Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


 1. #21
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  நான் தமிழை தாய்மொழியாக பெற்றதற்கு பெருமை அடைந்த தருணங்கள் எதுவென்று எண்ணிப்பார்க்கையில் மூன்று நிகழ்வுகள் என் மனக்கண் முன் மீண்டும் மீண்டும் வருகின்றது.
  அவை-
  1) உயர் திரு. அப்துல் கலாம் அவர்கள் ஐரோப்பா ஒன்றிய கூட்டத்தொடரில் தமிழில் பேசி அனைவரின் கரகோஷத்தை பெற்றபோது.
  அவர் புறநானூற்றில், கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மேற்கொளைக்கொண்டு 3000 ஆண்டுகளுக்கும் முன்பே நம் தமிழன் உலக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பற்றிய சிந்தனை கொண்டான் என்று உலகுக்கு உணர்த்தியது.....


  2)கோ. பாலச்சந்திரன், இந்திய ஆட்சிப் பணி (I.A.S) அவர்கள் ஒரு கருத்தரங்கில் பகிர்ந்துகொண்ட நிகழ்வு:
  ஒரு முறை இந்தியாவின் சார்பாக அவர் ஐ.நா. சபை சென்றபோது, ஒரு விருந்தில், அவரவர் தங்கள் நாட்டின் பெருமைகளை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது
  ஆங்கிலேயர்: உலகில் எந்த நாட்டையும் , எப்பாடு பட்டாவது எங்களால் கைப்பற்றி ஆட்சி புரியும் வல்லமை எங்களுக்கு இருந்தது. அதன் விளைவாக உலகின் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு நாங்களே ஆண்டோம் .
  பிரெஞ்சு காரர்: ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆண்ட நாடுகளில் வலுகட்டாயமாக ஆங்கிலத்தில் திணித்ததினால், அவர்களின் கலை மற்றும் எழுத்துக்கள் பிரபலம் அடைந்தன. எங்களுடைய படைப்புகளை படித்தால் எங்களின் ஆற்றல் புரிந்திருக்கும்.
  ஜெர்மனியர் : நாங்கள் உலகில் இயந்திர வல்லுனர்கள் (mechanical expert ). எங்களை மிஞ்ச யாருமே இல்லை.
  ........இப்படி பல நாடுகள் தங்கள் பெருமையை பறைசாற்றினார்கள். இறுதியில் சீனாவும் இந்தியாவும்.....
  சீனாகாரர்: 5000 ஆண்டுகளாக நாங்கள் யாரிடமும் அடிமை படவில்லை. ஒரு மொழி பேசுபவர்கள். ஒற்றுமையுடன் இருப்பது எங்கள் வலிமை.(இது இந்தியாவை குத்துவது போல்).
  பாலச்சந்திரன்: எங்கள் நாட்டில் பல மாநிலங்கள், பல மொழிகள் உள்ளது. என் மாநிலம் மற்றும் மொழியான தமிழை பற்றி மட்டுமே சொல்ல முடியும். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞர் "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்று சொன்னார். அதற்கு ஆங்கிலேயர் அதிர்ச்சி அடைந்து, மீண்டும் அந்த கவிஞரின் காலக்கட்டத்தை ஊர்ஜிதபடித்திவிட்டு, "1500 வருடங்களுக்கு முன்பு ஒருவன் 50 மைல்களுக்கு அப்பால் பிரயாணம் செய்திருக்கவே முடியாதே . அப்படியும், இந்த உலகமே என் சிற்றூர். அனைவரும் என் உறவினர்களே, என்று சொல்லி இருக்கிறாரா?" என்று ஆச்சர்யப்பட்டார். அதற்கு நம் தமிழர், "அது மட்டுமில்லை, தீதும் நன்றும் பிறர் தரல் வாரா என்றும் சொல்லி இருக்கிறார்". அதன் விளக்கத்தையும் கொடுத்தார். அதை கேட்டு எழுந்து நின்ற ஆங்கிலேயர், "உலகின் மிக பழமையான பாரம்பரியம் உடைய கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் நாம் மரியாதை செய்வோம் ". என்று அனைவரையும் எழுந்து நிற்க வைத்து கரகோஷம் எழுப்பினர்.
  (மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் கானொளியில் தான் கண்டேன்). இவை நேரில் காணும் வாய்ப்பு கிட்டி இருந்தால், கண்டிப்பாக உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் சிந்தி இருப்பேன்.


  3) 2009 ஆண்டில் ரஹ்மான் அவர்கள் ஆஸ்கார் விருது வாங்கிய பொழுது, அவர் "எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே", என்று தமிழில் கூறிய போது உணர்ச்சி வசப்பட்டு பக்கத்தில் என்னுடன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை பார்த்து கொண்டிருந்த என் மகளை படுத்திவிட்டேன். அவள் என்னவோ தமிழுக்கு எதிரி போலவும் , தமிழ் என்னவோ எனக்கே சொந்தமானது போலவும், "பாருங்க என் தமிழ பேசிட்டாரு. என் தமிழ்...என் தமிழ்.. " என்று என்னவெல்லாமோ பிதற்றினேன்(என் பெண் கொஞ்சம் பயந்து,என்னை விட்டு நகர்ந்து சென்று அமர்ந்து கொண்டாள். சிறு பிள்ளைகளுக்கு என்ன தெரியும் ).


  என்ன தான், "தமிழ் என் தாய் மொழி" என்று கர்வம் கொள்ள தமிழனின், கட்டட கலை, சிற்பக்கலை, மருத்துவ அறிவு, அறிவியல் அறிவு, வான சாஸ்திர அறிவு, வாழ்வியல் அறிவு, பாரம்பரியம் மிக்க கலாச்சாரம் போன்ற பல காரணங்கள் இருந்தாலும்... மேற்கூறிய சம்பவங்களை மற்றவர்களுடன் பகிரும்போது வரும் உணர்வுக்கு ஈடில்லை.


  மன்னிக்கவும்... மிகவும் நீண்ட உரையாக போய்விட்டது. அதனால் தமிழ் வளர்க்கும் வழி வகைகளை அடுத்த பதிவில் சொல்கிறேன்.


  Sponsored Links
  Last edited by RathideviDeva; 17th Apr 2015 at 01:28 AM.

 2. #22
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  தாய் மொழி கல்வி மூலமே ஒரு மொழியை காப்பாற்ற முடியும். இன்று தமிழ் வழி கல்வி பரவலாக இல்லை. மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்கள் சொன்னது போல், "தமிழ் இன்னும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மூலமே வாழ்ந்து கொண்டிருக்கிறது". இதை கட்டாயமாக்குவது சாத்தியப்படாது. ஏனென்றால் நாம் மிக நீண்ட தூரம் வந்துவிட்டோம், இனி பின்னோக்கி செல்வது கடினம். அது மட்டுமில்லை ஆங்கிலத்தை ஒதுக்குவதும், இன்றைய கால கட்டத்தில் மிகவும் முட்டாள்தனம்.

  தமிழை வாழவைக்க எனக்கு தோன்றிய சில வழிகள்:
  1) பள்ளிகள் முதலில் தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவன் சிந்தனையை தாய் மொழி மூலமாக வெளிப்படுத்த உதவ வேண்டும். ஒருவன் தன் எண்ணங்களை தாய்மொழியில் வடிவுக்கொடுக்கும் போது தான், அது உண்மையாகவும், நேர்மையாகவும், நிதர்சனமாகவும் இருக்கும்.
  2) கலந்துரையாடல்கள் தாய் மொழியான தமிழ் மொழியில் மட்டுமே இருந்தால் நல்லது. அப்போது தான் சமூக சிந்தனைகள் வளரும். தன்னால் ஒரு சமூகத்தில் பொருந்தி போக முடியும்.
  3) தாய்மொழி என்பது ஒருவரின் அடையாளம். அதை மாற்ற முயற்ச்சித்தால் தன் சுயத்தையே இழக்க நேரிடும் என்பதை ஆசிரியர்கள் முதலில் உணர்ந்து பின் மாணவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். அது கூட தேவையில்லை, அவர்களை ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று நிர்பந்திக்காமல் இருந்தாலே போதும்.
  4) அருமையான தமிழ் ஆசிரியர்கள் மூலமே குழந்தைகளிடம் தமிழின் பெருமையை ஆழபதிக்க முடியும். தமிழை, இன்றளவும்,ஆழமாக நேசிப்பவர்கள் இதையே காரணமாக சொல்வார்கள். பல மாணவர்கள் இன்றளவும் "கோனார் உரையை" தான் தங்கள் முதல் தமிழ் புத்தகமாக கருதுகிறார்கள். முதலில் தகுதி உள்ளவர்கள்(மொழி பற்றுள்ளவர்கள் ) மட்டுமே தமிழ் ஆசிரியர்களாக வர வேண்டும். இவ்வாசிரியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தால் நல்லது(அக்காலத்தில் மன்னர்கள் தமிழை வளர்த்த கவிஞர்களை கவனித்துக்கொண்டது போல்). ஒரு தமிழ் இலக்கியத்தை பற்றி பாடம் நடத்தும் போது, அதை சுவாரஸ்யமாக மட்டும் உரை நிகழ்த்தாமல், சுவையான கலந்துரையாடலாகவும் ஆக்க வேண்டும்.
  மேல்தட்டு மக்கள் பங்குபெறும் பள்ளிகளை மாற்றுவது கடினம். சரி அவர்கள் ஒரு சிறு சதவீதமே, என்று ஒதிக்கி தள்ளி விட வேண்டியது தான்.

  5) தமிழ் நூல்கள் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டு வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்த பட வேண்டும். வேற்றுமொழிக்கரர்கள் நம் மொழியின் பெருமையை சொன்னால் தான். நாம் உணரக்கூடிய, வெட்கி தலை குனிய வேண்டிய, நிலையில் இருக்கிறோம்.
  6) ஆங்கிலத்தில் பேசினால் தான் மரியாதை என்று மனப்போக்கில், தமிழர்களே தமிழை தவிர்க்கும் மன நிலை மாற வேண்டும்.

  கலாச்சாரத்தை காப்பாற்ற வழிகள்:
  1) முதலில் அழிந்து வரும் நம் வரலாற்று பொக்கிஷங்கள் / சின்னங்களான(கல்வெட்டுகள், வரலாற்று பெருமை மிக்க கட்டிடங்கள் / கோயில்கள் போன்றவை ) அரசு சிரம் மேற்கொண்டு காப்பாற்றியாக வேண்டும். இதுவே நம் முன்னோர்கள் நம்மிடம் விட்டு சென்ற கலாச்சார அடையாளங்கள். இதுவே நம் சொத்து.
  2) அழிந்து வரும் தமிழ் மண்ணின் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்,....... ஆகியவற்றை காப்பாற்றியாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அன்று திரு விழாக்களில் இடம் பிடித்த இக்கலைகள், இன்று வெறும் ஆபாச திரைப்பட பாடல்களுடன், கூடிய களியாட்டங்களாக போய் விட்டன. எங்கள் கிராமத்திலும் இந்த நிலை தான். வருங்கால சந்ததிகள், இதை பழைய திரைப்படங்களில் மட்டுமே காணும் நிலை வரும். கலைமாமணி விருதுகளை இது போன்ற மண் வாசனை மாறாத கலைகளை வழங்கிய இவர்களுக்கு அளித்து கௌரவப்படுத்த வேண்டும்.
  3) நம் பாரம்பரிய விளையாட்டுக்களும் அழிவு நிலையில் உள்ளன. கிட்டிபுள், நொண்டி, ஆடு புலி, கபடி, (மன்னிக்கவும், எனக்கு அவ்வளவாக இதை பற்றி தெரியாது)...... இனி இலக்கியங்களிலும், வரலாற்று புத்தகத்திலும் மட்டுமே இடம் பெரும். வாழ்க்கை முறையில் இல்லை. பள்ளியில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆசிரியர்களின் பங்கு இதில் அதிகம். அவர்கள் அதை உணர வேண்டும்.
  4) தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் கொலை செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை குழு( censor board )அமைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
  4) திரைப்படங்களை ஆய்வு செய்யும் தணிக்கை குழு இன்னும் கொஞ்சம் கடுமை காட்டினாள் தேவலை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஆபாசத்தை விட்டால், நாளை மக்கள் அதையும் சாதரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை வரும்.

  வெறும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டி புண்ணியம் இல்லை . தமிழ்!! தமிழ்!! என்று நாமே அதன் பெருமை பேசிக்கொண்டிருந்தால் போதாது. ஏன் இந்த திரியின் முக்கிய விதியே தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. அது 100% சதவீதம் சரியே. ஆனால் அதை தெரிந்துகொள்ள விரும்பும், தமிழ் சரியாக தெரியாதவர்கள், எப்படி இதை படித்து உணர முடியும். இந்த திரியின் முடிவில், முக்கிய புள்ளிகளை மட்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் அவர்களுக்கும் உதவியாக இருக்கும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நான் மனம் வருந்தும் படி கூறியிருந்தால் மன்னிக்கவும்.  மொத்தத்தில் நம் பாரம்பரியத்தை மறந்து ஒதுக்காமல், தேவையான புதியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். இழந்தவைகளை மீட்க முடியாவிட்டாலும், இருப்பதையாவது காப்பாற்றுவோம் .

  மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன் ... மிகவும் நீண்ட உரையாக போய்விட்டதற்காக....

  Last edited by RathideviDeva; 17th Apr 2015 at 04:05 AM.

 3. #23
  honeyrose123 is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  houston,texas
  Posts
  4

  Re: Tamil New Year Contest - 2015!!

  Good nice to hear.....

  sumathisrini and sumitra like this.

 4. #24
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,582

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by S.B.Chaithanya View Post
  contest ku post pana ithey link la panalama ....mam
  oruthar oru post matum than podanuma pls inform
  ஆமாம் @S.B.Chaithanya... உங்கள் போட்டிக்கான பதிவை நீங்கள் இங்கயே போடலாம்.

  ஒருவர் ஒரு முறை தான் போட்டியில் பங்கு பெறலாம்.


  Penmai, thenuraj, sumitra and 2 others like this.

 5. #25
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: Tamil New Year Contest - 2015!!

  Hi Ilavarasi, very nice contest! thank you !

  Penmai, sumathisrini and thenuraj like this.

 6. #26
  gloria's Avatar
  gloria is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  GLORIACATCHI
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  france
  Posts
  7,949

  Re: Tamil New Year Contest - 2015!!

  nice contest...

  tag பண்ணதுக்கு தேங்க்ஸ் சுமதி அக்கா....


 7. #27
  jayakalaiselvi's Avatar
  jayakalaiselvi is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2014
  Location
  India
  Posts
  8,384

  Re: Tamil New Year Contest - 2015!!

  Dear Ilavarasi mam,

  contest super......

  aanaa romba kashtamanadhunnu thonuchu......

  yennaa idhu chumma karpanai panni yezhudha mudiyaadhu......

  think panni unarndhu yezhudhanum.......

  try panren mam........

  my dear sisters, brothers and friends......all the very best.......

  காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
  உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

 8. #28
  jayakalaiselvi's Avatar
  jayakalaiselvi is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2014
  Location
  India
  Posts
  8,384

  Re: Tamil New Year Contest - 2015!!

  Thank u for tagging me karthi sis....... @gkarti

  sumitra and gkarti like this.
  காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
  உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

 9. #29
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,135

  Re: Tamil New Year Contest - 2015!!

  Enga Maa J ponaa?? Aale Kanom...


 10. #30
  jayakalaiselvi's Avatar
  jayakalaiselvi is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2014
  Location
  India
  Posts
  8,384

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by gkarti View Post
  Enga Maa J ponaa?? Aale Kanom...
  Hyderabad .....official trip sis......

  Vimalthegreat, sumitra and gkarti like this.
  காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
  உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter