ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
Discuss here on ரமணர் ஆன்மிக சிந்தனைகள் within the Spirituality forums, part of the Home forum; உணவின்றி விரதம் வேண்டாமே * "நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்' என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை ...
-
30th Dec 2011, 04:27 PM #21
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
உணவின்றி விரதம் வேண்டாமே
* "நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்' என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.
* ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை.
* கடவுளும் குருவும் முக்தி அடைவதற்கான வழியை மட்டும் தான் காட்டுவார்கள். நாம் தான், அவர்கள் காட்டிய வழியில் சென்று முக்தி பெற வேண்டும்.
* நீ ஒருவருக்கு கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைத் திட்டினாலோ, ஏமாற்றினாலோ உன்னையே திட்டியதும், ஏமாற்றிக் கொண்டதுமாகும். நீ பிறருக்கு தீங்கு செய்யும் போது, உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு, நீ வேறல்ல.
* உண்ணாவிரதம் என்பது ஒரு நோன்பு, அது மனதளவில் மட்டுமே இருக்க வேண்டும். உணவை மறுத்து பட்டினி இருந்தால், அது மனதைப் பாதிக்கச் செய்யும். ஆன்மிகவிரிவுக்கு சாத்வீகமான உணவு அவசியம்.
-
30th Dec 2011, 04:28 PM #22
Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
இறைவனிடம் சரணடைந்து விடு
* "ராமா' என்ற சொல்லில் "ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். "மா'என்ற எழுத்து "நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் "ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், "மா' என்ற எழுத்து "ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.
* "சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.
* இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.
* நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.
Similar Threads
-
தாயுமானவர் ஆன்மிக சிந்தனைகள்
By Parasakthi in forum SaintsReplies: 7Last Post: 15th Dec 2011, 05:17 PM -
குழந்தைகளின் உணவும் ஆரோக்கியமும்
By sumathisrini in forum Health and Kids FoodReplies: 0Last Post: 27th Oct 2011, 07:59 PM -
உரத்த சிந்தனை: ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 22nd Aug 2011, 01:01 AM -
கணினிகளில் சக்தியை (எனர்ஜி) சேமிக்கும் வழ
By silentsounds in forum ComputerReplies: 1Last Post: 19th Apr 2011, 12:06 AM -
நம் அறியாமையே அவர்களின் ஆனந்தம் : ஆர்.நடரĬ
By silentsounds in forum News & PoliticsReplies: 0Last Post: 24th Mar 2011, 10:23 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks