத்து எனது கருத்துக்களை கூற விரும்புகிறேன். இந்திய நாட்டில் நடைமுறையில் இருக்கும் கல்விமுறை எனக்கு தெரியாத காரணத்தால் பொதுவான கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். ஏதாவது பிழை இருந்தால் மன்னிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.


  முன்பு ஒரு ஆசிரியரே எல்லாப் பாடங்களையும் கற்பிப்பார். சிறிய கட்டிடம், குறைந்த வசதிகள், குறைவான அளவு மாணவர்கள், மக்கள் தொகையும் குறைவு, நிறைந்த அறிவு. குரு சிஷ்யன் என்ற முறையில் ஒழுக்கத்துடன் எல்லா அறிவும் சிறப்பாக முறையாக பெறப்பட்டது. உதாரணமாக கட்டிடங்கள் கட்டும் மேஸ்திரி, அதற்குரிய படிப்பை கல்லூரிகளில் படித்துப் பெறவில்லை. உறுதியான கட்டிடங்கள் முறைப்படி கட்டி புகழ் பெற்றிருக்கிறார்கள்.

  இன்று பெரிய பெரிய பாடசாலைகள், நிறைந்த நவீன வசதிகள், அதிக மாணவர்கள் ஆனால் குறைந்த அறிவுடன் பிள்ளைகள். அத்துடன் பணம் படைத்தவர்களுக்குத்தான் கல்வி என்றாகிப்போனது. ஊழல் நிறைந்த சமுதாயம் புற்றுநோய் போல எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. பணத்திற்கே முதலிடம் என்றாகிவிட்டது. பணம் கொடுத்து பட்டம் பெரும் காலம் வந்துவிட்டது. ஏழைப் பிள்ளைகள் சிறு வயதிலேயே உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிவிட்டார்கள்.

  இந்தப் போக்கை மாற்றியமைக்க எடுக்கும் நடவடிக்கைகளாக நான் கருதுபவை;

  அரசாங்கம்

  * பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசமயமாக்குதல்.
  * கட்டணங்களை இல்லாதொழித்து அரச மானியங்களை கல்வி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல்.
  * பாடசாலைப் புத்தகங்கள், சீருடைகளை இலவசமாக வழங்குதல்.
  * ஐந்து வயதை அடையும் ஒவ்வொரு குழந்தையும் பாடசாலை செல்வதை கட்டாயமாக்குதல்.
  * பிள்ளைகள் தமது நிரந்தர இருப்பிடத்திற்கு அருகே இருக்கும் பாடசாலையில்தான் கல்வி கற்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குதல்.
  * வாழ்க்கைக்கு அடிப்படையாகத் தேவையான தமிழ், கணிதம் கட்டாய பாடமாக்குதல் வேண்டும். இவற்றில் சித்தியடைந்தால்தான் அடுத்த வகுப்புக்கு அனுமதி வழங்கல்.
  * ஆங்கிலத்தில் திறமைச் சித்தி பெற்றவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் அனுமதி வழங்கல்.
  * தமிழ், ஆங்கிலப் போட்டிகள் (பேச்சு, கட்டுரை, பாட்டு, நடனம், நாடகம், ....), விளையாட்டுப் போட்டிகள் பாடசாலை மட்டங்களில் நடாத்தி பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தல்.
  * என்ன வேலைக்கு செல்வதாயினும் (வீட்டு வேலைகள், கூலி வேலைகள் ....) ஆகக் குறைந்தது 10 ஆம் வகுப்புவரை கல்வி கற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்தல்.
  * தற்போது நிலவும் பலாத்காரம், சீரழிவுகளைத் தடுக்கும் நோக்கில், ஆரம்பக் கல்வியிலிருந்தே வாழ்க்கைக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், அடுத்தவர்களுடன் (ஆண், பெண் வேறுபாடு) பழகும் முறை, தீய நடவடிக்கைகளால் பிற்காலத்தில் ஏற்படும் உடல், உள ரீதியிலான விளைவுகள், தலைகுனிவுகள் போன்ற அறிவுரைகளை ஒரு பாடமாக (வாழ்க்கைப் பாடம்) நடாத்துதல்.
  * லஞ்சம் கொடுத்து பட்டம் பெறுபவர்களுக்கும் லஞ்சம் வாங்குபவர்களுக்கும் கடும் தண்டனை வழங்குதல்.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 24th Jul 2014 at 04:18 PM.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 4. #14
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  சமுதாயம்

  ஒவ்வொரு ஊரிலும் அபிவிருத்தி சபை/சங்கம் உருவாக்கி, பணம் படைத்தவர்கள், நல்லெண்ணம் கொண்டோர்களுடைய உதவியுடன் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

  * வாசிகசாலை (library) அமைத்து அங்கு பொது அறிவைப் பெரும் நோக்குடன் தினப் பத்திரிகைகள், கல்விக்குத் தேவையான பயிற்சிப் புத்தகங்களை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு தேவைக்கேற்ப வைத்திருத்தல்.
  * சமய நிகழ்வுகளில் கலை நிகழ்ச்சி, போட்டிகள் நடாத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல்.
  * விடுமுறை நாட்களில் மேற்படிப்பு படிப்போர் கீழ் வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்களை தீர்த்து உதவிசெய்தல்.
  * பாடசாலையில் கல்வியில் முதல் இடத்தில் உள்ள மாணவருக்கும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவருக்கும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல்.
  * ஏழை மாணவர்களில் பாடங்களில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுப்பவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கி உதவி செய்தல்.
  * பாடசாலைக்கு செல்லாதிருக்கும் மாணவர்களை இனங்கண்டு தகுந்த நடவடிக்கை எடுத்தல்.
  * சத்துணவுக்குத் தேவையானவற்றை அரசிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு வழங்குதல்.


  தனிமனிதன்

  * பெற்றோர் தம் சுகம் பாராது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்கு ஏற்ற சூழலை வீட்டில் உருவாக்கிக் கொடுத்தல் - நாடகம், வானொலி, வாக்குவாதம் செய்தல் போன்றவற்றை பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் தவிர்த்து அமைதி காத்தல்.
  * எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளின் படிப்பை தடைசெய்யாதிருத்தல்.
  * ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று கவனித்து அவர்களுக்கு ஊக்கமளித்தல்.
  * இடையிடையே தாய்/தந்தை பாடசாலைக்குச் சென்று பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை அறிந்து அதற்கேற்ப செயல்படல்.
  * பாடங்களை தெரிவுசெய்வதில் அறிவுரை கூறி பின் முழு சுதந்திரம் கொடுத்தல்.
  * ஆசிரியர்கள் இன, மத, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பாராது மாணவர்களை வழிநடத்துவது மிகவும் முக்கியமாகும்.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 24th Jul 2014 at 04:18 PM.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 5. #15
  ankkn's Avatar
  ankkn is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  chennai
  Posts
  47

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  அனைவருக்கும்வணக்கம்!
  கொடுக்கப்பட்டஇந்தமூன்றுதலைப்புகளைபடித்தமாத்திரத்திலேயேமனதில்தோன்றியது "சுற்றுச்சூழல்" என்றதலைப்புதான்.
  சுற்றுச்சூழல்என்பதுகடவுளால்படைக்கப்பட்டஇயற்கை. இந்தஉலகத்தின்அனைத்துஉயிரினங்களுக்கும்பொதுவானதாககடவுள்அளித்தஒன்றுமனிதன்இந்தஉலகத்தின்ஒருஉயிரினம்மட்டுமே. ஆனால்அவன்தனக்குகொடுக்கப்பட்டசக்தியால்இந்தஉலகத்தையேசீரழித்துகொண்டுஇருப்பதுதான்உண்மை. எத்தனையோசமூகஆர்வலர்கள்இருந்தாலும்அவர்களும்இந்தசுற்றுச்சூழலைசீரழித்துகொண்டுஇருகிறார்கள்என்றுதான்சொல்லவேண்டும். சமுதாயம்அரசியல்என்பதுஅனைத்தும்மனிதனால்அவன்சுயநலத்திற்காகஉருவாக்கப்பட்டஒன்று.
  இந்தஉலகத்தின்எந்தஉயிரினமும்தான்வாழ்வதற்காகஇந்தசுற்றுச்சூழலைசீரழிப்பதில்லைடார்வினின்இயற்கைதத்துவம் "survival of the fittest" என்பதன்அடிப்படையில், தான்உயிர்வாழ்வதற்காகமட்டுமேஅடுத்தஉயிரினத்தைசாப்பிடும்ஆனால்மனிதஉயிரினம்மட்டும்தான்தேவைஇல்லாதபகட்டானஆடம்பரவாழ்விற்காகவும்அந்தஸ்து , கெளரவம்என்றபோலிவார்தைகளுகக்காகவும்அனைத்துஉயிரினங்களையும்அழித்துகொண்டுஇருக்கிறான்.
  உயிரினங்களைமட்டும்அழிப்பதோடுஅவன்நின்றுவிடவில்லைஅவன்ஆறாவதுஅறிவிலிருந்துகண்டுபிடித்தபடைப்புகள்என்றபெயரில்அவன்பயன்படுத்திவரும்பொருட்களினால்இந்தஉலகையேஅழித்துகொண்டுஇருக்கிறான்என்பதுதான்நிதர்சனமானஉண்மை.
  சக்கரத்தில்தொடங்கியதுமனிதனின்கண்டுபிடிப்புகள்என்பார்கள். ஆனால்அதுதான்இன்றுஇந்தஉலகத்தின்அழிவிற்குஆதாரமாய்வடிவெடுத்துள்ளதுஎன்றால்அதுமிகைஇல்லை
  .
  மனிதன் தான் திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதற்காக ஓசோன் மண்டலத்தில் ஓட்டையும் போட்டு விட்டான்.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 24th Jul 2014 at 04:19 PM.

 6. #16
  ankkn's Avatar
  ankkn is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  chennai
  Posts
  47

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  சுற்றுச்சூழல்என்றுநினைக்கையிலேயேநினைவுக்குகிராமப்புறங்களைவிவரிக்கும்எழுத்தாளர்கள்தான்எனக்குநினைவுக்குவருகின்றார்கள். "பச்சைபசுமைபோர்த்தியவயல்வெளி, சலசலத்துஓடிவரும்நீரோடை, அதில்துள்ளிவிளையாடும்கெண்டைகள், மேலேவிரிந்துகிடக்கும்நீலவானம், அதன்முடிவில்ஓங்கிஉயர்ந்துநிற்கும்மலை, அதன்அடியேமனம்பரப்பிவிரிந்துஇருக்கும்மரங்கள்அம்மலையின்நடுவேமறைகின்றசூரியன், அந்தமரங்களைசுற்றிகூப்பாடுபோட்டுதனதுகுழந்தைகளைதேடித்ரிரியும்சிட்டுகுருவிகள்".
  இப்படிஒருகாட்சியைஇன்றுஎங்கேயாவதுபார்க்கமுடியுமாஎன்றுமட்டும்சற்றுசிந்தித்துபாருங்கள்! நமதுகற்பனையிலோஅல்லதுதோட்டாதரணிஅவர்கள்போடும்செயற்கைசெட்களில்தான்பார்க்கமுடியும்.

  இவ்வாறுஇருந்தசுற்றுச்சூழல்எங்கேபோனது. கொடுத்தகடவுள்எடுத்துகொண்டார? இல்லை. அதைமனிதன்அழித்துவிட்டான். "எத்தனைகோடிஇன்பம்வைத்தாய்எங்கள்இறைவா!" என்றுவியந்துபாடினானேஅந்தபாரதி. எங்கேசென்றதுஅந்தஇன்பம். இன்றையஇளைஞர்களைகேளுங்கள், எதுஇன்பம்இன்று. கைபேசியையும்கணினியையும்சொகுசுவண்டிகளில்வருவதும்இன்பம்என்றுபாடுவான்.
  ஆனால்அந்தகைபெசிகளினாலும்கணினியாலும்இந்தஉலகிருக்குகிடைத்ததுஎன்னஎன்றுசிந்தித்துபார்த்தல்தெரியும். சிட்டுக்குருவிகளைகூண்டோடுஒழித்தோம். சில்வண்டுகளின்சத்தத்தைமறந்தோம். காற்றின்ஈரப்பதத்தைஉறிஞ்சிஎடுத்தேவிட்டோம்.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 24th Jul 2014 at 04:19 PM.

 7. #17
  ankkn's Avatar
  ankkn is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  chennai
  Posts
  47

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  பிளாஸ்டிக் என்ற பகாசுரன் எந்த சிவபெருமானிடம் வரம் வாங்கி வந்தானோ இந்த உலகத்தை சாம்பலாக்கும் வரை எந்த சிவபெருமானும் வதம் செய்ய வருவதாக தெரியவில்லை.
  . கடலும் பொங்கி எழுந்தது பூமியும் வெடித்து சிதறுகிறது பனி பாறையும் நதியானது நதியும் மண்ணானது மண்ணும் மலடானது. காற்றும் கரிமிலமானது. எதைதான் விட்டு வைத்திருக்கிறான் மனிதன். தனது சுயநலத்திற்காகவும் பகட்டு படாடோபதிர்காகவும், இந்த உலகத்தை அழித்து கொண்டு இருக்கிறான். இயற்கையும் தனது கோபத்தை அவ்வபோது வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கின்றது
  இருந்தாலும் தன குழந்தையான மனிதனை மன்னித்து கொண்டு இருப்பதால் மனித உயிரினம் இன்றும் இந்த மண்ணில் ஜீவித்து வருகின்றது அதனை புரிந்து மனிதன் திருந்தி இயற்கை வழியில் வாழ்ந்து தன் இயற்கை தாயை காப்பாற்றும் வரை இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கும்.


 8. #18
  ankkn's Avatar
  ankkn is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  chennai
  Posts
  47

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  மிருகத்தைபோலசுற்றிதிருந்துஇயற்கைவாழமுடியவில்லைஎன்றாலும், முடிந்தவரைமின்சாரத்தைதவிர்த்திடுவோம்இயற்கைநமக்குகொடுத்தமழைநீர், காற்று, வெளிச்சம்மண், மரங்களைபாதுகாக்கவிழைந்திடுவோம்.

  முடிந்தவரைஇயற்கைவளங்களுக்குநம்மால்முயன்றவரைசேதம்விளைவிக்கமலவதுஇருந்திடுவோம்.
  நம்மால்இயன்றமிகசாதாரணவிஷயங்களைபின்பற்றமுடிந்தாலேஅதுஇயற்கைவழிவாழநம்மைவழிவகுக்கும். என்சிற்றறிவுக்குஎட்டியசிலவிஷயங்களைஇங்கேபகிர்கின்றேன்தோழிகள்தங்களதுஎண்ணங்களையும்பட்டியலில்சேர்க்குமாறுகேட்டுகொள்கிறேன்.

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
  HERE.


  Last edited by gkarti; 24th Jul 2014 at 04:20 PM.

 9. #19
  ankkn's Avatar
  ankkn is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  chennai
  Posts
  47

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  பகல் நேரங்களிலேயே மின்விளக்குகளை பயன்படுத்தாமல் இருப்பது
  முடிந்தவரை வீடுகளை காற்றோட்டமாக வைத்திருப்பது மின்விசிறிகள், குளிர்விப்பான் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது
  இயற்கையான காய்கறி, பழங்களை பயன்படுத்துவது
  செயற்கை உரங்களால் ஆனவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க விரும்புபர்கள் வீட்டிலேயே சிறிய அளவிலான தோட்டங்களை பராமரிக்கலாம்.
  தண்ணீரை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது
  சுத்தம் என்ற பேரில் தேவை இல்லாமல் தண்ணீரை வீனகுவதை தவிர்த்தல்
  குழந்தைகளுக்கு சுற்றுசூழலின் அவசியத்தை சிறு வயது முதல் கற்று கொடுத்தல் எல்லாவற்றையும் விட மிக
  முக்கியமானது. நாளைய சந்ததியினருக்கு சொத்து சுகங்களை விட முக்கியமாக நாம் விட்டு செல்ல வேண்டியது இந்த உலகத்தின் வாழ்வாதாரம் தண்ணீர்.
  அதனை பாதுகாக்கவும், வீனடிக்கமலும் இருக்க வேண்டியது மிக அவசியம்.
  நடக்கும் தூரதிருக்கும் வண்டி வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல்
  இவை என் எண்ணத்தில் தோன்றிய சில விஷயங்கள். இன்னும் பலவற்றை தோழிகளை பட்டியலிட கேட்டு கொள்கிறேன்.

  இதனை வெறும் போட்டிக்கான கட்டுரையாக பாராமல், நாளைய சந்ததியினருக்காக நாம் விட்டு செல்ல வேண்டிய பொறுப்பாக நினைக்குமாறு கேட்டு கொண்டு, இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
  வாய்மை சேர்ப்பது தாய் முளை பாலடா!
  கலி அழிப்பது பெண்கள் அரமடா
  உயிரை சேர்த்திடும் உயிரினை காத்திடும் கழியினும் இந்த பெண்மை இனிதடா!

  வாழ்க பெண்மை! வளர்க அவளது புகழ்!

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 24th Jul 2014 at 04:19 PM.

 10. #20
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,110

  Re: Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

  Kalakkitinga Gowry Kaa & Anknn


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter