Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree228Likes

Fathers Day Contest 2015 - Comments

Discussions on "Fathers Day Contest 2015 - Comments" in "Special Contest" forum.

  1. #241
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Fathers Day Contest 2015 - Comments

    @selvipandiyan

    அப்படியே ஒரு படம் பார்த்தது போல இருக்கு aunty! படையப்பா சிவாஜி, சரத்குமார் எல்லாம் கொஞ்சம் நினைவுக்கு வந்தார்கள்! நீங்கள் சொல்வது உண்மை அங்கே நல்ல நிலைக்கு வரவேண்டுமெனில் அதற்கு கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம்! அதையும் தாண்டி ஜெயித்த உங்க அப்பா நிச்சயம் சாதனை மனிதர் தான்! அவரது இறுதி ஆசை பற்றி படிக்கும் போது என்ன சொல்வது தமிழனின் விதி என்று தான் சொல்லத்தோன்றுகிறது!

    நான் யாழ்ப்பாணப்பெண் aunty! உங்களுக்கு தெரியும். மலையகத்தமிழர்களை பற்றி கேள்விப்பட்டது கூட என்னுடைய அப்பா மூலம் தான். சபிக்கப்பட்ட மனிதர்கள் என்று ஆதங்கமாய் சொல்வார். நான் கண்டிக்கு படிக்க போன பின் தான் அவர்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது! அதிர்ச்சி அதிர்ச்சி மட்டும் தான் ..வேறே உணர்வுகள் கிடையாது. இப்படியும் மனிதர்கள் வாழமுடியுமா?

    ஒற்றை அறையையே அளவாக கொண்ட லயன் குடிசைகள் அதில் மொத்தக்குடும்பமே வாழும் போதாகுறைக்கு அடுக்கடுக்காய் வீடுகள் என்று நீங்கள் கற்பனையே பண்ண முடியாத வாழ்க்கைநிலை மக்களே! இந்த காக்கா முட்டை படத்தில் காட்டுவார்களே குட்டி குட்டியாய் வீடுகள் அதைப்போல மலை மேல் தொடர்ச்சியாக இருக்கும். நாட்டின் முக்கிய வருமானத்துக்காக ரத்தம் சிந்தும் மக்களின் ரத்தம் குடிக்கும் அட்டைகள் வேறு! உச்சக்கட்டமாய் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது!

    ஆனாலும் அந்த சூழலுக்குள்ளும் அழகிய மனித மனங்களை கண்டேன்! முன்னேறத்துடிக்கும் இளைஞர்களை கண்டோம். கல்வியில் ஆர்வம் கொண்ட சிறுவர்களை கண்டோம். இவர்கள் தான் என் விஞ்ஞானப்படிப்புக்கு சம்பந்தமே இல்லாத சமூகவிளையும் அபிவிருத்தி தொடர்பாடலையும் விசேட துறையில் என்னையும் என்னிரு தமிழ் நண்பிகளையும் தெரிவு செய்யத்தூண்டியவர்கள்! பல்கலைக்கழகத்தின் இறுதி இரு வருடங்கள் கிட்டத்தட்ட அவர்களோடு வாழ்ந்தோம். அந்த சிறுவர்களுக்கு படிப்பில் உதவுவது, ஏதேனும் தரவு சேகரிப்புக்கு உதவி என்று யுத்தம் காரணமாய் விடுமுறைகளில் யாழ்ப்பாணம் போக முடியாததால் எங்கள் பொழுதுகள் அவர்களோடு கழியும்! எங்களை சினிமா நட்சத்திரங்கள் போல அவர்கள் நடத்துவதும் ஒரு காரணம்! அப்படிப்பாசமாய் உபசரிப்பார்கள். சுருள் முடி அக்கா அங்கே அவ்வளவு பிரபல்யம்

    வர்கள் இருக்கும் லயன் வீடுகளின் நிலம் கூட அவர்களுக்கு சொந்தமில்லை. மடுல்கல என்ற பிரதேசத்தில் அவர்களுக்கான வீட்டுதோட்ட மாதிரி திட்டம் அமைத்து கொடுக்க கேட்கப்பட்டோம் நாம் மூவரும். சிறுவர்களுக்கான திட்டம் அது. அவர்களின் கவனத்தை ஆக்கபூர்வமாக திருப்ப ஒரு தொண்டு நிறுவனம் எங்கள் பல்கலைகழகத்தை கேட்டுக்கொண்டது. அவர்களுக்கு சொந்த நிலம் இல்லாததால் aerial home garden திட்டம் இரண்டு மாதகாலம் உழைத்து நாம் மூவருமே உருவாக்கி ஐம்பது சிறுவர்களுக்கு பெண்களுக்கு பயிட்சியளித்து ஒரு மாதிரியையும் உருவாக்கி கொடுத்திருந்தோம். மிக மிக சந்தோஷமான சவாலான அனுபவம்! அதில் தூண்டப்பட்டு நாற்பது மாதிரிகள் தொடர்ந்து உருவாகின என்று எங்களுக்கு கடிதம் அனுப்பினார்கள். சந்தோஷமாய் இருந்தது. அதன் பிறகு பரீட்சை அது இதுவென்று நாங்கள் அவர்களை மீண்டும் சந்திக்கவில்லை.

    அமூன்று நேரமும் உணவில்லாத வீடுகளில் டிஷ் அண்டனாவோடு டிவி மட்டும் இருக்கும்.அங்கே பெரும்பாலான வீடுகளில் பகல் முழுதும் வேலை என்று உடல்களைத்து இரவுகளில் குடியில் உழைத்ததைஎல்லாம் ஆண்கள் கரைத்துவிட பெண்களின் உழைப்பில் தான் அந்த குழந்தைகள் துளிர்க்கும். இலங்கையின் சுகாதாரம் கல்வி என்று அந்த டைமென்ஷனில் பார்த்தாலும் எஸ்டேட் கம்யூனிட்டி அதல பாதாளத்தில் தான் இருக்கும்.

    ஒன்று மட்டும் சொல்கிறேன் மக்களே. அவர்களின் அந்த நிலைக்கு அந்த மக்களுக்கிடையே இருக்கும் தொழிட்சங்கங்களும் அவர்களின் அரசியல் வாதிகளுமே பெரும்பாலான காரணம். அவர்கள் கல்வி கற்று வெளியேறிவிட்டால் இந்த வேலைகளுக்கு யார் வருவது? ஆகவே அங்கே கல்வி பெருமெடுப்பில் நடக்கப்படுவதில்லை. இலங்கையில் கல்வி நிலை 96 வீதம் எனில் எஸ்டேட் வெறும் எழுபதிலிருந்து என்பதிலேயே தேங்கி நிற்கிறது. மது போதை எல்லாமே திறந்து விடப்பட்டு அந்த மக்களின் சிந்தனை திறன் திட்டமிட்டே மழுங்கடிக்கப்படுகிறது. அங்கே இருக்கும் இன்னொமொரு விஷக்கிருமி சினிமா. இதை தடை செய்தாலே சகலமும் சரியாகும் என்பது என் கருத்து. பாதைகள் சரியில்லை. பெரிய நகரங்களோடு தொடர்புகள் போக்குவரத்து கடினம் ஆகவே நகர அபிவிருத்தியோடு இவர்கள் தொடர்பு குறைவு. immobilized aana isolated community.ஒரு கூட்டத்தை தனிப்படுத்தி மட்டரக சினிமாக்கள் மட்டுமே அவர்களுக்கு இலகுவாய் பெறக்கூடிய வெளியுலகத்தொடர்பு என்றால் எப்படி இருக்கும். கலாச்சாரம் அதல பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் இளைஞர் யுவதிகளே அதை முன்னின்று செய்கிறார்கள் புரியாமல்! எங்களை யாரேனும் ஊர்ப்பெண் துணையின்றி அங்கே தனியாக அனுப்பவே மாட்டார்கள்! படிக்காத இளைஞர்கள் தலைநகர்ப்பகுதிகளில் வீட்டு வேலை மற்றும் சேல்ஸ் மென் ஆக அனுப்பபடுகிறார்கள்.

    ஆனால் கொஞ்சம் ஆறுதலான விடயம். இப்போது கல்வியில் அங்கே விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருவதால் பலர் ஆசிரியர் தொழிலுக்குள் உள்வாங்கப்படுகிறார்கள். பல பட்டதாரிகள் உருவாகிறார்கள். அரசியல்வாதிகள் தங்கள் மக்கள் நலனை சிந்தித்து வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் கஷ்டங்களுக்கு விடிவு வரும். வடக்கு கிழக்கில் யுத்த முடிவை தொடர்ந்து பல தொண்டு நிறுவனங்கள் இப்போது மலையாக தமிழர்களை மையமாய் வைத்து இயங்க ஆரம்பித்து விட்டன. நல்லது நடக்கவேண்டும் என்று நாம் அனைவருமே இறைவனை வேண்டிக்கொள்வோம்!

    இந்த மக்களை பற்றி பேச வேண்டும் என்று நானும் நிறைய நாட்களாய் மனதில் வைத்திருந்தேன்..

    நீங்கள் அந்த 1983 கலவரத்தை தானே சொல்கிறீர்கள் aunty? அப்போது எங்கள் பெரியம்மா கொழும்பில் வேலைசெய்து கொண்டிருந்தார். என் அக்கா கைக்குழந்தை! கலவரம் நடக்கும் போது தமிழ் என்றாலே வெட்டிகொல்கிரார்கள் என்று யாரோ ஓரு சிங்கள நண்பி வீட்டு பாத்ரூமில் கைக்குழந்தையோடு ஒளித்திருந்ததாகவும் அழுதால் தெரிந்துவிடும் என்று வாயை பொத்திக்கொண்டு இருந்ததில் அக்கா மயங்கி விட்டதாகவும் பிறகு முஸ்லிம் பெண் போல சேலையால் மூடிக்கொண்டு எங்கோ போய் தப்பியதாகவும் சொல்வார்கள். பிறகு அத்தனை பெரும் கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டார்கள். பர்மாவிலிருந்து அனுப்பப்பட்டது போல! பெரியம்மாவுக்கு என்ன ஆனதென்று தெரியாமல் தாததா மாரடைப்பில் இறந்ததும் அம்மம்மாவுக்கு முதல் மாரடைப்பு வந்து அடுத்த வருடமே அவரும் இறந்ததும் அம்மா அநாதை ஆக்கப்பட்டதும் எங்கள் வீட்டில் நடந்த சோகம். அதை தாங்க முடியாமல் பெரியம்மா கனடா போய் விட எங்கள் குடும்பமும் சிதறிப்போனது. நான் பிறக்கும் போது அம்மா அப்பா தவிர எனக்கு உறவுகளே இல்லை! கொடுமையான நினைவுகள் ஆண்ட்டி!!!

    தமிழனாய் பிறந்தது குற்றமா என்று தான் கேட்கத்தோன்றுகிறது!

    Sponsored Links
    Last edited by naanathithi; 8th Jul 2015 at 12:52 PM.

  2. #242
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ;;;;;;;
    Aunty ungalai tag panninen..

    selvipandiyan and femila like this.

  3. #243
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    உஷா , ரொம்ப சந்தோஷமா இருக்கு...உங்களின் உதவிகளை அறிந்து ...மண் சரிவு நேரத்தில் நான் கூட கவலை ப்பட்ட நேரத்தில் நீங்கள் எல்லாம் போயி உதவி செய்த தாக் சொல்லும்போதே நான் உங்களிடம் பேசணும் ன்னு நினைத்தேன்...

    நீங்கள் சொன்னது மிக சரியே...அறிவில்லாத மக்கள்.. சாராயம் குடித்து இன்னும் மோசமான நிலையில்தான் இருக்காங்க...அரசியல்வாதிகளின் சதியும் காரணமே...இப்போதுள்ள நிலை பற்றி நானும் கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறேன்...பாழாய் போன சினிமா....எதையோ நினைத்து உரலை இடித்த கதையாய்....யாழ் ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் படிப்பு சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் எங்கள் பிள்ளைகள் அவர்களே ஆசிரியர் பயிற்ச்சி எடுத்து படிப்ப சொல்லிக் கொடுக்கிறார்களாம்...

    நாங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.. என்ன மாதிரியான ஆசிரியர்கள் எங்களுக்கு அமைந்தார்கள்...அவர்களை எல்லாம் நான் தேடுகிறேன்...என் யாழ் நண்பர்களை தேடுகிறேன்...அதனால்தான் யாராவது இலங்கை என்றால் ஆர்வமாய் வருவேன்...83 கலவரம் மறக்க முடியுமா??? அதில் பாதிக்க படாதவர்கள் யாருமே இருக்க முடியாது...உங்கள் குடும்பமும் அடி பட்டிருக்கிறீர்களா?? கொடுமையான் நினைவுகள்தான்... மறக்க நினைக்கிறேன் முடிவதே இல்லை...

    சுருள் முடி அக்கா .....எங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்றதுக்கு ரொம்ப நன்றிம்மா.........அடுத்த தலை முறையாவது நல்லா இருக்கணும்...

  4. #244

    நல்ல காலம் வரும் என்று நம்புவோம்! கட்டாயம் வரும்!

    இப்போது நான் அவர்களை பார்ப்பது அரிது aunty! படிக்கும் காலத்தில் கவலை பொறுப்புகளின்றி நினைத்ததை செய்ய முடிந்தது. இப்போது அப்படியெல்லாம் முடிவதில்லை, வாய்ப்புக்களும் அமைவதில்லை. இப்படி யாரேனும் பேசினால் அல்லது செய்திகள் அடிபட்டால் பார்ப்பேன். இப்போதைக்கு பிரார்த்திப்பதை தவிர நாம் எதுவும் செய்வதற்கில்லை.

    நிச்சயமாக நடக்கும்! எனக்கு தெரிந்தே நிறைய வெளிநாட்டு நிறுவங்கள் இந்த வருடம் திட்டங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். நம்புவோம். இறைவன் எப்போதுமே ஒருவரை முற்றாக கைவிட்டு விட மாட்டான் இல்லையா?

  5. #245
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ரதி, இப்போவும் போராட்டத்தில் இறந்த மக்க்ளைப்பத்தி மட்டுமே பேசாதீர்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்.. நாங்கள் அங்கு வாயிற்று பிழைப்புக்காக வெள்ளையர்களால் ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்கள்..இந்திய வம்சாவளியினர்.. எங்களுக்கும் அங்கு நடந்த சண்டைக்கும் சம்பந்தமே இல்லை... அங்குள்ள தமிழர்கல் அங்கேயே அந்த நாட்டை சேர்ந்தவர்கள்..அவர்களின் உரிமைக்காக போராடினார்கள்.. அதில் ஒரு அர்த்தம் இருந்தது...
    அவர்கள் மீது உள்ள கோபத்தை அப்பாவிகளான எங்கள் மீது சிங்களர்கள் காட்டினார்கள்..ஏன் என்றால் நாங்கள் திருப்பி அடிக்க தெரியாதவர்கள்..பயந்த சுபாவம் உள்ளவர்கள்..அரசியல் பற்றி பெரிய ஆர்வம் இல்லை...இந்திய வம்சாவளியினரை பற்றியும் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன்
    நீங்கள் இந்தியத்தமிழர்கள் என்றால் நாங்கள் பாகிஸ்தான் தமிழர்களா.....! எங்களின் வேரும் தமிழர் தேசம்தானே!!! பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சிங்களத்தின் திமிரடிக்கி ஈழத்தை ஆண்ட சோழனின் பாண்டியனின் வாரிசு தானே நாங்கள்.....!!!
    எங்களுக்கும் அங்கு நடந்த சண்டைக்கும் சம்பந்தமே இல்லை.....!!!
    கொடுமையான வார்த்தைகள் இவை சகோதரி
    தமிழருக்காய் கழமாடிய ஆயிரக்கணக்கான மலையக வீரர்களை இழிவு படுத்தும் வார்த்தைகள் இவை.....!
    வடகிழக்கில் குடியேறிய மலையக வம்சாவழியினர் கொடிய யுத்தத்தில் இழந்தது கொஞ்ச நஞ்சமா.....!
    திருப்பியடிக்க பயந்து அமைதியாக இருங்தவர்கள் மலையக தமிழர் மட்டுமா கொழும்பிலும் கண்டியிலும் யாழ்பாணத்தை மட்டக்களப்பை சேர்ந்த தமிழர்கள் வாழவில்லையா......!
    இலங்கை தமிழர்கள் இந்தியத்தமிழர்கள் என்ற வேறுபாடு தமிழர்களை தம்முள் பிரிப்பதற்காக சிங்கள இனவெறியர்களால் உருவாக்கப்பட்ட மாயை அதை இன்னமும் தம் சுய நலத்திற்காக சில அரசியல்வாதிகள் பற்றிக்கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது முதலில் இவ்வாறும் பின்னர் வடக்கு கிழக்கு என்ற பிரிவினை ஊடாக தமிழரை முற்றாக பலமிழக்கச் செய்து கடைசியில் நம் குரல்வளையை கொடூரமாகஅறுத்தார்கள்
    கடல் தாண்டி வாழும் தேசத்தில் தன் உறவுகளுக்காய் அக்கினிக்கு தன்னை அர்ப்பணித்த முத்துக்குமார் போன்றோரின் தியாகத்தை கண்டபின்பும் ஒரே மண்ணில் நின்று வேறுபாடு காண்பது முட்டாள்தனம்........!
    வார்த்தைகள் வருத்தியிருந்தால் மன்னிக்கவும்......!

    அன்புடன்
    கேதீஸ்

  6. #246
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by kaethies View Post

    வணக்கம் அண்ணா..
    இங்கே செல்வி aunty பேசியதை தவறாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. வடக்குக்கிழக்கும் அந்த மக்களின் துன்பமும் கவனிக்கப்பட்ட அளவுக்கு மலையகத்தமிழரின் துன்பங்கள் யாராலும் கவனிக்கப்பட்டதும் இல்லை. அந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதும் இல்லை. இன்னும் கூட இலங்கை என்றால் எங்கள் துன்பங்களை மட்டுமே வெளிநாடுகள் புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்கள் துயரம் எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. இந்த மக்களின் துயரம் பெரிதாக யார் காதுகளிலும் விழுவதில்லை. அந்த ஆதங்கத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவைகள் . அதை பெரிதாக்க வேண்டாமே!
    நாம் அனைவரும் தமிழர்கள் ஒருதாய் மக்கள். ஒருவர் கண்ணீர் துடைக்க வேண்டியது மற்றவர் கடமை. அதை விடுத்து வார்த்தைப்போராட்டங்கள் வேண்டாமே! விட்டு விடலாமே. புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!

  7. #247

    உண்மை சகோதரா....நீங்கள் சொல்வது சரியே.... நான் ஏன் அப்படி சொன்னேன் என்றால் பொதுவாக அனைவராலும் கவனிக்க படுவது இலங்கை என்றாலே போராட்டமும் அதில் வீழ்ந்த அப்பாவி மக்க்ளும்தானே...மலையகம் என்று ஒன்னு இருக்கா அப்படின்னு கேட்கும் மக்கள் நிறைய பேர் இந்தியாவிலேயே இருக்கிறார்கள்..எப்போவுமே தமிழர்கல் எல்லா இடத்திலும் பிரிந்துதானே இருக்கிறோம்...எங்களையும் கவனியுங்கள் என்ற அர்த்தத்தில்தான் சொல்லியிர்க்கிறேன்..அங்கேயும் நாடற்றவர்களாக்தான் பல வருடங்களுக்கு முன் திருப்பி அனுப்ப பட்டார்கள்..சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் அறிந்திருப்பீர்கள். அது ஒரு பெரிய அரசியல் வரலாறு...இலங்கையின் முழு வரலாறு அறியாதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்களே. அவர்களுக்கு நான் நாங்களும் இருக்கிறோம் என்று நினைவு படுத்தினேன்.... அவ்வளவே... எனக்கு தெரிந்த அளவில் மலையைக் வீரர்கள் பற்றியும் போராட்டம் பற்றியும் நான் அறியவில்லை..
    உங்களின் மூலம் அறிய ஆவலா இருக்கிறேன்...ஒரு தலை முறை இடைவெளியில் நான் இருக்கிறேன்...உங்களின் மனம் புண் பட்டிருந்தால் மன்னியுங்கள்.. உங்களின் மூலம் அந்த வீரர்கள் பற்றி அறிய ஆவலாயிருக்கிறேன்....நீங்களும் எழுதுங்கள்.....

  8. #248
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by naanathithi View Post
    வணக்கம் அண்ணா..
    இங்கே செல்வி aunty பேசியதை தவறாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. வடக்குக்கிழக்கும் அந்த மக்களின் துன்பமும் கவனிக்கப்பட்ட அளவுக்கு மலையகத்தமிழரின் துன்பங்கள் யாராலும் கவனிக்கப்பட்டதும் இல்லை. அந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதும் இல்லை. இன்னும் கூட இலங்கை என்றால் எங்கள் துன்பங்களை மட்டுமே வெளிநாடுகள் புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்கள் துயரம் எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. இந்த மக்களின் துயரம் பெரிதாக யார் காதுகளிலும் விழுவதில்லை. அந்த ஆதங்கத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவைகள் . அதை பெரிதாக்க வேண்டாமே!
    நாம் அனைவரும் தமிழர்கள் ஒருதாய் மக்கள். ஒருவர் கண்ணீர் துடைக்க வேண்டியது மற்றவர் கடமை. அதை விடுத்து வார்த்தைப்போராட்டங்கள் வேண்டாமே! விட்டு விடலாமே. புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!
    நன்றி உஷா....நான் சொல்ல வந்ததை சரியா புரிந்து கொண்டதற்கு....என்ன சுற்றி இருந்தவர்களையும் நான் அடைந்த அனுபவங்களையும் மனதில் வைத்தே இந்த பதிவு போட்டேன்...இன்னொரு கோணமும் இருக்கு என்று சகோதரர் ஒருவர் சொல்லியிருக்கிறார்..அதற்கு என் நன்றிகள்..அவரின் பதிவு படிக்கவும் ஆவலா இருக்கேன்...

  9. #249
    Alagumaniilango's Avatar
    Alagumaniilango is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Selva Meena
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    Theni
    Posts
    1,544

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Oh selvi ka @selvipandiyan ipo tha ful ah padichen ka...lst varikum appa ilangai pogalaya ka..unga aathangam elame purithu life ipti than pola..apapapa 11 members ah...bigggggg family than..elarum thani thani ah than irukengala ka...ethum fun'na vila aalu thevaiye ila pola..super ka...nice sharing selvi ka....

    My ongoing story-En Manam Arivaayaa???

    My first story - Kulir Nilavu

    With Love,
    Meenu

    "My pain may be the reason for somebody’s laugh. But my laugh must never be the reason for somebody’s pain."-charlie chaplin

  10. #250
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Fathers Day Contest 2015 - Comments

    @selvipandiyan மன்னிக்க வேண்டும் சகோதரி உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால். பல நாட்களாக மனதை உறுத்திய விடயத்தை வார்தைகளில் வடித்திருந்தேன். தமிழர்களை கூறு போட்டு குளிர்காயும் பேரினவாதிகளின் கபடத்தை விளக்கவே இப்பதிவிட்டேன் சலுகைக்காக தம் மக்களை அடகு வைக்கும் சில மலையகத் தலமைகளின் மீதான கோபம் இது. தம் உறவுகளுக்கா தம் இன் உயிரையும் துறக்கும் தமிழ் நாட்டு சொந்தங்களின் மனதை கலைப்பதற்கா இப்போது இவ்விடயம் அதிகளவில் பிரஸ்தாபிக்கப்படுகிறது. இதன் மூலம் ஈழத்தமிழர்களை மாற்றான்தாய் பிள்ளைகளாக்க சித்தரிக்க முயல்கிறார்கள். தமிழர்களுக்கிடையிலான இந்த பிரிவினை யாருக்கும் நன்மையை தரப்போவதில்லை மாறாக உலக அரங்கில் தமிழர் பிரச்சனையின் கூர்மையை மழுங்கடித்துவிடும் என்பதே உண்மை அதுவே பேரினவாதிகளின் எதிர்பார்ப்புமாகும்...... மலையக மக்களின் துன்பங்களை நான் அறியாதவனல்ல ஆனாலும் அதை அணுகும் முறை வேறாக இருக்கவேண்டும் மாபெரும் மனித அவலத்திற்கு நீதி கோரும் வேளையில் இப்பிரச்சனையை எழுப்ப வேண்டிய தேவையில்லை இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய தளம் வேறு...........!
    78 மற்றும் 83 கலவரங்களின் போது தெற்கு மற்றும் மத்திய பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த மலையக மக்கள் குறித்த அளவில் வடக்கு கிழக்கில் வாழ்கிறார்கள் (முல்லைத்தீவில் கணிசமான அளவில்) போராட்டத்தில் அவர்களது பங்கு அளப்பரியது அவர்கள் தம்மை ஈழத்தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த விரும்புகின்றனர்
    இவ்விடத்தில் இப்பதிவை இட்டதற்காக வருந்துகின்றேன்......

    அன்புடன்
    கேதீஸ்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter