Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree477Likes

Penmai's Special Independence Day Contest - Short Story


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story" in "Special Contest" forum.


  1. #21
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    தாய் மண்ணே வணக்கம்

    ஆகாஷ்...

    ஆடம்பரத்தின் அடையாளங்களை வெளிபடுத்தும் இடமான
    பன்ஜார ஹில்ல்ஸ் –இல் இருக்கும் hitech IT கம்பெனியில் முதன்மை அதிகாரியாக பணி செய்பவர்.

    இயற்கையை ரசிப்பது என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வு.
    அப்படி இருக்கையில் இவருக்குள் இருக்கும் ரசிப்புத்தன்மை என்பது சற்றே
    வித்தியாசமானது என்பதை இகதையிநூடே பயணிக்கும் ஒவ்வொருவரும் உணர்வீர்கள். இக்கதை முற்றிலும் கற்பனையில் எழுதப்பட்டது.



    சேத்பட் அருகிலுள்ள நெடுங்குனம் கிராமத்தில்..

    இருபக்கமும் பச்சை பசேல் என்று நெற்பயிர்கள் இருக்கும் வயல்வெளியின் நடுவே இருக்கும் குண்டும் குழியுமான மண் ரோடில் அசைந்து வரும் ஜீப்பை பார்த்து..யாராக இருக்கும் என்ற யோசனையுடன் பரசுராமன் தென்னை மர தோப்பில் நின்றிருக்க..

    ஜீப் தென்னந்தோப்பின் நடுவில் வந்து நின்றது..

    பரசுராமன் ஜீப்பின் அருகில் சென்று யார் என்று வினவ ...விவரம் புரிந்து வந்தவர்களை
    தண்ணீர் தந்து வரவேற்றார்.

    வன அதிகாரியான செல்வராஜ் ஆகாஷை பற்றி பரசுராமனிடம் கேட்க்க..

    ஆகாஷ் பிறந்து..வளர்ந்தது எல்லாம் இதே ஊர்தாங்க..

    அவங்க அப்பா அம்மா ...ஆகஷின் குடும்பம் எல்லாம் சென்னை -ல இருக்காங்க ஐயா..
    அவர்களது வீடும் இங்கு கிழக்கு வீதியில் இருக்குங்க..

    ஆகாஷ் பெரிய படிப்பெல்லாம் படிச்சி சென்னை -ல கம்ப்யூட்டர் சம்பந்தமா தொழில் செய்யராருங்க. தொழில் சம்பந்தமா அடிகடி வேற வேற மாநிலத்துக்கு சென்று வருவாருங்க.

    இப்ப கூட அவர் ஹைதராபாத் பன்ஜார ஹில்ஸ் இருபதாக சொன்னாருங்க ..

    சக உழியரான பாபுவும், சார்..நான் ஏற்கனவே போன மாசம் அவர பத்தி விசாரிச்சப்பவே சொன்னாங்க சார்..

    பன்ஜார ஹில்ஸ் -ல இருக்கும் ஆகாஷ் அடிகடி வெளியூருக்கு செல்பவர் என்றும்,
    எப்ப எங்க இருப்பார்னு அவருகே தெரியாது என்றும்..
    ஆனாலும் அவர் எங்க சென்றாலும்
    சொன்னத சொன்னபடியே செய்கிற மனுஷன் என்றும், அவர்களது அலுவலகதிலுள்ளவர்களும், அவர் வீட்டிலுள்ளவர்களும் சொன்னதையும் நினைவுபடுத்தி தன் அலுவலரிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.

    சார் இப்ப அவரு சென்னை, ஹைதராபாத், டெல்லி
    என வேலைவிஷயமா அடிகடி போறாரு வராருங்க. விடுமுறை நாள் வந்தா கொல்லி மலை, கழுகு மலைன்னு போய்டுவாரு. சரி சார் ஏன் கேக்குறீங்க இதெல்லாம் என்று
    ஆகாஷின் விவசாய நிலத்தில் வேலைசெய்யும் பரசுராமன் கேட்டார்.

    அதுவா பா.. உங்க முதலாளி ஆகாஷு ஏதோ செடி கண்டு புடிசிருக்காரம். அதால
    அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுகிட்டு போகல்லானு வந்தேன். சரி ஆகாஷ் போன் நம்பர் இருந்த கொடுப்பான்னு கேட்டுகிட்டே ஆகாஷின் வயலுக்குள் பேசிகொண்டே நுழைந்தனர்..

    எங்கு திரும்பினாலும் பச்சை பசலேன்று இருந்தது வன அலுவலர் செல்வரஜிக்கு மனமகிழ்ச்சியை தந்தது. பரசுராமன் உங்க வயல்ல என்ன என்ன இருக்கு பா என்று கேட்டுகொண்டே தன் பார்வையை விசாலமாகி பார்க்க தொடங்கினார். ஆச்சரியம்..

    அந்த ஆறு ஏக்கர்ல பயிர் செய்யப்படாததே ஏதும் இருக்காது என்ற அளவுக்கு ஒரு எதிர் பார்ப்பை அவருக்குள் உருவாக்கியது. இது என்ன ..அது என்ன என்று ஒவ்வொன்றையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

    அப்படி வரும் வேளையில் தனது வலப்பக்கத்தில் செடிகளில் இருக்கும் ஒரு மாற்றத்தை கண்டார். பரசுராமன்..பரசுராமன் எது என்னப்பா? ஒவ்வொரு செடியிலும் வேற வேற பூவா இருக்குன்னு அதன் அருகில் சென்றார்..சார் சார்..ஒரே செடியில் கத்திரிகாய்..வெண்டக்காய்..கொத்தரகாய் சார் என்று பார்த்த அதிசயத்தை பாபு தனது வெளிபடுதிக்கொண்டு அந்த செடியை சற்றே ஆராய்ந்து பார்த்தார். பார்த்தவருக்கு ஆச்சர்யம் ஒரே செடி மூன்று வெவேறான காய்கள் எப்படி சார்..? அதற்கு அலுவலர் செல்வராஜ் எதாவது ஒட்டு கிட்டு போட்டு இருப்பாங்க பா என்றார்.. அவர் சொல்லி முடிபதற்குள் பரசுராமன் இல்ல சார் அது ஒட்டு போட்ட செடி இல்லா. எங்க ஆகாஷ் சார் அதற்கு விதையே கண்டு புடிச்சி இருக்காரு. அவர் கிட்ட இருக்குற அந்த விதைய போட்டுதான் இந்த செடியே வந்திருக்கு. இதை கேட்ட செல்வராஜ் மற்றும் பாபுவிற்கு ஆச்சர்யம் மேலோங்கியது.

    என்பா உங்க முதலாளி ஆகாஷ் ஏதோ IT ல வேலை செய்யறாரு ன்னு சொன்ன. அவரா இதெல்லாம் செய்யறாரு. அமாம் சார். அவர் விதை உற்பத்தி பத்தி கூட படிச்சி இருக்காரு சார். அப்புறம் வேறென்ன இதுமாரி வித்தியாசமா செய்து இருகாரு பா?


    அமாம் சார்.. நெல்லு எப்படி சார் விளையும் ...பயிரா தான விளையும் ..ஆனா ஆகாசு
    நெல்லு விளைவிக்கும் மரத்த உருவாக்குற முயற்சில இருகாரு சார்..

    அமாம் பா ...நீ சொல்றது நம்ப முடியாத மாறி இருக்கு..ஆனா மனுஷன் ஏதோ புதுசா பன்றாருபா..அதனால தான் இவர அகில இந்தியா வனச்சரக ஆணையம் கூப்பிட்டு இருக்காங்க போல ...இவரு ஏதோ வசிய மரம் கண்டு புடிகுற முயற்சில இருக்காராம்..
    இது சம்பந்தமா டெல்லி ல இவர கூப்பிட்டு இருக்காங்க ...இதை சொல்லத்தான் இங்க வந்தேன் நான்...

    வந்த பின் தன் தெரியுது இவர் அதிசய வேலைகள். இங்கிட்டு அப்படியே இருக்கலானே தோணுது..அவ்வளவு மனசுக்கு ஆசையா இருக்கு பா.. என்று சொல்லி கொண்டே மீண்டும் வயலை சுற்றி வருகின்றனர்.

    இவர்கள் சுற்றி வரும் விஷயத்தை வெப்காம் மூலம் கவனித்து விட்டு ஆகாஷ் பரசுராமனுக்கு போன் செய்கிறான்.

    ஹலோ ...பரசு ...!

    ஆகாஷ் வணக்கம் பா.. பரசு ...யார் இவர்கள் ...எதற்காக வந்திருக்காங்க..?

    சார் இவர்கள் மாவட்ட வன சரக அலுவலகத்தில் இருந்து வந்து இருக்காங்க சார்....
    நீங்க ஏதோ வசிய மரம் கண்டு புடிச்சி .....என்று சொல்லி முடிபதற்குல்லே ஆகாஷ் ..பரசு போன அவர்கிட்ட கொஞ்சம் கொடு...

    வணக்கம் சார்.. நான் ஆகாஷ் பேசுறேன்..

    வணக்கம் சார்..நான் செல்வராஜ் பேசுறேன் ...திருவண்ணாமலை மாவட்ட வன சரகதுல சூப்பர்டென்ட் டா இருக்கேன்.



    உங்களுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கு...

    இந்திய வனச்சரக ஆணையத்துல இருந்து..நீங்க ஏதோ வசிய மரம் கண்டு புடிச்சது
    சம்பந்தமா கூப்பிட்டு இருக்காங்க..

    அதற்கான அழைப்பை கொண்டு வந்திருக்கேன்...


    அப்படியா ...மகிழ்ச்சி..மகிழ்ச்சி..சொல்லிகொண்டிருக்கும் வேளையில் செல்வராஜ் தனது
    பேச்சை தொடர்ந்தார்...

    டெல்லி க்கு இது சம்பந்தமா போகவேண்டியிருக்கும் ஆகாஷ். இந்த அழைப்பை பரசுராம் கிட்ட கொடுத்துவிட்டு செல்கிறேன்.

    மிக பயனுள்ள பல செயல்களை செய்யும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    என்று போனை பரசுராமன் இடத்தில் கொடுத்துவிட்டு..செல்வராஜும் ..பாபுவும் கிளம்பினர்.

    ஆகாஷின் உள்ளுணர்வு மகிழ்வில் திளைத்தாலும்..இந்த முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலாகியது.

    உடனே ஆகாஷ் பரசுராமனிடம் அந்த அழைப்பை பற்றிய செய்திகளை கேட்டறிந்து,
    அதனை ஸ்கேன் செய்து தனது mail -லுக்கு அனுப்ப சொல்லிவிட்டு தனது அலுவலக வேளையில் மூழ்கினான்.

    அன்றைய பணி முடிந்து இரவு தனது அறையில் இருக்கும் போது இன்றைக்கு வந்த அழைப்பை பார்த்து சிந்தனையில் மூழ்கினான்.

    அனைத்தும் செம்மையுடன் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் தனது கற்பனைகளை நிஜமாகிடவேண்டும் என்ற முனைப்போடு..

    இந்திய வன ஆய்வாளரின் அழைப்பிற்கு சம்மதம் தெரிவித்து பதில் mail அனுப்பிவிட்டான்.

    பன்ஜார ஹில்ஸ் பணிகளை மறுநாள் முடித்து கொண்டு ..

    அன்றைய இரவே
    ஷிமோகாவில் இருக்கும் தனது மற்றொரு வயல்வெளிக்கு புறப்பட்டு விட்டான்.

    மலையும் அல்லாமல் ...சமவெளியும் இல்லாமல் இருக்கும் தனது நிலத்தில் மறுநாள்
    காலையில் சென்றடைந்தான்.

    அங்குதான் அவன், தனது தாவரங்கள்...மற்றும் மரம் சார்ந்த ஆராய்சிகளை செய்துகொண்டு வருகின்றான்.

    அங்கு அவன் வல்லிசி என்ற செடி..கொடி..மற்றும் வல்லிசி மரம் சார்ந்த ஆராச்சியை
    கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றான்.






    வல்லிசி...வித்தியாசமானது

    வல்லிசி செடி..
    வல்லிசி கொடி..
    வல்லிசி மரம்...

    ஒரே பெயரில் செடி ..கொடி..மரம் ...

    வல்லிசி யோட பொட்டானிகல் நேம் whompingping willy

    இதோட இயல்பு என்னன்னா?

    இந்த வல்லிசி மரத்த சுத்தி நூத்தி ஐம்பது km radius தூரத்துல இருக்குற மனிதர்களுக்கு
    ஒருவித மனமகிழ்ச்சி யூட்டும் மனம் வீசும். அதனால அந்த வட்டாரத்துல மனிதர்களுக்கு இயல்பாகவே வரும் ஆக்ரோஷ தன்மையை குறைக்கும் தன்மையுடையது. இதைத்தான் வசிய மறன்னு சொல்வது.

    இந்த வல்லிசி மரம் புங்கமரம் போல அடர்ந்த கிளைகளையும்..இலைகளைகளையும் கொண்டது..பன்னெடுங்காலம் வளரக்கூடியது..

    இந்த வசிய மரத்த எதுக்கு பயன்படுத்தலாம் என்று யோசனை செய்த பொது ஆகாசுக்கு
    தோன்றியது ஒரு மாபெரும் யோசனை..

    இந்த மரத்த நாட்டு எல்லையோரம் வச்சா..

    எல்லையோர பாதுகாப்பில் பயன்படுத்தலாம் என்ற யோசனை வந்தது.

    இதை ஏற்கனவே டெல்லி பாதுகாப்பு துறைக்கு கடிதத்தில் முறையீடு செய்ததால் இப்போது அதற்கான நேர்காணல் அடுத்த வாரம் வந்துள்ளதை நினைத்து பெருமிதத்துடன்...நாட்டிற்க்கு சேவை செய்யும் மனப்பாங்குடன் ..தயாரானான் ஆகாஷ்.

    வல்லிசி மரம் வைத்தால் நாட்டின் பாதுகாப்பு எப்படி மிக எளிதாக அமையும் என்பதை
    விளக்கவே இந்த நேர்காணல் என்பதால் தந்து கண்டுபிடிப்பின் பயன்பாடுகளை விரிவாக விளக்க தன்னை தயார் படுத்தி கொண்டான்.

    அந்த நாளும் வந்தது...

    பாதுக்காப்பு அதிகாரிகள் ...வன அதிகாரிகள் ..மற்றும் பல அறிவியல் அரிஜர்கள் இருக்கும் அறையில் ஒவ்வொன்றாக தனக்கே உரித்தான பாணியில் வல்லிசி யின் பயன்பாடுகளை அடுக்கினான்..

    பலர் கேள்விகளை எழுப்ப எழுப்ப பதிலை சாமர்த்தியமாக சொல்லி முடித்தான்.
    சில கேள்விகள் கேலி களாக இருந்தாலும் அவைகளையும் திறம்பட விளக்கி
    தனது சாதுர்ய பதில்களால் அனைவரையும் வசியம் செய்து..அன்றைய நேர்காணலை
    வெற்றிகரமாக முடித்தான்...


    ஒரு சில மாதங்கள் சென்ற பின்பு ....

    அவனது கற்பனைக்கு செவி சாய்த்து பாதுகாப்பு துறைலிருந்து வல்லிசி மரம் வைக்க உத்தரவு வந்தது...

    நாட்டின் மிகபெரிய அச்சுறுத்தலுக்கு வல்லிசி மிகபெரிய பலம் என்றால் மிகையாகது.

    வல்லிசி வளர்ப்போம் ...ஆக்ரோஷத்தை குறைப்போம்..

    வல்லிசி வளர்ப்போம் ...எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை தடுப்போம்...


    Sponsored Links
    Last edited by silentsounds; 20th Aug 2015 at 11:58 PM.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை




  2. #22
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,885
    Blog Entries
    1

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    Dear Friends,

    Its time to award and reward the contestants who have given outstanding short stories for Our Independence Day Contest. Yes its really interesting to read all the stories and they are all very creative without any doubt. You all gave a wonderful opportunity to think about our common fellows patriotism to our country. We'd also like to thank all the participants for the valuable contributions. After a tough our juries picked up our winners.

    The Winners of our "Independence day Special Contest - Short Story" are Chitra @kasri66 and @srinimurali

    Here's a gift for you friends,


    After both of them @Subhasreemurali and @ramyaraj join hands next to them.


    Congratulations Winners. Keep up your good work in the future contests also.


    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Special Independence Day Contest - Short Story-dare-win.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #23
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,427

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    @kasri66 @srinimurali @Subhasreemurali @ramyaraj

    வாழ்த்துக்கள் மக்கா.. கலக்குங்க..


  4. #24
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    32,008

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story




    Chitra @kasri66 and Murali @srinimurali for winning the contest.

    Congrats to you too Subha and Ramya



    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Special Independence Day Contest - Short Story-congrats.png  
    Jayanthy





  5. #25
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    Congrats Friends.............

    @kasri66 @srinimurali @Subhasreemurali @ramyaraj

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  6. #26
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,786

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    Hearty Congrats Chitra & Srinimurali .

    Congrats to you too my dear friends Ramya & Subha .



  7. #27
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    HEARTY CONGRATS TO

    @kasri66, @srinimurali, @Subhasreemurali, @ramyaraj



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  8. #28
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,399
    Blog Entries
    19

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    Quote Originally Posted by Penmai View Post
    Dear Friends,

    Its time to award and reward the contestants who have given outstanding short stories for Our Independence Day Contest. Yes its really interesting to read all the stories and they are all very creative without any doubt. You all gave a wonderful opportunity to think about our common fellows patriotism to our country. We'd also like to thank all the participants for the valuable contributions. After a tough our juries picked up our winners.

    The Winners of our "Independence day Special Contest - Short Story" are Chitra @kasri66 and @srinimurali

    Here's a gift for you friends,


    After both of them @Subhasreemurali and @ramyaraj join hands next to them.


    Congratulations Winners. Keep up your good work in the future contests also.


    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.

    Ms. Ilavarasi @Penmai

    Thanks for your message indicating me as one of the winner for Special Independence Day Contest.

    Penmai, ramyaraj, jv_66 and 2 others like this.
    - Chitra

  9. #29
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,399
    Blog Entries
    19

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    - Chitra

  10. #30
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,765

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    Haiyyyyaaa..


    Super pa kalakiteenga...


    Congrats dears.... @kasri66 @srinimurali @Subhasreemurali @ramyaraj



    My Stories : CLICK CLICK




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter