Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree838Likes

Penmai Special Contest - Short Story Contest


Discussions on "Penmai Special Contest - Short Story Contest" in "Special Contest" forum.


 1. #21
  ramyas's Avatar
  ramyas is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Ramya Swaminath
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  Chennai
  Posts
  16,126
  Blog Entries
  75

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை

  அன்று காலை தயார் செய்த வத்தல் எல்லாம் காய போட்டுவிட்டு, வைஜெயந்தி கீழே இறங்கி வந்தார்.


  அவரது தம்பி ராஜேஷ் சோர்ந்த முகத்துடன், ஹாலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் முகத்தை பார்த்த வைஜெயந்தி, என்ன ராஜேஷ்... இன்னிக்கும் சொல்லிக்கற அளவுக்கு ஒன்னும் போகலையா என்று கேட்டு, அவன் அருகில் தரையில் அமர்ந்தாள்.

  இல்லக்கா ஒண்ணுமே போகல. ரொம்ப கவலையா இருக்குக்கா. இத்தனை நாள் ஏதோ வாய வயித்த கட்டி தினுவ படிக்க வச்சிட்டோம். அவன் சொல்ற காலேஜ்ல மேல படிக்க வைக்க நிறைய செலவாகும்.
  என்ன செய்யறதுன்னே தெரியலகா. தினு அங்க தான் படிக்கணும்னு பிடிவாதமா இருக்கான் என்றான் ராஜேஷ்.

  நீ அவன்கிட்ட சரின்னு வேற சொல்லிருக்க. இப்ப பணத்துக்கு எங்க போறது. எனக்கும் ஒன்னும் புரியல. ஏதோ ரெண்டு கடையிலயாவது வியாபாரம் ஆகும்னு பார்த்தா ஒருத்தரும் வாங்க மாட்டேங்கிறாங்க.
  பேசாம நான் சமைக்கவே போக ஆரம்பிக்கிறேன். போன மனுஷன் எதையாவது வச்சிட்டு போயிருந்தா உபயோகமா இருந்திருக்கும். கடன இல்ல வச்சிட்டு போனார் என்று புலம்பிக்கொண்டே சமையல் அறைக்குள் செல்ல, ராஜேஷ் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

  அவனுக்கு வைஜெயந்தியின் டாக்டர் கூறியது நினைவு வர, அடுத்து என்ன செய்வது என்று யோசனையில் ஆழ்ந்தான்.

  நானும் இன்னும் படிப்பு முடிக்கல. நான் வேற வேலை தான் தேடனும். அக்கா இதுக்கும் மேல புகைல இருந்தா உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொல்லிருக்காங்க. அக்கா உடம்பு தாங்குமா என்று பல்வேறு யோசனையில் மூழ்கியிருந்வன் யோசனையை கலைத்தது கதவை தட்டும் சத்தம்.

  திரும்பி பார்த்த ராஜேஷ் ஆவலுடன், என்னங்க.... ஏதாவது சரக்கு வாங்க வந்திருகிங்களா? எவ்வளவு வேணும் என்று கேட்க

  தயக்கத்துடன் அவனை ஏறிட்ட அந்த கடைப்பையன், இல்ல அண்ணே.... எதுவும் போக மாட்டேங்குது. எதுக்கு கடைய அடைச்சிகிட்டு இருக்கணும்னு அண்ணாச்சி கொடுத்து விட்டாங்க. நான் ஒரு பாக்கெட் எடுத்துக்கவா அண்ணே என்று கேட்டு அவன் நெளிய

  ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டு, ம்ம் என்று தலையாட்டி முனகிவிட்டு, அந்த பையன் கொண்டு வந்த கவர்களை எடுத்து உள்ளே வைத்தான்.

  இதை பார்த்துக்கொண்டிருந்த வைஜெயந்திக்கு கோபமும் அழுகையும் ஒருங்கே வர, இது எல்லாத்தையும் தூக்கி குப்பயில போட்டு வா.... எதுவும் நமக்கு வேண்டாம். பட்டினி கிடந்தே செத்து தொலையலாம் என்று கத்திக்கொண்டே சமையல் அறைக்கு சென்றாள்.

  ராஜேஷும் எப்படி அன்னையாக பாசம் காட்டி வளர்த்தவளை தேற்றுவது என்று தெரியாமல் தொய்ந்து போய் அமர, வாசலில் பைக் நிற்கும் சத்தம் கேட்டது.

  ஹாய் மாமா.... என்ன இன்னிக்கு எங்கயும் வெளிய போகலையா. அந்த அழுக்கு பைய தூக்கிட்டு போவியே..... இன்னும் கிளம்பலையா..... சரி உன் அரியர் பேப்பர் எப்ப கிளியர் பண்ண போற. நீ என் கூட படிக்க ஆரம்பிச்சி... நான் மேல படிக்க போறேன். நீ ஒரு வருஷத்த முடிக்கல. சரி அம்மா எங்க என்று கேட்டுக்கொண்டே சமையலரைக்குள் நுழைந்தான்.

  அங்கு வைஜெயந்தி முகத்தினை துடைத்துக்கொண்டு, வா தினு... சமையல் செஞ்சிடறேன். சாப்பிடலாம்.... இன்னிக்கு எப்படி எழுதிருக்க பரீட்சை என்று கேட்டு, அவன் முகத்தை தன் முந்தானையால் துடைத்து விட்டார்.

  அம்மா இன்னிக்கு சாயந்திரம் பிரெண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுக்கணும். ஒரு ரெண்டாயிரம் கொடுங்க. கடைசி எக்ஸாம் முடிஞ்சுதில்லை. அது எல்லாம் ஓகே தான் மா. எப்படியும் இதுல ஒரு சப்ஜெக்ட் ஊத்திக்கும். எனக்கு ஒரு ஐயாயிரம் வேணும்மா. எப்படியாவது பேப்பர் ட்ரேஸ் பண்ணி பாஸ் பண்ணிட்டு அந்த காலேஜ்ல போய் சேரனும். எப்படி இருக்கு தெரியுமா காலேஜ். அங்க போனாலே தனி கெத்து மா என்று கனவு கோட்டையில் மிதந்தான்.

  ஒழுங்கா படிக்காம ஊர சுத்திட்டு இப்ப வந்து காசு கேட்டா எப்படி தினு என்று ராஜேஷ் கேட்க

  நீ எல்லாம் அரியர் பத்தி பேசறியா. வாழ வழியில்லாம எங்க கூட வந்து தங்கி எங்க அம்மாவ கஷ்டபடுத்திட்டு.... நீ எனக்கு அட்வைஸ் செய்யறியா. நான் எங்க அம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ தான் அழுக்கு பைய தூக்கிட்டு எங்க போறியோ... இன்னும் முதல் வருஷமே முடிக்காத நீ என் கிட்ட பேச வந்தியா என்று ராஜேஷிடம் கேட்டுவிட்டு தன் அன்னையை பார்க்க, வைஜயந்தியின் கரம் அவன் கன்னத்தில் பதிந்தது.

  அம்மா என்று அதிர்ச்சியில் தினு கூவ
  அவன பத்தி என்னடா சொன்ன.... ஓட்ட தெரியாம வண்டிய ஓட்டிட்டு கால ஒடைச்சிட்டு படுத்தியே... அதுனால தான் அவனுக்கு அந்த எக்ஸாமுக்கு படிக்க முடியாம போச்சு.

  அவன் ஒண்ட நிழல் இல்லாம இல்லடா. நாம தான் அப்படி இருக்கோம். உங்க அப்பா வச்ச கடனுக்கு... எங்க அப்பா அம்மா அவனுக்கு வச்சிட்டு போன பணத்தையும், நீ அடம் பிடிச்சி சேர்ந்தியே இந்த காலேஜ்க்கு அவனுக்கு இருந்த வீட்டையும் வித்து தான் டா உன்னை படிக்க வச்சான்.

  நீ சொன்னயே அழுக்கு பை.... அது தான் உன் ஆடம்பர செலவுக்கு பணம் தந்துச்சு. அவன் படிப்ப கூட யோசிக்காம அவன் உன்னை படிக்க வைக்கிறான் பாரு, நீ இதும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ.. இங்க பாரு இந்த என்று கூறி ஒரு பத்து வத்தல், அப்பளம் பாக்கெட் எல்லாம் எடுத்து அவன் கையில் கொடுத்து

  இதுல பாதியாவது வித்துட்டு வா.... நீ கேட்கற பணம் உனக்கு நான் தரேன் என்று கூறிவிட்டு மாடிக்கு சென்றார்.

  தன் அன்னை தன்னை அடித்த கோபத்தில் இருந்த தினு, ராஜேஷை முறைத்துவிட்டு, தன் தாய் கொடுத்த பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

  இதுல விக்கறதுக்கு என்ன இருக்கு. ஒன்னு சாம்பிள் கொடுத்து... ஒன்னு விக்க அப்படின்னு சொன்னா கொடுத்துட்டு போறான் என்று
  நினைத்துக்கொண்டு ஒரு கடையேற

  இந்த பாக்கெட் தான் கொண்டு வராதன்னு சொன்னேன் இல்ல. ஆள் மாத்தி விட்டா வாங்கிடுவோமா என்று ஒரு கடையிலும்

  இத எல்லாம் யாரு தம்பி வாங்குவா... போங்க என்றும் அவனுக்கு மறுப்பே பதிலாக வந்தது. ஒரு கடையில் கெஞ்சி ஒரு இரண்டு பாக்கெட்டை சாம்பிள் கொடுத்துவிட்டு, மற்றொரு கடைக்கு ஏறினான்.

  எல்லாவற்றிற்கும் முத்தாய்பாக, உங்க அம்மா வரலையா தம்பி.... அவங்கள பார்த்தா இப்படி ஒரு பையன் இருக்க மாதிரியே தெரியலையே. அவங்கள எடுத்துட்டு வர சொல்லு... நான் வாங்கிக்கிறேன் என்று அந்த கடைக்காரர் வழிசலுடன் சொல்ல, தினு அதிர்ந்து போய் தன் வீட்டிற்கு திரும்பினான்.

  அவன் மனதில், தான் நடந்துக்கொண்ட முறை அனைத்தும் நினைவு வர, தன் மாமனின் முயற்சியும், தன் அன்னையின் உழைப்பும் நினைவு வந்து கண்கலங்கியது. என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்தவன் தன் அன்னையை அமர வைத்து கால் பிடித்து விட்டான்.

  அவன் மன மாற்றத்தை அறிந்துக்கொண்ட இருவரும் நிம்மதியுடன் புன்னகைக்க, இது போதாதென்று தினு ஒரு சிறுதொழில் அதிகாரியை சந்தித்துப்பேசி லோன் பெற்று, அழகான லேபில் ஒட்டி, புதியதாக உருவம் மாற்றி விற்பனைக்கு அனுப்ப, அது பெரும் வரவேற்பைப்பெற்றது.

  அவர்கள் தொழில் மென்மேலும் பெருக, ராஜேஷையும் கூட்டு சேர்த்து, பாங்கில் லோன் எடுத்து, ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்புகளை செய்து, VJ நிறுவனம் என்று ஆரம்பித்து தொழிலில் வெற்றி கண்டான்.
  அன்று தனக்கு இந்த வேகத்தை கொடுத்தது வைஜெயந்தி கொடுத்த ஒரு அறையும், பத்து பாக்கெட் வத்தலும் தான், தன் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்ததை தன் பிள்ளைகளுக்கு கூறி அவன் சிரித்துக்கொண்டிருக்க, வைஜெயந்தி கண்கலங்க, தன் மகனை பார்த்துக்கொண்டு நின்றார்.

  இது என்னுடைய முதல் சிறுகதை. தோழமைகளே தங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதியுமாறு கேட்டுகொள்கிறேன்.

  திருப்புமுனை -- ரம்யா


  Sponsored Links


  Ramya


  சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
  நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
  உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் ....

  Don't Worry............ Be Happy....... 2. #22
  jash's Avatar
  jash is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  saradheya
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  madurai
  Posts
  12,752

  Re: Penmai Special Contest - Short Story Contest

  hi friends

  இது என் முதல் முயற்சி. என் முதல் சிறுகதை. இதற்கு வாய்ப்பளித்த பெண்மைக்கு நன்றி.


  திருப்பு முனை jash


  வீட்டின் சமையலறையின் உள்ளே இருந்து "டேய் இப்பத்தான வந்த அதுக்குள்ள இந்த சாயுங்காலம் எங்க டா கிளம்பற?" என தன் மகனிடம் வினவினாள் செண்பகம்.  "எனக்கு முக்கியமான வேல இருக்கு, போறேன் " என நிற்காமல் பதில் அளித்து விட்டு தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தான் தினேஷ்.


  இவன் கிளம்பும் போது, காம்பவுண்ட் கேட்டை திறந்துக்கொண்டு அவன் அப்பா தர்மலிங்கம் வந்தார். அவன் அவரை கண்டுக்கொள்ளாமல் தன் வழியே பைக்கை உறும விட்டு சென்று விட்டான். பைக் தான் சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் மனமோ இன்று காலையில் நடந்ததை, திருப்பி ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.


  "தினு தினு" என்று சுற்றி வந்தவள், இருவரும் ஒன்றாக சுற்றாத இடமில்லை, பணத்தை பணம் என்று பாராமல், அவளுக்காக அவள் விரும்பிய காரணத்திற்காக பொருட்களை எல்லாம் வாங்கி குவித்தேனே. இப்போது கேட்டால், அவற்றையெல்லாம் குப்பையில் போட்டுவிட்டேன் என்கிறாள்.


  அதானே என்னையே மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டாள், பின் நான் கொடுத்த பொருளுக்கா இடம் தரப் போகிறாள் ??? வீட்டில் பணக்கார மாப்பிள்ளை பார்க்கவும், என்னை விட அவன் பெட்டர் சாய்ஸாக போய்விட்டான். இம்ஹும் பணதிற்காக அலையும் பேய்கள் தான் பெண்கள். சை ! உலகமே பொய்யாகி விட்டது, இந்த உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என தன் போக்கில் நினைத்து கொண்டே சென்றவன், ஸ்பீட் பிரேக்கரை கவனிக்காமல் செல்ல, வண்டி குலுங்கிய குலுங்கலில், வண்டி ஓட்டிய கைகள் தானாக வண்டியை அவன் கட்டுக்குள் கொண்டு வர, அவன் மனமும் நினைவுலகத்திற்கு வந்தது.  எதிரே பார்த்தான் பச்சையும் சிவப்பும் மாறி மாறி ஒளிர்ந்தது, அதன் கீழே "நில், கவனி. செல்" என எழுதப் பட்டிருந்தது. அங்கு ஒரு பள்ளிக்கூடம் இருப்பதால் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
  நில், கவனி, செல் என்ற வாசகம் அவனை ஏதோ செய்ய, வண்டியை ஓரம் கட்டி அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். நாம் கவனிக்காமல் வந்ததால், வண்டியே தன் கட்டுப்பாடில்லாமல் செல்கிறது, நல்ல வேளை நாம் சுதாரித்து கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். இதே போல் தான் வாழ்கையும் என்று சொல்லாமல் உணர்த்துகிறதோ?முன்பே இந்த சிக்னலை பார்த்திருந்தாலோ, அல்லது சாலையை கவனித்து இருந்தாலோ? கவனமாக இருந்திருக்கலாம்.


  அதே நேரம் அருகே இருந்த டீ கடையில், "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?" என்ற பாடல் ஒலித்தது. ஏனோ தனக்காகவே எல்லா வரிகளும் எழுதப் பட்டது போல் இருந்தது. அந்த பாடலை கவனமாக கேக்க ஆரம்பித்தான்.


  உனக்கும் கீழே உள்ளவர் கோடி
  நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என கேட்கவும்......


  அதே நேரம் பள்ளி மாணவர்கள் பள்ளியில் இருந்து சிறப்பு வகுப்பு முடிந்து வெளியே வந்தனர். பின்னே அங்கே பள்ளி வாசலில் ஒரு மாற்றுத் திறனாளி மாங்காய், சுண்டல், பட்டாணி என விதம் விதமாக வைத்து விற்றுக் கொண்டிருக்க, பிள்ளைகளும் அவனிடம் மாங்காய் சுண்டல் என வாங்கி சாப்பிட்டு கொண்டு சென்றனர்.


  குறை உள்ள மனிதனே, அந்த குறை தெரியாமல் மன நிறைவோடு வாழும் போது, எல்லாம் நிறைவாக இருந்தும் நாம் ஏன் மன குறையோடு வாழ்கிறோம் என எண்ணி பார்த்தான். பணம்......... அவன் வாழ்கையில் பணம் தான் பிரச்சனையே! பணத்திற்கு பஞ்சமில்லை, ஆனால் தேவைக்கு அதிகமான பணமும் வாழ்வில் தேவையில்லாத எண்ணங்களையும், வர்ணங்களையும் பூசும்.  சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலை, நல்ல என்பதை விட கைக்கொள்ளா பணம். அத்தோடு மட்டுமின்றி பார்ட்டி, கெட் டூகெதர், மீட்டிங், ஈட்டிங், டிரிங்கிங், என தேவையில்லாத பழக்கங்கள். இங்கே தான் அறிமுகமானவள் லீலா, ஆம் அவன் வாழ்வில் பல லீலைகளை புரிந்து விட்டு, இப்போது எதார்த்தமான வாழ்க்கை வாழ தயாராகிறாள். ஆனால் நானோ அவள் காதல் நடிப்பில் மயங்கின முட்டாளாக வாழ்கையை முடித்துக் கொள்ள தயாராகி விட்டேன்.  இம்ஹும் இந்த கை கொள்ளா பணம் தான், என் குடும்ப கலாச்சாரத்தையும் மாற்றுகிறது, மற்றவர்களை என்னிடம் மயங்கவும் செய்கிறது. இனி இந்த கை கொள்ளா பணத்தை தரும் வேலை வேண்டாம். அளவான குடும்பத்திற்கு போதுமான பணம் இருந்தால் போதும், அதை தரும் வேலை செய்தாலே போதும் என முடிவெடுத்து, தன் வீட்டிற்கு திரும்பினான்.


  pls drop ur comments on the below link frnds

  திருப்பு முனை - jash 3. #23
  sumathisrini's Avatar
  sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,555

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்பு முனை

  வக்கீல் தேவராஜ் தன் இன்னோவாவை போர்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கினார்.

  ‘வணக்கம் எசமான்’ என்றான் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த மருதையன்.

  “ம்.... என்ன மருதையா, திண்டிவனத்துலக் கட்டிக்கொடுத்த உன் பொண்ணு நல்லா இருக்காளா?”.

  “என்னத்தைய்யா சொல்றது.... அப்பப்ப கண்ண கசக்கிக்கிட்டு, மூக்க உறிஞ்சிக்கிட்டு, புருசன் வீட்ல அதக் கேட்டாங்க, இதக் கேட்டாங்கன்னு வந்துடறா... அவள தேத்தி அனுப்பறதே எனக்கும் என் பொஞ்சாதிக்கும் பொழப்பா போச்சு”.

  “ம்... ரொம்ப ராவடி பண்ணினா சொல்லு... வெட்டி விட்டுடலாம்” என்று மேற்கொண்டு அவன் பேசுவதைக் கூட காதில் வாங்க நேரமில்லாமல் விசிலடித்துக் கொண்டே வீட்டில் நுழைந்தார்.

  சோபாவில் ஏதோ யோசனையாக அமர்ந்திருந்த அவர் மனைவி வாசுகி, அவரின் வரவால் தன் நினைவிலிருந்து விடுபட்டு எழுந்தாள்.

  “ஹாய் வாசு... இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... இன்னைக்கு இண்டஸ்ட்ரில பிஸியா இருக்கிற நடிகை ஆதிராவுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்த விஷயத்துல மீடியா பூரா என் பேர் தான் அடிபடுது. இப்பக் கூட ஆதிரா கொடுத்த பார்ட்டிக்குத் தான் போயிட்டு வரேன்” என்றவர் மாடியிலிருந்து இறங்கி வந்த சாருலதாவைப் பார்த்து,

  “ஹே... மை டியர் டாட்டர்... வாட் எ சர்ப்ரைஸ், நீ எப்ப வந்த...? மாப்பிள்ளை எங்க?”

  “அவரப் பத்தி என் கிட்ட கேக்காதீங்கப்பா... மனுஷனா அவர்...!”

  “என்னம்மா... ராகுலப் பத்தி தானம்மா நான் கேட்டேன்” என்றார் அதிர்ச்சியுடன்.

  “நானும் அவரப் பத்தி தான்பா சொல்றேன்... பொண்டாட்டி உணர்வுகளையெல்லாம் மதிக்கத் தெரியாதவனெல்லாம் ஒரு மனுஷனே கிடையாது” என்றாள் தீர்மானமாக.

  அவர் வாசுகியின் பக்கம் திரும்பி, என்ன விஷயம் என்பது போல் பார்க்க...

  “அதை ஏன் கேக்கறீங்க... வந்ததுல இருந்து வானத்துக்கும், பூமிக்குமா குதிச்சுகிட்டு இருக்கா உங்க பொண்ணு... இனிமேல் மாப்பிள்ளையோட சேர்ந்து வாழ மாட்டாளாம் உங்க பொண்ணு” என்றாள் தவிப்புடன்.

  “என்ன சாரு... அம்மா சொல்றது எல்லாம் உண்மையா?” என்றார் உடைந்து போன குரலுடன்.

  நகத்தில் போட்டிருந்த நெயில் பாலிஷை ஆராய்ந்த படி “ஆமாம்பா புரிதல் இல்லாதவரோட சேர்ந்து வாழறதுல அர்த்தம் இல்லை... நீங்க தான் எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுக்கணும்”.

  “சாரு... என்ன பேசற? ராகுலும், நீயும் விரும்பினதால, நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உன் ஆசைக்குக் குறுக்க நிக்கக் கூடாதுன்னு உங்க ரெண்டு பேருக்கும் ஊரைக் கூட்டி, பணத்த தண்ணியா(!) செலவழிச்சு விமரிசையா கல்யாணம் பண்ணி வெச்சேன். இப்படி எடுத்தேன், கவுத்தேன்னு பேசாத... எந்த பிரச்சினையானாலும் பேசினா தீர்வு உண்டு”.

  டீபாயின் மேல் ஜக்கில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு, “உன் அம்மா பெரிய குடும்பத்துல வாழ்க்கைப்பட்டு எல்லாரையும் அனுசரிச்சு நடந்தா. அன்னைக்கே அவளும், நானும் புரிதல் இல்லாம பிரிஞ்சிருந்தா.... நீதான் பிறந்திருப்பியா... இல்ல இப்ப இதுமாதிரி அவசரப்பட்டுத்தான் முடிவெடுப்பியா?”

  அப்பாவையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சாரு, “நீங்க சொல்றதப் பார்த்தா என் பேர்ல மட்டுந்தான் தப்பிருக்குன்னு சொல்றாப்ல இருக்குப்பா”.

  “ராகுல் எனக்கு மாப்பிள்ளை மட்டுமில்லைம்மா, நல்ல தோழனும் கூட. அவர்கிட்ட நான் ஃபோன்ல பேசறேன்” என்றவர் மாடியேறி தனது அறைக்குள் சென்றார்.

  சிறிது நேரத்தில் போர்டிகோவில் ராகுலின் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்தார்.

  “சாரு நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டேன்.... அவரும் சமாதானம் ஆயிட்டாரும்மா.... நீயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போய் சந்தோஷமா வாழனுங்கறதுதான் என்னோட ஆசை”.

  அப்பாவையே குறுகுறுவென்று பார்த்தபடி சாரு, “சரிப்பா, நீங்க எவ்வளவு பெரிய லாயர்... நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்றபடி ராகுலைப் பார்த்து புன்னகையுடன் கைக்கோர்த்தபடி,

  “இப்ப எப்படிப்பா ஃபீல் பண்றிங்க?”

  தேவராஜ் பெருமையுடன் மகளைப் பார்த்தபடி “நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழறத பார்ப்பதுலதான்டா என்னோட சந்தோஷமே அடங்கியிருக்கு”.

  “அப்ப இந்த மாதிரி சந்தோஷத்த ஏன்பா உங்களமாதிரி உள்ள எல்லாப் பெற்றோருக்கும் தரக்கூடாது?”

  சட்டென்று தலைநிமிர்ந்த தேவராஜ் , “நீ... என்னம்மா... சொல்ற...?”

  “ஆமாம்பா... உங்கள மாதிரிதான்பா எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வு சிறக்கனும், சந்ததி தழைக்கனும்னு கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு, கடன்பட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. ஆனா குடும்பத்தில் வர சின்னச் சின்ன கஷ்டங்களையும், சங்கடங்களையும் அனுசரிச்சுப் போக மனசில்லாம உங்கள மாதிரி வக்கீலைத் தேடி வரவங்களுக்கு நீங்கள் பணம், புகழுக்கு ஆசைப்பட்டு, பிரயத்தனப்பட்டு வாதாடி விவாகரத்து வாங்கித் தரீங்க. இப்படி பிரிந்து போகும் தம்பதிகள் வாழ்வு மட்டும் பாதிக்கப்படலப்பா.... அவங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு... அவர்களுடைய வாழ்க்கைப் பாதையும் தடம் புரண்டு விடுகிறது. இதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு குடும்பப் பிரச்சனையாக தெரிந்தாலும், இன்று இது ஒரு சமுதாய சீர்கேடாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறதப்பா. உங்க பொண்ணு வாழ்வு முறிந்து போகக் கூடாதுன்னு நீங்க காட்டின அக்கறை தப்பில்லைப்பா. அதே மாதிரி மத்தவங்க வாழ்க்கை முறிந்து போக நீங்க ஒரு கருவியா இருக்கக்கூடாதுன்னு தான் நான் சொல்றேன்”.

  “ஆமாம் மாமா.... “இப்ப நாங்க சேர்ந்த போது நீங்க உணர்ந்த சந்தோஷத்த அவங்களுந்தான் அனுபவிக்கட்டுமே” என முடித்தான் ராகுல்.

  தன் மகளின் பேச்சில் மனம் திருந்திய தேவராஜ் , ஆமாம்மா... நீ சொல்வது சரிதான்... இனிமேல் நான் என் திறமையையும், பதவியையும் இரு மனங்களை இணைக்கப் பயன்படுத்துவேனே அன்றி, முறிக்க அல்ல” என்று உணர்ந்து சொன்னவரின் கண்களுக்கு சாருலதா தகப்பன் சாமியாகத் தெரிந்தாள்.

  “ஆமாங்க... நீங்க ஒரு கவுன்சிலிங் சென்டர் ஆரம்பிச்சு விவாகரத்து வேண்டி உங்களை நாடி வரவங்க மனச மாத்தி, அவங்க வாழ்கையில விளக்கேத்தி வைங்க... இதுவரைக்கும் பிரிச்சு வெச்சதுக்கு அது ஒரு பரிகாரமாகவும் இருக்கட்டும்... நானும் உங்களுக்கு இதுக்கு உறுதுணையாக இருக்கேன்” என்றாள் வாசுகி.

  தேவராஜைத் திருத்த தாங்கள் ஆடிய நாடகம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கண்களால் பரிமாறிக்கொண்டனர் ராகுலும் சாருவும்.

  தோழமைகளே!

  இது என்னுடைய இரண்டாவது சிறுகதை... உங்களின் பின்னூட்டத்தை கீழே கொடுத்துள்ள லிங்கில் பதியவும்.

  திருப்பு முனை - Sumathi Srini


  Last edited by sumathisrini; 29th Sep 2013 at 11:25 AM.

 4. #24
  sujibenzic's Avatar
  sujibenzic is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sujana
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  USA
  Posts
  4,160
  Blog Entries
  122

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை


  “சொன்னா கேளு மாமா....இந்த பொழப்பு நமக்கு வேணாம்...கஞ்சியோ கூழோ முன்ன மாதிரி லேத்து பட்டறைக்கே போ..அரக்காசு கிடைச்சாலும் அது பாவ காசா இருக்ககூடாது”, லட்சுமி கணவன் மணியிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

  “அட போ புள்ள...இந்த தொழிலுல என்ன கொறைய கண்டிபிடிச்சவ? நாலு குடும்பத்துல அடுப்பெரியறது பாவ காரியமா?”

  “ஆங்...அடுப்பு எப்படி எரியுது? காசுக்கு ஆசைப்பட்டு சின்ன புள்ளைகள அடிமாடு போல விக்க தரகு வேலை பாக்குறீயே..அது ஒசத்தியான புண்ணியமா? ”

  “உன்னோட பெரிய ரோதனையா போச்சு.....நா என்ன கடத்தியா விக்குறேன்.....அதுங்கள பெத்ததுங்களே சம்மதிச்சு அனுப்புதுங்க....இருக்க இடமும், வேளைக்கு சாப்பாடும், கூலியா காசும் குடுக்கறதுனா சும்மாவா? நல்ல வழிக்கு உதவுறேன்..அம்புட்டுதேன்.....பெருசா பேச வந்துட்டா...சோத்த போடுறியா?”

  “சொல்றத கேளு மாமா.. எனக்கு மனசே ஒப்பல...அங்கெல்லாம் ரொம்ப
  கொடுமபடுத்துறாகளாமே.... ” என்று குழைவாக கெஞ்சியபடி உணவு பரிமாறினாள்.

  " அட என்ன நீ நொய்யி, நொய்யினு மனுசன போட்டு புண்ணாக்குற.... அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..பொராமக்கார பயலுவ நாலையும் கிளப்பிவிடுவானுக....." எரிச்சலுடன் ஒரு பிடி சோற்றை வாயில் வைக்க போனவன், அப்படியே நிறுத்தி, "இந்த நேரத்துல இதையெல்லாம் யோசிச்சு விசனப்படாத புள்ள.... நீ சாப்பிட்டியா? உள்ள இருக்குற குட்டி ராசா என்ன சொல்றாரு?", என்று மூன்று வருடங்களுக்கு பின் உண்டாகியிருந்த மனைவியை பார்த்து ஆதுரத்துடன் விசாரித்தான்.

  மணியின் இந்த அன்புதான் லட்சுமியை கட்டிப்போட்டது... குடும்ப பகையையும் மீறி, அவனையே கைபற்றியதற்கு காரணமும் இதே காதல் தான்.

  எதிலும் மனைவி பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் கட்டுபடுபவன், தொழில் விஷயத்தில் மட்டும் அசைந்து கொடுக்கவே இல்லை.

  காரணி: 'பணம்'!

  தன்னை உதாசீனப்படுத்திய லட்சுமியின் குடும்பத்தினர் முன்பு பணக்காரனாக வேண்டுமென்ற வெறி அவனுக்குள் பேயாட்டம் போட்டுக் ஆட்டுவித்தது.

  உசிலம்பட்டியில் லேத்து வேலை செய்து கொண்டிருந்த மணியின் சுக்கிர திசையோ! சனி திசையோ! ஒன்றரை வருடங்களுக்கு முன், கோவை அருகே பஞ்சாலையில் பணிபுரிந்த பாண்டியன மூலம் அங்கு செயல்பட்ட " சுமங்கலி திட்டம் " பற்றி தெரிய வந்தது.

  பழைய நண்பனான பாண்டியன், மணியின் கையில் ஒரு கற்றை துண்டறிக்கைககளைத் திணித்து, " மாப்ள...இத படிச்சு பாரு....இப்படியெல்லாம் எங்க வசதி செஞ்சு தராய்ங்க! சொளையா மாசம் 3000 ரூவா சம்பளம், வேளைக்கு சாப்பாடு, உறங்க மெத்தை தலையணை, ரூமு, பண்டிக பருவத்துக்கு லீவு, பொழுதுபோக்கு, இதெல்லாம் பத்தாதுன்னு மூணு வருஷத்துக்கப்புறம் 45000 ரூவா ரொக்கம் வேற...பொட்ட புள்ளைகளுக்கு கல்யாண செலவுக்கு சரியா போயிடும்ல...இதுக்கு ஆள் பிடிச்சு கொடுக்கறவங்களுக்கு கமிசனா லம்பா ஒரு தொக குடுக்கராணுவ..நம்ம பக்கத்து புள்ளைகளுக்கு ஏதோ நம்மால ஆன உபகாரமா போகும்..புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு...காசுக்கு காசுமாச்சு..."

  "ஒரு கண்டிசன் மாப்ள...பண்ணிரெண்டுல இருந்து பதினெழு வயசுக்கு கொறச்சலான பொட்ட புள்ளைகளா பாரு...சரியா?"

  சிந்தனைக்கு இடமேயளிக்காமல், சடாரென்று காரியத்தில் இறங்கிவிட்டான் மணி.

  ஆளை அசத்தும் பேச்சு சாமார்த்தியத்தை மூலதனமாக்கி, சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று பஞ்சத்தில் நசிந்து போன பெற்றோரை பேசியே கவிழ்த்தான்..

  வரதட்சணை பேய்க்கு பயந்து பிள்ளைகளுக்கு திருமணமே ஆகாதோ என்று பீதியில் காலம் தள்ளிக்கொண்டிருந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களும், பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்ட போதை ராஜாக்களும், சந்தோஷத்துடன் சம்மதிக்க, பருவகாற்றில் மலர வேண்டிய மொட்டுக்கள் சூறைக்காற்றை சந்திக்க வேலைக்கு அனுப்பப்பட்டன.

  இடைத்தரகில் பணம் கொழிக்கவே, அதையே தன் பிரதான தொழிலாக மாற்றிக் கொண்டான்.

  நாட்பட, மில் திட்டத்தின் ஜிகினா பூச்சுகள் உதிர்ந்து, குளறுபடிகள் தெரிய வந்தாலும், அவற்றை புறந்தள்ளி, தனக்கென்று ஒரு நியாயம் கற்பித்து, மனசாட்சியை மொத்தமாக அடகு வைத்தான் மணி.

  பல இளம்பெண்களின் வாழ்வையும், குடும்ப தரத்தையும் வளர செய்கிறானே என்ற பெருமிதத்தில், மனம் நிறைந்திருந்த லட்சுமிக்கு சமீபகலாமாக கேள்விப்படும் தகவல்கள் எதுவும் உவப்பானதாக இல்லை.

  சில மாதங்களாக, தினம் ஒரு பஞ்சாயத்துடன் யாராவது வீட்டுக்கு வருவது வாடிக்கையாகிவிட, லட்சுமிக்குள் சந்தேக கருமேகங்கள் சூழ்ந்து,எதுவோ சரியில்லை என்பதை உள்மனம் உணர்த்தியது.

  மணியிடம் கேட்டால் சாக்கு போக்குகளும், சண்டைகளும் மட்டுமே சரளமாக வந்தன.

  அன்று தெருமுனையில் இருந்த காய்கறி கடைக்கு, கிளம்பிய லட்சுமிக்கு, வழக்கமாக “இந்த மாதிரி சமயத்துல எங்கயும் போகாத..நானே வாங்கியாறேன் “ என்று தடுக்கும் கணவன் தடை சொல்லாமல் வழியனுப்பி வைத்ததை கண்டு ஆச்சரியமாகிவிட்டது. சிறுபிள்ளையின் உற்சாகத்துடன், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் மடமடவென்று வெளியேறினாள்.

  இருந்தாலும், குழப்பம் சூழ்ந்த மணியின் முகம், அவளுக்குள் இனம்புரியாத கலக்கத்தை கிளப்ப, சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தளை வீதி நாடகம் ஒன்று ஈர்த்தது.

  லயித்து பார்த்தவளுக்கு மனதில் கலவர பந்து வேகமெடுத்து உருள, கடைக்கு கூட செல்லாமல் வீடு நோக்கி நடையை திருப்பினாள்..

  வீட்டு சுற்றுச்சுவரை நெருங்கும்போதே உள்ளிருந்து வந்த பேச்சு குரல்களில் தெறித்த காரமும் சோகமும, கால்களை நிறுத்திவைக்க, காதுகள் கூரானது.


  “இப்படி பண்ணிபுட்டியேயா...நீயெல்லாம் ஒரு மனுசனா? நீ சொன்ன வார்த்தைய நம்பித்தானே பொட்டபுள்ளைய அம்புட்டு தூரம் அனுப்பி வச்சோம். நாங்கதான் தெனந்தெனம் செத்து போழக்கிறோம், அதுகளாவது மூணு வேள சாப்புட்டு, நல்லா இருக்கும்னு நெனச்சா இப்படி கொடும படுத்திருக்கானுவளே பாவிப்பயலுக.” கோபத்துடன் ஒரு ஆண் குரல் ஒலிக்க, அதை தொடர்ந்து ஒரு இளம்பெண்ணின் விசும்பலும் கேட்டது.


  “இப்போ என்ன ஆச்சுனு இந்த குதி குதிக்கறீரு? ஒழுங்கா வேலை செய்யலைனா கண்டிக்க தான் செய்வாக..இது ஒரு தப்பா?” மணி எகிறினான.


  “என்ன ஆச்சா?! எம்புள்ள கால அடிச்சு ஒடிச்சு.,கைய கொதிக்கிற வெண்ணிகுள்ள முக்கி இம்ச பண்ணிருக்கானுவ,..அது மட்டுமா? வெளியில சொல்லமுடியாத கொடுமையெல்லாம் அனுபவிசிருக்குய்யா எம்புள்ள...எங்கெங்க சூட்டு தழும்பு இருக்கு தெரியுமா? ஆஸ்பத்திரிக்கு கூட கூட்டி போகலியே நாசமா போறவனுங்க...இப்போ கால ஒன்னுஞ்செய்ய முடியாதுன்னு தெரிஞ்சதும் வெரட்டி விட்டுட்டானுங்க...”, பெரியவரின் குரல் தழுதழுக்க, அந்த பெண்ணின் கேவல் இன்னும் அதிகமாக ஒலித்தது.

  “இதெல்லாம் எதுக்கு? வேல செய்யாததுக்கா?இருவது மணிநேரம் உழைச்சு ஓடா தேஞ்சு, சாப்பாடு கிடைக்காத ஆதங்கத்துல பசிக்குதுன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக இப்படி செஞ்சிருக்கானுங்க.. டிரைனிங்குனு ஏய்ச்சு பேசுன சம்பளம் கொடுக்கறதில்லை....எங்கள பார்க்க பேச விடறதில்ல, கொத்தடிம மாதிரி நடத்தி இப்போ என் புள்ளைய முடமாக்கிடானுங்களே... "

  “ மில்லுகாரங்கள கேட்டா உம் பொண்ணு நடத்த சரியில்லனு சொல்றாங்க. கேசு போடாம விட்டதே பெரிய விசயம்." என்றான் மணி அலட்சியமாக.

  "பொய்கார பாவிக...எம்பொண்ணு தங்கம்யா....இவனுங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது...”"

  "அனாவசியம் பேசாத....இதுல இரண்டாயிரம் இருக்கு...எடுத்துட்டு கிளம்பு.."

  அதற்கு மேல் மணியிடம் எந்த பேச்சும் எடுபடாமல் போக, சற்று நேரத்தில் கையாலாகாத்தனத்துடன், வெளிவந்த பெரியவரின் கையில் வெள்ளை கவர்.

  அவர் பின்னால், ஒட்டிப்போன கன்னங்களும், பஞ்சடைந்த கண்களும், ஜீவனேயில்லாத முகமுமாக, வெந்துபோன வலக்கையுடன், கட்டைகள் உதவியுடன் நொண்டியபடி, வெளிவந்த பெண் பார்த்த பார்வையில் கண்கள் மட்டுமல்ல, இருதயமும் கலங்கியது லட்சுமிக்கு. குற்ற நெஞ்சுடன் கூனி குறுகி போனாள்.

  கோபத்துடன் வீட்டில் நுழைந்து சண்டையிட்டவளை சட்டையே செய்யாமல், மீண்டும் ஐந்து சிறுமிகளை அதே பஞ்சாலையில் கொத்தடிமைகளாக மாற்ற கோவைக்கு கிளம்பினான் மணி.

  குமுறிக்கொண்டிருந்த லட்சுமியின் மனதில் காதலுக்கும், தர்மத்திற்கும் யுத்தம் நடைபெற,
  இறுதியில் வென்ற முடிவு, அவள் வாழ்வின் திருப்புமுனை.

  சற்று முன் கண்ட குழந்தை தொழிலாளர் பற்றிய வீதி நாடகம் நினைவிலாட, லட்சுமியின் கைகள் பத்து ஒன்பது எட்டு (1098) என்ற சைல்டுலைன் (childline) இலக்கத்தை தொலைபேசியில் அழுத்தின.

  மாலை செய்திகளில் மணி கைதான விஷயம் ஒளிபரப்பானபொது, கேட்பதற்கு லட்சுமி வீட்டில் இல்லை...அவலங்கள் நிறைந்த உலகை சந்திக்க விருப்பமில்லாத அவள் மகவும் கருவிலில்லை.

  கணவனும்,கருவறை குழந்தையும் கைநழுவி போனாலும், உழைப்பில் கருகிய இளங்குருத்துகளின் மறுமலர்ச்சி சேவையில் தன்னை இணைத்துக் கொண்ட லட்சுமி,இனி பெறாத பல குழந்தைகளுக்கு அன்னை.

  ***

  அன்பு தோழமைகளே,

  சிறுகதை முயற்சியில் என் முதல் பகிர்வு இது. உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிக்கவும்

  திருப்புமுனை - Sujana

  நட்புடன்,
  சுஜனா

  Moderator Note:

  This Article has been published in Penmai eMagazine Oct 2013. You Can download & Read the magazines
  HERE.

  Last edited by gkarti; 23rd Jul 2014 at 08:01 PM.

 5. #25
  satyasriram's Avatar
  satyasriram is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  Chennai
  Posts
  2,156

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை

  "அம்மா எங்க இருக்கீங்க?" என்றபடியே வீட்டினுள் நுழைந்த கோகுலின் குரலில் கோபமும், வெறுப்பும் மட்டுமே குடிக்கொண்டிருந்தது.

  "இங்க தான் இருக்கேன் கோகுல் கண்ணா." என்றபடியே வீட்டின் பூஜையறையிலிருந்து வெளியே வந்த யசோதாவின் குரலிலோ அன்பு மட்டுமே குடிக்கொண்டிருந்தது.

  "மா நான் பார்ட்டி வைக்க இரண்டு லட்சம் ரூபாய் தருவீங்களா, மாட்டீங்களா?" என்றான் மிகுந்த கோபத்துடன்.

  கோகுல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன். அமைதியே உருவான தாய் யசோதா. மனிதர்களை நேசிக்கும் தந்தை நந்தகோபன். நந்தன் இண்டஸ்ட்ரீஸின் அதிபர். கடல் கடந்து இவரின் வியாபாரம் பெருகி இன்று நம்பர் ஒன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரும் வாங்கியிருக்கிறது.. இவரின் பேரும், புகழும் இவரிடம் இருக்கும் பணத்தினால் மட்டும் கிடைக்கவில்லை. இவரின் மனித நேயத்திற்க்காகவே கிடைத்தன.

  இவர்களின் தவப் புதல்வன் தான் கோகுல். இருவாரம் கழித்து வரும் அவனுடைய பிறந்த நாளுக்கு பார்ட்டி வைக்க வேண்டியே அவ்வளவு பணம் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தான். இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு இந்தப் பணம் பொருட்டில்லை என்றாலும், இந்த நாட்டில் அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் நிறைய பேர் இருப்பது, தங்கள் மகனிற்கு புரியவில்லையே என்ற காரணத்தினாலும், மற்றும் இந்த பார்ட்டி கலாச்சாரத்தில் தங்கள் மகன் கெட்டு சீரழிந்து விடுவானோ என்ற பயத்தினாலும் கோகுலிடம் பதில் கூறாது மௌனம் காத்துக்கொண்டிருந்தனர்.

  நந்தகோபனிற்கு இந்த சமயத்தில் அவனுக்கு அறிவுரை கூறினால் தங்கள் மகனின் வெறுப்பிற்கு ஆளாவோம் என்று தெரிந்ததால், மனைவியிடமும் எந்தவித அறிவுரையோ, பணம் கொடுக்கிறேன் என்ற உறுதிமொழியோ கொடுக்க வேண்டாமென்று சொல்லி விட்டு வியாபார நிமித்தமாக வெளிநாடு சென்றுவிட்ட சமயத்தில் மகன், தன்னிடம் வந்து கோபப்படுகிறானே என்ன செய்வது என்று முழித்துக்கொண்டே, அவனிடம் மிக அன்பாக பேசினார்.

  "கண்ணா, சாப்பிடறியா?, உனக்கு பிடிச்ச ஸ்ப்ரிங் ரோல் செஞ்சு இருக்கேன். சாப்பிடு. அப்பா கால் செய்வார்.. அவரிடம் இந்த மாதிரி கோபப்படாம அமைதியா உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டுக்கோ, ஆனா, அது உனக்கு தேவையா, இல்லையான்னு யோசிச்சு கேளு டா ராஜா." என்று அவனிடம் சொல்லிவிட்டு அவனை திரும்பிப் பார்த்தார். கோகுல் சரி என்பதாக தலையாட்டிவிட்டு அவனின் அறைக்கு சென்றான்.

  இவனை எப்படி சமாளிப்பது என்ற கவலையுடன் அவனுக்கு டிபன் எடுக்க கிட்சனுக்குள் நுழைந்தார் யசோதா.

  அன்றைய நாள் அவர்களுக்கு சுமூகமாகவே சென்றது.

  அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது.

  "அம்மா, என்னை மன்னிச்சுடுங்க, எனக்கு பணம் எல்லாம் வேண்டாம்மா." என்றபடியே ஓடிவந்து கட்டிக்கொண்ட மகனை ஆரத்தழுவிக் கொண்டார் யசோதா.

  அப்பொழுது போன் அடித்தது. நந்தகோபன் தான் அழைத்திருந்தார். அவரிடம் தன் மகனின் செயலை சொல்லிவிட்டு கோகுலிடமே போனை கொடுத்தார் யசோதா.

  "அப்பா, நேத்து ராத்திரி என் ரூம் டிவில நியூஸ் பார்த்தேன் ப்பா. அதுல பேரன்ட்ஸ் எய்ட்ஸ் வந்து இறந்து போனதால, அந்த பசங்களுக்கும் எய்ட்ஸ் இருக்குமோன்னு நினைச்சு.. , அந்த பசங்கள சுடுகாட்டுல தங்க வச்சிருக்காங்கபா, பாவம்ப்பா, அவங்க எல்லாருமே என்னைவிட ரொம்ப சின்னப் பசங்க.. சாப்பிட எல்லாம் என்ன பண்ணுவாங்கப்பா?, ஊருக்குள்ள விட்டா தான, உழைச்சு சாப்பிடமுடியும்."

  "இந்த நோய் அவங்களுக்கு இருக்கா, இல்லையா?ன்னே அந்த ஊர் மக்களுக்கு தெரியலை, அப்புறம் எப்படிப்பா இப்படி செய்யலாம்? அப்படியே அந்த சின்ன பசங்களுக்கு இருந்தாலும், அவங்க கூட தொட்டு பேசறதினாலயோ, அவங்க கூட சேர்ந்து இருக்கிறதுனாலேயோ அந்த நோய் மத்தவங்களுக்கு ஓட்டிக்காதுன்னு யாருப்பா அவங்க கிட்ட சொல்றது?" என்று சிறிது நிறுத்தினான் கோகுல்.

  "கோகுல் கண்ணா, அவங்களுக்கு எல்லாம் படிப்பறிவு இல்லைப்பா, அப்படியே இருந்தாலும் அதைப் பற்றி புரிந்துக்கொள்ள மாட்டார்கள் கண்ணா."

  "அதுக்காக இப்படியாப்பா செய்வாங்க? ஏதோ இந்த பசங்களைப் பற்றி மீடியா சொன்னதுனால அவங்களுக்கு ஏதோ உதவி கிடைக்கும். பட் இன்னும் எத்தனை குழந்தைகள் பெற்றவர்கள் இல்லாமல் இந்த நோய் தாக்கி, எப்படியெல்லாம் அவஸ்த்தை படுதோன்னு இருக்குப்பா.. அப்பா, என் பிறந்தநாளுக்கு உங்களிடம் பணம் கேட்டதை நினைச்சு ரொம்ப கில்டியா இருக்குப்பா. எத்தனைப் பேர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்கிறார்கள்ன்னு இந்த நியூஸ் பார்த்த உடன் தான் எனக்கு தோணுச்சுப்பா." என்றவன் குரல் லேசாக உடைந்திருந்தது.

  "கண்ணா, நீ எங்ககிட்ட பணம் கேட்டது தப்பில்லைடா ராஜா. பட், நீ பணத்தோட அருமை தெரியாம இருந்ததும், இந்தப் பணத்திற்காக கஷ்டப்படற எத்தனையோ ஜீவன்களைப் பற்றியும் நீ புரிஞ்சுக்கலையேன்னு தான் எங்களுக்கு வருத்துமா இருந்ததுமா குட்டி. அதே மாதிரி உனக்கு அறிவுரை கூறினால், அதை நீ எப்படி எடுத்துப்பியோ என்றும் தான் கவலைடா கோகுல் கண்ணா. உனக்கு தேவையானதை நீ எங்க கிட்ட கண்டிப்பா கேட்கணும் ராஜா. நீ கேட்டதை நினைச்சு வருத்தப்படகூடாது டா கண்ணா. என்ன கண்ணா சரிதானே?" என்றார் நந்தகோபன்.
  "புரியுதுப்பா, நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும் அப்பா." என்றவன், "அப்பா இந்தப் பிறந்த நாளுக்கு எனக்கு ஒரு உதவி செஞ்சே ஆகணும்ப்பா." என்றுகேட்டான்.

  "சொல்லுடா கண்ணா கண்டிப்பா செஞ்சுடலாம்."

  "என்னப்பா கண்டிப்பா செய்யறேன்னு சொல்லிட்டீங்க?"

  "என் பையன், உலகத்தை புரிஞ்சுக்க தொடங்கிட்டான்.. அவன் வளர்ந்துடானில்லை அதான் என்றார் சிரித்துக்கொண்டே.

  "ம்ம் கரெக்ட்ப்பா." என்றவன், "எய்ட்ஸ் மாதிரி நோய் தாக்கின குழந்தைகள் இரண்டு பேரோட பொறுப்பை நான் ஏத்துக்க நீங்க ஹெல்ப் செய்யணும். பொறுப்புன்னா, அவங்களுக்கு நான் தான் அப்பா என்கிறது மாதிரிப்பா. புரியுதில்லைப்பா உங்களுக்கு? நான் இப்ப தான் படிச்சுட்டு இருக்கேன். நல்லா படிச்சு நல்ல நிலைக்கு வரவரைக்கும் எனக்கு நீங் செய்யற மாதிரியே நான் அவங்களுக்கு செய்ய நீங்க எனக்கு உதவி செய்யணும். நான் நல்ல நிலைக்கு வந்தப் பிறகு நானே ஒரு டிரஸ்ட் மாதிரி வச்சு நிறைய குழந்தைகளுக்கு ஹெல்ப் செய்யனும்பா. இது தான் என்னோட லட்சியம். அதுக்கு நீங்க தான் எனக்கு உதவியும் ஊக்கமும் தரணும் ப்பா. " என்று முடித்த மகனை, யசோதா ஆரத்தழுவி தன் சம்மதத்தை தெரிவித்தார்.

  "அப்பா, அம்மா ஓகே சொல்லிட்டாங்க, நீங்க ஓகே சொலி தான் ஆகணும்." என்ற மகனின் குரலிற்கு, "ஓகேடா கண்ணா." என்ற பதிலை தந்தார் நந்தகோபன்.

  சில வருடங்கள் கழித்து, கோகுல் சில்ட்ரன் சேவா மையம் என்று அமைத்தான் கோகுல்.

  எய்ட்ஸ் உள்ளிட்ட மற்ற நோய் தாக்கி, பெற்றவர்கள் மற்றும் மற்றவர்களின் ஆதரவு இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த மையம் ஒரு கோவிலாகவே காட்சியளித்தது.

  அந்த மையத்தை சுற்றி வந்த கோகுல், தான் மட்டும் அந்த செய்திப் பார்க்காமலிருந்தால், இந்த மையமே தொடங்கியிருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டான். தன் வாழ்வின் திருப்புமுனையாக அந்த செய்திப் பார்த்ததே என்று தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான். மேலும் உல்லாசமாக பொழுதைக் கழிக்கலாம், ஆனால் அதற்கும் ஒரு அளவுகோள் வைத்து செயல் படவேண்டும். என்று தன் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லிவருகிறான் இப்போது.

  அவனைப் பெற்றவர்களோ, அவனைப் புரிந்துக்கொள்ளும் ஒருத்தி மனைவியாக வரவேண்டுமென்ற வேண்டுதலுடன் அவனக்கு ஏற்ற துணையை தேட ஆரம்பித்து உள்ளனர்.

  அவனுக்கு ஏற்ற துணை சீக்கிரம் கிடைக்க வாழ்த்தி விடைபெறுவோம்.


  நன்றி
  சத்யாஸ்ரீராம்.

  இது என் முதல் சிறுகதை. எழுத தூண்டிய பெண்மைக்கு என் நன்றிகள் பல.


  Pl. drop your comments for this short story in the below link:

  திருப்பு முனை - Sathya Sriram


  Last edited by sumathisrini; 1st Oct 2013 at 11:02 AM. Reason: Comment page link added

 6. #26
  k.Thanu's Avatar
  k.Thanu is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Thanu.k
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  JAFFNA
  Posts
  1,888

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை

  அந்த பேரூந்தில் ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாள் காயத்திரி.அவள் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பி வழிந்து கொண்டே இருந்தது.பிறர் அறியாது ஜன்னலோரம் திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
  அவள் மனம் குமுறிக் கொண்டே இருந்தது. இப்படி ஏமாந்துவிட்டேனே.பாசமாக பொத்தி பொத்தி பாதுகாத்த குடும்பத்தை விட்டு காதல் என்ற பெயரில் ஒரு காவாலியை நம்பி உண்மை உறவுகளை புறக்கணித்து வந்த எனக்கு இந்த தண்டனை தேவைதான்.
  காதல் என்ற பெயரில் அவளை குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்து பிரித்துக் கூட்டி வந்தவன் தன்தேவையை தீர்த்துக் கொண்டபின் அவளை நடுத்தெருவில் விட்டு சென்றுவிட்டான்.
  இப்போது அவள் நிலை அநாதை.அனைத்தும் இருந்தும் அநாதை ஆக்கப்பட்டு விட்டாள். இல்லை தானாகவே அந்த நிலையை தேடிக்கொண்டாள்.
  இனி அவள் நிலை ??? கூட்டை விட்டு பிரிந்து தனித்து நிக்கும் அவள் இதுபோல் இன்னும் எத்தனை கழுகுகளின் கோரப் பசிக்கு ஆளாக வேண்டி வருமோ?? நினைக்கவே அவள் உடல் நடுங்கியது.

  அவள் முடிவெடுத்து விட்டாள்.இனி அவளுக்கு வாழ்க்கை இல்லை.எப்போது அவள் குடும்பம் முக்கியம் இல்லை காதலன் என்ற போர்வையில் இருந்த கயவன் மட்டுமே போதும் என்று சுயநலமாக முடிவெடுத்தாளோ.அப்போதே அவளுக்கான குடும்ப உறவு அறுந்து விட்டது.தன்னால் அவர்கள் பட்ட அவமானமே போதும்.இதற்கு மேலும் இப்படி ஒரு நிலையில் சென்று அவர்களுக்கு பாரமாக இருக்க அவள் விரும்பவில்லை.அவளுக்கு இனி வாழ்க்கை இல்லை.அவள் மரணத்தை சந்திக்க தயாராகிவிட்டாள்.
  மனதில் எண்ணங்கள் சுழல கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறே திரும்பியவள் அப்போது தான் அருகில் அமர்ந்து தன்னையே கனிவுடன் நோக்கி கொண்டிருந்த பெண்ணை கவனித்தாள்.வயது நிச்சயம் ஐம்பதற்கு மேல் இருக்கும்.தோற்றத்தில் ஒரு கண்ணியம் நிமிர்வு இருந்தது.
  இவளின் பார்வையை சந்தித்தவர் மெல்ல முறுவலித்தார். என் பெயர் சாரதா.நான் சாரதா குழந்தைகள் காப்பகம் வைத்து நடத்தி வருகிறேன்.நீ யாரும்மா??உன் முகமே சரியில்லையே?? உனக்கு என்ன பிரச்சனை??? என்று கனிவாக வினவினார்.

  அவர் குரலில் இருந்த கனிவோ!!!!! தோற்றத்தில் இருந்த நிமிர்வோ!!!!! அல்லது இவளின் நெஞ்சை அடைக்கும் மனப்பாரமோ எதுவோ ஒன்று தூண்ட தன் கதையை கண்ணீருக்கிடையில் கூறி முடித்தாள்.
  அதை கேட்டு நீண்ட பெருமூச்சு விட்டவர்.இதோ பாரும்மா காயத்திரி நான் உன் விடயத்தில் எது சரி தவறு என்று விமர்சிக்க விரும்பவில்லை.

  ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது இயல்பு நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நம் வாழ்க்கையின் வெற்றியே அடங்கியிருக்கிறது.

  என் வாழ்க்கையையே எடுத்துக்கொள். நான் என் குடும்பத்தில் ஒரே பெண்.எனக்கு பெற்றவர்கள் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள்.திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் எனக்கு குழந்தை பிறக்கவில்லை. என் கணவருக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக என் மாமியார் அவருக்கு இரண்டாம் கல்யாணம் பண்ண முடிவெடுத்து விட்டார். என் கணவருக்கும் அதில் சம்மதமே. அவருக்கு குழந்தைக்காக இன்னொரு மணம் புரிந்தாலும் நானும் அவருடைய மனைவியாக காலம் முழுதும் அவர்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்று தாராள மனத்துடன் கூறினார் என் மாமியார்.அதாவது சம்பளமில்லா வேலைக்காரியாக. எனக்கு அந்த கணமே இதயம் நொறுங்கி விட்டது. என்னை ஒரு உயிருள்ள மனுசியாக யாருமே மதிக்கவில்லை.பிள்ளைபெறும் இயந்திரமாகதான் கருதினர் அனைவரும் என் கணவன் உட்பட.

  என் மனம் ரணமாக வலித்தது. அப்போது முடிவெடுத்தேன்.அப்படி ஒரு வாழ்க்கை தேவை இல்லை என்று.என் பெற்றோரின் சம்மதத்துடன் சில சொத்துக்களை விற்று இந்த குழந்தைகள் காப்பகத்தை நிறுவினேன்.இன்று சில நல்ல உள்ளங்களுடைய உதவியால் அது சிறப்பாக இயங்கி வருகிறது. பிள்ளை இல்லாதவள் மலடி என்ற வார்த்தைகளை கேட்டு ரணப்பட்ட என் காதுகளில் இந்த குழந்தைகளின் அம்மா அம்மா என்ற அழைப்பு அமுதை ஊற்றுகிறது. நம் வாழ்க்கை நம் கையில் அதை எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் நம் வாழ்வின் அர்த்தமே அடங்கி இருக்கிறது. நீ விரும்பினால் அந்த காப்பகத்தில் உனக்கு வேலை தர நான் தயார் என்று கூறி நிமிர்வுடன் புன்னகைத்தார் சாரதா.


  சாரதாவின் கதையை கேட்ட காயத்திரியின் உள்ளத்தில் ஒரு ஒளி பிறந்தது. யாருக்கும் உபயோகப்படாமல் இறப்பதை விட இந்த உயிரைக் கொண்டு எத்தனை பேருக்கு நன்மை செய்யலாம். திருமணம் குழந்தைகள் என்று ஒரு வட்டத்துக்குள் வாழும் வாழ்கை தான் வாழ்க்கையா???
  அதை விட இது எவ்வளவு உன்னதமான வாழ்வு.

  காயத்திரி முடிவெடுத்துவிட்டாள்.யாருக்கும் உபயோகம் இல்லாமல் அழியும் இந்த உடலையும் உயிரையும் கொண்டு வாழும் காலத்தில் பிறருக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று.அவள் உறுதியுடன் கண்ணீரை துடைத்து நிமிர்ந்தாள்.சாரதா அம்மாவின் கையை இறுகப்பற்றி நிமிர்வுடன் புன்னகைத்தாள்.

  மரணத்தை தேடிச்சென்ற அவள் வாழ்க்கையில் சாரதா அம்மாவின் சந்திப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது.


  தனு.k

  Pl. drop your comments for this short story in the below link:

  திருப்புமுனை __ தனு


  Last edited by sumathisrini; 1st Oct 2013 at 11:07 AM. Reason: Comment page link added

 7. #27
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை


  அய்யோ...அம்மா வலிக்குதே...என்ற முனகலுடன்

  ஒரு மாதிரி சங்கடத்தில் இருக்கும் ஏழு மாத கர்ப்பிணி மனைவியைப்
  பார்த்து "என்ன ஆச்சு ..திவ்யா..? என்ன ஆச்சு ?" என்று கேசவ் பதட்டத்துடன் வினவ...

  "இல்லங்க அடிவயிறு ஒருமாதிரி பிரட்டுது ..அடிக்கடி பாத்ரூம் போகவேண்டியதாய் இருக்கு..
  முடியலங்க டாக்டருக்கு போன் .பண்ணுங்க.."

  "திவ்யா கவலைபடாத ..ஒண்ணும் ஆகாது "என்று திவ்யாவை தைரியப்படுத்திக் கொண்டே

  இரவு 10.45 மணிக்கு டாக்டருக்கு போன் பண்ணினான் கேசவ்.

  டாக்டரிடம் தன் மனைவியின் தீடீர் வலியை பதட்டத்துடன் கூறினான்.

  நிலைமையை புரிந்துகொண்ட டாக்டர்" உடனடியாக மருத்துவமனைக்கு வந்து விடுங்கள்.
  ஏற்கனவே எடுத்த reports லாம் எடுத்துக்கொண்டு துணைக்கு ஒரு பெண்மணியும் அழைத்துவாருங்கள்" என்று கூறிவிட்டார்.


  உடனே தனது வீட்டருகில் இருக்கும் சகோதரிக்கு தெரிவித்து விட்டு
  மருத்துவமனைக்கு மனைவியுடன் புறப்பட்டுவிட்டான்.

  அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் சந்தோஷ் மருத்துவமனையில்..மிகுந்த
  பரபரப்புடன் கூடிவிட்டனர்.

  திவ்யாவை பிரசவ வார்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். சற்றே பதட்டத்துடன் கேசவ்
  வார்டு வராண்டாவில் தனது சகோதரியுடன் நடமாடிகொண்டிருக்கும் வேளையில்

  சுமார் ஒண்ணரை மணிநேரம்

  கழித்து நர்ஸ்..... "Mr.கேசவ்..Mr.கேசவ்.. டாக்டர் உங்கள கூப்பிட்டாங்க போய் பாருங்க"ன்னு சொல்ல
  அவசரத்தில் உள்ளே ஓடினான்.

  "Mr.கேசவ் வாங்க உங்க மனைவியை பாருங்க"ன்னு சொல்ல ..

  அரைகுறை மயக்கத்திலிருந்த மனைவியை பார்த்த
  கேசவ்" திவ்யா ..திவ்யா ..என்ன ஆச்சி.. என்ன ஆச்சி" என்று டாக்டரை பார்த்தவாறே அலறினான்.

  "Mr.கேசவ் என் ரூமுக்கு வாருங்கள் என்று சொல்ல..."

  "திவ்யா..உனக்கு ஒண்ணும் ஆகாது எல்லாம் நான் பார்த்துக்குறேன் " என்று அவளின் நெற்றியையும்,
  உள்ளங்கைகளையும் வருடிவிட்டு.."இரு திவ்யா டாக்டர பார்த்துவிட்டு வருகிறேன்" என்று
  டாக்டரின் ரூமுக்கு ஓடினான்...

  அதிகாலை 1 மணியை தொட்டுகொண்டிருக்கும் வேளை..


  "வாங்க Mr.கேசவ்"..என்று டாக்டர்....


  திவ்யாவின் நிலைமையை ,அவசரம் கருதி பதட்டத்துடன் ,"உங்க மனைவிக்கு பனிக்குடம் உடைஞ்சு போச்சி ..அதனால கர்பப்பையின் நீர் அளவு குறைந்துள்ளது..உடனடியா ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்தாகவேண்டிய கட்டாயம் ...அப்படியே வெளிய எடுத்தாலும் ஏழாவது மாதத்தின் முதல் வாரத்தில் இருப்பதால் குழைந்தையின் heart valves -ன் வளர்ச்சி முழுமை பெற்று இருக்காது.
  அதனால மூச்சு விடக்கூட முடியாத சூழ்நிலை இருக்கு.. தாயை காப்பாற்றி விடலாம். பிறகு இப்போதுள்ள அதி நவீன மருத்துவ உதவியுடன் குழந்தையையும் காப்பாற்றி விடலாம்", என்று கடகடன்னு டாக்டர் சொல்லிமுடிக்க ...


  கேசவ்..ஒரு சில நொடிகளில் நாம் ஒரு மிக இக்கட்டான சூழலில் இருகின்றோம் என்று உணர்ந்துகொண்டான். பிரசவவலியையும் மிஞ்சும் இந்த வலியை குமுறலோடு சுதாரித்துக்கொண்டு ....


  "டாக்டர் சொல்லுங்க நான் என்ன பண்ணனும் ? எனக்கு திவ்யாவும்..குழந்தையும் வேணும்", என்று
  கண்ணீர் மல்க ...கதற.. குமுற...


  "Mr.கேசவ்.கவலைப்படாதீங்க...தைரியத்தோடு இருங்க. இன்னும் ஒருமணி நேரத்துல ஆபரேஷன்
  பண்ணிடலாம். குழந்தையை Neonatal intensive care unit உள்ள ஆஸ்பிட்டல வச்சிதான் பார்த்துக்கணும். நீங்க சென்னைல இருக்குற Egmore Children's Hospital, Ramachandra Hospital, மேத்தா hospital ..இதுல எதாச்சும் ஒரு hospital சொல்லுங்க ..ஏன்னா அதற்குண்டான ஏற்பாடுகளை செய்துவிட்டுதான் இந்த ஆபரேஷனையே ஆரம்பிக்கணும்..பணம் கொஞ்சம் செலவாகும்..
  நீங்க முடிவுபண்ணிட்டு ஒரு கால் மணிநேரத்துல சொல்லுங்க"என்று டாக்டர் சொல்ல .."சரிங்க டாக்டர் எனக்கு ரெண்டு ஜீவன்களும் உயிரோடு இருந்தா போதும்..ஒரு பத்து நிமிஷத்துல சொல்லுகிறேன்" என்று சொல்லிவிட்டு நெஞ்சு வெடிக்கும் வலியோடும்..வேதனையோடும் வெளியே வந்தான்.

  தனது குடும்ப உறவினர்களிடமும், தனக்கு பரிச்சமுள்ள குடும்ப டாக்டரிடமும் விவரத்தை கூறி
  மேத்தா ஹோஸ்பிடல் சேர்க்கலாம் என்ற தனது முடிவை கூறினான்.


  திவ்யாவின் டாக்டர்" கவலைப்படதிங்க கேசவ் இப்பவே மேத்தா ஹோஸ்பிட -ல்ல பேசி pre term
  baby க்கான அதிநவீன ஆம்புலன்ஸ் வரவழிக்கிறேன் , என்றுவிட்டு , ஆபரேஷன் -க்கு தயாரானார்...


  கேசவ் திவ்யாவின் அருகில் நின்று சமாதனபடுத்திக்கொண்டு... டாக்டர் சொன்ன விஷயங்களை
  பக்குவமாக சொல்லிகொண்டிருந்தான். திவ்யாவும் கண்ணீர் மல்க .."பார்த்துக்குங்க..பார்த்துக்குங்க "
  என்று ஆபரேஷனுக்கு தயாராகி கொண்டிருந்தாள்..


  அன்று 12-12..மணி 2 am கடிகாரத்தில் மின்னியது ஹோஸ்பிட -லே பரபரப்பானது.
  அனைவரும் operation theatre -ருக்கு வெளியே கனத்த இதயத்துடன் காத்திருக்க..


  nurse -களும், டாக்டர்களும் ஆபரேஷன் thetre -க்கு போவதும் வரு வதுமாக இருந்ததால்
  பதற்றமும் அதிகமாகியது...


  முக்கால் மணிநேரம் கழித்து" Mr.கேசவ் ..உள்ளவாங்க உங்க பையன பாருங்க" என்று கூறவது கேட்க
  அருவியில் துள்ளும் நீர்போல உள்ளே ஓடினான்.


  பார்த்தவனுக்கு மகிழ்ச்சியே அதிர்ச்சியையும் தந்தது. ..இருகைகளையும் ஒன்று சேர்த்தால் இருக்கும் அளவுக்குள்ள அந்த பிஞ்சு சிசு எடை 1.75kg என்றார்கள்.


  மூச்சு திணறலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து incubator -il வைத்து Neonatal intensive care unit -கு கூட்டிக்கொண்டு செல்ல ஆயத்தமானார்கள்.


  "திவ்யாவிற்கு தெளிய மூன்று மணிநேரத்திற்கு மேல் ஆகும் ..பிரச்சனை இல்லை நீங்க
  உங்க பையனோட போய் அவனை ஹோச்பிடலில் சேர்த்துவிட்டு வாருங்கள்.
  இங்க உங்க மனைவியை நாங்க பார்த்துக்குறோம் நீங்க அந்த hospital -லில் Neonatologist Dr.அனிதா -வை பாருங்க..அவங்க கிட்ட நான் போன் -ல எல்லாத்தையும் பேசிட்டேன். அவங்க பார்த்துக்குவாங்க கேசவ் "என்று பிரசவம் பார்த்த டாக்டர் சொல்ல..


  கேசவ், தன் சகோதரியிடம் "திவ்யாவை .பார்த்துக்குங்க..எதாச்சும் இருந்தா போன் பண்ணுங்க " என்று கூறிவிட்டு தனது மகனுடன் ஆம்புலேன்சில் கிளம்பினான்..


  அதிகாலை 3.15..வெறிச்சோடிய சாலைகளில் கோயங் ...கோயிங்...கோயங்..என்ற சப்தத்துடன்
  வேகமாக செல்ல தனது குழந்தையை பார்த்துகொண்டே என்ன நடக்குதோ நடக்கட்டும் நாம்
  செய்வதை செய்வோம் என்ற திட்டவட்டமான முடிவை எடுத்தான். இப்போதைக்கு அவன்
  பணத்தை பற்றிய கவலையுடன் பயணமானான். கை நிறைய சம்பளம் வாங்கும் அவனுக்கு
  உதவிட உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் என பலபேர் இருகின்றார்கள் என்றாலும்
  உதவியை கேட்க சற்று தயக்கம் கொண்ட அவனுக்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில்
  மூழ்க..


  ஆம்புலன்ஸ் hospital -னுள் நின்றது..கேசவின் சகோதரர் ..மற்றும் உறவினர்கள் அங்கிருப்பதை
  கண்டு ஒரு வித நிம்மதியை உணர்ந்தான். கேசவை அவரது சகோதரர் தோளில் தட்டிகொடுத்தபடி
  எதற்கும் கவலைப்படாதே.."அண்ணா..டாக்டர் சொல்வதை கேட்டு அதன்படி நடப்போம்..நல்லதே
  நடக்கும்..பணத்தை பற்றி கவலைப்படாதே.." என்று நம்பிக்கை யூட்ட ..


  கேசவ் கொஞ்சம் சகஜ நிலைமைக்கு மாறினான். இதற்குள் குழந்தையை இன்சென்டிவ் கேர் -இல்
  வைத்து தீவீர சிகிட்சையை தொடங்கினார்கள்.


  Baby of Dhivya என்ற பெயரில் register செய்யச்சொல்லி உள்ளே வந்து கேசவை Dr -யை பார்க்க சொன்னார்கள்.


  உள்ளே சென்ற கேசவை ..Mr.கேசவ் உங்கள் குழந்தை baby of Dhivya என்று tag போட்டிருக்கும்
  அந்த குழந்தையை பார்த்துவிட்டு வாருங்கள் ..பின்பு உங்களிடத்தில் பேசுகிறேன் என்று சொல்ல..


  அதி சுத்தத்துடன்..இன்குபேட்டரில் இருக்கும் பலகுழந்தைகளைத் தாண்டி இவன் குழந்தை (Baby of Dhivya ) அருகில் சென்ற கேசவ் இன்குபேட்டரில் இருக்கும் தனது குழந்தையை பார்த்து மேலும் சோகத்திற்கு உள்ளானான். அந்த பச்சிலங் குழந்தையின் உடல் முழுவதும் பல tube - கள்
  சொருகி இருப்பதை பார்க்கமுடியாமல் திரும்பிவிட்டான்.


  டாக்டரிடம் கெஞ்சினான் என்ன நடக்குது "டாக்டர்.. எப்படி இருக்கு குழந்தை" என்று கேட்க..


  கேசவ் உங்க குழந்தை அதிக சிக்கலில் தான் இருகின்றது. இதயத்தின் வெளியல இருக்குற valuves
  முழுமையா வளர்சியடையல ..அதனால மூச்சு திணறல் இருக்கு. இப்போதைக்கு வெண்டிலேட்டர்
  போட்டு இருக்குகோம்..இப்போதைக்கு எதையும் சொல்லமுடியாது. அதற்குண்டான சிறப்பு மருத்துவர் வந்தவுடன் நிலைமையை பரிசோதித்து என்ன செய்யலாம் என்று சொன்னார்.


  "என்ன சோதனை டாக்டர்...நீங்க எதை செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.
  நீங்க கடவுள் மாதிரி " என்று நா தழுதழுக்க சொல்ல.கவலைபடாதீங்க "கேசவ் கடவுள் மேல பாரத்தை போடுங்க எல்லாம் அவர் பார்த்துகுவார்" என்று சொன்னார்.


  மனைவி ஒரு மருத்துவமனையில்..குழந்தை ஒரு மருத்துவமனையில்.


  இன்னும் தான் பெற்ற குழந்தையை ஒருமுறை கூட பார்த்திராத திவ்யாவின் நிலை.. இன்னும் நான்கைந்து நாட்களாவது ஆகும் அவள் வந்து தான்பெற்ற குழந்தையை பார்க்க..கடவுளே என்னநடக்குமோ? குழந்தை நிலைமை என்ன ஆகும் என்று யூகிக்க இயலாத நிலைமை ..!

  என்ற இந்த இருள் சூழ்ந்த கடுமையான நிலைமையை நினைத்து கதறக் கூட திராணியில்லாத நாளை அனுபவித்தான் அன்று.


  இந்த நிலைமை ஆறு நாட்கள் ..தொடர ..திவ்யா discharge ஆகி இங்கே வந்துவிட்டால்.
  தான் பெற்றெடுத்த அந்த பிஞ்சு சிசுவை எண்ணி ஏங்கினாள். அவளின் தீராத விடாமுயற்சியாளும்
  பல மாதங்கள் நீடித்த அதே நிலைமை

  பல சிறப்பு மருத்துவர்களின் இடைவிடாத தொடர் கண்காணிப்பில் குழந்தையை காப்பாற்றி விட்டனர்.

  இந்த சிக்கல் சூறாவளியால் துவண்டு விழுந்தாலும் தான் எதை செய்யவேண்டுமோ அதை
  தீர்மானமாக விடாப்பிடியாக செய்தனர். இதற்கு அவர்கள் கொடுத்த கொடுத்த விலை கொஞ்சநஞ்சமல்ல.

  கிட்டத்தட்ட மூன்றாண்டு கடும் போராட்டதிற்கு பின் தனது குழந்தையை மீட்டெடுத்து சகஜ நிலைமைக்கு வந்துவிட்டனர்.


  இன்று கேசவ் ..திவ்யா தம்பதியரின் குழந்தை பிரணவ் என்ற பெயர்கொண்ட அக்குழந்தை படு சுட்டியாய் ..சேட்டையாய் வலம் வருகின்றான். உற்றார்..உறவினர் மற்றும் நண்பர்களுடன்.

  Pl. drop your comments for this short story in the below link:

  திருப்புமுனை - silentsounds
  Last edited by sumathisrini; 1st Oct 2013 at 11:01 AM. Reason: Comment page link added
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 8. #28
  sribha's Avatar
  sribha is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  chennai
  Posts
  195

  Re: Penmai Special Contest - Short Story Contest

  திருப்புமுனை  சத்ரபதி சிவாஜி விமனநிலையம்.
  சென்னை செல்லும் விமானத்திற்காக காத்துகொண்டிருந்த ஸ்வதிகாவின் முகம் புன்னகையை அனிந்து கொண்டிருக்க மனமோ இரன்டாக பிரிந்து சரி தவறு என சண்டைபோட்டு கொண்டிருந்தது.  ஸ்வதிகா மும்பை பேஸன் உலகதில் ஒரு முக்கிய இடத்தில் இருப்பவள். அவள் நடித்த எல்லா விளம்பரங்கலும் பெறும் வெற்றி பெற்றவை இந்த வருடத்தின் பல முன்னனி அழகு சாதன பொருட்களின்
  brand ambassador தேர்ந்தெடுக்கபட அதிகசதவிகித வாய்ப்பு உள்ளவள். Lime lightல் இருந்தாலும் ஒழுக்கதை கடைபிடித்து அனைவரிடமும் நல்ல் பெயர் வங்கிய கன்னி புயல் அவள்.


  ஸ்வதிகா விமனதில் தனது அருகில் அமர்திருப்பவனை பார்க்க அவனொ தனது லாப்டாப் தவிற வேற எதுவும் இந்த உலகதில் இல்லை என்பதை போல் அதிலிலே அவனது கவனம் இருந்த்து.
  அவனது கவனம் திரும்பது என்பதை உனர்ந்து தனது முன்னிருந்த டிவி திரையில் கவனத்தை திருப்பினாள்

  அதில் அனிமல் பிளனாட் நிகழ்ச்சி வர அதில் ஆழ்ந்தாள் பலவித மிருகங்கள் எப்படி தனது குட்டியை ஈன்றெடுகின்றன எவ்வாறு தனது வாரிசை பலவித துன்பங்களிலிருந்தும் இயற்க்கை சிற்றங்களிலிருந்தும் காப்பாற்றுகின்றன என்பதை பற்றிய குறும்படம் அது. முதலில் நேரம்போக்க பார்க்க ஆரம்பித்தவள் சிறிது நேரதிலெயெ அதில் முழ்கிபோனாள்

  தனது பாழக்கதோசதில் எப்பவும் எதையும் பகிர்வதை போல்


  “மணி எவ்வளவு அழகாக இருக்கு பாத்திங்களாchance இல்ல இல்லை” என கூற  அவள் அருகில் அமார்திருந்த மணிகண்டன் ஒரு நிமிடம் அவளையும் அவளது கவனம் பதிந்திருந்த திரையையும் மாறிமாறி பார்தவன் ஒன்றும் பேசமல் அவளை பார்த்து புன்னகைதான். அவனது புன்னகை மனதில் வலி எற்படுத்த கண்முடி அவனது தோள் சாய்ந்தாள் அவனது மனைவி திருமதி ஸ்வதிகா மணிகண்டன்.  மும்பையை பொருத்தவரையில் அவள் திருமனமாகதவள் ஆனால் அவள் திருமதி ஆகி இரண்டு வருடம் ஆகிரது

  மணிகன்டன் அவளது அத்தை மகன். இருவரும் பிறந்து வளர்ந்தது காஞ்சிபுரம் மாவட்டதில். இருவரும் நெருங்கிய நன்பார்கள் ஸ்வதிகவிற்காக மணி எதையும் செய்வான். அவளது லட்சியகனவான மாடல் ஆவதிற்க்காக குடும்பதினர் அனைவரும் எதிர்க்க அனைவரிடமும் கடுமையாக போராடி அவளை வெற்றி பெற செய்தவன். சென்னையில் பெரிய நிருவனதில்
  ENGINEER அக பனிபுரிபவன்

  திருமனமாகி இரண்டு வருடம் ஆகியும் அவளது கனவுக்காக தள்ளியெ இருந்த நல்ல கனவன். இரு மாதங்களுகு முன் தங்களது சொந்த ஊரில் அவனது மனைவியாக தான் முதலடி எடுத்துவைக்கும் வரை காத்திருந்தவன் பின்பு தான் ஒரு நல்ல காதலன் என்றும் நிருபித்தான்.


  நேற்று இரவு தான் அவசரமாக அழைததன் காரனமாக மும்பை வந்தவனிடதில் தான் கர்பமாக இருப்பதை சொன்னவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். “மணி உன்க்கே நல்லா தெரியும் இப்போ தான் நல்ல நல்ல offer வருது இந்த சமயதில் ... எனது கரியர் அவ்வளவுதான் உனக்கு புரியுதில்லை” சிறிது நேரம் மௌனம் அவ்விடத்தை ஆட்சி நடத்த


  “ஸ்வாதி எனக்கு புரியுது ஒரு நல்ல நன்பனாக உனது இந்த முடிவை என்னால் எற்றுகொள்ள முடிகிறது ஆனால் ஒரு கனவனாக என்னால் இதே பதிலை சொல்ல முடியும்னு தோனலை.
  நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதற்க்கு உடன்படுகிரென் நான் எப்பவும் உனது கூடவேதான் இருப்பேன் நீயெ முடிவெடு. உன்னொடு ஷூட் இப்பொ எதுவும் இல்லைதானெ சொ நி இங்கெ இருக்க வேண்டாம் எங்கூட சென்னை வந்துவிடு இங்கெ தனியாக இருக்க வேண்டம் என சொன்னான்.


  மிகவிரைவாக செயல்பட்டு இதொ இப்பொ இருவரும் சென்னை நோக்கி செண்று கொண்டிருகின்றனர்.


  ஆனால் அவனது முடிவை தெரிவித்தவன் அதன் பிறகு அவளுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்தவன் அவளிடம் தேவைக்கு மேல் பேசவே இல்லை.


  இவ்வாரு இருவரும் தங்கலது நினைவலையில் நிந்திகொண்டிருக்க அவர்களை சுமந்த விமானம் தனது வேலையை ஒழுங்காக செய்து முடித்தது,


  விமான நிலையத்தை விட்டு வெளியெ வந்தவர்களவர்களுக்காக காத்திருந்த கால்டாக்ஸியில் எரியமர்ந்தவன்
  ஸ்வாதி இப்பொ விட்டுக்கு போயிட்டு
  HOSPITAL போலாமா இல்ல நேராக HOSPITALபோரொமா நியெ சொல்லி விடு என சொல்லியவாரெ சாய்ந்து அமர்ந்தான்.

  DRIVER SIR காஞ்சிபுரம் போங்க” என ஸ்வதிக்கா சொல்ல


  துள்ளி எழுந்த மணி என்ன சொன்ன என கேட்க்க அவனை நொக்கி கண்னடித்தவள்


  ஏன் இவ்வள்வு ஆச்சிரியம் தாத்தா பாட்டி ஆன விசயத்தை நம்ம இரண்டு அப்பா அம்மாவிடம் சொல்ல வேண்டாமா என கேட்டவரு தனது வாழ்வின் சரியான முடிவெடுக்க காரனமாக (திருப்புமுனையாக) அமைந்த இந்த விமான பயனத்தையும் அந்த குரும்படத்தையும் நினைத்தவாரு நிம்மதியாக தனது கனவனது தோள் சாய்ந்தாள் ஸ்வாதிகா மணிகண்டன்.

  திருப்புமுனை by sribha

  Pl. drop your comments for this short story in the below link:

  திருப்புமுனை - sribha


  Last edited by sumathisrini; 1st Oct 2013 at 11:00 AM. Reason: Comment page link added

 9. #29
  sribha's Avatar
  sribha is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  chennai
  Posts
  195

  Re: Penmai Special Contest - Short Story Contest

  enathu muthal sirukathaiithu padithuvittu ungalathu comments podunga

  திருப்புமுனை - sribha
  திருப்புமுனை - sribha


 10. #30
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,878
  Blog Entries
  1

  Re: Penmai Special Contest - Short Story Contest

  பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

  "திருப்புமுனை" என்ற தலைப்பில் நடந்த பெண்மை சிறப்பு சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை கதைகளாக பதிவு செய்த உங்கள் அனைவருக்கும் பெண்மையின் சார்பில் பாராட்டுக்கள்...

  Its really very hard for the judges to select the winner. This time in Juries Panel, we had both Penmai Judges and Special Judges as Writers of Penmai. My Special Thanks to our all those juries who participated in selecting the winners.

  It's time for announcing the winner of the contest.

  SujiBenzic got maximum votes from our juries and won the contest. Congrats Sujana!!! Lashmi stands next to Sujana.

  Here is gift for your sujana!

  Hearty congrats to other participants too, you all had done a good work in presenting the story. Everyone's story is Unique and Excellent!

  Please send your Indian Postal Address with Phone no. to Parasakthi through private message. Once you received the gift pls confirm the same with her.


  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter