பக்தி கதைகள்
Discuss here on பக்தி கதைகள் within the Spirituality forums, part of the Home forum; ஒரு ரூபாய் சங்கதி ஒரு ஊரில் சாமியார் ஒருவர் இருந்தார். ஊர் மக்களிடம்,""பொய் சொல்லாதீர், திருடாதீர், ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள், ஜாதிபேதம் கூடவே கூடாது,'' என்றெல்லாம் அறிவுரை ...
-
5th Jan 2012, 12:53 PM #11
Re: பக்தி கதைகள்
ஒரு ரூபாய் சங்கதி
ஒரு ஊரில் சாமியார் ஒருவர் இருந்தார். ஊர் மக்களிடம்,""பொய் சொல்லாதீர், திருடாதீர், ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள், ஜாதிபேதம் கூடவே கூடாது,'' என்றெல்லாம் அறிவுரை வழங்குவார்.
மக்களும் அதை ஏற்று அமைதியாக இருந்தனர். இது பக்கத்து ஊரில் இருந்த ஒரு இளைஞனுக்கு வெறுப்பைத் தந்தது. நம்ம ஊரெல்லாம் கெட்டுக்கிடக்க, இந்த ஊர் மட்டும் இவ்வளவு அமைதியாய் இருக்கிறதே! இதைக்கெடுக்க
வேண்டுமானால், சாமியாரின் இமேஜைக் குறைக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.
அந்த கிராமத்துக்கு வந்தான்.
""மக்களே! உங்க ஊருக்கு வந்துள்ள சாமியார் ஏதேதோ சொல்லி, உங்க மனசை மாற்றி, சோம்பேறியாக்க பார்க்கிறார். உங்க தைரியத்தை குறைக்கிறார். என்னைப் பாருங்கள்! நான் இவரை விட பலசாலி. என்னால் தண்ணீரில் கூட நடக்க முடியும். அப்படி நடந்து காட்டினால், நான் சொல்வதைஇனி கேட்பீர்களா?'' என்றான்.
ஊர் மக்களும் சரியென்று தலையாட்டினர்.
எல்லாரும் ஆற்றங்கரைக்கு சென்றனர். வாலிபன், தன் உடலில் நீரில் மூழ்காமல் இருப்பதற்குரிய ஆடைகளை அணிந்து தண்ணீரில் நடந்து அக்கரைக்கு போனான். மீண்டும் நடந்து வந்து சேர்ந்தான். ஊரே அவனைப் பாராட்டியது.
""சாமியாரே! உங்களால் அறிவுரை தான் சொல்ல முடிகிறது. இவனோ தண்ணீரிலேயே நடக்கிறான். இவனால், நினைத்ததை யெல்லாம் எங்களுக்கு தர முடியுமே,'' என்றனர்.
""அடப்பாவிகளே! இதென்ன பிரமாதம்! இவன் செய்த வேலை ஒரு ரூபாய்க்கு தான் சமம். இவன், ஒரு ரூபாய் மட்டும் கொடுத்து, இங்கிருந்து ஓடத்தில் சென்றிருந்தால், உடைகூட நனையாமல் அக்கரைக்கு போயிருக்கலாம்,'' என்றார்.
அத்துடன், தண்ணீரில் நடக்க, அவன் பயன்படுத்திய ஆடையை இன்னொருவனை அணிந்து கொள்ளச் சொல்லி நடக்கச் சொன்னார். அவனும் ஹாயாக நடந்து சென்றான்.
நல்லவர்களின் புகழைக் குறைக்க, நாலு கெட்டவர்கள் வரத்தான் செய்வார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்!
-
9th Jan 2012, 12:04 PM #12
Re: பக்தி கதைகள்
புண்ணிய லோகம் அடைய
கட்டெறும்பு, காசிக்குப் போய் முக்தி பெற முடியுமா? முடியும்! நைம் சாரண்யத்தில், நட்சத்திர சத்ர யாகம் நடைபெறுவது வழக்கம். யாகம் முடிந்ததும், வந்து உட்காருவார், சூதமா முனிவர். அவரைச் சுற்றி பல முனிவர்கள் அமர்ந்து, ஏதாவது பக்தி கதைகளைச் சொல்லச் சொல்லி கேட்பர்.
ஒரு நாள், சூதமா முனிவர் வந்து உட்கார்ந்ததும், அவரை பார்த்து, "கட்டெறும்பு, காசிக்குப் போய் முக்தி பெற முடியுமா?' என்று கேட்டனர் மற்ற முனிவர்கள்.
"ஏன் முடியாது? அதற்கு ஒரு கதை இருக்கிறது; சொல்கிறேன் கேளுங்கள்...' என்றார் சூதமா முனிவர். இன்று நல்ல கதையை கேட்கப் போகிறோம் என்று, முனிவர்கள் சந்தோஷப்பட்டு, "சொல்லுங்கள்... அது எங்கள் பாக்கியம்...' என்றனர்.
கதை சொல்ல துவங்கினார் சூதமா முனிவர்...
ஒரு கிராமத்தில், ஒரு பாட்டி இருந்தார். கடைசி காலத்தில், காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று புறப்பட்டாள். வழியில் சாப்பிடுவதற்காக, ஒரு மடி சஞ்சியில் சில பட்சணங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
அந்த மடி சஞ்சியில் எப்படியோ ஒரு கட்டெறும்பு புகுந்து, அதுவும் காசிக்கு போய்ச் சேர்ந்தது.
பாட்டி காசிக்குப் போனதும், மடி சஞ்சியை எடுத்து உதறினாள். அதிலிருந்து, கட்டெறும்பு கீழே விழுந்தது. பாட்டி கட்டெறும்பைப் பார்த்ததும், தன் காலால் ஒரு மிதி மிதித்து, ஒரு தேய்ப்பு தேய்த்தாள். உருக்குலைந்து மரணமடைந்தது கட்டெறும்பு.
எறும்பு, காசி ஷேத்திரத்தில் மரணமடைந்ததால், சிவகணங்கள் வந்து, அந்த ஜீவனை, சகல மரியாதைகளுடன் கைலாசத்துக்கு அழைத்துச் சென்றன. காசியில் மரித்ததால் கைலாச வாசம் கிடைத்தது கட்டெறும்புக்கு.
இப்படிப்பட்ட காசி ஷேத்திரத்தின் மகிமை, சொல்லில் அடங்காது என்று சொல்லி, கதையை முடித்தார் சூதமா முனிவர். எல்லா முனிவர்களும், "ஆஹா... இன்று ஒரு நல்ல கதையைக் கேட்டோம்...' என்று சந்தோஷத்துடன் சாயங்கால அநுஷ்டானத்துக்குச் சென்றனர்.
அதாவது, தினம் ஏதாவதொரு புண்ணிய சரித்திரம், புண்ணிய தேசங்கள், மகான்களின் சரித்திரம் போன்ற ஆன்மிக விஷயங்களில் பொழுதை கழிக்க வேண்டும். புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய நதி தீரங்களில் வாசம் செய்து, பகவானையே தியானம் செய்து கொண்டிருந்தால், கடைசியில் புண்ணிய லோகத்தை அடையலாம்.
வெட்டிப் பேச்சிலும், வேண்டாத விவகாரங்களிலும் ஈடுபட்டால், புண்ணிய லோகத்தை எட்டிக்கூட பார்க்க முடியாது. பிறகு, கைலாசம், வைகுண்டம் என்பதெல்லாம், பேச்சளவில் தான் இருக்கும். நல்ல ஜென்மாவை நல்ல வழியில் கழிக்கலாமே!"If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
9th Jan 2012, 08:36 PM #13
Re: பக்தி கதைகள்
உங்கள் ஆசையெல்லாம் நிறைவேறட்டும்
ஒரு துறவி, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்ய காசிக்குப் புறப்பட்டார். சீடனிடம், நான் இன்னும் இரண்டு தீபாவளிகளுக்கு அங்கே தான் இருப்பேன். மூன்று வருஷம் கழித்தே வருவேன். அதுவரை என் சொத்தை பத்திரமாக பார்த்துக் கொள், என்றார். அப்படி என்ன சொத்து! ஒரே ஒரு கோவணம் மட்டும் தான்! ஒருநாள், காலை எழுந்து பார்த்தபோது, கோவணம் சின்னா பின்னமாகி கிடந்தது. எலி செய்த கைங்கர்யம் என புரிந்து கொண்ட சீடன், ஒரு பூனையை வாங்கினான். பூனைக்கு பால் வாங்க ஒரு பசுவை வாங்கினான். பசுவுக்கு புல் போட ஒரு வயலை வாங்கினான். அங்கே, களை பிடுங்க வந்த ஒரு இளசு மீது காதல் கொண்டான். அது திருமணத்தில் முடிந்தது.
குழந்தைகளைப் பெற்றான். துறவி திரும்பி வந்தார். ஏண்டா! போகும் போது சீடனாக இருந்தாய். இப்போது சம்சாரியாகி விட்டாயே! எப்படி? என்றார். எல்லாம் உங்கள் கோவணத்தால் வந்த வினை தான் என்றான். ஒரு புதுக்கோவணம் வாங்கியிருந்தால் பிரச்னை அப்போதே தீர்ந்திருக்கும். ஆசைகளை இவனாகவே பெருக்கிக் கொண்டு கோவணத்தின் மீது பழியைப் போட்டால் எப்படி? அதனால் உழைப்பைப் பெருக்குங்கள். சிரமங்களை எதிர்கொள்ளும் போது, இறைவனிடம் பாரத்தைப் போட்டுவிட்டு, பணிகளைத் தொடருங்கள். உங்க ஆசை நிறைவேறும்.
-
11th Jan 2012, 11:36 AM #14
Re: பக்தி கதைகள்
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
புத்திசாலிகளுடன் பழகுவது தான் நல்லது. நம்மைச் சேர்ந்தவர்கள் நண்பர்கள், உறவினர்களே ஆயினும் கூட, முட்டாள்தனமான யோசனை சொன்னால், அதைத் தவிர்த்து விட வேண்டும். இல்லாவிட்டால், இந்த வியாபாரிக்கு நேர்ந்த கதை தான் நமக்கும்! ஒரு வியாபாரியும், அவரது வேலைக்காரனும் அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரமாகி விட்டதால், ஒரு ஊரில் தங்கி மறுநாள் செல்ல முடிவெடுத்தனர். தங்கும் விடுதிகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு மடத்தில் வந்து படுத்தனர்.
வியாபாரி மண்டபத்தின் உள்ளேயும், வேலைக்காரன் திண்ணையிலுமாகப் படுத்தனர். அப்போது, சில திருடர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன், இருட்டில் படுத்திருந்த வேலைக்காரனின் காலில் தெரியாமல் மிதித்து விட்டான். அவன் அலறியடித்து எழுந்தான். ஏய், காலை மடக்கிப் படுக்கக்கூடாதா? நான் ஏதோ கட்டை கிடப்பதாக நினைத்து மிதித்து விட்டேன், என்றான் மிதித்தவன். வேலைக்காரனுக்கு கோபம். உங்க ஊரிலெல்லாம் கட்டைகள் மடியில் பத்து ரூபாய் கட்டை வைத்துக் கொண்டு படுத்திருக்குமாக்கும், என்றான். ஆகா...இவனிடம் பணம் இருக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்தவன், அவனிடமிருந்ததை பறித்துக் கொண்டான்.
திடீரென அவனுக்கு சந்தேகம். ஏய்! இதெல்லாம் யாருக்கு உரியது? நல்ல நோட்டா, கள்ள நோட்டா? என்று அதட்டினான். அதெல்லாம் எனக்கு தெரியாது. உள்ளே படுத்திருக்கிறாரே எனது எசமான், இதுஅவருடைய பணம். அவரிடம் போய் அந்த விஷயத்தையெல்லாம் கேட்டுக் கொள், என்றான் அந்த அடிமுட்டாள். வேலைக்காரனிடமே இவ்வளவு பணத்தை கொடுத்து வைத்துஇருக்கிறார் என்றால், எஜமானனிடம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கு போட்ட திருடர்கள், உள்ளே சென்று வியாபாரியிடம் இருந்த பணத்தையும் பறித்துச் சென்று விட்டனர். இந்த வியாபாரிக்கு வேலைக்காரன் எப்படி சரியாக அமையவில்லையோ, அப்படித்தான் சிலருக்கு நட்பு, உறவு வட்டாரம் சரியில்லாமல் இருக்கிறது. முட்டாள்களின் சேர்க்கையால் தப்பாமல் கேடு வரும். சரி தானே!
-
11th Jan 2012, 11:38 AM #15
Re: பக்தி கதைகள்
திருச்செந்தூர் திருநீறு
திருச்செந்தூர் அருகிலுள்ள குரும்பூர் கிராமத்தில் வசித்த கந்தவேல் கடும் உழைப்பாளி. நெசவாளியான அவன் எந்நாளும் உழைத்தாலும், வருமானம் போதவில்லை. கஷ்டஜீவனமே நடந்தது. மனைவி வள்ளியம்மை சிறந்த முருகபக்தை. அவள் நாவில் எந்நேரமும் சரவணபவ என்ற மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும். மனைவியின் பக்தியில் கணவன் தலையிடமாட்டான். ஆனால், வள்ளியம்மைக்கோ தன் கணவரையும் முருக பக்தனாக்கி விட வேண்டுமென்று ஆசை. ஒருநாள், அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். அவர், பக்தர்களுக்கு தீட்சை அளித்தார். கணவனின் அனுமதி பெற்று, வள்ளியம்மையும் தீட்சை பெற்று வந்தாள். பின்னொரு நாளில், அவனையும் தீட்சை பெற அழைத்தாள். வள்ளி! உனக்கும், அந்த முருகனுக்கும் தெரியாதா நம் நிலைமை! ஒரு நிமிடம் தறியை விட்டு இறங்கினாலும், அன்றைய புடவையை அன்றே நெய்ய முடியாதென்று! எவ்வளவோ வேகமாக பணி செய்தாலும் இரவாகி விடுகிறது.
பணி முடிய! புடவையைக் கொண்டு கொடுத்தால் தானே கால் வயிற்று கஞ்சிக்குரிய கூலியாவது கிடைக்கிறது! இது புரியாமல் பேசுகிறாயே! என்றான் . அவளும், நீங்கள் உடலைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறீர்கள்! இந்த உடலைப் பயன்படுத்தி ஆன்மாவுக்காக நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்தைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை. இந்த உழைப்பு, வறுமை, குடும்பம் போன்ற நிலைகளைக் கடந்து, அந்த செந்திலாண்டவனின் திருவடியை ஒருநாள் எட்ட வேண்டும். அதற்குரிய கடமையைச் செய்ய வேண்டாமா? என்பாள். அந்த ஆன்மிக அறிவுரை அவனுக்கு புரிந்தும் புரியாதது போலவும் இருக்கும். இருந்தாலும், அவன் தன் நிலையில் இருந்து மாறவில்லை. ஒருநாள், அந்த துறவியையே வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள் வள்ளியம்மை. தம்பி! நீ தறியை விட்டு இறங்கி வந்து திருநீறு பூசிக்கொள், செந்திலாண்டவனின் பன்னீர் விபூதி உன்னைத் தேடி வந்துள்ளது என்றார். ஐயா! இதைப் பூச இறங்கும் நேரத்திற்குள் ஐந்தாறு இழை ஓடி விடும். எனக்கு உழைப்பே பிரதானம், என்று வேலை யிலேயே கவனமாக இருந்தான்.
பரவாயில்லை! இனி திருநீறு பூசிய முகத்தையாவது பார்த்துவிட்டு பணியைத் துவங்கு, என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதை ஏற்றுக்கொண்ட கந்தவேல், பக்கத்து வீட்டு
செந்தில் என்பவர் தன் வீட்டு ஜன்னல் வழியே பேச வரும் போது, அவர் முகத்தைப் பார்ப்பான். அவர் அடிக்கடி திருச்செந்தூர் செல்பவர், அங்கிருந்தே பன்னீர் இலை திருநீறு கொண்டு வந்து தினமும் பூசிக்கொள்பவர். ஒருநாள், அவரைக் காணவில்லை. நீறு பூசிய நெற்றியைக் காணாமல் பணி துவங்க முடியாதே. என்ன செய்யலாம்? என கருதி, அவர் ஒரு குளக்கரைக்கு சென்றதை அறிந்து அங்கே ஓடினான். குளக்கரையில் நின்ற அவரது கையில் இருந்த இரண்டு பெட்டிகளில் இரண்டு லட்சம் பணம் இருந்தது. பார்த்துவிட்டேன், பார்த்துவிட்டேன், என்று சொல்லிக்கொண்டே திரும்ப ஓடிவந்து தறியில் அமர்ந்து, ஓடிய நேரத்தை மிச்சப்படுத்த வேகமாக நெய்ய ஆரம்பித்து விட்டான் கந்தவேல். உண்மையில் அவன் பார்த்தது அவரது திருநீற்று நெற்றியைத் தான். சிறிதுநேரத்தில் செந்தில் வந்தார்.
வள்ளியை அழைத்து, வள்ளி! உன் கணவர் நான் வைத்திருந்த பணப் பெட்டிகளை பார்த்து விட்டார். இவை எனக்கு குளக்கரையில் கிடைத்தன. யாரோ அங்கே மறைத்து வைத்து விட்டு போயிருந்தார்கள். அதில் ஒன்றை உனக்கு தந்து விடுகிறேன். விஷயத்தை உன் கணவனைத் தவிர யாரிடமும் சொல்லாதே, எனச்சொல்லி திணித்து விட்டு போய்விட்டார். ஒன்றுமே இல்லாதவன் கையில் லட்சம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்! எல்லாம் பன்னீர் இலை திருநீற்றின் மகிமை என்றவாறே, கந்தவேலும் தீட்சை பெற்று முருகனை வணங்க நேரம் ஒதுக்கினான். மகிழ்ந்த வள்ளி முருகனுக்கு நன்றி சொன்னாள்."If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
-
11th Jan 2012, 11:39 AM #16
Re: பக்தி கதைகள்
நாலாவேலையும் நாமே பார்க்கணும்
ஒரு எஜமானன் தன் பல்லக்கைத் தூக்க சில பணியாட்களை நியமித்தான். அவர்களும் அவர் சொல்லும் இடத்துக்கு தூக்கிச் செல்வார்கள். ஒருநாள், எஜமானன் பல்லக்கு தூக்கிகளிடம், இன்று பால் கறப்பவன் வரவில்லை. உங்களில் யாராவது கறந்து வாருங்கள், என்றான். அவர்களோ, எங்களுக்கு பல்லக்கு தூக்குவது மட்டுமே வேலை, இதையெல்லாம் செய்யமாட்டோம், என்றனர். அடுத்தநாள், எஜமானன் வீட்டு ஆட்டுக்குட்டி காணாமல் போனது. அதைத் தேடிக் கண்டுபிடித்து வர உத்தரவு போட்டான். இந்த வேலையெல்லாம் எங்களுக்கு தெரியாது. பல்லக்கு தூக்கச் சொன்னால் மட்டும் செய்கிறோம், என்று கறாராகச் சொல்லி விட்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க நினைத்தான் எஜமானன்.
ஜோராக உடையணிந்து பல்லக்கில் ஏறி, காட்டு பக்கமாக போங்கள், என்றான். எதற்கு? என்றனர் பல்லக்கு தூக்கிகள். பல்லக்கு தூக்குவது உங்கள் வேலை. அதில் அமர்ந்த படியே, காட்டுக்குப் போன ஆட்டுக் குட்டியைத் தேடுவது என் வேலை, என்றான். பல்லக்கு தூக்கிகளும் வேறு வழியின்றி சுமந்தனர். எஜமான் சொன்னதுமே சென்றிருந்தால் பல்லக்கின் எடையாவது குறைந்திருக்கும். இப்போது கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் பல்லக்கையும் எஜமானனையும் சேர்த்து சுமக்க வேண்டியதாயிற்று. முதலாளி சொன்ன வேலையைச் செய்வதே தொழிலாளியின் கடமை. இல்லாவிட்டால், அவனுக்கு சலுகைகள் கேட்க உரிமை கிடையாது.
-
11th Jan 2012, 11:42 AM #17
Re: பக்தி கதைகள்
இந்த பந்தா தானே வேண்டாங்கறது
ஒரு கிராமத்திற்கு பக்கத்து நகரத்தில் இருந்து ஒரு இளைஞன் வந்து சேர்ந்தான். டிப்டாப்பாக உடையணிந்துஇருப்பான். தன்னை ஒரு அதிமேதாவி போல் காட்டிக் கொள்வதற்காக எந்த நேரமும் கைகளில் சில ஆங்கிலப் புத்தகங்களை வைத்திருப்பான். பலரது பார்வையிலும் படும்படி பொது இடங்களில் அமர்ந்து அவற்றை விரித்து வைத்துக் கொண்டிருப்பான். ஆனால், நிஜத்தில் அவன் போலி ஆசாமி! ஏ,பி,சி,டி கூட தெரியாத பிறவி! ஒருமுறை, ஒருவர் அவசர அவசரமாக ஒரு தந்தியுடன் ஓடிவந்தார். தம்பி! இதை படிச்சு சொல்லுங்க, என்றார்.
ஆசாமி சிக்கிக் கொண்டான். அது வந்து! இந்த தந்தி எந்த ஊரிலே இருந்து வந்திருக்கு? என கொண்டு வந்தவரிடம் கேட்டான். கோல்கட்டாவில் இருந்து வந்திருக்கு, என்றார் கொண்டு வந்தவர்.
சாரி! நான் படிச்சது லட்சுமணபுரியிலே! அங்குள்ள எழுத்துக்களைத் தான் எனக்கு வாசிக்கத் தெரியும், என்றான். தந்தியைக் கொண்டு வந்தவரும் அதை உண்மையென நம்பி வேறு ஆளைத் தேடி ஓடினார். ஆளுக்கு ஆள் போன் வைத்துள்ள காலத்தில் இப்படி ஒரு கதையா என கேட்காதீர்கள்! இதைச் சொன்னவர் சாதாரணமானவரல்ல! மகான் சிவானந்தர்! என்னதான் கல்வியறிவு வளர்ந்திருந்தாலும்,
இதுமாதிரி பந்தா ஆசாமிகளிடம் ஏமாறுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் சில போலிகள் தோன்றி மக்களை ஏமாற்றுகின்றன. படித்தவர்கள் கூட இவர்களிடம் ஏமாந்து போவது தான் வேடிக்கையும் வேதனையும்! ஆன்மிக, ஜோதிட உலகில் கூட பல பந்தாக்கள் தோன்றியிருக்கின்றனர். இவர்களிடம் அலார்ட் ஆக இருக்கத்தான் இந்தக் கதை!"If a man is intelligent everything that happens is an opportunity; if a man is stupid everything that happens is a disaster".- Jaggi vasudev
regards
Sudha.R
Similar Threads
-
நமக்கு பிடித்த வலைபக்கங்களை pdf கோப்புகளாĨ
By sumathisrini in forum ComputerReplies: 5Last Post: 11th May 2012, 07:42 AM -
ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ள
By silentsounds in forum Beauty TipsReplies: 1Last Post: 11th Aug 2011, 04:06 PM -
செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திர
By lathabaiju in forum Interesting FactsReplies: 2Last Post: 10th Aug 2011, 03:43 PM -
உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப&
By sumathisrini in forum ParentsReplies: 10Last Post: 7th Aug 2011, 08:32 AM -
பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்!
By silentsounds in forum Nature CureReplies: 0Last Post: 9th Jul 2011, 09:14 AM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks