Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree567Likes

Penmai's Special World Environment Day Contest


Discussions on "Penmai's Special World Environment Day Contest" in "Special Contest" forum.


  1. #11
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,455

    Re: Penmai's Special World Environment Day Contest

    சுற்றுச் சூழலில் நல்லதொரு மாற்றத்தை விளைவிக்கக் கூடிய கருத்துக்கள் :

    இதைப்பற்றி நாமளும் எதாவது எழுதுவோமா என்று யோசித்துப் பார்த்ததில் , எனக்கு முதலில் தோன்றியது என்ன தெரியுமா ..இங்க பாருங்க யாரும் என்னத் திட்டக் கூடாது நான் இதை, என் மனதில் தோன்றியதை சொல்கிறேன் சரியா..

    சுழல் பாதுகாப்பு ..அதில் நல்லதொரு மாற்றம்... இரெண்டுமே எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றால், நிச்சயமாய் அது நம் ஒவ்வொருவரினதும் வீடுகளில் இருந்து தான் என்பது என் கருத்து!!
    இன்றைய வேகமான வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் நேரத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கழிக்கும் நம் நாட்களில் நம்மை நம் வீட்டை குழந்தைகளைப் சரிவரக் கவனிக்கவே நேரம் போதாமல் உள்ளது !

    அப்படி நேரம் கிடைக்கும் போதும் அதை பல நேரங்களில் சரியாக பயன்படுத்த முடிவதில்லை ..

    * முதலில் நம் வீட்டை நாம் சுத்தமாக தூசு குப்பை இன்றி வைத்திருக்கவும் அதிலும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து சுத்தம் சுகாதாரம் பற்றிய அறிவை வழங்கி வளர்க்கவும் வேண்டும் !
    குழைந்தைகள் டிவி காட்டூன் கேம்ஸ் என்று செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து , அவர்களுடன் சேர்ந்து நாமும் சுழல் மாசடைவது பற்றிய எவ்வளவோ குறும் படங்கள் நிகழ்சிகள் வருகின்றன , அவற்றைப் பார்க்கலாம் .

    * வீட்டுத் தோட்டங்கள் உள்ளவர்கள் அதில் சிறுவர்களையும் சேர்த்து பாரமரிப்பு வேலைகளைச் செய்து அவர்களுக்கும் அதில் ஆர்வத்தை வளர்க்கலாம்.

    * சின்னச் சின்ன விடயங்களில் ..அதாவது வீட்டில் வரும் கடதாசிக் கழிவுகள் , பசளைக் கழிவுகள் ,பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடிக் கழிவுகள் எல்லாவற்றையும் அதற்கு உரிய முறையில் அகற்ற, குழைந்தைகள் பார்வையிலேயே ஏன் அவர்கள் உதவியுடன் நாம்அந்த வேலைகளைச் செய்யலாம் .

    அப்போது அவர்களுக்கு இருத்தி வச்சி சொல்லிக் கொடுப்பதை விட இது ஆழாமாய் மனதில் பதியும் .

    * கடதாசிக் கழிவுகளை கட்டாயமாக தனியாக அகற்றுவதாலேயே எவ்வளவோ மரங்களை நாம் பாதுகாக்கலாம் ..(அவற்றை மீழ் பாவனைக்கு உட்படுத்துவதால்).

    மேலோட்டமாய்ப் பார்க்கும் போது நம் வீடுகளில் காகிதங்கள் அவ்வளவாக சேராத மாதிரி இருக்கும் ஆனால் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீடுகளில் காதிதங்கள் சேரும் அளவு ..உண்மையாகவே சேர்த்துப் பார்த்தால் வியப்பாய் இருக்கும்!

    இங்கெல்லாம் தற்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் காதிதக் கழிவுக்கென ஒரு வாளி கொடுத்துள்ளனர் அதை மாதத்தில் இருமுறை அவர்கள் வந்து எடுத்துப் போவார்கள் .

    முன்னர் நாமே அதற்குரிய இடங்களில் கொண்டு போய்ப் போடவேண்டும்! அது எல்லோரும் நிச்சயமாய்ச் செய்ய மாட்டார்கள்! அதனால் இந்த முறை மிக உபயோகமாக இருக்கும் ,மனச்சாட்சிக்குப் பயந்து சரி அந்தக் வாளியில் காகிதங்களைப் போடுவார்கள் .

    இங்கு பாடசாலைகளிலும் கடதாசிக் கழிவுக்கென தனியாக வாளி வைத்திருப்பார்கள் .

    * அடுத்து வீடுகளில் நாம் பாவிக்கும் பொருட்களின் பிளாஸ்டிக் கழிவுகள்..

    அதையும் இப்படி வேறாக நாளாந்தம் சேர்த்து அப்புறப் படுத்தலாம். இங்கு அதற்கும் தனியாக ஒவ்வொரு கிழமையும் எடுத்துப் போகும் வகையில் கழிவுப் பைகள் கொடுத்துள்ளனர்.

    * பிள்ளைகளுக்கு சிறுவயதில் இருந்து சுத்தம் என்பது சொல்லிக் கொடுத்தால் அவர்கள் நிச்சயமாய் போகும் இடங்களில் எதையுமே வீசி எறிய மாட்டார்கள், அப்படி எறிபவர்களையும் விட மாட்டார்கள், ஏன் அப்படி எதையும் கண்டால் எடுத்து கழிவுக் கூடையில் போடுவார்கள்.

    ஆனால் இந்தப் பழக்கம் வீட்டில் அவர்களுக்கு இருக்க வேண்டும் . அத்தோடு சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பொதுநலத்தையும் ஊட்ட வேண்டும் .

    குழந்தைகளுக்கு அவர்களையும் அவர்களைச் சுற்றியும் நன்றாக வைத்துக் கொள்ளப் பழக்குவதே நாம் இந்த வாழ்வில் செய்யும் பெரியவிடயம் !! இப்படி வருங்காலச் சந்ததி வளர்வதே நிச்சயமாய் சூழல் பாதுகாப்புக்கு ஒரு அரண் ..இப்படியான சந்ததி மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் கட்டாயம் இருப்பார்கள்!!

    * முக்கியமாய் இன்னுமொன்று ..முடிந்த வரையில் இயன்றவர்கள் நடராஜா சேவையை பாவிப்பதால் நம் உடம்புக்கு எவ்வளவோ நன்மை ..இல்லையோ சைக்கிளைப் பாவிக்கலாம்.
    பாருங்க இரெண்டுமே நமக்கும் நல்லது சூழலுக்கும் நல்லது .


    அதனால் எல்லோரும் முதல் நம்மில் நம் வீடுகளில் நம் குழந்தைகளில் இருந்து மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்குவோமா..



    Sponsored Links
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  2. #12
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Penmai's Special World Environment Day Contest

    Penmai's Special World Environment Day Contest-image.jpg

    Super
    Contest.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #13
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Penmai's Special World Environment Day Contest

    சுற்று சூழல் தினத்திற்கான வாசகம்

    விலை போகும் நிலங்ளை
    விளை நிலங்கள் ஆக்கிவோம்!
    பூமி தாய்க்கு மர குழந்தைகளை
    பரிசாய் கொடுத்து உலகை காப்போம்!!


    life is so beautiful....

  4. #14
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Penmai's Special World Environment Day Contest

    என்னுடைய சுற்றுப்புற தின வாசகம் கீழே:

    பசுமை புரட்சி செய்வோம்
    வாழ்வை மலரச் செய்வோம்
    கழிவை கழித்திடுவோம்
    அழிவை நிறுத்திடுவோம்


  5. #15
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Penmai's Special World Environment Day Contest

    சுற்றுப் புற சூழல்தின வாசகம்...

    இயற்கை வழி நடப்போம்..
    மண் வளம் மீட்போம்..மலை வளம் காப்போம்..மழை வளம் பெருக்குவோம்.....மனித குலம் தழைக்கச் செய்வோம்...
    ..



  6. #16
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Penmai's Special World Environment Day Contest

    சுற்றுப்புற சுழல் தினத்திற்கான வாசகம்


    பசுமை புரட்சி செய்வோம்
    மாசில்லா உலகமைப்போம்
    மண்ணின் மலர்ச்சி செய்திடுமே
    உயிர்களிடம் என்றும் வளர்ச்சி
    மறுசுழற்சி செய்திடுவோம்
    இயற்க்கை அன்னையை மேலும் அழகாக்குவோம்
    வாருங்கள்
    சிந்திப்போம் !!! செயல்படுவோம் !!!



    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  7. #17
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Penmai's Special World Environment Day Contest

    Dear friends,

    I have to remind you one thing. To participate in this contest you have to Pen down...


    1) A Slogan on World Environment Day (சுற்றுச் சூழல் தினத்திற்கான உங்களது வாசகம்).

    2) And Your suggestion to bring out changes in Environment (சுற்றுச் சூழலில் நல்லதொரு மாற்றத்தை விளைவிக்கக் கூடிய கருத்துக்கள்).







    Last edited by sumathisrini; 5th Jun 2014 at 01:20 PM.

  8. #18
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Penmai's Special World Environment Day Contest

    சுற்றுச்சூழலில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படக்கூடிய கருத்துக்கள்.........


    Charity begins at home ………என்பதற்கேற்ப மாற்றங்கள் நம்மில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் .தனி மனித மாற்றமே சமூக மாற்றத்திற்கும்.......காரணமாக அமையும்.மிகப் பெரியவிருட்சத்தின் ஆரம்பம் சிறிய விதையில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது,ஆதலால் நாம் செய்யும் சிறிய செயல்கள் மூலம்....மிகப் பெரிய சுற்றுச்சூழல் மாற்றத்தையும்......ஸ்திரத்தன்மையையும் கொண்டு வர முடியும்...என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய நான்................ நாம் வாழும் இப் பூமியின் சூழலில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத மாற்றங்களுக்கு ...........நல்லதொரு மாற்றத்தை விளைவிக்கக் கூடிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்...


    சுற்றுச்சூழல் என்பது நாம் வாழும் நிலம்..நீர்.மற்றும் ஆகாயம் இம்மூன்றும் சேர்ந்ததுதான்..... மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவனுடைய வாழ்வு இயற்கை சார்ந்தது...காடுகளில் கிடைக்கும் காய்கனிகளை உண்டுநீர் நிலம் நெருப்பு..ஆகாயம்..என தான் பார்க்கும் எல்லாவற்றையும் கடவுளாக வணங்கி இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்தவன்.பரிணாம வளர்ச்சியாலும்,தன் தேவைக்காகவும் இயற்கை வாழ்விலிருந்து விடு பட்ட மனிதன் தான் வாழும் சுற்றுப் புறத்தை மறந்து முன்னேற்றம் என்கிற பெயரில் ஆரம்பித்து வைத்ததுதான் இன்றைய நாளின் முக்கியத்துவத்திற்கு காரணம்........


    ஏன் சுற்றுப் புறத்தை காப்பாற்ற வேண்டும்..அதற்கான அவசியம் என்ன..????

    சூரியனும் அதனை சுற்றியும் பல கோள்கள் இருந்தாலும் பூமி மட்டும் தான் தாவரம் முதலான வற்றிலிருந்து...மனிதன் வரை பல உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டு உள்ளது........மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜன் ( o2)..தாவரங்கள் சுவாசிக்கும் கார்பன்டைஆக்சைடு (co2)....முதல் பலவகையான வாயுக்கள் நிறைந்த வளி மண்டலத்தைக் கொண்டுள்ளது......உயிரினங்கள் வாழ்வதற்கான நீராதாரத்தைக் கொண்டுள்ளது ...இந்த நிலத்தின் தட்பவெப்பம்.......வளி மண்டலம்...நீராதாரம் மூன்றும்... எப்பொழுதும் ஒரு இயற்கை சமநிலையோடு இருக்கும்....இவற்றில் ஏதாவது ஒன்றில் தேவைக்கு அதிகமான விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுமேயானால் அவை இம் மூன்றிலும் இருக்கும் சம நிலையை பாதித்து உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையையும் மாற்றிவிடும் .........அப்படி இயற்கையின் சம நிலை பாதிப்பு உள்ள கால கட்டத்தில் நாம் இருப்பதால்தான் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நாம் வாழும் பூமியின் சமநிலை தன்மையை நிலைப் படுத்துவதாக அமைய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொள்ளவேண்டும்........


    இவை மாசுபடுவதற்கான காரணங்கள் !!!!!!!!


    மக்கள் தொகைப் பெருக்கம்.....மற்றும் ..மக்களின் வாழ்வாதாரத்தை ............
    வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு....... உலகெங்கும்ஏற்பட்ட தொழிற்புரட்சி....
    இத் தொழிற் புரட்சி ஏற்பட்டதின் விளைவாக மனிதனின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதே ஒழிய.. ..........அவன் வாழும் இப்புவியின் சுற்றுச்சூழல் மாசுபட்டு இயற்கையானது பின்னடைவைச் சந்தித்தது இதனால் இயற்கையில் சம நிலை மாறுபாடு... ஏற்பட்டு புவி வெப்பமயமாதல்(globalwarming)......பசுமைக் குடில் விளைவு..(GREEN HOUSE EFFECT…)..ஓசோன் பாதிப்பு...( O3 )ஆகியவை தலை தூக்கின.



    இப்பாதிப்புகளைத் தடுக்க நாம் மேற் கொள்ளவேண்டிய சில முயற்சிகள்.....

    நிலம்.....முதல் முயற்சியாக நாம் நிலத்தில் இருந்து பார்ப்போம்....பெரிய அளவில் எடுத்துக் கொண்டால்....

    ஒரு நாட்டின் வளத்திற்கு 33% நிலப்பரப்புக் காடுகள் தேவை. ஆனால் இந்தியாவில் 22% மட்டுமே காடுகள் வளம் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 6,78,333 ச.கி.மீ மட்டுமே காடுகள் உள்ளது. இதில் திறந்தவெளிக் காடுகள் 2,87,769 ச.கி.மீ பரப்பளவும், அடர்த்தி குறைந்த காடுகள் 3,39,279 ச.கி.மீ பரப்பளவும், அடர்த்தி மிகுந்த வனங்கள் 51,285 ச.கி.மீ பரப்பளவு மட்டுமே உள்ளது.
    . அதனால் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு மரம் வளர்த்து, வனத்தின் பரப்பளவை அதிகப்படுத்துவது நம் தலையாகக் கடமையாகி விட்டது... இதற்கு அரசின் செயல்பாடு மாத்திரம் விரும்பிய விளைவைக் கொடுத்து விட முடியாது..அதனுடன் தனி மனித முயற்சியும் அவசியம்..............


    காடுகள் ஏன் அவசியம்....


    நாம் வெளியிடும் கார்பன்டை- ஆக்சைடை உட்கொள்ளவும், நாம் உட்கொள்ளும் ஆக்சிஜனைக் கொடுக்கவும் ................

    மற்றும்.. புவியில் ஒரு இயற்கைச் சமநிலை ஏற்படுத்துவதற்கும்...காடுகள் அவசியப் படுகின்றன....

    அதுமட்டுமல்லாமல்....
    மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க.....

    மேலும் மிக முக்கியமாக..
    தற்காலத் தவறான செயல்பாடுகளால் வெளியிடப் படும்... இயற்கையைப் பாதிக்கின்ற “பசுமைக் குடில் வாயுக்களான கார்பன்-டை-ஆக்சைடு (CO2,) மீத்தேன் (CH4), நைட்ரஸ் ஆக்சைடு (N2O,) ஹைட்ரோ புஃளோரோ கார்பன் (HFCS), பெர் ஃபுளோரோ கார்பன் (PFCS), சல்பர் ஹெக்சா ஃபுளோசைடு (SF6) போன்ற வாயுக்களின் பாதிப்புகளில் இருந்து நம்மையும்....நம் பூமியையும் காப்பதற்கும் காடுகள் தேவைப் படுகின்றன.....
    (இவ்வாயுக்கள் சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களை எந்தத் தடையும் இன்றி உட்செலுத்தியும், பூமி எதிரொலிக்கும் வெப்பத்தை வெளிவிடாமல் செய்வதால்தான் இந்தப் புவி, வெப்பம் அடைகிற விளைவு ஏற்படுகிறது)





  9. #19
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Penmai's Special World Environment Day Contest



    ....தனிப்பட்ட மனிதர்கள் ஆகிய நாம் செய்யவேண்டியது...

    --மோட்டார் வாகனங்களை அவசியமில்லாமல் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும்....

    அதன் மூலம்..

    எரிபொருள் சிக்கனம்......காற்று மாசு படுதல் குறைவு...
    தனி மனிதர்களின் ஆரோக்கிய மேம்பாடு உயர்வு....


    ----மின் சக்தியை சேமிக்க வேண்டும்....

    ( இன்று வரை நமக்கு கிடைத்த.... மின்சாரம்...... நிலக்கரியை எரிப்பதால்தான் அதிக அளவில் கிடைத்து வந்தது......அதில் இருந்து வெளியான காற்றின் மாசு கட்டுபாட்டுக்குள் வருவதற்கு பல வருடங்கள் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன..)

    -----இயற்கை வாழ்வை மேற்கொள்ளுதல்.......

    ............நம் வீட்டு உணவுக் கழிவிலிருந்து...உரம் தயாரித்து....நாம் வீட்டிற்கு உபயோகப்படுத்தும் காய்கறிகள் வளர்க்கும் தோட்டத்திற்கு பயன்படுத்துதல்..........


    ------மக்கும் தன்மையுள்ள பொருட்களை உபயோகத்தில் கொள்ளுதல் ....சணல் பைகளை உபயோகப் படுத்தலாம்.....என்றும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல்...

    ----விவசாயம் செய்யும் வாய்ப்பு உள்ளவர்கள்....செயற்கை உரப் பயன் பாட்டினைத் தவிர்த்தல்.......(இவற்றால் நம் உடலில் தேவை இல்லாத நச்சுக்கள் சேர்வதோடு....நம் அருகில் உள்ள நீர் நிலைகளின் தன்மையையும் மாற்றிவிடும்)...

    இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்........பசுந்தாள் உரங்கள் பயன் பாட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்......

    குளிர் சாதனப்பெட்டியில் தேவைக்கு அதிகமான பொருட்களை சேகரித்து வைப்பதை தவிர்க்கலாம்...( இப்பெட்டியின் குளிரூட்டும் தன்மைக்காக பயன்படுத்தப்படும் குளோரோ ப்ளோரோ கார்பனின்(CFC) பங்கு புவி வெப்ப மயமாதலின் மிகப் பெரிய சக்தியாகக் கருதப் படுகின்றது.....)

    .....காகிதப் பயன்பாட்டினை குறைத்துக்கொள்ளலாம்

    [நம்முடைய அனைத்து தகவல்களும் E...format ல இருந்தால்..நாம் உபயோகப்படுத்தும் காகிதத்தின் அளவும் குறையும்...நம் இயற்கை சூழ்நிலையும் பாதுகாக்கப்படும்.....ஒரு டன் பேப்பரின் உபயோகம் குறைந்தால்....17….முதிர்ந்த பைன் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படுகின்றன........70m2.பரப்பளவு கொண்ட இடம் பாதுகாக்கப்படுகிறது...4100KWH மின் சக்தி சேமிக்கப்படுகிறது. 32 டன் நீர் சேமிக்கப்படுகிறது........1750 எரி பொருள்..சேமிக்கப்படுகிறது..270 கிலோ..காற்றை மாசுபடுத்தும்...வாயுக்களின் உற்பத்தி தவிர்க்கப்படுகிறது....]

    ஒரு அறையில் எவரும் இல்லாத போது இயங்கும் மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி போன்ற இயந்திரப் பொருட்களின் இயக்கத்தை கவனத்துடன் நிறுத்தி வைத்தல்..

    குண்டுப் பல்புகளுக்குப் பதில் சி.எப்.எல் (CFL) பல்புகளைப் பயன் படுத்துதல்[ CFL பயன்படுத்துவதன் மூலம் 70 சதவீதம் வரை மின்சாரச் செலவைக் குறைப்பதோடு வீண் வெப்பமயமாவதைத் தடுக்கலாம்.


    நீர் மேலாண்மை.....

    உலக அளவில் இன்னொரு போர் தோன்றினால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிற பேச்சு பரவலாக இருக்கும் நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது கண் கூடு... ஆதலால் நீர் நிலைகளில் ஏற்படும் மாசுகளைக் களைவதோடு....அவற்றை காப்பாற்றி சேமிப்பதும் நமது கடைமையாகிறது.....

    இதற்கு தனி மனித முயற்சியாக ;

    மழை நீர் சேகரிப்பு....மிகவும் அவசியமாகிறது........இதனால் நம் வீடுகளில் உள்ள கிணற்றில்.. நீர் மட்டத்தின் அளவு உயர்வதுடன்.....பொது நீர்நிலைகளிலும் நீரின் அளவு உயரும்...

    நீரின் உப்புத் தன்மை மாறும்....
    .
    அருகில் உள்ள பசுந்தாவரங்களின் வளர்ச்சியும் அதிகமாகும்....

    விவசாயம் செய்யும் வாய்ப்பு உள்ளவர்கள்........


    தங்களின் நிலப்பரப்பின் தன்மையைக் கொண்டு இயற்கையில்..மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை இவர்கள் சேமிக்கலாம்.......மலைப் பாங்கான பகுதிகளில் நிலம் உள்ளவர்கள்..
    தங்கள் நிலச் சரிவுகளில் உள்ள இடங்களில் சிறிய ..சிறிய தடுப்பணைகளைக் கட்டலாம்..இதற்கு அரசாங்கம் தேவை இல்லை.....அதனால் மண் அரிப்பு தடுக்கப் படும்....

    நீர் தேங்கி இருப்பதால் ..நிலத்தடி நீரின் அளவும் உயரும்....

    வயல்களுக்கு வாய்க்கால் முறையில் பாய்ந்தோடும் நீரை கட்டுப்படுத்தி தெளிப்பான்கள் மூ லம்..பயன் படுத்துவது.....சொட்டு நீர்ப் பாசன முறையை பயன்படுத்துவது போன்ற முறைகளை க் கையாளலாம்......இதனால் பயிர்களுக்கு இடப்படும் செயற்கை உரங்கள் நிலத்தடி நீரில் கலக்காமல் பாது காக்கலாம்....

    எல்லோரின் முயற்சியாக பார்க்க வேண்டுமானால்......சுற்றுலாத் தளங்களில் உள்ள நீர் நிலைகளில் தேவையற்ற பொருட்களை வீசுவது.....அவற்றை மாசு ப்படுத்துவதைத் தவிர்க வேண்டும்..

    குறிப்பாக சொல்லப் போனால் கடற்கரைகளில் நாம் வீசும் பொருட்கள்....
    .[ மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எவ்வாறு உள் வாங்குகிறதோ..அதைப் போல் கடலும்....அவற்றை தன்னுள் இழுத்துக் கொள்கிறது }.....அதனுடன் சேர்ந்து நாம் மாசுப் படுத்தும் பொருட்களும் கலந்து விட்டால்.......கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும்.......

    மேலே சொல்லப் பட்ட அனைத்து செயல்களும் சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான்....

    சிறுதுளி பெரு வெள்ளம்.......எல்லா செயல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது....

    நிலம்......நீர்...காற்று....உயிரினங்கள் .......வாழ்வாதாராம்.............இவற்றில் எங்கு சம நிலை மாறினாலும் பேராபத்து என்பதை நாம் மறந்து விட முடியாது.......

    இன்னும் பல சிறிய ...பெரிய செயல்களினால் இப்புவி காப்பாற்றப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன....இதற்கு மிக அவசியம் ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணத்திலும் ஏற்படும் சிறிதளவு மாற்றமே.......

    நாம் செய்யும் சின்னச்சின்ன செயல்களும் நம்மையும்பாதுகாக்கவேண்டும்.....நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும்.....அதோடு மட்டுமல்லாமல்..நாம் வாழும் இந்த பூ மியையும் பாதுகாக்கப் படவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே நல்ல மாற்றத்திற்கான ஆணி வேறாக இருக்க முடியும்..

    நாம் சேர்த்து வைப்போம்நட்புகளே பெற்ற நம் பிள்ளைகளுக்காக.....மட்டுமல்லாமல்......இனி வரும் காலத்திலும்...நமக்குப் பின்னும் வரும் சந்ததியினருக்கும் இந்த இயற்கை அன்னையின் இணையில்லாத செல்வத்தை......................அதன் ஆரோக்கியத்தை........



  10. #20
    Gathya's Avatar
    Gathya is offline Friends's of Penmai
    Real Name
    Gathyayani
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    Krishnagiri
    Posts
    213

    Re: Penmai's Special World Environment Day Contest

    சுற்றுச்சூழல் தினத்திற்கான எனது வாசகம்:

    தாவரமே தரணியின் வரம்!
    தவறாது காப்பதே அறம்!!

    சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சூழ்ந்திருக்கும் நிலம், நீர், காற்று, வெப்பம் முதலியவற்றைக் குறிக்கும்.

    இயற்கை வளங்களை வாழ்க்கை வளங்களாக மாற்றித்தான் மனிதன் வாழ வேண்டியுள்ளது. இருந்தபோதிலும், இயற்கை வளங்களை எடுப்பதிலும், அவற்றை வாழ்க்கை வளங்களாக மாற்றுவதிலும் சுற்றுப்புறச் சூழலும், அதனால் இயற்கை வளங்கள் சிதையாமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும்.

    சுற்றுப்புறச் சூழல் கெடுவதற்கு இயற்கைச் சீற்றங்கள் ஓரளவிற்குக் காரணம் என்றாலும், மனிதனுடைய பங்கு தான் மிக அதிகமாக உள்ளது. இதற்கு மனிதனுடைய அறியாமையும், சுயநலப் போக்குமே காரணங்களாகும்.

    ஆகவே பெருகிவரும் மாசுபாட்டினைத் தடுக்க ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் அவசியமாகிறது. அவ்வாறு தடுக்க ஒவ்வொருவரும் கீழே கூறியுள்ள முறைகளைப் பின்பன்றி வந்தாலே நலம் பயக்கும் என்பது என் கருத்து.

    01. ஒவ்வொரு தனிமனிதனும் சிறு வயதிலிருந்தே குப்பையைக் கையாளும் முறையை அறிதல் வேண்டும். அதாவது, கண்ட இடங்களில் வீசுதல் கூடாது.

    02. மறுசுழற்சி செய்ய இயலாத, சிதைவுறாத பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    03. புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.

    04. அளவுக்கு அதிகமான நிலக்கரி, எண்ணெய், வாயு எரிபொருட்களின் பயன்பாடு தடுக்கப்பட வேண்டும்.

    05. காகிதத்தின் வீணானப் பயன்பாடு தடுக்கப்பட வேண்டும்.

    06. சூரிய ஆற்றலை பயன்படுத்த முன் வரவேண்டும்.

    07. வாகனங்களைச் சரியாப் பராமரித்து காற்று மாசுபாட்டினைத் தவிர்க்கலாம்.

    08. ஆடம்பரத்திற்காக உபயோகிக்கும் மின் விளக்குகளைத் தவிர்க்கலாம்.

    09. வீடு கட்ட விவசாயத்திற்குப் பயன்படாத இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பல அடுக்கு மாடிகள் கொண்ட வீட்டமைப்புகள் கொண்ட வகையில் உயர்மாடிக் கட்டடங்கள் கட்டி இட நெருக்கடியை ஓரளவு தவிர்க்கலாம்.

    10. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை, கழிவுநீர், இவரைத் தூய்மைப் படுத்துவதற்கான கருவிகளைப் பொருத்தி சுத்தம் செய்த பின்னர் வெளியே விடலாம்.

    11. நாம் வாழ்கின்ற வீட்டிலும், அலுவலகத்திலும் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்பூவுலகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எண்ணிலடங்கா மனிதத் தலைமுறைகளால் பயன்படுத்தப்பட்டு உயர்ந்து விளங்குகிறது. இதனை அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. நாமும், வழிவழியாக வரும் நமது சந்ததியினரும் மகிழ்ச்சியாக வாழ இந்த உலகைப் பாதுகாப்பது நம் அனைவரும் கடமையாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக!




    நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப் படாதே! நீ நடந்தால் அதுவே ஒரு பாதை!! - அடால்ஃப் ஹிட்லர்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter