Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree299Likes

Penmai 6th Anniversary Contest


Discussions on "Penmai 6th Anniversary Contest" in "Special Contest" forum.


  1. #21
    sindhuanju is offline Newbie
    Join Date
    Apr 2014
    Posts
    23

    Re: Penmai 6th Anniversary Contest

    romba arumaiya..,ariva..,alazhanaa..,explanation...
    I really liked it very much..
    super


    Sponsored Links

  2. #22
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai 6th Anniversary Contest

    எல்லாம் நன்மைக்கே


    உயிர்களைப் படைப்பதற்கும், அவற்றை இயக்குவதற்கும்/வழிநடத்துவதற்கும் எமக்கு மேலான ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதையே நாம் கடவுள் என்று பயபக்தியுடன் வணங்குகிறோம். கடவுள் எம்மைப் படைக்கும்போதே எமக்குத் தேவையான எல்லாவற்றையும் எமக்கு உள்ளேயும் எம்மைச் சுற்றி வெளியேயும் படைத்திருக்கிறார். நல்லது கெட்டது பிரித்தறியும்/ஆராயும் அறிவையும் தந்திருக்கிறார். பிழையான பாதையில் செல்லும்போது தடைகளையும் ஏற்படுத்துகிறார். நாம்தான் அதை உணராமல்/ஆராயாமல் அவ்வழியே சென்று துன்பங்களைச் சந்திக்கின்றோம். தடைகளை உணர்ந்து/ஆராய்ந்து தவிர்த்தால், அத்தடை ஏற்பட்டது நன்மைக்கே என்று அறிவோம்.

    நாம் தொடங்கும் ஒரு காரியம் வெற்றியளிப்பதற்கு தாமதம் ஏற்பட்டால், அதைத் துரிதப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் எடுத்தும் தாமதம் ஏற்பட்டால் கவலை கொள்ளாது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து வாழும்போது நிம்மதியும் மகிழ்வும் கிடைக்கும். அக்காரியம் முன்பாகவே நடந்து முடிந்திருந்தால் ஏதாவது தீமை/நஷ்டம் ஏற்படுவதாக இருந்திருக்கலாம்,அதைத் தடுப்பதற்காகவே தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்கும் மனப் பக்குவம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

    உதாரணமாக இரு நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

    வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நெருங்கிய உறவினர் குடும்பத்தைச் சந்திக்கச் செல்வதற்கு புகையிரதத்திற்கு இருக்கைப் பதிவு செய்வதற்கு சென்றபோது பதிவுகள் முடிந்துவிட்டன. எவ்வளவு முயன்றும் அன்று
    போக முடியவில்லை. மனம் நொந்து கவலையடைந்து மறுநாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது, முதல் நாளே தவிர்க்க முடியாத காரணத்தினால் பயணம் சென்றுவிட்டார்கள் என்று அறிந்து, போகாதது நல்லதாகப் போய்விட்டது என்று மகிழ்ந்தார்கள். போயிருந்தால் பணமும் நேரமும் வீணாகிப் போயிருக்கும். இதைத்தான் எல்லாம் நன்மைக்கே என்று சொல்வோம்.

    வேலை தேடும் பட்டதாரி ஒருவருடைய தாய், பக்கத்து ஊரில் வசிக்கும் வயதான உறவினரை மாதம் ஒருமுறை சென்று பார்த்து உணவுப் பொருட்கள் கொடுத்து வருவது வழக்கம். அந்த மாதம் அவரால் செல்ல முடியவில்லை. மகனை சென்று பார்த்து வரும்படி கூறிக்கொண்டிருந்தார். மகனும், தவிர்க்கமுடியாது வேண்டா வெறுப்புடன் சென்று பார்த்துவிட்டு வரும் வழியில் எதிர்பாராதவிதமாக நண்பன் ஒருவனின் உறவினரை சந்தித்தார். அவர், இவருடைய விபரங்களை அறிந்து தனக்கு தெரிந்த பிரபலமான நிறுவனத்திற்கு சென்று மிகவும் வேண்டப்பட்ட ஒருவரை சந்திக்கும்படி கூறிச் சென்றார். அதன்படி அவரைச் சந்தித்து நல்ல வேலையும் கிடைத்தது. தாயின் வேண்டுதலின்படி நடந்ததால் அவருக்கு நன்மை கிடைத்தது.

    எமது வாழ்க்கையில் ஏற்படும் எமது சக்திக்கு அப்பாற்பட்ட தடைகள், மாற்றங்கள் எல்லாம் நன்மைக்கே என்று வாழ்ந்து நிம்மதியையும் சந்தோஷத்தையும் அடைவோம்.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #23
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai 6th Anniversary Contest

    அனைவருக்கும் வணக்கம்


    எல்லாம் நன்மைக்கே


    இந்த தலைப்பை பார்த்ததும் நமக்கு நினைவு வருவது ராஜா காட்டுக்கு சென்ற கதையும், சிங்க ராஜா கதையும் தான். அதையும் நம் விசு அண்ணா சொல்லிட்டாரு. அதனால நாம வேற கதை பேசுவோம்.


    எல்லாம் நன்மைக்கே இதை நாம் பிறர்க்கு சொல்லும் போது எளிதாக தோன்றும் ஆனால் இதை நாம் நமக்கு சொல்லிக்கொள்வதும் அதை ஏற்று நடப்பதும் சற்று சிரமமானது தான். ஆனால் எல்லாம் நன்மைக்கே என்று நம் மனம் ஏற்று கொள்ளும் நிலையில் இருந்தால் நாம் பக்குவ பட்டுவிட்டோம் என்று அர்த்தம்.


    நமக்கு துன்பம் வரும் வேளையிலும், நாம் நினைத்த காரியம் நடக்காத போதும் எல்லாம் நன்மைக்கே என்று நாம் எடுத்து கொண்டால் நம்மை அந்த துன்பமோ, ஏமாற்றமோ பெரிதாக பாதிக்காது. எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் நம்மை எதிர்மறை சிந்தனைகளில் இருந்து காக்கிறது. நமக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் கொடுக்கிறது.


    நாம் நம்முடைய குழந்தைகளுக்கு இதை கண்டிப்பாக சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த கால குழந்தைகள் தோல்வியை ஏற்று கொள்ள மனம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த காலத்தில் எல்லோரும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை தான் வைத்திருக்கிறோம். முன் காலத்தில் இருந்தது போல் நிறைய குழந்தைகள் பெற்றுகொண்டாலோ இல்லை கூட்டு குடும்பமாக இருந்தாலோ வீட்டில் நிறைய குழந்தைகள் இருக்கும். அவர்களுக்குள் சண்டை வரும், சமாதானம் வரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வார்கள் ஆனால் இப்போது ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டும் இருப்பதால் நிறைய பேர் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்கின்றனர்.


    முதலில் உங்கள் குழந்தைகளுக்கு தோற்று போக கற்று கொடுங்கள். அப்போது தான் வெற்றி பெரும் போதும் அதிகமாக ஆடமாட்டார்கள் அதே சமயம் தோல்வி அடையும் போதும் துவழ மாட்டார்கள். நம்முடைய குழந்தை என்று பொத்தி... பொதி வளர்க்காமல் அவர்களுக்கு இந்த சமுதாயத்தை தைரியமாக எதிர் கொள்ள சொல்லி கொடுங்கள்.


    நான் இப்போது இருக்கும் சில பெற்றோரை கவனித்ததில், அவர்களுக்கு அவர்கள் குழந்தைகளை யாரும் குறை சொன்னால் பிடிப்பதில்லை, மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும் போது தங்கள் குழந்தைகள் தோர்ப்பது பிடிப்பதில்லை, ஏன் தங்கள் குழந்தைகளை ஆசிரியர்கள் கண்டிப்பது கூட பிடிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் சண்டைக்கு வருகிறார்கள். இது தான் குழந்தைகளை மன தைரியத்தோடு வளர்க்கும் அழகா, எல்லாவற்றிற்கும் நாம் அவர்கள் பின்னாலையே நின்றால் அவர்கள் இந்த சமுதாயத்தை எப்படி தைரியமாக எதிர்கொள்ள கற்று கொள்வார்கள்.


    குழந்தைகளோடு விளையாடும் போது அவர்களுக்காக விட்டு கொடுத்து தோத்து போவதை விட அவர்கள் முயற்சிலேயே அவர்களை ஜெயிக்க வைக்க முயலுங்கள். தோர்க்க தோர்க்க தான் வெற்றியை அடையும் வழி தெரியும். நம்முடைய குழந்தை என்று நாம் விட்டு கொடுப்போம் ஆனால் மற்றவர்களும் விட்டு கொடுப்பார்களா... மாட்டார்கள் அப்போது அந்த குழந்தை ஏமாற்றமடையும். அதைவிட அவர்கள் தோற்கும் போதும் எல்லாம் நன்மைக்கே என்று அவர்களை எடுத்து கொள்ள பழக்க படுத்துங்கள்.


    இப்போது நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் சாதரணமாக நடக்கிறது. குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது நாம் நம் நாட்டிற்க்கு செய்யும் கடமையும் கூட. குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லி தருவது மட்டும் நம் கடமை இல்லை, எதை செய்ய கூடாது என்றும் சொல்லி தந்து வளர்க்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்ள பழகிகொண்டால் மற்றவர்கள் மேல் பொறமை, விரோதம், வஞ்சகம் எல்லாம் தோன்றாது மனதில் நல்ல எண்ணம் மட்டுமே தோன்றும்.


    குழந்தைகள் வெற்றி பெற்றால் கொண்டாடுவது போல் அவர்கள் தோல்வி அடையும் போதும் அவர்களை துவழ விடாமல் ஊக்க படுத்துங்கள். உங்கள் குழந்தைகளை மற்றவர்களின் வெற்றியை நல்ல மனதுடன் வாழ்த்த பழக்குங்கள். வெற்றியோ, தோல்வியோ அதை சாதாரணமாக ஏற்று கொண்டால் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி விடை பெறுகிறேன், நன்றி.





    Last edited by ramyaraj; 17th May 2014 at 03:49 AM.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  4. #24
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai 6th Anniversary Contest

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #25
    kirubankarthik's Avatar
    kirubankarthik is offline Commander's of Penmai
    Real Name
    suganthini
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    france
    Posts
    1,092

    Re: Penmai 6th Anniversary Contest

    Quote Originally Posted by Sriramajayam View Post
    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.


    Hiii vichu anna ungalukkumthan romba thanks
    Ungalukku just onnarai vayathuthanaa puttiyila paal kudiththu eeppam vittututhane vanthirukkenga puraierapothu kavanam

    Suganthi

    Sriramajayam likes this.

  6. #26
    kirubankarthik's Avatar
    kirubankarthik is offline Commander's of Penmai
    Real Name
    suganthini
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    france
    Posts
    1,092

    Re: Penmai 6th Anniversary Contest

    Hiiiiiii penmai

    En arumai thozhi penmaikku en iniya aaravathu piranthanaal vazhthukkal
    En thanimaiyai pokki anpaana thozhikalaiyum annan akkakalaiyum tedithanthathukku
    Romba romba thanks

    Suganthi

    sbsudha and Sriramajayam like this.

  7. #27
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai 6th Anniversary Contest

    Sarikaa, neenga ennai Vida naangu maatham muuthavar.
    So, Neenga Engalukkellam (ennai pondra siriyavarkal) aalochanaikal sollanum yakkaav.

    Penmai 6th Anniversary Contest-smileys-baby-031972.gif


    Quote Originally Posted by kirubankarthik View Post
    Hiii vichu anna ungalukkumthan romba thanks
    Ungalukku just onnarai vayathuthanaa puttiyila paal kudiththu eeppam vittututhane vanthirukkenga puraierapothu kavanam

    Suganthi


    kvsuresh and kirubankarthik like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #28
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai 6th Anniversary Contest

    பெண்மைத் தோழமைகளுக்கு இனிய வணக்கங்கள்.

    இந்த மாத பெண்மையின் சிறப்பு போட்டியில் பங்கு கொண்டு "எல்லாம் நன்மைக்கே" என்ற தலைப்பில் தங்களின் கருத்துக்களை எடுத்தியம்பிய தோழிகளின் அனைத்து கருத்துக்களும் மிகவும் நன்றாகவும் ஆரோக்கியமான கருத்துக்களாகவும் இருந்தது.

    இந்த போட்டியின் வெற்றியாளராக, நம் பெண்மை நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழி சித்ரா அவர்கள்.

    வாழ்த்துக்கள் சித்ரா.

    உங்களுக்கான பரிசு இதோ...



    அவருடைய பதிவை அடுத்து லட்சுமி அவர்களின் பதிவு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த முறை போட்டியில் வெற்றி பெறுபவருக்கு சிறப்பு பரிசு ஒன்று உள்ளது என்றும் கூறியிருந்தோம். பெண்மையின் பிறந்த நாள் பரிசாக, நம் பெண்மை தளத்தில் புதிதாக "Articles" என்ற பகுதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்ற கட்டுரை நம் Penmai Articles-இல் முதல் கட்டுரையாகப் பதிவிடபட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    Pls checkout here: Penmai Articles - All is Well

    இப்போட்டியில் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தோழிகள் அனைவருக்கும் பெண்மையின் வாழ்த்துக்கள்.

    கடந்த மே-20 அன்றே போட்டியின் முடிவுகளும், பெண்மையில் Article பகுதியும் அறிவிக்கப்பட இருந்தது. சில தவிர்க்க முடியாத வேலைகள் காரணமாக அன்று அறிவிக்கப்பட முடியவில்லை.

    Please send your Indian Postal Address with Phone no to me through private message and also update me once you received the gift.



  9. #29
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Penmai 6th Anniversary Contest

    Congrats Chitra Kaa.. Keep Rocking


  10. #30
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Penmai 6th Anniversary Contest

    வாழ்த்துக்கள் சித்ரா

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter