Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree228Likes

Fathers Day Contest 2015 - Comments

Discussions on "Fathers Day Contest 2015 - Comments" in "Special Contest" forum.

  1. #261
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,220
    Blog Entries
    6

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Aunty neenga start pani post potuteenga terincha pothey padikanum ninachean, aparm elaroda comments pathutu neenga konjam konjam post panreenga terincha pothu oray shot la padikanum nu decide panathala inga varala aunty
    Enoda time constraint inoru reason @selvipandiyan
    So don't mind for the late entry aunty
    thanks vimal, porumaiya sollunga...

    Sponsored Links
    Vimalthegreat likes this.

  2. #262
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,220
    Blog Entries
    6

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by femila View Post
    ஆன்ட்டி..

    எப்படி இப்படி...

    எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.. நீங்க சொல்லும்போது மிகுதியை மறைத்துதான் சொல்றீங்கன்னு தெரியுது.. விளாவரியா சொல்லிருந்தா கண்டிப்பா எங்க மனசுல ரொம்ப ரொம்ப பாதிப்பா இருந்திருக்கும்..

    எங்களுக்கு அங்க நடந்தது எல்லாம், பேப்பரிலோ, புத்தகம், செய்திகள் இப்படிப்பட்டவைகளைக் கொண்டுதான் தெரியும்.. ஆனால் நீங்கள் எல்லாரும் அந்த இடத்தில் இருந்தது எத்தனை எத்தனை துன்பங்களை அனுபவித்து இருப்பீங்க அப்படின்னு நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு...

    இன்னும் ஒரு முடிவு கிட்டாததுதான் மிகப்பெரிய வருத்தம்.. எத்தனை வருட போராட்டம். எங்கெங்கோ நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு வரும்போது, இந்த மிகப்பெரிய பிரச்சனைக்கு முடிவு வராமா இருப்பதுதான் பிரமிப்பா இருக்கு...
    @kaethies அண்ணா.., கண்டிப்பா ஆன்ட்டி பேச்சுவாக்கில் உள்ளதைத்தான் சொல்லி இருப்பாங்க..

    உங்களுடைய வேதனைகளும் புரியத்தான் செய்யுது.. எதிர்ப்பார்ப்போம். விடியல் வருமா என்று!

    ஆன்ட்டி, தாத்தாக்கு நான் சல்யூட்

    அவங்களுடைய ஆசை நிறைவேறாமையே போனது, படிக்குற எங்களுக்கே புரியுது அது எவ்வளவு பெரிய வருத்தமா இருக்கும்னு...
    நன்றி பெமி..................
    விலாவாரியா எழுத முடியும் என்றாலும்...அது அரசியலை நோக்கி போய் விடும். அதுவல்ல என் நோக்கம்...அந்த நாட்களில் கடல் கடந்து பொருள் தேடும் நோக்கில் நிறைய பேர் சிங்கப்பூர், மலேஷியா,மொரீஷியஸ்,தென் ஆப்பிரிக்கா என்று போனார்கள். அவர்களுக்கு எல்லாம் நேராத கொடுமைகள் இலங்கையில் நடந்து விட்டது..அவர்கள் கௌரவமாக வாழ்கிறார்கள்..எங்களுக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா என்னும் ஆவல்தான்...அப்பா பின்னாங்கிலேயே இருந்திருக்கலாமோ???இன்று நேற்று நாளை படத்தில் வர மாதிரி ஒரு கால சக்கரம் இருந்தா நான் அதைதான் செய்வேன்!!!

    RathideviDeva likes this.

  3. #263
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,890
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by selvipandiyan View Post

    Selvi sis,
    உங்கள் தந்தை பின்னாங்கிலேயே இருந்திருந்தால் ஒருவேளை லட்சத்தில் ஒருவராக சாதாரண மனிதனாகவே தன் வாழ்க்கை பயணத்தை முடித்திருப்பாரோ என்னவோ. ஆனால் இன்று அவர் காலத்துக்கு பின்னும் அவர் நிறுவிய பள்ளி மற்றவர்களுக்கு வாழ்வளிக்கிறது. அவரது புகைப்படம் இன்னும் அப்பள்ளியில் உள்ளது. அவர் மறைந்த பின்னும் அவர் ஆரம்பித்து வைத்த செயல்கள் இன்னும் உயிர்ப்புடன் நடந்து கொண்டு தானே உள்ளது. இதை விட வேறு பெருமை என்ன வேண்டும்.

    selvipandiyan and kodiuma like this.

  4. #264
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,220
    Blog Entries
    6

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @selvipandiyan @kaethies @naanathithi
    காலத்தால் மறக்க முனைந்து, முடியாமல் போராடும் உங்கள் காயங்களை கீறி வருந்த செய்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. மன்னித்து விடுங்கள்.

    நான் கதை கேட்கும் ஆவலில் கேட்கவில்லை. எனக்கு எதுவும் சரியாக புரிய வில்லை. அகதிகளைப் பற்றி ஒரு கதாசிரியரின் ப்ளாகில் கதை மூலம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் நடந்த போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை ஒரு வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்.

    பல தமிழர்கள் அங்கே வியாபாரம் செய்து இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க , ஏன் ஒரு கூட்டம் மட்டும் அவதி படுகிறது? அவர்களுக்கு மட்டும் என் அங்கு வாழ வழி இல்லாத நிலை? ஏன் அவர்கள் அகதிகளாக தமிழ்நாடு வருகிறார்கள்? இங்கே அவர்களுக்கு வாழ முடியும் என்ற நம்பிக்கையா அல்லது அங்கே இருப்பதை விட அகதி நிலையே மேல் என்ற நிலையா? தனி நாடு ஏன் கேட்டார்கள்? தனி நாடு கேட்டதற்கு காரணம், இலங்கை அரசின் தமிழர்கள் மீது கொண்ட அலட்சியமா/அடிமை போக்கா ? அரசே தமிழர்களின் உரிமையை பறித்துக்கொண்டதா? அல்லது இலங்கை மக்கள் கொண்ட இன வெறியா? அல்லது ஆங்கிலேயர்கள் போதித்த சுயநலம் மிகுந்த உள்நாட்டு அரசியல் நாடகமா(பிரித்து ஆளும் குள்ள நரித்தனம்) ? தனி நாடு கேட்டவர்கள் மட்டும் தான் அவதி படுகிறார்களா? இல்லை மொத்த தமிழர்களுக்கும் இதே நிலையா? தமிழர்கள் தங்கள் நியாயமான உரிமைக்காக தான் போராடுகிறார்கள் என்றால் , ராஜீவ் காந்தி காலத்தில் ஏன் இந்திய ராணுவம் இலங்கை அரசிற்கு உதவியாக சென்றது? தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஏன் அவர்களுக்கு குரல் கொடுத்து நடப்பதை தடுக்க முனையவில்லை? இந்திய அரசு இன்னும் மௌனம் காப்பதற்கு என்ன காரணம்? நியாயமான போராட்டம் எனில் ஏன் உலக நாடுகள் ஆதரிக்கவில்லை ? இலங்கை மக்களின் பார்வையில் என்ன நினைக்கிறார்கள்?

    இப்படி எனக்கு எண்ணற்ற பல கேள்விகள். என்னைப் பொருத்தவரை, இன்றைய நிலவரத்தில், ஒரு நியாயமான உரிமை போராட்டத்தைக்கூட தீவிரவாதமாக வெளி உலகிற்கு சித்தரிப்பது எளிது.

    இந்த கேள்விகள் உங்கள் காயங்களை கீறுவதர்க்காக அல்ல. நான் இதை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியாது. ஏன் ஒரு துரும்பையாவது அசைப்பேனா என்று கூட தெரியாது. ஆனால் இவை அனைத்தும் என் பிள்ளைகளுடன் கலந்துரையாடுவேன். என் பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு எட்டிய வரையில் உணர்த்துகிறேன் , "ஒவ்வொரு தீவிரவாதிக்குள்ளும் ஒரு போராளி இருக்கிறான்" என்று.
    மிக்க நன்றி ரதி,
    உங்களால்தான் நான் எழுத வந்தேன்...மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தைகள்.யார் யாரை பற்றியோ படிக்கிறோம். நம் தமிழர்களை பற்றியும் படித்து தெரிந்து கொள்வோமே...உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆசைதான்..அது நீண்ட வரலாறு..நிறைய புத்தககங்கள் வந்துள்ளன.இணையத்திலும் படிக்கலாம்...நீங்க எல்லாம் இப்படி கேட்டு தெரிந்து கொள்ளனும் என்பதுதான் என் ஆசையும் கூட.எவ்வளவோ கதைகள் படிக்கிறோம்.. இடையில் கொஞ்சம் வரலாறும் படியுங்கள்..

    இப்போதும் தலை நகரில் உள்ள மக்களை நீங்கள் பார்த்தால் வியந்து போவீர்கள்..இயல்பான வாழ்வு வாழ்கிறார்கள்..திருவிழாக்கள், பண்டிகைகள் எல்லாம் வழக்கம் போல் கொண்டாடுகிறார்கள்..இந்த நாட்டிலா இப்படி ஒரு கஷ்டம் மக்கள் அனுபவித்தார்கள் என்று நினைப்பீர்கள்..அழகான தீவு,சீதையை ராவணன் கவர்ந்து சென்றதில் இருந்து கதை ஆரம்பித்த்ருக்குமோ!!! எங்கள் வீட்டுக்கு கொஞ்ச தொலைவில்தான் சீதா எலிய என்னும் சீதை கோவில் இருக்கிறது!!பொன்னியின் செல்வன் படித்துருப்பீர்களே,கல்கி பிரமாதமா சிங்கள அரசர்களை பற்றி சொல்லியிருப்பார்.என் நண்பர்கள் என்னை கேட்பதுண்டு, இலங்கையில் பிறந்தேன் என்று சொல்கிறீர்கள்,உங்கள் தமிழ் எங்களை போலவே இருக்கே என்று....!!! நான் சொல்வேன் நான் இந்திய வம்சாவளி என்று... அடுத்த கேள்வி வரும், அப்போ ஏன் அவங்க நாட்டுல போயி நீங்க தனி நாடு கேக்குறிங்க என்று....!!!!

    ஸ் அப்பா.....முடியல, அவங்க மண்ணின் மைந்தர்கள் அப்படின்னு சொன்னா..அது சிங்கள் நாடுதானே, அப்படிம்ம்பாங்க...இது கூட பரவாயில்ல, ஒருவர் என்னை பார்த்து கேட்ட கேள்வில நான் நொந்து போயிட்டேன், இந்த பிரபாகரன்னு சொல்றாங்களே, அவர் யாருங்க அப்பிடி என்னதான் பண்ணாரு???ஐயோ கொடுமையே....என்னென்னமோ தெரிஞ்சு வச்சுருக்காங்க, அண்டை நாட்டை பற்றி இப்படியா ...இதெல்லாமும் ஒரு காரணம் என் மக்களை பற்றி நான் எழுத வந்தது..மற்ற என் நண்பர்களும் எழுதனும்கிரதுதான் என் ஆசை...பெரிய பத்திரிக்கைகளில் நாம் எழுத முடியாது, நிறைய கட்டுப்பாட்கள் இருக்கும், இது என் இன்னொரு வீடு, என் நண்பர்களுக்கு நான் என் கதை சொன்னேன்,அவ்வளவுதான் யார் மனதும் புண் பட்டிருந்தால் மன்னியுங்கள்...

  5. #265
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,220
    Blog Entries
    6

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Selvi sis,
    உங்கள் தந்தை பின்னாங்கிலேயே இருந்திருந்தால் ஒருவேளை லட்சத்தில் ஒருவராக சாதாரண மனிதனாகவே தன் வாழ்க்கை பயணத்தை முடித்திருப்பாரோ என்னவோ. ஆனால் இன்று அவர் காலத்துக்கு பின்னும் அவர் நிறுவிய பள்ளி மற்றவர்களுக்கு வாழ்வளிக்கிறது. அவரது புகைப்படம் இன்னும் அப்பள்ளியில் உள்ளது. அவர் மறைந்த பின்னும் அவர் ஆரம்பித்து வைத்த செயல்கள் இன்னும் உயிர்ப்புடன் நடந்து கொண்டு தானே உள்ளது. இதை விட வேறு பெருமை என்ன வேண்டும்.
    நன்றி ரதி...
    நீங்கள் எல்லாம் இவ்வளவு ஆவலுடன் படித்ததே என் பாக்கியம்...

    ponschellam and RathideviDeva like this.

  6. #266
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    301

    Re: Fathers Day Contest 2015 - Comments

    @selvipandiyan மீண்டும் அறிவுறுத்துகின்றேன் உங்களின் பதிவிற்கு பதிலாக நான் என்பதிவை இடவில்லை உண்மையில் நான் பதிவிடும் போது உங்களின் முழுப்பதிவையும் படித்திருக்கவில்லை இன்று இலங்கையில் தமிழர்களை பலவீனப்படுத்தி தங்களுக்குள் கூறுபோட வைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் நிகழ்சி நிரலின் கபடத்தை விளக்கவே கருத்திட்டேன்
    உங்களின் பதிவை முழுமையாக படித்தபின் இவ்விடத்தில் குறித்த வகையில் கருத்திட்டதற்காக வருத்தப்பட்டேன்
    ஆனாலும் உண்மை விளக்கப்பட்டே ஆகவேண்டும் ஏனெனில் இந்த வாதத்தின் பின்னால் மறைந்திருக்கும் கபடம் பயங்கரமான விளைவுகளை எற்படுத்தி விடும் ஈழத்தமிழர்களின் கடைசி கவசமாக இருப்பவர்கள் தமிழக உறவுகள் இவ்வாதம் அவர்கள் மனதில் விசத்தை விதைத்து விடும் மலையக தமிழர்கள்தான் இந்திய வம்சாவளியினர் என்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் என்ற விம்பம் ஏற்பட்டு விடும் திட்டமிட்ட வகையில் சமீப காலத்தில் தீவரம் பெற்றுள்ள இந்தவாதம் சிங்கள இனவாத சக்திகளின் அடிவருடிகளாக உள்ள சில மலையக தலைவர்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறது தயவு செய்து இவ்வாதத்தின் கொடிய கபடத்தை புரிந்து கொள்ளுங்கள்..............
    "கள்ளத்தோணி" 40 வருடங்களுக்கு முந்திய கதை இது சகோதரி அதன் வடுக்கள் இன்னமும் பாதுகாக்கப்படுவது வருத்தத்திற்குரியது உண்மையில் இன்று கள்ளத்தோணி என்ற பெயருடன் இருப்பவர்கள் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள்தான் எளியோனை வலியோன் மிதிப்பதும் சிறிய கோபத்திற்காக சொந்த சகோதரனுக்கு துரோகம் இழைப்பதும் தமிழனின் கேவலமான குணங்கள்தானே

    Last edited by kaethies; 9th Jul 2015 at 10:44 AM.
    அன்புடன்
    கேதீஸ்

  7. #267
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,220
    Blog Entries
    6

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by kaethies View Post
    @selvipandiyan மீண்டும் அறிவுறுத்துகின்றேன் உங்களின் பதிவிற்கு பதிலாக நான் என்பதிவை இடவில்லை உண்மையில் நான் பதிவிடும் போது உங்களின் முழுப்பதிவையும் படித்திருக்கவில்லை இன்று இலங்கையில் தமிழர்களை பலவீனப்படுத்தி தங்களுக்குள் கூறுபோட வைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் நிகழ்சி நிரலின் கபடத்தை விளக்கவே கருத்திட்டேன்
    உங்களின் பதிவை முழுமையாக படித்தபின் இவ்விடத்தில் குறித்த வகையில் கருத்திட்டதற்காக வருத்தப்பட்டேன்
    ஆனாலும் உண்மை விளக்கப்பட்டே ஆகவேண்டும் ஏனெனில் இந்த வாதத்தின் பின்னால் மறைந்திருக்கும் கபடம் பயங்கரமான விளைவுகளை எற்படுத்தி விடும் ஈழத்தமிழர்களின் கடைசி கவசமாக இருப்பவர்கள் தமிழக உறவுகள் இவ்வாதம் அவர்கள் மனதில் விசத்தை விதைத்து விடும் மலையக தமிழர்கள்தான் இந்திய வம்சாவளியினர் என்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் என்ற விம்பம் ஏற்பட்டு விடும் திட்டமிட்ட வகையில் சமீப காலத்தில் தீவரம் பெற்றுள்ள இந்தவாதம் சிங்கள இனவாத சக்திகளின் அடிவருடிகளாக உள்ள சில மலையக தலைவர்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறது தயவு செய்து இவ்வாதத்தின் கொடிய கபடத்தை புரிந்து கொள்ளுங்கள்..............
    "கள்ளத்தோணி" 40 வருடங்களுக்கு முந்திய கதை இது சகோதரி அதன் வடுக்கள் இன்னமும் பாதுகாக்கப்படுவது வருத்தத்திற்குரியது உண்மையில் இன்று கள்ளத்தோணி என்ற பெயருடன் இருப்பவர்கள் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள்தான் எளியோனை வலியோன் மிதிப்பதும் சிறிய கோபத்திற்காக சொந்த சகோதரனுக்கு துரோகம் இழைப்பதும் தமிழனின் கேவலமான குணங்கள்தானே

    சகோதரரே, என் பதிவை நீங்கள் படிக்காமல்தான் பதில் எழுதியிருக்க கூடும் என்று நான் யூகித்தேன்...நீங்கள் சொல்வது சரிதான்.. அரசியல் விளையாட்டுக்களில் நாம் அடித்து செல்லப்படுகிறோம்..அந்த நாட்டிலும் சரி, இந்த நாட்டிலும் சரி.. எங்கும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரிதானே இருக்கிறார்கள்.

    உங்களை புண் படுத்தும் நோக்கில் நான் எழுதவில்லை...என் கைகளை வேகமாக வீசிவிட்டேன் போல் இருக்கிறது , உங்களின் முகத்தில் பட்டு விட்டது.என் அப்பா ஆசைபட்டார், நடக்கவில்லை. என் வாழ்நாட்களுக்கு உள்ளாவது அப்பா ஆசைப்பட்டது நடக்குமா????அமைதியான் சூழல் வருமா???

  8. #268
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    301

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by selvipandiyan View Post
    சகோதரரே, என் பதிவை நீங்கள் படிக்காமல்தான் பதில் எழுதியிருக்க கூடும் என்று நான் யூகித்தேன்...நீங்கள் சொல்வது சரிதான்.. அரசியல் விளையாட்டுக்களில் நாம் அடித்து செல்லப்படுகிறோம்..அந்த நாட்டிலும் சரி, இந்த நாட்டிலும் சரி.. எங்கும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரிதானே இருக்கிறார்கள்.

    உங்களை புண் படுத்தும் நோக்கில் நான் எழுதவில்லை...என் கைகளை வேகமாக வீசிவிட்டேன் போல் இருக்கிறது , உங்களின் முகத்தில் பட்டு விட்டது.என் அப்பா ஆசைபட்டார், நடக்கவில்லை. என் வாழ்நாட்களுக்கு உள்ளாவது அப்பா ஆசைப்பட்டது நடக்குமா????அமைதியான் சூழல் வருமா???
    விடியாத இரவுகள் ஏதுமில்லை சகோதரி

    அன்புடன்
    கேதீஸ்

  9. #269
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,890
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by kaethies View Post
    விடியாத இரவுகள் ஏதுமில்லை சகோதரி
    அழகானதொரு பதில் !!!

  10. #270
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    301

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @selvipandiyan @kaethies @naanathithi
    காலத்தால் மறக்க முனைந்து, முடியாமல் போராடும் உங்கள் காயங்களை கீறி வருந்த செய்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. மன்னித்து விடுங்கள்.

    நான் கதை கேட்கும் ஆவலில் கேட்கவில்லை. எனக்கு எதுவும் சரியாக புரிய வில்லை. அகதிகளைப் பற்றி ஒரு கதாசிரியரின் ப்ளாகில் கதை மூலம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் நடந்த போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை ஒரு வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்.

    பல தமிழர்கள் அங்கே வியாபாரம் செய்து இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க , ஏன் ஒரு கூட்டம் மட்டும் அவதி படுகிறது? அவர்களுக்கு மட்டும் என் அங்கு வாழ வழி இல்லாத நிலை? ஏன் அவர்கள் அகதிகளாக தமிழ்நாடு வருகிறார்கள்? இங்கே அவர்களுக்கு வாழ முடியும் என்ற நம்பிக்கையா அல்லது அங்கே இருப்பதை விட அகதி நிலையே மேல் என்ற நிலையா? தனி நாடு ஏன் கேட்டார்கள்? தனி நாடு கேட்டதற்கு காரணம், இலங்கை அரசின் தமிழர்கள் மீது கொண்ட அலட்சியமா/அடிமை போக்கா ? அரசே தமிழர்களின் உரிமையை பறித்துக்கொண்டதா? அல்லது இலங்கை மக்கள் கொண்ட இன வெறியா? அல்லது ஆங்கிலேயர்கள் போதித்த சுயநலம் மிகுந்த உள்நாட்டு அரசியல் நாடகமா(பிரித்து ஆளும் குள்ள நரித்தனம்) ? தனி நாடு கேட்டவர்கள் மட்டும் தான் அவதி படுகிறார்களா? இல்லை மொத்த தமிழர்களுக்கும் இதே நிலையா? தமிழர்கள் தங்கள் நியாயமான உரிமைக்காக தான் போராடுகிறார்கள் என்றால் , ராஜீவ் காந்தி காலத்தில் ஏன் இந்திய ராணுவம் இலங்கை அரசிற்கு உதவியாக சென்றது? தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஏன் அவர்களுக்கு குரல் கொடுத்து நடப்பதை தடுக்க முனையவில்லை? இந்திய அரசு இன்னும் மௌனம் காப்பதற்கு என்ன காரணம்? நியாயமான போராட்டம் எனில் ஏன் உலக நாடுகள் ஆதரிக்கவில்லை ? இலங்கை மக்களின் பார்வையில் என்ன நினைக்கிறார்கள்?

    இப்படி எனக்கு எண்ணற்ற பல கேள்விகள். என்னைப் பொருத்தவரை, இன்றைய நிலவரத்தில், ஒரு நியாயமான உரிமை போராட்டத்தைக்கூட தீவிரவாதமாக வெளி உலகிற்கு சித்தரிப்பது எளிது.

    இந்த கேள்விகள் உங்கள் காயங்களை கீறுவதர்க்காக அல்ல. நான் இதை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியாது. ஏன் ஒரு துரும்பையாவது அசைப்பேனா என்று கூட தெரியாது. ஆனால் இவை அனைத்தும் என் பிள்ளைகளுடன் கலந்துரையாடுவேன். என் பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு எட்டிய வரையில் உணர்த்துகிறேன் , "ஒவ்வொரு தீவிரவாதிக்குள்ளும் ஒரு போராளி இருக்கிறான்" என்று.
    நன்றி சகோதரி
    ஆனாலும் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டுமானால் முழு வரலாற்றையும் திரும்பிப்பார்க்க வேண்டும் அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீளமானது ஆனாலும் அது விளக்கப்பட வேண்டியது அவசியம் ஏஎனனில் தமிழர்களின் அவலம் இன்றுவரை தீர்க்கப்படாததிற்கு காரணம் அது உரியமுறையில் உலகின் பார்வைக்கு ஏன் உறவுகளின் பார்வைக்குகூட எடுத்துச் செல்லப்படவில்லை என்பதுதான் இப்போதில்லாவிட்டாலும் என்னால் இயன்ற வரையில் குறித்த வரலாற்றை பதிவிட முயல்கிறேன்
    ஒரு அன்னையின் உள்ளத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றம் ஒரு தலைமுறையின் கருத்தியலை மாற்றியமைக்கும் என்ற கருத்து உண்மையாகட்டும்

    அன்புடன்
    கேதீஸ்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter