Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


 1. #131
  chitramumbai is offline Commander's of Penmai
  Real Name
  chitra
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  mumbai
  Posts
  2,313

  Re: Tamil New Year Contest - 2015!!

  @kaethies நன்றி சகோதரா தங்களின் வாழ்த்திற்கு....


  Sponsored Links
  Last edited by chitramumbai; 5th May 2015 at 06:27 PM.
  kaethies likes this.

 2. #132
  chitramumbai is offline Commander's of Penmai
  Real Name
  chitra
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  mumbai
  Posts
  2,313

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by ;1492487
  Hi Chitra
  Pramadham. alli thelichuttel vishayangala...
  Vaazhthukkal
  sbsudha நன்றி சுதா....ஊருக்கு சென்றிருந்ததால் உடனே பதில் கொடுக்க முடியவில்லை.

  sbsudha likes this.

 3. #133
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,878
  Blog Entries
  1

  Re: Tamil New Year Contest - 2015!!

  பெண்மை தோழமைகளுக்கு,

  இனிய வணக்கங்கள்!

  உங்கள் அனைவரின் பதிவுகளை மிகவும் அற்புதமாக உள்ளது! இதுபோன்ற தமிழ் உணர்வாளர்கள் இருக்கும் வரை தமிழ் என்றும் அழியாது என்று நம்பிக்கை பிறக்கிறது! இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்ற ஏக்கமும் தோன்றிவிட்டது! அந்த அளவிற்கு கருத்துகள், தமிழின் பெருமைகள் என்று அனைத்தும் மிகவும் நீங்கள் பதிந்தவை அனைத்தும் அருமை!

  “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
  முன்தோன்றி மூத்த குடி – தமிழ் குடி.”


  நம் தமிழ் மொழி மற்றும் இனத்தின் தொன்மையை விவரிக்க இந்த வரிகளே போதும்!

  தமிழ் அன்பு, அறம், அறம் சார்ந்த வீரம்,
  கற்பு, விருந்தோம்பல் போன்றவற்றிக்கு பிறப்பிடமாக திகழ்ந்தது! தமிழின் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்...

  • மற்ற மொழியில் அரிதாக காணப்படும் "ழ"கரத்தின் சிறப்பு!
  • நாகரீகம் சொல்லிக்கொடுத்த மொழி!
  • உலகப்பொதுமறையாம் திருக்குறள் - ஆறாம், பொருள், இன்பம் என்று வாழ்வின் எல்லாத் தேவைக்குமான கருத்துக்கள் கொண்ட நூல்.
  • மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுக்காமல், மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்த வாழ்வு பண்பாட்டின் சிகரமே.
  • காலத்தால் அளவிட இயலாத தொன்மை வாய்ந்த செம்மொழி. உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று. நம் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. பிற மொழிகளை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லவில்லை, நம் மொழியின் பெருமையை எடுத்துரைக்கவே இந்த ஒப்பீடு!


  தமிழர்களின் பண்பாட்டை உலகியல் உண்மைகளைத் விளக்கும், புறநானூற்றுப் பாடல்! இந்த ஒரு பாடல் போதும் நாம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதற்கு!

  யாதும் ஊரே யாவரும் கேளிர்
  தீதும் நன்றும் பிறர்தர வாரா
  நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
  சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
  இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
  இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
  வானம் தண்துளி தலைஇ யானாது
  கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
  நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
  முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
  காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
  பெரியோரை வியத்தலும் இலமே,
  சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

  பொருள்:
  எல்லா ஊரும் எம் ஊர்
  எல்லா மக்களும் எம் உறவினரே
  நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
  துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
  சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
  இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
  வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
  பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
  இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
  தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
  ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
  சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
  பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.


  Last edited by sumathisrini; 13th May 2015 at 11:55 AM.
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine November 2017

 4. #134
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,878
  Blog Entries
  1

  Re: Tamil New Year Contest - 2015!!

  வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. தமிழனுக்கு மட்டுமே அந்த செருக்கு கலந்த காதல் உள்ளது! தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது... உயிராக நேசிக்கிறான்!!

  எனக்குள் இருந்த இந்த காதலின் வெளிப்பாடே, முதல் குழந்தையின் பெயர் ஆணாக பிறந்தாலும் பெண்ணாக பிறந்தாலும் தமிழ் என்று பெயர் வைக்க வேண்டும் அதேபோல் முதல் மகனின் பெயர் "தமிழ்"! மிகவும் ரசித்து வைத்த பெயர்! அடுத்த மகனின் பெயர் "பாரதி"! ஒவ்வொரு முறையும் தமிழ், பாரதி என்று பிள்ளைகளை அழைக்கும்போது என்னை அறியாமல் ஒரு பெருமிதம் தோன்றத்தான் செய்கிறது!

  நம் அரசின் சமுதாயத்தின் பங்கு,
  பள்ளிகள் தாய் மொழி வழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தாய்மொழி வழி கல்வி பள்ளிகளோடு முடியாமல் கல்லூரிகளிலும் தொடர வேண்டும்.

  பிழை செய்யாத மனிதனே இருக்க முடியாது! ஒருவர் எழுத்துப்பிழையுடனோ அல்லது இலக்கண பிழையுடனோ பேசினாலோ எழுதினாலோ அவர்களை கேலி செய்யாமல் அவரின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.


  தமிழில் பேச்சு வழக்குகள் காலத்திற்கேற்ப மாற்றம் கண்டு வந்தாலும் அடிப்படைத் தமிழ்மொழியானது என்றும் அழியாது நிலைபெற்று இருக்கும்!

  தமிழ் அவமானம் அல்ல நம் அடையாளம், தமிழரோடு தமிழில் பேசுவோம்!
  இங்கு தங்களது கருத்துக்களை தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்த தோழி @RathideviDeva, @Mary Daisy, @sbsudha, @thenuraj, @kaethies, @naanathithi, @chitramumbai, @saveetha1982, @Geetha A, @jash அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

  இதில் தோழி
  உஷாந்தி @naanathithiதம் கருத்தை மிக சிறப்பாக பதிவு செய்து, முதல் வெற்றியாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்! அவருக்கான பரிசு,


  அவருக்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் தோழி ரதிதேவி மற்றும் தேனுராஜ் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!


  Please send your Indian Postal Address with Phone no. to support@penmai.com through mail. Once you received the gift, please confirm the same.


  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine November 2017

 5. #135
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,112

  Re: Tamil New Year Contest - 2015!!

  Whoa, Goosebumps Kaa! Fantastic

  Hey,, Heartiest Congratzzz Springyyy.. Keep Rocking

  And Congrats to you too Rathii, Thenu Cheers!!


 6. #136
  PriyagauthamH's Avatar
  PriyagauthamH is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  London
  Posts
  6,342
  Blog Entries
  6

  Re: Tamil New Year Contest - 2015!!

  வாழ்த்துக்கள் உஷாந்த்தி...

  வாழ்த்துக்கள் தேனு , ரதி......

  Priya


 7. #137
  lashmi's Avatar
  lashmi is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalashmiravichandiran
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  karur
  Posts
  11,976
  Blog Entries
  43

  Re: Tamil New Year Contest - 2015!!

  வாழ்த்துகள் உஷாந்தி .தேனு, ரதி தேவி

  மற்றும் இதில் கலந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் எனது வாழ்த்துகள்.

  Last edited by lashmi; 12th May 2015 at 09:21 PM.
  அன்புடன்
  லஷ்மிரவி  நான் எடுக்கும் முடிவு
  சரியா என்று எனக்கு தெரியாது.

  ஆனால் எடுத்த முடிவை
  சரியாக்குவேன்.....
  .


  --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர் 8. #138
  chitramumbai is offline Commander's of Penmai
  Real Name
  chitra
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  mumbai
  Posts
  2,313

  Re: Tamil New Year Contest - 2015!!

  வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்.. உஷாந்தி .
  ரதி , தேனு..
 9. #139
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by penmai View Post

  • காலத்தால் அளவிட இயலாத தொன்மை வாய்ந்த செம்மொழி. உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று. நம் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. பிற மொழிகளை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லவில்லை, நம் மொழியின் பெருமையை எடுத்துரைக்கவே இந்த ஒப்பீடு!  அது என்ன 11 தகுதிகள்? இதுவரை கேள்விப்பட்டதில்லை. முடிந்தால் அவற்றை இங்கே பதிவிடுங்கள் .

  தமிழர்களின் பண்பாட்டை உலகியல் உண்மைகளைத் விளக்கும், புறநானூற்றுப் பாடல்! இந்த ஒரு பாடல் போதும் நாம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதற்கு!

  யாதும் ஊரே யாவரும் கேளிர்
  தீதும் நன்றும் பிறர்தர வாரா
  நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
  சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
  இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
  இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
  வானம் தண்துளி தலைஇ யானாது
  கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
  நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
  முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
  காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
  பெரியோரை வியத்தலும் இலமே,
  சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

  பொருள்:
  எல்லா ஊரும் எம் ஊர்
  எல்லா மக்களும் எம் உறவினரே
  நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
  துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
  சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
  இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
  வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
  பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
  இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
  தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
  ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
  சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
  பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

  இதுவரை இந்த புறநானூற்றுப்பாடலின் இரு வரிகள் தவிர மற்றவை படித்ததில்லை. அந்த முழு பாடலும் அதோடு சேர்ந்து அதன் விளக்கமும் தந்தற்கு நன்றி !!!!

  Last edited by RathideviDeva; 12th May 2015 at 10:27 PM.

 10. #140
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  வாழ்த்துக்கள் @naanathithi , @thenuraj


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter