Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree567Likes

Penmai's Special World Environment Day Contest


Discussions on "Penmai's Special World Environment Day Contest" in "Special Contest" forum.


 1. #21
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Penmai's Special World Environment Day Contest  "இயற்கையின்றி உயிரில்லை
  பச்சையின்றி இரத்தமில்லை
  பூமித்தாய்க்கு பச்சை சாத்தி
  பிரபஞ்சத்தின் உயிர் காப்போம்"
  இயற்கையின் துணையோடு உயிர்கள் வாழ்கின்றன. அந்த இயற்கையை மனிதன் ஆராய்ச்சி, நாகரீகம் என்றும் பேராசையினாலும் சோம்பேறித்தனத்தினாலும் மாசடையச் செய்கிறான். எம்மோடு இணைந்திருக்கும் வாழ்வின் ஆதரங்களான நீர், நிலம், ஆகாயம், காற்று எல்லாவற்றையுமே சீற்றத்திற்கு உள்ளாக்குகிறான்.
  சுற்றுச் சூழலில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க எனது கருத்துக்கள்...

  தனி மனிதனின் செயற்பாடுகள் -

  - புகை பிடிப்பவராயின் சிறிது சிறிதாக குறைத்து நிறுத்துதல்.
  - வியாபாரம் செய்பவராயின் சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்யாதிருத்தல்.
  - நீரை வீணாக்காது அளவோடு பாவித்தல்.
  - பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையை இயன்றளவு தவிர்த்தல்.
  - குப்பைகளை மக்குபவை மக்காதவை எனப் பிரித்து வெளியேற்றுதல்.
  - வானொலி, தொலைக்காட்சி பாவிக்கும்போது சத்தத்தை அளவோடு வைத்தல்.
  - அருகே இடங்களுக்கு பயணம் செய்யும்போது தூரத்தை பொறுத்து சைக்கிள் பாவித்தல் அல்லது நடந்து செல்லல்.

  குடும்பத்தின் செயற்பாடுகள் -

  - வீட்டில் நில வசதிக்கேற்ப மரம், செடி, கொடிகள் வளர்த்தல்.
  - உணவுத்தேவைக்கான கீரை வகைகள், மிளகாய், கத்தரி, வேண்டி போன்றவற்றை மண் சாடியிலும் வளர்க்கலாம்.
  - ஆளுக்கொரு வாகனம் வைத்திருக்காமல் சேர்ந்து பயணம்செய்யும் வகையில் திட்டமிட்டு அளவான வாகனம் வைத்திருத்தல்.
  - கழிவு நீரை தேங்கியிருக்க விடாது முறையாக வெளியேற்றுதல்.
  - மாதமொருமுறை வீட்டை தூசுதட்டி குப்பைகளை அகற்றுதல்.
  - வீட்டிலுள்ள வயதானவர்களையும் நோயாளிகளையும் வைத்தியரின் ஆலோசனைப்படி பராமரித்தல்.
  - செல்லப் பிராணிகளை உரிய முறையில் பராமரித்தல்.
  - மின்சாதன பொருட்கள் பாவிப்பதை இயன்றளவு குறைத்தல்.

  சமூகத்தின் செயற்பாடுகள் -

  -
  இலவச மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்த்தலை ஊக்குவித்தல்.
  - பராமரிப்பில்லாமல் தெருக்களில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தல்.
  - மாதமொருமுறை சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூக நலன், சுகாதாரம் சம்பந்தமான அறிவுரைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்.
  - தொற்றுநோய் தடுப்புகளுக்கான நடவடிக்கைகளை காலத்திற்கு காலம் மேற்கொள்ளல்.
  - குழுக்களை அமைத்து மாதம் ஒருமுறை சிரமதானம் செய்வதன்மூலம் பாதைகள், நீர் தேங்கி நிற்கும் இடங்களை சீரமைத்தல்.
  - மருத்துவ வசதிகளை அவதானித்தல்.
  - சிறுவர் பூங்கா அமைத்து பராமரித்தல்.

  அரசாங்கத்தின் செயற்பாடுகள் -


  - சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான போட்டிகளை பாடசாலைகளுக்கிடையே நடாத்தி பரிசு வழங்கி ஊக்குவித்தல்.
  - சூழலை மாசுபடுத்தும் (புகை கக்கும், அதிக சத்தம் போடும்...) வாகனங்களை பிடித்து உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடல்.
  - குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வாகன வகைகளுக்கும் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு விதித்தல்.
  - அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது சூழல் மாசடைவதை தவிர்க்க உரிய நேரங்களை தீர்மானித்தல், உரிய முறைகளை கையாளுதல்.
  - தொழிற்சாலைகள் கட்ட அனுமதிக்கும்போது சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவதானித்தல். குழுக்களை அமைத்து அடிக்கடி சென்று கண்காணித்தல்.
  - இயற்கை உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பாவிப்பதற்கு விலை குறைத்து ஊக்குவித்தல்.
  - போர் நடவடிக்கைகளை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் காணல்.

  -  Sponsored Links

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 2. #22
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Penmai's Special World Environment Day Contest

  பச்சையமே நிச்சயம்  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 3. #23
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,420
  Blog Entries
  1787

  Re: Penmai's Special World Environment Day Contest

  என்னை நீ கொல்ல நினைத்து.
  உன்னை நீயே கொல்கிறாய்...!
  மழைக்காக நான் பிறந்தேன்...!
  எனக்காக மழை வருகிறது...!
  இதில் நீ என்னை இன்று கொல்கிறாய்...!
  நாளை நான் இல்லாமல் மழை வராது..!
  தாகம் உன்னைக் கொல்லும் ...!

  மரம் வளர்ப்போம்


  Sasikala Via FB


  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 4. #24
  jjjjpraveen is offline Newbie
  Real Name
  Praveena
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  Trichy
  Posts
  25

  Re: Penmai's Special World Environment Day Contest

  Quote Originally Posted by Sriramajayam View Post
  என்னை நீ கொல்ல நினைத்து.
  உன்னை நீயே கொல்கிறாய்...!
  மழைக்காக நான் பிறந்தேன்...!
  எனக்காக மழை வருகிறது...!
  இதில் நீ என்னை இன்று கொல்கிறாய்...!
  நாளை நான் இல்லாமல் மழை வராது..!
  தாகம் உன்னைக் கொல்லும் ...!

  மரம் வளர்ப்போம்


  Sasikala Via FB
  nice message


 5. #25
  jjjjpraveen is offline Newbie
  Real Name
  Praveena
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  Trichy
  Posts
  25

  Re: Penmai's Special World Environment Day Contest

  நெகிழி(Plastic) உபயோகத்தை கழித்திடுவோம் ( - )
  பசுமை புரட்சியை கூட்டிடுவோம் ( +)
  வெண்மை புரட்சியை பெருகிடுவோம் ( X )
  வளங்களை நமக்குள் வகுத்திடுவோம் ( ÷ )
  மரங்களை நம் குழந்தையென பேணுவோம்

  this is my slogan for world environment day......

  JJJJPraveen @(Josephine Praveena)


 6. #26
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,420
  Blog Entries
  1787

  Re: Penmai's Special World Environment Day Contest

  Thx u friend

  Penmai's Special World Environment Day Contest-smileys-applause-495304.gif

  Quote Originally Posted by jjjjpraveen View Post
  nice message


  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 7. #27
  kamatchi devi's Avatar
  kamatchi devi is offline Registered User
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  KamatchiDeviSivaNarayanan
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Vellore
  Posts
  1,483
  Blog Entries
  1

  Re: Penmai's Special World Environment Day Contest

  மரங்களே மனித வாழ்வின் ஆதாரங்கள்
  உயிர்கள் வாழ மழை தேவை
  மழை பெய்ய மரங்கள் தேவை
  ஆனால் மனிதர்கள் பணத்தின் மீது ஆசையால் மரங்களை அழித்து கட்டிடங்கள் கட்டுகின்றனர்...........இந்த நிலையானது நீடித்தால் எங்கும் மரங்களே இல்லாத நிலை உருவாகி காற்றை கூட விலைகுடுத்து வாங்கும் நிலை உருவாகிவிடும்............எனவே இந்த நிலை உருவாகாமல் இருக்க மனிதர்கள் தங்களுடைய ஆசையை குறைத்து கொண்டால் போதும்......மேலும் மரங்களை அழிக்காமல் இருந்தால் போதும்..........
  இயற்கையை போற்றி பாதுகாப்போம்
  எல்லா வளங்களையும் பெறுவோம்
  Last edited by kamatchi devi; 7th Jun 2014 at 03:15 PM.

 8. #28
  vijivedachalam's Avatar
  vijivedachalam is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalakshmiBala
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  villupuram
  Posts
  10,965
  Blog Entries
  68

  Re: Penmai's Special World Environment Day Contest

  சுற்றுச் சூழல் தினத்திற்கான வாசகம்
  விலை போகும் நிலங்ளை
  விளை நிலங்களாக மாற்றிடுவோம்
  பூமி தாய்க்கு மர குழந்தைகளை
  பரிசாய் கொடுத்து உலகை காப்போம்!!

  சுற்றுச் சூழலில் நல்லதொரு மாற்றத்தை விளைவிக்கக் கூடிய கருத்துக்கள் :

  நமக்கு நாமே சொல்லுவோம் அறிவுரை:

  வீட்டில் சேரும் குப்பைக்களை முதலில் குறைக்க வேண்டும்.காய்க்கறி கழிவுகளை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாய் போடலாம்.......

  முக்கியமாக குளிர்சாதன பெட்டியின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

  அடுத்ததாக அதிக மாக தண்ணீரை செலவு செய்யாமல் இருக்க வேண்டும்.மழை நீர் சேகரிப்புத் தொட்டியில் மழை நீரை சேகரிக்க வேண்டும்.....

  வீட்டில் கண்டிப்பாக மரங்களையோ செடிகளையோ வளர்க்க வேண்டும்.......
  காய்கறிகள்,பழங்கள்,மற்றும் இதர பொருட்களை சணல் பையில் அல்லது துணிப் பையில் வாங்க நாம் பழகிக் கொண்டால்,ப்ளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்கலாம்.

  பக்கத்தில் உள்ள இட்த்திற்க்கு செல்வதாக இருந்தால் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல்,மிதிவண்டியிலோ அல்லது நடந்தே செல்லலாம்.

  சமுதாயத்தில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள்:

  முதலில் பேப்பர் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.....ஏன்னென்றால் பேப்பரை தயாரிக்க பல நூறு மரங்களை வெட்ட வேண்டியுள்ளது..மரங்கள் அழிந்தால் காடுகள் அழியும்..காடுகள் அழிந்தால்,மழை குறையும்,மழை குறைந்தால் விவசாயம் பாதிக்கும் விவசாயம் பாதித்தால் உணவு பற்றாக்குறை ஏற்ப்படும். பேப்பர் ரீசைக்ளிங் முறையில் பேப்பரை தயாரிக்கலாம்.இதனால் இயற்க்கையும் பாதுக்காக்கப்படும்...

  மின்சார பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்...இல்லையென்றால் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த நாம் முன் வர வேண்டும்.

  குடிநீர் குழாய்களுடன் கழிவு நீர் குழாய்களும் கலப்பதால் சுகாதார சீர்க்கேடு ஏற்ப்படுகிறது......இதனை தடுக்க தரமான குழாய்களை பயன்படுத்தலாம்......

  அடுத்து தொழிற்ச்சாலை கழிவுகளை நதியிலும்,கடலிலும் கலப்பத்தை தடுக்க வேண்டும்.....தோழிற்சாலை கழிவுகளை தனியாக அப்புறப்படுத்தினால்,சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கலாம்.........

  Last edited by vijivedachalam; 9th Jun 2014 at 01:00 PM.
  life is so beautiful....

 9. #29
  ramyaraj's Avatar
  ramyaraj is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  RamyaRajan
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  bangalore
  Posts
  6,551
  Blog Entries
  6

  Re: Penmai's Special World Environment Day Contest

  சுற்றுச் சூழல் தினத்துக்கான வாசகம்


  "ப்ளாஸ்டிக் விலையில் மட்டும் குறைந்தது இல்லை

  நம் ஆயுளை, மண் வளத்தை, சுற்று சுழலை குறைப்பதிலும் வல்லது.

  அதனால் மலிவான ப்ளாஸ்டிக் உபயோகித்து

  வலிமையான நோய்களை வாங்கி கொள்ளாதீர்கள்."

  (சுமிகா இதை நீங்க ஸ்லோகன்னு ஒத்துக்கணும்)  சுற்றுச் சூழலில் நல்லதொரு மாற்றத்தை விளைவிக்கக் கூடிய கருத்துக்கள்.


  அனைவருக்கும் வணக்கம்.


  நாம் நம் சந்ததிக்கு சொத்தை சேர்த்து வைக்கிறோம் ஆனால் அதை விட மிகவும் முக்கியம் அவர்கள் வாழு போகும் இந்த பூமியை, நாம் அவர்களுக்கு மாசு படாமல் கொடுப்பது. மாசு படாமல் என்ற பேச்சுக்கே இப்போது இடம் இல்லை.... ஏற்கனவே நாம் போதிய அளவு, நாம் வாழும் இந்த பூமியை மாசு படுத்திவிட்டோம். அதை மேலும் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில், நாம் இப்போது இருக்கிறோம்.


  ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான். அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


  பூமி வெப்பம் அடைவதற்கு முக்கிய காரணம் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை, இயந்திரங்கள், மின் விளக்குகளில் இருந்து வெளியேறும் வெப்பம், குளிர்சாதனங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயு ஆகியவைதான். நாம் நினைத்தால் இப்போதும் நம் பூமியை அதிக வெப்பமாகாமல் தடுக்க முடியும். அதற்க்கு சில எளிய வழிமுறைகளை கடை பிடித்தாலே போதும்.


  வீட்டில் தேவை இல்லாமல் விளக்குகளை எரிய விடாதீர்கள். துணிகளை சலவை எந்திரத்தில் துவைப்பவர்கள், சிறிது சிறிதாக துவைக்காமல் சேர்த்து வைத்து வாரத்தில் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ துவைக்கலாம். இதனால் சலவை எந்திரத்தின் மூலம் உற்பத்தியாகும் co2 வை குறைக்கலாம். அதே போல் ஏசி போன்றவற்றை மிகவும் தேவைப்படும் நேரத்தில் மட்டும் உபயோகிக்கலாம்.


  அலுவலகம் செல்ல முடிந்த வரை பேருந்தை உபயோகியுங்கள். தனித்தனி வாகனங்களில் செல்லவதால் வாகனங்களில் இருந்து வெளியாகும் அதிக அளவு co2 உமிழ்தலை தவிற்கலாம்.


  மின் கட்டணம், தண்ணி வரி, தொலைபேசி கட்டணம் போன்ற கட்டணங்களுக்கு கணிணி மூலம் பணம் செலுத்துவதால் காகித பயன்பாடு குறையும். இதானால் மரங்களை மட்டும் காப்பாற்றவில்லை அதனால் ஏற்பாடு போக்குவரத்தை தவிர்ப்பதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியாகும் அதிக அளவு co2 உமிழ்தலையும் தவிற்கலாம்.


  ஸ்வாசிக்க சுத்தமான காற்று மிகவும் அவசியம். மாசுபட்ட காற்றை சுவாசிப்பதன் மூலம் நிறைய நோய்கள் உருவாகிறது. அதற்க்கு காடுகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். அதிக அளவு மரக்கன்றுகளை நடுவதன் மூலம் காற்றில் இருக்கும் மாசுவை அகற்ற முடியும்.


  அடுத்து மிகவும் முக்கியமானது ப்ளாஸ்டிக் பொருட்க்களை தவிர்ப்பது. ப்ளாஸ்டிக் மண்ணில் புதைந்து போகும் போது மழை நீர் மண்ணில் புகாத வண்ணம் அடைத்துக்கொள்கிறது, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது. இவற்றை எரிக்கும் போது கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிட்டு, நம் சுவாசம் மூலம் நமக்கும் தீங்கு இழைக்கிறது.


  கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது கையில் துணி பையை எடுத்து செல்ல பழகுங்கள். நாம் முன்பு அப்படி தான் வாங்கி கொண்டிருந்தோம். இடையில் வந்தது தான் இந்த ப்ளாஸ்டிக் பைகள். ப்ளாஸ்டிக் தட்டில் சாப்பிடுவது, பிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிருங்கள். ஹோட்டலில் சூடான உணவு பொருட்க்களை ப்ளாஸ்டிக் பைகளில் கட்டி தருகின்றனர், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அதனால் புற்று நோய் வரும் அபாயம் கூட உண்டு.


  சிறு துளி தான் பெரு வெள்ளம்மாகிறது. அது போல் நாம் நம்மால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று நினைக்காமல், நம் பூமி அதிக வெப்பமாகாமல் தடுக்க நம்மால் முடிந்தை செய்ய ஆரம்பித்தால் நம்மை பார்த்து மற்றவர்களும் செய்வார்கள். மாற்றம் என்பது ஒரே நாளில் வராது ஆனால் நாம் எல்லோரும் நினைத்தால் மாற்றலாம்.


  நம் முன்னோர்கள் இயற்க்கை விவசாயம் செய்து அதன் மூலம் வந்த உணவு பொருட்களை சாப்பிட்டனர். இயற்க்கை நிறைந்த சுழலில் வாழ்ந்ததால் சுத்தமான காற்றை ஸ்வாசிச்தனர். அதனால் அவர்களால் ஆரோக்கியமாக நீண்ட காலங்கள் வாழ முடிந்தது. ஆனால் நாம் இப்போது சாப்பிடும் உணவு பொருட்கள் அத்தனையும் ரசாயன உரத்தால் உருவானது, நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டது. நமக்கே இந்த நிலை என்றால் இனி வரும் நம் சந்ததியின் நிலை என்ன?


  அவர்களை ஆரோகியமான சுற்றுச் சுழலில் வாழ வைப்பது நம் கடமை. இத்தனை நாள் நாம் கண் மூடி இருந்துவிட்டோம், இனியாவது விழித்து... நம் பூமியை காத்து கொள்வோம். நன்றி.

  Last edited by ramyaraj; 9th Jun 2014 at 01:53 PM.
  Ramya Rajan
  “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

  வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

 10. #30
  laddubala's Avatar
  laddubala is offline Guru's of Penmai
  Real Name
  Latha
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  Chennai
  Posts
  5,996

  Re: Penmai's Special World Environment Day Contest

  அகிலம் நமக்கு தேவையானதை அபரிதமான அளித்துள்ளது
  அதை உணராத மக்கள், அழிக்கின்றார்கள் – மகாத்மா காந்தி

  இறைவன் இயற்கையை படைத்தான் உயிர்களுக்காக. ஆனால் அதை மேன்மை உணராது மக்கள் அவற்றை அழித்து தன்னையும் அழிந்து கொண்டு இருக்கின்றான். எதை விடுத்தான் நிலம், நீர், காற்று, வான் என அனைத்திற்கும் அவனால் அழிவுதான். உலகத்தின் அழிவிற்கு வித்திடும் வழிகள் பலப்பல நிற்காமல் நிகழ்ந்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

  இவற்றை தடுத்து/குறைத்து நல்லதொரு மாற்றத்தைத்தரும் சில கருத்துக்கள்.

  எந்த ஒரு மாற்றமும் முதலில் நிகழ வேண்டிய இடம் அவரவர் இல்லத்தில். இல்லத்தை நல்ல முறையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிறு வயது முதலே குப்பைகளை குப்பை தொட்டியில் போடும் பழக்கத்தை நம் பிள்ளைகளுக்கும் அறிய செய்திட வேண்டும். கழிவுகளை தகுந்த முறையில் பிரித்தெடுத்தும் வீசுவது வேண்டும். காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.

  குப்பைகளை வீட்டில் மட்டுமல்ல வெளி இடங்களிலும் குப்பைக் தொட்டிகளில் மட்டுமே போடுதல் வேண்டும். தொட்டிகள் அவ்வப்பொழுது சுத்தமாக இருத்தல் மிக அவசியம்.

  தேவை இலலாது ஓடும் மின் சாதனங்களையும் அணைத்தல், தேவைக்கேற்ப தண்ணீரையும் உபயோகம் செய்யவும் வேண்டும். இப்பொழுதெல்லாம் பல இடங்களில் சோலார் தகடுகள் உபயோகத்தில் உள்ளன. அவை மேலும் பெருக வேண்டும்.

  பல இடங்களில் மரங்களை நடுதல் நமக்கு மட்டும் அல்ல பல உயிர்களுக்கும் நல்லது. முடிந்தால் இயன்றவர்கள் வீட்டிலும் தொட்டிகளில் செடிகள் வளர்த்தல் வேண்டும்.

  பிளாஸ்டிக் பொருட்கள உபயோகித்தல் இயன்றவரை தவிர்த்தல். துணி/சனல் பைகள் உபயோகத்திற்கு வருதல் வேண்டும்.

  வாகனங்கள் ஒழுங்கு முறையில் பராமரித்தல் அவசியம். சிறு தொலைவு தான் எனில் நடந்தோ அல்லது மிதிவண்டி உபயோகித்தல்.

  தொழிற்சாலைகளில் வரும் கழிவு, புகை தக்க முறையில் வெளி எடுத்து செல்ல வேண்டும்.

  சாக்கடைகளில் கழிவுநீர் தங்காது பார்த்தல், இருந்தால் தக்க அதிகாரிகளிடம் முறையிடுதல் வேண்டும்

  பள்ளிகளில்/கல்லூரிகளில் சுற்றுப்புற பாதுகாப்பு பற்றிய படிப்புகள் மேலும் வழங்க வேண்டும்.

  ஆண்டு தோறும் ஜுன் 5, சுற்று சுழல் பாதுகாப்பு தினமாக கொண்டாடி வரும் வேளையில், அன்றைய தினத்தில் மட்டுமின்றி என்றும் பாதுகாப்போம் நம் இயற்க்கை அன்னையை.

  சுருங்கும் இவ்வுலகினை
  மாற்றம் எனும் பெயரில்
  அழிக்காது பாதுகாப்போம்
  உலகம் மீண்டும் புத்துயிர் பெறட்டும்!!!

  Last edited by laddubala; 9th Jun 2014 at 03:16 PM.
  வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

  1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
  2. விலகி எது சென்றாலும்
  " DON'T CARE"

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter