Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree838Likes

Penmai Special Contest - Short Story Contest


Discussions on "Penmai Special Contest - Short Story Contest" in "Special Contest" forum.


 1. #11
  Real Name
  Malathy
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Malaysia
  Posts
  47

  Smile Re: Penmai Special Contest - Short Story Contest

  ஏம்மா… நீதான் நல்ல கம்ப்யூட்டர் படிச்சிரிக்கியே… அப்படியே “ஃபேஸ்புக்குலேயோ” இல்ல “ஓன்லைன் மேட்ச் மேக்கிங்லயோ ஒரு மாப்பிள்ளைய பார்த்துக்கோயேன்மா… எனக்கும் அம்மாக்கும் வயசாகுதுல…” என்ற தந்தையின் புலம்பலுக்குத் தன் புன்னகையைப் பதிலாக தந்தாள் வெண்ணிலா. அறிவில் சிறந்து விளங்கியவள் அழகில் சுமார்தான். கருப்பாக இருந்தாலும் நல்ல கலையான முகம் கொண்டவள். இதனால் தான் வரன் வருவது தாமதமாகி முப்பதையும் தொட்டு விட்டாள். வெண்ணிலா கொடைக்கானல் மதர் திரேசா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறாள். “ம்ம்ம்… அப்பா சொன்னதைக் கேட்டுதான் பார்ப்போமே…” என்று எண்ணியவள் அன்றிரவே, ‘ஓன் லைன் மேட்ச் மேக்கிங்’ இணையத்தளத்தில் தன்னுடைய விவரங்களோடு படத்தையும் பதிவேற்றம் செய்தாள்.

  மறுநாளே, வெண்ணிலாவின் மெயிலுக்கு ஒரு வரன் பதிலளித்திருந்தது அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியைத் தந்தது. அந்த வரனின் பெயர் அருண், வயது 36, ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றுவதாக அழகனின் படத்தோடு தகவல் இருந்தது. மைனஸ் புள்ளிகள் என்னவென்றால் அருண் மனைவியை இழந்தவர் என்பதும் 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது என்பதும்தான். 30-ஐ தாண்டிய வெண்ணிலாவிற்கு மனைவியை இழந்தவரைத் திருமணம் செய்வதில் மறுப்பேதும் இல்லை. வெண்ணிலா பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்தாள்… அம்மாவிற்குச் சிறிது வருத்தம்… இரண்டாம் தாரம் என்று… அப்பாவிற்கோ சிறு ஆறுதல்… மகளுக்குத் துணை கிடைத்துவிட்டதென்று…

  சில மெயில் பரிமாற்றங்களுக்குப் பிறகு அவளுக்கும் அருணைப் பிடித்துப் போனதால் அன்பு மட்டுமல்ல தொலைபேசி எண்ணும் பரிமாறப்பட்டன. வெண்ணிலா தொலைபேசி எண்ணைக் கொடுத்த அடுத்த கணமே அவளது தொலைபேசி அலறியது… “என்ன ??? நோ நம்பருன்னு இருக்குதே???” என்று எண்ணியவாறு “ஹலோ” என்றாள். மறுமுனையிலிருந்து கம்பீரமான குரல் “ஹலோ, ஐ’ம் அருண்” என்றது. பதில் பேச இயலாதவாறு மகிழ்ச்சியில் நாக்கு ஒட்டிக்கொண்டது. தனது முதிர் கன்னி நிலையில் முதல் ஆடவனின் முதல் காதல் அழைப்பு. இன்பத்தில் திளைத்தவாறு அச்சம், மடம், நாணத்தோடு அருணின் ஆங்கில கேள்விகளுக்குப் பதிலளித்தாள். தான் நெடுநாட்களாக ஆஸ்திரேலியாவில் இருந்ததால் தமிழ் பேச வராதென்றும் வெண்ணிலா சொல்லிக் கொடுத்தால் தான் தமிழைக் கற்றுக் கொள்வதாகவும் அருண் கூறினான்.

  வெண்ணிலாவிற்கு,
  இவன்தானா... இவன்தானா ...மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
  பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
  உனதானேன் நான் உனதானேன்”
  என்ற வரிகள் தனக்காக எழுதப்பட்டது போல் தோன்றியது.

  அருணுக்கும் வெண்ணிலாவின் மென்மையான பெண்மை நிரம்ப பிடித்துப் போனது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்களது காதல் வளர்ந்தது. திடீரென்று ஒருநாள், தனக்குத் தன் தேவதையைப் பார்க்க ஆவல் அதிகமாவதாக அருண் தெரிவித்தான். வெண்ணிலாவைச் சுற்றி பாரதிராஜாவின் கனவு தேவதைகள் ‘தம் தன தம் தன’ என்று பாட ஆரம்பித்தன. அருண் தன் குழந்தையோடும் தமக்கை குடும்பத்தோடும் வந்து திருமணத்தை முடித்துக் கொண்டு வெண்ணிலாவை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறினான். வெண்ணிலாவுக்கு தன் பெற்றோரையும் கொடைக்கானலையும் விட்டு ஆஸ்திரேலியா செல்ல விருப்பமில்லை. தன் உள்ளங் கவர்ந்த நாயகனின் கெஞ்சலுக்குச் செவி சாய்த்து சம்மதம் தெரிவித்தாள்.

  அருண் தொலைபேசி வாயிலாக அன்பு முத்தங்களை வாரி இறைத்தான். சிவந்த முகத்தோடு தொலைபேசியைக் ‘கட்’ பண்ணினாள் வெண்ணிலா. மீண்டும் தொடர்பு கொண்ட அருண், தொலைபேசியைக் கட் பண்ணின வெண்ணிலாவை உரிமையோடு கோபித்துக் கொண்டான். தன்னால் 10,000 டோலருக்கு மேல் எடுத்து வர இயலாததால் பணத்தைக் கூரியரில் அனுப்ப வெண்ணிலாவின் இல்ல முகவரியையோ பாங்க் அக்கௌண்ட் எண்ணையோ மெயில் பண்ணச் சொல்லி காதல் முத்திரைகளோடு அருண் தொலைபேசியை வைத்தான்.
  வெண்ணிலாவிற்கு அருண் அவ்வளவு பணத்தை எடுத்து வருவதில் உடன் பாட்டில்லை. “சரி… லேட்டாகிவிட்டது… இதைப் பற்றி அருணிடம் நாளை பேசவேண்டும்” என்ற எண்ணத்தில் அருண் கேட்ட தகவல்களை மெயில் பண்ணத் தவறிவிட்டாள்.

  எப்பொழுது மதியம் அழைக்கும் அருண் அன்று காலையிலேயே அழைத்தான். தகவல்கள் மெயிலில் வரவில்லை என்று செல்லச்சண்டை போட்டான். வகுப்பு முடிந்த பிறகு அனுப்புவதாக வெண்ணிலா உறுதியளித்த பின்தான் தொடர்பைத் துண்டித்தான்.
  எப்பொழுதும் போல்“ காக்க கனக வேல் காக்க… நோக்க நோக்க நொடியில் நோக்க” என்று பாடியவாறு கம்ப்யூட்டரைத் திறக்க முற்பட்ட வெண்ணிலாவால் கம்ப்யூட்டரைத் திறக்க முடியவில்லை. ஆதலால், தன் தோழியின் கம்ப்யூட்டரைத் அவளது அனுமதியோடு வெண்ணிலா திறந்தாள். கம்ப்யூட்டர் திரையில் “டேட்டிங் ஸ்கேம்” என்ற ஃபோல்டரைப் பார்த்து, “என்ன மீனா? நீயும் என்னைப் போல் காதல் வலையில் சிக்கிக்கொண்டாயா???” என்று சிரித்தவாறே மெயிலைத் திறக்க முற்பட்டாள். அதற்கு மீனாவோ, “இல்லக்கா… இது இண்டர்நெட்டில் பெண்களுக்கு வலை விரித்து அவர்களின் சொத்துகளை நல்லவன் போல் ஏமாற்றி அபகரிக்கும் ஒரு குழுவின் செயல்களைப் பற்றியது. நீங்களும் பாருங்களேன்…” என்றுரைத்தாள்.

  மனதிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியதால் அந்த ஃபோல்டரைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா. “என்ன இது…? அருண் எனக்குச் சொன்ன கதை மாறியே இருக்கிறதே? ச்சே…ச்சே… அருணுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது,” என்று முடிவு பண்ணி நேரம் ஆனதால் வீட்டிற்கு புறப்பட்டாள் வெண்ணிலா. வீடு சேருமுன் மீண்டுமொரு அழைப்பு அருணிடமிருந்து…. இம்முறை கேள்வியின் தொனி சற்று கடினமாக இருந்தது. “எனக்கு மட்டும்தான் உன்மேல் காதலா??? உனக்கு இல்லையா…பேபி???” என்ற கேள்வியில் கரைந்து போனாள் வெண்ணிலா. “உடனே அனுப்புகிறேன்” என்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இண்டர்நெட் கனேக்ஷனுக்காக காத்திருக்கும் வேளையில் வெண்ணிலா ‘சேவ்’ செய்து வைத்திருந்த மெயில்களை ஆயிரத்தோராவது தடவையாக படிக்க ஆரம்பித்தாள்.

  ஆனால், இம்முறை அவளுக்கு “டேட்டிங் ஸ்கேம்” கடிதங்கள் கண் முன் தோன்றி மறைந்தன. “ஏதோ தப்பு நடக்கிறதா???” என்று ஐயமுற்றாள் வெண்ணிலா. அருணின் பேச்சுகளை மனதில் அசைப்போட்டாள். அருணின் சில பேச்சுகள், வெண்ணிலாவின் வீடு, சொத்து, அப்பாவைப் பற்றிய பொருளாதார நிலை, நகைகள் பற்றிய உரையாடல்கள் போன்றவை அவள் மனத்தைக் கலக்கமடையச் செய்தன.

  அவ்வேளையில் அவளது தந்தை,
  ‘நாளைப் பொழுது உந்தன்
  நல்ல பொழுதாகுமென்று
  நம்பிக்கை கொள்வாயடா…
  இறைவன் நம்பிக்கை தருவானடா”என்று பாடியவாறு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

  வெண்ணிலாவின் மனதில் சலனம்…. கடவுள் தனக்காக சொல்லும் அசரீரியாக அப்பாடல் ஒலித்தது. இதுவரை வேலை செய்து வந்த அச்சம், மடம், நாணம் ஆகியன பறந்தோடிச் சென்று பயிர்ப்பு அவள் மனதை ஆக்கிரமித்தது. வெண்ணிலா, அருணோடு பேசப்பிடிக்காமல், தொலைபேசியை அணைத்துவிட்டு அருணுக்கான மெயிலில் அவனது முகவரியையும் அவனது அறிமுக ஆவணம் ஏதாவதொன்றையும் மெயில் செய்யுமாறு பணித்தாள்.

  மறு மெயிலிலேயே அருண், ‘என்னை நீ சந்தேகிப்பது உன்னை நீயே சந்தேகிப்பது போன்றது… சரி வந்தது வந்துவிட்டது. இத்துடன் என் முகவரியையும் பாஸ்போர்ட் நகலையும் அனுப்புகிறேன்… வருங்காலத்தில் இப்படிச் சந்தேகித்து என்னைச் சித்திரவதைச் செய்யாதே..பேபி” என்று முடித்திருந்தான். வெண்ணிலா, “என் காதல் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது… ஆனால் என் காதலுக்குத் தகுதியானவன் நீ இல்லை...உன்னுடைய போல் பொய் காதல் இல்லை என்னுடையது” என்று பதில் அனுப்பி விட்டு மெயிலில் வந்த பாஸ்போர்ட் நகலைப் பார்த்தவாறே நெடுநேரம் அமர்ந்திருந்தாள். கைகள் தொலைபேசியிலிருந்த சிம் கார்டை உடைத்தவாறு இருந்ததால் கண்களிலிருந்து மாலை மாலையாய் சொரிந்து கொண்டிருந்த கண்ணீர் துளிகளைத் துடைக்க இயலவில்லை. வெண்ணிலாவின் கலங்கிய கண்கள் அருணின் பாஸ்போர்ட் நகலிலிருந்த ஏப்ரல் 31, 1977 என்ற பிறந்த திகதியையும், பாஸ்போர்ட் வெளியாக்கப்பட்ட நாள் பிப்ரவரி 30, 2012 என்ற திகதியையும் மட்டுமே தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தன. வெண்ணிலாவின் வாழ்க்கையைப் பத்திரப்படுத்த திருப்புமுனையாக அமைந்தது காலண்டரில் இல்லாத அந்தத் திகதிகள். இணையத்தில் பிறர் கதையை போல் தானும் தன்னுடைய கதையையும் பதிவேற்றம் செய்து பிற பெண்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற முனையத் தொடங்கினாள் வெண்ணிலா.

  நட்பு வட்டாரங்கள் அனைவருக்கும் வணக்கம். பெண்மையில் பல எழுத்தாளர்களின் கதைகள் என்னைக் கதை எழுதத் தூண்டியுள்ளன. அனைவருக்கும் நன்றி. Specail Thanks To Dear Sintu Bairavi... “ அக்கா... சிறுகதை எழுதும் போட்டி பெண்மையில் வந்துள்ளது... கலந்து கொள்... பரிசு கிடைக்கலனாலும் அனுபவமா இருக்கும்...” என்று கூறியமைக்கு நன்றி சிந்து பைரவி. கன்னியின் கன்னி முயற்சி... கமெண்ட்ஸ்-களை அள்ளி வீசுங்கள்... அனைத்தையும் மலர்க்கணைகளாக எண்ணிக்கொள்கிறேன்...


  அன்புடன்...
  மாலதி தர்மலிங்கம்

  Drop your comments for this Short Story in the below link:

  திருப்புமுனை - Malathy  Sponsored Links
  Last edited by Parasakthi; 18th Sep 2013 at 04:13 PM. Reason: Comments Page Link Added
  வெளிச்சத்தை தன்னுள்ளே வைத்து இரவிலும் விடியல் தரும் மின்மினி பூச்சி...

 2. #12
  infaa's Avatar
  infaa is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Infanta
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  chennai
  Posts
  13,277
  Blog Entries
  4

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை 1.

  அந்த மலை உச்சியில் தன் வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்தான் விஷ்ணு. அவன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர். புறங்கையால் அதை துடைத்து எறிந்துவிட்டு, எதைப் பற்றியும் கவலைப் படாமல் தற்கொலை முனையில் தைரியமாக நின்றான்.

  அவன் சிந்தையில் இப்பொழுது எதுவும் இல்லை. தன்னை பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், அவன் பணபலம், பெயர், புகழ் எதுவும் யாரும் அவன் சிந்தையை தீண்ட அவன் அனுமதிக்கவில்லை.

  இதழ்களில் உற்பத்தியாகும் விரக்தி புன்னகை மட்டுமே துணையாக. தற்கொலை செய்யும் அளவுக்கு துணிந்த அவன், வாழ்க்கையை பற்றி ஒரு நிமிடம் சிந்தித்து இருந்தால் இந்த முடிவிற்கு வந்திருக்க மாட்டான்.

  அது எப்படி முடியும் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயலும்பொழுது எதைப் பற்றியும் சிந்திக்க முடியாதே. தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நிகழ வேண்டும்.

  “அம்மா, அப்பா, தம்பி.......... நானும் உங்களோடே வந்து சேர்ந்து விடுகிறேன். நீங்கள் இல்லாத உலகத்தில் எனக்கு மட்டும் என்ன வேலை. உங்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன்”, மானசீகமாக அவர்களிடம் மன்னிப்பு வேண்டினான்.

  “என்னை இந்த உலகத்தில் தனியாக விட்டுவிட்டு போக உங்களுக்கு எப்படி மனம் வந்தது. இந்த கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை. ஒரே விபத்தில் என்னை மட்டும் பிழைக்க வைத்து இப்படி அனாதையாகவும் ஆக்கிவிட்டானே”, கடவுளையும் பழித்தான்.

  அவன் கண்முன்பு பழைய நினைவுகள் அனைத்தும் படமாக விரிந்தது. சிறிய அளவிலான பலசரக்கு அங்காடியை நடத்திவந்தார் விஷ்ணுவின் அப்பா தேவன். அவனது தாய் மீனாட்சி. ஒரே தம்பி விஷால்.

  தாயும் தந்தையும் காதல் மணம் புரிந்ததால் இரு பக்கமும் உறவென்று எவரையும் உணர்ந்ததில்லை விஷ்ணுவும், விஷாலும். தன் பிள்ளைகளுக்கு எந்த குறையும் தெரியாமல் வளர்த்தார் தேவன்.

  விஷ்ணு தந்தையின் சிறிய அளவிலான தொழிலை, இரண்டு மூன்று கிளைகளாக உருவாக்கினான். அவனது படிப்பும், சுய தொழிலுக்கு அரசாங்கத்தின் பண உதவியும், தந்தையின் அனுபவமும் அவனை சிறந்த முறையில் முன்னேற்றியது.

  தாயும் தந்தையும் இருபத்து ஐந்து வருட தாம்பத்தியத்தில் ஒரு நாள் கூட சண்டை போட்டோ, சிறிய கருத்து வேறுபாடு அவர்களுக்குள் எழுந்தோ விஷ்ணு பார்த்ததே இல்லை.

  தம்பி விஷால் இவனைவிட எட்டு வயது சிறியவன். இவன் தொழிலில் காலடி வைத்திருக்கும் பொழுதுதான் அவன் கல்லூரியில் காலடி வைத்தான். கல்லூரி மாணவனுக்கே உரிய அனைத்து குணங்களும் அவனிடம் உண்டு.

  தான் சைட் அடிக்கும் பெண்ணைப்பற்றி கூட வீட்டில் சொல்லி சிரிப்பான். வெளியில் தாயுடனோ, அண்ணனுடனோ சென்றால் குறும்பாகவும் கலாட்டாவாகவும் நடந்துகொள்வான். முழு சுதந்திரத்தை அவன் பெற்றிருந்தாலும் வரம்பு மீறி நடந்ததில்லை.

  அவன் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். சில வேளைகளில் அவனது இந்த இயல்பைப் பார்த்து விஷ்ணு பொறாமை கூட படுவான். தாய் தந்தையின் ஒற்றுமையான வாழ்வைப் பார்த்து அவன் வியக்காத நாட்களே இல்லை.

  தாய் மீனாட்சிக்கு குடும்பமே கோவில். கணவன்தான் அதில் தெய்வம். அதேபோல் புண்ணிய தலங்களுக்கு செல்வதில் அபார விருப்பம் உள்ளவர். அந்த அவரது விருப்பமே அனைவரின் உயிருக்கும் எமனாகிப் போனது.

  விஷ்ணுவின் பிறந்தநாளுக்கு திருப்பதி போயே ஆகவேண்டும் என்ற அவரது பிடிவாதத்தில் அனைவரும் திருப்பதிக்கு சென்றார்கள். இந்த நிலையில்தான் யார் கண் பட்டதோ தெரியவில்லை. தரிசனம் முடிந்து திரும்பும் வேளையில் அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து வந்துகொண்டிருந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

  ஓட்டுனர் இருக்கையில் இருந்த விஷ்ணு சுதாரித்து திருப்பும் முன்னர், விபத்து நிகழ, விஷ்ணு தூக்கி வீசப்பட, மற்ற மூவரும் அந்த கோர விபத்தில் பலியானார்கள்.

  என்னவென்று அவன் தெளியும் முன்பே அடுத்த அடி, அவன் கடை தீயில் கருகியது. அதற்கு காப்பீட்டுத்தொகை கிடைக்கும் என்றாலும் எதையும் செயல்படுத்தும் நிலையில் அவன் இல்லை.

  வீட்டில் வந்தால் அவனை வரவேற்கும் வெறுமையைத்தான் அவனால் தாங்கவே முடியவில்லை. இன்னும் இந்த வலியை தாங்க முடியாது என்று தோன்றவே தன் வாழ்வை முடித்துக்கொள்ள இங்கே வந்திருக்கிறான்.

  அவன் அவனது முடிவை செயல்படுத போகையில், புயல்போல் ஒரு பெண் அவனை நொடியில் கடந்து, அந்த முனையிலிருந்து குதிக்கப் போனாள்.

  தன் கண்முன்பு ஒரு உயிர் போவதை தாங்க முடியாத அவன் ஒரே எட்டில் அவளைப் பிடித்தான். “ஹேய் என்ன காரியம் செய்ய போகிறாய். உனக்கு என்ன பயித்தியமா”, ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் தானும் அந்த பயித்தியகாரத் தனத்தைத்தான் செய்திருப்போம் என்பதை மறந்து அவளிடம் காய்ந்தான்.

  “என்னை ஏன் காப்பாத்துனீங்க. என்னை விடுங்க நான் சாகத்தான் போகிறேன்”, அவனிடமிருந்து விடுபட்டு சாவதிலே குறியாக இருந்தாள் அவள்.

  அவன் எவ்வளவோ தடுக்க போராடியும் அவனால் அவள் போராட்டத்தை வெல்ல முடியவில்லை. பிறகு நொடியும் தாமதிக்காமல் அவள் கன்னம் பழுக்கும் அளவு ஓங்கி ஒரு அறை விட்டான் அவன்.

  தன் கன்னத்தை பிடித்தவாறு சிலையென உறைந்து நின்றாள் அவள். கண்களில் பொறி பறக்க, கன்னத்தில் அவன் விரல் தடங்கள் பதிந்திருக்க, கண்களில் இருந்து அருவி கிளம்பி அவள் கன்னத்தை நனைத்தது.

  “ஐ’ம் சாரி. உங்களை கண்ட்ரோல் பண்ண எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களுக்கு என்ன கஷ்டமென்று என்னிடம் சொன்னால் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்.

  எந்த ஒரு துன்பத்துக்கும் தற்கொலை ஒரு முடிவு ஆகாது. ஒரு நண்பனாக நினைத்து என்னிடம் சொல்”, அவனது கனிவான பேச்சு அவளை இளக்கியது.

  சிறிதுநேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், தன் மனம் திறந்தாள். “நேற்று காலையில் எனக்கு திருமணம் நடந்தது. இன்று காலையில் நான் விதவை”, இரட்டை வரியில் தன் நிலையை விளக்கிவிட்டு அமைதியாக இருந்தாள்.

  விஷ்ணு திகைத்து போனான். ‘என்ன சொல்கிறாள் இவள். என் எதிரில் நிற்பவள் இளம் விதவையா. நேற்று மலர்ந்த மலர்போல் வாடி நிற்கும் அவளைக் கண்டு இரக்கம் சுரந்தது அவனுக்கு.

  “மரணம் என்பது வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்வு அவ்வளவே. அதை புரிந்துகொள்ளாமல் இப்படி தற்கொலை முயற்சி செய்வது கோழைத்தனம்தான்”, அவனது முடிவையும் சேர்த்து பரிசீலினை செய்தானா என்பது தெரியவில்லை.

  அவனது முடிவெல்லாம் அவளை அனுப்பிவிட்டு தான் மட்டும் இறக்க வேண்டும் என்பதே.

  “உங்களுக்கு புரியும் இந்த விஷயம் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு புரியாததாலே நான் இந்த முடிவை எடுக்கவேண்டி வந்தது”, விரக்த்தியாக பேசினாள்.

  “நீ சொல்ல வருவது புரியவில்லை. நீ உன் வீட்டுக்கு போகலாமே”, புரியாமலே கேட்டான்.

  “என்னை திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு நேற்று இரவில் மாரடைப்பு வந்து இறந்திருக்கிறார். இரவிலேயே அவர் முகம் சரியாக இல்லையென்று எனக்கு புரிந்தது. காலையில் நான் எழுந்து பார்க்கும் பொழுது அவர் உடலில் உயிர் இல்லை.

  வெளியே வந்து நான் விஷயத்தை சொன்ன பொழுது, நான்தான் அவர்களது மகனின் உயிரை குடித்தேன் என்பதுபோல் அவர்கள் பேசியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னை பெற்றவர்களே அதை திரும்ப சொல்லவும் நான் மனமுடைத்து போனேன்.

  இன்னும் எதற்காக, யாருக்காக, யாரை நம்பி இந்த உலகத்தில் நான் வாழ வேண்டும். இன்னும் என்னை இந்த உலகம் என்னவெல்லாம் சொல்லி தூற்றும் என்பதை உயிரோடு இருந்து நான் கேட்க விரும்பவில்லை”, தன் சோகம் மொத்தமும் வெளியேற, அங்கேயே அமர்ந்து மொத்தமாக அழுதாள்.

  கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணு திகைத்து போனான். அதைவிட தன் முன்பு ஒரு பெண் அழுவதை அவனால் தாங்க முடியவில்லை.

  “அதற்கு தற்கொலைதான் முடிவா”.

  “நீங்கமட்டும் என்ன, இங்கே ஏதாவது விழாவுக்கு வந்து இருக்கீங்களா”, அவளது சோகம் வெளியேறிய வேகத்தில் இயல்பாக கேட்டாளோ.

  திகைத்தான் விஷ்ணு, அவள் கேட்பதும் சரிதானே. நான் மட்டும் எதற்கு இங்கே வந்தேன். அவளுக்கு கூறிய அறிவுரைகள் அனைத்தையும் தனக்குள் ஓட்டிப் பார்த்தான். ஒரு முடிவுக்கு வந்தான்.

  “உன் பெயர் என்ன”, திடீரென கேட்டான்.

  “தேவி.......”.

  அவள் தோளைப் பற்றி எழுப்பினான். அவள் கண்களைப் பார்த்து தான் இங்கே வந்ததற்கான காரணத்தை சொன்னான். “இப்போ நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். ஒரு பாதி வாழ்க்கை நம்மை ஏமாற்றினாலும், மறு பாதி வாழ்க்கையை நாம் ஏன் சேர்ந்து வாழ்ந்து பார்க்கக் கூடாது.

  தற்கொலை முனையில் நம் வாழ்வின் திருப்புமுனை நிகழட்டுமே. வா வாழ்ந்து பார்க்கலாம். என்மேல் நம்பிக்கை இருந்தால் என் கையோடு உன் கையை இணைத்துக்கொள்.

  இல்லையென்றால் அப்படியே விலகிவிடு, இருவரும் தனித் தனியாக இங்கேயே நம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம்”, தன் கையை திடமாக அவள் பக்கம் நீட்டினான்.

  ஒரு நொடி அவன் பேச்சில் திகைத்தாலும், தன் கையை அவன் கையோடு இறுக இணைத்துக் கொண்டாள்.

  இந்த தற்கொலை முனையில் திருப்புமுனையான இந்த வாழ்க்கையை அவர்கள் இருவரும் வெற்றிகரமாக வாழ்வார்கள் என்று நாம் நம்புவோம். அவர்கள் முகங்களிலும் அது தெரிகின்றது.
  உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
  மடந்தையொடு எம்மிடை நட்பு.
  எனக்கு எழுத வாய்ப்பளித்த பெண்மை இளவரசி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  உங்கள் தோழி,
  இன்பா அலோசிஸ்.

  Drop your comments for this Short Story in the below link:

  திருப்புமுனை - Infaa


  Last edited by Parasakthi; 19th Sep 2013 at 10:30 AM. Reason: Comments Page Link Added

 3. #13
  ramyas's Avatar
  ramyas is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Ramya Swaminath
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  Chennai
  Posts
  16,126
  Blog Entries
  75

  Re: Penmai Special Contest - Short Story Contest

  Hi arthi, subha, infi unga story ellam supera irukku .... congrats and all the best ma...  Ramya


  சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
  நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
  உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் ....

  Don't Worry............ Be Happy....... 4. #14
  vijivedachalam's Avatar
  vijivedachalam is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalakshmiBala
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  villupuram
  Posts
  10,965
  Blog Entries
  68

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்பு முனை

  அம்மா , குட் மார்னிங் மா.


  குட் மார்னிங் டா சிந்து கண்ணா..

  அம்மா அப்பா என் மேல இன்னும் கோவமா தான் இருக்காறா?

  அப்படிலா இல்ல டா ....உன் விருப்பம் என்னவோ அதை படி......உன் வாழ்க்கையை நீ தான் முடிவு பண்ணனும்.

  அம்மா மெடிசின் படிக்க எனக்கு விருப்பம் இல்ல மா,,ஆனா அப்பா நான் மெடிசின் படிக்கணும்னு ஆசை படுறார்...

  சரி குளிச்சிட்டு சாப்பிட வா சிந்து...உன் சுட்டி தங்கை சிவானியும்,தம்பி சித்தார்
  த்தும் எப்பவோ எழுந்து ரெடியாகிட்டாங்க..போ டா...

  சரி மா....
  சிந்து குளித்துவிட்டு சாமி கும்பிட்டு உணவருந்தும் மேஜைக்கு வந்தாள்....
  சிவானியும் சித்தார்த்தும் கண்களால் எதோ ஜாடை செய்து கொண்டனர்...சிந்து அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தாள்....

  திடீரென்று அம்மா அய்யோ என்று அலறினாள்..
  சித்தார்த் அவள் மேல் ரப்பர் பாம்பை தூக்கி வீசியிருந்தான்...அதான் அம்மணி இப்படி அலறி அடிச்சி மேஜை மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்..
  டேய் என்னை இப்படி பயம் காட்டாதனு எத்தனை தடவை சொல்லுறது....
  அக்கா இதுக்கு போய் யாராச்சு பயபடுவாங்களா..பயந்தாங்கோலி பயந்தாங்கோலி.....என்று சிவானியும் சித்தார்த்தும் சேர்ந்து கோரசாக கத்தினர் ....

  ஆமா டா நான் பயந்தாங்கோலி தான் போட சோடா புட்டி,ஹே சிவானி களவாணி நீயும் அவன் கூட சேர்த்து ஆட்டம் போடுறியா....இரு இரு என்று ஒருவரை ஒருவர் மிரட்டி கொண்டு இருந்தனர்....

  ஹேய் வாலுங்களா அமைதியா இருங்க அப்பா மாடில இருந்து இறங்கி வறார்....
  மூவரும் கப் சிப் என்று அமைதியாக உணவருந்தி கொண்டு இருந்தனர்..

  குட் மார்னிங் அப்பா........
  காலை வணக்கம் சொல்லனும்னு எத்தனை தடவை சொல்லிக்கொடுக்கிறது....

  சிந்து என்ன மா முடிவு எடுத்து இருக்க?
  அப்பா அது வந்து ......இருங்க அப்பா தண்ணி குடிச்சிக்கிறேன். ...பயத்தில் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தாள்...
  அப்பா நான் இஞ்சினியரிங் படிக்கனும் நு ஆசை படுறேன் அப்பா....
  அப்போ மெடிசின் வேண்டாமா சிந்து.....சரி மா உன் இஷ்டம்.....
  நான் ஆபிஸ் கிளம்புறேன் பசங்களா.....
  சரி அப்பா....
  அப்பா இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்....
  என்ன அதிசயமா தமிழ் ல சொல்லுறீங்க..எவ்ளோ சொன்னாலும் "have a nice day daddy" சொல்லுவீங்க......

  சிந்து நீ போய் அப்ளிக்கேஷன் வாங்கிட்டு வந்திடு சரியா.மறக்காம போய்ட்டு வா,கூட சிவானிய கூட்டிக்கோ. ...
  அப்பா வெளிய சென்றதும் மீண்டும் மூவரும் தங்கள் வாலை ஆட்ட ஆரம்பிதனர்..மூவரும் அம்மா செல்லம் என்பதால் அவர் கண்டுக் கொள்ள மாட்டார்.
  அம்மா நானும் சிவாவும் போய் அப்ளிக்கேஷன் வாங்கிட்டு வந்திடுறோம்.

  சரி டா...பத்திரமா போய்ட்டு பத்திரமா வரனும்.பத்திரம் நு சொன்னது உங்க இரண்டு பேரையும் இல்ல ரோட்ல போறவங்கள பத்தரமா போக விடனும்.எதனா சேட்டை செய்துட்டு வந்தீங்கனா அவ்ளோ தான்....
  ஸ்கூட்டி வேண்டாம்.பஸ் ல போங்க.
  ஒகே அம்மா..பை.

  அக்கா,21G தான் அக்கா யுனிவெர்சிட்டி நிக்கும்..வா அதுல போகலாம்.காலை வேளை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
  எப்படியோ சிவானி அடித்து பிடித்து சீட் பிடித்து விட்டாள்..இருவரும் அமர்ந்து கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்த்த படி அமர்ந்து வர.
  மாசமான பெண்மணி ஒருவள் ஏறினாள்.......அமர ஸீட் இல்லாததால் அந்த பெண்மனி நின்றபடி வர.சிந்து ஏழுந்து அவளுக்கு இடம் தந்தாள்...

  அந்த பெண்மணி நிறைமாத கர்ப்பினி,அவளூக்கு மூச்சு வாங்கியது.
  அக்கா ஏன் உங்களுக்கு மூச்சு வாங்குது...இந்தாங்க தண்ணீ குடிங்க..தண்ணீர் வாங்கி குடிக்கவும் ஓட்டுனர் பஸ்க்கு பிரேக் போடவும் சரியாக இருந்தது...அந்த பெண்மனியின் இடுப்பு முன் இருக்கையில் போய் மோதியது.

  அந்த பெண்மணி அம்மா என்று அலற..பஸ்சில் இருந்த அனைவரும் அந்த பெண்மணியை பார்க்க..அவள் பிரசவ வலியால் துடித்து கொண்டு இருந்தாள்...
  பஸ்சில் இருந்த அனைவரும் பரப்பரப்பாக,,ஒருவர் ஆம்புலன்ஸ்க்கு தொலைப்பேசியில தொடர்புக் கொள்ள...
  சிந்து அந்த பெண் வேதனையில் துடிப்பதை பார்த்து மிகவும் வேதனை கொண்டாள்.....
  தயவு செய்து பஸ்ச நிறுத்துங்க...ஒட்டுனர் ஒரமாக வண்டியை நிறுத்தினார்....

  ஒரு பெண் பஸ்ல இருக்குற எல்லாரும் கீழ இறங்குங்க...ஒரு இரண்டு பெண்கள் மட்டும் இருங்க என்று சொல்ல..

  ஆன்ட்டி நான் இருக்கேன்,
  நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்கியே மா.
  பரவால ஆன்ட்டி..இவங்க என் அக்கா வ இருந்தா நான் இப்படி மத்தவங்க மாதிரி தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பேனா"...
  சிக்கிரம் வாங்க. .

  அந்த கர்ப்பினி அலர...சிந்து அவளின் கைகளை பிடித்து கொள்ள,இன்னோரு பெண்மணி கர்ப்பினி பெண்ணின் கால்களை பிடிக்க.....சிந்து முதல் முறையாக ஒரு பச்சிள*ம் குழந்தை வெளியே வருவதை பார்க்கிறாள்....
  அப்படியே சிலையாக நிற்கிறாள்......

  அம்மாடி அவ்ளோ தான் மா ..இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ மா.
  அக்கா உங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கு. .
  தன் துப்பட்டாவை எடுத்து அந்த குழந்தை உடலை சுற்றி விட்டாள் ..
  அந்த கர்ப்பினி பெண் அரை மயக்கத்தில் சிந்துவிற்க்கும் அந்த இன்னோரு பெண்ணிற்க்கும் நன்றி கூறினாள்.....
  ஆன்ட்டி ஆம்புலன்ஸ் சத்தம் கேட்க்குது.
  இரண்டு உயிரையும் காப்பாற்றி விட்டோம் ..ரொம்ப நன்றி மா உனக்கு,,, 17 வயசுல உனக்கு எப்படி இவ்ளோ தைரியம்....நீ நல்லா இருப்ப மா..
  நன்றி ஆன்ட்டி.....
  ஆம்புலன்ஸில் அந்த கர்ப்பினி பெ
  ண்ணும் குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்....

  பஸ் முழுவதும் திரை போட்டு முடி இருந்ததால்...கை கழுவ வெளியே வந்த சிந்து பஸ்சை சுற்றி பெருங்கூட்டம் இருப்பதை கண்டு தயங்கினாள்....
  அனைவரும் சிந்துவிற்கு பாராட்டு தெரிவிக்க, அவள் நெகிழ்ந்து போனாள்...அவள் தங்கை சிவானியும் பாராட்ட சிந்து சந்தோஷ உச்சியில் இருந்தாள்.....

  மேடம் நாங்க புதிய தலைமுறையில் இருந்து வறோம்...
  இவ்ளோ சின்ன வயசுல எப்படி உங்களால இப்படி ஒரு துணிச்சலான செயல் செய்ய முடிந்தது....
  எனக்குள்ள இருக்குற தாய்மை உணர்வு தான் காரணம்......
  எதிர்க்காலதுல நீங்க என்ன ஆக விரும்புறீங்க?
  நான் ஒரு பிரசவம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரா ஆக விரும்புறேன்....என் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி மாறியது....
  நன்றி....
  அம்மா, இங்க வா, சிந்து டிவி ல வரா பாரு மா.....

  தாய் தன் பெண்ணின் செயலை எண்ணி பெருமை அடைந்தார்.....
  அங்கு சிந்து தன் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து அப்பா நான் மெடிசின் படிக்கிறேன் அப்பா......ஒரு உயிரை இந்த பூமிக்கு கொண்டுவர சந்தோஷம் வேற எதிலும் இல்ல அப்பா....இன்று என் வாழ்க்கையின் திருப்பு முனை அப்பா.....என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் ....

  அப்பா மெடிசின் அப்ளிக்கேஷன் வாங்க போறேன் பை பா....
  சிந்துவின் நடையில் ஒரு பெருமிதம் இருந்தது

  (இது என்னுடைய முதல் சிறுகதை...எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த பெண்மைக்கும் இளவரசி மேடம்,ஷக்தி, சுமதி அக்காவிற்க்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்)

  pls post ur valuable comments in the below link:

  திருப்பு முனை-vijivedachalam

  Last edited by vijivedachalam; 19th Sep 2013 at 11:19 AM.
  life is so beautiful....

 5. #15
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,585

  Re: Penmai Special Contest - Short Story Contest

  பெண்மை தோழமைகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

  இங்கு பகிரப்படும் சிறுகதையின் நகல், சிறுகதை (Short story section) பகுதியிலும் பதிவிடப்படுகிறது. அதனால் கதைக்கான பின்னூட்டத்தை ஒவ்வொரு கதையின் கீழே கொடுத்துள்ள லிங்கில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி! 6. #16
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை

  வழமைபோல் கீர்த்தனா அலுவலகத்தில் மிகவும் இறுக்கமான மனநிலையில் இருந்தாள்.

  "கீர்த்தி! நானும் பார்த்துக்கொணடுதான் இருக்கிறேன் தினமும் நீ குழந்தையை கிணத்துக் கட்டில வைத்துவிட்டு வந்தமாதிரி பரபரப்பா இருக்கிறாய்....
  உனக்கென்னம்மா குறை. கண்ணிறைந்த கணவன், அருமையான மாமனார் மாமியார், அழகான குழந்தை..."

  "ஏய் பத்மா! உனக்கெங்கே தெரியப்போகிறது என்னுடைய கஷ்டம். எல்லாம் இருக்கு..... ஆனா இல்லை."

  "என்னடி, கஷ்டம் என்று நகைச்சுவையாக சொல்கிறாய்."

  "எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று அர்த்தம்....
  உதவி செய்கிறேன் என்று என்னுடைய மாமியார் பண்ணும் கூத்து தாங்க முடியல. நல்ல மனதோட தான் செய்யிறாங்க. அது வினையா வந்து முடியுது...

  ஒரு நாள், குழந்தை தூங்கிறான் தானே என்று, அவனோட அழுக்கு உடைகளை துவைத்துப் போட்டால் எனக்கு உதவியாக இருக்குமென்று போய் குளியலறையில் சவர்க்கார தண்ணில வழுக்கி விழுந்திட்டாங்க...

  இன்னொரு நாள், குழந்தையுடைய துவைத்த உடைகள் காய போடும் மரத் தட்டியை வெளியே வைக்க வேண்டாம், காற்றுக்கு விழுந்தால் திரும்பவும் துணிகளை துவைக்க வேண்டும். அதனால் கூடத்தில் இருந்து காயட்டும் என்று சொல்லி வந்தேன். அனால் அன்று நல்ல வெயில், விரைவா காய்ந்துவிடும் என்று வெளில வைத்து, காற்றுக்கு விழுந்து, எனக்கு இருமடங்கு வேலை...

  மற்றொரு நாள், குழந்தை தூங்
  குகிறான், இரவு சமையலுக்கு மரக்கறிகளை வெட்டி வைத்தால் எனக்கு உதவியாயிருக்குமென்று அவசர அவசரமாக வெட்டியதில் விரலை பெரிதாக வெட்டிவிட்டாங்க...

  இப்பதான் குழந்தைக்கு எட்டு மாதம். நான்கு வயது முடியும்வரை எல்லோரையும் முருகன் தான் காப்பாற்ற வேண்டும்...."

  "அப்புறம் வேலையை விடப்போகிறாயா என்ன?"

  "இல்லடி, அப்புறம் அவனை சிறுவர் பாடசாலையில் சேர்த்துவிடலாம். கொஞ்சம் நிம்மதியாகவும் இருக்கலாம்...
  சரி சரி.... என் புலம்பல கேட்டது போதும். வேலையைப் பார்."

  கீர்த்தனாவின் கணவன் சரவணன் அரசாங்க நிறுவனமொன்றில் பொறுப்பான பதவியில் இருக்கிறான். பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி இரண்டு வருடங்கள். இவர்களுக்கு எட்டு மாத குழந்தை பிரணவன்.

  திருமணத்தின் பின் வேலைக்
  குப் போக கீர்த்தனாவுக்கு துளியும் விருப்பமில்லை. வீட்டிலே இருந்து பொறுப்பாக எல்லோரையும் கவனித்து குடும்பம் நடத்தவே அவளுக்கு விருப்பம். கணவனின் வருமானம் நான்கு பேருக்கும் ஓரளவு வசதியாக வாழ போதும் என்றாலும் குழந்தை வந்ததும் செலவுகள் கூடும். மின், நீர் கட்டணங்களுக்கே பாதி பணம் செலவழிகிறது. எனவே வேலையை விட முடியவில்லை.

  மாமனார் மாமியார் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். பாசம் மிக்கவர்கள். ஆனால் மாமியாரின் உதவிகள் சிலசமயங்களில் வினையாக வந்து முடிகிறதே...

  வேலைக்குப் போகுமுன் சமையல், உடைகளை தோய்த்தல், குழந்தையின் தேவைகளுக்கும் சகல ஆயத்தங்களையும் செய்து வைத்துவிடுவாள்.

  ------------

  தினமும் சரவணன் தான் பிந்தி வருவான். அன்றும் கீர்த்தனா வழமைபோல் அலுவலகத்திலிருந்து வந்து எல்லா வேலைகளையும் முடித்திருந்தபோது,

  "அம்மா.............
  அப்பா..............
  குட்டிக் கண்ணா..............
  கீத்துச் செல்லம்........."

  வழமையாக பிரணவ் குட்டியை அழைத்துக்கொண்டு வரும் சரவணன், அன்று வீட்டிலுள்ள எல்லோரையும் ஏலம் விட்டுக்கொண்டு வர, பரபரப்பாக எல்லோரும் கூடத்தில் கூடினர்.

  "பிரணவ் கண்ணா! நீ எங்களுக்குப் பிறந்து சந்தோஷத்தை மட்டுமல்ல அதிஷ்டத்தையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டாய் குட்டி...

  குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நான் கற்பனை பண்ண முடியாத பதவி உயர்வு உன்னோட அப்பாக்கு கிடைத்திருக்கிறது கண்ணா....."

  "என்னங்க சொல்லுகிறீங்க...."

  "ஆமா கீத்து...... நிறுவனத்தில் ஒரு இயக்குநர் பதவி விலகுகிறார். அவருக்கு வயதிருக்கிறது. ஆனால் அவருடைய ஒரே மகளுக்கு வெளிநாட்டில திருமணம் நிச்சயமாகி எல்லோருமே அங்கு போக வேண்டிய கட்டாயம். அந்தப் பதவிக்கு அடுத்து வரவேண்டியவர் சங்கர் தான். அவரும் ஒரு வருட சம்பளமில்லா விடுமுறையில இருக்கிறார். உடனடியாக வெற்றிடம் நிரப்பவேண்டிய காரணத்தால் அடுத்த தகுதியானவன் எனக்கு தந்திருக்கிறார்கள். அடுத்த வருடம் ஒருவர் ஓய்வில் செல்வதால், சங்கர் வந்து அந்த இடத்தை நிரப்பலாம். ஒருவருக்குமே மனக் கஷ்டம் இல்லை.

  அதோடு வீடும் வாகன வசதியும் தருகிறாங்க. எல்லாம் நம்ம பிரணவ் செல்லத்தோட அதிஷ்டம் தான்."

  கீர்த்தனாவால் நம்பவே முடியவில்லை.
  அப்போ நான் வேலையை விட்டுவிடலாம் போல இருக்கே...
  சரவணன் என்ன சொல்வாரோ தெரியவில்லையே...
  வருமானம் பெருக பெருக பணத்தாசை கூடும் என்று சொல்வார்கள்.
  வேலைக்கு ஆட்களை வைக்கலாம் என்று சொல்வாரோ...
  அவர்களை நம்ப முடியாதே...
  முருகா! அதிஷ்டத்தை தந்த நீதான் நல்லவழியையும் காட்ட வேண்டும்.

  கீர்த்தனாவின் மனம் புலம்பிக்கொண்டிருந்தது. கணவனின் பதவி உயர்வின் சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்க முடியவில்லை.

  "கீர்த்து...... நான் ஒன்று சொல்வேன். அது என்னுடைய விருப்பமே அன்றி கட்டளை அல்ல. நீ தான் முடிவு எடுக்க வேண்டும். என்ன முடிவு நீ எடுத்தாலும் எனக்கு சம்மதமே."

  "என்னங்க இது..... உங்களுடைய விருப்பத்தை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். சொல்லுங்க...உங்களுடைய விருப்பம் தான் என்னுடையதும்."

  "இல்ல கீர்த்தனா, நீ என்ன நினைப்பாயோ தெரியாது. நீ படித்த படிப்பு வீண் போகுதென்று நினைத்தால் நான் சொல்வதை மறந்துவிடு..."

  "சரி.... நீங்க முதல்ல சொல்லுங்க..."

  "நீ உன்னுடைய வேலையை இராஜினாமா செய்தால் நல்லதென்று நினைக்கிறேன்..."

  அடுத்த கணம் கீர்த்தனா கணவனை கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்...
  மனம் முருகனுக்கு நன்றி கூறிக்கொண்டிருந்தது.


  ******


  ஏதோ ஓர் ஆர்வத்தினால் எழுதிவிட்டேன். இது எனது முதல் கதை. என்னையும் எழுதத் தூண்டிய பெண்மைக்கு நன்றிகள் பல.

  Pl. drop your comments for this Short Story in the below link...

  திருப்புமுனை-gowry mohan
  Last edited by sumathisrini; 20th Sep 2013 at 10:14 AM. Reason: Comments Page Link Added

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 7. #17
  lashmi's Avatar
  lashmi is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalashmiravichandiran
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  karur
  Posts
  11,976
  Blog Entries
  43

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்பு முனை  சிறிது நேரத்தில் இரயில் நிலையம் வந்துவிடும்.மீண்டும் அதே ஊர்...அதே மக்கள்....நினைக்கையிலே நெஞ்சம் படபடக்க இருக்கையில் அமர்ந்திருந்தாள் செவந்தி.


  ரயில் நின்றதும் இறங்கியவள் ஒத்தை மாட்டு வண்டிகாரனிடம் சாலபட்டி செல்ல வேண்டும் என்றாள்..அவன் அவளை ஏற இறங்க பார்த்து விட்டு....பார்த்தா படிச்சா பொண்ணா இருக்கீங்க...அந்தா ஊருக்கா போறிங்க என்றான்.பதில் ஏதும் பேசாமல் சிரித்துகொன்டே வண்டியில் அமர்ந்தாள்.


  இந்த சிரிப்பிற்காக தான் அன்று அழுத விழிகளோடு,மனம் நிறய கனவுகளோடு அவள் 13ம்வயதில் இந்த ஊரை விட்டு செல்ல நேர்ந்தது..


  நினைவுகள் பின்னோக்கி செல்ல

  சாலபட்டி கிராமம் ...அது கிராமம் என்று சொல்வதை விட தீவு என்றுதான் சொல்லவேண்டும்.அங்கு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வசித்து வந்தனர்..எல்லா நல்லது கெட்டதும் அவர்களுக்குளே முடித்து கொள்வர். விவசாயம் நலிவுற பெண்கள் ,ஆண்கள் அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தனர்.அந்த ஊரில் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளி உண்டு.அதுதான் அந்த ஊரின் அதிகபட்ச படிப்பு.அதையும் ஒரு சிலர்தான் படித்திருந்தனர்..அதில் ஒருத்தி தான் இந்த செவந்தி.படிப்புதான் அவள் உயிர் மூச்சு......சரசுக்கும் ,காளைக்கு மூன்றாவது பெண்ணாக பிறந்த இவள் அந்த குடும்பத்திலே அதிகம் படித்து கொண்டிருப்பவள்...அதாவது 8ம் வகுப்பு.அவளுடிய பிடிவாதம் , படிப்பில் அவளுக்கு இருந்த ஆசை தெரிந்த சரசும் அதற்க்கு தடை சொல்ல வில்லை.முதல் அக்கா திருமணம் முடிந்துவிட்டது இரண்டாவது அக்காவிற்கும் பேசிமுடித்தாகிவிட்டது,


  இந்த ஊரில் முக்கியமான விதி. பெண் குழந்தைகள் பூப்பெய்த உடனே திருமணத்தை நடத்தி விடவேண்டும்என்பதுதான்.குழந்தை திருமணம் எதிர்ப்பு நாடெங்கிலும் ஒலித்தாலும் இங்கு அவை செல்லுபடி ஆகாது.


  சிறுவயதில் பணதேவைக்காக பெண்கள் வேலைக்கு செல்வதால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.அதனால் இந்த ஊரில் இது கட்டாயமாக்கபட்டது.


  செவந்தியும் வயதிற்கு வந்துவிட்டால் இருவர் திருமணத்தையும் சேர்ந்தே முடித்துவிடலாம் என நினைத்தார் காளை. மாமன் மகன் கோபால் தான் செவந்திக்கு பேசி முடிக்கபட்டவன்.24 மணிநேரத்தில் 23 மணிநேரம் போதையில் இருப்பவன்.அவனை கண்டாலே செவந்திக்கு பிடிக்காது.


  பட்டாம்பூச்சி போல் பறந்து திரிந்து கொண்டிருந்த செவந்தி கொஞ்ச நாட்களாக ஒரு வித தடுமாற்றத்துடன் இருந்தாள்.பார்வையில் ஒரு பயம்,தனிமையில் அதிகநேரம்,சரியாக சாப்பிடுவதும் இல்லை.ஆனால் பள்ளிக்கு மட்டும் தவறாமல் போய்கொண்டிருந்தாள். ஒருநாள் பள்ளியில் பசியில் மயக்கம் அடைய சரசுவிற்கு தகவல் தரப்பட்டது..


  அருகில் இருக்கும் கிராம மருத்துவமுகாமிற்கு அவளை அழைத்து சென்றார் சரசு.ரோசி சிஸ்டர் தான் அவளை பரிசோதனை செய்தார்..


  நாடியை பிடித்து பார்த்தவர் என்ன சரசக்கா.. என ஆரம்பிக்க ,செவந்தியின் கைகள் ரோசியின் கைகளை பயத்தில் இறுக்க, அதிர்ந்து அவள் முகத்தை பார்த்த ரோசி...... கண்களில் ஒரு கெஞ்சல் இருக்க,மெதுவாக சொல்லவேண்டாம் என அவள் தலைஅசைக்க ....ஒன்னுமில்லக்கா...சத்து குறைவா இருக்கு...இந்த மாத்திரை சாப்பிடுங்க சரியாகிடும் என்றாள்.


  ம்ம்ம்ம்...இந்த பொட்டபுள்ளைகளை வச்சுக்கிட்டு நான் படர பாடு இருக்கே....சீக்கிரம் குத்த வச்சா ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்திட்டு நிம்மதியா இருப்பேன்...எங்கே என சலித்து கொண்டே சென்றாள் சரசு.


  மதிய உணவை சாப்பிடாமல் வெறித்து கொண்டிருந்த செவந்தியை தேடி வந்தாள் ரோஸி.. ரோசியை கண்டதும் செவந்தி மிரள


  என்ன செவந்தி...என்னை கண்டு பயமா.....நான் ஏதும் சொல்ல மாட்டேன் இங்கே வா என அன்புடன் அழைத்தவள் உங்க அம்மாவுக்கு தெரியுமா? என கேட்க


  இல்லை என தலைஆட்டியவள் ....அக்கா இதை யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.....தெரிஞ்சா அவ்ளோதான்...நான் படிக்கணும்....இந்த எட்டாங்கிலாசை முடிக்கணும்...அப்புறம் நானே சொல்லிடறேன்....இல்லினா என்ன இப்பவே படிப்ப விட்டு நிறுத்திடுவாங்க அக்கா நான் படிச்சு கலக்டர் ஆகணும்க்கா.......... ...ப்ளீஸ்க்கா என அவள் கைகளை பிடித்து கொண்டு அவள் கதற ரோசின் கண்களில் கண்ணீர் கொட்டியது.


  என்ன குழந்தை இவள்...13வயதில் இவ்வளவு முதிர்ச்சியா!!! .ஒரு பெண் தனது வாழ்கையின் முக்கிய நிகழ்ச்சியான வயதிற்கு வந்த விஷியத்தையே பெற்றவர்களிடம் இருந்து மறைக்கிறாள் என்றாள்...எவ்வளவு மன உறுதி இருக்கவேண்டும் என எண்ணி வியந்தாள்..


  உடனே ரோசி ஆமா எட்டாவது படிச்சா கலெக்டர் ஆகிடலாமா...அப்புறம் மீதி எல்லாம் எப்படி படிப்ப? என்றாள்.


  முகத்தில் கவலையுடன் தெரியலக்கா...ஆனா இத முடிச்சுடறேன்...அப்புறம் அதுக்கு யோசிக்கலாம்....என்னால முடிஞ்சவரிக்கும் படிச்சறேன்க்கா என சொல்ல


  அந்த பிஞ்சு மனதில் இருந்த ஆசையும் அதற்க்கு அவள் எடுக்கும் முயற்சியையும் நினைக்க ரோசிக்கே உடல் சிலிர்த்து விட்டது.


  சரி நீ படி ...நான் உங்க அம்மாகிட்ட சொல்லல....ஆனா அந்த மூன்று நாட்கள்ல நீ சுத்தமா,பாதுகாப்பா இருக்கணும். ஆமா நீ ஏன் ஒழுங்கா சாப்பிட்றதில்லை என அவள் கோபமாக கேட்க


  இல்லக்கா...நான் சாப்பிட்டா உடம்பு வந்திடும்... அம்மா கண்டுபிடிச்சுடும்..அதான் சாப்பிட்றதில்லை என சொல்ல.... அதிர்ந்து நின்ற ரோசி அவளின் அறிவாற்றலை கண்டு மகிழ்ந்தாள் .


  மறுநாள் மீண்டும் அவளை பார்க்க வந்த ரோசி உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்..... கேட்பியா? என கேட்க


  என்னக்கா என செவந்தி கேட்க


  நீ என்னுடன் வந்தால் உன்னை டவுனுக்கு கூட்டிட்டு போய் நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என்றாள்.


  அப்படியா...வரேன்க்கா என மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவள்.......சட்டென்று முகம் சுருங்க ஆனா அம்மா வையுமே...என்னை விடாதுக்கா என சொன்னாள்..


  ஊரு கட்டுபாடு எனக்கும் தெரியும் ...ஆனா அதையும் மீறிதான் வரணும்.உனக்கு படிக்கனும்னு ஆசை இருந்தா என்றாள்.


  அக்கா ...நீங்க கண்டிப்பா என்னை படிக்க வைப்பிங்கலா....எப்படி...நான் தான் இங்க படிச்சுட்டு இருக்கேனே என கேள்வி கேட்க


  இந்த சிறுவயதிலும் அவளது புத்திசாலித்தனத்தை மனதில் மெச்சிய ரோசி...நீ கவலைபடாதே...பத்மா டீச்சர்ட்ட பேசிட்டேன்...அவங்க டிரஸ்ட் மூலமா உதவி செய்யறேன்னு சொல்லிருக்காங்க...நாங்க நாளைக்கு கிளம்பறோம்...நீ வந்தா கூட்டிட்டு போறோம் என்றாள்.


  அந்த சின்ன பெண் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் தடுமாறிகொண்டிருந்தாள்..அப்போது கோபால் அங்கு வர


  ஏண்டி....என் மாமன் பெத்த சிறுக்கி...எப்ப நீ எனக்கு பொண்டாட்டி ஆகபோற....என போதையில் கேட்க


  இவனிடம் இருந்து தப்பிக்க.....,தான் நினைத்ததை படிக்க ரோசி சிஸ்டருடன் செல்வதுதான் சரியான முடிவு என நினைத்தவள் யாருக்கும் தெரியாமல் அன்று இரவே ரோசி சிஸ்டரிடம் தஞ்சம் அடைந்தாள்.அன்று எடுத்த அந்த முடிவு அவளது வாழ்கையின் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது . பின்னர் ஒரு டிரஸ்ட்டின் உதவியுடன் படித்து IAS தேர்வில் இந்திய அளவில் 1௦வது இடத்தை பிடித்து இருந்தாள்..


  அதற்கான பாராட்டு விழா...மேடையில் இருந்த அனைவரும் செவந்தியை புகழ,அவளோ அமைதியின் அடையாளமாக அமர்ந்திருந்தாள்.. சிறிய வயதில் இந்த பெண்ணின் வெற்றி அவளது விடாமுயற்சிக்கு கிடைத்த பரிசு.அவர் இந்த துறையில் நிறய சாதனை செய்யவேண்டும் என பாராட்டினர். அவளது ஊரிலே அவளுக்கு பனி புரியும் வாய்ப்பு கிடைத்தது.


  .கண்களில் கனவுகளையும் ,மனதில்ஆசையுடனும் ஊரை விட்டு சென்றவள்,இன்று கனவை நினைவாக்கி அந்த ஊரையே ஆளும் ஆட்சியாளராக வந்து இறங்கினாள்..


  அவள் போகும்போது எப்படி இருந்ததோ ஊர் அப்படியே இருந்தது.கலெக்டராக வந்த தன் மகளை கண்டு பெற்ற மனம் பெருமை அடைய,அவள் சென்றபோது அவதூறு பேசியவர்கள் வாயடைத்து நின்றனர். இப்போது ஊரே அவளை கொண்டாடியது.


  முதலில் ஊரில் இருந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக மாற்றினாள்.. ....பெண்களுக்கு காட்டாய கல்வி,தற்காப்பு கல்வி கொண்டு வந்தாள். கைத்தொழில்கள் கற்று கொடுத்து ஊர் மக்களின் வருமானத்திற்கு வழிவகுத்தாள்.. மூன்று மாதத்திற்கு ஒருமுறை இலவச மருத்துவமுகம் ஏற்பாடு செய்தாள்.. தனி தீவாக இருந்த ஊர் செவந்தியின் முயற்சியால் இன்று அந்த கிராமும் தமிழ் நாட்டின் சிறந்த கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.


  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற சாத்திரம் பேசுபவர்களின் முன்னால் பல போராட்டங்களுக்கு நடுவே செவந்தியும் சாதித்து காட்டினாள்.


  இன்று கனவுகளை சுமந்து நிற்கும் பெண்கள் மனதிள் செவந்தி ஒரு உதாரண பெண்ணாக இருக்கிறாள்.


  அன்புடன்
  லஷ்மி ரவி


  friends இது என்னோட முதல் சிறுகதை....இதனால் எனக்கு கிடைத்த அனுபவமோ ஒரு மெகா கதை....ஹஹஹஹா....படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கப்பா ....

  Drop your comments for this Short Story in the below link:

  திருப்புமுனை - Lashmi

  Moderator Note:

  This Article has been published in
  Penmai eMagazine Dec 2013. You Can download & Read the magazines HERE.  Last edited by gkarti; 10th Jul 2014 at 04:03 PM. Reason: Comments Page Link Added
  அன்புடன்
  லஷ்மிரவி  நான் எடுக்கும் முடிவு
  சரியா என்று எனக்கு தெரியாது.

  ஆனால் எடுத்த முடிவை
  சரியாக்குவேன்.....
  .


  --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர் 8. #18
  Prathyuksha's Avatar
  Prathyuksha is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2013
  Location
  Chennai
  Posts
  6,226

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை  வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்துக் கதவைத் தாழிட்டான். வீடு என்றுக் கூற முடியாது ஒரு அறை மட்டுமே. அதுவும் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாகக் காட்சியளித்தது.


  தோளில் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த பையைக் கழட்டி கட்டிலில் வைத்தான். அருகிலிருந்த பாட்டிலில் கடைசி சொட்டு தீரும் வரை தண்ணீரைக் குடித்து முடித்தான். வெளியே அடித்த வெயிலில் கருகிய உடல் அந்தத் தண்ணீரால் குளிர்ந்தது.


  பர்சை எடுத்துப் பார்த்தான். ரூபாய் நோட்டுகளை விட பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தன. ஒரு வருடம் முன்பு எப்படியும் இயக்குனர் ஆவேன் என்று வீட்டை விட்டு வந்தபோது எடுத்தது முதல், ஒவ்வொரு தயாரிப்பாளரை தேடி இயக்குனர் வாய்ப்புக் கேட்டு, இயக்குநர்களைத் தேடி உதவி இயக்குனராகும் வாய்ப்புக் கேட்டு, சில சமயம் இவர்களைப் பார்ப்பதற்காக பலரை சந்தித்து…


  நீண்டப் பெருமூச்சை வெளியிட்டு அவையனைத்தையும் எடுத்து ஒரு நோட்டுப் புத்தகத்துக்குள் பத்திரப் படுத்தினான். கைபேசி அலறியது. அழைப்பது அவனுடைய அப்பா தான். அதை எடுக்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எடுத்தாலும் என்னக் கூறுவான்?


  தன் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் இந்த நிமிடம் வரை தன்னைச் சுமந்து வரும் தந்தை... எண்ணிப் பார்த்தால் அவர் இல்லையென்றால் தனக்கு இந்தத் தன்னம்பிக்கை வந்திருக்காது என்றேத் தோன்றியது.


  கதவுத் தட்டப்படும் ஓசைக் கேட்டது. திறந்தபோது கையில் ஒரு குறியரைத் திணித்துக் கையெழுத்து வாங்கிப் பறந்துச் சென்றான் ஒருவன். முரளி – கவரில் இருந்த தன் பெயரை ஒரு முறை வருடி விட்டு முகவரியைப் பார்த்தான்.


  எத்தனை நாளைக்கு தான் அப்பாவைக் கஷ்டப்படுத்துவதென்று மருகிய சமயம். போன மாதம் ஒரு மாத இதழில் அறிவித்திருந்த புகைப்படப் போட்டிக்கு தான் தினம் சுமந்து நடக்கும் பையினுள் தன் கதைக்காக லொகேஷன் தேடி அலைந்து எடுத்தப் புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பியது நினைவுக்கு வந்தது. இப்போது அந்த போட்டிக்கான பதில் வந்திருக்கிறதென்று நினைத்தான்.


  கவரைப் பிரித்த போது அந்த பிரபலமானப் பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக சேருவதற்கான ஆர்டர் இருந்தது. விடாமல் அடித்துக் கொண்டிருந்த கைபேசியை எடுத்து “அப்பா என் dslr கு இன்னொரு கிட் லென்ஸ் வாங்க போறேன் பா...” என்றுக் கூறினான் முரளி.


  அவனுடைய கதைக்கு உயிர் கொடுக்கும் என்று நினைத்த புகைப்படங்கள் அவன் தந்தையின் கஷ்ட்டத்திற்கு வடிகாலாய், அவன் வாழ்க்கைக்கு அர்த்தமாய் மாறிப் போனதை உணர்ந்தான் அவன்.


  -Prathyuksha  இது என்னுடைய முதல் சிறுகதை. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதியவும்.


  திருப்புமுனை - Prathyuksha
 9. #19
  sowmiyaksr is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  chennai
  Posts
  16

  Re: Penmai Special Contest - Short Story Contest

  Author: Sowmiya
  Title:Thiruppumunai


  விடியலுக்கு வெகுநேரம் முன்பே அங்கு குழுமியிருந்த பலருக்கும் உறக்கம்
  கலைந்து விட்டிருந்தது . மன்னன் இளம்சேட்சென்னியின் இறப்பிற்கு பின் , சோழ
  நாட்டிற்கு முடிசூடிய இளவரசன் கரிகாலனுக்கு இடைவேளை இல்லாமல் போர்கள்
  அணிவகுத்தன .குறுநில மன்னர்களை வெற்றி பெற்ற பின்னும் பலருக்கும் கரிகாலனின்
  வீரத்தின் மீது நம்பிக்கை வரவில்லை . அதனால் வந்தது வெண்ணிப்போர் . சேரர்கள் ,
  பாண்டியர்கள், உடன் சொந்த நாட்டு சிற்றரசர்கள் என அனைவரையும் ஒரே நேரத்தில்
  சந்திக்கும் வாய்ப்பை கொடுத்தது வெண்ணி நிலம்.


  சோதிடர்கள் ,பண்டிதர்கள்,அமைச்சர்கள் ,மக்களால் நம்பப்பட்ட நிமித்தங்கள்
  அனைத்திற்கும் மாறாக கரிகாலனின் படை வெற்றியை முன்னேறி கொண்டிருந்தது .
  இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றி நமதாகி விடும் என்ற இலக்கை நோக்கி தான் அந்த
  விடியல் தொடங்கி இருந்தது.


  தனது வாளின் கறைகளை பார்த்தபடி கரிகாலன் சிந்தித்து கொண்டிருந்த பொழுது
  யாரோ பின்புற தோளில் தட்டினார்கள்.வினய் நின்றுக் கொண்டிருந்தான். என்ன
  அருண்? பேசாம IT adminக்கு 12 hour ஷிப்டுக்கு பதிலாக 24 hour மாத்திடலாம என
  கேட்டு சிரித்தான் . வேறு வழியில்லாமல் வெண்ணிப் போரை நாளை தொடர்ந்து
  கொள்ளலாம் என கரிகாலனிடம் சொல்லி விட்டு வினய்யுடன் வீட்டிற்கு கிளம்பினேன் .

  இப்படி சொல்வதால் , நான் ஏதோ சரித்திர கதை பைத்தியம் என்றோ, கல்கி ,
  அகிலனின் தீவிர வாசகன் என்றோ எண்ண வேண்டாம் . பெரிதும் இல்லாத, சிறிதும்
  இல்லாத தமிழ்நாட்டில் இருந்தபடி ஐரோப்பாவின் நுகர்வோர்களை திருப்திபடுத்தி
  கொண்டிருந்த ஒரு callcenterஇன் IT அட்மின்.எல்லா நாளும் போல் முகநூலில்
  நண்பர்களின் மொக்கை ஸ்டேட்டஸ்களை லைக்கி கொண்டிருந்த பொழுது , எனது பாஸ் ரவி
  என்ற ரவீந்திர குப்தா , server 21 ஏன் slow ஆக உள்ளது என கேட்டார்.

  NOC மானிட்டர்களை பார்த்த பின்,சர்வர் 117இல் உள்ள applicationஐ நிறைய
  பேர் பயன்படுத்துவதால் , அதன் database server 209இல் load அதிகமாக உள்ளது.
  அதனால் இவற்றின் load balancer ஆன சர்வர் 19...

  வாட் தி ஹெல் ? 117,207,147.. இதெல்லாம் வீட்டு நம்பரா இல்ல போலீஸ்
  கான்ஸ்டபிளா ? ஒண்ணு செய் . அவற்றிக்கு எல்லாம் சர்வீஸ் category படி பேர்
  கொடுத்திடு . with hierarchy ..

  with hierarchy??? என நான் யோசிக்கும் முன்பே ரவி ரூமை விட்டு வெளியேறியதை
  கதவு சத்தம் சொன்னது.


  ஆக அடுத்து வந்த ஒரு வாரமும், அந்த பெரிதும் இல்லாத, சிறிதும் இல்லாத (இதை
  படிக்கையில் அம்மாவின் மைனாரிட்டி அரசு வசனம் நினைவு வந்தால் கம்பெனி பொறுப்பு
  அல்ல.) சுமாரான நிறுவனத்தின் 258 sever களுக்கும் பெயர் சூட்டும் பணியில்
  ஈடுபட்டிருந்தேன் . நதிகள் ,விலங்குகள் ,கிரகங்கள் இப்படி வகை வகையாக ..

  ஒரு serverஇன் கீழ் இனைந்து உள்ள பலவற்றிற்கு அரசர்களின் பெயர்களை சுட்டலாம்
  என ஆயிரத்தில் ஒருவனை இந்திய தொலைக்காட்சிகளில் இரண்டாவது முறையாக பார்த்து
  கொண்டிருக்கையில் தோன்றியது.

  அதன்படி விக்கிபீடியாவின் துணையுடன் அரச பரம்பரைகளை தேர்நதெடுத்து பெயரிட
  ஆரம்பித்தேன். எத்தேசையான கவனத்தில் முதலாம் ஆதித்தருக்கு பின் இரண்டாம்
  ஆதித்தரின் பெயர் லிஸ்ட்டில் இல்லாதது உறுத்தியது . இரண்டாம் ஆதித்த சோழன்
  என்று தேடியதற்கு google அத்தனை தேடி கொடுக்கும் என்று எதிர் பார்க்கவில்லை .

  பெரிய கோவிலை கட்டி , தஞ்சையை ஆண்ட முதலாம் ராஜராஜனின் தமையன் , இரண்டாம்
  ஆதித்தன் .வீரபாண்டியனின் தலையை கொய்த பட்டத்து இளவரசன் . பட்டத்துக்கு
  வருவதற்கு முன்பே கொல்லப்பட்டான் . கொன்றது நந்தினியா, பாண்டியர் சதியா ,
  உத்தம சோழனா , ராஜராஜனா ,குந்தவையா என யாஹூவில் ஆரம்பித்து ஆர்குட் வரை காவிரி
  பிரச்சனை போல் தீர்க்க படாத விவாத பொருளாகி இருந்தது .

  இளம் வயதிலேயே இறந்த ஆதித்தனின் மேல் எழுந்த அனுதாபங்களினால் எஞ்சியிருந்த
  firewall serverக்கு ஆதித்தனின் பெயரை சூட்டினேன் .

  சிறப்பாக முடிக்கப்பட்ட பெயர் சூட்டும் பணி, பெரிய பாராட்டுகள் ஏது ம்
  இல்லாமல் முடிவடைந்தது. serverகள் அதன்பிறகு மரியாதையுடன் அழைக்கப்பட்டார்கள் .

  சில மாதங்களுக்கு பிறகு ,NOC monitorஇல் ஆதித்த கரிகாலன் (server தான் )
  உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. பொழுது போகாத யாரோ ஒரு கால்
  சென்டர் ஏஜென்டின் வீடியோ டவுன்லோட் , வைரஸை உள்ளே அழைக்க , தன்னால்
  பாதுகாக்கப்பட்ட ராஜராஜனையும் ,குந்தவையையும் ,உத்தமனையும் காப்பாற்ற ஆதித்தன்
  போராடி கொண்டிருந்தது .


  கொஞ்சம் கொஞ்சமாக நெட்வொர்க் down ஆகி , ஒட்டுமொத்த கம்பெனியையும் ஸ்தம்பிக்க
  வைக்க போகிறது என நான்,வினை,ரவி மற்றும் பலரும் ஏதேதோ வித்தைகளை முயற்சித்து
  கொண்டிருந்தோம்.

  வேறு வழி இல்லாமல்,போராடிக் கொண்டிருந்த ஆதித்தனை கொன்று , வைரஸையும்
  அழித்து, மட்ட்ரவர்களை காப்பற்றினோம். மிகப் பெரிய விபத்தை தவிர்த்தர்க்காக
  ரவியுடன் KFCயில் ட்ரீட்டுக்கு சென்றோம். மீண்டும் ஒருமுறை googleஇடம் சொல்லி
  , ஆதித்த கரிகாலனை தேடினேன். பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவாதங்களுக்கும்
  பின்னோட்டம் அளித்தேன் .

  "ஆதித்த கரிகாலனை கொன்றது அவனது வீரம்."

  சிக்கனை மறுத்து புன்னைகையுடன் எழுந்த என்னை ஏன் என்பது போல் பார்த்த
  வினயிடம் ,
  ஆதித்தனுக்கு அஞ்சலி என்றபடி கிளம்பினேன். அன்றிலிருந்து தேடித் தேடி சோழர்களை
  படித்து , அறையெங்கும் பேரிகை ,தூரிகை இன்னும் பலவகை வரலாற்று நூல்களாலும்
  நிறைத்து ...

  இதோ அறை வந்து விட்டது . வெண்ணி போரை தொடர வேண்டும் . களத்தில் பார்க்கலாமா?

  Drop your comments for this short story in the below link:

  திருப்புமுனை - Sowmiya


  Last edited by Parasakthi; 27th Sep 2013 at 04:01 PM. Reason: Comments Page Link Added

 10. #20
  sbsudha's Avatar
  sbsudha is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sudha Sivadas
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Chennai
  Posts
  3,942
  Blog Entries
  6

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை - சுதா சதாசிவம்

  கல்லூரியிலிருந்து வீட்டை அடைந்த சஞ்சலாவுக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
  “வாடீ பொண்ணே, நீ ரொம்ப அதிருஷ்டகார பொண்ணுடீ” என்று முகம் வழித்தார் அவளது பாட்டி
  “என்ன பாட்டி?” என்றாள் ஆவலுடன்.
  “உனக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்குடீ” என்றார்.
  “என்னது சம்பந்தம், கல்யாணத்துக்கா பாட்டி, இப்போவேயா, என்ன பாட்டி இது..... நான் இப்போதானே ரெண்டாவது வருஷம் படிக்கிறேன், அதையானும் முடிக்க விடுங்களேன்” என்றாள் மெல்லிய குரலில்.

  பெரியோர்களை எதிர்த்து பேசி அவளுக்கு பழக்கமில்லை அப்படி வளர்க்கப்படவும் இல்லை. கொஞ்சம் டிமிட் தான்.
  அவளது எந்த தடையையும் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
  ஸ்ரீதர் வந்தான், பெண் பார்க்கும் படலம் தடபுடலாக நடந்து முடிந்தது. பெண்ணை பிடித்திருக்க உடனே முகூர்த்தம் வைக்கப் பட்டது.
  கல்யாண நாளும் வந்திட ஸ்ரீதர் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.
  முதல் இரவு, “பாதியில படிப்பை நிறுத்திட்டோம்னு உனக்கு வருத்தம் உண்டா சஞ்சு?” என்று கேட்டான்.
  “கொஞ்சம்” என்றாள்
  “மேலே படிக்கச் ஆசைபட்டா நீ படிக்கலாம் சஞ்சு, எனக்கு மார்கெடிங் ஜாப், மாசத்துக்கு இருபது நாள் டூர்லேயே போய்டும்.... நீயும் ஆத்துல போர் அடிச்சு போய்தானே இருப்பே, அதுக்கு டிக்ரீயானும் முடிச்சுடலாமே” என்றான் அவள் கன்னங்களை வருடியபடி. அவள் யோசனையாக அவனை பார்த்தாள்.

  அடுத்த நாள் அதே விஷயத்தை அவன் வீட்டில் பேச பூகம்பம் வெடித்தது. “என்னடா, முதல்நாளே மந்திரம் ஓதிட்டாளா, கல்யாணம் ஆயிடுத்து.... இனி படிக்கறதாவது.... ஆத்துல இத்தனை காரியம் இருக்கு...” என்று அடக்கினாள் மாமியார்
  மாதம் இருபது நாளும் வேலை மேல் பறந்தான்.... மிச்ச நாட்களில் அவளிடம் அன்பாக இருந்தான்.... அந்த சிறு இன்பம் கூட யாருக்கோ பிடிக்காமல் போனது போலும், விமான விபத்தில் கரிகட்டையாக எரிந்து சாம்பலானான்.

  துக்கிரி, ராசி இல்லாதவள்.... யமனுக்கு வாரி குடுத்தவள்... பீடை.... என்ற பல சுடு சொற்களும் வாங்கிக்கொண்டு, என்ன நடந்தது என சரியாக புரியாமல் கூட மணம் ஆன மூன்றே மாதங்களில் பொட்டும் பூவும் இழந்தாள் சஞ்சலா.

  “உங்காத்து பெண் இங்கே எதுக்கு, உங்காத்துக்கே அழச்சுண்டு போய்டுங்கோ” என்று துரத்தி விட்டனர்.
  அங்கே வந்தும் மறைமுகமான பேச்சுகள்.
  “நீ ஏம்மா கிளம்பறச்சே எதிர்ல வந்துண்டு....?” என தந்தையே அதட்டினார்
  தாள முடியாமல் அடுக்களையோடு அடைந்தாள்.... அன்னைக்கு உதவினாள்... தங்கைகளை பள்ளிக்கு அனுப்பினாள்.... அவளது சிரிப்பும் பேச்சும் குறும்பும் எங்கேயோ ஓடி மறைந்தன....

  அவள் கல்லூரியில் அவளது திறமைக்காக வாங்கிய ஷீல்டுகளும் மெடல்களும் இப்போது அவளை பார்த்து சிரித்தன.... இனி தன் வாழ்வு என்ன என்று யோசிக்க கூட திறன் இன்றி இருட்டு மூலையில் அடைந்து கிடந்தாள் சஞ்சலா.... யாரிடமும் எதுவுமே பேசக்கூட முடியாத நிலை....
  ‘டிக்ரீயானும் முடித்திருந்தால் ஏதேனும் வேலைக்கானும் போகலாம், இவ அத கூட முடிக்கலையே’ என்றார் மாமா. என்னவோ இவள் தான் கொழுப்பெடுத்து படிப்பை துண்டித்ததுபோல.

  அந்த வாரத்தில் அவளை துக்கம் கேட்கவென அவளது கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் விஷ்ணு வீட்டிற்கே வந்திருந்தார்.
  “என்ன இது, பொம்மனாட்டியை பார்க்க ஆத்துக்கே வர்றதுன்னு வழக்கம்...?” என உள்ளே முணுமுணுத்தாலும் கையில் காபியுடன் “வாங்கோ உக்காருங்கோ” என்றாள் அன்னை. அவள் மெல்ல எழுந்து வெளியே வந்தாள். கசங்கிய மங்கிய காட்டன் புடவை இழுத்து போர்த்திக்கொண்டு அவர் முன் பாழ் நெற்றியும் கலைந்த தலையுமாக வந்து நின்றவளை கண்டு அந்த பேராசிரியரின் உள்ளம் கொதித்து போனது.

  சல்வார்களும் ஷிபான் புடவைகளும் நீட்டாக உடுத்தி கண்ணில் அறிவு களையும் அதே சமயம் குறும்பும் கூத்தாட வகுப்புகளில் டான் டான் என பதில் கூறும் சஞ்சலவை தான் அவருக்கு தெரியும்.
  “என்னமா இது கோலம்?” என்றார். அவள் தலை குனிந்தாள்.
  “இப்படியே இருக்க போறதா உத்தேசமோ?” என்றார் குரல் கேலிபோல தோன்ற ஏறெடுத்து பார்த்துவிட்டு கவிழ்ந்துகொண்டாள்.

  “இப்போதைக்கு சமையல் அறையில தஞ்சமாக்கும், அடுத்து என்ன அப்பளம் பண்ணி விற்க போறியா, இல்லை ஊருகாயா.... இன்னும் மொட்டை அடிச்சு முக்காடு போட்டுக்கலையா?” என்றார். குரலில் காரம் ஏறி இருந்தது... அவள் அதிர்ந்து போய் பார்க்க,
  “என்ன பார்க்கிறே, நான் சொன்னதுல எதுவும் தப்பு இருக்கா, எந்த லோகத்தில இருகீங்கம்மா நீங்க எல்லாம்..... ஆறே மாசம் முன்னாடி நீ எப்படி இருந்தேன்னு யோசிச்சியா.... இந்த இருபத்திரெண்டாம் நூற்றாண்டில விதவைனா இப்படித்தான் எல்லாரும் இருக்காங்களா..... உன் அறிவு உன் திறமை உன் குறும்பு பேச்செல்லாம் எங்கே போச்சு.... அதோ, அலமாரி நிறைய அடுக்கி வெச்சிருக்கியே கப்பும் மெடலும்... அதெல்லாம் நீதான் வாங்கினேன்னு உனக்கு நினைவானும் இருக்கா சஞ்சலா?” என்றார் அதிகாரமாக.

  “அதுக்கு இப்போ என்ன பண்ண முடியும் சார்? எல்லாம் என் தலை எழுத்து என்றாள்.
  “பேஷ், ரொம்ப நல்லா இருக்கு உன் பதில்..... இப்படியே இரு, ஒரு நாள் இருட்டோட இருட்டா மடிஞ்சு போய்டலாம்..” என்றார் கண்ணில் வேதனையுடன்.
  அவள் கண்ணீர் உகுத்தாள். “வேற என்ன.... நான்...?” என்றாள் விக்கியபடி.

  “ஏன், படி.... மேலே படி, நீ ஐ ஏ எஸ் பண்ணனும் னு நான் ஆசைப்பட்டேன் சஞ்சலா..... அதுக்குண்டான எல்லா தகுதியும் உன்கிட்ட இருந்தது.... நீ டிக்ரீ முடித்ததும் உன்னை ஐ ஏ எஸ் சேர்க்க சொல்லி நானே உன் தந்தையிடம் வந்து பேசலாம்னு இருந்தேன்.... திடீர்னு கல்யாணம் னு வந்து நின்னே, எனக்கு வெறுத்து போச்சு..... ஆனா இப்போ நீயா.... இப்படியான்னு எண்ணும்போதே எனக்கு வேதனையா இருக்கு.... ப்ளீஸ் நல்லா யோசிமா, மேலே படிமா, ஐ ஏ எஸ் பண்ணு. நான் உதவி பண்ணறேன் மா” என்றார்.

  அவள் ஒரு பக்கம் அதிர்ச்சியும் ஒரு பக்கம் ஆச்சர்யமுமாக அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
  “சார், நானா, ஐ ஏ எஸ் ஆ என்ன சொல்றீங்க?” என்றாள்.
  “ஏன் உன்னால முடியாதா, அப்போ உன் இஷ்டம்.... அப்பளம் இட்டு எனக்கும் ஒரு கட்டு அனுப்பீடு” என்றபடி ஒரு வித கசப்புடன் சட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
  அவள் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தாள்... இரவெல்லாம் யோசித்து முடிவெடுத்தாள்.

  அடுத்த நாள் தந்தை முன் சென்று நின்றாள்.
  “அப்பா நான் என் படிப்பை தொடரலாம்னு.....” என்றாள்.
  “என்னத்துக்கு அதெல்லாம்..... என்றாள் தாய்.
  “ஆமா மா” என்றார் தந்தை.
  “இல்லைப்பா நான் டிக்ரீ முடிக்கணும்.... மேலே ஐ ஏ எஸ் படிக்கணும் பா” என்றாள் உறுதியாக.
  “என்னது கலெக்டர் படிப்பா.... அதுகெல்லாம் எவ்வளோ செலவாகும் எவ்வளோ வருஷமாகும் தெரியுமா?” என்றார் அவர்.
  “தெரியும்பா, எனக்கு நல்ல மார்க், நிச்சயமா உதவி பணம் கிடைக்கும்.... என் ஆசிரியர் உதவி பண்ணுவார்.... நான் படிக்கணும்பா.... நீங்க என்ன சொன்னாலும் நான் இதுவரை கேட்டேன், கல்யாணம் முதற்கொண்டு, நான் சொல்றத நீங்க இப்போ கேளுங்கோ என்னை படிக்க விடுங்கோப்பா” என்று மன்றாடினாள்.

  அவள் உறுதியாகவே நின்றாள். அடுத்த நாள் கல்லூரியை விட்ட இடத்தில தொடர்ந்தாள்..... விஷ்ணுவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.... எல்லாவிதமாகவும் உதவினார்.... நோட்ஸ், லைப்ரரி புத்தகங்கள், விளக்கங்கள் என டிக்ரீ முடிந்த பின்னும் ஐ ஏ எஸ்கும் உதவினார்.
  இதோ இன்று பேப்பரில் தமிழக ஐ ஏ எஸ் முடிவுகளும் போஸ்டிங்கும் வெளியாகி இருக்க,
  “பார்த்தியா விசாலம், எம் பொண்ணு கலேக்டர்” என்று பெருமை பேசுகிறார் அதே தந்தை.
  அவள் மட்டும் உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள். அன்று அவள் வாழ்வின் திருப்புமுனையாக பேராசிரியர் விஷ்ணு வந்து பேசி இருக்காவிடில் சமையல் அறையின் இருட்டு மூலையில் முடிந்து போயிருக்கும் அவளது வாழ்வு.

  குறிப்பு: இந்த நூற்றாண்டிலும் இருட்டு மூலையில் அடைந்து கிடக்கும் விதவை பேதைகளுக்கு என் சமர்ப்பணம். அவர்கள் வாழ்வும் விஷ்ணுவைப் போன்ற ஒரு பேராசிரியரால் மலரட்டும்... நன்றி

  Drop your comments for this short story in the below link:

  en mudhal short story Thiruppumunai
  Last edited by sumathisrini; 30th Sep 2013 at 10:08 AM. Reason: Comments Page Link Added

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter