Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1052Likes

Fathers Day Contest 2015


Discussions on "Fathers Day Contest 2015" in "Special Contest" forum.


  1. #21
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,548

    Re: Fathers Day Contest 2015

    Friends,

    Pls. drop your comments in the below given link...

    Fathers Day Contest 2015 - Comments



    Sponsored Links

  2. #22
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015

    என் அப்பா திருச்சிக்கு அருகில் முசிறி என்னும் ஊருக்கு பக்கத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி என்னும் குக்கிராமத்தில் பிறந்தார்...வீட்டுக்கு மூத்த பிள்ளை . இரு தம்பிகள், ஒரு தங்கை.விவசாயம், மற்றும் ஆடு வளர்ப்புதான் தொழில்..ஓரளவு வசதியான குடும்பம்..தாத்தா ஊருக்குள் பெரிய மனுஷன். அதாவது இந்த பஞ்சாயத்து எல்லாம் செய்வார்களே, அதில் இவரும் ஒரு தலைவர்..

    உள்ளூர் பள்ளியில் 5 ஆம் வகுப்புவரை அப்பா படித்தார்...அதும் ஆடு மேய்க்க போகும்போது அப்படியே பள்ளிக்கு போவது!! படிக்க ரொம்ப ஆசை, பின்னாட்களில் எங்களிடம் சொல்லுவார், உங்களையெல்லாம் படிக்க வைத்த மாதிரி என்னை என் அப்ப்பா படிக்க வைத்திருந்தால் நான் பெரிய ஆளாயிருந்திருப்பேன்..என்பார்.15 வயது நிரம்பிய நிலையில் உள்ளூர் மளிகை கடை செட்டியார் பினாங்கு செல்லும்போது அப்பாவையும் தன்னோடு அழைத்து போகிறேன் என்று தாத்தாவிடம் கேட்க , அந்த நாட்களில் கடல் கடந்து மூத்த பிள்ளையை அனுப்ப மாட்டார்கள், எனவே ஊர் கட்டுப்பாடு மீறக் கூடாது என பாட்டியும் தாத்தாவும் மறுத்த நிலையில் அப்பா பிடிவாதமாக கிளம்புகிறார். ஊர் எல்லையில் ஆட்டை நிற்க வைத்து அது மீது தண்ணீர் தெளித்து !!! அனுமதி கேட்கிறார்கள்..அது சிலிர்த்ததும்தான் அனுப்பிகிறார்கள்.!!!!


    கடல் பயணம்...பினாங்கு சென்று மளிகை கடையில் வேலை..அதோடு கையில் கிடைக்கும் புத்தகங்கள் எல்லாம் படிக்கும் வழக்கம்.அப்படியே உலக அறிவு, அரசியல் அறிவு, கதைகள் படிக்கும் அறிவு , வியாபார நுணுக்கங்கள் என்று வளர்கிற நேரம் , அவரின் முதலாளி மகளை திருமணம் செய்ய போகிறார் என்று தாத்தாவுக்கு யாரோ சொல்லவும் உடல்நிலையை காரணம் சொல்லி, ஊருக்கு திரும்ப வர சொல்ல்கிறார்கள். அப்பாவுக்கு சீரியஸ் என்று ஊர் திரும்பியவரை மறுபடியும் ஊர் எல்லையில் நிறுத்தி வைத்து அதே ஆடு !!!! இந்த முறை அது சிலிர்க்கவே இல்லை!!!பெரியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லவும், உலக அனுபவம் பெற்ற அப்பா முடியாது என்று மறுக்க ஊரை விட்டு வெளியேற்ற படுகிறார்.

    பாட்டியின் தம்பி இலங்கையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார்..அங்கெ அப்பாவை போக சொல்கிறார் தாத்தா...மாமா வீட்டுக்கு அப்பா செல்கிறார்.. அங்குதான் அம்மா இருக்கிறார்கள்..இப்போ அம்மாவின் கதை..அம்மாவும் அப்பா பிறந்த அதே வீட்டில் பிறந்தவர்...அத்தை மகள்..4 அண்ணன்களுடன் பிறந்த ஒரே பெண் அம்மா. அம்மா வழி தாத்தாவின் ஊர் பக்கத்து ஊர்தான்..அங்கு கடும் பஞ்சம், அப்போதான் இலங்கையில் தங்கம் தேயிலை தோட்டத்தில் கொட்டி கிடக்குது.. அங்கே போனால் சீரும் சிறப்புமா வாழலாம் பணம் நிறைய சம்பாதிக்கலாம், திரும்ப இந்தியா வந்து மாடி வீடு கட்டலாம்..என்றெல்லாம் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை கேட்டு அம்மாயி ( அம்மாவின் அம்மா ) தாத்தா குடும்பத்துடன் இலங்கை புறப்படுகிறார்கள்.... கிராமம் கிராமமாய் தமிழர்கல் ஊரை காலி செய்தும், பெண்களை இங்கே விட்டு தாங்கள் மட்டும் செல்பவரும், குடும்பத்தோடு செல்பவருமாய்...இதுதான் பரதேசி படத்தில் பாலா காட்டியிருப்பார்.. இலங்கை என்று குறிப்பிடாமல்...

    கொடுமையான் பயணம் அது..கப்பலில் ஆட்டு மந்தைகள் போல் அடைத்து போகும் வழியிலேயே பலர் உயிர் இழந்த பரிதாபம், கப்பல் பயணம் ஒத்து கொள்ளாமல் வாந்தி, வாயிற்று போக்கால் பாதி பேர் இறக்க மீதி பேர் தலை மன்னார் என்னும் நுழை வாயிலில் போய் இறங்கினார்கள்..அங்கிருந்து நீண்ட நெடும் பயணம்.. இப்போது போல் சாலை வசதிகள் இல்லாத காலம் அது.வெள்ளையர்கள் குளிர்ச்சியான பிரதேசம் தேடி கண்டு பிடித்த இடம்தான் நுவரேலியா கண்டி என்னும் மலை பிரதேசம்..அடர்ந்த காடு , அதை சீர் படுத்தத்தான் கடுமையான உழைப்பாளிகளான நம் இந்திய தமிழர்கலை அடிமைகளாக நம் தமிழர்கலெ பணத்துக்காக ஏ மாற்றி விற்றார்கள். வெள்ளையர்களின் கைக்கூலிகள் ....

    தலை மன்னாரில் இருந்து கண்டி நோக்கி நீண்ட பயணம்.வழியில் இறந்தவர்கள் போக பிழைத்தவர்கள் மலை பிரதேசம் போனார்கள்.எங்கள் ஊர் அதிலும் தூரம். ராசாபத்தனை என்னும் டீ எஸ்டேட்...கண்ணுக்கு எவ்வளவு குளிர்ச்சியோ, அவ்வளவு குளிர்..கடும் பனி,அடாத மழை,அட்டைகள் , பாம்புகள்,கொடிய விலங்குகள் , வெப்ப பிரதேசத்தி இருந்து போன நம் மக்கள் அதிர்ந்து போனார்கள்..லயன் வீடுகள் என்று சொல்லப்படும் ஒரே ரூம் கொண்ட வரிசை வீடுகள், மேலே தகரம்.போர்த்திக் கொள்ள கம்பளி, பொதுவில் ஒரு குளியறை .தங்கம் கிடைக்கும் என்று சொன்ன தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் வேலை..அங்குள்ள மக்கள் சிங்களர்கள் கடும் வேலை செய்ய மாட்டார்கள்.நம் தமிழனெ கடும் உழைப்பாளி. காடுகளை திருத்தி தேயிலை பயிரிட்டு கொழுந்து பறித்து அங்கே வாழ பழகி கொண்டார்கள்..அங்குதான் அம்மா 2 வயதிலிருந்து வளர்ந்தார்கள்.

    அப்பா இப்போது இலங்கை போகிறார்..மாமா கூட்டி வர போனவர் ரயில் வரும் நேரம் தாண்டி போனதால், அப்பாவே விசாரித்து வந்து விட்டார்...அம்மா அப்போது தேயிலை பறித்துக் கொண்டு இருந்தாராம்!! நீங்கள் படங்களில் பார்த்திருக்கலாம்..ஏற்ற இறக்கமாக இருக்கும் தேயிலை செடிகள்..சரிவுகள் நிறைய இருக்கும்.அப்படி ஒரு சரிவில் அம்மா இருந்தாராம்.கீழே பேருந்து செல்லும் பாதை..அப்பா வந்து இறங்கியதும் மழை தூரலில் இருந்து நனையாமல் இருக்க கையில் இருந்த கைப்பையை தலைக்கு மேல் பிடித்தபடி எஸ்டேட்டுக்குள் செல்லும் வழியில் மாமா வருகிறாரா என்று பார்த்தாராம்...அம்மா சொல்வாங்க அந்த காட்சி இன்னும் மனதில் இருக்கு என்று!!! அந்த வழியே போகும்போதெல்லாம் நாங்க அம்மாவை கலாட்டா பண்ணுவோம்.!!


  3. #23
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015

    அம்மா கூட வேலை செய்பவர்கள் யாரு என்று கேட்டதும் அப்பாவை யாருக்கும் தெரியவில்லை...உறவினர் ஒரு பெண் இன்னிக்கு உன் மாமன் ஊரில் இருந்து ( இந்தியாவை ஊர் என்றுதான் சொல்வோம்.) வரதா சொன்னாங்களே, அவர்தான் போல, என்று அப்பாவை யார் வீட்டுக்கு வந்துருக்கிங்கன்னு கேட்டு இவதான் உங்க மாமன் பொண்ணு, வீட்டுக்கு கூட்டி போவான்னு அம்மாவை அனுப்பியிருக்காங்க!! அம்மாக்கு அப்போ 13 வயதுதானாம்!!அப்பாக்கு 20 வயது இருக்கும்...அம்மா முன்னாடி போக அப்பா போயிருக்கார்..நான் அம்மாவை அடிக்கடி கேட்பதுண்டு, அப்பகிட்டா நிஜமாவே நீங்க பேசலி யான்னு !!!! அம்மா அட போம்மா... அந்த காலத்துல எனக்கு ஒண்ணுமே தெரியாதும்பாங்க..

    அப்பாகிட்ட கேட்டா, கத்தரிக்காக்கு காலு கை மொளைச்ச மாதிரி உருண்டுகிட்டு உங்கம்மா போனா அப்படிம்பாரு......உண்மைல என்ன நடந்ததுன்னு எனக்கும் தெரியாது!!!அப்பா போன பிறகுதான் மாமா வந்து சேர்ந்து இருக்காரு!!!அப்பா வியாபாரம் பண்ணும் யோசனையில்தான் வந்துருக்காங்க, முதலில் ஊரை சுற்றி பார்ப்போம்ன்னு இலங்கை முழுதும் போயிருக்காங்க..இரத்தினபுரி என்னும் இடத்தில் பாட்டியின் உறவினர்கள் இருக்காங்க, அங்கே கொஞ்ச நாள் இருந்துட்டு திரும்பவும் இந்தியாவுக்கே திரும்பிட்டாங்க...மறுபடியும் கிராமம்,இப்போ அவ்வளவு கெடுபிடி இல்ல..கல்யாணம் பண்ணலாம்ன்னு அம்மாவை இந்தியா வர சொல்லி பாட்டி கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க........


  4. #24
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015

    அப்பா தன வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை டயரியில் குறித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்.கல்யாண செலவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். 50 ரூபாய்கள் தான் செலவு !!! அம்மாவின் பட்டு புடவை 13 ரூபாய்!!இன்னும் அப்படியே இருக்கிறது அந்த சேலை!!!அண்ணன் வீட்டில் சாமி கும்பிட வைத்துருக்கிறார்கள்...குங்கும நிறம்...அப்பாவின் டயரிகள் அண்ணனிடம் இருக்கு, அதன்னால் என்னால் தேதி சரியா குறிப்பிட முடியலை.

    அம்மாவுக்கு இந்தியா புதுசு..கிராம வாழ்க்கை, வெய்யில்,உணவு,எதுவுமேபிடிக்கவில்லை.பழக்க்மில்லாத வயல் வேலைகள், கேழ்வரகு அரைத்தல், இடித்தல், தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் செல்வது என்று சோர்ந்து போனார்கள். பாட்டியின் அதட்டல், உருட்டல்கள் மிரள வைக்கிறது..அரிசி உணவே கிராமத்தில் இல்லை. கம்பு, கேழ்வரகு, சாமை இதெல்லாம் அவங்க பார்த்ததே இல்லை.இலங்கையில் ரொட்டி, பாண் என்று சொல்லப்படும் பிரெட் தேங்காயில் செய்யும் சம்பல்,டீ இவற்றில் வாழ்ந்தவர்களுக்கு இருப்பு கொள்ளாமல் அப்பாவிடம் என்னை சிலோனில் கொண்டு போய் விடுங்க, என்று அழுது இலங்கை வந்து விட்டார்கள்.

    அப்பா கிளம்பும்போது ஒரு தம்பியை கூடவே அழைத்துக் கொண்டும், கடைசி தம்பியை பாட்டி தாதாவை பார்த்துக் கொண்டு மற்றும் வயல் வரப்புகளை அவரே எடுத்துக் கொள்ளுமாறும் சொல்லிவிட்டு தங்கையை அம்மாவின் அண்ணனுக்கு மணம் பேசி வச்சுட்டு கிளம்பும் பொது பாட்டி காதில் அப்பா அணிந்திருந்த வைர கடுக்கன்களை கேட்கிறார், அதை கொடுத்துட்டு மாதா மாதம் பணம் அனுப்பி வைப்பதாக உறுதி சொல்லி பயணம்..

    இந்த பயணத்தில் ஒரு சுவாரஸ்யம்!! கட்டு சோறு கட்டிக்கிட்டு காவிரிக்கரை வந்து ஸ்ரீரங்கம் கோவில் சாமி கும்பிட்டு மணலில் அமர்ந்திருக்கும்போது அம்மா இலங்கை போனால் காலில் அணிந்திருக்கும் கொலுசு, மெட்டி பார்த்து தோழிகள் கிண்டல் செய்வார்கள் என்று எல்லோரும் அசந்த நேரம் மணலில் குழி தோண்டி புதைத்து விட்டார்களாம்!!பாட்டியும் அம்மாயியும் கேட்டதுக்கு தொலைஞ்சு போச்சு என்று திட்டு வாங்கிட்டு வந்து சேர்ந்தாங்களாம்!!!! எவ்வளவு முட்டாள் நான் என்று பின்னாடி சொல்லி சிரிப்பாங்க!!!

    இலங்கை வந்து அம்மா கொழுந்து பறிக்கும் வேலை, கூடவே அத்தையும் மாமாவை கல்யாணம் செய்து பக்கத்திலேயே வந்துட்டாங்க,அப்பா தம்பிக்கும் அவருக்கும் வேலை தேடி மறுபடியும் இரத்தினபுரி போயி அவரின் உறவினர்கள் பக்கத்தில் தம்பிக்கு வேலை ஏற்பாடு செய்துட்டு, அவர் ஒரு எஸ்டேட் பள்ளியில் வாத்தியார் வேலை பார்த்தார். சில நண்பர்கள் உதவியுடன் துணி வியாபாரம், அப்போது சீனர்கள் நல்ல துணி வகைகள் கொண்டு வந்து எஸ்டேட்களில் விற்பனை செய்வார்கள்..அப்போவே பாருங்க சீனா எப்படி இருந்துருகுனு!!!!
    அவர்களிடம் மொத்தமா வாங்கி தலையில் தூகிக் கொண்டு எல்லா டீ எஸ் டேட்களிலும் போயி விற்க ஆரம்பித்தார்..மாதம் ஒரு முறை வீட்டுக்கு வருவார். அம்மாயி தாத்தா மாமாமார் அம்மா பக்கத்தில் பார்த்தக் கொண்டார்கள்.

    கொஞ்ச வருடங்களில் பக்கத்து டவுனில் ஒரு கடை பிடித்து அப்பாவும் இரு நண்பர்களும் சேர்ந்து வியாபாரம் பண்ணுகிறார்கள்.சூடு பிடித்த நிலையில் அருகில் இன்னொரு சிறிய டவுனில் தனி கடை தொடங்குகிறார்.அம்மா தொடர்ந்து வேலை செய்கிறார்...எல்லோரும் முதலாளியம்மா நீ ஏன் இன்னும் வேலை செய்கிறாய் என்பார்களாம்...இதற்கிடையில் 4 ஆண்பிள்ளைகள் 1 பெண் என் குடும்பம் பெருகியது..எங்கள் குடும்பம் பெரியது , 11 பேர் !!!8 ஆண்கள் 3 பெண்கள்...!!! என் பெரிய அண்ணனுக்கு 23 வயதில் நான் பிறந்தேன்!! எனக்கு பின் ஒரு தம்பி...!! தன 30 வயதில் அப்பா ஒரு தேர்ந்த வியாபாரியாகிட்டார்...8 ஆவது பையன் என் கடைசி அண்ணன் பிறந்த நேரம் அப்பா சொந்த கடை வீட்டு க்கு குடி பெயர்ந்துட்டார்...

    அந்த வீட்டில்தான் நான் ,என் அக்கா, தம்பி பிறந்தோம்.. நாங்கள் செல்வ செழிப்பொடுதான் பிறந்து வளர்ந்தோம்...பசுமலை என்னும் அழகிய ஊர்... அங்குதான் என் கனவுகளும் மகிழ்ச்சியும் இன்னும் இருக்கு...எங்களுக்கான அடையாளம் கௌரவம் மரியாதை எல்லாம் அப்பாவின் பெயர்ல்தான் இருக்கு...


  5. #25
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015

    குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்ததும் நம் மக்களுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சாங்க. நம் தமிழ் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கணும்ன்னு ஆசை. அங்குள்ள சிங்கள பள்ளிகளில் அவங்க படித்து பள்ளி முடிந்ததும் தமிழ் பிள்ளைகள் படிக்கும் நிலை. 2 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் முடிய 6 மணி ஆகிடும். சீக்கிரம் இருட்டும் ஊர் அது.இங்கே மாதிர் பேருந்து வசதிகள் அதிகம் இல்லை.. தொலை தூரத்தில் இருக்கும் எஸ்டேட்களில் இருந்து பெண் பிள்ளைகள் வந்து படிப்பது கஷ்டம்.


    தமிழ் பள்ளி கட்டலாம் என்று முடிவெடுத்து அப்பாவும் அவரின் நண்பரும் சேர்ந்து நன்கொடை வசூலித்தும் அரசாங்கத்திடம் படை எடுத்தும் முயற்சி செய்தார்கள்.அருமையான ஆசிரியர்கள் துணை நின்றார்கள். அவ்வளவு பெரும் என் மதிப்பிற்குரிய யாழ் ஆசிரியர்கள்..அவர்களிடம் நான் கற்ற கல்விதான் எங்களை முன்னேற்றியது...உயிரை கொடுத்து பாடங்கள் நடத்துவார்கள்..நம் பிள்ளைகளுக்கு கல்வியில் பெரிய ஆர்வம் இல்லை...வீடு வீடாக போய் அழைத்து வரும் வேலையை அனைவரும் செய்தார்கள்..பள்ளிக்கட்டிடம் எழும்பியது.. அப்பா குத்து விளக்கேற்றி மந்திரி ஒருவர் அடிக்கல் நாட்டி பள்ளி கம்பீரமா எழுந்தது...

    அது எங்களுக்கு இன்னொரு வீடு...2ஆம் வகுப்பில் இருந்து நான் அங்குதான் படித்தேன்..அத்தனை தமிழ் பிள்ளைகளும் படிக்க ஆரம்பித்தார்கள்.. யாழில் இருந்து வரும் ஆசிரியர்கள் தங்குவதற்கு அப்பா ஒரு வீடு கட்டியிருந்தார்...எங்கள் வீட்டில் உணவு அருந்த வருவார்கள்.. சொந்த பிள்ளைகள் மாதிரி படிப்புடன் ஆடல் பாடல் போட்டி தேர்வுகள் எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தார்கள்..அவர்கள் மெத்த படித்தவர்கள்.. அறிவில் சிறந்தவர்கள்..அவர்களிடம் படித்தால் நம் பிள்ளைகள் நல்லா வருவார்கள் என்று அப்பா எண்ணினார்..எங்கள் பள்ளி எங்கு போனாலும் போட்டிகளில் வென்று வரும்..

    எனக்கு தமிழ் சொல்லி கொடுத்த ராஜதுரை மாஸ்டர், அவரின் முகம் இன்னும் என் மனதில் நிற்கிறது..தனியா அவங்களுக்கு எல்லாம் நன்றி சொல்லணும்...கடைசியில் தனி தனியா சொல்றேன்..10 வகுப்பு தேர்வில் நான் பள்ளியில் முதல் மாணவி..அப்பாவின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை...எல்லா ஆசிரியர்களும் கொண்டாடி தீர்த்தார்கள்.. உயர் கல்விக்கு நான் வேறு பள்ளிக்கு சென்று விட்டேன்....இன்று அப்பள்ளி உயர் நிலை பள்ளி ஆகிவிட்டது.. அப்பாவின் நினைவு நாளை அப்பள்ளியில் அஞ்சலி செலுத்தி கொண்டாடுகிறார்கள்..அப்பாவின் படம் பெரிதாக உள்ளதாம்...பார்த்தவர்கள் சொல்லும் பொது என் மனம் பூரிக்கிறது..


  6. #26
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015

    அப்பாவின் வாழ்வில் அடுத்து அடுத்து வெற்றிகள்தான்...அவரின் மற்றைய குணங்களை இப்போ நான் நினைத்து பார்க்கிறேன்.பெரிய படிப்பரிவிலாதவராய் இருந்தவர் தன முயற்சியிலேயே படிக்க ஆரம்பித்தார். கல்கியில் வரும் அத்தனை தொடர்களையும் பைண்ட் பண்ணி சேகரித்து வைத்திருந்தார்..மாதருள் மாணிக்கம் எனும் காந்தியின் சரிதை, தியாக பூமி , பொன்னியின் செல்வன்,என்று ஒரு புறம்...வள்ளலார் மேல் அளவற்ற பக்தி, அவரின் அருட்பெரும் ஜோதி போன்ற புத்தகங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.,மற்றும் தமிழ் நாட்டில் இருந்து வரும் குமுதம் , கல்கண்டு, குண்டூசி,விகடன்,பேசும்படம் போன்ற அத்தனை இதழ்களுக்கும் ஏஜென்சி எடுத்து விற்பனை செய்தார்..


    நாங்கள் பிறக்கும்போதே இவற்றையெல்லாம் படித்து வளர்ந்தோம்..எல்லா கதைகளும் பைண்ட் பண்ணி ஒரு குட்டி நூலகமே எங்களுக்கு அமைத்திருந்தார்.என் .எஸ் . கிருஷ்ணனின் பரம ரசிகர்.அவரின் நகைச்சுவை அடங்கிய ஒலி நாடாக்களை எப்போதும் கேட்டு மகிழ்வார்.கண்ணதாசனின் பாடல்கள்,சிவாஜியின் நடிப்பு,டி.எம் .எஸ் அவர்களின் குரலுக்கு அடிமை..கண்ணதாசனின் தத்துவ பாடல்களை வரிக்கு வரி சிலாகித்து சொல்லுவார்.இலங்கை அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பார்.அம்மாவுக்கு தினம் அவர் பேப்பர் படித்து சொல்லும் அழகெ அழகு..சமயத்தில் என்னை உரக்க படித்து காட்ட சொல்வார். தமிழ் ல ள ழா நன்கு உச்சரிக்க சொல்லுவார்..பள்ளியில் பின்னாட்களி என் மேடை பேச்சு போட்டிகளுக்கு இவை பெரிதும் உதவியது.


    ஒரு சம்பவம் என் மனதில் இன்னும் நிழலாடுகிரது..பத்திரிக்கை ஏஜன்ட் ஆதலால் ஆசிரியர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார்.அப்போது தமிழ்வாணன் அவர்களுக்கு கருப்பு கண்ணாடி மட்டும் வரைந்து சென்னை முகவரிக்கு அனுப்புவார்!!! அவர் பதிலுக்கு அப்பாவின் முதல் எழுத்து மட்டும் போட்டு இலங்கை என்று அனுப்புவார்!! அவை எங்களுக்கு பெரிய அதிசயமாய் இருக்கும்..தமிழ்வாணன் அவர்களை பற்றி தெரியாதவர்களுக்கு .....அவரின் துப்பறியும் கதைகள் அந்நாட்களில் மிக பிரபலம், கருப்பு கண்ணாடி அணிந்திருப்பார் அதில்...

    அவ்வையாரின் வரிகளை எங்களுக்கு விளையாட்டாய் சொல்லி கொடுப்பார். ஏதாவது வேலை சொன்னால் ஓடி விடுவோம், அப்போ, ஏவாமல் பணி செய்திடுவோம் என்பார்!!!ரொம்ப சிக்கனம்மா இருப்பார். வீடு பெருக்கும்போது கடையில் இருந்து பொருட்கள் அடுக்கும்போது ஏதாவது சிறிய பொருட்கள் தவறி விழுந்தால் அதை எடுத்து வைக்காமல் அப்படியே பெருக்கி தள்ளிடுவோம்! அப்போ , அது பொருள் இல்லம்மா 10 காசு..காசை பெருக்கி தள்ளுவியா என்பார்.இப்போ என் பிள்ளைகளுக்கு நான் சொல்றேன்..இனக்கலவரம் வெடிக்கும் நேரம் அவர் அங்கிருந்து கிளம்பு மனமே இல்லாமல் வந்தார்..அவரின் வாழ நாளுக்குள் அங்கு நல்ல சூழல் ஏற்படும் என் நம்பினார்..அவரின் உயிர் அங்குதான் பிரிய வேண்டும் என் ஆசைப்பட்டார்.அவர் இறக்கும் வரை அது நடக்கவே இல்லை.


    எங்கள் சொத்துக்கள் அங்கு சூறையாடப்பட்டன.. சிங்களர்கள் யார் மேலோ உள்ள கோபத்தை எங்கள் மீது காட்டினார்கள்.வீரனிடம் போரிடாமல் அந்த நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்திய, எங்கள் மூதாதைகள் ரத்தம் சிந்தி காட்டை அழித்து தேயிலை தோட்டங்களில் சிந்திய வியர்வையினால் உயர்ந்தவர்கள் எங்களை உங்க நாட்டுக்கு ஓடுங்கள், 3 தலை முறையாய் அதுவே எங்கள் நாடு என்று இருந்தவர்களை ,நீ இந்தியன்தானே அங்கேயே ஓடு என்று துரத்தி அடித்தார்கள்..எல்லாவற்றையும்ம் அப்படியே போட்டு விட்டு தாய் நாட்டுக்கு வந்தோம்,என் வீடு, ரோஜா செடிகள், என் நண்பர்கள், என் புத்தகங்கள்,என் கனவுகள் எல்லாம் அங்கேயே இருக்கு.எங்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..நாங்கள் நாடு கேட்கவும் இல்லை, போராடவும் இல்லை, அது எங்கள் நாடுதானே என்று இருந்தோம்.எங்களை பிழைக்க கூட்டி போன வெள்ளைக்காரன் மேல் தவறு சொல்வதா,,தாய் நாட்டில் வறுமை வர காரணமா இருந்ததை சொல்லவா,இங்கு வந்து சந்தோஷமா வாழ்ந்தாலும், யார் என்று அடையாளம் இல்லாம அப்பா இறந்தாரே அதற்கு வருந்துவதா...

    திரும்பவும் இலங்கை போகணும் என்று அப்பா ஆசைப்பட்டார்.இனி அங்கு மரியாதையுடன் வாழ முடியாது என்று அண்ணன்கள் மறுத்து விட்டார்கள்.எஞ்சிய சொத்துக்கள் அங்கு இருக்கு.. அந்த நாட்டில் இருந்து வர அண்ணன்களுக்கு விருப்பமில்லை பாதி பேர் அங்கும் மீதி பேர் இங்குமாய் வாழ்கிறோம்..பாழாய் போன அரசியல் ஒரு சாதாரண குடும்பத்தை தூக்கி போட்டது.. எங்களை போல எவ்வளவோ இந்திய தமிழர்கல் இப்படிதான் அங்கும் இங்குமாய் இருக்கோம்.இன்னும் அங்கு தேயிலை தோட்டங்களில் நம் மக்கள் உழைக்கிறார்கள்.எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள்.அவர்களை பற்றியும் கொஞ்சம் எல்லோரும் பேசுங்களேன்,,இலங்கை தமிழர்கல் மட்டும் இல்லை, நம் இந்திய தமிழர்கலும் அங்கு வாழ்கிறார்கள். சொல்லொன்னா துயரங்களை அனுபவிக்கிறார்கள் .அவர்களை யாருமே கண்டு கொள்வதில்லை என் நீண்டநாள் ஆதங்கம் இது...நம் மக்களை பற்றி சொல்ல எனக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்புக்கு நான் பெண்மைக்கு நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன்...

    அப்பா இருந்திருந்தால் இதை படித்து ரொம்ப மகிழ்ச்சி அடைந்திருப்பார்.போன வருடம் அவரின் 100வது பிறந்த நாள்..நாங்கள் அவரை நினைவு கூர்ந்து குடும்பத்தில் பகிர்ந்து கொண்டோம்.அப்போவே அம்மா அப்பா பற்றி எழுதி எங்கள் குடும்பத்தில் காட்டணும்ன்னு நினைத்திருந்தேன்..பெண்மை மூலமா நடக்கனும்ம்னு இருந்திருக்கு போல..என்ன விட்டால் இன்னும் அப்பா புராணம் பாடிக்கிட்டே இருப்பேன்..நீங்க எல்லாம் பாவம். அதனால் இத்தோடு நிறுத்திக்கிறேன்...

    ரதிக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்...


  7. #27
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,112

    Re: Fathers Day Contest 2015

    Friends,

    Pls. drop your comments in the below given link...

    Fathers Day Contest 2015 - Comments


  8. #28
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Fathers Day Contest 2015


    Dears..,

    Selvi Auntyoda Appavukana article illai unarvupoorvamana kaaviyam inge..!

    அப்பா - by செல்வி பாண்டியன்






    My Stories : CLICK CLICK




  9. #29
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Fathers Day Contest 2015

    பேயநானும்பாத்ததில்ல
    நீசொல்லகேட்டிருக்கேன்,
    பயந்ததில்லவெளியில
    உன்முகந்தான்நெஞ்சுக்குள்ள!

    நீச்சல்நீபழக்க
    கூச்சல்நான்போட
    கிணறுந்தன்ஆலமுன்னு
    வாய்க்காலுலபழகவிட்ட!!

    வானம்இடரும்நேரத்துல
    பயந்துபோயிநானும்உன்னருகே
    பதுங்கயிலே, ஐயம்போக்கி
    என்னைஅனச்சுகிட்ட!

    மிதிவண்டிநீபிடிக்க
    மிதிமிதின்னுநான்மிதிக்க
    கூடவேநீஓடிவந்த
    குதியங்காலுவலிவலிக்க!!

    மறுபிறவிநானெடுக்க
    தந்தைநீதானே, உனக்கு
    மகனாகும்பாக்கியம்தான்
    என்றும்மாறாதே!!


  10. #30
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: Fathers Day Contest 2015

    அப்பா ......எனக்கு தோழனா ,குருவா எப்பிடி சொல்ல
    எங்கப்பா எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது இல்ல. நிறைய பேசினதில்லை ...........அறிவுரை சொன்னதில்லை முன் மாதிரி நடந்தார்கள்
    காலை 6.15 க்கு எழுந்தால் பார்க்கலாம் .......ஏனெனில் 6.2௦ க்கு கடைக்கு போய்டுவாங்க ..............அப்புறம் இரவு பதினோரு மணிக்கு தான் வருவாங்க ...........நாம் பார்க்க முடியாது ...........உழைப்பு ,உழைப்பு உழைப்பு தான் எங்கப்பா .............எங்க தாத்தாக்கு ஏழு பிள்ளைகள் பத்து வயதில் உழைக்க ஆரம்பித்தவர்கள் ..........முப்பது வயதில் நான் பிறக்கும் முன்பே முதலாளி ஆனவங்க ..........ரெம்ப கஷ்டபட்ட குடும்பம் எங்களோடது ............பின்னர் எல்லோரும் உழைப்பால் மத்தியத்தர உயர் நிலை தான் இப்பவும் .......ஆனால் எங்கப்பா போல அன்பும் ,கருணையும் யாரும் காட்ட முடியாது. காபி குடித்தால் கூட அங்கே இருக்கும் அனைவருக்கும் வாங்கி கொடுப்பாங்க .......அன்னதானம் என்று சொல்லி செய்தது இல்லை ......ஆனால் யாரும் வயிறு வாட விட மாட்டாங்க .......அவங்க செய்த தர்மம் மூன்று அட்டாக் தாண்டியும் ............பதினைந்து வருடம் காத்தது ..........படிக்கும் கிராம விவாசாயிகள் குழந்தைகளுக்கு பணம் ,புத்தகம் கொடுத்து இருக்காங்க .........இன்றோ எத்தனையோ அரசு வேலையில் இருப்பவங்க .........சொல்லுவாங்க ........ஐயா உதவினாங்க என்று ..........ஆனால் எனக்கு வேலை பற்றி யோசிக்கவே இல்லை.

    தங்கள் நடத்தையில் கற்றுக் கொடுத்தது ஏராளம் ........நானும் ,என் தம்பியும் எவ்வளவோ போராட்டங்களுக்கு பின் இன்று சிறந்த வீடியோ எடிட்டிங் செய்றான் ,நான் வீட்டரசியே .......வீடு கட்டி கடனில் சிக்கிட்டேன் ............அப்ப நான் இப்ப நடத்தும் இந்த பயிற்சி பள்ளி எங்கப்பாவிடம் கற்ற பாடம்.அவர் செய்த புண்ணியம் என் வீட்டை காத்து தந்தது ..........

    எங்கப்பா பாசம் காட்டினாங்க என்று சொல்ல முடியாது .........ஆனால் நான் கேட்காமல் இன்று நான் என்ன சாப்பிடனும் என்று நினைப்பேனோ அதை நான் சொல்லாமலே வாங்கி வருவாங்க ............அது எனக்கு இன்றும் அதிசயம்தான் ......இன்று good day பிஸ்கட் சாப்பிட ஆசை வரும் ..............வாங்க சொல்லி விடுவோம் என்று நினைப்பேன் எங்கப்பா வரும்போது கையில் இருக்கும் .....

    அதனால் நான் சொல்வேன் இவங்களிடம் .............அப்பான்னா கேட்டதை வாங்கி தருவாங்க ..........ஆனால் எங்கப்பா நினைத்ததை வாங்கி தருவாங்க என்று.

    எங்கப்பா சர்க்கரை நோயால் ஆறு மாதம் நடக்க முடியாமல் இருந்து கஷ்டப்பட்டாங்க ................அப்ப தான் நினைத்தேன் ........தர்மம் தலை காத்தது ............காலை விட்டு விட்டதே என்று ..........இன்று என்னுடன் இல்லை ..........அவர் கற்று தந்த பாடம் எங்களை வழி நடத்துகிறது ..........அடுத்த பிறவி என்று இருந்தால் அவருக்கே நான் மகளாக பிறக்க வேண்டும் .

    Last edited by ponschellam; 11th Jul 2015 at 09:03 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter