Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #211
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    வணக்கம் லஷ்மி..



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.
    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்..


    இது தன்னம்பிக்கையின் உச்சம்..
    இந்த உச்சத்தை அச்சாரமாக கொண்டு எதைச் செய்தாலும் எண்ணியது எண்ணியபடி நடக்கும். இது கற்பனையன்று நிதர்சனம்.

    இந்தவாசகம் எனக்கு எவ்வளவு நம்பிக்கை தருகிறது என்பதை அளவிடமுடியாது.



    தங்களின் பாராட்டுகளுக்கும்..கருத்துகளுக்கும் நன்றிகள்.




    Quote Originally Posted by lashmi View Post
    ஹாய் ப்ரிண்ட்ஸ் உங்க எல்லோருடைய சிறுகதையும் ரொம்ப அழகா வித்தியாசமா இருக்கு.... வாழ்த்துகள் ப்ரிண்ட்ஸ்.

    shansun70 சாரோட சிறுகதை அருமை..., நாட்டிற்காக நேரம் காலம் பார்க்காமல் தன் உயிரையும் துச்சமென மதித்து போராடும் படைவீரர்களின் குடும்ப நிலையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துகள் சார்.


    சித்ரா உங்களது சிறுகதை மிகவும் அருமை... நாட்டுப்பற்று என்பது ரத்தத்தில் கலந்து உயிரோடு ஒன்றாக இருக்க கூடியது. இதில் ஏழை பணக்காரன்,ஜாதி பாகுபாடு எதுவும் கிடயாது என்பதை அந்த சிறுவனின் கதாபாத்திரத்தில் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அருமை தோழி.

    இஷிதா உங்களது சிறுகதையும் அருமை....அப்பா அம்மா என பெற்றோர்கள் அரவணைப்பில் எப்போதும் இருக்கும் குழந்தைகள் ....ஆனால் நாட்டை காக்க தன் குழந்தைகளை விட்டு வெகு தூரம் சென்று இருக்கும் ரோஹித் அப்பாக்கள் போல் இருக்கும் பலருக்கு ஆராதனா போல் அம்மாக்கள் கிடைத்து ரோஹித் போல் சூழ்நிலை புரிந்துகொள்ளும் பிள்ளைகள் கிடைப்பது ஒரு வரமே.....ரொம்ப அழகாக அதை சொல்லி இருக்கீங்க....சூப்பர்


    ஜெயா உனது சிறுகதையும் மிகவும் அருமை.....இன்றிய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மிக அழகாக கதாபாத்திரத்தை உருவாக்கி நம் நாட்டின் பாரம்பரிய தொழிலான நெசவு தொழிலை மையமாக கொண்டு அருமையான கதையை படைத்திருக்கிறாய்..வாழ்த்துகள் .


    பெமி ஒரு வித்தியாசமான நாட் எடுத்திருக்கடா ......அதற்கே உனக்கு பாராட்டு..... அதை சரியான முறையில பதிவும் செஞ்சிருக்க..... உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கை பேமி......அருமை தோழி.....வாழ்த்துகள்.


    முரளி பிரதர் கலாம் அஞ்சலியில் உங்களது எழுத்துகளை பார்த்தே பிரமித்து போனேன். இதில் அதை மீண்டும் நிலைபடுத்தி விட்டீர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முதலில் படித்த போது கொஞ்சம் புரியவில்லை (தப்பா எடுத்துக்காதீங்க பிரதர்....நான் கொஞ்சம் லேட் பிக்கப் ) மறுபடியும் உங்கள் கதையை படிக்க அதன் காட்சிகள் ( நீங்கள் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தீர்கள் ..அதனால் தெளிவாக புரிந்தது) கண்களில் ஓட ஹப்பா என்னது இது......படித்தவுடன் இந்த வார்த்தை தான் மனதில் தோன்றியது....அறிவியலையும் தேசபற்றையும் ஒன்றாக பிணைத்து நீங்க உருவாக்கிய கதை மிகவும் அருமை....சூப்பர் டூப்பர் பிரதர்....வாழ்த்துகள்.

    கிரிஜா உங்களது சிறுகதையும் அருமை.....ஒரே வயிற்றில் பிறந்த இருபிள்ளைகள் ஆனால் புத்தியோ நேர் எதிர்.....நாட்டை காக்க ஒரு மகன் போராட மற்றொரு மகனோ பணத்திற்காக நாட்டை காட்டி கொடுத்து பெற்ற தந்தையை கொலை செய்கிறான். தாய் மண்ணிற்கு துரோகம் செய்பவன் கண்டிப்பாக தண்டனை அனுபவிப்பான்.தெய்வம் நின்று கொல்லும். அருமை தோழி...வாழ்த்துகள்.

    சுபா உங்கள் சிறுகதையும் சூப்பர் .....வைதேகி போன்ற பெண்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஏஞ்சலின் போல் ஒருவர் அமைந்தால் அவர்களது திறனும் வெளிப்படும். சுதந்திரபோராட்ட காலத்தில் வைதேகி போன்ற வெளிவராத பலர் இருப்பதையும் அவர்களின் உணர்வையும் மிக அழகாக சொல்லி இருக்கீங்க சுபா... அதிலும் சுவற்றில் மாட்டி இருந்த அந்த ஓவியம் அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மற்றும் வரம் கொடுத்தவனுக்கு தெரியும் பெற்றவனுக்கு தெரியாது......ரியலி அருமை அருமை தோழி....வாழ்த்துகள்


    கேத்தீஸ் பிரதர் உங்களது சிறுகதையும் அருமை.... ஒரு போரின் நேரடி வர்ணனையை கேட்பது போல் இருந்தது.பந்த பாசம், போர்க்களம் என இரண்டு உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க....அருமை பிரதர்...வாழ்த்துகள்.

    ரம்ஸ் உனது சிறுகதையும் சூப்பர் .....விவசாயத்தை களமா வச்சு மிக அழகா கதையை பதிவு செஞ்சிருக்க....எனக்கு உன்னோட ஸ்டோரி படிக்கும்போது வைரமுத்துவோட மூன்றாம் உலகப்போர் புத்தகம் தான் நியாபகம் வந்திச்சு......வீரபாண்டி போல் மண்ணை தன் உயிராக மதிக்கும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அருமை தோழி...வாழ்த்துகள்.


    குணா உங்க சிறுகதையும் சூப்பர்.....நல்ல கற்பனை தான் குணா.....இது போன்ற அதிசியம் நிகழ்ந்தால் எல்லாருக்கும் சந்தோசம் தான். நெல் மரத்தில விளைவிக்க முடியுமா அப்படி நடந்தா நமக்கு எவ்ளோ இடம் மிச்சம் ஆகும்.... ஒரு ஏக்கரில் பயரிடபடுவது மூன்று மரத்தில் முடித்துவிடலாம். அறுவடையும் சுலபம். ஹஹஹா ரொம்ப நல்லா இருக்கு குணா ....

    அப்புறம் அந்த வல்லிசி சூப்பர் டூபர்...... நினைச்சு பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு...அது நடந்தால்

    கதையை படித்து முடித்துவிட்டு உங்களது SIGN கலாமின் படத்தை பார்த்ததும் கண்டிப்பாக இந்த கனவு நினைவாகும் என்ற நம்பிக்கை வருகிறது. வித்தியாசமான கதைகளத்தில் ஒரு நிழல் பிம்பத்தை நிஜமாக்க முயற்சி செஞ்சு இருக்கீங்க..... அருமை அருமை குணா ...வாழ்த்துகள்.


    ப்ரிண்ட்ஸ் உங்க எல்லாருடைய படைப்புகளும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துகள்.



    Sponsored Links
    kasri66, lashmi and femila like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #212
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    ரதிதேவி..வணக்கம்.


    பெண்மையில் நான் பிரசுவிக்கும் இரண்டாவது கதை..
    பிரசவம் என்றாலே அனைவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பை தரும்..
    அதுபோலவே கதை என்று எதைப் படித்தாலும்..கேட்டாலும் எதிர்பார்ப்பு என்பது..அதிகரிக்கும். நான் இக்கதையை எதிர்பார்ப்பு என்ற கதையின் இயல்பிலேயே நகர்த்தி இருக்கின்றேன் என்று விளக்கமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.


    வல்லிசி..செடி..கோடி பற்றி ஒரு இடத்தில் சொல்லிருப்பேன்..
    அதை வளர்த்துகொண்டு..வீட்டுத் தேவைகளையும்..சுற்றுப்புற தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.


    என் கற்பனையை மிக அழகாக்கி ..பாராட்டியமைக்கு நன்றிகள்..















    Quote Originally Posted by RathideviDeva View Post
    @silentsounds சார்,
    உங்கள் கதை fiction லயே, கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட நடக்குமா, நடந்தால் நன்றாக இருக்குமே என்ற வகையை சார்ந்தது.


    கதை படிக்க படிக்க, நான் ஏதோ, மூலிகை பெட்ரோல் மாதிரி ஏதோ லாபம் ஈட்டக்கூடிய மூலிகை தயாரிக்கிராரோ, அல்லது மரபணு மாற்றம் சம்பந்தப்பட்ட வேலை எதுவோ செய்கிறாரோ என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தேன். அதாவது ஆகாஷை வில்லனாக அல்லது அவரை வைத்து வளர துடிக்கும் ஒரு வில்லன் கும்பல் என்று நினைத்திருந்தேன்.


    கடைசியில் அவர் லாப நோக்கோடு அல்லாமல் அமைதியை ஏற்படுத்தும் ஒரு செடியை உருவாக்குவதில் தான் ஈடுபட்டிருந்தார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.


    நீங்கள் நாட்டின் எல்லையோரத்தில் இந்த மரங்களை நட்டுவைப்பதால் வரும் பயனை பற்றி கூறி இருந்தீர்கள். எனக்கு என்னவோ உள்நாட்டில் தான் அதன் தேவை அதிகமாக இருப்பதாக உணர்கிறேன். பொது மக்களிடம் ஆக்ரோஷம் குறைந்தால் குற்றங்கள் குறையும், நாட்டு வளர்ச்சிக்கு மக்களின் பங்கு அதிகரிக்கும், அரசியல்வாதிகள் நாகரீகமாக நடந்து கொள்வார்கள், ஏற்கனவே மகிழ்ச்சியாக இருப்பதால், போலி சாமியார்கள் குறைவார்கள், நம் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையினால் சுற்றுலாத் துறைக்கு அதிக வருமானம் வரும்....


    kasri66, femila and RathideviDeva like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  3. #213
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by girija chandru View Post
    thank you rathi friend, will concentrate more in rectifying errors. as a teacher, i must look into. i would like to bring to your notice that my mother tongue is not tamil. (that is not an excuse for errors.still, when i posted in a hurry, for want of time, there are slips between the cup and the lip. i will avoid in future. thanks for your frank comments..
    it is hard to beleive that your mother tongue is not tamil.

    kasri66 and femila like this.

  4. #214
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Chitra sis @kasri66
    வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தியடையாத சடையனுக்குள் இருந்த தேசப்பற்றை அழகாக சொன்னீர்கள். அதே சமயம் மேடையில் தேசபக்தி பற்றியும், கொடிக்கு நாம் தரவேண்டிய மரியாதை பற்றியும் கரகோஷம் எழுப்பும் அளவுக்கு உணர்ச்சி மிக பேசிய மாணவன், கொடிக்கு காட்டிய மரியாதையையும் தெளிவாக காட்டினீர்கள். சட்டையில் கொடியை குத்திக்கொள்பவர் எல்லோருக்கும் தேசப்பற்று இருக்க வேண்டிய அவசியமும் அல்ல. குத்திக்கொள்ள சட்டை இல்லாதவர் எல்லோருக்கும் தேசபற்று இல்லாமல் இருக்க வேண்டிய அவசியமும் அல்ல என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்.


    இந்த கதைக்கு உயிர்ப்பு தந்ததே காவலாளிக்கும் சடையனுக்கும் நடந்த இயல்பான உரையாடல், அதுவும் வட்டார வழக்குடன்(slang ). இது தான் என்னை கதையோடு ஒன்ற செய்தது.


    கடைசியில் சடையனின் தேசப்பற்றுக்கு மண்ணின் மகிமை தான் காரணமோ என்று முடித்திருந்தீர்கள். மண்ணின் மகிமை தான் காரணமென்றால் அந்த மேடை பேச்சு மாணவனுக்கும் அல்லவா இருந்திருக்க வேண்டும். தேசப்பற்று என்பது தானாக வருவதில்லை. தன்னை சுற்றி இருக்கும் சூழல் + மனிதர்களால் மட்டுமே நேரிடையாகவோ /மறைமுகமாகவோ விதைக்க முடியும், என்பது என் கருத்து. சடையனுக்குள்ளும் யாரோ விதைத்திருக்கிறார்கள்.


    தொடர்ந்து எழுதுங்கள்.
    உங்களின் விரிவான விமர்சனத்துக்கு நன்றி ரதி @RathideviDeva,

    நான் எழுத்துலகத்துக்கு புதுசு. ஒரு கற்பனை காட்சியை விவரித்து காரணம் என்னவாக இருக்கும் என்று readers choiceக்கு விட்டுவிட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை நீங்களே சொன்ன மாதிரி நம்மைச் சுற்றியுள்ள சூழல்களாலும், மனிதர்களாலுமே தேசப்பற்றை ஒருவனுக்குள் விதைக்க முடியும் என்பது தான் என் கருத்தும். உதாரணத்துக்கு, ஒருவர் குடும்பத்தில் ராணுவத்தில் பணி புரிபவர் இருந்தால் அது ஒரு வித தூண்டுதலாக அமையும், அல்லது வீட்டு பெரியவர்கள் ஆசிரியர்கள் கூறும் தகவல்கள் கதைகள் வாயிலாக தேசப்பற்று வரலாம். கல்வி அதை போதிக்கலாம்.

    ஆனால் இங்கே சடையனுக்கு இதில் எதுவுமே இல்லை, அப்புறம் வேறு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. (தலைப்புக்கு பொருத்தமா வரணுமே என்ற என் கவலை கூட காரணமா இருக்கும்*wink*)

    இப்படி ஒரு கற்பனை நிகழ்ச்சி நடந்தாலும் அது அவன் வயது காரணமாக கொடியின் மேல் கொண்ட ஒரு சிறு பிள்ளைக்கே உரிய ஆசையாலும் வந்திருக்கலாம், இவனே வளர்ந்து வாலிபனாகும் போது அவன் preferences மாறுபடலாம். அதேபோல அந்த பள்ளிமாணவன் இன்று கொடியை மதிக்காவிட்டாலும் நாளை தேசத்துக்கு ஏதோ ஒரு விதத்தில் சேவை புரிபவனாக மாறலாம், இந்த சமயத்தில் அவர்கள் மன நிலையை இப்படி இருக்குமோ என்று ஒரு கற்பனையில் எழுதப்பட்டது இந்த கதை. அது சரியானபடி விளக்க வைக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சி.

    femila and RathideviDeva like this.
    - Chitra

  5. #215
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @femila
    ஒரு இஸ்லாமியர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் வேறு இடத்தில் வளர்ந்தாலும், பல இன்னல்களுக்கு பிறகு இந்திய மண்ணில் வந்து உயிர் பிரிய நினைப்பது கற்பனைக்கு அப்பார்ப்பட்டதாக இருந்தாலும், அவரை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களும் நிதர்சனத்தில் உண்மை.


    அதுவும் அவர் உண்மையில் நிரபராதி என்று தெரிந்த பின்பும், அவரின் உண்மை அடையாளத்தை வெளி உலகிற்கு மறைத்து அவரை தேச துரோகியாகவே மண்ணில் புதைத்தது ....இன்னும் எத்தனை அப்பாவிகள் இவரைபோல், public / political / media நெருக்கடிக்கு ஆளாகி, எத்தனை பேர் பலி ஆக்கப்பட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.


    எப்பவும் போலவே, சமூகத்தில் அதிகமாக பேசப்படாத ஒரு பிரச்னையை எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
    ஹாய் அக்கா @RathideviDeva

    ரொம்ப ரொம்ப நன்றி மா..

    என்ன பண்றது, நிஜத்தோடு கற்பனைனையும் சேர்க்கலைன்னா எழுத முடியலையே!!!

    உங்க கருத்தைப் பார்த்ததும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா..

    இப்படி ஊக்குவிப்பவர்கள் இருக்கும்போது, இன்னும் வேற என்ன வேண்டும். நிறைய எழுததான் தோணுது.

    நன்றி அக்கா....

    kasri66 and RathideviDeva like this.


    My Stories : CLICK CLICK




  6. #216
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by silentsounds View Post
    hi..femila...

    உங்கள் கருத்துகளுக்கும்..பாராட்டுதலுக்கும் நன்றிகள்.


    இக்கதையை அவசர அவசரமாக proof கூட செய்யாமல் பதிவுசெய்தேன்.


    எதையுமே மிக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பது என் இயல்பிலே எனக்குள்ள policy.


    இருந்தாலும் சற்று அதை புறந்தள்ளி பதிவுசெய்தேன். அது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்காதது உண்மைதான்.


    உங்களின் எதிர்பார்ப்பை செவ்வனே செய்ய முயல்கின்றேன்.
    நன்றிகள்.
    ஹாய் அண்ணா @silentsounds

    வாழ்க்கை என்றாலே இதுதானே.. சில நேரங்களில் நமது இயல்பை தளர்த்துதானே ஆகணும். ஹீ.. ஹீ..

    Wise people will do small mistake attimes.. [romba ice-o]

    என்ன இருந்தாலும் சரி, உங்க எழுத்துக்கு நிறைய ரசிகர்கள் வந்தாச்சு.. அதுனால தொடர்ந்து எழுதுங்க...

    silentsounds and kasri66 like this.


    My Stories : CLICK CLICK




  7. #217
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    ஹாய் கோவா அக்கா @lashmi

    நான் எதிர்பார்க்கவே இல்லை..

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா, Femi செம ஹேப்பி.. eeeeeeeeeeeeeeee...

    kasri66 and lashmi like this.


    My Stories : CLICK CLICK




  8. #218
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @RathideviDeva
    கதைய படிக்கும் போது படிப்பவர் மனத்திரையில் அதன் காட்சிகள் விரியனும்னு ஆசை பட்டேன். உங்க கமெண்ட்ஸ் படிச்சதும் என் விருப்பம் நிறைவேறியது மிக்க மனநிறைவை தருகிறது. இதே நடராஜர் கான்செப்ட் வச்சு ஒரு பேராசைகாரன் கோடிஸ்வரன் ஆகிறத காமெடியா ஒரு கதை எழுதி என் ஆபீஸ் நண்பனிடம் கொடுத்து படிக்க சொன்னேன். ஒரு வாரமா feed back வரல. கதை நல்ல இருக்கான்னு ? நானே வலியப்போய் கேட்டேன். அதுக்கு அவன் "ஓ அது கதையா ! நான் ஏதோ ஸ்லோகம் னு நெனைச்சு அம்மாகிட்ட கொடுத்திட்டேன் னு சொன்னான் (?). இது நடந்து ஒரு வருஷம் ஆச்சு.பாவம் அவங்க அம்மா இன்னைக்கு வர என் கதையை ஸ்லோகம் னு நெனைச்சு உரு போட்டுட்டு இருக்கிறதா கேள்வி ! (அவங்க குருட்டு நம்பிக்கை பலிகட்டும்னு கடவுள வேண்டிகிறேன்)

    so ..... இப்பல்லாம் கதை எழுதும் போது படிக்கிறவங்களுக்கு தெளிவா புரியணும், அதே சமயம் அந்த கற்பனையும் நிஜத்தில் நடக்க சாத்தியம் இருக்கான்னு ரிசர்ச்சு பண்ணி எழுதிறேன் .பழங்கால சீனா போர் தந்திரங்களில் இது போல சில magic இருக்கிறதா படிச்சிருகிறேன்.

    நடராஜர் சிலை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த தியரி of relativity உடன் ஒத்து போவதாக ஆராய்ச்சி சொல்கிறது, ஆனால் அது என் கதையோடு ஒத்துபோகாததால் ரேடாரை செயல் இழக்க செய்ய காஸ்மிக் கதிர்கள் பயன்படும் என்று அறிந்து, அந்த காஸ்மிக் கதிர்கள் நடராஜர் சிலையில் இயல்பாக இருப்பதும் என் கற்பனை கதைக்கு ஒரு வலுவான ஆதாரம்.
    உங்களுடைய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி . நீங்கள் மிக சிறப்பாக கட்டுரைகள் எழுதுவதாக கேள்விபட்டு இருக்கிறேன் . அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .


  9. #219
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by srinimurali View Post
    இதே நடராஜர் கான்செப்ட் வச்சு ஒரு பேராசைகாரன் கோடிஸ்வரன் ஆகிறத காமெடியா ஒரு கதை எழுதி என் ஆபீஸ் நண்பனிடம் கொடுத்து படிக்க சொன்னேன். ஒரு வாரமா feed back வரல. கதை நல்ல இருக்கான்னு ? நானே வலியப்போய் கேட்டேன். அதுக்கு அவன் "ஓ அது கதையா ! நான் ஏதோ ஸ்லோகம் னு நெனைச்சு அம்மாகிட்ட கொடுத்திட்டேன் னு சொன்னான் (?). இது நடந்து ஒரு வருஷம் ஆச்சு.பாவம் அவங்க அம்மா இன்னைக்கு வர என் கதையை ஸ்லோகம் னு நெனைச்சு உரு போட்டுட்டு இருக்கிறதா கேள்வி ! (அவங்க குருட்டு நம்பிக்கை பலிகட்டும்னு கடவுள வேண்டிகிறேன்)



    இந்த கதை கருவ மட்டும் சுபா சிஸ் @Subhasreemurali எழுதி இருந்தாங்கன்னா உங்களுக்கு கேக்காமலே பதில் கிடைச்சிருக்கும் சார்(இப்படி தேவையில்லாம ஒரு தாயையும் மகனையும் இம்சித்த பாவத்துக்கு ஆளாகாம இருந்திருக்கலாம்). அவங்க காமெடி சென்ச பீட் பண்ணவே முடியாது. வேணும்னா நான் சொன்னத முயற்சி செய்து பாருங்க.

    நீங்கள் மிக சிறப்பாக கட்டுரைகள் எழுதுவதாக கேள்விபட்டு இருக்கிறேன் .
    யாரோ என்னை பத்தி கட்டு கதை சொல்லி இருக்காங்க. தயவு செஞ்சு நம்பிராதிங்க. கட்டுரையெல்லாம் அவ்ளவா எழுதுறதில்லை சார். கவுன்ட்டர் கொடுக்க மட்டும் எனக்கு நல்லா தெரியும்.(அப்படி எனக்கே ஒரு நினைப்பு).

    Last edited by RathideviDeva; 25th Aug 2015 at 11:32 PM.

  10. #220
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by srinimurali View Post
    இதே நடராஜர் கான்செப்ட் வச்சு ஒரு பேராசைகாரன் கோடிஸ்வரன் ஆகிறத காமெடியா ஒரு கதை எழுதி என் ஆபீஸ் நண்பனிடம் கொடுத்து படிக்க சொன்னேன். ஒரு வாரமா feed back வரல. கதை நல்ல இருக்கான்னு ? நானே வலியப்போய் கேட்டேன். அதுக்கு அவன் "ஓ அது கதையா ! நான் ஏதோ ஸ்லோகம் னு நெனைச்சு அம்மாகிட்ட கொடுத்திட்டேன் னு சொன்னான் (?). இது நடந்து ஒரு வருஷம் ஆச்சு.பாவம் அவங்க அம்மா இன்னைக்கு வர என் கதையை ஸ்லோகம் னு நெனைச்சு உரு போட்டுட்டு இருக்கிறதா கேள்வி ! (அவங்க குருட்டு நம்பிக்கை பலிகட்டும்னு கடவுள வேண்டிகிறேன்)
    ஹா.. ஹா.. சூப்பர் அண்ணா..

    அம்மா சும்மா கலக்குறாங்க.

    sumathisrini likes this.


    My Stories : CLICK CLICK




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter