Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1052Likes

Fathers Day Contest 2015


Discussions on "Fathers Day Contest 2015" in "Special Contest" forum.


  1. #11
    sintu lingam's Avatar
    sintu lingam is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sintu bairavi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    malaysia
    Posts
    6,428
    Blog Entries
    15

    Re: Fathers Day Contest 2015

    என் அப்பா வாழ்க்கைப் பாடத்தின் முடிவிலி...
    My Father is
    Life Lessons - Infinity...


    ((அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்வதற்க்கும் அவரின் நற்செயல்களைப் பின்பற்றுவதற்கும் இன்னும் நிறைய விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு நாளும், ஒரு புது விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்.

    அப்பாவின் புகழ் பாட எந்த மகளுக்கும் ஒரு 'முற்றுப்புள்ளி' தேவைப்படாது என்பது என் கருத்து. ஆனால், காற்புள்ளிகள் அதிகமாகவே தேவைப்படுகின்றன. ))


    எந்த மகளுக்குத்தான் தன் தந்தையின் புகழ் பாட பிடிக்காது...
    இதோ வந்துவிட்டேன்...

    தமிழுக்கு எப்படி 'திருக்குறள்' தனது பங்கைச் சிறப்பாகச் செயல்ப்படுகிறதோ, அதேபோல், நாம் கடந்து வரும் நம் வாழ்க்கையிலும், நம் தந்தையின் பங்கும் மிகச் சிறப்பாக நம்முடன் பயணிக்கும்...

    - என் அப்பாவுடன் கைகோர்த்து, தோள் சாய்ந்து, செல்லம் கொஞ்சிக் கொண்டதில்லை நான். ஆனால், ஏனோ அவரின் மேல் அளவு கடந்த பாசம் உண்டு. எனது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அவர் சொல்லிக்கொடுத்த 'அ'னா 'ஆ'வனாக்கள். இன்று எனது வெற்றி, அவர் சொல்லிக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களில் ஒன்று...
    “நாம் கால் பதிக்கும் ஒவ்வொரு செயலிலும், எதிர்மறையான கருத்துக்களையே முதலில் சிந்திக்கச் சொல்வார். அப்பொழுதுதான் தோல்விகளைத் தூசுபோல் தட்டிவிட்டு, வெற்றிகளை எட்டிப்பிடிக்க முடியும் என்பார்.” இது முற்றிலும் உண்மை... நான் தோல்விகளைச் சந்தித்ததுண்டு, ஆனால், எனக்கது வலியைக் கொடுத்ததில்லை.
    “எதிர்பார்த்து ஏமாறாதே; எதையும் எதிர்பாராமல் செய், அதில் கிடைக்கும் சந்தோஷம் இன்னும் தித்திக்கும் என்பார்”. நிஜமாகவே மிகவும் தித்தித்தது...
    ((என் அப்பா என் வெற்றிகளின் நாயகன்...
    ))

    - முயற்சித்தால், எதுவும் சாதிக்க முடியும் என்பார்; சாதித்தும் காட்டினார். ஏழ்மையினாலும் போக்குவரத்தின்மையினாலும் தனது படிப்பை வீட்டின் அருகிலுள்ள ஆங்கிலப்பள்ளியில் தொடர்ந்தார். ஆனால், அவருக்கோ தமிழில் தான் அதிக ஆர்வம். தடைகளைத் தகர்த்து, தன் சொந்த முயற்சியினால் தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டார். தமிழில் நன்கு வாசிக்கவும் எழுதவும் தேர்ச்சிப்பெற்றார். அவர் வாழ்ந்த அதே தோட்டப்புறத்திலுள்ள சில மாணவர்களுக்குத் தமிழில் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்தார். அவரின் இரு மகள்களை மலேசியா அரசாங்க தமிழ்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக உருவாக்கினார்.
    ((இந்த நவீன உலகில், தமிழ்ப்பள்ளியில் படித்த பெற்றோர்களே, தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க யோசிக்கும்பொழுது, ஆங்கிலப்பள்ளியில் படித்து, தன் பிள்ளைகளைத் தமிழில் சாதிக்க வைத்த எங்கள் அப்பா என்றும் எங்களுக்கு ஹீரோதான்...
    ))

    - வருடந்தோறும், கண் பார்வை இழந்தவர்களுக்கு நன்கொடைத் தருவது அவருக்கு வழக்கம்... இதைப்பார்த்து வளர்ந்த நாங்களும் (என் உடன் பிறந்தவர்கள்), இப்பொழுதும் மாதந்தோறும், எங்களின் சம்பளத்தில் ஒரு சிறிய தொகையை ஏதாவதொரு டிரஸ்ட்’க்கு அன்பளிக்கிறோம். இதில் கிடைக்கும் மனத்திருப்தி வேறெதிலும் இல்லை... சொல்ல வார்த்தைகள் இல்லை... கொடுத்துப் பாருங்கள், மனம் நிறையும்...
    ((எங்கள் அப்பா – எங்களின் முன்னுதாரணம்...
    ))

    - எனக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும்பொழுது, என் அப்பா என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா? பிடிச்சிருந்தால் சொல்லு, நான் அந்த பையன்கிட்ட பேசுறேன்" என்றார். நண்பர்களின் காதலுக்கு வில்லத்தனமாக வந்த பெற்றோர்களைப் பார்த்ததுண்டு. ஆனால் இதுவோ, ஒரு புதுவித உணர்வு. மகளின் விருப்பதிற்க்கு முன்னுரிமை. என்னவென்று நான் சொல்ல...

    ((என் அப்பா - எங்களுக்காக கடவுள் கொடுத்த மாபெரும் விலைமதிப்பில்லா பரிசு... ))

    - பல இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி வந்தவர்தான் என் அப்பா. மன உளைச்சல்களினால், ஆறுதல் தேடும் வகையில் மது மற்றும் புகைபிடிப்பதில் அடிமையாகும் சில மனிதர்களினிடையில் பிள்ளைகளின் நலனுக்காகவும் எங்களின் எதிர்காலத்திற்காகவும் கஷ்ட்டப்பட்டு உழைத்து, எங்களின் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி, எங்கள் மனதில் மதிப்பிற்குரிய நீங்கா இடம் பிடித்தவர் எங்கள் அப்பா...
    ((சிங்கம் என்றால் என் தந்தையே ))

    நான் சொன்னது போலவே, தந்தையின் புகழ் பாட, மகள்களுக்கு கசக்குமா என்ன>>> இதோ, காற்புள்ளிகள் மட்டுமே தொடர்ந்துக்கொண்டிருக்கிறது...

    ((நான் வீட்டுக்கு போனால், என் அம்மாவும் சரி, என் உறவினர்களும் சரி, அடிகடி என்னிடம் ஒரு வார்த்தைச் சொல்லுவாங்க, "
    நீ இங்க வந்தால், உங்க அப்பா வாயில் 'சிந்து சிந்து சிந்து' என்ற வார்த்தை மட்டும் தான் வரும்" என்று...
    ஹஹஹ... இதை என் காதால் கேட்கும்போது, மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும்... இதைவிட வாழ்வில் வேறென்ன வேண்டும்...
    ))

    'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
    தந்தை அன்பின் முன்னே'


    அனைத்து தந்தையருக்கும், என் மனமார்ந்த
    தந்தையர் தின வாழ்த்துகள்..
    .



    Sponsored Links
    Last edited by sintu lingam; 30th Jun 2015 at 03:01 PM.
    - Sintu Bairavi -

    we are in the world is God's gift to us,
    what we did for this world is our gift to God...


  2. #12
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Fathers Day Contest 2015


    அன்பு தோழமைகளே,

    என்னுடைய பங்களிப்பு இதோ.......



    பகுதி -1

    என்னுடைய அப்பா வாழ கற்று கொடுத்தவர்.






    பகுதி -2


    வாழ்க்கையை ஜீவனுள்ளதாய், பயனுள்ளதாய்,சுதந்திரமாய்,சந்தோஷமாய்,தைரியமாய்,தன்னம்பிக்கையாய்.....எல்லாவற்றுக்கும் மேலாய் அன்புடன் வாழ கற்றுக்கொடுத்தார் னு சொல்ல மாட்டேன். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முறைமையில் நான் கற்றுக்கொண்டேன்.

    அடைகாக்கும் கோழியாய் என்னை சிறகுக்குள் வைக்கவில்லை. பறவையாய் என்னை சிறகடித்து பறக்க வைத்தவர். இடைவெளி இட்டு நாடும் நாற்றை போல குடும்ப நிலத்தில் பாச
    நீர் ஊற்றி தகுந்த இடைவெளி கொடுத்து செழிப்பாய் வளர்ந்த செடி நான். இந்த செடிக்கு அவரின் பக்க பலம் என்னும் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே இருப்பவர்.

    வலிக்கும் போது வலி நிவாரணியாய்.....சலிக்கும்போது வடிகாலாய்........ஜெயிக்கும்போது உற்சாக தூண்டுகோலாய்.....பொங்கி வரும் காட்டாற்றையும் சீர்படுத்தும் கரையாய்........பெருகி ஓடும் வெள்ளத்திற்கு அணையாய்......எட்டி நின்று அன்பால் கட்டி போடும் அருமையான ஜீவன்.

    குழந்தை கண்ணனின் வாயில் உலகத்தை கண்டவள் தாய் யசோதை.......
    இந்த தகப்பனின் வாழ்வில் உலகத்தை புரிந்து கொண்டாள் இந்த கோதை....

    சந்தோஷமோ ,துக்கமோ .....உச்சி முகர்ந்து கொடுக்கும் அந்த முத்தத்திற்கு ஈடு ,இணை கிடையாது.

    என் குடும்பத்தின் பிடிப்பில் எங்கெங்கோ சுற்றி வருகிறேன். அந்த குடும்பத்தின் ஆணிவேர்
    என் தாத்தாக்கள். அந்த வேரை தாங்கும் விழுதுகள்......என் அப்பா,பெரியப்பா, சித்தப்பா .......நாங்கள் கிளைகளாய் இருக்கிறோம்.உறவு பறவைகள் இளைப்பாறுகின்றன.....பசுமை மாறாமல் இருக்கிறது.......நாளை விழுதுகள் ஆணிவேராகலாம்........கிளைகள் நாங்கள் விழுதுகளாவோம்......புதிய கிளைகள் முளைக்கும்........கிளைகளை விழுதுகளாக வளர செய்வோம் அப்பா ....உங்களை போல.......ஆலமரத்தின் பசுமையும் உயிர்ப்பும் போகாது அப்பா........

    நன்றியெல்லாம் சொல்லபோவதில்லை அப்பா ,வாழ்ந்து மட்டுமே காட்டபோகிறேன் .......









    Attached Thumbnails Attached Thumbnails Fathers Day Contest 2015-image.jpg  
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #13
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Fathers Day Contest 2015

    ஹாய் நட்புகளே

    வந்துட்டேன்... அப்பான்னா சும்மா இல்லைடா, அவரு இல்லனா நானு இல்லைடா. இப்போ எப்படி சொல்றேன் பாருங்க என்ற சுப்பு டாடி பத்தி...

    My father is More than Anything

    உங்க எல்லாருக்கும் அப்பா மூன்று எழுத்து பொக்கிஷம்ன்னா எனக்கு அவர் இரண்டு எழுத்து ஹைக்கூ எனக்கு. என்னடா குழப்புறான்னு யோசிக்காதீங்க அவர எனக்கு எங்க அம்மா டாடி பாருன்னு சொல்லி தான் அறிமுகம் படுத்தினாங்க. அன்னிக்கு இருந்து டாடி, சுப்பு டாடி (அவரு பேரு சுப்பாராஜ்) டாட், டி... இப்படி ஓராயிரம் பேரு வச்சி கூப்பிட்டிட்டு இருக்கேன்.

    சின்ன வயசுல இருந்து பாசத்தை அள்ளி அள்ளி கொட்டி வளர்த்த டாடி இல்லைனாலும், அன்பு, கண்டிப்பு, பொறுப்பு, அறிவுரை இப்படி எது எது எப்போ எப்போ எவ்ளோ வேணுமோ அவ்ளோ Dose பார்த்து சரியா கொடுப்பார்.

    என்னடா ஸ்ரீஜா இப்படி பண்ணுற இது அவர் எப்பவும் சொல்லுற வாக்கியம். சந்தோசம், கோபம், சோகம் எது என்னால நடந்தாலும் இதன் சொல்லுவார். பொதுவா அப்பாவோட பாசம் எல்லாம் நேரடியா இருக்காது. ஆனால் நம்மளை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை எப்பவும் விரிச்சிருப்பார். அது நமக்கு பல நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும்.

    எங்க அப்பா எவ்வளவு நல்லவர்ன்னா ஸ்கூல முதல் இரண்டு Rank விட்டு மூணாவது இடம் பிடிச்சா திட்டுற அப்பாவை நீங்க பார்த்துருபீங்க, ஆனால் என்ற டாடி அதுக்கும் என்னை பாராட்டினார். Third rank வாங்கினா இப்போ என்னடா? எப்பவும் நீயே first rank வாங்குனா மத்தவங்க எப்போ வாங்குவாங்க. எல்லாருக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கணும் இல்லை. பரவாயில்லை டா அடுத்த தடவை முடிஞ்சா வாங்கிக்கோ. இதான் அவரோட வாக்கியம். எனக்கு அப்போ இதோட அர்த்தம் எல்லாம் ரொம்ப detailஆ புரியாது. ஹப்பாடா இப்போதைக்கு நம்மளை அம்மா மாதிரி திட்டமா விட்டா போதும்னு இருக்கும். ஆனால் இப்போ யோசிச்சு பார்த்தா பிரமிப்பா இருக்கு. ஏன் இவ்ளோ கம்மியா வாங்கிருக்க? வர வர தேஞ்சிட்டே போகுது மார்க் எல்லாம் இப்படின்னு திட்டுறத விட்டுட்டு மனுஷன் என்ன ஒரு தத்துவம் சொல்லிருக்கார் பாருங்க!!!

    நான் எப்பவும் அவர்கிட்ட எனக்கு இது வேணும் டாடி வாங்கி தாங்கன்னு கேட்டதே இல்லை (ஐஸ் கிரீம், சாக்லேட் எல்லாம் கேட்ருக்கேன்) ஆனால் அவருக்கு தெரியும் எனக்கு எதை எப்போ வாங்கி தரனும்னும். படிக்குற வயசுல Writing டேபிள்ல ஆரம்பிச்சு இப்போ டைப் பண்ணுற லேப்டாப் வரை. நாம சொல்லாமலே நமக்கு பிடிச்சதை மத்தவங்க செய்யுற போது கிடைக்குற சந்தோசம் வார்த்தையே இல்லைங்க சொல்றதுக்கு. விடுமுறை விட்டா ஒவ்வொரு ஊருக்கும் டூர் கூட்டிட்டு போறது தான் அவருக்கு இருக்குற மிக பெரிய சந்தோசம்.

    டாடிக்கு ஸ்ரீஜா எப்பவும் நல்ல பொண்ணா இருக்கணும், அவர் சொல்றதை கேட்கணும் அது ஒரு வேலை தப்பா இருந்தா அதை ஸ்ரீஜா சொல்லி புரிய வச்சா அவ்ளோ தான். டேய் நான் சொல்றதை நீ கேளு, அகராதி தனமா பேசி பழகாத. இப்படி நாங்க விவாதம் பண்ணாத வாரமே இல்லை. ஆனால் இப்படி சண்டை போட்டு மறுபடியும் பேச எங்களுக்கு ஒரு சின்ன டாபிக் கிடைச்சா போதும். அந்த விவாதத்தோட முடிவுல இரண்டு பெருகும் ஒரு விஷயம் புரிஞ்சிருக்கும். எங்க டாடிக்கு, எனக்கு எது பிடிக்கலைன்னு தெரிஞ்சிருக்கும், எனக்கு டாடிக்கு எது பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சிருக்கும். அதை கண்டிப்பா எதோ ஒரு விதத்துல இரண்டு பெரும் சரி பண்ண முயற்சி பண்ணுவோம். இது எல்லாமே சொற்களால் இல்லாமல் வெறும் செய்கைகளால் புரிந்து அதன்படி நடப்பது மட்டுமே. அது ஒரு கர்வமான தருணம், எனக்கும், என் டாடிக்கும் மட்டும் புரியுற தெரியுற விஷயம்.

    ஒரு சின்ன வட்டத்துக்குள சுருங்கி இருக்குற அப்பாவை பார்க்கும் போது கொஞ்சம் கோபம் வரும் எப்போதும் ஆபீஸ், டிவி, நியூஸ் பேப்பர், குடும்பம் இது தாண்டி நிறைய சந்தோசம் இருக்குன்னு டாடிக்கு நான் புரிய வைக்க காரணமா இருந்தது தொழிநுட்பம். அந்த Fantacy உலகம் எங்க அப்பாவை விட்டு வைக்கலை. ஒரு நாள் சாதாரணமா Facebook account open பண்ணி கொடுத்தேன். அவ்ளோ தான் அவரோட புது உலகத்துல புகுந்துட்டார். அப்பாக்கு நான் செய்த ஒரு நல்ல காரியம் இதா இருக்கும்னு நம்புறேன். இது உங்களுக்கு ரொம்ப simple matter ஆ இருக்கலாம் ஆனால் அது அவருக்குள் கொண்டு வந்த மாற்றம் என்னை பெருமைப்பட வைக்கிறது

    ஏன்டி இப்படி உங்க அப்பா மாதிரி என் உயிரை வாங்குற என்று அம்மா செல்லமாய் எனை சீண்டும் நேரம் கூட இனிமையாய் இருக்கும். நான் அப்பா புள்ளை அப்படி தான் இருப்பேன் என்று பேசி நிறைய வாங்கிருக்கேன் அம்மாகிட்ட.

    சொந்தங்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரங்க இப்படி எல்லார் கூடவும் ஒரு வட்டம் அமைத்து அதில் எப்படி பழக வேண்டும் என அருமையாய் விளக்கி அதன்படி வாழ்பவர். மனிதர்களை நேசிப்பதில் அவரை அடித்துக் கொள்ள வேறு யாரும் இல்லை என்று கர்வமாக கூறுவேன்.

    சிரிப்பு ஒரு மனிதனுக்கு எவ்வளவு மாற்றங்கள் தரும் என்பதை அவர் சிரிக்கும் போது உணர்வேன். நான் அப்படியே எங்க டாடி மாதிரி சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைப்பதில், எழுதுவதில், பேசுவதில், நடப்பதில், சாப்பிடுவதில், பல் வரிசையில் இவ்வாறு பட்டியல் நீளும். நீ அப்படியே எங்க அம்மா மாதிரி இருக்கடா ஸ்ரீஜா, சமையல் இன்னிக்கு யாரு ஸ்ரீ தான.. அப்டியே எங்க அம்மா கைப்பக்குவம் இப்படி அவர் சொல்லும் போது அப்படியே ஜில்ல்ன்னு இருக்கும்.

    இதோ தந்தையர் தினம் வாழ்த்து சொன்னப்போ கூட " அடடே இன்னிக்காடா ஹ்ம்ம் இந்த டிவில கூட சொல்லலை பாரேன். உனக்கு எப்படி டா தெரியும். நன்றி நன்றி ன்னு " சொல்லும் போது அவருக்குள எவ்வளோ சந்தோசம்.

    டாடி எவ்வளவு தப்பு பண்ணினாலும் அவர் என்கிட்ட எப்பவும் சாரி கேட்டதில்லை. நான் சாரி கேக்கவும் அவர் விட்டதில்லை, என் பொண்ணு மன்னிப்பு கேக்குற அளவு தப்பு பண்ணிருக்க மாட்டான்னு அவர் நம்புவார். அந்த நம்பிக்கையை நான் இது வரைக்கும் காப்பாதிருக்கேன், இனிமேலும் நிச்சயம் காப்பத்துவேன்.

    நான் நேசிக்கும், எனை எப்போதும் நேசிக்கும், அவரின் மறு தாயாய் எனை பார்க்கும் என் தந்தையை இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய், பெருமையாய் பார்த்துகொள்ளும் உரிமைமிக்க மகளாய் எப்போதும் இருப்பேன்.

    Love u to the core Daddy. U r my Meaning

    Daddy's Are always Girls Bestestttttttttt Hero ever



  4. #14
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Fathers Day Contest 2015

    Hii Dearies!

    On behalf of Our friend @laddubala, Posting her Write Up here..

    Note - Its Not a Contest Entry!




    1.என் அப்பா என் அன்னையின் மறுஉருவம்.

    2. அப்பாவை பற்றி எங்க இருந்து துவங்கறது. ம்ம்ம் அவரோட அன்பிலா, பாசத்திலா, நட்பிலா, அக்கறையிலா, கண்டிப்பிலா. எல்லாமே பிடித்தம் அவரிடம்.

    எல்லோருக்குமே அப்பா தான் முதல் ஹீரோ. அதிலே எனக்கும் விதி விலக்கில்லை. நாங்க இருவர் அதாவது இரட்டையர்கள். எங்க ரெண்டு பெயரையும் என்னிக்குமே சமமா தான் நடத்துவார் இன்னைக்கு வரைக்கும்.

    எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் அதில் அவர் காட்டும் ஈடுபாடு. எல்லோரையும் எப்படி மதிக்கணும், இன்முகத்தோடா பழகனும், அனுசரிச்சு போகணும் எல்லாம் அவரிடம் நான் கத்துகிட்ட வாழ்க்கை பாடங்கள்.

    எந்த ஒரு கஷ்டத்திலும் உடையாத அவரோட தன்னம்பிக்கை, எடுக்கற செயல்ல நல்லா செய்யணும்னு அவர் தரும் ஊக்கமும் எனக்கு பெரிய பூஸ்ட்.

    அம்மா/அப்பா வோட அழகான இல்லறவாழ்வின் விசிறி நான். அவங்களுக்குள்ளே அப்படி ஒரு அழகிய காதல் உண்டு. என்னைக்கும் அம்மாவ அப்பா விட்டு தந்தே இல்லை. எதையும் அம்மாவோட பகிர்ந்துக்கற அந்த அன்யோன்யம் ரொம்ப பிடிக்கும். கல்யாணம் முன்னாடி எல்லாம் யோசிப்பேன் எனக்கு மனம் முடிச்சு வரவர் என் அப்பாவை போல இருக்கணும்னு.

    பாசத்துல எந்த அளவு உண்டோ அதே அளவு கண்டிப்பும் உண்டு. அதுக்குன்னு அடிச்சது எல்லாம் இல்லை அவரின் ஒரு பார்வையே போதும் அது சொல்லும் செய்தியிலே நாங்க அடங்கிடுவோம்.

    என் கல்யாணம் முடிஞ்சு என் அப்பா கண்ணுல வந்த தண்ணி சொல்லிச்சு அவர் என் மேல உள்ள பாசத்த. நெகிழ்ச்சியான சமயம் அது.

    என் பிள்ளை பேற்றின் போது கூட கணவர் பக்கத்துல இருக்கமுடில அவர் வெளிஊரில் இருந்தார் அந்த சமயம். ஆனா அப்பா இருந்தார் ஒவ்வொரு நொடியும் மனசுக்கு ஆறுதலா, நம்பிக்கை தந்திட்டு. என் ஓவ்வொரு நலனிலும் அவரின் பங்கு இருக்கு.

    அத்தனைக்கும் நன்றின்னு ஒரு சொல்லிவிடமாட்டேன். இது அனைத்தையும் தாண்டிய அழகிய பந்தம்.

    LUV U அப்பா
    என்னைக்கும் உங்க மகளா இருக்கறதுல பெருமை எனக்கு.
    அதை தந்த என் அம்மாவுக்கும் என் அன்பு முத்தங்கள்.

    Attached Thumbnails Attached Thumbnails Fathers Day Contest 2015-fathers-daughters.jpeg  

  5. #15
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015

    (இது போட்டிக்கான பதிவு அல்ல ....)
    என் தந்தை.....
    இதை யோசித்த போது பல பதில்கள் என் மனதில் வரிசை கட்டின. இதோ சில ......

    என்னை உருவாக்கிய சிற்பி ????? அவர் சிற்பி என்றால் நான் சிற்பமா? நான் இன்னும் சிற்பம் ஆகவில்லை. அதனால் அவர் சிற்பி அல்ல.
    என் வெற்றிக்கான ஏணிப்படி ????? ஏணி என்பது உயிரற்று அங்கேயே இருந்து கொண்டிருக்கும் . ஏறியவுடன் ஏணிக்கும் எரியவருக்கும் உள்ள பந்தம் அற்று போய் விடுகிறது. அதனால் என் தந்தை ஏணி இல்லை.
    எனது உந்து சக்தி ????? நான் சோர்வுறும் போதெல்லாம் எனக்கு சக்தி தருகிறாரா? இது கொஞ்சம் சரியே .... ஆனால் எல்லா நேரத்திலும் அல்ல.
    எனது ராக்கெட் பூஸ்டர் ????? பூஸ்டர், தன் சக்தி அனைத்தையும் கரைத்து/எரித்து ,ராக்கெட்டை பூவி ஈர்ப்பு சக்திக்கு அப்பால் உள்ள வின்வெளியில் செலுத்தி விட்டு கடலுக்குள் விழுந்து தன்னை மாய்த்து கொள்கிறது. என் தந்தை என்னை ஒரு முறை மட்டுமே உயரித்தில் நிறுத்திவிட்டு ஒதுங்கு கொள்ளும் பூஸ்டர் அல்லவே.
    எனது துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் உயிர் தோழன் ????? எங்களுக்குள் ஒரு மரியாதைக்குரிய இடைவெளியுடன் கூடிய தோழமை உண்டு. ஆனால் உயிர் தோழமைக்குரிய பகிர்தல் இல்லை. அவரை வருத்தக்கூடிய எந்தவித எனது கஷ்டத்தையும் அவரிடம் பகிரவே மாட்டேன்.
    எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்த ஆசான் ????? அப்படி என்றால் நான் வாழ கற்றுக்கொண்டு விட்டேனா? இல்லவே இல்லை. அவரும் நானும் இன்னும் வாழ கற்றுக்கொண்டிருக்கிறோம். இதில் ஆசான் உறவு இல்லை. கொஞ்சம் வழிகாட்டுதல் மட்டுமே உண்டு , ஏனென்றால் இந்த வாழ்க்கை பயணத்தில் என் முன்னாள் சென்று கொண்டிருக்கும் அனுபவம் கொண்டவரல்லவா.
    என்னுடைய சுமை தாங்கி ????? அவர் சுமைதாங்கியா என்று தெரியாது. ஆனால் நான் அவரை சுமைதாங்கி கல்லாக பயன்படுத்தும் அளவுக்கு சுயநலவாதி அல்ல.
    என் குணாதிசியத்தின் அடித்தளம் ????? இது நிறைய உண்மை. Yes he laid the foundation/platform for my character and lifestyle. அவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ என்னுடைய அஸ்த்திவாரத்தை அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார். இதில் என் அம்மாவின் பங்கும் இருப்பதால் இதையும் நிராகரித்து விட்டேன்.
    என் வாழ்வின் வேர், என்னை வாழவைத்த தெய்வம், எந்தன் வானம் , எந்தன் உலகம்,...... ????? "உனக்கே கொஞ்சம் இது ஓவரா தெரியல"ன்னு என் தலையில குட்டு கொட்டி என் மனமும் அறிவும் சேர்ந்து இதையெல்லாம் உதைத்து ஓட வைத்துவிட்டன.


    இப்படி பல மின்னல் போல வந்தும்என் அறிவும் மனமும் மாற்றி மாற்றி நிராகரித்தன.


    சரி..... முடிவாக என் தந்தை எனக்கு எப்படிப்பட்டவர்.......


    ஒரு மனதாக என் அறிவும் மனமும் ஒத்துக்கொண்டது.....
    என் தந்தை என்னுடைய பலமும் பலவீனமும். ஆம்..... அவரே என் பலம் அவரே என் பலவீனம்.
    பலம் என்பதை நான் விளக்கத்தேவை இல்லை. பலவீனம் - என் தந்தைக்கு மன வருத்தம் அளிப்பதோ, மரியாதை குறைவு தருவது எதுவோ அதை என்னால் முடிந்தவரை செய்யவே மாட்டேன். அதே போல் அவர் என்னை குறை சொல்லும் நிலை வராமலிருக்க பெரும் பிரம்மப்ரயத்தனம் எடுப்பேன். அதனால் என்னை வருத்த வேண்டுமென்றாலோ அல்லது என்னை யாரவது அவர்கள் வழிக்கு கொண்டு வர வேண்டுமென்றாலோ மற்றவர்கள் எடுக்கும் ஆயுதம் என் தந்தை தான். என் தந்தைக்கு ஒரு அவமானம் / சிறு வருத்தம் வரலாம் என்று தெரிந்து விட்டால், நியாயமாக போராடிக்கொண்டிருந்தால் கூட போராட்டத்தை உடனே கைவிட்டு சரண் அடைந்துவிடுவேன்.

    இப்போதைக்கு நிறுத்திக்கிறேன். மீண்டும் என் வாழ்க்கையின் பிளாஷ்பாக்கோட வர்றேன். இருங்க கொசுவத்தி சுருள தேடி எடுத்துட்டு வரேன். அது வரைக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. தயவு செய்து எஸ் ஆகிடாதீங்க. நான் கதை சொல்றதுக்கு (அட மொக்க போடறதுக்கு) கூட எனக்கு இங்க யாரும் இல்ல. என் பிள்ளைங்க இந்தியா vacationல செம்மைய என்சாய் பண்றாங்க. எப்படா நான் கிளம்புவேன்னு காத்து கிடந்து , countdownலாம் பண்ணி என்னைய சந்தோஷமா வழிஅனுப்பி (துரத்தி) வச்சதுங்க. ஆபீஸ்ல நிறைய வேலைய்னு சொல்லியே எங்க வீட்டுக்காரர் எஸ்கேப் ஆகிடுவாரு. நெருங்கிய குடும்ப நண்பர்களும் இந்தியா vacationல இருக்காங்க. சோ எனக்காக இருக்கிறது நீங்க மட்டும் தான் தோழமைகளே. அதனால தயவு செய்து அடுத்த பாகமும் வந்து கேளுங்க.

    Last edited by RathideviDeva; 3rd Jul 2015 at 09:05 AM.

  6. #16
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015

    (ஓகே இப்ப கொசு வத்தி சுருள சுத்துறேன்...... டொய்.......ங் )


    ஞாபகம் வருதே!! ஞாபகம் வருதே !!
    போக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
    ஞாபகம் வருதே


    நாங்க ஒரு கூட்டு குடும்பம், தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அவங்க ரெண்டு பசங்க(ஒரு அண்ணா, ஒரு தம்பி), எங்கப்பா, எங்கம்மா, நான் ,என் தங்கை. கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். படிப்பிற்காக பக்கத்து டவுன்ல இருந்தோம் யாரவது ஒரு அம்மா மட்டும் இருப்பாங்க. அதுனால அப்பப்ப எங்கப்பா எங்கள பார்க்க வருவாரு. சரி அந்த பள்ளிப்பருவத்துல எங்க அம்மான்னா, நான் வாங்கின அடி மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனா எங்கப்பா பத்தின நினைவுகள் தென்றல் மாதிரி தான் அதிகம் இருக்கும் ....


    - அவருக்கு பிள்ளைங்கனா பிடிக்கும். ஊருக்கு போனா எங்க நாலு பேருக்கும் அவர் தான் குளிப்பாட்டுவார். அவர் குளிப்பாட்டுறதே ஒரு அழகு. நிறைய நொரையோட, ஒவ்வொரு விரல் சந்துளையும் குறுகுறுப்போட தேச்சு.... இப்ப நினைச்சாலும் மறக்க முடியாது. என் பிள்ளைகளும் அதே பேரை பெற்றார்கள்.


    - அவருக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் அதுவும் நாவல்கள் ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு முறை ஏதாவது டவுனுக்கு போனா அங்க படிக்காத நாவல்களை வாங்கிடுவாரு. அவருக்கிட்ட இருந்து தான் எனக்கு நாவல் படிக்கும் பழக்கம் வந்தது. அதே போல் அவர் ரசனையும் என் ரசனையும் ஒன்றாவே இருந்தது. அவருக்கும் எனக்கும் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் தான் ரொம்ப பிடிக்கும். நான் நாவலை வச்சிக்கிட்டு படிக்க உட்கார்ந்தா "பாரு அவங்க அப்பனாட்டமே புஸ்தகத்த வச்சிக்கிட்டு படிக்க ஆரம்பிச்சிருச்சு"ன்னு சொல்வாங்க.


    - அவருக்கு சினிமா பார்க்க ரொம்ப பிடிக்கும் . ஒவ்வொரு முறை டவுனுக்கு வரும் போதும் சினிமா பார்க்காம போக மாட்டங்க. கண்டிப்பா ஊருக்கு திரும்புற அன்னைக்கு மாட்டினி ஷோ பார்த்துட்டு மாலை தான் பஸ்ல போவாரு. அவருக்கு சென்னை, திருச்சி போன்ற ஊர்கள்ல ஏதாவது இடத்த சொல்லனும்னா அங்கங்க இருக்குற சினிமா தியேட்டர் தான் அடையாள குறிகள்(landmarks ). ஏதாவது திரையரங்கத்த தாண்டி போனா, ஏதாவது அதை ஒட்டிய ஒரு நிகழ்வ பகிருவாரு. நான் வாழ்க்கையல தியேட்டர் போய் சினிமா பார்த்தது நிறைய எங்கப்பாக்கூட தான்.


    - அவருக்கு இளையராஜா பாடல்களை விட பழைய பாடல்கள், அதுவும் சுசீலா அம்மாவின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அவர்னால எனக்கும் பழைய பாடல்கள் பிடிக்கும். என் பிள்ளைகள் இருவருக்கும் அவர் பாடும் தாலாட்டு பாடல்களும் சுசீலா பாடல்கள் தான். இன்றும் நான் மனம் கலங்கிய நேரத்தில் கேட்பது அவர் பரிந்திரைத்த "மயக்கமா கலக்கமா" பாடல் தான். அதை கேட்கும்போதெல்லாம் என் தந்தை எனக்கு பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறுவது போல் இருக்கும். மனசும் கொஞ்சம் லேசாகி விடும்.

    (தொடரும்..)



  7. #17
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015

    - சின்ன வயசுல எங்க கேணில எங்களுக்கு சுரைகுடுக்கையோட நீச்சல் கத்துக்குடுக்க கூட்டிப்போவார். ஒரு முறை அப்படி நான் என் தம்பி, தங்கை போனோம். அப்ப முதல்ல எல்லோரும் படிக்கட்டுல உட்கார்ந்து இருந்தோம். ஒவ்வொருத்தரா படியில இருந்து இன்னொரு மூலையில இருந்த கிணத்த மோட்டார் பைப் வரைக்கும் சுரைக்குடுக்கை மூலமா நீச்சலடிச்சு கூட்டிப்போனார். என்னோட முறை வந்தப்ப என்ன அந்த பைப்ல விட்டுட்டு அடுத்த ஆள கூப்பிட கிளம்பினார். நான் அவர் பயத்துல கழுத்த கெட்டியமா பிடிச்சிக்கிட்டேன். அவர் விடு விடுன்னு கத்துனார். நான் விடவே இல்ல. அன்று தான் நான் கடைசியா நீச்சல் கத்துக்க போனது.


    - திருச்சி வர்ற அப்பயெல்லாம் மைகேல்'ஸ் ஐஸ்-கிரீம் வாங்கித்தருவார். அது Rs 1.50 தான்னு நினைக்குறேன். அங்க போனாலே எனக்கு ரெண்டு வெண்ணிலா கப் கிடைக்கும். எந்த கட்டுப்பாடும் கிடையாது. அப்ப அது தான் எனக்கு தேவாமிர்தம். இங்கே வந்த பிறகு ஒரு நெருங்கிய தோழி கிடைத்தார். அவளும் திருச்சி தான். அவள் அப்பா கொஞ்சம் high-end ஐஸ்கிரீம் parlor தான் கூட்டிப்போவாராம், அதுவும் எப்பவாவது. அதை கேட்டவுடன் நான் தயங்காமல் சொன்னது, அந்த high-end ஐஸ்கிரீம் parlor விட எங்கப்பா வாங்கி தந்த எந்த கட்டுப்பாடுமில்லாத ஐஸ்கிரீம் விலையில் குறைவானாலும் அது தந்த சந்தோஷ நினைவுகள் விலைமதிப்பில்லாதது.


    - அப்புறம் நாங்க வளர்ந்த பிறகு அவர் எங்களுக்கு வாங்கி வரும் அருண் ஐஸ்கிரீம் மின் கேக்-ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும்


    - ரொம்ப சின்ன வயசுல, நடு ராத்திரி ஆனாலும் எங்களுக்கு என்ன தேவைனாலும் செய்வார். Even if we are sleeping he will carry us to the toilet. I definetly dont have such patience.


    - சிறு வயதில் அவர் ஒவ்வொரு வருடமும் மாலைப்போட்டுக்கொண்டு சபரி மலை சென்றுவிட்டு வந்தபின் எங்களுக்கு வாங்கிவரும் நேந்தரங்கா சிப்ஸ், பிள்ளைகள் அனைவரும் விரும்புவோம்.


    - என் டாக்டர் விசிட்ஸ் முக்கால்வாசி என் தந்தை தான் இட்டுசென்றது.


    - என் வாழ்க்கையில் முக்கால்வாசி பஸ் பயணங்கள் என் தந்தையோடு தான். நாங்க ரெண்டு பேருமே பஸ் கிளம்பி சில மணி நேரத்துலேயே சாமி ஆட ஆரம்பிச்சிருவோம். தலை அங்க இங்க இடிக்காம இருக்க நான் எங்கப்பா மடில தலை சாஞ்சிருவேன். அதனால் நான் அதிகம் மடியில் படுத்தது என் தந்தை மடியில் தான். மத்தவங்க மடில இனி வரப்போகும் காலக்கட்டத்துல கூட சேர்த்து எண்ணிப்பார்த்தாலும் எங்க அப்பா மடில படுத்த எண்ணிக்கைய தொட முடியாது. ஹை-ஸ்கூல் வந்த பிறகு கூட மடில படுத்திருக்கேன்.


    (தொடரும்..)

    Last edited by RathideviDeva; 3rd Jul 2015 at 01:12 PM.

  8. #18
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015

    - எங்கள் வீட்டில் இரண்டு தலை முறைகளாக ஜாதகம் பார்க்க மாட்டார்கள். ஆனால் அதை உடைத்தது என் தந்தை தான். எங்கள் வீட்டில் முதல் திருமணம் என்னுடையது தான். நான் ரொம்ப சென்சிடிவ் + கொஞ்சம் ரோஷம் + சிறு அவமானம் /தோல்வி/ வலி எதையும் தாங்குறது கஷ்டம். அதுனால வரப்போற மாப்பிள்ளை என் குணம் ஏற்ற மாதிரி பொறுமை ஆனவரா இருக்கணும்னு ஜாதக பொருத்தம் பார்க்க ஆரம்பிச்சாரு. குடும்பே எதிர்த்தாலும் எனக்காக , என் வாழ்க்கைக்காக போராடுனாரு. கடைசியில அவர் எதிர்பார்த்த ஜாதக பொறுத்த மாப்பிள்ளை அமைல. ரொம்ப வருந்துனாறு. என் கண்வர கூட முதல பிடிக்கல. கல்யாணத்திற்கு பிறகு தான் பிடிச்சது. அவர் செர்டிபிகட் கொடுத்தது எனக்கு ஒரு isi தரச்சான்றிதல் கிடைச்ச மாதிரி ஒரு நிம்மதி.


    - என் தந்தையின் மீசைக்கு நான் விசிறி. அது முறுக்கு மீசையும் அல்ல. கொடுவா மீசையும் அல்ல. ஆனால் அழகான அடர்த்தியான மீசை. என் கணவருக்கு கல்யாணத்திற்கு முன் வைத்த ஒரே வேண்டுகோள், மீசை வைப்பது தான்.


    - என் இரண்டாவது பிரசவத்திற்கு என் பெற்றோர் தான் என்னோடு இங்கு இருந்தனர். முதல் சில பல நாட்கள், இரவில் என் தந்தை தான் குழந்தையோடு படுத்திருப்பார். நானும் அதே அறையில் படுத்திருப்பேன். என் கணவராலும் அம்மாவாலும் இரவு நேரங்களில் அதிகம் விழித்திருக்க முடியாது. அதனால் இந்த ஏற்பாடு. ஒவ்வொரு முறை குழந்தை இரவில் அழும் போதும் இருட்டுலேயே என்னிடம் பாலூட்ட கொடுத்துவிட்டு எழுந்து சென்று விடுவார். பல முறை எழுந்தாலும் எப்போதுமே ஒரு எரிச்சலோ / முனகலோ காட்டியதில்லை. அது மட்டுமில்லாமல் குழந்தையின் ஈர துணிகளை நாள்தோறும் நானும் அவரும் மாறி மாறி அலசி காயப்போடுவோம். அதுவரை நான் எந்த தந்தையையும் அப்படி பார்த்ததில்லை. அதற்கு நன்றி என்று சொல்லி அவரை எட்டிநிப்பாட்டப்போவதில்லை.


    - ஒவ்வொரு முறை என் குழந்தைகள் செல்லும் போதும், பட்டாசுகளை அவர்களுக்கு வாங்கி வைத்திருப்பார். என் பிள்ளைகள் எந்த மாதத்தில் சென்றாலும் அவர்களுக்கு அப்போது தான் தீபாவளி.


    - இப்போதும், தான் படித்த புத்தகத்தில் தனக்கு பிடித்த விஷயத்தை என்னிடம் தான் அலசி ஆராய்வார். தன் பள்ளி வாழ்க்கையையும் கொஞ்சம் பகிர்ந்திருக்கிறார். தான் அடித்த முதல் திருட்டு தம்மையும் என்னிடம் சொல்லி இருக்கிறார்.

    தொடரும்...(ஐயோ பயப்படாதீங்க!! இன்னும் கொஞ்சமே கொஞ்சம் தான். தூக்கம் வர்றதுனால மீதிய நாளைக்கு வந்து சுபம் போட்டு முடிச்சிடுறேன். கொசு வத்திய இப்போதைக்கு அணைச்சிட்டு நாளை வந்து மீண்டும் சுத்த வைக்குறேன். )

    Last edited by RathideviDeva; 3rd Jul 2015 at 01:17 PM.

  9. #19
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015

    வந்துட்டேன்.... கொசு வத்தி சுருள் மீண்டும் சுழலுது .....டொய்...............ங்


    - எனக்கு board-games அறிமுகம் செய்து வைத்தவரே என் தந்தை தான். சிறு வயதிலேயே chinese-checkers , chess ரெண்டும் எனக்கு சொல்லிக்கொடுத்து என்னோடு விளையாடியதும் அவர் தான். என் பிள்ளைகள் பள்ளியிலோ வெளியிலோ தான் அனைத்து விளையாட்டும் கற்றுக்கொண்டார்கள். அவரை போல் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று நான் chinese-checkers மட்டும் கஷ்டப்பட்டு பொறுமையுடன் சொல்லித் தந்தேன்.


    - எனக்கு ஞாபகம் இருக்கிறது, நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது, ஊருக்கு செல்லும் முன் என்னை பார்க்க வேண்டும் என்று , வேட்டி சட்டையுடன் என் வகுப்பில் நுழைந்து எங்கள் மிஸ்சிடம் என் வீட்டில் அழைக்கும் பெயரை சொல்லி , அவளை பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஒரு நொடி நான் அதிர்ந்தேன். என் வீட்டுப் பெயர் யாருக்கும் தெரியாது. யாரும் அப்படி இல்லையே என்று வகுப்பில் ஒரு சலசலப்பு(அது இரு பாலர் பள்ளி). வேறு வழி இல்லாமல் நான் எழுந்து நின்றேன். அப்பொழுது வீட்டுப்பெயரை சொன்னதோடில்லாமல் வேட்டியில் பள்ளிக்கு வந்ததை பெருத்த அவமானம் என்று நினைத்தேன் (நீங்கள் வேட்டி மட்டுமே கட்டுபவராக இருந்தாலும் ....) அது சுத்தமான சலவை செய்த வேட்டியாக இருந்தாலும் எனக்கு அன்று தெரியவில்லையே அப்பா. என்னவோ சிறு பிள்ளை தனமான கீழ்த்தரமான எண்ணம், வெட்டி என்றால் படிக்காத பட்டிக்காட்டான் கட்டுவது என்று.
    இது இன்று வரை உறுத்திக் கொண்டிருக்கிறது. நான் வார்த்தையால் உங்களை வதைக்கவில்லை எனினும், அன்று தோன்றிய என் எண்ணம் இன்னும் என்னை வதைக்கிறது.


    - சிறு வயதில் ஊரில் இருக்கும் பொழுது என்னை தினம் கோயிலுக்கு அழைத்து செல்வீர்கள். அதில் ஒவ்வொரு முறையும், மூலவர், உற்சவர், சாமி சிலையில் இருக்கும் ஒரு சில எளிதில் கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை பற்றின விளக்கம், நவக்ரஹத்தை சுற்றி வரும்போது ஒவ்வொன்றின் பெயரும் அதன் திசையும் சொல்வது, சைடு சாமிகளின் சிறப்பை பத்தி சொல்றது..... இவை அனைத்தும் இன்றும் அவ்வப்போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.


    - நீங்கள் பணக்கஷ்டமோ மனக்கஷ்டமோ வந்துவிட்டால் தொபுக்கடீர் என்று சாமியிடம் விழுவது எனக்கு சிரிப்பை தரும். ஏன் இப்படி கோழையாக வாழ்க்கையின் ப்ரிச்சனைகளை சந்திக்க தைரியமற்று ஓடி ஒளிந்துகொள்கிரீர்கள் என்று சாடுவேன். (நானும் ப்ரிச்சனை என்றால் ஓடி ஒளிவேன். அதற்கு என் வளர்ப்பே காரணம் என்று அவரை குற்றம் சொல்வதற்கு ஒரு வாய்ப்பு) ஆனால் இன்று தான் தெரிகிறது, வாழ்க்கையின் சுமூகமான பயணத்திற்கு, யாரோ நம் ப்ரிச்சனையை தீர்ப்பார், என்ற ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை தேவை என்று. உங்கள் அளவுக்கு எனக்கு அந்த நம்பிக்கை இல்லையே என்று பல தரம் வருந்தி உள்ளேன்.


    - என்றாவது நாம் வாழ்க்கையின் ப்ரிச்சனைகளை பற்றி பேசும் பொழுது , நீங்கள் உங்கள் சுய அலசல் மூலம் உங்களை திருத்திக்கொன்டதை எனக்கு பகிர்வீர்கள். இன்றும் சொல்வீர்கள்," நான் எவ்வளவு விடாக்கொண்டனாக இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பணியாட்கள் கூட என்னை விரும்பும் அளவுக்கு மாறிக்கொண்டேன். அதுமட்டுமல்ல புகுந்த வீட்டுக்கு ஒரு பெண் தன் கணவனை மட்டுமே நம்பி வருகிறாள். அவள் தன் அத்தனை ஆண்டு வாழ்க்கை முறையை துறந்து வரும் பொழுது ஒரு கணவனின் உறுதுணை எவ்வளவு முக்கியம். அதை நான் காலங்கடந்து அனுராதா ரமணன் /சிவசங்கரி(யாரோ ஒருவர். எனக்கு சரியாக ஞாபகம் இல்லை ) கதை படித்து உணர்ந்து உன் அம்மாவுக்கு விட்டுக்கொடுத்து நல்லா வச்சிருக்க முயற்சிக்கிறேன்." இந்த மாதிரி தவறை உணருகிற குணம் எனக்குப்பிடிக்கும். நம் இருவர் குணமும் இதில் ஒன்றே.
    அதே மாதிரி நானும் இதுவரை உங்களை பற்றி விமர்சிக்க நான் தயங்கியதில்லை. அந்த அளவுக்கு நமக்குள் ஒரு comfortability.


    - நான் பெண்மையில் தொடர்ந்து ரெண்டு மாதம் பரிசு வாங்கிய பிறகு , மூன்றாவது முறை அவராகவே "என்னம்மா இந்த மாசம் ஏதும் பரிசு புத்தகம் வரலையே"ன்னு சொன்னது ,அப்படியே நோபல் பரிசு(வெறும் கனவு /பீல் தானே, அதுக்கு என் லோக்கல் விருத நினைக்கணும்) வாங்கின ஒரு பீல். என்ன விதமான ஒரு நம்பிக்கை தன் மகள் மீது. அது மட்டுமில்லை பெண்மையில் கலந்து பகிர்ந்த என் கருத்துக்களை பார்த்து, என்னை கல்லாக மட்டுமே பார்த்த என் கணவருக்கும் அம்மாவுக்கும் இடையில்(இவங்க படிக்க கூட இல்ல... இணையத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்கியேன்னு செம்ம காண்டு தான் ) , எனக்குள் இருந்த சிலையை மட்டுமே பார்த்த சிற்பி. "வாழ்க்கை ஒருமுறை தான். அதனால் கொஞ்சம் சுயநலமாக இருப்பது தப்பில்லை. நீ எழுது, படி எது வேண்ணா செய். ஆனா நல்லா தூங்கு, உடம்ப பார்த்துக்கோ , நிம்மதியா இரு" ன்னு சுருக்கமா முடிச்சிக்கிட்டார்.

    இன்று வரை நீங்கள் எங்களுக்கு கட்டுப்பாடு விதித்ததில்லை, திட்டியதில்லை, அடித்ததில்லை. இப்படித் தான் வாழ்க்கை வாழ வேண்டும் என்று கற்றுகொடுத்ததில்லை. ஆனால் நாங்கள் நன்றாக வாழ்கிரோமென்றால் எங்களுக்கே தெரியாமல் எங்களுக்குள் நீங்கள் விதைத்த விதை தான் காரணம். அது எங்களை வழி நடத்தி செல்கிறது.


    நமக்குள் ஒரு நெகிழ்வான / உணர்வுப்பூர்வமான நிகழ்வு நடந்தது இல்லை. ஒரு பாச அரவணைப்பு /ஸ்பரிசம் இருந்ததில்லை. நமக்குள் என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை, தோழமை + பரஸ்பர மரியாதை + பாசம் + கொஞ்சம் இடைவெளி + உரிமை + நலம் விரும்பி இப்படி எல்லாம் சேர்ந்து கலந்து செய்த ஏதோ ஒரு கலவை.


    என் கணவரிடமும் என் பிள்ளைகளிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.... " உங்க அப்பாவ விட என் அப்பா தான் பெஸ்ட்"ன்னு. ஏன் இதை என் மகனுக்கு பிறக்கும் பிள்ளையிடம் கூட சொல்வேன்.


    தோழமைகளே, இதை எழுத வேண்டும் என்று நினைத்த பொழுதே, தொடர் சங்கிலியாக என் அப்பாவைப் பற்றிய நினைவுகள் என்னை அலைக்கழித்தன. எனக்கே அலுப்பு தட்டி இனி இதை பற்றி எழுதுவேனா என்று தெரியாது. அதனால் தான் முழு மூச்சாக பெரிதானாலும் பரவாயில்லை எனப்போட்டுவிட்டேன். எழுதிய பிறகு தான் உணர்ந்தேன், என் நினைவடுக்கில் கூட, மற்றவர்களை விட என் தந்தையே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார் என்று, என்னை எந்தளவுக்கு பாதித்திருக்கிறார் என்று. இந்த நினைவுகள் அனைத்தும் என் இறுதி பயணம் வரை என்னோடு வரக்கூடியவை.


    என் அனுபவங்களை பகிர வாய்ப்பளித்து அதோடு அதை பொறுமையாக படித்து என் சந்தோஷத்தை பன்மடங்காக்கிய தோழமைகளுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!!

    Last edited by RathideviDeva; 3rd Jul 2015 at 11:10 PM.

  10. #20
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015

    இன்று வரை நீங்கள் எங்களுக்கு கட்டுப்பாடு விதித்ததில்லை, திட்டியதில்லை, அடித்ததில்லை. இப்படித் தான் வாழ்க்கை வாழ வேண்டும் என்று கற்றுகொடுத்ததில்லை. ஆனால் நாங்கள் நன்றாக வாழ்கிரோமென்றால் எங்களுக்கே தெரியாமல் எங்களுக்குள் நீங்கள் விதைத்த விதை தான் காரணம். அது எங்களை வழி நடத்தி செல்கிறது.
    Just an add-on ....
    கட்டுப்பாடு இல்லாவிட்டாலும் நீங்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை - அது பல சக்கரவியூகங்களுக்கு சமம். நான் தடம் மாறி செல்லாமல் இருக்க எனக்கமைந்த பாதுகாப்பு அரண். இன்றுவரை அந்த அரண் தான் என்னை காக்கிறது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter