Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


 1. #51
  kaethies's Avatar
  kaethies is offline Friends's of Penmai
  Gender
  Male
  Join Date
  Jun 2011
  Location
  Vavuniya, Srilanka
  Posts
  307

  Re: Tamil New Year Contest - 2015!!

  தமிழனாய் பிறந்ததற்காய் ஒவ்வொரு கணமும் பெருமை கொள்கின்றேன்
  உலகின் முதல் மொழி என் மொழி
  பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்பும் தன் சீரிளமை குன்றாது அதே இலக்கண இலக்கிய வனப்புடன் மின்னுகின்றாள் என்தாய்
  ஆரியம் காலனிடம் தோற்றுப் போய் எழுத்துக்களில் மட்டுமாய் தன்னை மறைந்து கொண்டது என் தாயோ அக்காலனையே தோற்கடித்து அமரத்துவம் பெற்றுவிட்டாள்
  தன்னை அழிக்க வந்த சக்திகளாலேயே அவள் தன்னை வளப்படுத்திக் கொண்டாள்


  ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
  ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
  வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
  மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

  மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
  மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
  ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
  ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்

  மகாகவி சுப்பிரமணிய பாரதி


  என் மொழி போல இலக்கண வளம் மிகுந்த மொழி வேறில்லை உலகில் முதல் மொழி இலக்கணம் கண்டது என் மொழியே
  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கம் வைத்து வளர்க்கப்பட்டது என் மொழி
  ஐம்பெரும் காப்பியங்களால் அலங்கரிக்கப்பட்டது என் மொழி
  புறநாநூறு படித்தால் கோழையும் வீரனாவான்

  அகநாநூறு படித்தால் பேடியும் காதல் கொள்வான்

  கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
  காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
  தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
  தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

  சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
  தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
  நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
  நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

  நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
  நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
  சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
  சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

  கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
  காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
  என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
  யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!

  தந்தை அருள்வலி யாலும்-முன்பு
  சான்ற புலவர் தவவலி யாலும்
  இந்தக் கணமட்டும் காலன்-என்னை
  ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.

  மகாகவி சுப்பிரமணிய பாரதி

  என்தாய் காணாத துயரமுமில்லை அவள் எட்டாத சிகரமுமில்லை ஏனெனில்
  உயிரையும் உறவையும் தொலைத்து
  தசைகளும் நரம்புகளும் சேர்ந்த
  இரத்தச் சேற்றில் அமிழ்ந்தே போனாலும்
  தமிழன் என்ற உணர்வை விடாத
  பிள்ளைகளை பெற்றவள் அவள்

  அவள் தன் கடைசி மகன்
  சருகாகி வீழும் வரை என் தாயின்
  உயிரை அல்ல மயிரையும்
  பிடுங்க முடியாது..........!

  "தமிழன்டா"

  தமிழ் தாய் தனக்குள்ள ஒரே ஏக்கத்தை தன் சேய் பாரதியின் வார்த்தைகளால் பின்வருமாறு கூறினாள்

  இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
  ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
  கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
  கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

  "புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
  மெத்த வளருது மேற்கே-அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

  சொல்லவும் கூடுவ தில்லை-அவை
  சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
  மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
  மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

  என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
  இந்த வசையெனக் கெய்திட லாமோ?
  சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
  செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

  தந்தை அருள்வலி யாலும்-இன்று
  சார்ந்த புலவர் தவவலி யாலும்
  இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
  ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

  மகாகவி சுப்பிரமணிய பாரதி

  அந்த எக்கத்தையும் பாரதி வழியில் வந்த பல்லாயிரக்கணக்கான அவள் பிள்ளைகள் தீர்த்து வைத்தனர்
  இன்று தமிழ் இல்லாத இடமுமில்லை
  தமிழன் வாழா நாடுமில்லை
  இணையத்தில் ஆங்கிலத்திற்கு நிகரான பயன்பாடுள்ள மொழிகளில் ஒன்றாக தமிழும் விழங்குகின்றது
  தமிழ்தாயை காத்திட விரும்பினால் பாரதி சொன்னது போல நீங்கள் அறிந்த அயல் மொழியின் அறிவுச் செல்வங்களை நம் மொழிக்கு கொண்டு வந்து அவளை மேலும் அலங்கரிக்க உதவுங்கள்


  ஊணின்றி வாடினும்
  உணர்வுகள் சாகினும்

  பாரெல்லாம் போற்றிட
  கலை வளர்ப்போம்
  கலை வளர்த்து
  நம் தமிழ் வளர்ப்போம்

  எதை இழந்தாலும் தமிழன் என்ற திமிரை இழவோம்


  Sponsored Links
  Last edited by kaethies; 29th Apr 2015 at 02:24 AM.
  Penmai, sbsudha, Geetha A and 11 others like this.
  அன்புடன்
  கேதீஸ்
 2. #52
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by saveetha1982 View Post
  ஹாய் தேனு, ரொம்ப அழகான பதிவு... உங்ககிட்ட இதை நான் எதிர்பார்த்தேன்... தஞ்சை பெரியகோவில் பத்தி நீங்க கண்டிப்பா சொல்லுவீங்கன்னு நினைச்சேன்... சொல்லிட்டீங்க... சூப்பர்... இது போல இன்னும் ஏராளமான கோவில்கள் பேசப்படாமலே போயிருக்கு... நம் கவனத்துக்கு வராமலும் போயிருக்கு... 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற ரஹ்மான், ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் இவர்கள் பற்றி கூறியிருந்தது ரொம்ப பிடித்தது... பலமுறை அவர்களை பற்றி எண்ணி எனக்குள்ளும் அந்த பெருமிதம் இருந்தது... சூப்பர் தேனு...


  தேங்க்ஸ் சவீதா....
  நிஜமாவே இன்னும் நான் அந்த பிரமிப்பில் இருந்து வெளியில் வரவில்லை சவி.... அதற்கு எழுத்துச்சித்தரின் எழுத்தும் ஒரு காரணம்....

  உண்மைதான் சவி.... நம் ஊர் கோவில்கள் எல்லாமே பிரமிக்க வைக்கிறது.... ஒரு கோவிலின் வரலாற்றை படித்து விட்டேன்... அதேபோல மற்ற எல்லா கோவில்களின் வரலாறும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.


 3. #53
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  கேதீஸ் @kaethies,
  நீங்கள் மேற்கோள் காட்டிய பாரதி கவிதையை கூட பல முறை நிறுத்தி நிதானமாக படித்தால் தான் புரிந்தும் கொள்ளும் நிலையில் என் தமிழ் அறிவு உள்ளது. இதற்காக நான் வெட்கப்பட வில்லை . கற்றுக்கொள்ள காலங்கள் கைவசம் இருக்கும்போது எனக்கு கவலை இல்லை.


  "புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
  மெத்த வளருது மேற்கே-அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை"


  நாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பஞ்ச பூதங்கள், பிரபஞ்சம், வான சாஸ்திரம் பற்றி நம் நூட்கள் சொல்லிவிட்டன. எதை பாரதி ,நாம் மேற்கே இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.


 4. #54
  kaethies's Avatar
  kaethies is offline Friends's of Penmai
  Gender
  Male
  Join Date
  Jun 2011
  Location
  Vavuniya, Srilanka
  Posts
  307

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by RathideviDeva View Post

  நாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பஞ்ச பூதங்கள், பிரபஞ்சம், வான சாஸ்திரம் பற்றி நம் நூட்கள் சொல்லிவிட்டன. எதை பாரதி ,நாம் மேற்கே இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.
  "சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்

  தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்"

  என்ற வரிகள் முலம் பாரதி நம்முடைய அறிஞர்களின் படைப்பாற்றலை குறிப்பிட மறக்கவில்லை

  "புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
  மெத்த வளருது மேற்கே-அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

  சொல்லவும் கூடுவ தில்லை-அவை
  சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
  மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
  மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

  இது பாரதியின் எண்ணப்போக்கல்ல யாரோ ஒரு பேதையின் கருத்து

  எனவேதான் தாயின் கட்டளையாக அவன் எழுதிடுவான்

  என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
  இந்த வசையெனக் கெய்திட லாமோ?
  சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
  செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

  தமிழ் மொழியானது பிற மொழி படைப்புக்களை தன்னகத்தே ஈர்த்துக் கொள்வது புதிய வடயமல்லவே கம்ப ராமாயணமும் வில்லி பாரதமும் வேறு மூலங்களிலிருந்தே உதித்தது உண்மைதானே

  மேலும் அவன் மேற்கிடமிருந்து மட்டும் அறிவுச் செல்வத்தை பெற வேண்டவில்லை எட்டுத்திக்கிலுமுள்ள அறிவியல் கலைச் செல்வங்களை தமிழிற்கு கொண்டுவருமாறு சொல்கிறான்

  சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
  செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

  மேற்கின் விஞ்ஞானத்திற்கு நிகரான அறிவியல் வெகுகாலத்திற்கு முன்னரே காலத்திற்கு காலம் வெவ்வேறு மொழிகளில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளன

  நமது மொழி இத்தனை ஆயிரம் ஆண்டுகள் செளிப்புற்றிருக்க இதுவே பிரதான காரணம் என கருதுகின்றேன்

  காலத்திற்கேற்ற மாற்றத்தை காட்டிட முடியாத பல மொழிகள் இதனால்தான் அழிந்து போயின

  Last edited by kaethies; 29th Apr 2015 at 04:11 AM.
  அன்புடன்
  கேதீஸ்
 5. #55
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  விளக்கத்திற்கு நன்றி @kaethies. பாடலை சரியாக/ முழுமையாக படிக்காமல் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு கேட்டுவிட்டேன். திரும்ப திரும்ப படிக்கும் போது கொஞ்சம் புரிகிறது.

  thenuraj, sumitra, gkarti and 1 others like this.

 6. #56
  kaethies's Avatar
  kaethies is offline Friends's of Penmai
  Gender
  Male
  Join Date
  Jun 2011
  Location
  Vavuniya, Srilanka
  Posts
  307

  Re: Tamil New Year Contest - 2015!!

  @RathideviDevaஉங்களுக்கும் நன்றி சகோதரி ஒரு ஆழமான அறிவார்ந்த கருத்தாடலுக்காக.......
  இத்துடன் ஒரு எனது சிறு கட்டுரை ஒன்றினை இணைத்துள்ளேன்
  நன்றி

  Attached Files Attached Files
  jv_66, dania, thenuraj and 4 others like this.
  அன்புடன்
  கேதீஸ்
 7. #57
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  Re: Tamil New Year Contest - 2015!!

  அருமையான தலைப்பு ....கலக்குங்கள் friends..
  வாழ்த்துக்கள்.....

  thenuraj, sumitra, gkarti and 1 others like this.


  நளினி 8. #58
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by kaethies View Post
  @RathideviDevaஉங்களுக்கும் நன்றி சகோதரி ஒரு ஆழமான அறிவார்ந்த கருத்தாடலுக்காக.......
  இத்துடன் ஒரு எனது சிறு கட்டுரை ஒன்றினை இணைத்துள்ளேன்
  நன்றி
  இன்று என்னால் இதற்கு மேல் கருத்தாழமிக்க கட்டுரைகள் படிக்க இயலவில்லை. நாளை படித்துவிட்டு என்னுடைய கருத்துடன் வருகிறேன், சகோதரரே.

  sumitra and gkarti like this.

 9. #59
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: Tamil New Year Contest - 2015!!

  வணக்கம் அனைவருக்கும்!

  நான் தமிழன்/ தமிழச்சி என்றெண்ணி பெருமை கொள்ளும் தருணங்கள் வீதியில் வரும் திருப்பங்கள் போல! வந்து கொண்டே இருக்கும்!

  நான் புரிந்து கொள்ளும் வயதுக்கு வந்தபோது அப்பா தமிழைப்பற்றி தந்த அறிமுகத்தில் ஆரம்பித்தது அது! இத்தனை ஆண்டுகள் பழமையான மொழி, என் அப்பா எனக்கு தந்ததை நான் உனக்கு தருகிறேன் என்று சொன்னபோது நான் என்னப்பா செய்யவேண்டும்? என்று கேட்டேன், எதுவுமே செய்யாமல் ஒப்படைக்க வேண்டியவர்களிடம் அப்படியே கொடுத்தாலே போதும் என்று சொன்னார் அப்பா!

  உலகப்பொதுமறையென திருக்குறள் கற்கும் போது, தமிழ்த்தாயின் ஐந்து ஆபரணங்களாம் ஐம்பெரும் காப்பியங்களையும் அறிந்த போது, ஒளவையின் பாடல்களை கற்ற போது பழைய மன்னர்கள் வரலாறுகளை கேட்டபோது விஞ்ஞானம் காலம் கடந்து அறிந்தவைகளை நம் முனிவர்கள், பழந்தமிழ் அறிஞர்களின் பாடல்களில் கண்ட போது, தமிழின் சாதனையாளர்களை பற்றி கேள்விப்படும்பொழுது அந்த தமிழன்னைக்கு நானும் மகளென பிறந்தேன் என்று புல்லரித்து போயிருக்கிறேன். இன்னும் போய்க்கொண்டே இருக்கிறேன்.
  சிறுமியென நான் வளரும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் கலை கலாச்சார, கட்டுமான சிறப்புக்களை அறியக்கிடைத்தபொழுதுகளை சிறப்பாக சொல்லலாம்.

  கொஞ்சம் வளர்ந்ததும் தற்கால இலக்கிய ஆசிரியர்கள் கதாசிரியர்கள் வர்ணனையில் கொஞ்சும் குமரியாக அவளை கண்டு ரசித்து காதலிக்க ஆரம்பித்தேன். சாண்டில்யன் வர்ணனைகளில் தமிழன் வீரத்தோடு இணைந்து, மன்னர்களின் கனவுக்கன்னி போல், கல்கியின் மொழிகளில் சேலை கட்டி என்னை கிறங்கடித்தவள் பின்னாளில் சுஜாதா கைகளில் நாகரிக மங்கையாக என் மனம் மயக்கினாள். பெயர் சொல்ல ஆரம்பித்தால் நீண்டு கொண்டே போகும், அத்தனை ஆசிரியர்கள் அத்தனை வேடங்களை அந்த சிங்காரிக்கு வழங்கி என்னை கனவுலகில் சிதறடிக்க வைத்தனர். ஒவ்வொரு புத்தகத்தின் முடிவிலும் என் தமிழ் என்ற அந்த உரிமை உணர்வும் பாரதியின் மொழிகளும் என்றும் என்னிடம் துளிர்க்கும்.

  யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!

  என் பதினான்காவது வயதில் என் மனம் மயக்கிய மங்கைக்கு முதலாவது காதல் கடிதத்தை எழுதினேன்! அதாங்க கவிதை! என் கவிதைக்கு முதல் ரசிகை எப்போதுமே நான் தான். மனதில் படும் எண்ணங்களை வார்த்தைகளை கோர்த்து தட்டி செதுக்கி மாலையாக்கி மீண்டும் சரி பார்க்கும் போது உண்மையை விட பலமடங்கு அழகாய் அந்த மாலை ஜொலிக்குமே! அந்த உணர்வை அனுபவித்து பார்த்திருக்கிறீர்களா? பேரானந்தம் என்பது அதுதாங்க! என் செல்லத்தமிழ் ஒன்றினால் மட்டுமே அது முடியும்! உலகின் எந்த மொழியாலும் இத்தனை சுவையை கொடுக்கவே முடியாது! தமிழச்சிடா! ஹ!! என்ற பெருமித தருணங்கள் அவை!

  இன்னும் கொஞ்சம் வளர்ந்த போது உற்ற நண்பன் என்ற நிலைக்கு என் தமிழ் மாறியது! இன்னொரு மொழியோடு விரும்பியோ விரும்பாமலோ போட்டியிட நிர்பந்திக்கப்பட்டோம். ஒற்றை தமிழன் எதிலேனும் ஜெயித்தாலும் நெஞ்சை நிமிர்த்தி கொண்டாடும் மனநிலைக்கு மாறினோம். ஒற்றை தமிழனின் வேதனைக்கு மொத்த தமிழர்களும் கண்ணீர் விட்டோம்!

  தமிழனாய் பிறந்தது குற்றமா? தமிழன் என்ற பெயருக்காக எம் தமிழுக்காக இத்தனை வேதனைகளையும் அனுபவித்தோம் உற்ற நண்பனுக்காய் உயிரை கொடுப்பது போல், தமிழின் மேல் அதிக உரிமை கொண்டது போல், துன்பத்தின் போது விலகி ஓடாத நண்பனின் மேல் நட்பு அதிகமாகும் அல்லவா? தமிழ் இன்னும் என் மனதோடு இறுகிப்போனது! போகட்டும் அதை விடுங்கள்

  நண்பன் என்பது துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் துணை அல்லவா? நான் கற்றது இன்னுமொரு மொழி பேசும் பிரதேசத்தில். அவர்களை கோபமூட்டவும் சிரித்துக்கொண்டே அவர்களை திட்டவும் விரிவுரை மண்டபத்தில் துண்டுசீட்டாகவும் வேண்டுமென்றே தவறாக கற்றுக்கொடுக்கவும் நாங்கள் உபயோகிப்பது தமிழே! அங்கெல்லாம் எங்கள் சிரிப்புக்களில் நண்பனாய் கலந்து நின்றிருக்கிறது தமிழ்!

  வெறும் காகிதத்திலேயே இவ்வளவு சுவை இருந்தால் இசையோடு சேரும்போது என்ன ஆகும்! ரஹ்மானில் ஆரம்பித்துத்தான் நான் இளையராஜாவுக்கு சென்றேன். இரவுகளில் என்னோடு இருப்பதால் என் மனைவி என்று சொல்லலாமா? முக்கியமான தருணம் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். மற்ற மொழி பிரதேசம் ஒன்றில் பஸ் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். கசமுசா என்ற பைலா சத்தங்களுக்கு இடையில் திடீரென்று காதல் ரோஜாவே ஹம்மிங் வந்தது. அவ்வளவு அமைதியாகிவிட்டது பஸ்! இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து வேண்டுமென்றே வரிகளை முணுமுணுத்து தமிழிச்சிடா என்று காட்டிக்கொண்டது பசுமையாய் நினைவிருக்கிறது! ஹா ஹா இசைப்புயல் ஆஸ்கார் மேடையில் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று சொன்னபோது புல்லரிக்காத தமிழன் ஒருவன் இருக்க முடியுமா? தமிழிசை என்ற மனைவியை இறக்கும் போதும் பிரிவேனோ என்னவோ?

  வளர்ந்து முடித்து இருபதுகளின் பிற்பகுதியை தொட்டிருக்கிறேன். பேசத்தொடங்கும் குழந்தைகளின் வாயில் தமிழை திருத்திக்களைத்து என் வருங்கால சந்ததியிடம் தமிழை அவர்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்காத வகையில் எவ்வாறு வளர்த்தெடுக்க போகிறேன் என்று வருத்தமாய் எண்ணிய இந்த வருடத்தின் ஒரு நாளில்தான் புரிந்து கொண்டேன், அம்மா, காதலி, நண்பி , மனைவியாய் தமிழ் எனக்கு இருந்தது போய் இப்போது நான் தமிழுக்கு அன்னையாகி இருக்கிறேன் என்று! நினைக்கவே இனிக்கிறது! என் மழலை முதல் சொல்லை பேசும் போது ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களிலும் தமிழுக்கு அன்னையாகி பின் கண்டிப்பான பாட்டியாகி அப்படியே ஒருநாளில் இறந்தும் போவேன்.
  எப்படி எங்கே பெருமைப்பட்டேன் என்ற வரையறைகள் என்னிடம் இல்லை. என்னோடு உணர்வாய் இருப்பதை சுவாசம் போல இயல்பாய் நடப்பதை என் தமிழைக்குறித்த என் பெருமையை எப்படி சொல்வேன் நான். இப்போதும் கூட எழுதியதை திரும்பத்திரும்ப நானே படித்து தமிழேண்டா சொல்லிக்கொண்டு அடுத்த வேலைக்கு செல்லப்போகிறேன்! 10. #60
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: Tamil New Year Contest - 2015!!

  தமிழை தமிழின் கலை கலாச்சாரத்தை எவ்வாறு காப்பாற்றுவது?

  நாம் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில பயன்பாட்டை நிறுத்துதல் என்பது எங்கள் தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமமானது. தமிழ் மொழி மிக இறுக்கமான கட்டமைப்பை கொண்டது. வரும் காலம் கணனி மற்றும் விண்வெளி யுகமாக இருக்கப்போகிறது. விஞ்ஞான சொற்கள் தமிழ் மொழியில் இல்லை. புதிதாக நாம் கண்டு பிடிப்பது கர்ண கொடூரமாக இருக்கிறது, நமக்கே புரிவதில்லை, கணனியின் கட்டளைகளை முற்று முழுதாக தமிழில் மாற்றும் போது நமக்கே ஒன்றும் புரியாமல் சிரித்து மகிழ்கிறோம்! காரணம் எம் தமிழ் கட்டமைப்பில் மிக கடினமானது. அதிகம் வேண்டாம் ஐஸ்கிறீமின் தமிழ்ச்சொல் குளிர் களி! எனக்கு ஒரு கோப்பை குளிர்களி கொடுங்கள் என்று எம்மாலேயே சொல்லிக்கொள்ள முடியாது! இது தமிழுக்கு மட்டும் உள்ள நிலை அல்ல. பண்டைய மொழிகள் அனைத்தும் இதே பிரச்னையை எதிர் நோக்குகின்றன. அதற்கு முற்று முழுதாக ஆங்கில மோகம் மட்டுமே காரணம் அல்ல மக்களே! தமிழின் நெகிழ்வுத்தன்மைகுறைவும் காரணம்! எம் சமுதாயத்திடம் தமிழை திணிப்பதற்கு முன் தமிழ் இந்த மாற்றங்களுக்கு உட்பட வேண்டும்! தமிழ் இப்படி ஆங்கில சொற்களை அரவணைக்க முயன்றால் தமிழ் தன் தனித்தன்மையை இழக்கும். நானே அதற்கு ஆதரவளிக்க போவதில்லை. அப்படியானால் தமிழை சாகவிட சொல்கிறாயா என்று கேட்கிறீர்களா?

  அப்படியில்லை.

  சமூகமே ஆங்கில மயம் ஆகும் போது என் குழந்தையை மட்டும் தமிழில் கல் என்று திணிப்பது அந்த குழந்தையின் வளர்ச்சியில் மனநிலையில் கல்வியில் பலவித தாக்கங்களை. தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். ஆகவே விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை படிகளையும் எவ்வழியிலாவது எம்மொழியிலாவது எம் சமுதாயம் கற்கட்டும்! அத்தனை மொழிகளிலும் விற்பன்னர்கள் ஆகட்டும். நாம் செய்யவேண்டியது இவைதான்.

  முதலாவது குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர்களை வைப்பதை மறக்கக்கூடாது.எட்டும் திக்குகளில் எல்லாம் நம் குழந்தைகள் எட்டித்தொடட்டும். விட்டு விடுங்கள். நம் தமிழன்னை பெயரால் அவர்களை எப்போதும் தடை செய்யாதீர்கள். உலக அரங்குகளில் அந்த குழந்தையின் தமிழ்ப்பெயர் ஒலிக்கும் போது தலை நிமிரப்போவது அவள் தான் நீங்களல்ல. இல்லையேல் நம் தமிழ் மேடைகளோடு அவர்கள் நின்று போவார்கள்.

  தமிழை கல்வியாக கொடுக்காதீர்கள். உணர்வு பூர்வமாக அவர்களது பெருமையான அடையாளமாக சுவாசம் போல நம் குழந்தைகளே உணர்ந்து செயல்படும் வண்ணம் பிறப்புரிமை என கற்றுக்கொடுங்கள். யூதர்கள் எப்படி யூதன் என்ற அடையாளத்தை கடத்துகிறார்களோ அதே போல ஆங்கிலம் பேசுவது இயல்பு ஆனால் தமிழ் தெரியாதிருப்பது அவமானம் என்று வெட்கப்படும் உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும்.

  வீட்டில் முடிந்தவரை தமிழில் பேசலாம் தமிழனை சந்தித்தால் தமிழில் பேசலாம். காலத்துகேற்றபடி எம் இலக்கியமும் கூடவே வளரவேண்டும். என்னை கேட்டால் அங்கேதான் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. என் கால இலக்கியங்களையும் படைப்புக்களையும் என் சந்ததி ரசித்து ஈடுபட வேண்டும் என்பது அடக்குமுறை. வாசிப்பு பழக்கம் அற்றுப்போய் விட்டது என்று கூச்சல் போடுகிறோம். காதல் கதைகளையும் வாழ்வியல் மற்றும் கிராமிய பெண்ணிய எழுத்துக்களை மட்டுமே கொடுத்த படி! அவைகளும் வேண்டியது தான். ஆனால் வீடியோ விளையாட்டுக்களின் வேகமும் மற்றும் புதிய தொழினுட்பங்களினுடைய அறிவும் கொண்டு மயக்கும் தமிழில் இன்றைய இளைஞர்களை கவர தமிழ் எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா? இப்போது? அப்படியே இருந்தாலும் இன்றைய தேதிக்கு இன்னும் புகழ் பெறவில்லை. காலமாற்றத்தோடு தமிழன் போட்டியிட வேண்டுமே தவிர தமிழ் மாறமுடியாது.
  ஆகவே இலக்கியத்தில் இளைய தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் எழுத்துக்களின் பிரயோகம் காலப்போக்கில் மறைந்து விடும்.

  ஆடைத்துறை எம் அடையாளத்தை காப்பதில் கொஞ்சம் முன்னே நிற்கிறது என்றே சொல்வேன். எங்கள் பாரம்பரிய உடைகளை இளைய தலைமுறையை கவரும் வகையில் புதிதாக தந்து கொண்டே இருக்கிறார்கள். சேலையை உடுத்திக்கொள்ள இலகுவாக இரண்டாக, ஒரு நிமிட சேலை என்று வித வித வடிவங்களில் அறிமுகப்படுத்தியதில் இப்போது விழாக்களில் பிற இனத்தோரை அவற்றோடு காண முடிகிறது. தமிழன் முன்னேற ஆரம்பித்தால் ஆங்கிலேயனை பின்பற்றுவது அடிபட்டு போய் விடும், உதாரனமாக இந்தியா வல்லரசானால் இந்திய கலாசாரம் உலக அரங்கில் பிரபலமாகும். விழா, வைபவம் எதுவாயினும் எந்த உலக அரங்காயினும் மேடை ஏற்றப்படும்போது கண்டிப்பாக தமிழ் உடை வேண்டும். அதை பெருமையாக அணியும் மனோ பாவம் வேண்டும். அலுவலக(formal) உடை என்றால் ஒரு தமிழனுக்கு வேஷ்டி, சேலை ஆக மட்டுமே இருக்கவேண்டும். சாதாரண உடை(casual) எதுவாகவேனும் இருந்து விட்டு போகட்டுமே!

  இங்கே ஒரு தமிழ் பிரதேசத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பார்த்து வியந்த இன்னொரு விடயம். ஒருதடவை அமெரிக்க பிரதிநிதியை அழைத்துபோன போது கூட்டத்தின் நடுவில் சிற்றுண்டி இடைவேளையில் அவர்கள் பரிமாறியது மோதகம் மற்றும் வடை! அந்த பிரதிநிதி மோதகத்தை ரசித்து உண்டுவிட்டு அதைபற்றிய விளக்கம் என்னிடம் கேட்க விநாயகர் முதற்கொண்டு அளந்து விட்டேன்! :D திரும்பி வந்தும் மோத்காம் என்று கேட்டு கொண்டிருந்தார்! விருந்தினர்களுக்கு நம் பாரம்பரிய உணவு மட்டுமே என்று நாமும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்! புதிய வடிவங்களில் பழைய உணவு வகைகளை மாற்ற முடியுமே! தமிழன் கண்டு பிடிக்காத சுவையும் ஒன்று இருக்கிறதா என்ன?

  இறுதியாக கலைகள்! தமிழனை அடையாளப்படுத்தும் இவற்றுக்கு சாகாவரம் வழங்கப்படவேண்டும். ஆசிரியர்கள், மற்றும் இசை நடனம் நாடகம் கூத்து, வாத்தியங்கள் போன்ற கலைகளை அருங்காட்சியகத்தை பராமரிப்பது போல அரசாங்கம் தமிழ்த்துறை மூலம் போஷிக்க வேண்டும். வருமானம் பிற துறைகளுக்கு சமமாக வழங்கப்பட வேண்டும். திரைப்படங்கள் மற்றும் வானொலி ஊடகங்கள் தார்மீக பொறுப்புடன் செயல்படவேண்டும். உங்கள் தனித்தன்மையை பிரதிபலியுங்கள். ஹாலிவூட்டில் செய்வதை காரண காரியம் புரியாமல் அப்படியே செய்வதுதான் முன்னேற்றமா?

  ஆங்கிலேயர்கள் சகல துறைகளிலும் முன்னேறிய ஒரே காரணம் தான் ஆங்கிலம் இவ்வளவு தூரம் ஊடுருவியமைக்கு காரணம். மக்களின் வாழ்வியலே மொழி. மொழி வாழவேண்டும் எனில் வாழ்வியல் மாற்றங்களை அரவணைக்கும் அதே வேளை தனித்தன்மையை இழக்ககூடாது. அந்த மக்கள் தலை நிமிர்ந்தால் மொழி தானாகவே தளைக்கும். தமிழ் சாகிறது என்றால் தமிழன் சுயமாய் செயல்படும் திறனை இழக்கிறான் என்று அர்த்தம் ஆகிறது. அது கண்டிப்பாக நடக்கபோவதில்லை. இந்த தலைமுறை மிக புத்திக்கூர்மையுடையதாய் இருக்கிறது. தமிழ் அவர்களது உரிமை, அடையாளம் என எம்மைப்போல் தமிழை நேசிக்கவும் காதலிக்கவும் கற்றுக்கொடுங்கள். சகல துறைகளிலும் அவர்கள் வல்லவர்கள் ஆக்குங்கள். தமிழன் என்ற பெயரால் உலக அரங்கில் அவர்கள் அறியப்படட்டும். தமிழ் எங்கள் பெருமை என்ற மனப்பாங்கை வளருங்கள். .
  ஆங்கிலத்தை களை எடுப்பதை இப்போதைக்கு நிறுத்தி முட்டாள் துவேசிகளையும் தமிழனை துண்டு போடும் சாதீய சமய புல்லுருவிகளையும் களையெடுப்போம். தமிழ் தானாகவே முடி சூடிக்கொள்ளும்.

  ஆற்றோட்டத்தில் ஆலமரங்கள் கூட கவிழ்ந்ததுண்டு நாணல்கள் மடிவதில்லை. அதற்காக அவை மீன்களாக மாறுவதும் இல்லை.

  தமிழை நேசிப்போம், காதலிப்போம், கொண்டாடுவோம்.

  தமிழ் என்றென்றும் வாழும்.

  நன்றி!
  (என் கருத்தை மட்டும் சொன்னேன். தவறிருந்தால் மன்னிக்கவும்!)loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter