Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


  1. #31
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Tamil New Year Contest - 2015!!

    வணக்கம் !
    தமிழ் மொழி .. என் தாய் மொழி !
    நான்
    கர்வம் பெருமை மகிழ்ச்சி பூரிப்பு ஆணவம்
    கொண்ட தருணங்கள் . . . .
    நினைவில் உள்ளதை பகிர்ந்து கொள்கிறேன் . . .!


    திரைப்பட பாணியில் கூற வேண்டுமெனில் . . .

    குழந்தை பருவத்தில் என்று....
    நான் "அ ஆ"எழுத கற்று கொண்டேனோ அன்றே என்னுள் இந்த கர்வம் , அன்பு , பற்றுதல், பாசம் புகுந்திருக்க வேண்டும் . . .!


    கண்ணெதிரே கண்டு பெருமை பட்டவை . .. .

    ஏழாம் அறிவு திரைபடத்தில் . . .
    தமிழ் மனிதன் ஒருவரின் திறமை வேறு ஒரு பிரதேசத்தில் புகழ் பெற்று .. இன்றும் தெய்வமாக வணங்குவதை கண்ட பொழுது . . . சிலிர்த்தது என் ரோமங்கள் . . . !


    "ஹிப் பாப் தமிழா " வின் உரிமையாளர்(தலைவர்)
    இவரது முறுக்கு மீசை, கொஞ்சம் இந்த கால ரசனையோடு தமிழை கொண்டு செல்லும் விதம் காண்கையில் . . . .
    மத்தாப்பு சிரிப்பு என் இதழ்களில் . . .!


    ஒரு விளம்பரத்தில் . . . வேஷ்டி காட்ட முயலும் ஒரு வாலிபர் . . கூறும் ஒரு வார்த்தை கோவை. .

    தமிழனாக இருந்து வேஷ்டி கட்ட தெரியாம இருக்குமா . . ?!
    நான் தமிழன்டா . . !

    இந்த வார்த்தைகளை கேட்ட பொழுது . ..
    ரசித்தேன் என்னையும் அறியாமல் . . . தமிழச்சியாக இருந்து . . .!


    யாரேனும் தமிழில் கையெப்பம் இடுவதை காண்கையில் பூரிப்பு அடைகிறேன். . . நானும் இதே போல செய்ய வேண்டும் என்ற ஆசையோடு . . !!!

    தமிழ் எழுத்துகள் அடங்கிய ஆடை ஒன்றை அரசு செல்வாக்கு கொண்ட பெண்மணி அணிந்து இருந்ததை கண்டேன் செய்தி பார்கையில்.....
    அந்த நொடி கண் இமைக்காமல் கண்டேன் . . .
    அந்த செய்தியை அல்ல. . .
    அந்த பெண்மணியையும் அல்ல . . . .
    என் மொழியை அவள் அணிந்திருந்ததால் . . .!


    என் தோழி என்னுடன் பகிர்ந்த செய்தி இது. .!
    அவள் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது. . . .
    ஒரு பொதுவான வார்த்தையை ஒரு பக்கத்தினர் ஆங்கில மொழியிலும் . . . .
    மற்றொரு அங்கத்தினர் தமிழிலும் பேசினர் . . . . . இரண்டிற்கும் பொருள் ஒன்று என அறியாமலே . . .

    என் தோழி முறை வந்ததும் " இரண்டுக்கும் பொருள் ஒன்றே.. தமிழில் இப்படி தான் அந்த வார்த்தையின் அர்த்தம் .. இவ்வாறும் பயன்படுத்தலாம் என்றாள் . . .!"
    அனைவருக்கும் ஆச்சரியம் ..சிலர் கொஞ்சம் அசடும் வழிந்தனர்....
    அத்தோடு இவளுக்கு அறிவு திறன் அதிகம் என்ற பாராட்டையும் பெற்றாள் . .!

    இவள் அறிவாளியோ இல்லையோ . . .
    ஆனால் தமிழ் பொருள் கூறி நன்மதிப்பை பெற்றாள் . . .

    இதை கேட்ட நிமிடம் நானும் உணர்ந்தேன்
    அந்த பூரிப்பை . .! பாராட்டை . . ! எனக்கே கிடைத்தது போல்...


    இசை கலைனர் மைக்கிள் ஜாக்சன் , ஒரு ஆல்பத்தில் பரதநாட்டிய மங்கையை யும் சேர்த்து கூட ஆடுவர். . . அதை பார்த்த பொழுது . . என் தமிழ் மொழியின் அசைவை அந்த நாட்டியத்தில் கண்டு பெருமை கொண்டேன் . . .
    எத்தனை மக்கள் அதை கண்டு களித்திருப்பர்கள் . .
    என் தமிழ் நாட்டியம் அவர்களுக்கும் பிடித்திருக்கும் அல்லவா . . என்றெல்லாம் எண்ணி மகிழ்ந்தேன் . . குழந்தை தனமாக . .


    இணையதளத்தில் ஏதேனும் தேடுகையில் அந்த பட்டியலில் நம் மொழி தமிழ் மொழி சார்ந்த நபர்களையோ இடங்களையோ காண்கையில் பெருமை கொள்கிறேன் தன்னிச்சையாக. . .

    இதோ இந்த பெண்மை தளமும் அதில் அடக்கம். ..
    முதன் முறை இந்த தளத்தை கண்டு பிடித்த பொழுதும் அவ்வாறே பெருமை கொண்டேன் . .!


    வேறு மொழி பேசுபவர், அரசியல் பிரபலங்கள் , சினிமா பிரபலங்கள், தமிழ் மக்களோடு பேசுகையில் அவர்கள் பேசும் தமிழ் மொழியின் அழகோ அழகு. . . அதை அவர்கள் முயற்சி செய்கிறார்களே .. அதற்காகவே அவர்களை பாராட்ட வேண்டும் போல் ஒரு எண்ணம் தோன்றும் ....

    சக மாணவி ஒருத்தி வீட்டில் நடந்த கூத்து இது. . .!
    என் தோழி தமிழ் வழி கல்வி பயின்றவள் . .
    அவளது இளைய தங்கை ஆங்கில வழி . . .

    அதனால் எப்பொழுதும் இவளை அவள் மட்டம் தட்டி பேசுவது வாடிக்கையாக நடந்து கொண்டிருந்திருக்கிறது . .
    "hey gal talk n english.. cm on ... if u can spk wit me" இது போல் கூறி வம்புக்கு இழுப்பது கிண்டல் செய்வது . . .
    என்னிடம் ஒரு நாள் இதை எண்ணி வருந்தினாள் . .

    நான் ஒன்றே ஒன்று கூறினேன் . . .

    மொழி என்பது நம் உணர்வுகளை செய்திகளை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு கருவி போனதே . .
    நான் ஒன்றை விளக்கம் கூறுகையில் அதன் பொருள் மற்றவருக்கு விளங்க வைப்பது என் கடமை . .
    அது அவருக்கு புரிய வில்லை என்றால் நான் தானே மேலும் விளக்கம் கொடுக்க வேண்டும்..!
    அல்லது நான் தானே வெட்க பட வேண்டும். .!
    எதிரில் இருக்கும் நபரல்லவோ. . ?!?
    ஆசிரியரோ அல்லது சொற்பொழி ஆற்றுபவரோ எவெரேனும் சொல்ல வந்ததை தெளிவு படுத்த வில்லையெனில் நாம் அவரை தான் குறை கூறுவோம் . . மட மக்கு நபர்கள் தனி..!

    இப்பொழுது தோழியின் கதைக்கு வருவோம்.. .
    ஹ்ம்ம் ...
    இதை போல் உன் தங்கை கூறுவது உனக்கு புரிய வில்லை எனில் யார் வெட்க பட வேண்டும். . ? அவளுக்கு தமிழ் மொழி தெரிந்தும் வேறு மொழியில் பேசினால் யார் பிழை . . ?!?!
    உனக்கும் தாய் மொழி தமிழ் .. அவளுக்கும் அதுவே. . .
    பின் என் வேறு மொழி . .?!
    அவளது தற் பெருமைக்காக வேறு மொழி பேசினால் அவளுக்கு தான் அசிங்கம் . . உனக்கல்ல ...!!!

    அவளும் தமிழ் மொழி எண்ணி தாழ்வு கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் சென்றாள் . . . எனக்கும் அந்த மகிழ்ச்சியை கொடுத்து கொண்டு ..!

    தமிழ் மொழி வளர . . . .

    பத்திரிகை துறை ...
    சினிமா துறை . .
    கலை துறை . .
    மக்களை எளிதாக சென்றடையும் ஊடகங்கள் வழியாக தமிழ் மொழியை அதன் பெருமையை கொண்டு செல்லலாம் . .!!

    தமிழ் மொழி கையெப்பம் ! நான் முன்பே கூறியது போல் . . .

    தமிழ் வாரத்தை அடங்கிய ஆடைகள் . . .

    பாரதியாரின் முறுக்கு மீசை இன்றைய இளைனரிடம் . . .

    நவீன யுக்தி மூலம் இன்றைய இளம் தலை முறையினரிடம் கொண்டு செல்லலாம் . . !

    பிரபலங்கள் மூலம் தமிழை எக்கு திக்கும் பரப்பி மக்கள் மனதில் நிலை நிறுத்தலாம் . . .

    நமது வீட்டில் இருந்தே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் . .!

    குழந்தைகள் "மம்மி" என்று அழைப்பதற்கு பதில் " அம்மா " என்று அழைக்க சொல்லி பழக்க படுத்தினாலே ஒரு மாபெரும் வெற்றி தான் இன்றளவில் ...!!!

    -வாய்ப்புக்கு நன்றி . .!


    Sponsored Links

  2. #32
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Tamil New Year Contest - 2015!!

    அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
    என் படைப்பு சில வரிகள்...

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடானு பாடி வெச்சான் ஒரு தமிழன்...
    நீண்ட கட்டுரை எல்லாம் இல்லை, இனிக்க இனிக்க தமிழெனும் அமுதினை நான் ரசித்த, ருசித்த, உணர்ந்த சில தருணங்கள், சில நினைவுகள், பெருமைகள், சந்தோஷங்கள் அவ்வளவே...
    அந்த காலத்து ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நின்ன கட்டபொம்மனும் தமிழன்தான்.
    ஆங்கிலேய அராஜகத்தை தாங்கிக்கொள்ள முடியாம மணமாகி ஒரே மாதம் ஆகியிருந்த நிலையிலும், அந்த ஆங்கிலேயனை சுற்றுக்கொன்று தானும் மாண்டு போன வாஞ்சிநாதனும் தமிழன்தான்.
    வேண்டாம் வாஞ்சி, உன் இளம் மனைவி பொட்டிழக்கும்படி நேர்ந்துவிடுமோ என்று பிறர் அஞ்சியபோதும் கூட, என் மனைவி ஒருத்தி பொட்டழிவதினால் பல பெண்டிரின் மாங்கல்யம் பிழைக்கும் எனில் எனக்குப் பெருமையே என்று சூளுரைத்தவன் வாஞ்சித் தமிழன்

    ஒன்றரை அடியில வாழ்க்கையின் சூட்சுமத்தையே அடக்கி ஆயிரத்து முன்னுத்தி முப்பது குரளாக படைச்ச வள்ளுவனும் தமிழன்தான்

    அரசனென்றும் பார்க்காமல் காற்சிலம்பை வீசி எறிந்து நியாயம் கேட்டு மதுரையை எரித்த கண்ணகியும் தமிழச்சிதான்

    தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாடிவைத்த பாரதிதாசனும் தமிழன்தான்

    நிழலே பூமியில் விழாத தஞ்சை பெரிய கோவிலை கட்டியவனும் தமிழன்தான்.

    கண்ணதாசனின் கனிந்த தமிழைச் சொல்வதா வைரமுத்துவின் கனல் பறக்கும் தமிழைச் சொல்வதா...

    மர்லின் பிராண்டோ விருதா, பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதா கூப்பிடு சிவாஜி எனும் கலைத்தாயின் மூத்த மகனை என பேச வைத்த கணேசனும் தமிழன்தான்.

    ஒன்றாம் வகுப்பு முதலே விகடன் தாத்தாவினை கண்டு தமிழை படித்து அறிந்து ருசித்து ரசித்து தீவிரமாக பயின்ற பலன், பன்னிரண்டு வகுப்பு முடிக்கும் முன்பே தமிழக அரசாங்கம் கீழ்படிந்த மாணவர் தமிழ்ச் சங்கம் நடத்திய மாணவர் மன்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் தேர்வினை மாநில அளவில் இரண்டாம் இடத்தை வெல்ல முடிந்தது. அந்த மிகப்பெரிய பெருமையை எனக்கு பெற்றுத் தந்தாள் என் தமிழ் அன்னை.

    நான் முதிர்ந்த பின்னும் என் தமிழ் மகள் அன்று போலவே இன்றும் அதே துள்ளலுடன் இளமையாகவே என்னைச் சுற்றி வருகிறாள்.
    அதன் பயன்தானோ நானும் ஒரு எழுத்தாளர் ஆனேனோ... தமிழ் எனும் தேன்சுவை தெள்ளமுதினை மீண்டும் மீண்டும் ருசிக்க மனம் பெற்றோனே நான் அறியேன்...
    நன்றி தமிழ் மகளே... என் தாயும் நீயே மகளும் நீயே...
    உன் கைபிடித்து நான் நடக்கும் நேரங்கள் என் வாழ்வின் வசந்த காலங்கள்...


  3. #33
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Sudha sis @sbsudha,
    தமிழ் மகள் உங்கள் படைப்பில் துள்ளி விளையாட அவள் பேறு பெற்றாளோ அல்லது நீங்கள் தான் பேறு பெற்றீர்களோ?


  4. #34
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by Mary Daisy View Post

    நான் ஒன்றே ஒன்று கூறினேன் . . .

    மொழி என்பது நம் உணர்வுகளை செய்திகளை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு கருவி போனதே . .
    நான் ஒன்றை விளக்கம் கூறுகையில் அதன் பொருள் மற்றவருக்கு விளங்க வைப்பது என் கடமை . .
    அது அவருக்கு புரிய வில்லை என்றால் நான் தானே மேலும் விளக்கம் கொடுக்க வேண்டும்..!
    அல்லது நான் தானே வெட்க பட வேண்டும். .!
    எதிரில் இருக்கும் நபரல்லவோ. . ?!?
    ஆசிரியரோ அல்லது சொற்பொழி ஆற்றுபவரோ எவெரேனும் சொல்ல வந்ததை தெளிவு படுத்த வில்லையெனில் நாம் அவரை தான் குறை கூறுவோம் . . மட மக்கு நபர்கள் தனி..!

    இப்பொழுது தோழியின் கதைக்கு வருவோம்.. .
    ஹ்ம்ம் ...
    இதை போல் உன் தங்கை கூறுவது உனக்கு புரிய வில்லை எனில் யார் வெட்க பட வேண்டும். . ? அவளுக்கு தமிழ் மொழி தெரிந்தும் வேறு மொழியில் பேசினால் யார் பிழை . . ?!?!
    உனக்கும் தாய் மொழி தமிழ் .. அவளுக்கும் அதுவே. . .
    பின் என் வேறு மொழி . .?!
    அவளது தற் பெருமைக்காக வேறு மொழி பேசினால் அவளுக்கு தான் அசிங்கம் . . உனக்கல்ல ...!!!

    அவளும் தமிழ் மொழி எண்ணி தாழ்வு கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் சென்றாள் . . . எனக்கும் அந்த மகிழ்ச்சியை கொடுத்து கொண்டு ..!
    தோழி,
    மொழி என்பது வெறும் கருவி என்று அழகாக தாய் தமிழ் மொழியின் பெருமையை உங்கள் தோழிக்கு உணர்த்தினீர்கள். அருமை!!

    thenuraj, sumitra, gkarti and 1 others like this.

  5. #35
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Sudha sis @sbsudha,
    தமிழ் மகள் உங்கள் படைப்பில் துள்ளி விளையாட அவள் பேறு பெற்றாளோ அல்லது நீங்கள் தான் பேறு பெற்றீர்களோ?
    Dear Rathi,
    Mikka Nanri thozhi.


  6. #36
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tamil New Year Contest - 2015!!

    தமிழை தாய்மொழியாக பெற்றதால் கர்வம் கொள்ள வைத்த சம்பவங்கள் நிறைய உண்டு தான் என்றாலும் அவற்றுள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆசை!!



    ~~ உலகில் உள்ள ஆறாயிரத்துக்கும் மேலான மொழிகளுக்கு மூலமொழியாக விளங்கும் ஆறு மொழிகளில் தமிழும் ஒன்று அதை நினைத்து பெருமை!



    ~~ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த மொழி புகழ்பெற்ற திருக்குறள், இலக்கியங்கள், காப்பியங்கள் எல்லாம் இன்றும் மற்ற நாட்டு மக்களால் மொழிப் பெயர்க்கப்பட்டு படிக்கப்படுவதில் பெருமை!



    ~~ தமிழர்களின் கட்டிடக்கலையை பார்த்து வியப்பு. எந்தவொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலத்திலேயே கட்டப்பட்ட நம் ஊர் கோவில்களை பார்க்கும் போதெல்லாம் அளப்பரிய கர்வம் கொள்வேன் அதிலும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய வரலாற்றை படித்ததில் இருந்து, நான் தமிழச்சி என்று தலை நிமிர்ந்து கர்வமாக சொல்லிக்கொள்ள பெருமை!!



    ~~ தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பார்த்து வெளிநாட்டினர் வியக்கும்போதும் ஒருசிலர் அதை பற்றி எங்களிடமே கேட்கும்போது.., நம் வரலாற்றை நாள் முழுக்க பேசி.. அதை அவர்களும் பொறுமையாக கேட்கும்போது நான் அடையும் கர்வத்திற்கு அளவே இல்லை!!



    ~~ தமிழ்வழிக் கல்வி பயின்று இன்று உலக புகழ்பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை -- வெற்றி பெற்ற சந்திராயன் திட்ட இயக்குனர் தமிழராய் இருப்பதில் கர்வம்!!



    ~~ இந்திய நாட்டின் பெருமைமிக்க மரியாதைக்குரிய பதவிகளில் ஒன்றான ஜனாதிபதி பதவியை சில காலம் அலங்கரித்த அப்துல்கலாம் எனும் தமிழரை நினைத்து கர்வம்!



    ~~ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய a.r. ரகுமான் எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற பொழுது அளவில்லாத பெருமை கொண்டேன். மயிர் கூச்செறிய உடல் சிலிர்க்க இருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றேன்.



    ~~ உத்தரகண்ட் எம்.பி தருண் விஜய் தமிழின் பெருமை உணர்ந்து தமிழுக்காக குரல் கொடுப்பதில் . தமிழை நினைத்தும், தமிழனாய் பிறந்ததை நினைத்தும் கர்வம் கொண்டேன். எங்கிருந்தோ வந்தவன் என் தமிழை" பேசுவதிலும், அதற்காக குரல் கொடுப்பதிலும். இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்க, தமிழ் அவரை கவர்ந்ததை நினைத்து பெருமிதம் கொண்டேன்.



    ~~ இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு தமிழை விருப்ப பாடமாக படித்து தேர்ச்சி பெற்று மக்களால் போற்றப்படும் ஒரு சிறந்த ஆட்சியரான இறையன்பை.., டிவியில் பார்க்கும் போதெல்லாம் பெருமையாக இருக்கும். இவரை போல தமிழில் படித்து வெற்றி பெற்ற பல சாதனையாளர்களை நினைத்தும் கர்வம் தான்!!



    ~~ சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் அலுவல் மொழியாக இருப்பதிலும் கர்வம் கொள்கிறேன்.



    ~~ கடைசியாக இது கொஞ்சம் அல்பமாக தோன்றினாலும் உண்மை இதுதான்! பிறமொழி பேசும் நடிகர் நடிகையர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது, தமிழில் பேசினால் தான் மக்களை கவரமுடியும் என்பதற்காக வணக்கம் என்று கொச்சை தமிழில் பேசினாலும் அதுவும் அழகே!! அவனை/ளை தமிழ் பேச வைத்து விட்டோம் என்பதில் கர்வம்!!



    ~~ தமிழை பேசி தமிழை கேட்டு தமிழ் தமிழ் என வாழ்வதில் பெருமை!




    இன்னும் நிறைய பேசிக்கொண்டே இருக்கலாம் ஆனால் அது நீண்டுக்கொண்டே போகும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.



  7. #37
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tamil New Year Contest - 2015!!

    ஹாய் ரதி @RathideviDeva

    சூப்பர்...... உங்கள் கருத்துக்களை அழகா அள்ளி தெளிச்சு இருக்கீங்க...! கலக்கிட்டிங்க....!

    உங்கள் கருத்துக்களோடு அநேக இடங்களில் நானும் ஒத்துப் போகிறேன்...!!

    Geetha A, malbha, sumitra and 2 others like this.

  8. #38
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tamil New Year Contest - 2015!!

    அழிந்து வரும் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் மீட்க…!!


    ~~ இதற்கு முதலில் மக்கள் தான் முன்வர வேண்டும்… தங்கள் பிள்ளைகளை தமிழ்மொழி கல்வியில் படிக்க வைக்க வேண்டும்… ஆங்கிலத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை கொஞ்சம் தளர்த்தி…, தமிழையும் புகுத்த வேண்டும். ஆங்கிலம் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்ற நிலை ஏற்கனவே உருவாக்கி விட்டது… அதை இனி தவிர்க்க முடியாது… ஆனால் அதற்காக நம் தாய்மொழியை விட வேண்டாமே…!!


    ~~ இன்று எவ்வளவோ டொனேஷன் கொட்டிக் கொடுத்து பெரிய பெரிய பள்ளிகளில்ஆங்கில வழிக்கல்வியை படிக்க வைக்க விரும்பும் மக்கள் தான் அதிகம்..! தங்கள் பிள்ளைகள் “மம்மி" என்றும் “டாடி” என்று அழைப்பதில் பெருமை கொள்பவர்கள்…, சிறிதேனும் சிந்தித்து பார்க்க வேண்டும்… பிறந்த குழந்தை முதலில் பேசும் சொல் “அம்மா" -- அந்த புனிதத்தை.. உணர்வினை அனுபவித்தவர்கள் இன்று அதை மறந்தது ஏன்…?? எல்லா உறவு முறைகளையும் ஆங்கிலத்தில் அழைப்பதை விடுத்து.., அழகான தமிழில் அழைக்க பழக்கப் படுத்த வேண்டும். இன்று எத்தனை பிள்ளைகளுக்கு “சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை” என்ற சொற்கள் தெரியும்… ஈசியாக ஒரே வார்த்தை -- “ஆன்ட்டி & அங்கிள்" முடிந்தது… இதை தவிர்க்க வேண்டும். அழகான தமிழ் சொற்கள் இருக்க… ஆடம்பர ஆங்கிலம் ஏன்…?



    ~~ இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் மட்டுமே தமிழ் வாழ்கிறது… அதை மாற்றி மற்ற பள்ளிகளிலும் தமிழை புகுத்தலாமே…! பாடத் திட்டத்தில் வெறும் இரண்டாவது மொழியாக இல்லாமல்.., முதல் மொழியாக கொண்டு வரலாமே…!!



    ~~ தமிழர்கள் கூடி பேசும்போது தமிழிலேயே பேசலாம்… அதை தவிர்த்து ஏன் இந்த ஆங்கில மோகம்..?? அலுவலங்களில் கூட பிறமொழி பேசுபவர்கள், அவர்கள் மொழியில் தான் பேசுவார்கள்… ஆனால் நம் தமிழ்காரர்கள் மட்டும் தான் தமிழில் பேசுவதை கேவலாமாக நினைத்து ஆங்கிலத்தில் பேசுவது… அதை தவறு என்று உணர்ந்து திருந்தினால் இன்று தமிழ் எங்கோ நிற்கும்..!



    ~~ தமிழில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கலாம்… அவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கலாம்..!



    ~~ முக்கியமாக தொலைக்காட்சிகளில் தமிழை கொலை செய்யும் ஆட்களை நீக்க வேண்டும்… நுனிநாக்கு ஆங்கிலத்தில் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொண்டு… நடுநடுவே தமிழை கொலை செய்பவர்களை கொலையே செய்தாலும் தகும்…!! தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் கலந்துரையாடலுக்கும், விவாதங்களுக்கும் வந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து தமிழில் பேசட்டும்… தமிழ் நிகழ்ச்சி, பார்ப்பவர்கள் தமிழ் மக்கள், ஒளிப்பரப்ப படுவது தமிழ்நாட்டில்… பிறேகேன் ஆங்கிலம்…??



    ~~ தமிழுக்கு முன்னுரிமை கொடுங்கள்… தமிழில் பேசுங்கள்… தாய்மொழியை கேவலமாக… அதில் பேசுவதை கௌரவ குறைச்சலாக நினைக்காதீர்கள்…!



    ~~ என்னதான் ஆங்கிலத்தில் பேசி.. கலந்துரையாடினாலும்.. நாம் சொல்ல நினைத்ததை சரியாக… சரியான அர்த்தத்தில் சொல்ல நம் தாய்மொழியால் மட்டுமே முடியும்…! அதை உணருங்கள்…!!



    ~~ ஆங்கிலம் தேவை தான்… ஆனால் அது மட்டுமே முக்கியமும் இல்லை.. தேவையும் இல்லை…. நம் வாழ்வில் அது ஒரு பங்காக மட்டுமே இருக்க வேண்டும்… அதுவே வாழக்கையாகி விட கூடாது..!




    கலாச்சாரத்தை காப்பாற்ற:-


    ~~ நம் கலாச்சாரம் உடை,பழக்க வழக்கங்கள், விருந்தோம்பல் -- இதெல்லாம் எங்கே போனது என்றே தெரியாத நிலைதான் இன்று…! முதலில் அதை காப்பற்றுவோம்…!


    ~~ நம் முன்னோர்கள் கட்டிக் காப்பாற்றி வந்த எத்தனையோ பழக்கங்களை நாம் நமது வசதிக்கேற்ப மாற்றி விட்டோம்… மீண்டும் அதை கொண்டு வருவோம்..!! அழிந்து போன பழக்க வழக்கங்களை திரும்ப கொண்டு வந்தாலே போதும்..! கலாச்சாரம் காப்பாற்றப்படும்…!



    ~~ நமது பண்டைய நினைவு சின்னங்களையும், புராதான சின்னங்களையும், பழம்பெரும் கோவில்களையும் அழிந்து விடாமல்… புணரமைத்து, சரியான முறையில் போற்றி பாதுகாத்தாலே நம் தமிழின் பெருமை அழிக்கப் படாமல் காப்பாற்றப்படும்…!



    ~~ நாகரிக மோகத்தில் மூழ்கி தங்களை தொலைக்காமல்… கொஞ்சமேனும் நம் மூத்தோர் சொல் கேட்டு நடந்தாலே கலாச்சாரம் அழியாது…!!



    சில விஷயங்களை நேரடியாக நெற்றியில் அறைந்தார் போல சொல்ல முடியாமல்… மறைமுகமாக சொல்ல வேண்டியிருக்கிறது…! ஆனாலும் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன்… எல்லாருக்குமே புரியும் என்று நம்புகிறேன்…!


  9. #39
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  10. #40
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tamil New Year Contest - 2015!!

    ஹாய் சுதா க்கா @sbsudha

    ரொம்ப அழகா தெளிவான தமிழில் சொல்லி இருக்கீங்க...
    எப்படி இருக்கீங்க.... ரொம்ப பிஸியா... முடியும்போது கதை தருவேன்னு சொன்னீங்க க்கா... அதுக்காக waiting.

    sbsudha, malbha, sumitra and 1 others like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter