பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Discuss here on பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் within the Spirituality forums, part of the Home forum; * பராசக்தியின் பாதமலர்களைச் சரணம் என்று அடைக்கலம் புகுந்தாலும், அவளிடம் பக்தி கொண்டு வாழ்ந்தாலும், அவளது புகழைப் பாடினாலும் அழியாத பேரின்பவாழ்வு வாழ்வு தருவாள். நம் கவலையைப் ...
-
29th Dec 2011, 11:57 AM #61
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
* பராசக்தியின் பாதமலர்களைச் சரணம் என்று அடைக்கலம் புகுந்தாலும், அவளிடம் பக்தி கொண்டு வாழ்ந்தாலும், அவளது புகழைப் பாடினாலும் அழியாத பேரின்பவாழ்வு வாழ்வு தருவாள். நம் கவலையைப் போக்கி அருள் செய்வாள்.
* அம்பிகையிடம் சுகத்தினை வேண்டித் தொழுங்கள். நம் மனக்குறைகளை அவளிடம் சொல்லி அழுங்கள். நம் வாழ்வில் நல்ல மாற்றங்களையும், மனதிற்கு வலிமையும், ஆறுதலையும் தந்தருளுவாள்.
* தாயே! எங்களைக் காப்பது உன் கடன்! இவ்வுலக வாழ்வினையே உனக்காக அர்ப்பணித்துவிட்டேன். காளித்தாயே! உன் துணை இருக்கும்போது மரணத்திற்கு அஞ்சத் தேவையில்லை. நோய்,பேய், ரணம், பழி என்று இனி எதை எண்ணியும் சிறிதும் பயமில்லை.
* ஒளி பொருந்திய நீலநிறம் கொண்டவளே! எங்கள் சிந்தையில் நிறைந்திடும் திறம் உடையவளே! அச்சம், பொய், சினம் என்னும் பொய்ம்மைக் குணங்கள் எல்லாம் எங்களை விட்டுப் போகட்டும். உள்ளவுறுதியோடு வாழ்க்கையை எதிர்கொள்ள அருள்கொடு.
* உலகங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவள் நீயே. உன்னருளால் சிந்தையும் தெளியட்டும்.
-
29th Dec 2011, 11:58 AM #62
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
பாதுகாப்பு தரும் மகாசக்தி
* உலகம் நிலைபெற்று வாழ மகாசக்தியே அருள்செய்கிறாள். அந்த தேவியின் திருவடிகளே துணை என்று போற்றுவதில் தான் உண்மையான சுகமிருக்கிறது.
* தினமும் நெஞ்சத்தில் கவலையை வளர்த்து, உயிருக்கு அஞ்சிவாழ்வது அறியாமையாகும். இந்த உலகத்தை காத்து நிற்கும் மகாசக்தியின் திருவடிகளை பற்றிக்கொள்வதே அறிவுடையோர் செயலாகும்.
* உலகத்தைக் கட்டிக் காக்கும் இறைவன் நம்மையும் காப்பான் என்று நம்பி வாழ்ந்தால் நம் துயரெல்லாம் ஓடிப்போகும். இது வெற்று வார்த்தையல்ல.
* எண்ணிக்கைக்கு அடங்காமல் விண்வெளி எல்லாம் நட்சத்திர மண்டலங்களைப் படைத்த பெருஞ்சக்தியே மகாசக்தியாவாள். அவளே, நம்மைப் படைத்து இப்பூமியில் நடமாடவிட்டாள். அந்த நன்றிக்காக அந்த சக்தியைப் பக்தியுடன் போற்றித் துதிப்போம்.
* அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கும் மகாசக்தியே! பொய்மை என்னைவிட்டு நீங்க வேண்டும். கள்ளங்கபடான எண்ணங்கள் மறைய வேண்டும். அன்பினாலும், பக்திப் பெருக்காலும் கண்களில் கண்ணீர் பெருக வேண்டும். உன் கருணை வெள்ளத்தில் சிறுநாயான என்னுடைய ஆசைகள் தணிய வேண்டும். என்னைப் பாதுகாத்து அருள வேண்டும்.
-
29th Dec 2011, 11:59 AM #63
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
மனதில் உறுதி வேண்டும்
* நமக்கு சொத்து சுகம் என்று எதுவும் தேவையில்லை. இறைவனின் துணை மட்டும் போதும். அச்சம் என்பதே இல்லாமல் என் நெஞ்சில் அமைதி தவழ வேண்டும்.
* தர்மத்தாலும், கருணையாலும் பெறும் வெற்றியே என்றென்றும் நிலைத்திருக்கும். இதனை அறியாதவர் இயற்கையின் சட்டத்தை அறியாதவராவார்.
* எதனை விரும்புகிறோமோ, அதைத்தான் நம்மால் பெற முடியும். எதை ஆதரிக்கிறோமோ அந்த குணங்களே நம்முள் வளரும்.
* மனதில் உறுதிவேண்டும். பேச்சில் இனிமை வேண்டும். நல்ல நினைவுகள் வேண்டும். நோயில்லாமல் நூறாண்டு வாழும் பாக்கியம் வேண்டும்.
* ஒரு பழக்கம் நம்மிடம் உருவாகிய பிறகு அதை நம்மால் மாற்ற முடியாது. எதிர்கால பலனைக் கருத்தில் கொண்டு நல்ல பழக்கத்தை நாம் ஏற்படுத்துவதே நல்லது.
* மனிதன் தன் உள்ளத்தை தெய்வத்துக்குப் பலியாகக் கொடுத்து விடுவதே மேலான யாகம். இதனால் மனிதன் பெறவேண்டிய நற்பேறுகள் அனைத்தும் கிடைக்கும்.
* பிறரை வஞ்சிப்பதோ அல்லது பிறர் நம்மை வஞ்சிக்க இடமளிப்பதோ சரியல்ல. உண்மை ஒருவனிடம் இல்லாவிட்டால் அவனது வாழ்க்கையே பொருளற்றதாகி விடும்.
-
29th Dec 2011, 12:01 PM #64
Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
சாதிக்க வைக்கும் நம்பிக்கை
* அறிவே தெய்வம். அதை மூடியிருக்கும் ஆணவத்தை நீக்கிவிட்டால் தெய்வஞானம் உண்டாகும்.
* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால் உடம்பில் ஆற்றல் உண்டாகும். உடம்பு ஆற்றல் பெற்றால் சக்தி மேலும் அதிகரிக்கும்.
* அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு என்று நமக்குள்ளே எத்தனையோ அசுரர்கள்
வாழ்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அவர்களை வென்றால் சுகமாக வாழமுடியும்.
* அச்சத்தைப் போக்கி வீரனாக வாழுங்கள். இம்மடைமை குணத்தால் நம் ஆற்றல் வீணாகும். உலகில் யாருக்கும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி உள்ளவர்களாக வாழுங்கள்.
* நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு வேதங்கள் தந்த தீர்ப்பு. நம்பிக்கை என்னும் காமதேனு கேட்டவரத்தை எல்லாம் நமக்குத் தரும். நம்பிக்கை கொண்டவனால் உலகில் எதையும் சாதிக்க முடியும்.
* நமக்குள் வெறும் பழங்கதைகளான புராணங்களைப் பேசிக்கொண்டு திரிவதில் பயனில்லை. அதில் உள்ள சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். வெளிநாட்டவரும் நம்மை மதிக்கும்படி திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
Similar Threads
-
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிற
By Ganga in forum Media TalkReplies: 1Last Post: 30th Oct 2011, 07:42 PM -
சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்
By sudhar in forum SpiritualityReplies: 12Last Post: 21st Sep 2011, 02:11 PM -
சோர்வை அகற்றும் பிரார்த்தனை–காந்தியின் &
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 23rd Aug 2011, 06:33 AM -
உரத்த சிந்தனை: ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 22nd Aug 2011, 01:01 AM -
நம் அறியாமையே அவர்களின் ஆனந்தம் : ஆர்.நடரĬ
By silentsounds in forum News & PoliticsReplies: 0Last Post: 24th Mar 2011, 10:23 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks