Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


  1. #71
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Tamil New Year Contest - 2015!!


    தமிழ் எனது தாய்மொழி என்ற கர்வம் எனக்கு எப்போதும் உண்டு... எப்போதிருந்து எனக்கு தமிழை பிடிக்கும் என்று கேட்டால் தெரியாது என்பதே என் பதில்... பிறந்ததில் இருந்தே பிடிக்கும் என்று சொல்வது மிக பிடித்திருக்கிறது... சிறு வயதில் பள்ளியில் அய்யோ செய்யுள் படிக்க வேண்டுமே என்று மற்றவர்கள் கலங்கும் போது எனக்கு அது இனிப்பை தின்றது போல் இருந்தது...


    கம்பராமயாணம், சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்ற காப்பியங்களில் ஒரு பகுதியை மட்டுமே படித்த எனக்கு அதை முழுவதுமாக படிக்கும் அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது தமிழ் ஆசிரியை. கல்லூரி முற்றிலும் மறக்க முடியாதது பேராசிரியை தமிழ் வகுப்பு எடுக்கிறார் என்றால் முதலில் அமர்ந்திருப்பவள் நான், அவர் பாலை நிலத்து தலைவியை வர்ணிப்பதாகட்டும், போரில் கர்ணன் கொல்லப்படுவதாகட்டும் காட்சிகளை கண்முன்னே கொண்டு வரும் அளவுக்கு எடுத்துரைப்பார். என்னே என் தமிழின் அழகு என்று பெருமை கொண்ட நாட்கள் அவை.

    உலக பொதுமறையை எழுதிய எம் வள்ளுவனின் குறளில் நான் ரசித்தது நட்பை பற்றிய குறள்கள்...

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு

    எம் கம்பனின் கற்பனை திறன் எல்லையில்லாதது உதாரணம் பாருங்கள்...

    போருழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி
    வாரல் என்பன போல் மறித்துக்கை காட்ட

    பாண்டியன் கோட்டை மீது நாட்டிய வெற்றிக் கொடிகள், கண்ணகிக்கும், கோவலனுக்கும் விரைவில் வரப் போகும் துயரத்தை மனம் கொண்டு அவர்களை நோக்கி மதுரைக்கு வாராது நீங்குக என்பது போல் மறித்து ஆடின என்கிறார்.

    காற்றில் சாதாரணமாக ஆடிய கொடியை தன் கற்பனை சேர்த்து அவர் சொன்ன விதத்தை பாருங்கள்...

    அடுத்து நம் நையாண்டி புலவர் காளமேக புலவரை பற்றி தெரியுமா, அவர் நையாண்டியும் கற்பனை திறனும் அதீதமானது... தமிழை எப்படியெல்லாம் தன் வசப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்...

    கார் என்று போர்படைத்தாய் ககனத் துறும்போது
    நீரென்று பேர்படைத்தாய் நீள்தரையில் வந்ததற்பின்
    வாரொன்று மென்முலையாராய்ச்சியர்கை வந்ததற்பின்
    மோரென்று பேர் படைத்தாய் முப்பெரும் பெற்றாயே.

    வானத்தை அடையும்போது கார் என்று உனக்குப் பெயர். மழையாகப் பெய்து
    பூமிக்கு வந்தபின்னர் நீர் என்பது உனது பெயர். ஆய்ச்சியர்களின் கைகளிலே வந்த பின்னர் உனக்கு மோர் என்று; பெயர். ஆகமொத்தம் மூன்று பெயர்கள் உனக்கு இருக்கிறதே என்று அந்த மோரைப் பார்த்து பாடியிருக்கிறார். மோர் மிகவும் நீர்த்து இருக்கிறதாம் அதை கிண்டலாக ஒரு பாடல் கொண்டு பாடியிருக்கிறார் அவர்...

    தமிழ் செய்யுளும், காப்பியங்களும் தமிழ் பிடிக்க காரணமாயிருந்தது என்றால், தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் அதிக பிடித்தம் எனக்கு. தேனுவை போல எனக்கும் தஞ்சை கோயிலின் கட்டிடக்கலை மிகப் பிடிக்கும், இன்றைய கட்டிடக்கலை சவாலாக ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக எழுந்து நிற்கும் அக்கோயிலை கண்டு இன்றளவும் பிரமிப்பெனக்கு.

    ராமேஸ்வரம் கோவிலின் ஆயிரம் கால் மண்டபமும், நெல்லையப்பர் கோவிலின் இசைத் தூண்கள் போலவும், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய கோபுரம், கங்கை கொண்ட சோழபுரமும் தமிழனின் பெருமையும் கர்வமும் ஆகும். எங்கள் புரட்சிக்கவி பாரதி, அவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் புத்துணர்ச்சி கொடுக்கிறது, தமிழை எம் பாரதி எவ்வளவு நேசித்திருக்கிறான் என்று தெரிகிறது.


    அழிந்து வரும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மீட்டு எடுப்பது எப்படி?

    இது அரசாங்கத்தின் கடமை என்று நிச்சயம் ஒதுக்கி விட முடியாது, தமிழை காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. பேருந்தில் சென்று கொண்டிருந்தேன், இருக்கையில் இரு பெண்கள் அமர்ந்திருந்தனர், இருவருமே தமிழ் பெண்களே, ஆனால் பேசிக் கொண்டிருந்ததோ நுனி நாக்கு ஆங்கிலத்தில், என்ன கொடுமை இது.

    நன்கு தமிழில் பேசும் ஒருவரிடம் கூட ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழை நாம் எப்படி காப்பாற்றுவது... எங்கோ தூர தேசத்தில் கண்ணில் ஒரு தமிழனை கண்டுவிட்டால் வரும் ஆனந்தம் வாயில் வரும் தமிழ் பேச்சு, தமிழ் நாட்டிலேயே இருந்து கொண்டு உடனிருப்பவரிடம் கூட பேச தயங்குகிறதே ஏன்...

    மாற்றம் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும், நம்மிடம் இருந்த திருப்பதி கோவில் இன்று ஆந்திர அரசு எப்படி வைத்திருக்கிறது. நம் நாட்டில் எவ்வளவு கோவில்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் நம் தமிழக அரசு அதை பாதுக்காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... நம் கலாச்சார பொக்கிஷங்கள் கோவில்களே அவற்றை பாதுகாத்தால் தமிழனின் பெருமையை நாம் பாதுக்காக்கலாம்.


    வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு தமிழனின் பெருமையை தமிழின் பெருமையை பெற்றவர்களே ஊட்ட வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் நம் பெண்மை தோழி ரதியின் பதிவொன்று காக்கா முட்டை என்ற திரைப்படத்திற்கு சிறந்த விருதுகள் கிடைத்திருக்கிறது என்று. படம் பார்த்துவிட்டு அங்கிருந்தவர்கள் கைத்தட்டினார்கள் என்று அந்த பதிவை படிக்கும் போதே ஒரு பெருமை, அங்கிருந்த நம் தோழிக்கு சொல்லவும் வேண்டுமா...

    ஆங்கிலம் இப்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆங்கிலம் வெறும் முகப்பூச்சு மட்டுமே, ஆனால் தமிழ் நம் உடலோடு கலந்த உதிரம். அது நம் அகம், அகம் சரியாக இருந்தால் தான் நம் முகமும் அழகாகும்.

    பள்ளிகளில் தமிழை முதன்மை பாடமாக மாற்ற வேண்டும், ஆங்கிலமும், ஹிந்தியும் அடுத்தடுத்த இடத்திற்கு தள்ளப்படட்டும். அரசாங்கம் இதை ஒரு சட்டமாக இயற்ற வேண்டும். மேரியின் பதிவு தமிழ் கையொப்பம் பற்றியது எனக்கு அது பிடித்தது. வடமாநிலங்களில் இருக்கும் பெரும்பாலானோர் அவரவர் மொழிகளிலேயே கையொப்பம் இடுகின்றனர். நாமும் ஏன் அதை செய்யக் கூடாது. அழகு தமிழில் நம் கையொப்பம் இன்னும் அழகு பெறும்.

    எங்கோ ஒரு மூலையில் நம் தமிழனின் பெருமை இன்றளவும் பாராட்டப்பட்டு கொண்டேயிருக்கிறது. அதை நாமும் போற்றி பாதுக்காக்க வேண்டும், நம் அரசாங்கத்துடன் சேர்ந்து நாமும் அதை காப்போம்.




    Sponsored Links
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  2. #72
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    சவீதா @saveetha1982,
    நான் தமிழை இவ்வளவு ஆர்வத்தோடு படித்தேனா என்றால், இல்லை, என்பதே என் உண்மையான பதில். தமிழை இவ்வளவு ஆர்வத்தோடு படித்ததற்கு நீங்கள் மட்டுமே காரணமா அல்லது உங்கள் ஆசிரியருமா? ஆசிரியரும் காரணமென்றால், அந்த நல்லாசிரியருக்கு என் பாராட்டுக்கள்!!


  3. #73
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: Tamil New Year Contest - 2015!!

    தமிழ்! தமிழ்! தமிழ்!

    அனைவருக்கும் வணக்கம்,

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    தமிழைப் பற்றி எழுத சொன்னால் அது கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல்தான். ஆனால் அந்த சந்தோஷத்தை நொடியில் சாய்த்து விடுகிறது அழிந்து வரும் தமிழ் பண்பாடு மற்றும் மொழி போன்ற வார்த்தைகள். அது நடக்க கூடிய விஷயமா தோழமைகளே!!?

    நான் பிறந்து என் தாய் மடியில் தாய் பால் உண்ணும் பொழுதே எனக்கு என் தாய் தமிழையும் சேர்த்தே ஊட்டி விட்டாளே!! அது எப்படி சாகும் , நான் சாகும் வரை என்னோடு இருக்கும், நான் இறந்த பிறகு என் குழந்தைக்கும் நான் அதை ஊட்டி விட்டேனே மீண்டும் அது எப்படி சாகும்? இப்படியாக அது புனர் ஜன்மம் எடுத்துக் கொண்டே இருக்கிறது வாழ்க்கை முழுதும்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்;
    ----பாரதியார்
    இதைவிட ஒரு சான்று வேண்டுமா? என் மொழி இனிதுதான் என்று சொல்ல.

    தமிழால் நான் தலை நிமிர்ந்த நிமிடம்:

    ஃப்ரான்ஸ் நாட்டில் ஃப்ரென்ச் மொழியை படிக்கும் இடத்தில், எப்படி நாம் காலை வணக்கும் சொல்லுவோம் என்று ஒவ்வொருவரும் தங்கள் மொழிகளில் எழுதி கொடுக்க வேண்டும். நானும் நமது மொழியில் எழுதிக் கொடுத்தேன். ஒவ்வொருவராக படித்துக் கொண்டே வந்த ஆசிரியை தமிழ் மொழியையும் படிக்க சொல்லி கேட்டார். வ-- ண--க்--க--ம் என்று நான் சொன்னதை சொல்லி பார்த்த ஆசிரியர், மிகவும் வியந்தார் காரணம், எழுதும் எழுத்தும், பேசும் வார்த்தையும் ஒரே மாதிரியாக இருக்கிறது.எந்த ழுத்தும் மாறவில்லை.உச்சரிப்பும் ஒன்றாகவே இருந்ததே அதற்க்கு காரணம்.
    இதுதானே நம் மொழியின் பெரிய சிறப்பே.!! அடுத்த நாள் முதல் கதவை திறக்கும் பகுதியில் அனைவரது காலை வணக்கமும் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ் மொழி முதன்மையாக இருந்தது. ஒவ்வொரு காலையும் அந்த வார்த்தையை பார்க்கும் பொழுது நான் அடைந்த ஆனந்தத்திற்க்கும் , பெருமிதத்திற்க்கும் அளவே இல்லை. நம் நாட்டில் இருப்பது போலவே நான் உணர்ந்தேன். அந்த வணக்கத்தை நான் ஆசையாக தடவிப் பார்ப்பது சொல்லில் அடங்காத பேரின்பம்.
    தமிழன் என்று என்னை கர்வம் கொள்ள வைத்த நிமிடம்:

    ஒரு முறை எனது கல்லூரியும், பல்கலைக்கழகமும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதில் முப்பது மாணவர்களை தேர்ந்தெடுத்திருந்தது. 15 நாட்கள் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு இறுதியாக ராஷ்டிரபதி பவனில் திரு அப்துல் கலாம் அவர்களை பார்ப்பதாக இருந்தது. முப்பது மாணவர்களில் நிறைய மாணவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களும் அடங்கும். ஒவ்வொரு மாநிலமாக நாங்கள் சென்றோம். ஒவ்வொரு மா நிலத்திலும் நாங்கள் சந்தித்த மிகப்பெரும் பதவி வகித்தவர்கள் அனைவரும் தமிழர்களே. இதைவிட சிறப்பு அத்தனைப் பேரும் பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டியதுதான். இறுதியாக தில்லியில் நாங்கள் அந்த அக்னி சிற்கைக் கண்டோம். அவர் முன்னால்
    ஒளி படைத்த கண்ணினாய் வா!!... வா!!!..வா!!!
    உறுதிக் கொண்ட நெஞ்சினாய் வா...வா...வா!!!

    என்ற பாடலை பாடினோம். எங்களோடு சேர்ந்து திரு apj அவர்களும் பாடினார்கள். அந்த நிமிடத்தை இப்பொழுது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறது.

    தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா...

    என்ற வரிகள் எந்த சூழ்நிலையில் இயற்றப்பட்டதோ தெரியாது. ஆனால் அந்த நிமிடத்தில் அது எனக்காவே பாடப் பெற்றதாய் நான் நினைத்து கர்வம் கொண்டேன்.

    எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கிறது பெருமைக் கொள்ளவும், கர்வப் படவும். வெளிநாடுகளில் வாழும் மக்கள் மிகவும் ஆர்வத்தோடு நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பற்றி கேட்கும் பொழுது, நான் விவரிப்பேன். அப்பொழுது என்னையும் அறியாமல் என் முகம் 1000 வோல்டேஜ் வெளிச்சத்தை தரும். அத்தனை சந்தோஷமும், பெருமையும்.
    இன்னும் நிறைய எழுத ஆசை போதி தர்மன் முதல் நம் நாட்டு ரூபாய்களில் தமிழ் இடம் பெற்ற்து வரை, தமிழ் மொழி செம்மொழியானது முதல், திருக்குறள் ஜெர்மனியில் இயங்கும் இரயிலில் எழுதி இருப்பது வரை சொல்லிக் கொண்டே போகலாம்.


    யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
    வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;

    --பாரதியார்

    இன்னும் எத்தனை எத்தனைபேர் இந்த வரிசையில். பட்டியல் நீண்டு கொண்டே போகும்.


    தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீட்பது எப்படி?

    என்னைப் பொறுத்தவரை நாம் எப்பொழுதோ விழித்துக் கொண்டோம் அதனால் நாம் பயப்படத் தேவை இல்லை.
    மூன்றே மூன்று விஷயங்களை மட்டுமே நான் வழியுறுத்துகிறேன்.

    1. தாய்மொழியான தமிழை அவசியம் எழுதவும், படிக்கவும் முறையாக கற்றுக் கொள்வோம், நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்
    2. ஒவ்வொரு தமிழ் பண்டிகையும் தொலைக்காட்சியின் முன் மட்டும் கொண்டாடமல் , நம் வீட்டிலும் நாம் கொண்டாடுவோம். ஒவ்வொரு பண்டிகையின் சிறப்பை விளக்குவோம். நமக்கு தெரியவில்லையென்றாலும், நாம் கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்போம். கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நிச்சயம் காக்க முடியும்.
    3. கொஞ்ச நேரமாவது தமிழில் பேசுவோம். குழந்தைகளை பேச உற்சாகப்படுத்துவோம். தாய்மொழியில் தான் ஒழுங்காக சிந்திக்க முடியும். தாய்மொழியை சரியாக பயின்றுவிட்டால் மற்ற மொழிகள் ரொம்ப சுலபம்.

    முடிவாக எத்தனை ஜன்னல்கள் வேண்டுமானாலும் ஒரு வீட்டிற்க்கு இருக்கலாம், ஆனால் வாசல் என்பது ஒன்றுதான் இருக்க முடியும். அந்த வாசல் போன்றதுதான் தாய்மொழியாம் நம் தமிழ்மொழி.

    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழிய வே!
    வான மளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழிய வே!
    ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
    இசைகொண்டு வாழிய வே!

    ---பாரதியார்

    இன்னும் எத்தனை பேரழிவு வரினும் எம்தமிழ் மொழியும், இம்மண்ணின் பண்பாடும் இவ்வானமும், பூமியும் உள்ளவரை அழியாது. அது வாழ்வாங்கு வாழும்.

    வாய்ப்பிற்க்கு நன்றி!!

    வாழ்க எம்தமிழ்!! வாழ்க இவ்வையகம்!! வாழ்க வளமுடன்!!

    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  4. #74
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Tamil New Year Contest - 2015!!

    தமிழ் எனது தாய்மொழி என்ற கர்வம் என உணர்ந்த தருணம்....

    இது தான தோழிகளே தலைப்பு...

    முத நான் ஒன்னு சொல்லிக்கிறேன்... நான் தமிழ் பேசுறதே தோழிகளிடமும், பள்ளியிலும் போன்ற வெளியிடங்களில் தான். வீட்டில் நாங்கள் பேசும் மொழி வேறு. அதே போன்று நான் பயின்று வந்த பள்ளியும் மெட்ரிக் பள்ளி... அதனால் பள்ளியில் ஆங்கிலம் பேசுவோம்.

    நான் பல வித மேற்கோள்கள் சுட்டி காட்டி நான் படித்த வந்த தமிழை சொல்வதைக் காட்டிலும், நான் தமிழை உணர்ந்த தருணங்களை மட்டுமே சொல்ல நினைக்கின்றேன். நான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை. நான் உணர்ந்த தமிழை, அந்த என் கதையை உங்களிடம் பகிரவே வந்துள்ளேன்.

    பல்வேறு அறிஞர்கள் பாராட்டிய நம் தமிழ் மொழியை நான் அறிந்த விதத்தை கண்டு யாரும் கொலை வெறியகாதீர்கள் தோழிகளே. பாவம் சிறு பிள்ளை என பொறுத்தருளுங்கள்.

    நான் ஆங்கில வழி கல்வி பயின்றாலும், தமிழை ஒரு பாடமாய் பயின்றேன். எப்போதுமே ஒரு பாடம் பிடிக்க வேண்டும் எனில், அதை நடத்தும் ஆசிரியர்கள் சுவைப் பட நடத்த வேண்டும். எனக்கு சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. என் அம்மா தான் அதை என்னிடம் தோற்றுவித்தார். சிறு வயதிலேயே, கல்கண்டு வார இதழில் "லேனா தமிழ்வாணன்" அவர்கள் எழுதிய ஒரு பக்க கட்டுரை விரும்பி படிப்பேன்.

    இப்படி தான் நான் தமிழை படித்தேன். பள்ளியில் படிக்கும் தமிழ் எல்லாம், பரீட்சைக்காக படிப்பது தான். மற்றபடி லயிப்பு என்றெல்லாம் இல்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, எங்களுக்கு புதிதாய் வந்த தமிழ் ஆசிரியை பாடம் நடத்தினார்கள் பாருங்கள், அவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்தாலே, அப்படியே லயித்து, அதற்குள்ளே சென்று விடலாம். அதன் பின் ஒரு தடவை பாடத்தை வாசித்தால் போதும். எளிதில் படித்து விடலாம். அதன் பின் எங்கள் அம்மாவும், தமிழ் கட்டுரை எல்லாம் எழுதி தருவார்கள்.

    மேலும் நான் பத்தாம் வகுப்பு பயிலும் வரை, எனக்கு நான்கு திசைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் சொன்னால் மட்டுமே விளங்கும், தமிழில் கூறினால் எனக்கு புரியவே புரியாது. எத்துணை மனனம் செய்தும் ஏறவில்லை அப்போது.

    பின் உயர்நிலை படிப்பை ஒரு அரசு பள்ளியில் தொடர்ந்தேன். அந்த ஆங்கில வழி பள்ளியில் உயர்நிலை வகுப்பு இல்லாத காரணத்தால், இங்கு சேர்ந்தேன். தினம் அங்கு வரும் தமிழ் ஆசிரியை, முதல் ஒரு மாதத்திற்கு எங்களை எல்லாம் எழுப்பி நிற்க வைத்து, இவர்களுக்கு எல்லாம் தமிழ் படிக்க வராது. ஆங்கிலம் மட்டும் தான் படிப்பார்கள் என மட்டம் தட்டினார்.

    பின் அடுத்து வந்த தேர்வில், எங்கள் மதிப்பெண்களை பார்த்து, மெச்சிக் கொண்டார். அப்படி மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அதன் பின் தான் தமிழை லயித்து, உணர்ந்து நானாக படிக்க ஆரம்பித்தேன்...

    அதன் பின் கல்லூரியில் தமிழ் எனக்கு ஒரு துணை பாடம் தான். ஆயினும், எங்களுக்கு வந்த ஆசிரியர்கள் அனைவரும் அருமையானவர்கள், அவர்களின் செய்யுள் நடத்தும் பாங்கு தான், என் மனதில் தமிழை பற்றி, அதன் அழகை பற்றி நான் உணர்ந்தேன்.

    மேலும், இங்கு வந்த புதிதில் நான் எழுதும் கதைகளை படித்த சில பெண்மை தோழிகள் எல்லாம், நீங்கள் தமிழ் இல்லக்கியம் படித்தவரா, என்று கேட்பதில், நான் தமிழச்சி என்பதால் எனக்குள்ளே இயற்கையாகவே தமிழ் அறிவு இருக்கின்றது என்ற உணர்வு என்னை பெருமிதம் கொள்ள வைத்தது.

    மேலும், ரதிதேவி அவர்கள் எழுதிய "தமிழன் என்று நான் உணர்ந்த தருணங்கள்" பற்றி அவர் குறிப்பிட்ட அறிஞர்கள் எல்லாம் மேடை ஏறி நம் தமிழை பெருமை படுத்தும் போது, உள்ளுக்குளே ஒரு பிரவாகம் பொங்குமே, அந்த உணர்வு என்னை "நானும் தமிழ் இனம்" தான் என்ற பெருமையை உணர்த்தும்.

    Last edited by jash; 30th Apr 2015 at 11:36 PM.

  5. #75
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Tamil New Year Contest - 2015!!

    அழிந்து வரும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மீட்டு எடுப்பது

    எப்படி?


    இங்கு இந்த தலைப்பில் நிறைய வழிமுறைகளை நம் தோழிகளே சொல்லியிருக்கிறார்கள், அதனால் நான் அதை வழிமொழிந்து, சில கருத்துகளை மட்டும் பதிவு செய்கிறேன்.


    ஒரு மொழி அழிந்து வருகிறது என்றால், அதற்கு காரணம் மொழியை உபயோகப்படுத்தும் மக்களும், அம்மொழியை கொண்டுள்ள நாடும் தான் காரணம். ஏனெனில், உபயோகப்படுத்தும் மக்களே அதன் அம்சத்தை குலைத்து, பயன்பாட்டையும் குறைத்தால் தானாகவே அந்த மொழி மறைந்து விட கூடும். அதே போன்று நாடும் அவர்களின் மொழிக்கு முக்கியத்துவமும், முதல் உரிமையும் தர வேண்டும்.


    அதே போல் தமிழைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், அதை கடமையென எண்ணி பாடம் நடத்தாமல், நமக்கு கிடைத்த அரிய உயரிய பணி என்றெண்ணி, அவற்றை பிள்ளைகள் விரும்பும் வண்ணம் பயிற்றுவிக்க வேண்டும்.


    நான் பணிபுரிந்த பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்துவார், அவர் நடத்தும் செய்யுளை கேட்க கேட்க, "தேன் வந்து பாயுது காதினிலே" என்ற வாசகத்திற்கு ஏற்ப இருக்கும். அவர் தமிழை உச்சஸ்தாயில், ஏற்ற இறங்கங்களோடு உச்சரிக்கும் பாங்கே தனி அழகு... இதனால் அந்த பள்ளியில் எந்த வகுப்பிற்கும் அந்த தமிழ் அய்யா என்றால் உயிர், ஒரு முன்னோடி, உற்ற தோழன் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நாள் முழுக்க அவர் நடத்தினால் கூட கேட்பார்கள், உயர்நிலை கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட.


    அதே போல் எப்போது பார்க்க நேர்ந்தாலும், சக ஆசிரியர்களிடம், கரம் கூப்பி தான் வணக்கம் தெரிவிப்பார். இது போன்ற ஆசிரியர்கள் உள்ள வரை, தமிழ் சாகாது. இது போன்ற ஆசிரியர்கள் உருவாக வேண்டும்.


    ஆற்று நீரில் விடப்பட்ட ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து புதுபித்து தந்த தமிழ் தாத்தா உ.வே.சா. முதல் தமிழுக்காக, பல கஷ்டங்களை அனுபவித்து, தமிழ் தமிழ் தமிழ் என வாழ்ந்தானே, முண்டாசு கவிஞன் பாரதி உட்பட தமிழுக்கு பெரும் தொண்டு செய்துள்ளனர்.


    ஆனால் நாமோ சுதந்திர தினத்தில் மட்டும், காந்தியையும், நேதாஜியையும் நினைத்து, சொற்பொழிவு ஆற்றும் கூட்டம் போல், "தமிழ்" என்ற பிரிவில் கீழ் வரும் போட்டிகளில் மட்டுமே நாம் தமிழை பேசுகிறோம், புகழாரம் சூட்டுகிறோம். இதற்கெல்லாம் காரணம் நாம் தமிழை ஒதுக்குவதினால் தான்.


    இனியேனும் பிள்ளைகளுக்கு தாய்மொழி கல்வியின் சிறப்பை உணர்த்துவோம். அதே போன்று தமிழ் படைப்புகளையும், அவற்றின் வரலாற்று சிறப்புகளையும், நம் சந்ததியினருக்கு கொண்டு செல்ல வழி வகை செய்வோம்.


    தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற நாம் நம் பாரம்பரியத்தை ஒரு வித கண்டிப்பு தன்மையோடு கடைப்பிடித்தாலே போதும்.


  6. #76
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Tamil New Year Contest - 2015!!

    thanksssss ilaa mam for the contest...

    thanks for tagging ma karthi

    Vimalthegreat, sumitra and gkarti like this.

  7. #77
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by kaethies View Post
    தமிழனாய் பிறந்ததற்காய் ஒவ்வொரு கணமும் பெருமை கொள்கின்றேன்
    உலகின் முதல் மொழி என் மொழி
    பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்பும் தன் சீரிளமை குன்றாது அதே இலக்கண இலக்கிய வனப்புடன் மின்னுகின்றாள் என்தாய்
    ஆரியம் காலனிடம் தோற்றுப் போய் எழுத்துக்களில் மட்டுமாய் தன்னை மறைந்து கொண்டது என் தாயோ அக்காலனையே தோற்கடித்து அமரத்துவம் பெற்றுவிட்டாள்
    தன்னை அழிக்க வந்த சக்திகளாலேயே அவள் தன்னை வளப்படுத்திக் கொண்டாள்


    ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

    மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
    மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
    ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்

    மகாகவி சுப்பிரமணிய பாரதி


    என் மொழி போல இலக்கண வளம் மிகுந்த மொழி வேறில்லை உலகில் முதல் மொழி இலக்கணம் கண்டது என் மொழியே
    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கம் வைத்து வளர்க்கப்பட்டது என் மொழி
    ஐம்பெரும் காப்பியங்களால் அலங்கரிக்கப்பட்டது என் மொழி
    புறநாநூறு படித்தால் கோழையும் வீரனாவான்

    அகநாநூறு படித்தால் பேடியும் காதல் கொள்வான்

    கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
    காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
    தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

    சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
    தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
    நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

    நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
    சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

    கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
    காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
    என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
    யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!

    தந்தை அருள்வலி யாலும்-முன்பு
    சான்ற புலவர் தவவலி யாலும்
    இந்தக் கணமட்டும் காலன்-என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.

    மகாகவி சுப்பிரமணிய பாரதி

    என்தாய் காணாத துயரமுமில்லை அவள் எட்டாத சிகரமுமில்லை ஏனெனில்
    உயிரையும் உறவையும் தொலைத்து
    தசைகளும் நரம்புகளும் சேர்ந்த
    இரத்தச் சேற்றில் அமிழ்ந்தே போனாலும்
    தமிழன் என்ற உணர்வை விடாத
    பிள்ளைகளை பெற்றவள் அவள்

    அவள் தன் கடைசி மகன்
    சருகாகி வீழும் வரை என் தாயின்
    உயிரை அல்ல மயிரையும்
    பிடுங்க முடியாது..........!

    "தமிழன்டா"

    தமிழ் தாய் தனக்குள்ள ஒரே ஏக்கத்தை தன் சேய் பாரதியின் வார்த்தைகளால் பின்வருமாறு கூறினாள்


    அருமையான கருத்துக்கள் சகோதரா,

    படிக்கையில் மெய் சிலிர்த்தது. இதைப் படிக்கும் ஒவ்வொருவரினதும் மனங்களும் தமிழைக் காக்கத் துடிக்கும். அந்தத் துடிப்பு ஒன்றே போதும்!
    நம் தமிழ் என்றென்றும் வாழும்!

    உங்களின் சிறுகதைகள் படித்தேன். கண்ணீர் வடிக்க வைத்த அருமையான எழுத்துக்கள்! நேரம் இருக்கையில் அங்கேயும் வருகிறேன்.

    இடையில் நிற்காமல் என்றும் தொடரவேண்டும் உங்கள் எழுத்துப்பணி!

    அதற்கு எனுடைய அன்பான வாழ்த்துக்கள்!!


    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #78
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by naanathithi View Post
    வணக்கம் அனைவருக்கும்!

    நான் தமிழன்/ தமிழச்சி என்றெண்ணி பெருமை கொள்ளும் தருணங்கள் வீதியில் வரும் திருப்பங்கள் போல! வந்து கொண்டே இருக்கும்!

    நான் புரிந்து கொள்ளும் வயதுக்கு வந்தபோது அப்பா தமிழைப்பற்றி தந்த அறிமுகத்தில் ஆரம்பித்தது அது! இத்தனை ஆண்டுகள் பழமையான மொழி, என் அப்பா எனக்கு தந்ததை நான் உனக்கு தருகிறேன் என்று சொன்னபோது நான் என்னப்பா செய்யவேண்டும்? என்று கேட்டேன், எதுவுமே செய்யாமல் ஒப்படைக்க வேண்டியவர்களிடம் அப்படியே கொடுத்தாலே போதும் என்று சொன்னார் அப்பா!

    உலகப்பொதுமறையென திருக்குறள் கற்கும் போது, தமிழ்த்தாயின் ஐந்து ஆபரணங்களாம் ஐம்பெரும் காப்பியங்களையும் அறிந்த போது, ஒளவையின் பாடல்களை கற்ற போது பழைய மன்னர்கள் வரலாறுகளை கேட்டபோது விஞ்ஞானம் காலம் கடந்து அறிந்தவைகளை நம் முனிவர்கள், பழந்தமிழ் அறிஞர்களின் பாடல்களில் கண்ட போது, தமிழின் சாதனையாளர்களை பற்றி கேள்விப்படும்பொழுது அந்த தமிழன்னைக்கு நானும் மகளென பிறந்தேன் என்று புல்லரித்து போயிருக்கிறேன். இன்னும் போய்க்கொண்டே இருக்கிறேன்.
    சிறுமியென நான் வளரும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் கலை கலாச்சார, கட்டுமான சிறப்புக்களை அறியக்கிடைத்தபொழுதுகளை சிறப்பாக சொல்லலாம்.

    கொஞ்சம் வளர்ந்ததும் தற்கால இலக்கிய ஆசிரியர்கள் கதாசிரியர்கள் வர்ணனையில் கொஞ்சும் குமரியாக அவளை கண்டு ரசித்து காதலிக்க ஆரம்பித்தேன். சாண்டில்யன் வர்ணனைகளில் தமிழன் வீரத்தோடு இணைந்து, மன்னர்களின் கனவுக்கன்னி போல், கல்கியின் மொழிகளில் சேலை கட்டி என்னை கிறங்கடித்தவள் பின்னாளில் சுஜாதா கைகளில் நாகரிக மங்கையாக என் மனம் மயக்கினாள். பெயர் சொல்ல ஆரம்பித்தால் நீண்டு கொண்டே போகும், அத்தனை ஆசிரியர்கள் அத்தனை வேடங்களை அந்த சிங்காரிக்கு வழங்கி என்னை கனவுலகில் சிதறடிக்க வைத்தனர். ஒவ்வொரு புத்தகத்தின் முடிவிலும் என் தமிழ் என்ற அந்த உரிமை உணர்வும் பாரதியின் மொழிகளும் என்றும் என்னிடம் துளிர்க்கும்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!

    என் பதினான்காவது வயதில் என் மனம் மயக்கிய மங்கைக்கு முதலாவது காதல் கடிதத்தை எழுதினேன்! அதாங்க கவிதை! என் கவிதைக்கு முதல் ரசிகை எப்போதுமே நான் தான். மனதில் படும் எண்ணங்களை வார்த்தைகளை கோர்த்து தட்டி செதுக்கி மாலையாக்கி மீண்டும் சரி பார்க்கும் போது உண்மையை விட பலமடங்கு அழகாய் அந்த மாலை ஜொலிக்குமே! அந்த உணர்வை அனுபவித்து பார்த்திருக்கிறீர்களா? பேரானந்தம் என்பது அதுதாங்க! என் செல்லத்தமிழ் ஒன்றினால் மட்டுமே அது முடியும்! உலகின் எந்த மொழியாலும் இத்தனை சுவையை கொடுக்கவே முடியாது! தமிழச்சிடா! ஹ!! என்ற பெருமித தருணங்கள் அவை!

    இன்னும் கொஞ்சம் வளர்ந்த போது உற்ற நண்பன் என்ற நிலைக்கு என் தமிழ் மாறியது! இன்னொரு மொழியோடு விரும்பியோ விரும்பாமலோ போட்டியிட நிர்பந்திக்கப்பட்டோம். ஒற்றை தமிழன் எதிலேனும் ஜெயித்தாலும் நெஞ்சை நிமிர்த்தி கொண்டாடும் மனநிலைக்கு மாறினோம். ஒற்றை தமிழனின் வேதனைக்கு மொத்த தமிழர்களும் கண்ணீர் விட்டோம்!

    தமிழனாய் பிறந்தது குற்றமா? தமிழன் என்ற பெயருக்காக எம் தமிழுக்காக இத்தனை வேதனைகளையும் அனுபவித்தோம் உற்ற நண்பனுக்காய் உயிரை கொடுப்பது போல், தமிழின் மேல் அதிக உரிமை கொண்டது போல், துன்பத்தின் போது விலகி ஓடாத நண்பனின் மேல் நட்பு அதிகமாகும் அல்லவா? தமிழ் இன்னும் என் மனதோடு இறுகிப்போனது! போகட்டும் அதை விடுங்கள்

    நண்பன் என்பது துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் துணை அல்லவா? நான் கற்றது இன்னுமொரு மொழி பேசும் பிரதேசத்தில். அவர்களை கோபமூட்டவும் சிரித்துக்கொண்டே அவர்களை திட்டவும் விரிவுரை மண்டபத்தில் துண்டுசீட்டாகவும் வேண்டுமென்றே தவறாக கற்றுக்கொடுக்கவும் நாங்கள் உபயோகிப்பது தமிழே! அங்கெல்லாம் எங்கள் சிரிப்புக்களில் நண்பனாய் கலந்து நின்றிருக்கிறது தமிழ்!

    வெறும் காகிதத்திலேயே இவ்வளவு சுவை இருந்தால் இசையோடு சேரும்போது என்ன ஆகும்! ரஹ்மானில் ஆரம்பித்துத்தான் நான் இளையராஜாவுக்கு சென்றேன். இரவுகளில் என்னோடு இருப்பதால் என் மனைவி என்று சொல்லலாமா? முக்கியமான தருணம் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். மற்ற மொழி பிரதேசம் ஒன்றில் பஸ் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். கசமுசா என்ற பைலா சத்தங்களுக்கு இடையில் திடீரென்று காதல் ரோஜாவே ஹம்மிங் வந்தது. அவ்வளவு அமைதியாகிவிட்டது பஸ்! இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து வேண்டுமென்றே வரிகளை முணுமுணுத்து தமிழிச்சிடா என்று காட்டிக்கொண்டது பசுமையாய் நினைவிருக்கிறது! ஹா ஹா இசைப்புயல் ஆஸ்கார் மேடையில் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று சொன்னபோது புல்லரிக்காத தமிழன் ஒருவன் இருக்க முடியுமா? தமிழிசை என்ற மனைவியை இறக்கும் போதும் பிரிவேனோ என்னவோ?

    வளர்ந்து முடித்து இருபதுகளின் பிற்பகுதியை தொட்டிருக்கிறேன். பேசத்தொடங்கும் குழந்தைகளின் வாயில் தமிழை திருத்திக்களைத்து என் வருங்கால சந்ததியிடம் தமிழை அவர்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்காத வகையில் எவ்வாறு வளர்த்தெடுக்க போகிறேன் என்று வருத்தமாய் எண்ணிய இந்த வருடத்தின் ஒரு நாளில்தான் புரிந்து கொண்டேன், அம்மா, காதலி, நண்பி , மனைவியாய் தமிழ் எனக்கு இருந்தது போய் இப்போது நான் தமிழுக்கு அன்னையாகி இருக்கிறேன் என்று! நினைக்கவே இனிக்கிறது! என் மழலை முதல் சொல்லை பேசும் போது ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களிலும் தமிழுக்கு அன்னையாகி பின் கண்டிப்பான பாட்டியாகி அப்படியே ஒருநாளில் இறந்தும் போவேன்.
    எப்படி எங்கே பெருமைப்பட்டேன் என்ற வரையறைகள் என்னிடம் இல்லை. என்னோடு உணர்வாய் இருப்பதை சுவாசம் போல இயல்பாய் நடப்பதை என் தமிழைக்குறித்த என் பெருமையை எப்படி சொல்வேன் நான். இப்போதும் கூட எழுதியதை திரும்பத்திரும்ப நானே படித்து தமிழேண்டா சொல்லிக்கொண்டு அடுத்த வேலைக்கு செல்லப்போகிறேன்!
    ஹாய் உஷ் மேடம்,

    எப்படி இருக்கிறாய்?

    உன்னுடைய இந்தப் பதிவைப் படித்தபோது அப்படியே என் மனம் பரவசமாகிவிட்டது உஷா. வார்த்தைகளால் வடிக்க முடியா சந்தோசத்தை உணர்கிறேன்.

    அதே வேளையில், இவ்வளவு சிறப்பான தமிழை அன்னையாகப் பெற்றவர்களில் நானும் ஒருத்தி என்று நினைக்கையில் பெருமையாக இருக்கிறது!

    நீ சொன்னது போல, நம் உயிரில் நிறைந்து உணர்வில் கலந்து நினைவுகளில் மிதக்கும் தமிழ், நாம் இறந்தாலும் இறக்காத சாகாவரம் பெற்றது!

    பிறந்து சிறந்த மொழிகளுக்குள் சிறந்தே பிறந்த மொழியாம் எங்கள் தமிழ்!


    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  9. #79
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by dania View Post

    அருமையான கருத்துக்கள் சகோதரா,

    படிக்கையில் மெய் சிலிர்த்தது. இதைப் படிக்கும் ஒவ்வொருவரினதும் மனங்களும் தமிழைக் காக்கத் துடிக்கும். அந்தத் துடிப்பு ஒன்றே போதும்!
    நம் தமிழ் என்றென்றும் வாழும்!

    உங்களின் சிறுகதைகள் படித்தேன். கண்ணீர் வடிக்க வைத்த அருமையான எழுத்துக்கள்! நேரம் இருக்கையில் அங்கேயும் வருகிறேன்.

    இடையில் நிற்காமல் என்றும் தொடரவேண்டும் உங்கள் எழுத்துப்பணி!

    அதற்கு எனுடைய அன்பான வாழ்த்துக்கள்!!
    உங்களின் விமர்சனங்கள் என்னை மேலும் வளப்படுத்தும்
    மிக்க நன்றி சகோதரி

    Geetha A and dania like this.
    அன்புடன்
    கேதீஸ்




  10. #80
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Sara @jash,
    உங்கள் தாய் மொழி, தமிழ் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை, அதவும் உங்கள் கதைகளை படித்த பிறகு .

    gkarti, femila and jash like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter