Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!

Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.

 1. #81
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  இங்கு கருத்து தெரிவித்தவர்கள் அனைவரும், இலக்கிய தமிழை எந்த அளவு நேசித்தார்கள் என்று அழகாக தெரிவித்திருந்தார்கள். ஒருவர் ரௌத்திரமாகவும், ஒருவர் தன் தோழியாகவும், ஒருவர் தமிழை உலக மேடைக்கு அழைத்து சென்றவரை நேரில் கண்டு அவரோடு பங்குகொண்டும் , சிலர் தமிழின் அழகை இளம் வயதில் அறிந்து அதன் மேல் காதல் கொண்டு என பல வழிகளில் தமிழ் மேல் தாங்கள் வைத்திருந்த பற்றை கூறினார்கள். அதை படித்த பொழுது நமக்கேன் அது போல் தோன்றவில்லை என்று யோசித்தேன். ஒருவேளை எனக்கு என் தாய் மொழி மீது அந்த அளவு பற்றில்லையோ என்று குழம்பினேன்.

  சிறு பிராயத்தில் தமிழை கட்டாயத்திற்காக மட்டுமே படித்தேன்/மனனம் செய்தேன். விருப்பு வெறுப்பு ஏதுமின்றி இருந்தேன். ஆங்கிலத்தின் மீது வெறுப்பு. ஏனென்றால் ஆறாம் வகுப்பு முதல் ஆங்கிலம் மட்டுமே பேசும் கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார்கள் . அது வரையும் ஆங்கில வழி கல்வி தான், இருந்தாலும் அந்த அளவுக்கு எனக்கு ஆங்கிலம் பேசும் புலமை இல்லை. பதினோராம் வகுப்பு சென்ற போது , மதிப்பெண்களுக்காக பிரெஞ்சு எடுத்தேன். பிறகு ஒரே நாளில் தமிழுக்கு திரும்பி விட்டேன். (அந்த கதை சுருக்கம் கீழே உள்ளது).

  சிறு வயது முதலே, என் தந்தை விரும்பிய, பழைய திரைப்பட பாடல்களை சுசீலா அம்மாவின் குரலில் கேட்டு கேட்டு வளர்ந்தேன். திருமணமாகி இங்கே வந்த போது என் கணவர் உன்னிக்ரிஷ்ணன் பாடல்கள் பயணத்தின் போதெல்லாம் கேட்பார். அப்போது தான் முதன் முதலாக பாரதியார் பாடல்களை, ஏந்த வித வற்புறுத்தலும் இன்றி ரசித்தேன். அடுத்து பம்பாய் சகோதரிகளின் குரலில் பாரதியார் பாடல்கள் கேட்டேன். அதிலும் "தீராத விளையாட்டுப்பிள்ளை " பாடல் நான் அதிகம் விரும்பி கேட்பது. இன்றும் மனம் கலங்கும் போது சுப்புலட்சமி அம்மாவின் "குறை ஒன்றும் இல்லை" கேட்டு என்னையறியாமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பேன். அப்புறம் இணையத்தில் நிறைய தமிழ் சொற்பொழிவுகள் தேடி தேடி பார்த்தேன் /கேட்டேன். எதுவும் தமிழை பற்றியதல்ல. தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை மேம்ப்பாட்டுக்கான சொற்பொழிவுகள். அதுவும் பாமரனுக்கும் புரியும் விதத்தில் இருப்பவை மட்டுமே.

  ----தொடர்கிறது -------

  Sponsored Links
  Last edited by RathideviDeva; 1st May 2015 at 12:09 PM. Reason: split the posting

 2. #82
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  இப்படியே என் பயணம் இருந்த பொழுது தான், சுகி சிவம் அவர்களின் மகாபாரத சொற்பொழிவு கேட்டேன். அது எனக்கு பிடித்து, பிறகு என் குடும்பத்திற்கு பிடித்து(என் குழந்தைகளுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கே சில கதாப்பாத்திரங்களின் பெயர் மறந்து விட்டால் எடுத்து சொல்வார்கள்) எங்கள் நண்பர்களின் வட்டாரத்திலும் பிரபலம் ஆகிவிட்டது . இது தான் என்னை தமிழ் மொழியின் பக்கம் திருப்பிவிட்டிருக்க வேண்டும். பிறகு தேடி தேடி அவர் சொற்பொழிவுகள் கேட்டேன். அதில் ஒன்று அவர் அமெரிக்காவில் பாரதியார் பற்றிய சொற்பொழிவு. அன்று தான் என் பாரதியின் தமிழை அறிந்து ரசித்து ஆர்வம் கொண்டேன். இப்படியே என் பயணம் இன்னும் சென்றுகொண்டிருக்கிறது.

  "நீ ஒன்றை செய்வதற்கு தயார் நிலையில் இருந்தால், இந்த உலகம் உனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கும்" என்ற கூற்றிர்க்கேற்ப சில மாதங்களுக்கு முன் என் தாய்நாட்டிற்கு சென்ற பொது, எங்கள் வீட்டில் படிக்க நாவல் தேடிய பொழுது , என் திருமணத்திற்கு யாரோ பரிசளித்த "பாரதியார் பாடல்கள் " புத்தகம் கிடைத்தது. எங்கள் வீட்டில் யாரும் அதை படிக்க போவதில்லை. ஆனாலும் அது அகற்றப்படாமல், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் முதல் முறையாக என் கண்ணில் ஏன் பட வேண்டும். இது தான் தெய்வ சங்கல்பமோ. தெரியவில்லை, ஏதோ ஒன்று. உடனே அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். ஒருநாள் என் நெருங்கிய உறவினர்கள் செய்த அநீதி பொறுக்கமுடியாமல் கடுங்கோபத்தில் இருந்தேன், அன்று ஏனோ பாரதியின் "அச்சமில்லை அச்சமில்லை" படிக்க தோன்றியது. அதை படித்து விட்டு பாடத்தோன்றியது. அந்த பாடலை வீறு கொண்டு ரௌத்திரமாக பாடினால் தான் அதன் முழு சுவை அறிய முடியும் போல் தோன்றியது. ஆனால் நான் பாடி என்னை பைத்தியம் என்று சொல்லிவிட்டால்... உடனே என் மகனுக்கு சொல்லிகொடுப்பதுபோல் உணர்ச்சி ததும்ப முழங்கி அவனையும் முழங்க செய்தேன். இன்றும் அவ்வப்போது அவன் முயன்றுக்கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவனால் அந்த வீர உணர்வை முழுமையாக கொண்டு வரமுடியவில்லை. பாரதியின் தமிழும் போராடுகிறது, அவன் வாய் மொழியில். அவனும் போராடுகிறான் பாரதியின் தமிழோடு. ஆனாலும் ஒரு சந்தோஷம் இன்று வரை அவன் அந்த பாடலை வெறுக்கவில்லை. நானும் அவன் வாய்மொழியாக அந்த பாடலை கேட்கும் வரை விடப்போவதில்லை. பாரதியின் வரிகளுக்கு அவ்வளவு சக்தியா என்று வியந்தேன்.

  பாமர மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த தமிழோடு மட்டுமே எனக்கு பரிட்சயம். ஆனால் இங்கு உள்ளவர்கள் கருத்தை படித்த பொழுது, நான் ஏன் தமிழ் இலக்கியங்களை படிக்க முயலக்கூடாது. நான் ஏன் என்னை வரையருத்துக்கொள்ளவேண்டும். இதுவும், என்னை அடுத்தக் கட்டத்திற்கு இட்டு செல்லும் சந்தர்ப்பமோ, என்று யோசிக்க வைக்கிறது. கேதீஸ் அவர்களின் பாரதி மேற்கோள்களை பார்த்தபின்பு, அந்த பாரதி கவிதை புத்தகத்தை முழுமையாக பொருமையாக படித்து புரிந்து கொள்ள உந்துகிறது. என்னை தமிழின் சுவை அறிய அடுத்த அடி வைக்க மறைமுக உந்து சக்தியாக இருந்து உதவிய தோழமைகளுக்கு, என் நன்றிகள்!!!! என்னுடைய இந்த புலம்பலை பொறுமையாக கேட்டுக்கொண்ட தோழமைகளுக்கும் என் கோடானுக்கோடி நன்றிகள்!!!!
  -------------

  Last edited by RathideviDeva; 1st May 2015 at 12:13 PM. Reason: split the posting

 3. #83
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Tamil New Year Contest - 2015!!

  பிரெஞ்சுலிருந்து தமிழுக்கு மாறிய கதை :
  பிரெஞ்சு, முதல் நாள் வகுப்பிலேயே, அதன் உச்சரிப்பால் பயந்து....தலைமை ஆசிரியரிடம் சென்று நன்றாக திட்டு வாங்கிக்கொண்டு தமிழுக்கு வந்துவிட்டேன். ஏனென்றால் சில வருடங்களுக்கு முன் தான் ஹிந்தி கற்றுக்கொண்ட பொழுது பரீட்சை கூடத்தில் , கேள்வியே புரியாமல் முழித்து எப்படியோ தட்டு தடுமாறி போதைய தேர்ச்சி மதிப்பெண் மட்டும் எடுத்து பிழைத்தேன் தப்பித்தேன் என்று ஓடி வந்த கதை எனக்கு தெரியுமல்லவா. இதே கதை பிரெஞ்சுக்கும் வேண்டுமா என்று என் மனசாட்சி தலையில் தட்டிகேட்க.... அய்யோ வாழ்க்கையில் ஒரு முறை பெற்ற பாடமே போதும் என்று பிரெஞ்சுக்கு ஒரு பெரிய கும்புடு. இன்னொரு அதி முக்கிய காரணம், செய்யுள் எதுவும் புரியாவிட்டாலும், நம் சொந்த கதை சோக கதை எதையாவது எழுதி காகிதத்தை நிரப்பி விடலாம் என்ற எண்ணம் தான்.

 4. #84
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,110

  Re: Tamil New Year Contest - 2015!!

  Rathiii, Neenga Sonna Sila Vishayangal lla Nan Ditto Potrukren..

  Secondary Schooling vantha Pinna thaan Nan Romba Kasta Patten.. Tamil ah Language ah Parkkaama Subject ah Padichen Naan..

  Athukku Minna Primary lla Full ah Peter, Hindi vera Nadula.. Marks venum nnu Tamil Padichathu, Avlothaan.. Enakku avlo Seriousness um Kidayathu.. En Thatha Mattum thaan, Unakku Pesa theriyalai.. Thirukural Padi, Bharathiyar Books Padi, Kalki Novels Padi nu Sollite iruppar... Naanlam School days full ah.. "Since Tamil is My mother Tongue, I couldn't speak it fluently" nnu Tamil Movie Heroines pola Sollitrunthen.. Appuram Shame ah feel Panninathu vera Kadhai.. Naanum French class la veliya Ponen.. Naan Tamil varalaye Romba Feel Panninathu, +2 Board Exam Appo thaan... ROmba Kasta Patten,, Full concentrate Panni iranginappo thaan enakke Avamanama irunthathu.. Ipadi Vittutome.. Aduthu feel panni enna Panna..??

  Kambar Bharathi nu aduthu Padika Enakku Kodupanai Ilai, Conductor Induction nnu Poiten... Actually intha Post Podrathukku Kooda Naan Unfit.. Penmai vantha Pothu, avlo thenaruven.. Inga Friends laam avlo help Ennoda Own Skill ah valarkka.. Caps @Parasakthi, Uchuu @naanathithi lam avlo Patroda iruppanga.. Antha Pramippu Poraamai ah Maari thaan Naanum etho type Panna Kathutten... Ippo Kooda ithelam Direct Tamil la Podama, thanglish la adikra En Talent enna Solla..?? Ippo Ellaroda Entries Parkkurappo rombave avamaanama feel Pandren.. :(

  Hmm Oru Naal naanum Ipadi Contest lla Participate Pannuven.. AMEN..

 5. #85
  lashmi's Avatar
  lashmi is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalashmiravichandiran
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  karur
  Posts
  11,976
  Blog Entries
  43

  Re: Tamil New Year Contest - 2015!!

  உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை அருமை தோழமைகளே....

  என்னை எனக்கு உணர்த்திய தமிழ் , பள்ளிபருவத்தில் மற்றவர்கள் முன் துடுக்குடன் பேசி நான் மிடுக்குடன் நடைபோட துணை நின்ற என் தாய் மொழி தமிழ், கல்லூரி பருவத்தில் எழுத்து வடிவில் என் எண்ணங்களுக்கு உருவகம் கொடுத்து எனக்கான தனி இடத்தை அங்கு ஏற்படுத்தி கொடுத்தது தமிழ், காலங்கள் மாற என் கோலங்களும் மாற சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நான் நானாக மாற கவிதையும் கதையுமாக இந்த களத்திற்கு என்னை கைபிடித்து அழைத்து வந்ததும் என் தாய்மொழி தமிழ் தான்...என் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் தோழமையோடு என்னுடன் நடைபோட்டு இறுதி வரை வருவதும் என் தமிழ் தான்.

  அதைவிட இப்போது இந்த பதிவுகளை எல்லாம் படித்த இந்த தருணம் ,இந்த நொடி உண்மையாக சொல்கிறேன்..

  நான் தமிழச்சி ...நான் தமிழச்சி ...நான் தமிழச்சி .....என கர்வத்தில் என் கண்களில் கண்ணீர் தோழமைகளே.......

  என்னை tag பண்ணதுக்கு தேங்க்ஸ் கார்த்தி.....

  Last edited by lashmi; 1st May 2015 at 12:56 PM.
  அன்புடன்
  லஷ்மிரவி  நான் எடுக்கும் முடிவு
  சரியா என்று எனக்கு தெரியாது.

  ஆனால் எடுத்த முடிவை
  சரியாக்குவேன்.....
  .

  --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர் 6. #86
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by gkarti View Post
  Rathiii, Neenga Sonna Sila Vishayangal lla Nan Ditto Potrukren..

  Secondary Schooling vantha Pinna thaan Nan Romba Kasta Patten.. Tamil ah Language ah Parkkaama Subject ah Padichen Naan..

  Athukku Minna Primary lla Full ah Peter, Hindi vera Nadula.. Marks venum nnu Tamil Padichathu, Avlothaan.. Enakku avlo Seriousness um Kidayathu.. En Thatha Mattum thaan, Unakku Pesa theriyalai.. Thirukural Padi, Bharathiyar Books Padi, Kalki Novels Padi nu Sollite iruppar... Naanlam School days full ah.. "Since Tamil is My mother Tongue, I couldn't speak it fluently" nnu Tamil Movie Heroines pola Sollitrunthen.. Appuram Shame ah feel Panninathu vera Kadhai.. Naanum French class la veliya Ponen.. Naan Tamil varalaye Romba Feel Panninathu, +2 Board Exam Appo thaan... ROmba Kasta Patten,, Full concentrate Panni iranginappo thaan enakke Avamanama irunthathu.. Ipadi Vittutome.. Aduthu feel panni enna Panna..??

  Kambar Bharathi nu aduthu Padika Enakku Kodupanai Ilai, Conductor Induction nnu Poiten... Actually intha Post Podrathukku Kooda Naan Unfit.. Penmai vantha Pothu, avlo thenaruven.. Inga Friends laam avlo help Ennoda Own Skill ah valarkka.. Caps @Parasakthi, Uchuu @naanathithi lam avlo Patroda iruppanga.. Antha Pramippu Poraamai ah Maari thaan Naanum etho type Panna Kathutten... Ippo Kooda ithelam Direct Tamil la Podama, thanglish la adikra En Talent enna Solla..?? Ippo Ellaroda Entries Parkkurappo rombave avamaanama feel Pandren.. :(

  Hmm Oru Naal naanum Ipadi Contest lla Participate Pannuven.. AMEN..
  ரதி அக்காவும் நீயும் என் இவ்ளோ வருத்தபடறீங்க தெரியல எனக்கு.
  மதிப்பெண்களுக்கு மட்டுமே மதிப்பு தரும் நம் கல்வி முறையால் காயம் படுபவர்கள் அநேகம் நம் நாட்டில், இந்த எண்ணிக்கை முறையின் எண்ணிலடங்கா இழப்புகளில் இதுவும் ஒன்றானது
  சொல்ல போன இதுல உங்க தவறு எதுவும் இல்லமா, இந்த வருத்தம் அவமானம் எல்லாம் தூக்கி ஓரம் போடுங்க

  தமிழ் மகிழ்ச்சி பிரவாகத்தை மட்டுமே மனசுக்குள் தோற்றுவிக்கும் மொழிடா. கம்பரும் பாரதியும் எப்போது படித்தாலும் இனிக்கவே செய்வார்கள் .

  "எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் கண்ணம்மாவே" என்று தமிழ் மொழியை நினைத்து இனி படிக்க வேண்டியது தான் நண்பி
  காதலோடு கற்கும் இன்பம் கட்டாயத்தில் கிடைத்திடலாகது தோழியே
  எனக்கு இங்க இப்டி ஒரு திரி பார்த்த போது மனசு பற பற இருந்தது , வாய்மொழி உரை தான் எனக்கு வசதி, வரி வடிவகமாக தட்டச்சு செய்ய எனக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் மட்டுமே பங்கேற்கவில்லை. எனினும் இங்கு பதிவுகளை படிக்கும் போது உண்டான ஆனந்தம் அடடா,அய்யோயோ ஆனந்தமே பாடல அவ்ளோ தான்

  Geetha A, lashmi, sumitra and 4 others like this.
  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 7. #87
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: Tamil New Year Contest - 2015!!

  Oru vazhiya type panitean, ungulukagavay tamil illakiya thread open pani talidalam dont worry

  Epothum nama kolgai dont worry be happy thaan karti dear
  Vellaikarai duraigala vanthu tamil maanikangala marinavanga iruka mannula iruthutu ethuku ivlo kavalai

  எங்கு காணினும் இன்பமடா தான் நமது மண்ணின் மகிமை

  gkarti, jash and RathideviDeva like this.
  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 8. #88
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,110

  Re: Tamil New Year Contest - 2015!!

  So Sweet of you Vimmmm

 9. #89
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by lashmi View Post
  உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை அருமை தோழமைகளே....

  என்னை எனக்கு உணர்த்திய தமிழ் , பள்ளிபருவத்தில் மற்றவர்கள் முன் துடுக்குடன் பேசி நான் மிடுக்குடன் நடைபோட துணை நின்ற என் தாய் மொழி தமிழ், கல்லூரி பருவத்தில் எழுத்து வடிவில் என் எண்ணங்களுக்கு உருவகம் கொடுத்து எனக்கான தனி இடத்தை அங்கு ஏற்படுத்தி கொடுத்தது தமிழ், காலங்கள் மாற என் கோலங்களும் மாற சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நான் நானாக மாற கவிதையும் கதையுமாக இந்த களத்திற்கு என்னை கைபிடித்து அழைத்து வந்ததும் என் தாய்மொழி தமிழ் தான்...என் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் தோழமையோடு என்னுடன் நடைபோட்டு இறுதி வரை வருவதும் என் தமிழ் தான்.

  அதைவிட இப்போது இந்த பதிவுகளை எல்லாம் படித்த இந்த தருணம் ,இந்த நொடி உண்மையாக சொல்கிறேன்..

  நான் தமிழச்சி ...நான் தமிழச்சி ...நான் தமிழச்சி .....என கர்வத்தில் என் கண்களில் கண்ணீர் தோழமைகளே.......

  என்னை tag பண்ணதுக்கு தேங்க்ஸ் கார்த்தி.....
  gova same pinch

  lashmi, gkarti, jash and 1 others like this.
  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 10. #90
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: Tamil New Year Contest - 2015!!

  Quote Originally Posted by gkarti View Post
  So Sweet of you Vimmmm
  hahaha nandri nandri da

  gkarti, jash and RathideviDeva like this.
  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter