Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree838Likes

Penmai Special Contest - Short Story Contest


Discussions on "Penmai Special Contest - Short Story Contest" in "Special Contest" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Penmai Special Contest - Short Story Contest

    Dear friends,

    Here is a special short story contest to feed our writers creativity... Pen your story on the title - "
    Turning Point / திருப்பு முனை".

    Please post your stories in this thread itself as posts.

    Some rules:

    • Story should be within 750 words of length.
    • Only one entry (short story) is allowed for a writer.
    • Should be your own writing, and the story should not be published already in any sites or any mode.
    • Stories should be in English or Tamil language only.
    • Contest will be closed on September 30th 11 PM IST.
    • Winner will be selected by Penmai's Juries.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Penmai; 10th Sep 2013 at 08:58 PM. Reason: Texts added
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai Special Contest - Short Story Contest

    அயோயோ!
    நமக்கு கதையென்றால் ஆகாது!!

    Penmai Special Contest - Short Story Contest-sad-face.gif


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #3
    sbsudha's Avatar
    sbsudha is online now Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Penmai Special Contest - Short Story Contest

    Quote Originally Posted by Penmai View Post
    Dear friends,

    Here is a special short story contest to feed our writers creativity... Pen your story on the title - "
    Turning Point / திருப்பு முனை".

    Some rules:

    • Story should be within 750 words of length.
    • Should be your own writing, and the story should not be published already in any sites or any mode.
    • Stories should be in English or Tamil language only.
    • Contest will be closed on September 30th 11 PM IST.
    • Winner will be selected by Penmai's Juries.

    Hi,
    Short story Ingeye post panneedalaamaa? illa edhaanum PM ku anupanumaa?


  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai Special Contest - Short Story Contest

    Quote Originally Posted by sbsudha View Post
    hi,
    short story ingeye post panneedalaamaa? Illa edhaanum pm ku anupanumaa?
    டியர் சுதா, நீங்க இங்கேயே உங்களோட சிறுகதையை பதிவிடலாம். Pm அனுப்ப வேண்டியது இல்லை.



  5. #5
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: Penmai Special Contest - Short Story Contest

    ஹாய் மேம், ஒரு ஆள் ஒரு சிறுகதைதான் எழுதலாமா?

    இல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட கதை எழுதலாமா?



  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai Special Contest - Short Story Contest

    Quote Originally Posted by infaa View Post
    ஹாய் மேம், ஒரு ஆள் ஒரு சிறுகதைதான் எழுதலாமா?

    இல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட கதை எழுதலாமா?
    Hi Infa,

    ஒருத்தர் ஒரு சிறுகதை தான் பதிவிட வேண்டும்... இதை முதல் பதிவின் குறிப்பில் ஏற்கனவே கொடுக்கப்பட்டும் உள்ளது.



  7. #7
    kalaineemu's Avatar
    kalaineemu is offline Penmai's Cheerers
    Registered User & Blogger
    Commander's of Penmai
    Real Name
    kalai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    MADURAI
    Posts
    2,264
    Blog Entries
    81

  8. #8
    kalaineemu's Avatar
    kalaineemu is offline Penmai's Cheerers
    Registered User & Blogger
    Commander's of Penmai
    Real Name
    kalai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    MADURAI
    Posts
    2,264
    Blog Entries
    81

  9. #9
    aarthiaec's Avatar
    aarthiaec is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    tanjore
    Posts
    278

    Re: Penmai Special Contest - Short Story Contest

    திருப்புமுனை
    இன்றோடு ஒரு வருடம் ஆகிறது இந்த space ship இன் உள் வந்து.மதுவுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை அவளின் தோழிகளில் பலர் அவள் உடன் இல்லை . அவளின் செல்ல ப்ரௌன்னி அதுவும் அவள் உடன் இல்லை.அப்பா சொல்கிறார் இனி நம் நம்ம வீட்டுக்கு போக முடியாது என்று.என்ன ஆயிற்று என்று தெரிய வில்லை அவளின் மஞ்சள் ரோஜா செடி எதனை பூ பூத்ததோ ? பக்கத்து வீட்டு பிரியா பறித்து கொண்டு பொய் விட்டாளா? இல்லை செடியையே புடிங்கிவிட்டளா?நம்ம ஸ்கூல குடுத்த ஹோம் வொர்க்க முடிக்கவும் இல்லை SCHOOL க்கு போகவும் இல்லை. எப்படி அந்த அனிதா மிஸ் பெரிய டினோசார் கிட்ட இருந்து தப்பிச்சோம் இப்படி அவளின் சிந்தனை பலவாறாக ஓடி கொண்டு இருந்தது .பாவம் அவளுக்கு அப்போது தெரிய வில்லை அவளின் சிந்தனையாய் இருக்கும் ஒன்றிற்கும் உயிர் இல்லை பூமி உட்பட என்று அவளுக்கு தெரிய வில்லை .
    தன் சிந்தனையிலே தன் ஸ்வீடி பொம்மையுடன் விளையாடி கொண்டு இருந்த அவள், சுற்றுபுறம் பரபரப்பு ஆவதை கவனிக்க வில்லை.ஆம் இந்த space ஷிப் இல் வந்த மனிதர்கள் தேடி வந்த “பிருஷ்மா ஐருத்தி யை” நெருங்கியது தான் இந்த பரபரப்புக்கு காரணம். பிருஷ்மா ஐருத்தி teleporter இல் இருந்து சிக்னல் space ஷிப்க்கு கிடைத்தது.அதில் வந்த செய்தி space ஷிப் இல் இருந்த அனைவர்க்கும் மகிழ்சியும் துக்கமும் கலந்த கலவையான உணர்வை கொடுத்தது. “பிருஷ்மா”வின் தலைவர் அவர்களுடன் பேச விரும்புவதாக வந்த செய்தியே தான் அது.
    அனைவரும் தாங்கள் புதிதாய் வாழ்கை ஆரம்பிக்க போகும் கிரகத்தில் இருக்கும் உயிர் இனத்தை பார்க்க ஆவல் கூடவே என்ன நடக்குமோ என்ற பயமும் இருந்தது.தொலை காட்சி பெட்டி உயிர் பெற்றது.இன்னது என்று அறிய முடியாத antenna இல்லாத ஒரு alien பேச ஆரம்பித்தது . அது முகத்தில் அப்படி ஒரு கோவம் மனிதர்களை பார்த்து ஒரு பரிகாச முகபாவம்.அது பேசியதாவது “ சீ அற்ப மானிட பதர்களே நீங்கள் எங்களையும் வீணாகுவதற்கு இங்கே வந்து வந்துடிங்களா!எவ்வளவு அழகான கிரகம் உங்களுடையது அதை உங்கள் சுயநலத்திற்காகவும் சொகுசுக்காகவும் அழித்து விட்டிற்கள். உங்களுக்குள் இருக்கும் தீய குணங்களும் பூமியில் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, கையுட்டு, பொறமை,அடுத்தவன் குடி கெடுப்பு , சமுக அக்கறை இன்மை சுகாதார சீர்கேடு, இது மட்டும் இல்லாமல் அடுத்தவர் எப்படி போனால் என்ன என்று மனிதர்களில் சிலர் மட்டும் தப்பி வந்திற்கும் மனப்பான்மை,அறிவியல் வளர்ச்சியை ஆயுதம் ஆகவும் ரசயனமாகவும் மின்னணு குப்பைகளாகவும் மாற்றி பூமியை வெப்ப மயமாக்கி பூமியை அழித்து செயற்கை கொள் என்ற பெயரிலும் விண்வெளி நிலையம் என்ற பெயரிலும் ஒரு நாட்டோடு இன்னொரு நாடு போட்டி போட்டு அண்டத்தையே வீணாகிய உங்களை உள்ளே விட்டால் எங்கள் கிரகமும் வீணாக பொய் விடும்.உங்களுக்கு எங்கள் கிரகத்துகுள் நுழைய அனுமதி மறுக்க படுகிறது. உங்கள் மீது நங்கள் ஆயுதம் பயன் படுத்தும் முன்பு நீங்கள் இங்கிருந்து சென்று விடுங்கள்.உங்கள் விட பல மடங்கு சக்தி சாலிகள் நங்கள்.அறிவியல் வளர்ச்சியிலும் பரிணாம வளர்ச்சியிலும் உங்கள் விட பெரியவர்கள் நாங்கள் எங்கள் molecular dissembling reassembling and டேலேபோர்ட்டர் தொழில் நுட்பம் மூலமாகவும் இரண்டே நாளில் பூமிக்கு வரவும் போகவும் முடியும் அப்படி வந்த பொது நங்கள் பார்த்து ரசிச்ச பூமியை அழித்த நீங்கள் .இங்கு இருக்கும் நீங்கள் அனுப்பிய விண்வெளி குப்பையோடு குப்பை யாய் மிதந்தது இறந்து போங்கள் .இதுவே சர்வதேச ப்ளும்பெர் மற்றும் விண்வெளி நீதி மன்றத்தின் தீர்ப்பு”என்று சொல்லி மறைந்து.இதை கேட்ட மனிதர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியில் பேச முடிய வில்லை,அழகையும் வர வில்லை.பெற்ற தாய் தந்தையை விட்டு வந்தவர்களால் தானும் தன் குடும்பமும் அழிய போவதை ஜிரனித்து கொள்ள முடிய வில்லை.அவர்களின் கடைசி நம்பிக்கையும் பொய்த்து போனது.ஏற்கனவே மிரண்டு போய் இருந்த மது அழ ஆரம்பித்தாள். “அம்மா அப்பா இங்க வேணாம் நாம வீட்டுக்கே போலாம் இந்த alien அங்கிள் ல பார்த்தாலே பயமா இருக்கு.ப்ளீஸ் அப்பா நான் இனிமே குட் கேர்ளா இருப்பேன்.ப்ளீஸ் பா “என்று தேம்ப ஆரம்பித்தாள்.
    “மது மணி ஏழு இன்னும் ஸ்கூல் ஹோம் வொர்க் முடிக்கல, வேன் வந்துரும்,தூங்கிகிட்ட இருக்க.நாள் முழுக்க கார்ட்டூன் பாக்க வேண்டியது அப்புறம் alien space ஷிப் அப்படினு தூக்கத்துல பொலம்ப வேண்டியது.எழுந்திரி கழுத”என்ற அம்மாவின் வசை மொழியில் திடுக்கிட்டு கண் விழித்தாள் நம் இரண்டாம் வகுப்பு படிக்கும் குட்டி சுட்டி பெண் மது மிதா.அனாலும் அந்த கனவின் தாக்கத்தில் இருந்து அவளால் வெளிவர முடிய வில்லை.அதுவே அவளின் சிந்தனை முழுக்க ஆக்கிரமித்தது.எதாவது பண்ண வேண்டும் என்று தோன்றியது ஆனால் என்ன பண்ணவது என்று அந்த குட்டி தேவதைக்கு தெரியவில்லை.அந்த கனவு அவளின் மனதுக்குள் ஒரு பெரிய விதையை விதைத்தது. அந்த விதையினால் வளர்ந்த பெரிய விருட்சம் “பூமி காப்போம் நாமும் வாழ்வோம்” இயக்கம் .இன்று மது 38 வயது ஆனா இந்தியாவின் முன்னணி விஞ்ஞானி ,சமூக மாற்றம் ஆர்வலர்,தலை சிறந்த இளம் அரசியல் வாதி, இப்படி பல பரிமானம் கொண்டுள்ள இந்திய அரசின் உயரிய விருதான “பாரத் ரத்னா”விருதுக்கு பரிந்துரை செய்ய பட்டு இருக்கிறாள்.உலகின் லீடிங் bio materialistic and advanced pharma விஞ்ஞானியான அவளின் முக்கிய கண்டு பிடிப்பு “பிளாஸ்டிக்”கின் மாற்றும் genitic manipulation for human diseases and disorder. இந்தியாவை பசுமை நாடகாக மாற்றவும் ,நம் நாட்டின் சமுக அவலங்களை களையவும் ஒத்த சிந்தனை உள்ள கோடி கணக்கான மக்களை உறுபினராக கொண்ட “பூமி காப்போம் நாமும் வாழ்வோம்” இயக்கம் சாதித்தது பல சாதிக்க போவதும் பல. இன்றைய நாள் வரையில் மது வின் favorite கார்ட்டூன் தான் இவளே நிறைய கார்ட்டூன் கேரக்டரரை உருவாக்கி குழந்தைகளின் மனதில் சமுக உணர்வும், பொறுப்பு உணர்ச்சியும் வளர தன்னால் இயன்றதை முயன்று கொண்டு இருக்கிறாள்.
    இத்தனைக்கும் அடிப்படை அந்த கனவு.தூக்கத்தில் வரும் கனவு அவளின் தூக்கத்தை கெடுத்து லட்சிய வாதியாய் செதுக்கியது. சராசரி பெண்ணாய் இருந்த அவளை சாதனை பெண்ணாய் மாற்றியது அந்த கனவு. அது அவளுக்கு மட்டும் இல்லை நம் சமுகத்துக்கும் நாட்டிற்கும் பெரிய திருப்பு முனையாய் அமைந்தது என்றால் மிகை இல்லை.

    முற்றும்.

    தோழமைகளே இது என் முதல் சிறுகதை .
    என்னுடைய கதையை பற்றி தங்களின் கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன் தவறுகள் இருந்தால் (இருக்கும்) மன்னிக்கவும்.

    என்னுடைய கதைய எழுத வாய்ப்பளித்த இளவரசி mamக்கு என்னுடைய ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.

    Drops your Comments for this Short Story in the below link:

    திருப்புமுனை - Aarthi

    Moderator Note:

    This Article has been published in
    Penmai eMagazine Dec 2013. You Can download & Read the magazines HERE.


    Last edited by gkarti; 10th Jul 2014 at 04:01 PM. Reason: Comments Page link Added

  10. #10
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai Special Contest - Short Story Contest

    திருப்புமுனை

    “வணக்கம்ங்க…….. எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

    வீட்ல எப்படி இருக்காங்க?

    என்னங்க அப்டி யோசிக்கரீங்க……………………………

    என்னை தெரியல…………… சரியா போச்சி போங்க………………
    நா உங்கள தினமும் பாக்கறேனே”

    “நாதாங்க சாரதா தெரு திருப்புமுனைல இருக்கிற குட்டிச்சுவர்ங்க என்னடா இப்ப இதுகூட பேச வந்துடுச்சானு யோசிக்காதீங்க…………………
    உங்கக்கிட்ட ஒரு சேதி சொல்ல வந்திருக்கேன்”

    ”முப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு பெரிய வீடா இருந்தேன் அந்த வீட்ல சொக்கலிங்கம் ஐயா அவங்க சம்சாரம் இவங்களுக்கு நாலு பிள்ளைங்க எல்லாரும் சந்தோசமாதான் இருந்தாங்க ஆனா தொழில் நஷ்டத்துனால சொக்கலிங்கம் ஐயா நிறைய கடன் வாங்கிட்டாரு அத திருப்பிதர முடியல அதனால வீட்டவிட்டு எல்லாரும் எங்கயோ போயிட்டாங்க இப்படியே காலி வீடாவே இருந்து மிச்சம் இருக்கிறது நான்தான் மத்த்தெல்லாம் பாழாபோச்சு”

    ” இங்க ஒரே பாம்பு தேளுனு இருந்துச்சு எல்லாரும் குப்பைய போட்டாங்க ஆறாம் நம்பர் வீட்டுல இருக்கற ரமேசு குப்பைய கொண்டுவந்து இங்க போட்டாரு இத்தனிக்ககும் அவரு பெரிய படிப்பு படிச்சவரு வெளிநாட்டுக்கு வேற போயிட்டு வந்திருக்காராமா……………..

    ம்ம்ம்…என்ன படிச்சு என்ன பிரியோசனம் குப்பைய குப்பைதொட்டில போடனும்னு தெரியலயே………இவருனு இல்லங்க நிறையபேரு இப்படிதான் பண்றாங்க”

    ”ஆனா சும்மா சொல்லகூடாது இருபதாம் நம்பர் வீட்டுல குடி இருக்கற வக்கீல் ரங்கநாத ஐயா வீட்ல மக்கும் குப்பை மக்காத குப்பைனு பிரிச்சி குப்பை லாரி வரும்போது அதுல போடுவாங்க அவங்க குட்டி பொண்ணு மூணாவுது படிக்குது அன்னிக்கு பாலு ரோட்டுல சிகரெட்டு துண்டு போட்டாருனு சண்டைக்கே போயிடுச்சுனா பார்த்துக்கங்களே..... வீதிய சுத்தமா வெச்சிக்கணும் குப்பை போடக்கூடாது அப்படி இப்படினு பாடமே எடுத்துடுச்சு சின்ன குழந்தைக்கு தெரிங்சது பெரியவங்களுக்கு தெரியல

    வயசு பசங்கெல்லாம் படிச்சது படிக்காத்து வேலைக்குபோகாம ஊர் சுத்தறது இப்படியிருக்கறது எல்லாம் காலைலயிருந்து சாய்ங்காலம் ஆறு மணிவரைக்கும் என்மேல உட்கார்ந்துக்கிட்டு போறவற பொண்ணுகளையெல்லாம் கேலி கிண்டல் பண்ணுங்க யாருச்சொன்னாலும் கேட்கறதில்ல பெத்தவங்களையும் மதிக்கறதில்ல. நம்ம தெருவுல ஓய்வுப்பெற்ற ஆசிரியர் கிருஷ்ணன் இருகாரே அவருக்கு இதெல்லாம் கெஞ்சங்கூட பிடிக்கல ”என்னப்பா இதெல்லாம் உங்களுக்கு எவ்வளோ சொன்னாலும் புத்திவராதா போய் உருப்புடுற வழிய பாருங்கப்பானு” சத்தம் போட்டாரு

    “ஏ! பெரிசு பேசாம உன்வேளைய பாரு இதுலெல்லாம் நீ வராத”

    “இல்லடா இவருக்கு நம்ம்மேல பொறாமடா இவரால செய்யமுடியாத்தை நாம செய்யறேரம்ல” இப்படி ஒண்ணு ஒண்ணா அவரையே எல்லாம் சண்டபோட்டு கிண்டல்பண்ணிச்சிங்க

    “இதுக்கெல்லாம் ஒருமுடிவுக்கட்டுறேன்னு” கோபமா சொல்லிட்டு போனாரு. ஆசிரியர் அவரோட நண்பர்கள்கிட்ட பேசிட்டு ஒரு முடிவுக்கு வந்தாரு. ரெண்டு நாள் கழிச்சி சாய்ங்காலம் அவரோட நண்பர்கள்கூட வந்தாங்க போக்கிரி பசங்க கிளம்பினதும் இந்த இடத்த சுத்தம்பண்ணாங்க நாலுபக்கம் கம்புவெச்சுக்கட்டி ஒரு கூரைய போட்டாங்க ஏழை குழந்தைகளுக்கு இங்கு இலவச கல்வினு போர்டுல எழுதி வெச்சாங்க முதல்கட்டமா பக்கத்துல இருக்கிற அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு பாடம் ஆரம்பிச்சாங்க மறு நாள் காலை அந்த பசங்க வந்துப்பாத்தப்ப அதுங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு அந்த இடம் சுத்தமாவும் நிறைய சின்ன குழந்தைங்க பாடம் படிச்சிட்டு இருந்துச்சி கிருஷ்ணன் சார் பாடம் நடத்திக்கிட்டு இருந்தாரு அவரோட நண்பர்களும் உதவியா இருந்தாங்க.

    இந்த பசங்களை பார்த்தும் “என்னப்பா ரோடு ரோமியோக்களே குப்பமேடா இருந்த இடத்தை கோயிலா மாத்திடோம் நீங்களும் உங்க மனசுல இருக்கிற குப்பைய………………….ஓ ஐ ஏம் சாரி சாரி உங்களுக்கு அட்வைஸ் பிடிக்காது இல்லையா ………………..”

    அப்ப வக்கீல் ரங்கநாத ஐயா அங்க வந்தாரு பசங்கல பார்த்து ”இங்க ஏதாவது ரகளை செஞ்சா நியுசன்ஸ் கேஸ்ல உள்ளபோட்டுவன் ஜாக்ரதைனு” மிரட்டினாரு

    அதுங்களுக்கு பயங்கர கோபம் எல்லாம் போயிடுச்சுங்க

    கிருஷ்ணன் சார் வக்கீல் ஐயாகிட்ட “இந்த இடத்தோட ஓனர் வந்ததும் நாங்க இங்கிருந்து கிளம்பிடுவோம்”

    “அதுதான் சரின்னு” சொல்லிட்டு வக்கீல் ஐயாவும் அங்கிருந்து கிளம்பிட்டார்

    “இப்ப குப்பைமேடா இருந்த இந்த இடம் தெய்வீகமா இருக்கு சாரதா தெரு திருப்புமுனைல இருக்கிற குட்டிச்சுவரகிய என் வாழ்க்கையிலும் ஒரு நல்ல இன்பமான திருப்புமுனை வந்திருக்கு”

    சொல்ல மறந்துட்டேனே அந்த போக்கிரி பசங்க இருக்குதே அதுல ரெண்டு கூட வந்து இங்க பாடம் சொல்லிதருது அதுங்க வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை.

    (இந்த கதை மழூவதும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல)

    Drop your comments for this Short Story in the below link:

    திருப்புமுனை - Subha

    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine January 2014. You Can download & Read the magazines HERE.




    Last edited by sumathisrini; 25th Jul 2014 at 07:59 PM. Reason: Comments Page Link Added
    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter