Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree312Likes

Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி


Discussions on "Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி" in "Special Contest" forum.


  1. #11
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    Sudd,

    அருமையான தகவல்கள ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்


    Sponsored Links
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  2. #12
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    Quote Originally Posted by laddubala View Post
    Sudd,

    அருமையான தகவல்கள ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்
    Hi Laddu,
    Thankyou so much. Iniya puthaandu vaazhthukkal


  3. #13
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    Nice thread sumi,

    sudha,

    romba arumaya solli irukka ma, marakka patta pazhkka vazhakkangal kan munne therigiradhu.nandrigal pala.


    KOTHAISURESH

  4. #14
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    அனைவருக்கும் வணக்கம்.

    இங்கே நம் தமிழர் பண்பாடுகள் என்று நிறைய தலைப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது இருக்கும் கால மாற்றத்தால் நம்மால் எல்லாவற்றையும் பின்பற்ற முடியவில்லை. ஆனால் நாம் எதையும் முழுமையாக கைவிடவும் இல்லை. நம்மால் பின்பற்ற முடிந்ததை பின்பற்ற தான் செய்கிறோம் ஆனால் அது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாறிவிட்டது அல்லது நாம் மாற்றிவிட்டோம்.


    தமிழர் கட்டிடக் கலை - நம் முன்னோர்கள் அந்த காலத்தில் வெளியே திண்ணை வைத்து, வீட்டிற்குள் முற்றம் வைத்து, பின் வாசல் வைத்து என்று காற்றோட்டமான வீடுகளை கட்டினார்கள். ஆனால் இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரி வீடுகளை பார்க்க முடிவதில்லை. இப்போது எல்லாம் புறா கூண்டு போல் அடுக்கு மாடி குடியிருப்புகள் தான். ஏன் என்றால் இப்போது நிலம் விற்க்கும் விலைக்கு நம்மால் இது போல் விடுகளை தான் கட்ட முடிகிறது.


    தமிழர் யோகக் கலை - 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும். காலம் மாறினாலும் இப்போதும் நிறைய பேர் இந்த கலையை கற்று வருகின்றனர். உடலை ஆரோக்கியமாக, இளமையாக வைத்து கொள்ள உதவும் கலை என்பதால் நிறைய பேர் இன்றும் விரும்பி இதை செய்கின்றனர்.


    தமிழர் உணவுக்கலை - அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் சாதாரண நாளிலேயே விருந்து போல தான் சமைத்தனர். பலவகை பலகாரங்கள், இனிப்பு வகைகள், காய்கறிகள் என்று விதவிதமாக செய்தனர். அதோடு உடலுக்கு தேவையான சத்தான ஆகாரத்தை எடுத்து கொண்டனர். அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு உடல் உழைப்பு அதிகம் அதனால் அவர்கள் கல்லை தின்றாலும் ஜீரணம் ஆகியது. ஆனால் இப்போது எல்லாம் துரித உணவகம் தான். நமது பாரம்பரிய சமையலை நாம் இப்போது பண்டிகை நாட்களில் தான் செய்கிறோம். அதுவும் நம் முன்னோர்கள் செய்ததில் கால்வாசி அளவு கூட இப்போது செய்வது இல்லை. அதிலும் இப்போது எல்லோருக்கும் வரும் விதவிதமான நோய்கள் வேறு அதானால் இப்போது எல்லோரும் அளவான சாப்பாடு தான் சாப்பிடுகிறார்கள்.


    தமிழர் ஆடை மரபு - தமிழர்களின் பாரம்பரிய உடைகளாக வேட்டி, சேலை இருந்தது. எனக்கு தெரிந்து நாம் இப்போது திருமணங்களிலும், வீட்டு விசேசங்களிலும் தான் நம் மரபு படி ஆடை அணிகிறோம் என்று நினைக்கிறன். ஆடைகள் விஷயத்தில் இப்போது நாம் வெளிநாட்டினர் மரபை தான் அதிகம் பின்பற்றுகிறோம்.


    தமிழர் விளையாட்டுகள் - இன்றைய காலகட்ட குழந்தைகளுக்கு இது என்னவென்றே தெரியாது. நடைவண்டி விளையாட்டு முதல் பல்லாங்குழி, கபடி, பம்பரம், தூண் விளையாட்டுகள் என்று நம் பாரம்பரியத்தில் வந்த விளையாட்டுக்கள் யாவும் மறக்க பட்டதாகவே நான் கருதுகிறேன். இப்போது சில இடங்களில் மட்டும் இன்னும் சிலம்பாட்டம், மாடுபிடித்தல் போன்ற விளையாட்டுகள் பண்டிகை நாட்களில் விளையாடுகின்றனர்.


    தமிழர் உழவுமுறை - விவசாய நிலம் எல்லாம் இப்போது பட்டா போட்டு வித்தாயிற்று எஞ்சிருக்கும் நிலங்களுக்கும் போதிய நீர் கிடைப்பதில்லை அப்படி இருக்கும் போது அந்த காலத்தை போல

    "மாடு கட்டிப் போரடித்தால்
    மாளாது செந்நெல் என்று
    ஆனை கட்டிப் போரடிக்கும்
    அழகான தென்மதுரை." போன்றவற்றை இப்போது நாம் நினைத்து பார்க்க முடியுமா... விவசாய நாடான நாம் இனி வருங்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்யும் நிலையும் வரலாம்.



    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  5. #15
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    தமிழர் கல்வி முறை - அன்றைய காலத்தில் குருக்குல கல்வி முறை இருந்தது. ஆசிரியர் மீது பக்தி, பயம், மரியாதை இருந்தது. இப்போது இருக்கும் மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் தான் பயப்படுகின்றனர். அதிலும் இப்போது இருக்கும் குழந்தைகள் தமிழே படிப்பதில்லை இதில் எங்கிருந்து நாம் தமிழ் கல்வி முறை பற்றி பேசுவது. ஆனால் இப்போது எல்லோரும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து இருகின்றனர். நமது பண்டைய கால வரலாறுகள், இதிகாசங்களை நம் குழந்தைகள் தெரிந்து கொள்ளாமலே இருந்து விடுவார்களோ என்ற பயம் உள்ளது.


    தமிழர் விருந்தோம்பல் - பழங்காலத்தில் தமிழர் வழக்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க இலக்கியங்களிலும் பெரிய புராணத்திலும் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் போதெல்லாம் எல்லோருக்கும் விருந்து அளிக்கப் பெற்றிருப்பதாகக் காண்கின்றோம். "விருந்து புறத்திருக்கச் சாவா மருந்தெனினும் தனித்து அருந்தாமை”.. என்பதே தமிழர்களின் உயர்ந்த பண்பாடு. இல்லத்திற்கு வந்த விருந்தாளி முன்புறமோ அல்லது வரவேற்பறையிலோ இருக்க, அமிழ்தம் என்று சொல்லக் கூடிய உணவே ஆயினும் அதனை வீட்டின் அடுக்களையிலோ அல்லது மறைவான இடத்திலோ, விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பது என்பது தமிழர் பண்பாடு ஆகாது என்று தெளிவாகிறது.

    இதெல்லாம் அந்த காலத்தோடு சரி. இப்போது தெரியாத புதியவர்களை வீட்டிற்குள் நம்பியே அழைக்க முடியாது இதில் விருந்து வைப்பது நடக்கும் காரியமா. ஆனால் உறவினர்களை, நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கும் பழக்கம் இன்றும் மாறவில்லை அந்த காலத்தை போல் பல வகை பலகாரங்கள் செய்ய முடியவில்லை என்றாலும் இப்போது காலத்திற்கேற்ற முறையில் விருந்தோம்பல் நடக்கிறது.


    தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் - அந்த காலத்தில் நாத்து நட்டாலும் பாட்டு, குழந்தை பிறந்தாலும் தாலாட்டு பாட்டு, யாரவது இறந்தாலும் பாட்டு என்று நம் முன்னோர்கள் ரத்தத்தில் கலந்து இருந்த நாட்டுப்புற பாடல்களை இப்போது எங்கேயும் கேட்க முடிவதில்லை.


    தமிழர் திருமண முறை - பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும், வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். காரணம் திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது.

    பொருத்தம் பார்த்தல், மணநாள் குறித்தல், திருமண அழைப்பிதழ், மணவினை நிகழும், இடத்தை அலங்கரித்தல், சிறப்பு இறைவழிபாடு செய்தல், மங்கல ஒலி எழச்செய்தல், மணமேடை ஒப்பனை போன்றவையே அந்த கால திருமணத்தில் முக்கிய நிகழ்வாக இருந்தது ஆனால் பிறகு காலமாற்றத்தில் சில புதிய சடங்குகளும் பின் பற்ற தொடங்கினோம் அவை காப்பு நூல் கட்டுதல், மங்கல நீர் கொண்டு வருதல், மண மக்கள் ஒப்பனை, மணமகன் அழைப்பு, வேள்வித்தீ, அம்மி மிதித்தல், பாத பூசை செய்தல், அருந்ததி காட்டல், அறம் செய்தல், மங்கல அணி, சீதனம் கொடுத்தல்.

    நமது திருமணமுறை அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் வேறு பட்டிருந்தாலும், நாம் இன்னும் நமது பாரம்பரிய பழக்கவழக்கத்தை அதிகம் கடைபிடிப்பது திருமணங்களில் தான். இன்று நாம் நிறைய வகையான திருமணங்களை பார்க்கிறோம் எந்த வகையான திருமணம் ஆனாலும் இப்போது திருமணதிற்கு அதிக பணம் செலவழித்து ரொம்ப விமர்சையாக செய்கின்றனர்.

    நண்பர்களே நான் எனக்கு தெரிந்த கருத்துக்களை கூறியுள்ளேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.



    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  6. #16
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    Hi Kothai,
    Romba thanks. edho enakku therinja konjam, ammaa paatti andha kaalathula sonnadhu konjam nu exhudhinen. siladhu thappaa kooda irukalaam.

    Quote Originally Posted by kvsuresh View Post
    Nice thread sumi,

    sudha,

    romba arumaya solli irukka ma, marakka patta pazhkka vazhakkangal kan munne therigiradhu.nandrigal pala.



  7. #17
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    Hi rams,
    as usual kallikkifying.


    KOTHAISURESH

  8. #18
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    Quote Originally Posted by kvsuresh View Post
    Hi rams,
    as usual kallikkifying.
    Thank you Kothai Aunty.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  9. #19
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    Dear Ramya,
    Vegu arumaiya solli irukeenga. Thanks


  10. #20
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Tamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி

    Quote Originally Posted by sbsudha View Post
    Dear Ramya,
    Vegu arumaiya solli irukeenga. Thanks
    Thank you Sudha ka

    unkalodathum ippa thaan padichen super.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter